Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by மோகன்

  1. நன்றி. இது எனது தந்தையாரால் தான் ஏனையவர்களுடன் இணைந்து கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்திருந்தோம் என்று தான் வாழுங்காலத்தில் வெளியிட வேண்டும் என்று எழுதப்பட்டது. அவரது எதிர்பாராத இழப்பின் பின் நாம் (பிள்ளைகள்) ஒரு வருட நினைவாக அதை ஒரு நூலாகக் கொண்டு வந்திருந்தோம்.
  2. எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பாடும் என்ற நிலையில் சந்தோசமாகவும் அமைதியாகவும் எந்தவிதமான கோபதாபம் பிணக்குகளின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆதிமுதல் “பெரும்படை” என்னும் தெய்வத்தையே தமது குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். வழமையாக வருடாந்தம் பங்குனி மாதம் கொண்டாடப்படும் பெரும் பொங்கல் தினத்தையே பெருவிழாவாகக் கொண்டாடி வந்தனர். ஒரே சமூகமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற சிலரின் தீய எண்ணத்தாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ ஒரு பொங்கல் தினத்தன்று இவர்களுக்கிடையே பிரச்சனைகளும், மனஸ்தாபங்களும், குரோதங்களும் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தமக்கொன அதே பெயரில் இன்னொரு “பெரும்படை” என்னும் கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். அன்று தொடங்கிய பகை நீண்ட காலம் வேண்டத்தகாத சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறமைகளையும் இவர்களுக்கிடையே வளர்த்தது. இது இவர்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து இவர்களின் சீரான வாழ்வைச் சீரழித்தது. இம் மக்கள் கடற்கரையையண்டி வாழ்ந்தபடியால் கடல்படு திரவியம் தேடும் தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் விவசாயத்தையும் தம் தொழிலாகக் கொண்டனர். அக்காலம் போதிய போக்குவரத்து வசதி இன்மையால் தாம் பெற்ற சரக்கைத் தனங்கிளப்பிற்கு நேரேயுள்ள கடற்கரையிலிருந்து காவுதடி கொண்டு சாவகச்சேரிச் சந்தையில் விற்றுப் பணமாக்கினர். இந்த நிலை வீண் சிரமத்தையும் கஷ்டத்தையும் கொடுத்ததைக் கண்டு ஒரு சில பெரியவர்களினதும் நல்ல உள்ள கொண்டவர்களது மன எண்ணத்தின்படியும் தம் கடற்கரையிலே தாம் பிடித்த சரக்கை விற்பனை செய்து சம்பாதிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கம் உதயம் இம்மக்களை ஒன்றுபடுத்தி இவர்களது வாழ்வைச் சிறப்புறச் செய்யவும் வீணான குரோதங்களை இல்லாமற் செய்யும் நோக்கத்திற்கும் ஒரு ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் நிமித்தம் கூட்டுறவுச் சங்கம் உதயமானது. அதன் தலைவராக தச்சன்தோப்பைச் சேர்ந்த அறிவு மிக்க திருவாளர் முருகேசு காசிப்பிள்ளையும், செயலாளராக திரு கனகர் சதாசிவம், பொருளாளராக திரு வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஏனைய சிலர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர். இந்நிகழ்வு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. சந்தை ஆரம்பம் கைதடி நாவற்குழி தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சந்தையைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு கடற்கரையோரம் சிறு கொட்டிலை அமைத்தது. நல்ல நாளாக சித்திரைப் பரணி தினத்தன்று வியாபாரம் தொடங்கத் தீர்மானித்தனர். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் பல ஊர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினர். அன்றைய தினம் தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையுள்ளோர் சமூகம் கொடுத்து மீன் வகைகளைக் கொள்வனவு செய்தாலும் நாளடைவில் – காலப்போக்கில் மக்கள் அநேகம் பேர் கூடவும் வியாபரம் பெருகவும் வழி உண்டாயிற்று. வியாபாரத்தைக் கண்காணிக்க மகேசனும், சிப்பந்தியாக திரு.