Everything posted by நன்னிச் சோழன்
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
படைய மருத்துவர் லெப். கேணல் காந்தன் (என்னால் மறக்க முடியா டொக்டர்... 5-3-2009 சாலையில் நடைபெற்ற சமரொன்றில் காயமடைந்த ஒருவருக்கு பண்டுவம் அளித்துக்கொண்டிருக்கும் போது ஏவுண்ணி படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார் என்று அறிகிறேன். நான் இவரை 'காந்தன் மாமா' என்டு தான் கூப்பிடுறனான். இவற்றை அப்பாவின்ர இயக்கப்பெயர் 'குணம்'. எல்லாரும் "குணம் ஐயா" என்டுதான் கூப்பிடுவினம். மரியாதையான ஆள். இவர் கிளிநொச்சி வருவாய்த்துறையில பணியாளராக வேலை செய்து 2006 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக சாவடைந்தார்'. மேலையும் ஒரு படிமம் இருக்குது; இறுவட்டின் அட்டையில் 'எமது நாட்டின் தலைநகர் திருகோணமலையின் கடற்கரை ஒன்றில் காந்தன்'
-
இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவப் பிரிவு
இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும். புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது. அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன. இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது. சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில் மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள். ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
படைய மருத்துவர் வாமன் எ Dr. V. தர்மரட்ணம்
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
கவனமா போய் வா மச்சான் ! புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
தமிழீழ படைய மருத்துவப் புலிகள் சிலர்
-
“பகிரப்படாத பக்கங்கள்” நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில !
ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் இ.இ. கவிமகன் இயக்குனர் முருகு வெளியீட்டகம் முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள். *********************************************** “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை. மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது. திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள். அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது. பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார். வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர். பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன். இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது. https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/
-
யாழிந்துவின் இன்னுமோர் இணையில்லா மைந்தன்
தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். மூன்று வருடங்கள் யாழில் கற்கைநெறிகள் வெற்றிகரமாக த்தொடர்ந்தாலும், யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட போது மருத்துவக்கல்வி தேக்க நிலையை அடைந்தது. வன்னிக்கு புலிகளின் தளம் நகர்த்தப்பட்ட காலத்தில் மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவனாக(3rd MBBS) இருந்த கிருபாகரன் களங்களில் ஓர் முன்னணி களமருத்துவராக பணியாற்றிவர். களமருத்துவ செயற்பாட்டுக்கான பயிற்சிகளை சத்திரசிகிச்சை நிபுணர் சூரியகுமாரன் அவர்களிடம் பெற்றார். அதேபோல வைத்தியக் கலாநிதி எழுமதி கரிகாலன் மற்றும் தமிழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர் காசிலிங்கம் சுஜந்தன் அவர்களிடமும் மேலதிக பயிற்சிகளை பெற்றார். கடுமையான சண்டைகள் நடைபெறும் காலங்களில் களத்திலும் மற்றைய காலங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கிராமிய வைத்தியசாலைகளிலும்(Rural and Remote Hospitals)தனது மகத்தான மருத்துவ சேவையை மனநிறைவுடன் ஆற்றிவந்தார். சமாதான நாடகம் நோர்வே நாட்டின் தலைமையில் அரங்கேறிய காலத்தில் மீண்டும் யாழ் சென்று யாழ் மருத்துவபீடத்தில் தனது மருத்துவ சத்திரசிகிச்சைமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாகவும் திறமைச் சித்திகளுடனும் நிறைவு செய்தார். இயல்பாகவே அன்பும் பெரும் பண்பும் நிறைந்த இவர் பொதுமக்களையும் போராளிகளையும் ஆழமாக நேசித்தார். அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. சண்டை மிக உக்கிரமாக நடைபெற்ற காலங்களில் சத்திரசிகிச்சைக் கூடங்களில் மயக்க மருந்து கொடுக்கும் பொறுப்பு மிகுந்த கடினமான பணியைதானே தெரிவு செய்து மருத்துவ சேவையில் சிறந்து விளங்கினார். பூநகரி மண்ணை மீட்க நடைபெற்ற ஈரூடகத் தாக்குதலான தமிழர் சேனையின் தவைளைப் பாய்ச்சல் படைநடவடிக்கையில்(Operation Frog)பங்கேற்றவர். அந்த நடவடிக்கையில் படுகாயமடைந்தமையால் ஓர் கையையும் காலையும் மடிக்க முடியாத நிலையை அடைந்தார். பாதிப்படைந்த கையையும் காலையும் சத்திரசிகிச்சை ஒன்றின் மூலம் சீர்ப்படுத்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த என்பியல் நிபுணர்கள் (Orthopedic Surgeons) பலர் முயன்றும் முடியாமல் போய்விட்டது. மனவலிமை மிக்க வைத்தியர் கிருபா அவர்கள் அவற்றை ஓர் குறையாக எண்ணாமல் தனது கடமைகளை ஓடியோடி செய்து முடிக்கும் போது பிரமிக்காதவர்கள் இல்லை எனலாம். தீவிரமான பொது வாழ்வில் கிருபா அல்லது கிருபாகரன் என்று அறியப்பட்ட இவரின் இயற்பெயர் கந்தசாமி தயாபரன் ஆகும். ஈர நெஞ்சம் கொண்ட இந்த வைத்தியர் “கோணாவில் கிருபா””வாசுகி கந்தசாமி” என்ற பெயர்களிலும் ஈழத்து இலக்கிய வானிலும் சிறகடித்தவர். மாங்கனித்தீவில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளையும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகளையும் எழுதி வந்தார். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் அதாவது 17/05/2009 ஆம் தேதி இலங்கைப் படையினரின் கட்டுப்பட்டுப் பகுதிக்குள் மனைவியுடன் வந்தவரின் எந்தவிதமான தொடர்புகளும் இன்று வரை கிடைக்கவில்லை. மனைவி, சகோதரங்கள் மற்றும் பெற்றோரால் இன்று விண்ணிலும் மண்ணிலும் தேடப்படும் ஒருவராக வைத்தியர் கிருபாகரன் உள்ளார். https://vayavan.com/?p=8404
-
மலையகச் சொந்தங்களின் விடியலுக்காகவும் உழைத்த மறத்தலைவர் வே. பாலகுமாரன்!
“நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோருடன் யானும் அவரை சத்திரசிகிச்சை மேசையில் ஏற்றினோம். தனது மக்கள் மீது கொண்ட வாஞ்சை காரணமாக எம்மிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தவருக்கு சத்திரசிகிச்சை செய்வதாயின் பொது மயக்கமருந்து கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம். பொது மயக்கமருந்து (General Anesthesia) கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை குருதி அமுக்கத்தைச்( Blood Pressure) சோதித்த போது குருதி அமுக்கமானது அதிகரித்துக் காணப்பட்டது. அதற்காகவும் சத்திரகிச்சையைக் கைவிடமுடியாத நிலை. அவரை எங்களால் இயன்றளவு ஆசுவாசப் படுத்தி நிமிடங்களின் பின்னர் மீண்டும் சோதித்த போதும் குருதியமுக்கம் அதே நிலையிலேயே இருந்தது. பொதுவாக நாங்கள் பாவிக்கும் மயக்கமருந்துகள் குருயமுக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை இந்த நிலையில் உயர் குருதி அமுக்கம் உள்ள ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்தால் மேலும் குருதி அமுக்கம் அதிகரித்து நிலைமையை மோசமாக்கிவிடும் என்பது வெளிப்படையானது. ஆதலினால் அன்று அங்கிருந்த இளைய மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர்( Anesthetist) அந்நிலையில் மயக்கமருந்து கொடுக்க மறுத்துவிட்டார். மேலதிக உதவிக்காக மயக்கமருந்து கொடுக்கும் மூத்த வைத்தியர்களை அந்த இடத்துக்கு அழைக்க முடியாதவாறு பலமாக எறிகணைகள் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அண்மைய இடத்திலும் மைதானத்திலும் விழுந்து வெடித்துகொண்டேயிருந்தது. விண்ணும் மண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க தனது உயிரிலும் மேலாக மக்களை நேசித்த அந்தத் மறத்தலைவனையும் நெஞ்சிருத்தி நிமிர்வோம்! https://vayavan.com/?p=12795
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
பொறுப்பாளர் ரேகா மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவப் பிரிவின் மகனார் மருத்துவப் புலிகள் 24/10/2005 "மறுபடி மறுபடி போராடும் மன வல்லமை தரவோம் எப்போதும்" (இந்த வரிகள் - காயத்தை சரி செய்து, அது மாறிட, அப்போராளி மீளவும் களமுனை சென்று போராடும் மன வல்லமையினை இவர்கள் ஊட்டுவர் என்ற பொருள் பட எழுதப்பட்டுள்ளது.)
-
சீனதேசத்தின் வெறுங்கால் வைத்தியர்களும் தமிழர்தேசத்தின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையும்!
Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது. மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது. 1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார். “Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது. குக்கிராமங்களில் இருந்த விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு Paramedical Training வழங்கப்பட்டு பின் தங்கிய கிராம மக்களின் அடிப்படை மருத்துவ சேவைகள் அல்லது முன் வைத்தியசாலை பராமரிப்புகள் சரிவர வழங்கப்பட்டன. அவர்கள் ஒரு தோளில்/முதுகில் மருத்துவப் பையுடனும் மறுதோளில் மண்வெட்டியுடனும் கிராமப்புற மக்கள் மத்தியில் திருவுலா வந்தனர். பாதணி கூட இல்லாமல் வெறுங்கால்களுடன் சறுக்கு மலைகளில் சலிக்காமல் ஏறி சீனதேசத்தின் “வெறுங்கால் வைத்தியர்கள்”உன்னத பணி செய்தனர். அத்தகைய பாணியில் அதையும்விட பன்மடங்கு அதிகரித்த மருத்துவக்கல்வி போராளிகளுக்குப் புகட்டி கிராமப்புறங்களின் அடிப்படைச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகவே தியாக தீபம் மருத்துவமனைகள்உருவாக்கப்பட்டன. களமுனைகளில் பல காலம் உயிர்காத்த அனுபவம் மிக்க மூத்தமருத்துவப் போராளிகளும் தமிழர் சேனையின் இராணுவ வைத்தியசாலைகளில் தாதியாக சேவை புரிந்தவர்களுமே தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகாகத் தேர்வு செய்யப்பட்டு உதவி மருத்துவர் கற்கை நெறி(Curriculum of Assistant Medical Practitioner) போதிக்கப்பட்டது. போதனைகளை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள் Dr.பத்மலோஜினி கரிகாலன், Dr கா.சுஜந்தன், Dr தா.சூரியகுமாரன், Dr சி.சிவபாலன், Dr வீ.சண்முகராஜா, Dr த.பாஷ்கரன்(கலை), Drசதானந்தன், Dr இ.கதிர்ச்செல்வன்… ஆகியோர்கள். இந்த மருத்துவமனைகளில் கண் வளராது, மனம் தளராது, மது அருந்தாது,புகைப்பிடிக்காது தவம் இருந்த பலர் இறுதி சமரில் அரச வைத்தியசாலைகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்தார்கள். வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிலர் தியாகச் சாவடைந்தனர். அவர்களில் களமருத்துவர் செவ்வானம், களமருத்துவர் இறையொளி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். தமிழர் எங்களை அடக்கி ஒடுக்க சீனதேசம் துணை போன கசப்பான செயலையும் எங்களால் மறக்க முடியாது. தொடரும்… நன்றி https://vayavan.com/?p=9433
-
சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் – நிழலரசின் நிஜமுகங்கள்
எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது. மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த உதவி மருத்துவர்களும் தாதியர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர். புதிய புதிய சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்தவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர். தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர். பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் எங்களால் உயிர்காக்கப்பட்டவர் ஆன்மாவின் ஆழத்தில் இவர்கள் இருக்கிறார்கள். எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தார்கள். மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். இருதரப்பிலும் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளை பெற்றோர் பார்வையிடவும்,களத்திடை எதிரியின் கைகளில் அகப்பட்ட வித்துடல்களை வாங்கித் தரவும் மீதமாய் மருத்துவ உதவிகளும் செய்த ICRC அடுத்தத கட்டமாய் அந்தரித்த எமது மக்களை கைவிட்டனர். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த ICRC யின் இறுதிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும்” #நாங்கள்_இருக்கிறோம்” என சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தினர் கைகொடுத்து புதுவேகம் தந்தார்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது. இங்கே மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த #தாதியர்களும்_உதவிமருத்துவர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர். சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்த புதியவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர். தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர். பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் இங்கே இந்த ஒளிகொண்ட ஒளிப்படத்தில் இருப்பவர்களால் பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்காக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் இவர்களும் இருக்கிறார்கள். https://vayavan.com/?p=11334
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
படைய மருத்துவர் மேஜர் எஸ்தரின் நினைவாய் எழுந்த எஸ்தர் மருத்துவமனையும் அதில் ஒரு கட்டத்தில் பணியாற்றிய மருத்துவப் புலிகளும் 2002-2007 "களமதிலே உயிர் காத்த வீரரே - எங்கள் குலமதிலே தாயான தோழரே! சாவுடனே சமர் புரிந்த தீரரே! சோரும் மனமதிலே ஒளியான மறவரே!"
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
மட்டு-அம்பாறை மாவட்ட துணைக் கட்டளையாளர் லெப். கேணல் லக்ஸ்மனின் நினைவாய் எழுந்த லக்ஸ்மன் மருத்துவமனை "வைத்த குறி கொண்ட குறி தவறான் மருத்துவப்புலி"
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
படைய மருத்துவர் கப்டன் யாழ்வேளின் நினைவாய் எழுந்த யாழ்வேள் மருத்துவமனை திறப்பு விழாவின் போது
-
doctor Kengkatharan.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
தமிழீழத்தின் முதலாவது படைய மருத்துவர்கள் ஆளணியுடன் தேசியத் தலைவர் "சாவுகள் கூடி ஊர்வலம் போகும் வீதியில் எங்களின் பயணம் - நாம் அயர்ந்தால் நிச்சயம் மரணம் உயிர்-உரிமை காக்க போரிட கூட அஞ்சவே அஞ்சாத இதயம் கள மருத்துவ வேங்கைகள் உதயம்!"
