-
Posts
32973 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
மேற்குநாடுகள் ஒன்றும் பெரிய பாசத்தில் அகதிகளை (கூடுதலாக பொருண்மிய அகதிகள்) உள்வாங்கி வைக்கவில்லை என்பதை அண்மையில் ஜேர்மனியில் அகதிகள் நிர்வாணமாக்கி விடப்பட்டிருந்த காட்சிகள் சான்று சொல்லும். அவர்களுக்கு நவீன அடிமைகள் தேவை கூலிக்கு. அதுதான் அழைத்து வைத்திருக்கிறார்கள். கூலிகளுக்கு அது சொர்க்கமாகத் தெரிகிறது. ஆனால்.. ரஷ்சியா சினோடனுக்கு அண்மையில் குடியுரிமை வழங்கி காப்பாற்றி இருக்குது. சினோடன் அமெரிக்காவில் தேடப்படும் அமெரிக்கப் பிரஜை ஆவார். உக்ரைனில் சிவிங்கியால் இனவிரோதம் பாராட்டி.. விரட்டப்பட்ட ஹிந்திய மாணவர்கள் ரஷ்சியாவில் கல்வியை தொடர் வாய்ப்பளித்திருக்குது புட்டின் நிர்வாகம். அந்த வகையில்.. ரஷ்சியாவிடமும் ஐநா ஊடாக விண்ணப்பிச்சு பார்க்கலாம். அதில் தவறில்லை.
-
இந்தப் பகுதியை யுத்தம் செய்து உக்ரைன் வெற்றி கொள்ளவில்லை. மாறாக ரஷ்சியா விலகிக் கொண்ட பின் வெற்றி வெற்றி என்ற வெற்றுக்கூச்சல் தான். குளிர்காலத்திற்கு ஏற்ப தனது படைநகர்வை செய்கிறது ரஷ்சியா. நோட்டோவுக்கும் உக்ரைனுக்கும் தேவையான வெற்றிக்கோ.. பிரச்சாரத்துக்காகவோ அல்ல. கேள்வி உக்ரைன்.. இதுவரை நோட்டோவிலோ.. ஐரோப்பிய ஒன்றியத்திலோ இன்னும் அங்கம் பெறவில்லை.. மாறாக இராணுவ உதவிகள் தான் அளிக்கப்படுகின்றன. இது ரஷ்சியாவுக்கு வெற்றி.. ஏனெனில்... இந்தப் போரின் நோக்கமே.. உக்ரைனை இராணுவ பலமிழப்புச் செய்வதும்.. நேட்டோ விரிவாக்கத்தை தடுப்பதும். ஏலவே நேட்டே விரிவாக்கம் தொடர்பில் நேட்டோ ரஷ்சியாவுக்கு வழங்கி இருந்த உறுதி மொழிகளில் இருந்து விலகியதன் விளைவே இந்த யுத்தம். அது சிலுங்கியால்.. உருவானது. உக்ரைனின் அழிவுக்கும் சிலுங்கி தான் காரணம். அவரை பதவியில் வைச்சுக் கொண்டு உக்ரைன் மக்கள் உண்மையான வெற்றியை சமாதானத்தை சுவைக்க முடியாது. இது பிரச்சாரத்துக்கு மட்டும் உதவலாம்.. மேற்குலகிற்கு. உண்மை தான். ஏனெனில்.. யாழ் குடா நாட்டை புலிகள் கைப்பற்றக் கூடிய சூழலில்.. சிங்கள இராணுவம் ஓடிக்கொண்டிருந்தது 2000ம் ஆண்டில். ஆனால் அதே புலிகள்.. 2009 இல் முற்றாக தோற்கடிக்கப்பட்டு.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. முழுநேர ஆக்கிரமிப்புக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். 2000ம் ஆண்டில்.. ஒருவேளை புலிகள் தொடர்ந்து போராடி இருந்து அன்று யாழில் நிலை கொண்டிருந்த 40,000 சிங்களத்தையும் வெளியகற்றி இருந்தால்.. 2009 நிலைமையைக் கூட தவிர்த்திருக்கலாம். அன்றைய சூழலில் எடுத்த முடிவு.. பின்னர் எதிரிக்கு சாதகமானதே அதிகமானதாகிவிட்டது.
