-
Posts
32973 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
ரணில் உட்பட பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் நினைப்பதையே இவர் சொல்கிறார். ஏன் எம் தமிழர்களில் கூட ஒரு பகுதி இதே சிந்தனையோட்டத்தில் தான் இருக்குது. இல்ல.. எமது போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழிக்க நினைச்சிருக்குமா.. அதுபோதாதென்று.. இருந்த ஒரு அரசியல் சக்தியான தமிழ் தேசிய அரசியலையும் பலவீனப்படுத்தி இருப்பாங்களா..??!
-
யாழில் நாய்களை விழுங்கிய முதலை மடக்கிப் பிடிப்பு!
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
நான் பல தடவை கேள்விப்பட்டு இருக்கிறேன். யாழ் நகரில் அசோகா விடுதிக்கு அருகில் உள்ள குளத்தில் முன்னர் முதலை இருந்து மக்களுக்கு ஆபத்து என்று பிடித்து.. பொன்னம்மான் விலங்குகள் சரணாலயத்தில் வைக்கப்பட்டிருந்து பார்த்தும் இருக்கிறேன். சாவகச்சேரிப் பகுதியில் நன்னீர் குளம் குட்டைகள் அதிகம் என்பதால் அங்கு முதலை உண்டு. அதேபோல்.. செம்மணி அரியாலை பகுதியிலும் உண்டு. -
ஒற்றையாட்சிக்குள் பல்லின மக்கள் வாழும் வெவ்வேறு தேசக் கூறுகளைக் கொண்ட மக்கள் எல்லா உரிமையும் பெற்று வாழ முடியாது. இந்த அடிப்படை உண்மையை சிங்கள அரசியல்வாதிகள் உணராத வரை சொறீலங்காவுக்கு விடிவில்லை. உலகில் பல்லினத்துவ நாடுகள் எல்லாமே கூட்டாட்சி தத்துவத்தின் மூலமே.. மக்கள் உரிமைகளையும் நிலைநாட்டி.. பொருண்மிய உறுதியையும் எட்டி உள்ளன. அது அமெரிக்கா முதல்.. சிறிய நாடானா.. சுவிஸ்லாந்து ஈறாக அண்டை நாடான ஹிந்தியா வரை நிதர்சனம். மேற்குலகில் கல்வி கற்றும் ஒரு அடிப்படைப் புரிதல் இன்றிய சஜித் பிரேமதாசவின் இந்த சிங்கள இனவாதப் பார்வை.. இலங்கைத் தீவில் நீடித்த அமைதிக்கும் பொருண்மிய மீட்சிக்கும் உதவாது.
-
யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எல்லாரையும் ஒன்றிணைக்கனும் என்று காத்திருந்தால் எந்த வேலைத்திட்டத்தையும் எக்காலத்திலும் கொண்டு செல்ல முடியாது. ஒத்த சிந்தனையுள்ள அநேகரை ஒன்றிணைக்கலாம்.. எல்லாரையும் ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் சிலர் மாற்றுச் சிந்தனை என்பதையே சொந்த சுயலாபத்திற்காக கையில் எடுத்திருப்பவர்கள். அவர்களை எந்த வழியில் முயன்றாலும் தேசியத்தின் பெயரால் தேசத்தின் பெயரால் ஒன்றிணைக்க முடியாது. இந்த யதார்த்தத்தில் இருந்து தான்.. அந்தப் புரிதலோடுதான்.. எந்தப் பயணமும் சாத்தியமாக்கப்படலாம். -
90களில் மேற்கு நாடுகள் இதில் முன்னிலை.. 2000 களில் ஹிந்தியா முன்னிலை 2010 களில் சொறீலங்கா முன்னிலை.. 2020 இல்.. வடமாகாணம் முன்னிலை.. அதுவும் மிக விரைவில் நிரம்பலடையும். ஏனெனில்.. இப்ப தானே இணையம் எல்லார் கைக்கும் வந்திருக்குது. வடமாகாணத்துக்கு பிந்தி இணையம் வந்ததால்.. இப்பதான் உச்சம் அடைஞ்சிருக்குது. எனி நிரம்பல் அடைஞ்சிடும்.
-
நுளம்புக்காக வேப்பம் கொட்டைகளை கூட சேர்த்து வைப்பார்கள். இப்ப இதைச் சொல்லிக் கொடுக்க ஆக்களும் இல்லை.. நாட்டமும் இல்லை. இவற்றின் பாதிப்புக்களை சமூகத்தில் பல வகைகளில் காணலாம். அதில் இவையும் அடங்கும்.