- mejar apayan.webp
-
மட்டக்களப்புப் போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள். அபயனின் போராட்டப் பங்களிப்பு!
1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில்இ இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள்இ நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு' என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். 'ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ'? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு இடைப்பட்ட இந்தக் காலத்தில், அவனிடமிருந்து வீட்டிற்கு வரும் கடிதங்களெல்லாம் 'நான் சுகம். வீட்டிற்கு வரும் போராளிகளை நன்கு கவனிக்கவும்' என்றே இருக்கும். இந்தியப் படையினருடனான போர் நிகழ்ந்த காலத்தில் அபயனின் போராட்டப் பங்களிப்பைஇ மட்டக்களப்புப் போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள். எத்தனையோ முற்றுகைகள் ஆனாலும் இவன் உறுதியாக இருந்தான்.தொடர்ச்சியான முற்றுகைகள் போராளிகளைத் தளர்ச்சிகொள்ளச் செய்யும். அப்போதெல்லாம் இவன் அவர்களை உற்சாகப்படுத்துவான். 'ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே வரும் காலமெல்லாம் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே' இக் காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயாப் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றையும் அமைத்திருந்தான் இவன். அங்கு போராளிகளுக்கு அடிப் படைப் பயிற்சியினை மட்டுமே வழங்க முடிந்தது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிக்குப் போதிய ரவைகள் இருக்கவில்லை. பயிற்சியின் அடுத்த கட்டம், ஒரு முகாமைத் தாக்குவது எப்படியென்பது பற்றிய செயல்முறை விளக்கம் -அது அடுத்தநாள் நடைபெறவிருந்தது. ஆனால்இ அன்று அதிகாலையில் இந்திய படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். புதிய போராளிகள் அனுபவ மில்லாதவர்கள் எனினும், தான் கற்பித்த மாதிரியே அவர்களை நடக்கப் பண்ணினான். அங்கு நின்ற தோழன் ஒருவனிடம், அவர்களைக் கூட்டிக்கொண்டு ஆற்றின் வழியாக இறங்கித் தப் புமாறு கூறிவிட்டு, வேந்தன் என்ற போராளியுடன் இணைந்து இந்தியப் படையினரின் முன்னேற்றககைக் கடுத்துக் கொண்டிருந்தான். அபயன் சுட்டுக் கொண்டிருக்கும்போது வேந்தன் பின்வாங்குதல்; பின்புஇ வேந்தன் சுட்டுக்கொண்டிருக்கஅபயன் பின்வாங்குதல் சுமார் 15 நிமிட நேரம் இச்சண்டை நீடித்தது. இதற்கிடையில்இ ஏனையவர்கள் தப்பிவிட்டனர். சண்டையின் இறுதியில்,இறந்த தமது சகாக்களினது சடலங்களை மட்டும் தூக்கியவாறு இந்தியப்படை சென்றது. அதன்பின் இவனது போராட்ட வாழ்வு தம்பிலுவில் திருக்கோயில் பகுதியில் தொடர்ந்தது. ஒரு மருத்துவனாக ஒரு தாதியாக ஒரு போர் வீரனாக குழுத் தலைவனாக இவனது வாழ்வு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் றொபேட் என்ற போராளிக்கு கையில் கண்ணிவெடி வெடித்து விட்டது. அப்போது. மயக்க ஊசியும் இல்லை; தேவையான மருத்துவ கருவிகளும் இருக்க வில்லை. தொடர்ச்சியான முற்றுகைகளில் பலவற்றை இழந்தாயிற்று. எனவே றொபேட்டிடம், 'தம்பி! நோகுந்தான்; என்ன செய்யிறது? சமாளி' என்று கூறிவிட்டு, கம்பி வெட்டும் கருவியினாலேயே சிதறிய விரல்களை வெட்டியெடுத்தான். அந்தக் காலத்தில் மருத்துவம் தான் எத்தனையோ போராளிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.இவனது இக்காலத்தில்இஅன்ரனி தலைமையில்,வளத்தாப்பிட்டியில் மூன்று 'ஜீப்' புகளில் வந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில், இவன் பங்குகொண்டான். இந்தியப் படையரனி, ஏதாவது படை அம்பாறையை விட்டு வெளியேறியதும், திருக்கோயிலில் தேசவிரோதிகளின் முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்றினான். அப்போது அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அன்ரனி 'எனக்கு நடந்தா, அபயன் சொல்லுற மாதிரி நடவுங்கோ' என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அத்தாக்குதல் மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இந்தியப் படையினரின் திட்டங்கள் தோல்வியைத் தழுவின. மேலும் பல தாக்குதல்கள் அதிலும் நரிப்புல் தோட்டம் வழியாக வந்த தேசவிரோதிகளை, மிக குறைந்த எண்ணிக் போராளிகளுடன் கையான நின்று வெற்றிகொண்ட தாக்குதல் குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா அரசுடனான இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் இவன் களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்தான். இந்தக் காவல் நிலையத்தினைக் கைப் பற்றியதும் ஏனைய போராளிகளிடம் கூறினான்; 1984 ஆம் ஆண்டு இந்தப் பொலீஸ் ஸ்ரேசனை அடிக்க வந்துதான் பரம தேவாவையும் ரவியையும் இழந்தம். இண்டைக்கு இதைக் கைப் பற்றிக் காட்டியிருக்கிறம்'. தொடர்ந்து பல தாக்குதல்கள் பல பொறுப்புக்கள். இப்போதெல்லாம் சிறீலங்காப் படையினர் தேடும் முக்கிய புள்ளிகளில் இவனும் ஒருவனாகி விட்டான். மட்டக்களப்பில் தேடப்படும் 12 பேரில் இவனது பெயரையும் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. அப்போதெல்லாம் அங்குள்ள போராளிகள் இவனது குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார்கள். 'எனக்கு வீடும் இல்லை; சொந்தமும் இல்லை. எல்லாமே நீங் கள் தான்ரா' என்பான். முகாமில், போராளிகளுக்குத் தேவையான எல்லா உணவு வகைகளையும் தேடிக் கொடுப்பான். தான் மட்டும் மரக்கறி வகைகளையே உண்பான். கேட்டால், 'எனக்கு அதில விருப்பமில்லை' என்பான். ஆனால், அவன் வீரச்சாவெய்தியதும் தான் அவன் ஒரு பார்ப்பன (பிராமணன்) பையன் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுக்குக் கூட இவன் இதைப் பற்றிக் கூறவில்லை. அன்று விளாவெட்டுவானில் சிறீலங்காப் படையினர் தாக்கிய போது, இவனை நாம் இழந்தோம். ஆயினும்இ அங்குள்ள போராளிகளுக்கு இவன் பாடும் பாடல்கள் நினைவில் உள்ளன. 'வரும் காலமெல்லாம் நம் நாம் பரம்பரைகள் அடிமையில்லை என்று முழங்கட்டுமே!' -விடுதலைப் புலிகள் குரல்
-
சிங்களத்தின் வதைமுகாம் இரகசியங்கள் – மருத்துவர் வரதராஜா!
நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுது, ‘மக்களின் உயிர்களைக் காப்பதற்கு வன்னியில் எனது சேவை உங்களுக்கு தேவைப்படும் என்றால் வருகின்றேன். அல்லாது போனால் நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக இருக்கட்டும்’ என்று கூறியவர். அதன் பின் வன்னியில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைக் கருத்திற் கொண்டு வன்னி சென்றவர். யுத்தம் முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோர் ஓடிய பொழுதும், 15.05.2009 அன்று சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின் உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் மருத்துவர் வரதராஜா அவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய நேர்காணலை இரண்டு பாகங்களாகத் தருகின்றோம். இரண்டாவது பாகம் எமது அடுத்த இதழில் வெளிவரும். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் மருத்துவர் வரதராஜா அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா. கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த வகையிலே நீங்கள் எதிர்கொண்ட சவால்களை – மிக முக்கியமாக – நீங்கள் குறிப்பிடக் கூடிய சவால்களைப் பற்றி விபரிக்க முடியுமா? பதில்: வன்னியில் மட்டுமல்ல, வாகரைப் பிரதேசத்திலும் கடமையாற்றிய பொழுது, அது ஒரு யுத்தப் பிரதேசமாக இருந்ததால் பல விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உதாரணமாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்களினுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – ஒரு அசாதாரணமான சூழ்நிலை – பல சவால்களைத் தந்திருந்தது. அதேநேரம் காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக அரச கட்டுப்பாட்டுப் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தோம். அதேநேரம் மக்களுக்கும் அந்த இடத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து – ஒரு இடத்தில் இருக்கிற மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்ற பல்வேறு விதமான சவால்களை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். அதேநேரம் வைத்தியசாலைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து வைத்தியசாலைகளும் – திட்டமிட்ட ரீதியில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது. சுயமாக நாங்கள் – இயல்பாக இருந்து – வைத்திய சேவை வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது. கேள்வி: இந்த சவால்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? பதில்: சவல்களை நாங்கள் அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம் – சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தி – எமது வைத்தியசாலையும் சரி, மக்கள் குடியிருப்புகளும் சரி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்திகளை தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதற்கு இருக்கின்ற சவால்கள், தேவைகளையும் உரிய நேரத்தில் தெரியப்படுத்தி அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். அதேநேரம் எமது வைத்தியசாலையில் கடமை புரிந்த அனைத்து ஊழியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வழமையை விட மேலதிக நேரங்கள் கடுமையாக உழைத்து, கஸ்ரப்பட்டு நித்திரை கொள்ளாமல் தங்களுடைய சுய தேவைகளை எல்லாம் மறந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொண்டிருந்தோம். கேள்வி: இதிலே நீங்கள் குறிப்பிட்ட அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை ஒரு பரந்துபட்ட கருத்தாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இதிலே நீங்கள் குறிப்பிடத்தக்க – ஒரு பிரத்தியேகமாக நீங்கள் எதிர்கொண்ட ஒரு சவாலும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க முடியுமா? பதில்: உதாரணமாக சொல்வதென்றால் ஒரு பாரிய காயம் – ஒரு பெரிய காயம் – அல்லது ஒரு பெரிய சத்திர சிகிச்சை, நீண்ட நேரம் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சைகள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து மிகவும் அதிக எண்ணிக்கையில் – பெரும் அளவான மயக்க மருந்து தேவைப்படும். அதேநேரம் மருந்து, சேலைன், இரத்தம் ஏற்றுவது போன்றவை அதிகமாக தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு நோயாளருக்கு அப்படியான ஒரு சிகிச்சையைச் செய்து, அவரைக் காப்பாற்றுவதற்குரிய வீதம் சில நேரம் குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அதேநேரம் நாங்கள் அப்படியான சிகிச்சைகளைத் தவிர்த்து, வேறு சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான சத்திர சிகிச்சைக்காக அந்த நோயாளர்களைத் தவிர்த்து செய்திருக்கின்றோம். அதேநேரம் ஒரு நோயாளருக்குத் தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற சேலைன், மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட அவர்களுக்கு சத்திர சிகிச்சைகளையும், ஏனைய சிகிச்சைகளையும் வழங்கியிருக்கிறோம். கேள்வி: இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது? பதில்: எங்களுடைய உணர்வுகள் யுத்தம் ஆரம்பித்த நாட்களில் இருந்து மிகவும் கஸ்ரமாக இருந்தது. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து அங்கவீனர்களாவது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, மேலதிக சிகிச்சைக்கு அனுப்ப முடியாமல் அவர்கள் இறப்பது போன்ற சம்பவங்கள் எங்களுடைய மனதை – மற்ற வைத்தியர்களுடைய மனதை – மிகவும் பாதித்துக் கொண்டிருந்தது. கேள்வி: நீங்கள் வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் கடைசி வரை பணிபுரிந்த மருத்துவர் என்ற வகையில் – சிங்கள அரசாங்கம் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு விதமான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது ஒரு இனவழிப்பு என்று இருந்தாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதாவது மக்களுடைய மனவுறுதியைக் குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்று கூறுவீர்களா? பதில்: இலங்கையில் ஏற்பட்ட இந்த யுத்தம் வாகரையிலோ அல்லது முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டதல்ல. அதற்கு முன்பு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஒரு யுத்தம். தமிழின அழிப்பிற்கான ஒரு யுத்தம். 83ஆம் ஆண்டு கலவரத்திலும், அதற்கு முன்பு கூட இந்தப் பிரச்சினை ஆரம்பித்திருந்தது. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்ல, உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடைகளை விதித்து, எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் வந்தாலும், அந்தத் தடைகள் – குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இனவழிப்பின் ஒரு உச்ச கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதியை நாம் பார்க்க வேண்டும். கேள்வி: ஆனால் இதன் மூலமாக அவர்கள் – அதாவது மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்ததா? அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது கொல்வதன் மூலம் மக்களின் மனவுறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது – இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் என்று கூற முடியுமா? பதில்: பல நோக்கங்கள் இருந்திருக்கும். சாதாரணமாக ஒரு இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமல்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துக்களை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக்கூட நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது. முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவ தேவைகளுக்குக் கூட தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஒரு இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான – எங்களுடைய கலாச்சாரம், போன்ற எல்லா வகையிலான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, கலாச்சார சீரழிவுக்குக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரித்தான் யுத்தம் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துக்கள், கல்வி வளர்ச்சி எல்லாமே அந்த யுத்தம் மூலம் அழித்திருந்தார்கள். கேள்வி: இந்த இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் நடைபெற்றன – போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதேநேரத்தில் சில வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகளும் இலங்கைக்கு சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையிலேயே சர்வதேசத்திடம் அந்த நேரத்தில் நீங்கள் எதனை எதிர்பார்த்திருந்தீர்கள்? பதில்: நான் மட்டுமல்ல, எங்கள் மக்கள் அனைவருமே ஒரு சமாதான முன்னெடுப்பொன்று ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த மக்கள் இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களைச் சர்வதேசம் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்றும் நம்பியிருந்தார்கள். இந்த மக்கள் அனைவருமே சர்வதேசம் இதில் தலையிட்டு உடனடியாக எங்களுடைய மக்களைப் பாதுகாப்பார்கள், அல்லது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது சமாதான முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கேள்வி: அந்த கால கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா? பதில்: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. ஏதோ ஒரு வழியில் புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டமென்றால் என்ன, வெளிநாடுகளின் – இந்தியா, அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகள் தலையிட்டு மக்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது. கேள்வி: இந்த சந்தர்ப்பதிலே இறுதி வரை எதையுமே சர்வதேசம் செய்யவில்லை என்ற பொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது? பதில்: ஒரு கோபம் கலந்த ஒரு வெறுப்பு, அல்லது ஒரு ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் வெளியேற்றி விட்டது. சர்வதேச நிறுவனங்கள், சுயாதீனமாக இயங்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஒரு அச்சம் இருந்தது. ஒரு சர்வதேச நிறுவனத்தையும் அனுமதிக்காமல், மக்களை அழிக்க – அழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திலேயே மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால் எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதில் இருந்தது. அதேநேரம் குறிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் 2009 ஆண்டு தை மாதம் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் அந்தப் பகுதியில் மூன்றரை இலட்சம் மக்கள் இருந்த பொழுது, எண்பதுனாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு செய்தியை உலகத்திற்குக் கூறி, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சர்வதேச நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி அந்த உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிவிட்டார்கள். கேள்வி: இந்த இறுதி யுத்தத்திலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் 146,000 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்ற ஒரு கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதேநேரத்திலே சில இடங்களிலே ஐக்கிய நாடுகள் சபை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று கூறியது. ஒரு இடத்தில் – நான் சென்ற ஒரு இடத்தில் கூறினார்கள் – ஐ.நா.வின் ஒரு முன்னாள் அதிகாரி – 80,000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது களத்தில் மாத்திரம் – முள்ளிவாய்க்கால் – வன்னிப் பகுதியில் நடந்த யுத்தத்தில் மட்டும். அதற்கு வெளியில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது – அதாவது முகாம்களுக்குச் செல்லும் பொழுது. ஆனால் 80,000 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வின் ஒரு உயர் அதிகாரி குறிப்பிட்டிருந்தார். அது ஒரு வெளியில் வராத சந்திப்பொன்று. உங்களுடைய கணக்கின் படி, நான் அதாவது இந்த 146,000 பேர் கணக்கைச் சொல்லவில்லை. வன்னியில் மட்டும் – வன்னியில் நடந்த எறிகணை வீச்சுக்கள், வான்வழித் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்கள்? பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி. புள்ளி விபரங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருந்தது. வழமையாக, சாதாரண நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வருவார்கள். நாங்கள் அந்தப் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. போக்குவரத்து எல்லாம் சீர் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. காயமடைந்தவர்களை மட்டும் தான் ஏதோ ஒரு கஸ்ரப்பட்டு, தூக்கியோ, அல்லது மோட்டார் சைக்கிள் – வேறு ஒரு வாகனங்களில் கொண்டு வருவார்கள். இறந்தவர்களை கணிப்பிடுவதில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல் இருந்தது. இது கிட்டத்தட்ட 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பல்வேறு புள்ளிவிபரங்கள் ஊடாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இதை இலங்கை அரசாங்கம், அரச அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களம், ஜீ.