வி.சின்னத்துரையும் நியமிக்கப் பெற்றனர். சிப்பந்தி நகைச்சுவையாக “காத்தடி கொண்டு காவினதெல்லாம் அந்தக்காலம், இப்போ கையிலே தூக்கி கரையிலை வைப்பது இந்தக் காலம்” எனக் கவிதையும் யாத்துப்பாடியது இப்போதும் காதில் கேட்கின்றது. கூட்டுறவுச் சங்கத்தின் சேவை கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதும் ஆரம்பத்திற் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அங்கத்துவராகச் சேரப் பின்னடித்தாலும், ஏனையவர்களோடு சங்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சங்கத்திற்கு ஒரு பெயர் வைப்பதற்காக பூசாரி க.சதாசிவம் பூசை செய்யும் வைரவர் கோயில் முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடற்றொழில் இலாகாவைச் சேர்ந்த திரு சோமசுந்தரம் என்னும் உயர் அதிகாரியால் “ஸ்ரீ மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கம்” என்னும் பெயர் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்கம் வளர்ச்சியடைந்து அங்கத்துவர்களுக்கு கடன் வசதி, வலை, கம்பு, வள்ளம் போன்ற உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தது. இதனைக் கண்ட ஏனையோரும் அங்கத்துவர்களாகச் சேரத் தொடங்கினர். கடற்கரை வீதி வரலாறு கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடற்கரை மைதானத்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வே.குமாரசாமி அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கோவிலாக்கண்டி சந்தியில் இருந்து கடற்கரை வரையான பாதை மோட்டார் வாகனமன்றி துவிச்சக்கர வண்டி கூட செல்ல முடியாதளவு பெரும் மண் தரையாக இருந்தபடியால் பாராளுமன்ற உறுப்பினர் தமது மோட்டார் வாகனத்தை திரு.வே.சிவசுப்பிரமணியம் ஆசிரியரது வீட்டில் நிறுத்தி விட்டு கூட்டம் கூடும் இடத்திற்கு நடந்தே வந்தார். மக்களும் மேளதாளத்தோடு மாலை அணிவித்து மிகவும் மரியாதையாக அழைத்து வந்தனர். அன்றைய தினம் தனது பேச்சின் போது, தான் இவ்விடத்திற்கு மோட்டார் வாகனத்தில் வரமுடியாது நடந்தே வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இவ்விடத்திற்கு வருவதாயிருந்தால் தனது மோட்டார் வாகனத்திலேயே இவ்விடம் வந்து இறங்குவேன் எனக் கூறினார். அவர் அப்பொழுது பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவராகவும் இருந்தபடியால் குறுகிய காலத்தில் வீதிக்கு ரூபா 10000/= ஒதுக்கப்பட்டது. அப்போது சதத்தில் பணப் புழக்கம். இப்போது இத் தொகை பத்துக் கோடிக்குச் சமனாகும். இவ் வீதியை புனரமைக்க காரைநகைரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவரும் விரைவில் வீதியைச் சீரமைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் தாம் கூறியவாறு மோட்டார் வாகனத்தில் வந்திறங்கினார். இவ் வீதி சீரமைக்கப்பட்டதால் கிராமமும் மக்களும் பெரிதும் அபிவிருத்தியடைந்ததோடு பெற்றவராயினர். பல நன்மைகளும் கிடைக்கப் பெற்றவராயினர். இவ்வேளை இக் கிராமத்து மக்களை ஒன்று படுத்துவதில் திரு.க.சதாசிவமும் திரு.வே.பொன்னம்பலமும் பெரிதும் முயற்சியெடுத்தனர். ஓரளவு வெற்றியும் நிறைவும் பெற்றனர். பாடசாலை ஆரம்பம் இக்கிராமத்துப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை யா/கோவிலாக்கண்டி மகாலக்குமி வித்தியாசாலையில் கற்று வந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பாடசாலையிற் கற்றவர்கள் அதனோடு தமது கற்றலையும்,சிலர்நாலாந்தரத்தோடும் நிறுத்தியுள்ளனர். இதற்கு அவர்களது போக்குவரத்து வசதியீனமும் வறுமையும் காரணமாக அமைந்துள்ளது. இக்காலத்தில் நான் க.பொ.சா/தரப்(SLC) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.உ/ தரம்(HSC) சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்று வந்த வேளையில் திரு.ந.