-
என்னண்ண சொல்லுறீங்க.. இந்த திருவெம்பாவைக்குள்ள குளிருக்க நடுங்கிக் கொண்டு தானே கோயிலுக்கு போறது. விடிய சுடுதண்ணி வைச்சு தானே குளிக்கிறது. ஏதோ ஊரில.. இப்ப தான் இதெல்லாம் என்ற மாதிரி சனம் படோபகாரம்.. பண்ணுது. மாசிப் பனி மூசிப் பெய்யும் என்ற பழமொழி கூட உண்டு. என்ன முந்திய தலைமுறை பெரியவர்களின் வழிநடத்தலில் காலநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளும். இப்ப ஆக்கள் எல்லாம்.. ஒரு முன்னேற்பாடும் செய்வதில்லை. முன்னர் மாரி காலம் என்றால்.. விறகு சேகரித்து வைப்பார்கள். உலர் ஊமல்.. கோம்பை சேகரித்து வைப்பார்கள். வைக்கோல் சேகரித்து வைப்பார்கள். மாடு ஆடுகளை மேடை போட்டு கொட்டகை அமைச்சு கட்டுவினம். இதெல்லாம் எல்லாம் வீட்டிலும் ஒரு நடைமுறையா இருந்திச்சு. சனம் ஒருவருக்கு ஒருவர் இதுக்கு இன்னதுதான் நடைமுறை என்பதை அறிந்து கொள்ளுவினம். ஊர் கிழவிங்க.. கூடிக் கதைச்சு பரிமாறிக் கொள்ளுவினம். இதில் திண்ணைப் பேச்சினால் நன்மைகள் விளைவதும் உண்டு.
-
இயற்கையின் மாற்றங்களுக்கு மக்கள் விரைந்து இசைவாக்கத்தக்க வகையில் ஊடகங்களும்.. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும்... உயர்கல்வி நிறுவனங்களும் செயற்படனும். நான் அறிய ஊரில் கடும் மழை காலத்தில் கால்நடைகளை மேடை அமைந்த கொட்டகைகளில் கட்டுவதோடு.. உலர்ந்த சாக்கை விரித்து விடுவார்கள். உலர்ந்த சாக்கால் அதன் உடலை போர்த்திக் கட்டுவதோடு.. நிறை உணவை வழங்குவார்கள். கழிவுகளால் ஏற்படும் ஈரத்தன்மையை நீக்கும் வகையில் தினமும் காலையில் சுத்தம் செய்வார்கள். மீண்டும் உலர்ந்த சாக்கை நிலத்தில் விரிப்பது அல்லது வைக்கோல் போட்டு விடுவார்கள். இதே தான் மேற்கு நாடுகளிலும் கொஞ்சம் மேம்படுத்திய வகையில் செய்வதோடு.. கூடிய குளிர் என்பதால் மூடிய கொட்டகைகளில் கால் நடைகளை வைத்துக் கொள்வார்கள் குளிர்காலத்தில். மேலும் கால்நடைகளின் உடலைச் சுற்றி போர்வை போர்த்தி விடுவார்கள். இது ஊருக்கும் பொருந்தும்.
-
செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சிவபூமியில் சிங்கள இராணுவ வெற்றிச் சின்னங்களும்.. அல்லாவும் புத்தரும் எழும்பும் போது சிவன் எழுவது மட்டும் தான் பிரச்சனையா..?! -
மீண்டும் யாழைக் கண்டது மகிழ்ச்சி.