-
யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அப்போ ரஷ்சியாவை யுத்த களத்தில் சந்திக்காமல்.. அந்த நாட்டு மக்களைப் பாதிக்கக் கூடிய வகையில் பொருண்மியத்தடைகள் போடுவது உள்ளிட்ட மேற்குலகின் நடவடிக்கைகளையும் பயங்கரவாதம் என்பீர்களா..??! ரஷ்சிய கொடியை தாங்கியது என்பதற்காகவே பல உல்லாசப் படகுகளை நடுக்கடலிலும் துறைமுகங்களிலும் வைத்து கைப்பற்றிய செயல்கள்.. பயங்கரவாதம் ஆகும் தானே..?! எங்கேயோ யுத்தம் நிகழ.. லண்டனில் இருந்த ரஷ்சிய பணக்காரரையும் அவரின் கால்பந்துக் கழகமான செல்சியையும் பழிவாங்கியது.. பயங்கரவாதம் ஆகாதோ..??! உக்ரைன் ரஷ்சிய எல்லைப் புற நகர்களில் இருந்த எண்ணை தாங்கிகளை தாக்கியமை பயங்கரவாதம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..??! பொதுமக்களின் பாவனைக்குரிய கிரிமியா பாலத்தை தாக்கியது பயங்கரவாதம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..?! இப்படி மேற்குலகும்.. உக்ரைனும் கூசாமல்.. செய்யும் பயங்கரவாதம் பற்றி ஏன் கதைக்க மறுக்கிறீர்கள். பிரித்தானியாவின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் அண்மையில் உயிரிழந்திருக்கிறார். இதே படையணி தான் ஈழத்தில் தமிழ் மக்களை மிக மோசமாகக் கொன்றொழித்த குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்.. சிங்கள அதிரடிப்படைக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி இருந்தது. ஆக.. மேற்குலகின் நேரடிப் பங்களிப்போடு நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தை சமாளிக்க ரஷ்சிய எதையும் செய்யலாம் அதானே. அது எப்படி பயங்கரவாதமாகும்..?! குறிப்பாக மேற்குலக அதிநவீன இலத்திரனியல் ஆயுதங்களின் பாவனையை மட்டுப்படுத்த.. மின் இலக்குகளை தகர்க்கப்பட வேண்டியதும்.. மின்னணு மற்றும் மின்காந்த அலை மையங்கள் அழிக்கப்படுவதும் அவசியமே. அதனால்.. அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கும் மேற்குலகமே பொறுப்பு. -
தர்மம் பின்னடைவுகளை கண்டாலும் இறுதியில் வெல்லும். விடுதலையானவர்கள் தம் தம் நாடுகளில் வசிக்க முடியாத சூழல் நிலவின்.. ஐநா அகதிகள் மையத்தில் பதிவு செய்வதன் மூலம்.. ஐநாவின் பாதுகாப்போட்டு இன்னொரு பாதுகாப்பான நாட்டில் வாழ முடியும். அதற்கான உரித்து இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏனெனில்.. இவர்கள் காங்கிரஸ் குண்டர்களால்.. அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட கூடும் என்பதால்.
