கனடாவில் விமானப்பொறியியல் கற்றுக்கொண்டு கைநிறைய சம்பாதிக்ககூடிய நிலையில் உலகமே கொண்டாடியிருக்க கூடிய புத்திசாலியான கேணல் சங்கர் அண்ணா தாயகம் திரும்பி தலைவருடன் இணைந்து குடும்பத்தில் அவரோடு சேர்த்து மூன்றுமாவீரர்களை கொடுத்தும் தயங்காமல் தமிழீழ விமானப்படை தொடக்கத்தின் பிதாமகராக இருந்து வழிகாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கால் போராடி தரப்படுத்தலில் முன்னேறி ஒரு தமிழனாக பல்கலைக்கழகம் செல்வதென்பது ஈழத்தமிழரை தவிர யாருக்கும் புரியாது.ஒவ்வொரு யாழ்ப்பாணக்குடும்பத்துக்கும் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதுதான் மிகப்பெரிய இலக்காக இருக்கும்.அத்தகைய நிலையில் மருத்துவ பட்டதாரியாகி யாழ்பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக இருந்து ஒரு வைத்தியனாக வெளிவந்து சமுகத்தின் முதன்மையிடத்தில் இருந்தபடி சம்பாதித்திருக்ககூடிய லெப்.கேணல் திலீபன் அண்ணாவும் இந்த செப்ரெம்பர் 26 ல் நம்மை தவிக்கவிட்டு பிரிந்தார்கள்.
திலீபன் அண்ணா- 26.09.1987 இலும்.., சங்கர் அண்ணா-26.09.2001 பயணத்தின்போது எதிரி பதுங்கியிருந்து கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்தார்.
புகைப்படத்தில் தலைவரின் இருபக்கமும் இந்த இரண்டு மாவீரர்களும் பேச்சுவார்த்தையில் இந்திய அதிகாரிகளுடன் இருக்கிறார்கள். அரசியல் களம்,சண்டைக்களம்,அகிம்சைக்களம் என எல்லாவற்றிலும் புலிகளால் சாதிக்க முடியுமெனக்காட்டிபோன பல்திறமை கொண்ட மாவீரர்களை ஒரு காலத்தில் நாம் பெற்றிருந்தோம்.
நன்றி முகநூல்.