Everything posted by கந்தப்பு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அயர்லாந்து 235/5 - இதுவரை நடந்த போட்டிகளில் அதிக பட்ச ஓட்டம் அணித்தலைவர் லோர்கன் டக்கர் 94 ஒட்டங்கள் எடுத்து இருக்கிறார். இதுவும் அதிக பட்ச ஓட்டம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தோற்க இருந்த ஐக்கிய அமீரகம் வெற்றி பெற்று விட்டது. நிலாமதி அவர்களின் இன்றைய நல்ல காலத்தினால் எனக்கு 2 புள்ளிகள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று எல்லாப் போட்டிகளிலிலும் எனக்கு முட்டைகளோ 😳
-
அகில இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை. டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார். வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அலிகான் 2 ஓவர் சிறப்பாக பந்து வீசினார். காயப்பட்டதினால் தொடர்ந்து அவரால் வீசமுடியவில்லை. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடமுடியவில்லை. இன்று பூரண குணமடைந்தால் விளையாட சந்தர்ப்பம் இருக்குது. பாகிஸ்தான் அணியில் உஸ்மான் டாரிக் என்ற சூழல் பந்து வீச்சாளர் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இவர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என நினைக்கிறேன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா 209/9 முறியடிக்கவில்லை- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகவீனம் காரணமாக விளையாடவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்துடன் நேபாளம் விளையாடிய விளையாட்டினை பார்த்து இன்று நேபாளம் இலகுவாக வெல்லும் என நினைத்தேன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி சகோதரர்கள் இருவரும் 50 அடித்து இருக்கிறார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபாளம் 123 ஓட்டங்களுக்கு சகலவிக்கேற்றுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
83 இல் உலக ஒருநாள் சாம்பியன் இந்தியா . அணித்தலைவர்- கபில் தேவ் 84/85 இல் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட்போட்டி விளையாடியது. இங்கிலாந்து 2 :1 இல் வென்றது. அசாருதீன் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் 100 ஒட்டங்கள் ( இச்சாதனை இன்னும் முறியடியக்கப்படவில்லை) . அணித்தலைவர்- கவாஸ்கர் பிறகு இலங்கைக்கு கபில் தேவ் தலைமையில் இந்தியா சென்றது- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அடுத்த டெஸ்ட் போட்டியில் Javed Miandad விஸ்டன் புத்தகத்தை கொண்டுவந்து இலங்கை நடுவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு விதிகளை விளங்கப்படுத்த சிங்கள சனம் சிங்களத்தில் கூச்சல் போட்டது நினைவுக்கு வருகிறது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலோர் இந்தியா அணிக்கே ஆதரவு. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற தமிழக வீரர்கள் இந்தியா அணியில் இடம் பிடித்தார்கள். இலங்கை வென்றதும் ஜெ ஆர் ஜெயவர்த்தன மறுநாள் அரச விடுமுறையாக அறிவித்தார். இலங்கை நடுவர்கள் அப்பட்டமாக இலங்கை அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். இந்தியா அணித்தலைவர் கபில்தேவ், இலங்கை அணி வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் வெல்லமாட்டார்கள் என்று போட்டி முடிவில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கூறியது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும்போது காலநிலை சரியில்லை என்று சொல்லி போட்டியினை இலங்கை நடுவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இம்முறை நான் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யவில்லை. விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து இருந்தால் இந்தியா வெல்லும் என்று விடை எழுதியிருக்க மாட்டேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாழ்த்துகள் வீரப்பையன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவரும் CSK வீரர்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐபிஎல் 2026 இல் இவரை வேண்டாம் என்று KKR அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரேலியா அணித்தலைவர் மார்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. மார்ஸ் தொடரில் விளையாடாத சந்தர்ப்பம் வந்தால் அவருக்கு பதிலாக மாற்று துடுப்பாட்ட வீரர் தேவை என்பதினால் ஸ்டீவன் ஸ்மித் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கானிஸ்தான் குர்பாஸினை முதலில் அடிக்கவிட்டிருக்க வேண்டும்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடுத்த சூப்பர் ஓவர்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கானிஸ்தான் 9 ஓவரில் 93-3 Gurbaz 63 ஆட்டமிழக்காமல் ஆடுகிறார்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது வேற மைதானம். ( P. sara oval - Paikiasothy Saravanamuttu Stadium) . இது SSC( Sinhalese Sports Club Ground) இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில்தான் நடைபெற்றது.100 வருட பழமைவாய்ந்த மைதானம். 2010 க்கு பிறகு இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூசிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளில் 4 இல் 3 இனை சென்னை மைதானத்தில் விளையாடுகிறது. CSK இல் வரும் ஐபிஎல்லில் விளையாடவுள்ள Matt ஹென்றி இன்று 2 விக்கெட் எடுத்து இருக்கிறார்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்காவது Finn Allen இன் அடி பார்க்கலாமா? - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.