-
T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்
nedukkalapoovan replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்
அரை இறுதியில் ஹிந்தியா தோற்று பாகிஸ்தான் வென்றது ரசிக்கத்தக்க விடயம். ஹிந்தியர்களின் கிரிக்கெட் வெறியாட்டம் அடங்க வேண்டும். -
யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ரஷ்சியாவுக்கு கெர்சான் இனாமாகக் கிடைத்தது. ரஷ்சியா உக்ரைனை ஆக்கிரமிப்பது அல்ல நோக்கம் என்பதை யுத்தத்தின் ஆரம்பத்திலேயெ சொல்லிவிட்டது. நோட்டாவாக்கம் உக்ரைனில் தடுத்து நிறுத்தப்படும் வரை ரஷ்சியா ஓயாது. ஆனால் இழப்புக்களை குறைக்க நினைக்கும். உக்ரைன் கைப்பற்றிய பகுதிகள் பலவும் ரஷ்சியா தானாக வெளியேறிய பகுதிகளே. உக்ரைன் யுத்தம் செய்து மீட்டதென்பது ஒரு சிறிய பகுதிதான். ஆனால்.. உக்ரைனை இராணுவ நீக்கம்.. நோட்டோ விரட்டல் செய்ய இப்போ ரஷ்சியாவுக்கு ஏவுகணைகளே போதும் என்றாகிவிட்டது. -
429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
குத்தியர் நெடுந்தீவை சிங்கப்பூராக்கவில்லை.. கஞ்சாத்தாவாக்கி இருக்கிறார். இதுதான் தீவகம் எங்கும் நிலைமை. வீணை ஒட்டுக்குழுவின் புதிய வருமானம்.. மணல் கடத்தல் போய் கஞ்சா வியாபாரமாக்கும். சொறீலங்கா கடற்படையின் அனுசரணை இல்லாமல் இந்த வியாபாரம் நடக்கவே முடியாது. அந்தளவுக்கு சொறீலங்கா கடற்படை தீவகத்தை ஆக்கிமிச்சு நிற்குது. அதற்கு தமிழ் ஒற்றர்களும் அங்கு அதிகம்.- 5 replies
-
- 1
-
- கஞ்சா ஹெரோயின்
- ஐஸ்
-
(and 2 more)
Tagged with:
-
யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஹிந்தியாவுக்கு 1987 இலேயே போதிய அளவு பாடம் கற்பித்துவிட்டார்கள் தமிழர்கள். இந்தப் போத்தல் எல்லாம் அடிக்க வேண்டிய தேவையில்லை. இது யாரோ ஏதோ தேவைக்காக அடித்திருக்கிறார்கள். மாவீரர் நாளை குழப்ப ஒரு சேதி தேவையாக இருக்குது போல. -
10 நிமிட ஓய்வென்பது யாரால் தீர்மானிக்கப்பட்டது. 10 நிமிட ஓய்வு காணாது. மேலும் இரவு நீண்ட தூரப் பயணங்களில் ஒரே சாரதியை பயன்படுத்தக் கூடாது. எப்போதும் துணைச் சாரதி வைக்கப்பட வேண்டும். 20 நிமிட ஓய்வும்... சாரதிகள் மாற்றி மாற்றி சேவை ஆற்றுவதும் அவசியம். ஆளுநர் தகுந்த ஆலோசனைகள் இன்றி சகட்டு மேனிக்கு தீர்மானங்கள் எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.