இளையப்பா ஆசிரியர் அவர்களைச் சந்தித்த வேளையில், இக் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்காமல் நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு என ஒரு பாடசாலையை எமது கிராமத்திலே ஆரம்பித்தால் அவர்கள் தொடர்ந்து கற்கச் சந்தர்ப்பம் உண்டாகுமென, ஆண்டவன் அருளால் உதித்த எனது எண்ணக் கருத்தினை வெளிப்படுத்தினேன். அதற்கு அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவரும் தானும் வேண்டிய உதவி செய்வதாகவும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் கூறினார். அப்போதுள்ள சமூக, சமுதாய சூழ்நிலை இக் கைக்காரியத்துக்கு கடும் எதிர்ப்பும், பகையும் கிடைக்கும் என்றுணர்ந்தும் நல்லதொரு காரியத்துக்கு ஆண்டவன் பக்க பலமாக துணைநிற்பான் என்ற அசையாத துணிச்சலோடும், நம்பிக்கையோடும் பாடசாலை ஆரம்பிக்கத் தொடங்கினேன். பாடசாலை நடாத்துவதற்கு ஒரு இடம், கட்டிடம் தேவைப்பட்டது. அப்பொழுது கடற்றொழிளாருக்கென கட்டிடம் ஒன்று புதிதாகக் கட்டப் பெற்ற நிலையில் இருந்தது. அதனை சங்க நிர்வாகிகளுடன் கதைத்துப் பெற்றுள்ளேன். 1960 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 30.09.60 நவராத்திரி காலத்தின் விஜயதசமியன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.ந.நவரத்தினம் அவர்களைக் கொண்டு திறப்பதற்கு தீர்மானித்த வேளை அவர் அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் துணைவியார் திருமதி இரகுபதி நவரத்தினம் அவர்களை அனுப்பியிருந்தார். அந்த அம்மையாரும் சமூகம் கொடுத்து அன்றைய தினம் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை இக் கிராமத்தில் தொடக்கி வைக்கப் பெற்றதால் பிரிந்து நின்றவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும் பழைய பகைமைகளை மறந்து சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பாடசாலையை அரசு பொறுப்பேற்பதாக இருந்தால் நிரந்தரக் காணி, நிரந்தரக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்காக இப்போது பாடசாலை அமைந்துள்ள காணியை உரியவர்களான திரு.மு.கனகர், திரு.ம.ஆறுமுகம், திருமதி ம.சின்னாச்சி என்போரிடம் இருந்து பெருமுயற்சி எடுத்து சம்மதம் பெறப்பட்டது. உடனே நொத்தரிசுக்கு கிளாக்கராக இருந்த திரு.வ.செல்லத்துரை என்பவரைக் கொண்டு உறுதி எழுதப்பட்டது. இனி நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். அதற்குரிய கல், சீமெந்து பாடசாலைக் காணிக்கு கொண்டு வர முடியாத நிலை. அந்தளவுக்கு புழுதி மணல் நிரம்பிய பாதை. திரு.சு.கந்தையா என்பவர் தனது மெசினில் கொண்டு வரும் கல், சீமெந்தை தற்போது ஆலடி அம்மன் கோயிலாகவிருக்கும் இடத்தில் பறித்துவிட்டுப் போய் விடுவார். அப்போது எம்மிடம் வண்டில் மாடு இருந்தமையால் மாடுகள் இழுக்கக்கூடிய அளவு கல், சீமெந்தை ஏற்றி பாடசாலைக் காணிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். ஏனைய உதவிகள் பெற்றோராலும் கிடைக்கப் பெற்று கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது. கிணற்றினைத் திரு.வியாழரத்தினமும் அவரது மகன் தியாகராசா உடன் நானும் சேர்ந்து வெட்டினோம். மேசன் திரு.வ.சிதம்பரநாதனுக்கு நான் உதவியாளராக இருந்து கிணறு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இப் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருமதி அ.இளையப்பா அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.வே.இராமர், செல்வி.வி.சிவபாக்கியம், செல்வி.சி.இராசேஸ்வரி பின்பு செல்வி.சி.சின்னக்குட்டி ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். வகுப்புகள் தரம் | தொடக்கம் தரம் V வரையுமே நடைபெற்றன. அரசு பொறுப்பேற்றல் அப்போதுள்ள கல்விச் சட்டத்தின்படி பாடசாலை ஆரம்பித்து சில மாதங்களில் பொறுப்பேற்க வேண்டிய நிலையிருந்தும் எதிர்ப்புகள் காரணமாக காலதாமதமாகியது. அப்போது மத்துகம் தொகுதி பா.