ஏ. – அவர்களுடைய பிறப்பு, இறப்புப் பதிவாளர்கள் மூலம் கணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் நாங்கள் சரியான புள்ளிவிபரத்தை எடுத்துக் கொள்ளலாம். கேள்வி: நீங்கள் வன்னியிலும், வாகரையிலும் – இரண்டு பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தவை – அங்கு கடமையாற்றியவர் என்ற வகையிலேயே, நீங்கள் முன்னெடுத்த மருத்துவப் பணிகளில், மக்களுக்கான பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பு எவ்வாறாக இருந்தது? பதில்: நான் வாகரையில் கடமையாற்றிய பொழுதும் சரி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய பொழுதும் சரி, விடுதலைப் புலிகளினுடைய இராணுவ அணிக்கும், அவர்களுடைய மற்றப் பிரிவினருக்கும் எங்களுக்கும் நேரடியாக சம்மந்தம் இருப்பதில்லை. நான் மருத்துவர் என்ற ரீதியிலும், மருத்துவ அதிகாரி என்ற ரீதியிலும், விடுதலைப் புலிகளுடைய சுகாதாரப் பிரிவினர், மருத்துவப் பிரிவினர் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள் – ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதனடிப்படையில் சில வைத்தியசாலைகளில், உதாரணமாக கிராமிய வைத்தியசாலைகளில், அல்லது பொது வைத்தியசாலைகளில் இருந்து கிராமங்களை நோக்கி இருக்கின்ற இடங்களில் அரசாங்க வைத்தியர்களை நியமிப்பதில் பற்றாக்குறை இருந்தது. அந்த பற்றாக்குறைகளில் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவின் வைத்தியர்கள், தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் வைத்தியர்களின் உதவியுடன் அந்தக் கிராம வைத்தியசாலைகளை நாங்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் வைத்தியர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் தங்கி சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வைத்தியசாலை எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த வைத்தியர்கள் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவினராக இருந்தார்கள். அதேபோல பல்வேறு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களுடைய உதவி தேவைப்பட்டது. மிகவும் ஒத்துழைப்பைத் தந்தார்கள். சில இடங்களில் நாங்களும், அவர்களும் சேர்ந்து கூட வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் – நிர்ப்பந்தம் என்ன சந்தர்ப்பங்கள் இருந்தது – சூழ்நிலைகள். அது மிகவும் ஒரு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தது. எங்களுக்கு என்பதைவிட மக்களுக்குப் அது ஒரு பெரும் உதவியாக இருந்தது. கேள்வி: மருந்துப் பொருட்கள் என்று வரும் பொழுது விடுதலைப் புலிகள் தங்களிடம் மருந்துப் பொருட்களையும் வைத்திருந்தார்கள் – தமக்கென்று, போராளிகளுக்கென்று. அந்த மருந்துப் பொருட்களின் விடயத்தில் எவ்வாறான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்தது – விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து? பதில்: எங்களிடமிருந்த மருந்துகளை வைத்துத்தான் எங்களுடைய சிறிய வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளை செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளுடைய வைத்தியர்கள் அங்கு கடமையாற்றியிருந்தார்கள். ஆனால் சில மருந்துப் பொருட்களை இலங்கை அரசாங்கம் எங்களுக்குத் தர மறுத்து விட்டது. உதாரணமாக மயக்க மருந்து, இரத்தம் ஏற்றுகின்ற அந்த இரத்தப் பை என்று முற்று முழுதாகத் தர மறுத்து விட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் – சில சந்தர்ப்பங்களில் – விடுதலைப் புலிகளினுடைய மருந்துகளை நாங்கள் வாங்கிப் பாவித்திருக்கிறோம். கேள்வி: நீங்கள் இறுதி வரை, அதாவது இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். உங்கள் பொறுப்பில் ஒரு மருத்துவமனை இருந்தது என்று அறிகிறோம். பதில்: ஆம், நான் முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதேநேரம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒரு வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தேன் – சாதாரண சூழ்நிலையில். 2009 ஆண்டு இடம்பெயர்வுக்குப் பின்னர் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியதோடு, அதற்குப் பின்பு புதுமாத்தளன், வலைஞர்மடம், பொக்கணை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடம்பெயர்ந்த பொழுது நான் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தேன். கேள்வி: அப்படிப் பணியாற்றிய நீங்கள் எவ்வாறு கைதாகினீர்கள்? அதாவது என்ன அடிப்படையில் உங்களை – நீங்கள் யுத்தம் முடிகின்ற கட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொழுது – என்ன அடிப்படையில் உங்களைக் கைது செய்தார்கள்? பதில்: எங்களை அவர்கள் உண்மையில் கைது செய்திருக்கக் கூடாது. நாங்கள் அரச வைத்தியர்கள். அரச வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதற்குரிய முறையான அனுமதிக் கடிதங்கள், முறையான அனுமதிகள் எல்லாம் எடுத்துத்தான் அந்த இடத்தில் நாம் வேலை செய்திருந்தோம். ஒவ்வொரு கிழமையும் அங்கே இருக்கின்ற நிலைமைகளைத் தெரியப்படுத்தி – எமது சுகாதாரத் திணைக்களத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் – சிற்றுவேசன் ரிப்போர்ட் என்று. அந்த மருத்துவத் தேவைகள், மக்களினுடைய காயங்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை எல்லாம் அந்த சிற்றுவேசன் ரிப்போர்ட்டில் இருக்கும். நாங்கள் ஒரு இடத்தில் கூட அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாமலோ, அல்லது அவர்களின் விதிமுறைகளை மீறி நாங்கள் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. மே மாதம் 15ஆம் திகதி வைத்தியசாலைகள் எல்லாம் இயங்க முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. 12ஆம் திகதிக்குப் பிற்பாடு யுத்தம் மிகவும் அண்மையிலும், மிகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்தது. 14ஆம் திகதி இரவிரவாக விடியும் வரைக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தான் எல்லா வைத்தியர்களும், சில ஊழியர்களும் இருந்தோம். 15ஆம் திகதி நண்பகல் நான் காயமடைந்தேன். அந்த காயமடைந்த ஒரு சொற்ப நேரத்தில் அந்த இடத்திற்கு இராணுவம் வந்து விட்டார்கள். வந்து எங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு கூறினார்கள். பின்பு நான் சிகிச்சைக்காக அவர்களுடைய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஏனைய வைத்தியர்கள் அங்கிருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஓமந்தையில் வைத்து அவர்களைப் பிரித்து நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தார்கள். என்னை கிளிநொச்சியில் உள்ள அவர்களுடைய ஒரு இரகசியமான இராணுவ ஜெயில் – அந்த இடத்தில் ஒரு கிழமைக்கு மேல் வைத்திருந்தார்கள். கேள்வி: என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில், என்ன சட்டத்தின் கீழ் உங்களை அப்படித் தடுத்து வைத்திருந்தார்கள்? பதில்: நான் ஆரம்பத்தில் சொன்னது போல், எங்களுக்கு சட்டமோ – குற்றங்களோ நாங்கள் இழைத்திருக்கவில்லை. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ்தான் எங்களைக் கைது செய்திருந்தார்கள். அந்த விசாரணைகள் எல்லாம் சி.ஐ.