-
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
Danushka Gunathilaka: Sri Lanka batter charged with sexual assault at T20 World Cup Last updated on1 minute ago1 minute ago.From the sectionCricket Gunathilaka has played eight Tests, 47 one-day internationals and 46 Twenty20s for Sri Lanka Sri Lanka batter Danushka Gunathilaka has been charged in relation to an alleged sexual assault while at the T20 World Cup in Australia. He has been charged with four counts of sexual intercourse without consent and denied bail at a Sydney court. Gunathilaka, 31, was arrested shortly before 01:00 local time on Sunday morning at the team hotel. It is alleged he sexually assaulted a 29-year-old woman on Wednesday, 2 November. The arrest came hours after Sri Lanka's final game of the World Cup - a four-wicket defeat by England on Saturday. Gunathilaka was ruled out of the tournament with injury on 20 October but had remained with the squad in Australia. New South Wales police say he met with the woman after communicating for a number of days on a dating app. A Sri Lanka Cricket statement said: "Sri Lanka Cricket confirms that it was notified by the ICC [International Cricket Council] that player Danushka Gunathilaka has been arrested on the allegations of sexual assault of a woman in Sydney, and Mr Gunathilaka is due to appear in court tomorrow (7 November). "SLC will closely monitor the proceedings in court and, in consultation with the ICC, will expeditiously initiate a thorough inquiry into the matter and take stern action against the player if found guilty." https://www.bbc.co.uk/sport/cricket/63532143 -
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
சிங்களவர்கள் என்றவுடன் கிரிக்கெட் போட்டிகளை காண கேட்டுக்கேள்வி இல்லாமல் விசாக் கொடுக்கும் கொழும்பு அவுஸ்திரேலிய தூதரகம் இருக்கே.. அது தான் இதற்கு வெட்கப்படனும். தமிழர்களுக்கு விசாக் கொடுப்பதில்லை.. போனால் வரமாட்டங்கன்னு. ஆனால் சிங்களவர்கள் இப்படிப் போய் தான் அவுஸில் செற்றிலானது அதிகம். இவருக்கு தெரிந்திருக்கும் இலங்கை அணி வெல்லவே போறதில்லை.. தான் இப்படிக் கலக்கிடுவம்.. என்று.. டேட்டிங் அப்பிலேயே கிடையாய் கிடந்திருக்கிறார். 😅 -
கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in வாழும் புலம்
கள்ளமட்டை போட்ட கூட்டத்தில் இருந்து இப்படியானதுகள் வாறது ஒன்றும் அதிசயமில்லையே. என்ன தமிழருக்குள் உலகில் உள்ள எல்லாமும் இருக்குது. ஆனால் அவனுக்கு என்றொரு நாடில்லை. வழிகாட்டியும் இல்லை.. இருந்த வழிகாட்டியையும் காட்டிக்கொடுத்தே இல்லாமல் செய்திட்டார்கள். இதில வெள்ளையளையும் நம்ப முடியாது.. என்பதற்கு UNEVEN JUSTICE என்ற ராஜரட்ணத்தாற்ற புத்தகத்தை ஒருக்கா வாசிப்பதும் நல்லம். -
யாழில் இருந்தான.. அல்லது யாழ் நோக்கிய நீண்ட தூர பேரூந்துகள்.. தொடரூந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவதோடு.. பயணங்கள் அச்சம் நிறைந்தவையாக அமைகின்றன. விபத்துக்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தங்க பாதுகாப்பு முன்னேற்பாடுகள்.. செய்யப்படாமை மற்றும் பயணிகளின் சாரதிகளின் நலனை முன்னிறுத்தாத வருவாய் நோக்கமான சேவைகளே இந்த நிலை தொடரக்காரணமாகும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடந்த கால பாடங்களில் இருந்து உள்வாங்கப்படும்.. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி... இப்படியான போக்குவரத்துக்களை செய்ய தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதே இந்த அச்ச நிலை தொடராமல் இருக்க வழி வகுக்கும்