-
வெறும் எச்சரிக்கைகளை விடாமல்.. உணவக சுகாதாரம் மற்றும் உணவு தயாரிப்பு உணவு மற்றும் மூலப்பொருட்கள்.. பேணிப்பாதுகாப்பது உட்பட்ட அடிப்படை அறிவூட்டல் மற்றும் அந்தப் பயிற்சியை நிறைவு செய்ததற்கான முத்திரை பதிக்கப்பட்ட பத்திரம்.. அனுமதிப்பத்திரம்.. உணவகத்தர நட்சத்திரங்கள் மற்றும் உணவக சுகாதாரம் தொடர்பான A to Z கையேடு.. அடிப்படை உணவகப் பாதுகாப்பு.. மற்றும் தீ மற்றும் விபத்து தொடர்பான அறிவுறுத்தல்கள்.. உபகரணங்கள்.. இருக்கைகளின் தரம் என்பன உள்ளிட்ட எல்லமே பரிசோதிக்கப்படுவதும்.. தரம் பரிசோதிக்கப்படுவதும்.. அவசியமாக்கப்பட வேண்டும். சுகாதார நடவடிக்கைகள்.. உணவக உள்ளக வெளிச் சூழல் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பராமரிக்கப்படுவது அவசியம். இவ்வாறான நடைமுறைகளுக்கு ஒத்துழைக்காத உணவகங்கள் இழுத்து மூடப்பட வேண்டும். இதில் பிரித்தானியாவின் RSPH ஆலோசனைகளைப் பின்பற்றுதல் கூடுதல் பயனளிக்கும். https://www.rsph.org.uk/ https://www.rsph.org.uk/qualifications/learners/find-a-qualification.html https://www.rsph.org.uk/qualification/rsph-level-1-award-in-food-hygiene-awareness.html
-
அதுதானே பார்த்தேன் நந்தினியை குடும்பிக் கூட்டத்தின் வளர்ப்பு மகளாக்கி.. குடும்பிகளின் ஆதிக்கத்தையும் படத்திற்குள் திணித்ததை. நந்தினி கல்கி உருவாக்கிய செருகல் பாத்திரத்திற்கு இவர்... கூடக் குடும்பிச் சாயம் பூசி விட்டிருக்கிறார். அதேபோல்.. பல்லவர்களை சிங்களவர்களின் காலடியில் கெஞ்சுவது போலக் காட்டி இருப்பதும் இவரின் சித்துவிளையாட்டாகத்தான் இருக்கும். ஏனெனில்.. இவர் தமிழீழ எதிர்ப்பு ஆள். சிங்களத் தீவு விசுவாசி.
-
உக்ரைனதும்.. பிரிட்டன் உட்பட்ட முந்திரிக்கொட்டை ஐரோப்பிய நாடுகளினதும்.. பக்கச்சார்ப்பை பார்த்து சந்தி சிரிக்குது. உக்ரைன் தானே அடிச்சிட்டு பழியை ரஷ்சியா மீது போட்டு நேட்டோவை நேரடியாக மோதவிட்டு குளிர்காயலாம் என்று சிலுங்கி கள்ளக் கணக்குப் போட்டிருப்பார்.. எல்லாம் பிடிபட்டுப் போச்சு. நேட்டோ ஐரோப்பிய வாலுகள் தான் இதற்குப் பொறுப்பு. அமெரிக்கா புத்திசாலித்தனமாகத் தப்பிவிட்டது.
-
கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி
nedukkalapoovan replied to goshan_che's topic in கவிதைப் பூங்காடு
இது வெறுமனவே சீண்டுமுடியும் தொனியில் அமைந்த பதிவு. எமது போராட்ட சக்தியான புலிகளுக்கு.. நேட்டோ ஆயுதம் கொடுக்கவில்லை. ஐரோப்பா உதவி செய்யவில்லை... ஏன் ஹிந்தியா கூட கொடுத்த ஆயுதங்களை பறிச்சது தான் அதிகம். சொந்த மக்களின் பங்களிப்போடு தமது சொந்த தியாகங்களின் மூலம் தொடர்ந்தியங்கியதே எமது போராட்டம். இதில் உக்ரைனின் தூண்டு சக்தியா இருக்கும் அமெரிக்கா.. எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்றே சொல்லி அழித்தது. அது இன்று உக்ரைனில்.. நேட்டோ விரிவாக்கத்திற்காக.. டான்பஸ் பிராந்திய இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆக உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் என்பது ரஷ்சியாவின் முன்னாள் பிராந்தியத்திற்குள் அண்டைய கண்டம் ஒன்றில் இருந்து கொண்டு உலகை ஆதிக்கம் செய்ய விரும்பும் அமெரிக்காவின் நோக்கத்தை எதிர்த்து நிகழும் யுத்தம். அதற்கு பலியிடப்படும் ரஷ்சிய மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க நிகழும் யுத்தம். நேட்டோ விரிவாக்கம் என்பதும்.. அமெரிக்க ஆதிக்க வலுவாக்கம் என்பதும் அமெரிக்க சார்பற்ற.. உலக அமைதிக்கும்.. உலகில் நீதியான மக்களின் போராட்டங்களுக்கும் ஆபத்தாகும் என்பதை உணர்ந்திருந்தும்.. அதற்கு புலிக்கொடி ஏத்தி வாழ்த்துப் பாடுபவர்களின் அறியாமையை நினைத்தால்..??! எமது போராட்டம் அழிக்கப்பட்டும் கூட இன்றும்.. புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பவர்கள் தான் உக்ரைனை ஆயுதமும் நிதியும் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள். இதை அறிந்தா இவர்கள் கெசொனில் புலிக்கொடி ஏற்றி பார்க்கினம். -
அடைக்கலம் கொடுத்த இடத்தில்.. வெள்ளையை கூட்டிக்கொண்டு ஓடினதும்.. அதே உக்ரைன் காரிகள் தான். எங்கள் மக்கள் மீது கூலி வாங்கிக் கொண்டு குண்டுகளை கொட்டியவனும் இதே உக்ரைன்காரன் தான். விழுந்த ஆன்டனோவ் விமானங்களை ஓட்டியது.. எம் ஐ 24 ஓட்டியதும் இதே உக்ரைன்காரன் தான். எம் மக்கள் மீதே குண்டு வீசியவன் மீது நீங்கள் காட்டும் மனிதாபிமானம் என்பது..??! நேட்டோ விரிவாக்கத்திற்கும்.. இராணுவ மேலாதிக்கத்திற்கும் இடமளிப்பதன் மூலம் முழு உலகையே பதட்டத்துக்குள் தள்ள நினைக்கும் உக்ரைனின் சமகால அதிபரும் அவரின் ஆதவாளர்களும் முழு உலக அமைதிக்கும் ஆபத்தானவர்களே. இதில் ரஷ்சியாவின் விசேட இராணுவ நடவடிக்கை என்பது உலகின் இராணுவ சமபல நிலையை நிலை நிறுத்த உதவினால்.. உலக அமைதிக்கு நன்மை உண்டாகும். அதன் மூலம் நீண்ட கால ஒழுங்கில் கூடிய மனித உயிரிகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படலாம். உக்ரைனில் ரஷ்சியாவின் இந்த யுத்தத்தில் மக்களின் இழப்பு வெறும் 10,000 க்குள் தான். அதிலும் உக்ரைனின் ஏவுகணைகள் தாக்கி இறந்தவர்கள் உள்ளடங்க. ஆனால்.. உக்ரைனால்... டான்பஸ் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதை விட அதிகம். அங்கு எங்கே போனது உங்கள் மனிதாபிமானமும்... மேற்குலகின் பக்கச்சார்ப்பு பச்சாதாபமும். விடுங்கண்ணே.. உந்த உக்ரைனுக்கான சப்பைக்கட்டை.
-
இதனை ரஷ்சியா யுத்தத்தினை ஆரம்பிக்க முதலோ சொல்லிட்டுது. இந்த யுத்தம் உக்ரனை நேட்டோ நீக்கம்... மற்றும் இராணுவ நீக்கம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்குது. மேலும்.. 2014 இல் இருந்து மும்மரமாக உக்ரைனால்.. இனப்படுகொலைக்கு உள்ளாகும் டான்பஸ் பிராந்திய ரஷ்சிய மொழி பேசும் மக்களை சுதந்திரமாக வாழ உதவுவதும் என்று. அதோடு இணைந்து இப்போ இன்னும் இரண்டு பகுதி மக்களின் சுதந்திர வேட்கையையும் ரஷ்சியா நிறைவேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளது. அந்த மக்களை நிர்கதியாக அதுவிடவில்லை.