டி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், அதைச் சார்ந்தவர்களும் தான் எங்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரான எந்த விதமான குற்றங்களும் நேரடியாகச் சுமத்தப்படவில்லை. விசாரணையில் கூட எங்களுக்கு எதிரான ஒரு குற்றங்களைக் கூட அவர்களால் உறுதிப்படுத்தக் கூடிய மாதிரி இருக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாத்தையும், எல்லா செயற்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் சுகாதாரத் துறையின் சட்ட திட்டங்களுக்கு அமையத் தான் செய்திருந்தோம். கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இரகசிய முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? பதில்: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய வாகனத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதாகத் தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பஸ்சிலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சொற்ப நேரத்தில் திரும்பி இறக்கி விட்டார்கள். இறக்கும் பொழுது ஒரு இராணுவ வீரர் மற்றவரிடம் கேட்கிறார் ‘ஏன் இறக்குகின்றீர்கள்’ என்று. அவர் சொன்னார் ஓடர் வந்திருக்கு செல்லுக்குள்ள போடச் சொல்லி. செல் என்றால் ஜெயில் கம்பிக்குள் போடச் சொல்லி. அதற்கு முதல் நாள் இரவு அவர்களுடைய ஒரு முகாம் – ஒரு காம்ப் – ஒரு வெளியிடத்தில் தான் நான் தங்கியிருந்தேன் – படுக்க வைக்கப்பட்டிருந்தேன் ஒரு அறையில். ஒரு கம்பிக் கூட்டுக்குள் விட்டிருந்தார்கள். அந்தக் கம்பிக் கூடு, ஒரு தற்காலிகமாக ஒரு அறை – சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கின்ற அறைக்குள் மூன்று கம்பிக் கூடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் ஒடுக்கமானது. அதற்குள் விடப்பட்டிருந்தேன். பின்பு நான் அவதானித்திருந்தேன் அந்த வீடு – அந்த முகாம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தங்களுடைய அலுவலகமாகப் பாவித்த அடையாளங்கள் – சுவரில் ஒட்டப்பட்டிருந்த அடையாளங்கள் மூலம் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. அதிலிருந்த எனக்கு காவலுக்கு இருப்பவர்கள், தங்களுக்கு மேலிடத்து அனுமதி வந்தால்தான் என்னை வவுனியாவிற்கு அனுப்ப முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். கடைசி நாள் – நான் நினைக்கிறேன் 8ஆவது நாள் இரவு – அந்த கொமாண்டர் – இராணுவ அதிகாரி வந்து, கடுமையான தொனியில் – அவர்களுக்கு ஆகலும் பிரச்சினையாக இருந்த விடயம் அங்கே நடந்த செய்திகளை சர்வதேச ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதும், வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தியதும் எங்கள் மீது ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. அவர்களுடைய கதைகள் எல்லாம் ஏன் பேட்டி கொடுத்தனீர்கள், ஏன் சொன்னீர்கள் என்ற கோபம் தான் இருந்தது. அதனால் தங்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை விட, செய்தி ஊடகங்களுக்கு உண்மைச் சம்பங்களைத் தெரியப்படுத்தியது தங்களுக்கு மிகவும் அசௌகரியங்களைத் தந்ததாகத்தான் அவர் கூறியிருந்தார். கேள்வி: நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வளவு – ஒரு ஆள் இருந்து, படுத்துறங்கக் கூடிய அளவா, அல்லது மிருகங்களை அடைத்து வைத்திருப்பது போன்ற கூண்;டா? பதில்: அது சாதாரண ஒரு அறையில் மூன்று கூடு என்றால், கிட்டத்தட்ட மூன்று அடி அகலம், ஏழு அடி நீளம், நிற்கக்கூடிய அளவுக்கு உயரம். அதற்குள் போய்ப் படுக்கத்தான் முடியும் – படுத்து எழும்பி வர முடியும். அதற்குள் இருந்து வேறு வேலைகளைச் செய்யக்கூடிய மாதிரி இருக்காது. கம்பிக் கூட்டுக்குக் கீழால் சாப்பாட்டுப் பிளேற் அனுப்பக் கூடிய மாதிரி ஒரு இடைவெளி இருந்தது. அதற்குக்குள்ளால் சாப்பாடு வரும். சாப்பிடலாம். மற்றைய தேவைகளுக்காகக் கதவைத் திறந்து அழைத்துச் செல்வார்கள் – முகம் கழுவுதவற்கு, குளிப்பதற்கு எல்லாம். அவர்கள் அந்தந்த நேரம் ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்திற்குள் போய் எல்லாம் செய்ய வேண்டும். கேள்வி: உங்களுக்குத் திடீர் என்று ஏதாவது உடல் உபாதைகள் – உதாரணமாக இயற்கைக் கடன் கழிக்க வேண்டிய தேவை வந்தால் என்ன செய்வார்கள்? பதில்: சொன்னால் கூட்டுக் கொண்டு போவார்கள். கேள்வி: இந்தக் கூண்டில் உங்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அதாவது நான் கேட்பது, உங்கள் மீதான குற்றச்சாட்டல்ல. உங்கள் மனவுறுதியை உடைத்து, தங்களுக்குச் சார்பாக நீங்கள் கதைக்க வேண்டும், அல்லது இப்படித்தான் உங்கள் நிலைமை இருக்கப் போகின்றது என்று உணர்த்துவதற்காகச் செய்தார்கள் என்று நினைப்பீர்களா இதை? பதில்: கிளிநொச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது அவர்களுடைய நோக்கங்கள் எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக அவர், 8ஆம் நாள் வந்து கதைத்த அதிகாரியின் கதையில் இருந்து நான் அறிந்து கொண்டது – அவர் சொன்னார் ஒரு கட்டத்தில் ‘உன்ரை நல்ல காலம் சண்டை முடிஞ்சிது. இல்லாட்டித் தெரிஞ்சிருக்கும்.’ அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன், சில வேளை அவர்கள் என்னை, இந்தச் சண்டை முடியாமல் இருந்திருந்தால் என்னைச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவர்களுடைய பேச்சில் இருந்தது. உதாரணமாக சனல்-4 இல் ஆட்களைக் கொண்டு போய் சுடுவது போல் ஒரு சந்தர்ப்பம் என்னையும் கொண்டு போய் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவரது பேச்சில் இருந்தது. அதனைத் தான் என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சண்டை முடிந்ததால் அவர்களுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன். கேள்வி: ஆனால் சண்டை முடிந்த பின்னரும் பலரைப் படுகொலை செய்தார்கள். அதாவது சமரி எக்சிகியூசன் என்று சொல்லும் வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உங்களை, அதாவது இவ்வளவு உண்மைகளை வெளிப்படுத்திய உங்களை ஏன் அவர்கள் சுடவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? பதில்: அதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றது. நான் காயமடைந்த பின்பு என்னால் நடக்க முடியாமல் இருந்தது. என்னுடைய வைத்திய நண்பர்களும், மற்றும் ஊழியர்களும் – என்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் – இராணுவத்திடம் கையளித்த பின்பு அதனைப் பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் காயமடைந்த என்னைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதேநேரம் இந்த வைத்தியர்களை – வன்னியில் வேலை செய்த வைத்தியர்களை – இலங்கை அரசாங்கம் தடுத்து – விசாரணைக்காக தடுத்து வைத்திருக்கின்றது என்ற செய்தி, உலகத்திற்கும், சர்வதேச நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய அழுத்தங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் என்னை கிளிநொச்சியில் ஒரு கிழமைக்கு மேல் தடுத்து வைத்திருக்கின்ற பொழுது, நான் அங்கே இருக்கின்றேன், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் யாருக்குமே சொல்லவில்லை – எங்களது குடும்பத்தினருக்கும் சரி, சர்வதேச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. நான் நினைக்கிறேன் யுத்தம் முடியாமல் இருந்திருந்தால், அல்லது அவர்களுடைய முடிவில் மாற்றம் வராமல் இருந்திருந்தால், என்னை அவர்கள் சுட்டு விட்டு, காயத்தால் இறந்து விட்டார் என்றோ, அல்லது கொண்டு வரும் பொழுது யுத்தத்தின் அடிப்படையில் இரண்டு பேருக்குமான சண்டையில் இறந்திருப்பேன் என்று ஒரு பொய்யை அவர்கள் சொல்லியிருப்பார்கள். (நான்காம் மாடிக்கு மாற்றப்பட்ட பொழுது தான் எதிர்கொண்ட அனுபவங்களை அடுத்த இதழில் விபரிக்கின்றார் மருத்துவர் ரி.வரதராஜா) நன்றி: ஈழமுரசு