-
இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சொறீலங்கா இராணுவம் சொல்வதை எல்லாம் நம்பி செய்தியாப் போட.. நாம அதைப் பகிர்ந்து கருத்துச் சொல்லுறம் பாருங்க.. அதில சிங்களவன் வென்றிட்டான். சொறீலங்கா இராணுவம் சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாத காலம் போய்.. அது சொல்லுறதை நம்பி கருத்தாடுற காலமாப் போச்சு. சொல்கைமை கூப்பிட்டு வைச்சுக் கொண்டு சொல்லுறதிலும் ஒரு உள்நோக்கம் இருக்கலாம்.. ஆனால்.. களத்தில் நின்ற ஐநா உள்ளிட்ட சர்வதேச செஞ்சிலுவை உட்பட்ட தன்னார்வ நிறுவனங்களும்.. செய்மதிக் கண்காணிப்புச் செய்தவைக்கும் உண்மைகள் தெரியும். சொல்கைமே சொல்லமாட்டார் உண்மையை.. இதில சொறீலங்கா இராணுவம் சொல்லிடுமாக்கும். -
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022
nedukkalapoovan replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்
இருந்தாலும் தமிழகத்தில் பிறந்த கார்த்திக் மெய்யப்பன்.. ஒரு ஹாட்ரிக் எடுத்திருக்கிறார்.. மிகப் பெரிய சிக்ஸையும் யு ஏ ஈ சொறீலங்காவுக்கு எதிராக எடுத்திருக்குது. https://www.bbc.co.uk/sport/av/cricket/63297532 -
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022
nedukkalapoovan replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்
உள்ளூரில் விளையாடுவதோடு சரி. உட்கார்ந்திருந்து பொறுமையா சர்வதேச கிரிக்கெட்டைப் பார்த்தே சில வருடங்கள் ஆகுது. ஆனால் செய்தி மட்டும் படிப்பதுண்டு. ஆகையால்.. இதற்குள் குதிப்பது ஆழம் பார்க்காமல் சரியா வராது..! கொப்பி பேஸ்ட் பண்ண இஸ்டமில்லை. எங்களை மனதில் வைத்து தந்த அழைப்புக்கு நன்றி. 😀 போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். -
யாழ்ப்பாணத்து சமையல்கள் - கதைப்பம் வாங்க.
nedukkalapoovan replied to sivarathan1's topic in நாவூற வாயூற
இப்படித்தான் எங்கள் வீட்டில் அம்மா செய்வது. அந்த ருசி இப்பவும் நினைவுகளில் இருக்குது. ஆனால்.. இப்ப எல்லாம் என்னென்னவோ முறையில் வெளிநாட்டில் சமைக்கினம் (இந்திய முறையை யு ரியுப்பில் பார்த்து).. ஆனால்... ஊர் உருசி வருகுதே இல்லை. மேலும்.. அண்மையில் ஊருக்கு வந்த போது உங்கள் உணவகத்திற்கு வரனும் என்று இருந்தது. பின்னர் சரியான வேளை அமையவில்லை. உங்கள் உணவகம் திருநெல்வேலி சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ளது தானே..?! மக்களில் அநேகர் இதனை அறிந்திருக்கவில்லை இன்னும். அறிந்தவர்கள் நிச்சயம் போகச் சொன்னார்கள். உங்களை கொஞ்சம் அதிகம் மக்களுக்கு அறிமுகம் செய்வது நல்லம். -
-
அளவோடு...கருவாடு கொண்டு வந்தது தான். அதனால் முழிக்கத் தேவையில்லை. இங்கிலாந்து இந்த விடயத்தில் அவுஸி... சுவிஸை விட எவ்வளவோ மேல். ஆனால் கருவாடு வாங்கப் போய் பக்கத்தி பக்கத்தி கடைக்காரர் போட்டி போட்டுக் கொண்டு அடிபிடி படும் அளவுக்கு போகப் பார்த்திட்டுது. அவங்கள விலக்குப் பிடிக்கிறதே பெரியப்பாடாப் போச்சு. ஆனாலும்.. இப்ப எல்லாம் நல்லா சின்னதா வெட்டி.. நல்லா பக்கிங் பண்ணி தாறாய்ங்க. தகவலுக்கு நன்றி.
-
விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சொகுசு பயணிகள் விமானம் ஒன்றில்.. இந்த அடிப்படை பெளதீகமாற்றத்துக்கு தீர்வு தேடாமல் விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கவாய்ப்பில்லை. ஏனெனில்.. மற்றைய விமானங்களில் இப்படி நிகழ்வில்லை. அதற்கேற்ப அந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் மட்டும்..??!