உறுப்பினராக இருந்த திரு. பங்குவில என்பவரை இங்குள்ள அவரது நண்பர் பாடசாலை விடயமாகக் கதைத்ததனால் அவர் பாராளுமன்றத்தில் எமது பாடசாலையின் விபரம், நிலைமையை எடுத்துக் கூறியதால் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.வை.துடாவையின் உத்தரவின் பேரில் யாழ் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய கல்வியதிகாரி திரு.எஸ். முத்துலிங்கம் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தை மாதம் 30ந் திகதி பாடசாலைக்கு சமூகம் கொடுத்து அரசாங்க பாடசாலையாகப் பதிவு செய்து பொறுப்பேற்றதை சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். இவ் வைபவம் இக்கிராமத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதனைத் தொடர்ந்து பாடசாலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு திரு. V.S.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அந்த வருடமே கிராமசபை அங்கத்தவர் திரு.வே.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதும், பரீட்சைகளில் மாணவர் திறமை காட்டி கல்வியில் முன்னேற்றமடைந்ததும், பெற்றார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதும் மறக்க முடியாதவையாகும். 1965, 1966 ஆகிய இரு வருடங்கள் ஆசிரிய பயிற்சி பெற்று 1967 ஆம் ஆண்டு தொடக்கம் க/புசல்லாவை சரஸ்வதி ம.வியில் 6 வருடங்கள் கடைமையாற்றி விட்டு இப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்த பொழுது ஆண்டு 9 வரையும் உள்ள பாடசாலையில் ஆண்டு 5 வரையும் இருப்பதைக் கண்டு அதிபர் திரு.வே.நாகராசாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு அதிபர் தரம் கிடைத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ம/கள்ளியடி அ.த.க பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். ஒன்பது வருடங்கள் அம்மாவட்டத்தின் பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1984ஆம் ஆண்டு யா/ கைதடி முத்துக்குமாரசாமி ம.வி.க்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது யா/கல்வித் திணைக்களத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.கு.சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது பதில் அதிபராக கடமையாற்றிய செல்வி இ.வசந்தாதேவி பாடசாலைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். 1984ம் ஆம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நான் 5ம் வகுப்புக்கு மேல் வகுப்புகள் வைப்பதற்கு முயற்சி எடுத்தேன். கொத்தணி முறையில் நிர்வாகம் இயங்கிய காலம் கைதடிக் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் தலைமையில் நடந்த அதிபர்கள் கூட்டத்துக்கு கல்விப் பணிப்பாளர் திரு. மன்சூர் அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். அவரிடம் இப்பாடசாலையில் 6ம் வகுப்பு வைக்க வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறியதோடு அது பற்றிய கடிதமும் கொடுத்துள்ளேன். கொத்தணி அதிபர், ஏனைய அதிபர்கள் யாவரும் ஒத்துழைப்பு நல்கியதால் கல்விப் பணிப்பாளர் உடனடியாக 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்க சந்தர்ப்பம் உண்டானது. 9ம் வகுப்பு வைப்பதற்குக் கல்வி அமைச்சிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிபார்சு செய்ய வேண்டும். நானும் பலமுறை வேண்டுதல் செய்தும் அவர்களும் ஏதோ காரணங்களைக் கூறி சிபார்சு செய்வதைப் பின் போட்டுக் கொண்டு வந்தார்கள். இந்தநிலையில் திருமதிபுஸ்பாகணேசலிங்கம் அவர்கள் சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் மேல் வகுப்பு படிப்பதற்குப் படும் கஷ்டங்களையும், போக்குவரத்து வசதியின்மையையும், வறுமை நிலையையும் எடுத்துக் கூறியதன் பேரில் இதனை நன்குணர்ந்து 9ஆம் வகுப்பு வைப்பதற்கு சிபார்சு செய்தமையை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வைக்கப் பெற்று 1996ஆம் ஆண்டு க.