-
கெர்சனை ரஷ்சியா யுத்த இழப்பின்றி கைப்பற்றியது. இப்போ அங்கு வாழ்ந்த ரஷ்சிய ஆதரவு மக்களை வெளியேற்றிவிட்டு வெளியேறி இருக்குது. இதனை தடுத்து நிறுத்த உக்ரைனாலோ.. நேட்டோவாலோ முடியவில்லை. அதுவே உக்ரைனின் நேட்டோவின் இயலாமைக்குச் சான்று. உக்ரைன் - நேட்டோ இந்த யுத்தத்தில் ரஷ்சியா தானாக வெளியேறிய பகுதிகளை ஊர்ந்து சென்று பார்த்துவிட்டு வெற்றி வெற்றி என்று கூவுவதுதான் நிகழ்கிறதே தவிர... ரஷ்சியாவின் எந்த நடவடிக்கையும் உக்ரைனாலோ.. நேட்டாவாலோ கட்டுப்படுத்த முடியவில்லை.. அல்லது தடுக்க முடியவில்லை. இதுவே அவர்களின் தோல்வியை செப்ப போதுமானது. அந்த நகரத்தில் இருந்த முக்கிய அம்சங்களுடன் புதிய நிர்வாக தலைநகரையும் இப்பிராந்தியத்துக்கு அறிவித்துவிட்டது ரஷ்சியா. இந்த யுத்தத்தில் ரஷ்சியா அனாவசிய இழப்புக்களை ஆரம்பம் தொட்டு தவிர்க்கும் வகையில் தான் செயற்படுகிறது. அல்லது கீவை கைப்பற்றி முழு உக்ரைனையும் அது ஆக்கிரமித்து நின்றிருக்க முடியும். ஆனால்... படிப்படியாக அது உக்ரைனின் இராணுவத்தை பலவீனப்படுத்திக் கொண்டு வெளியேறியே வருகிறது. ஆனால்.. ரஷ்சியாவோடு இணைய விரும்பிய பகுதிகளில்.. நிலையான நிர்வாகக் கட்டமைப்புக்களை நிறுவுவதை அது திடமாகக் கையாள்கிறது. நேட்டோவை போல... எதிரிகளான.. ஐ எஸ்ஸிடமும்.. தலிபான்களிடமும்.. தமக்கு ஆதரவளித்த மக்களை விட்டுவிட்டு ஓடவில்லை ரஷ்சியா.
-
ஆக நீங்கள் பிரித்தானயா அவிக்கிறதை நம்புறீங்க. இதன் மூலம் பிரித்தானியா முன்னர் சொன்னதற்கு இப்ப தானே மாற்றான கருத்துச் சொல்லுது. முன்னர் சொன்னார்கள் ரஷ்சிய ஆயுதங்களின் தரம் சோவியத் தரம் என்று. இப்ப சொல்லினம் ஏ கிரேட் ஆயுதங்கள் என்று. அதில் இருந்து பல தகவல்களை படிக்கினமாம். ரஷ்சியா சொல்லிட்டு தான் இந்த யுத்தத்தில் இன்னும் உருப்படியான ஆயுதங்களைப் பாவிக்கவே இல்லை. சில வகை நவீன ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டதை தவிர.
-
ஆமாம் ஆமாம்... புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளையே கண்காணிப்பதும்.. பதிவு செய் என்பதும்.. நடக்கும் இலங்கை.. மற்றும் ஹிந்தியாவில்.. இவர்களுக்கு நிம்மதியான வாழ்வு எப்படி உறுதி செய்யப்பட முடியும். தமிழகத்தில் இருக்கிற நிம்மதி கூட இலங்கையில்.. கிடைக்க வாய்ப்புக் குறைவு. அந்த வகையில்.. இவர்கள் தமிழகத்தில் தங்கலாம்.. அல்லது இன்னொரு மூன்றாம் நாட்டுக்கு ஐநாவின் ஊடாக தமக்கான அச்சுறுத்தலை சட்டத்தரணிகள் வாயிலாகக் கொண்டு சென்று குடியேறலாம். அல்லது தூதரங்களின் ஊடாக அரசியல் தஞ்சம் கோரி வெளியேறலாம். அப்படி இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட பலர் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படும் ஆபத்தின் அடிப்படையில்.. மற்றும் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தின் அடிப்படையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள்.
-
நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு
nedukkalapoovan replied to nochchi's topic in தமிழகச் செய்திகள்
இதில் என்னவோ சொல்லுவதை சொல்லட்டும்.. ஆனால்.. ஈழத்தில் ராஜீவின் படைகள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பில் காங்கிரஸ்காரர்களையும் சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டும். ஏனெனில்.. 1987 இல் இருந்து 2009 இனப்படுகொலை வரை ஈழப் பெருந்துயர்களில் காங்கிரஸின் நேரடி.. மறைமுகப் பங்களிப்புக்களை அவர்களே ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில்.. செய்யாத குற்றத்திப் பெயரால்.. ஈழத்தமிழினம்.. காங்கிரஸ் கொடியவர்களால் பழிவாங்கப்பட்டிருப்பது.. இலகுவாகக் கடந்து செல்லக் கூடிய ஒரு விடயம் அல்ல. ஒரு இனத்தை முற்றாக அடிமைப்படுத்தி ஆக்கிரமிப்புக்குள் நிறுத்தி வைத்த ஒரு பெருங் கொடுமையை காங்கிரஸ் ஆதரவளித்து செய்திருப்பது மன்னிக்கக் கூடிய ஒன்றும் அல்ல.