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
மருத்துவர் திரு முரளி 'இறுதிப்போரில் மருத்துவர் வரதராஜாவுடன்'
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
இறுதிப்போரில் வன்னி மக்களின் உயிர்காத்த வைத்தியர்களின் சிலர் (போராளிகள் சாராதோர். காயப்பட்ட அனைவருக்கும் (சிங்களவர், தமிழர் என்ற பேதமின்றி) மனிதர்கள் என்ற வகையில் வைத்தியம் அளித்தனர்.) 'இ-வ: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மருத்துவர் சண்முகராஜா, மருத்துவர் வரதராஜா, மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்துவர் இளஞ்செழியன் பல்லவன்'
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
தி. கெங்காதரன் இன்னொருவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் 2009>
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
அமரர். வைத்திய கலாநிதி கெங்காதரன் 13.05.2015 அன்று எம்மைப் பிரிந்தார் 20.4.2003 அன்று இவருடைய தமிழினத்திற்கான 50 ஆண்டுகள் சேவையினைப் போற்றியும் இவருடைய பொதுவாழ்விற்கு துணை நின்ற இவருடைய குடும்பத்தினரைப் பாராட்டியும் இவருக்கு கிளி. அரசியல்துறை நடுவப்பணியகத்தில் வைத்து தலைவர் தனது கைகளால் நினைவுப்பரிசொன்றை வழங்கினார். (பங்குனி- சித்திரை 2003, விடுதலைப் புலிகள் ) விரித்திட மொழியில்லை. பொதுமகனாய் எம் தேசத்திற்கு ஆற்றிய மருத்துவப் பணிகள் ஏராளம்... அதனால் தான் முதல் மருத்துவராய் இவரின் படிமத்தைப் பதிந்தேன். மேஜர் அபயன் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் பண்டுவம் செய்ததும் இவர்தான். ஒரு அறுவைப் பண்டுவம் செய்தார். அன்றுதான் மேஜர் அபயன் ஞாபகார்த்த வைத்தியசாலையும் தொடங்கப்பட்டது. இன்று எமக்கெனவொரு நாடிருந்திருந்தால் இவரின் பெயரில் ஒரு ஞாபகார்த்த மருத்துவமனை எழுந்திருக்கும்! சென்று வருக மருத்துவப் பெருமானே! --> பொன்.காந்தன் உழைப்பாளன் ஒருவன் உறங்கிக்கிடக்கின்றான் எண்ணற்ற இதங்களின் இதயத் துடிப்பின் ஓசைகளை கேட்டு உயிரின் பயணத்துக்கு பக்குவம் சொன்ன கங்காதரன் பயணம் ஒன்றுக்கு தயாராகிவிட்டார். பூமித்தாயின் இதயத்தில் பூவில் உறைந்திருக்கும் காற்றில் மூங்கில் காட்டில் இன்று டெதஸ்கோப் வைத்துப் பார்த்தேன் கண்ணீர்துளிகள் சொட்டும் ஓசை. ஈழத்தமிழனின் புறநானூற்றுப் பயணத்தில் விழுப்புண்களுக்கு மருந்திடும் வித்தை தெரிந்தவர்கள் களத்திலே காயங்களுடன் குருதி சிந்தவரும் வீரனுக்கு மடியிலே வேதம் சொல்லி விடியலை காட்டும் கால வைத்தியன்கள் கடவுள்தான். மாமனிதன் கங்காதரன் கடவுள். புன்னகையும் பொறுமையும் மென்மையும் வேகமும் தாகமும் கொண்ட உயிரின் காவலன். விடுதலைப்பயணத்துக்காக அறுபது கடந்த பின் கங்காதரன் இளைஞனாய் பிறப்பெடுத்தார். நந்திக்கடல் வீதிகளிலும் வன்னிக்கானகத்தின் படை வீடுகளிலும் நொந்துபோனவர்களின் வருடலாய் திரியும் மருத்துவப்படையின் வழியாய் விழியாய் விரிந்தது கங்காதரம். கங்காதரனின் யாகசாலை அற்புதமானது. எப்பொழுதும் திறந்திருக்கும் இதயமாய் இருந்தது. அவர் கைபட்டதுமே காய்ச்சல் மாறியவன் எத்தனை பேர் அவர் பெயர் சொன்னதும் வலிகுறைந்து மகிழ்ந்த சுகப்பிரசவங்கள் எத்தனை எத்தனை நீ மருந்திடுவாயெனில் மேனி முழுக்க களத்தில் காயம் தாங்குவேன் என்று கங்கணம் கட்டியன் எத்தனை பேர் கங்காதரனின் குளிசைகள் மனதுகளுக்கு கற்பூரமும் ஊதிபத்திகளும் போல பரவசமானவை. எல்லாம் வாசல்களும் மூடப்பட்ட வன்னிக்குள் உள்ளதை வைத்து உயிர்காத்த வல்லமை முன் மண்டியிடும் தருணம் இது. ஒரு கையில் டெதெஸ்கோப்பும் மறுகையில் காட்டு மூங்கிலுமாக வாழ்வுக்கு அர்த்தம் சொன்ன கங்காதரா உன் ஆவிக்கொரு மருத்துவம் இல்லை என்பதும் உன் கற்பூர தேகத்தை காவிச்செல்லும் அந்த கந்தர்வதேவர்கள் இம்மண்ணில் மௌனித்து இருப்பதும் கால நியதி. தாயகம் முழுதும் தோளில் சுமந்து அஞ்சலிக்க வேண்டிய சந்தணமேனி பூமியின் ஒரு மூலையோடு அடங்கிடுமோ ஐயகோ! வீழ்ந்தவர்கள் கண்ட கனவு வென்று வேங்கைக்கொடி பறக்கும் தேசத்தில் உன் ஆவி பிரிந்திருந்தால் இன்று ஓடி வந்திருப்பான் முதலில் கரிகாலன் உனக்குரிய உயர்ந்த கௌரவத்தை கொடுத்திருப்பான். போரின் உக்கிர காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கங்காதரனின் விம்பம் கடவுளாய் இருக்கின்றது. மானுட தேகத்தின் சூட்சுமங்கள் பற்றிய கங்காதரனின் கணக்கை கற்றவர்கள் இப்பொழுது எந்த நாட்டில் இருந்தாலும் வைத்தியத்துறை அவர்களுக்கு வசியப்பட்டிருக்கும். இசையும் ஒரு மருத்துவம் என்பதாலோ என்னவோ புல்லாங்குழல் ஏந்திய பெருமானாகவும் கங்காதரன் நம் மண்ணில் உலவி உள்ளம் சிலிர்க்கவைத்தார். இது உண்மையில் உதடுகளை பிரிந்து தவித்துக் கொண்டிருக்கும் புல்லாக்குழலுக்கும் சேர்த்து எழுதும் அஞ்சலியின் பல்லவி எம் தாய் பெற்றெடுத்த வண்ணங்களில் ஒன்று வானவில்லாகி கரைகின்றது. எம் மண்ணை வருடித்திரிவதே வாழ்கையென்றிருந்த காற்றொன்று நேற்றோடு கங்காதரன் வடிவில் நின்றிற்று. உன் வாழ்கையில் நாடி நரம்புகளை ஒவ்வொன்றாய் எழுதலாம் ஐயனே! ஒவ்வொன்றிலும் மண் வாசமும் மகத்துவமும் ஒட்டியிருக்கும். அன்பனே! விண்ணைத் தாண்டியும் விடைபெற்றுப்போகலாம். அங்கேயும் காத்திருக்கும் நீ கைநாடி பிடிக்க ஆசுவாசப்பட ஒரு உலகம். சென்று வருக மருத்துவ பெருமானே!
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
இதுவரை மருத்துவ பிரிவில் செயற்பட்டு வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் 14/06/2003 அன்று மருத்துவப் பிரிவு மாவீரர்களின் வீரவணக்கத்திற்கென வெளியிடப்பட்ட படிமம் .
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
பிரிவுகள் புலிகளின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் (Combatants) தேவைக்காக 'மருத்துவப் பிரிவும்' மக்களின் தேவைக்காக 'தமிழீழ சுகாதாரப் பிரிவும்' செயற்பட்டன. இவற்றில் பணியாற்றியோர் "மருத்துவ போராளிகள்" என்றும் போர்க்கால இலக்கியங்களில் "மருத்துவப் புலிகள்" மற்றும் "மருத்துவ வேங்கைகள்" என்றும் சுட்டப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு: தமிழீழ சுகாதாரப் பிரிவு: தமிழீழ சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்க்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு கூழாவடி ஐயங்குளம் வாழைத்தோட்டம் தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு மருத்துவ பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது... தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்) தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழத் தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள்/ படையணிப்பிரிவு மருத்துவமனைகள் தள மருத்துவமனைகள்/ படையணிப்பிரிவு மருத்துவமனைகள் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை நீலன் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.) முல்லை மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)