பொ.சா/தரப் பரீட்சை எழுத வேண்டியிருந்த பொழுது பொல்லாத காலமாக நாட்டில் யுத்தம் மூண்டது. இக் கால இடைவெளிக்குள் மாணவர்கள் கல்வியில் அதீத முன்னேற்றம் கண்டனர். கல்வி அதிகாரிகளின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றனர். இப்பாடசாலையில் பன்னிரண்டு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் என்னோடு ஒத்துழைத்துக் கடமையாற்றிய ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, அர்ப்பணிப்பான சேவை, ஆக்கபூர்வமாக கல்விப்பணி, மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றம் காணச் செய்தமையோடு பாடசாலைக்குப் பெரும் புகழையும் பெருமதிப்பையும் தேடித் தந்தன. இதனால் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நல்ல அதிபர் தெரிவில் மாவட்ட மட்டத்தில் நல்ல அதிபராகத் தெரிவுத் தெரிவு செய்யப் பெற்று கல்விப்பணிப்பாளர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்களால் பாராட்டப்பெற்றுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்தப் பெருமை எனக்கு கிடைக்கச் செய்தமை இக்காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களையே சாரும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கால இடைவெளி எல்லைக்குள் பாடசாலை அபிவிருத்தியோடு கிராமத்தின் அபிவிருத்தியிலும் பங்கு பெறும் வாய்ப்பு உண்டானது. தலைமையாசிரியர் திரு.V.S.கந்தையா அவர்களது பெரும் பங்களிப்புடன் கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் மூலம் பாடசாலை வீதி, பாடசாலை கடற்கரை வீதி, புதிய கிணறு கட்டியது, ஒழுங்கைகள் திருத்தம் போன்ற பணிகள் செய்யப் பெற்றன. உணவு இக் கிராமத்து மக்கள் சங்கக் கடையிலேயே அத்தியாவசியமான அரிசி,மா,சீனிபருப்பு போன்றவற்றைகூப்பன் முறையில் பெற்றனர். இச் சங்கக்கடை கைதடி நாவற்குழி வடக்கிலுள்ள முருக மூர்த்தி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. இம் மக்கள் பெரும் வயல் வெளியைத் தாண்டியே நடந்து சென்று பொருள்களைப் பெற்று வந்தனர். மாரி, மழை காலங்களில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் ஒரு பகுதியினர் கைதடி நாவற்குழி (வடக்கு) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும், ஒரு பகுதி மக்கள் கோவிலாக்கண்டி மத்தி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் கூப்பன் பொருட்களைப் பெற்று வந்தனர். நாளடையில் இவ்விரு சங்கத்தினரும் இக் கிராமத்திலேயே இரு கிளைகளை நிறுவி திரு.சி.சங்கரப்பிள்ளை ஒரு கிளைக்கு மனேஜராகவும், திரு.க.கனகரத்தினம் என்பவரை ஒரு கிளையின் மனேஜராகவும் நியமித்து பொருட்களை விநியோகித்து வந்தனர். இந்த இழிநிலையைப் போக்கும் முகமாக நாம் எமது கிராமத்துக்கென பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை நிறுவ முயற்சி எடுத்தோம். அப்போது உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு.க.சிவப்பிரகாசம் என்பவரும் அரியாலையைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் திரு.க.பொன்னுத்துரை என்பவரும் பெரும் உதவி செய்தனர். கூட்டுறவுப் பரிசோதகருக்கு அவர் வேண்டுதலின் பேரில் இம் மக்களின் தொகை விபரங்களை வேலையாள், சாதாரணம், பிள்ளை, குழந்தை என்ற வகையில் வகைப்படுத்தியும் மேலும் வேண்டிய விபரங்களையும் வழங்கி உதவினேன். அப் பெரியவர்களது முயற்சியினால் இப் பகுதிக்கு கைதடி நாவற்குழி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என தனியாக சங்கம் உருவானது. இதற்கும் கடைசி நேரத்திற் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவற்றை எழுத நான் விரும்பவில்லை. தென்மராட்சி மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு திரு.க.ஐயாத்துரை என்பவரது வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப் பெற்றது. திரு.க.கனகரத்தினம் மனேஜராகக் கடமையாற்றினார். திரு.வே.பொன்னம்பலம் அடிக்கடி கண்காணித்து சங்க வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதால் ஓரிரு வருடங்களில் சங்கம் பெரும் இலாபத்தை ஈட்டியது. அந்த இலாபப் பணத்தைக் கொண்டே புதிதாகக் கட்டிடம் கட்டப் பெற்றுள்ளது. அதுவே இப்போதுள்ள சங்கக் கட்டிடமாகும். உடை கைதடி நாவற்குழி தெற்கு கி.அ.சங்கத்தின் தலைவராக இருந்த நானும் செயலாளரான திரு.ஆ.கந்தையாவும் கிராம அபிவிருத்திச் சிறு கைத்தொழிற் திணைக்களத்தினருடனும் தொடர்பு கொண்டபடியால் மீசாலையிலிருந்து ஒரு தையற் பயிற்சி ஆசிரியர் இங்கு வந்து தையல் பயிற்சி வகுப்புகளை பயிற்றுவித்தார். புதிய வடிவில் சட்டைகளை அமைக்கவும், விதம் விதமாக றேந்தைகள் பின்னவும், அழகான வகை வகையான தையற் பயற்சிகளையும் நடாத்தினார். இப் பயிற்சியால் பெண்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் நன்மையடைந்தனர். கண்காட்சியும் நடாத்தப்பட்டது. வைத்தியம் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகா விஷ்ணு க.தொ.கூ. சங்கம் அதன் நிர்வாகத் திறமையால் இலங்கையில் முதற் தரமான சங்கமாகக் கணிக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது கடற்றொழிற் திணைக்களப் பணிப்பாளர் திரு.பீற்றர் அவர்கள் இங்கு சமூகம் கொடுத்து விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பொழுது இங்கு வைத்தியத் தேவையை எடுத்துக் கூறிய பொழுது தான் கொழும்பு சென்று சுகாதாரப் பகுதியினருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவதாகக் கூறினார். சில மாதங்களின் பின் கைதடி வைத்தியசாலையிருந்து வைத்தியரும், உதவியாளரும் வார நாட்களில் இரண்டு நாட்கள் சமூகம் கொடுத்து வைத்திய சேவை ஆற்றினர். சிலரது வேண்டுகோளினால் ஏனைய கிராம மக்களும் பயன் பெறும் பொருட்டு ஆசிரியை திருமதி இராசம்மா வீட்டுக்கு மாற்றினர். பின்னர் மறவன்புலோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது எந்த இடத்திலும் வைத்திய வசதி இல்லை. மின்சாரம் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள், பாடசாலை, கோயில்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றி கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது, அப்போதைய யாழ் மாவட்ட அமைச்சருக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றிக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எனது விடயம் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிற் கடிதம் கிடைத்தது. சாவகச்சேரிப் பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.சுந்தரம்பிள்ளை அவர்களுடன் மின்சாரத்தின் தேவை பற்றிக் கதைத்த பொழுது அப்பிரதேசம் நீண்ட வயல் வெளிப்பிரதேசம், அதிக பணம் தேவைப்படும், ஆசிய பவுண்டேசனுக்கு தெரியப்படுத்துகின்றேன், கிடைத்தால் உங்கள் அதிஷ்டம் எனக் கூறினார். சில மாதங்களின் பின் எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க அனுமதி கிடைத்ததாகவும், அது கோவிலாக்கண்டி பகுதிக்குப் போக இருப்பதாகவும் தகவல் அறிந்தோம். உடனடியாக மாவட்ட அமைச்சரது கடிதத்துடன் நான் தனஞ்செயன் என்பவருடன் அரசாங்க அதிபரைச் சந்தித்து கடிதத்தையும் காட்டி இது எமது பகுதிக்கே வரவேண்டியது என்றும், உதவி அரசாங்க அதிபருடன் கதைத்த விடயத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சுன்னாகத்தில் உள்ள மின்சாரசபை அதிகாரிகளைச் சந்திக்கச் சொன்னார். உடனே சுன்னாகம் சென்று மின்சாரசபை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் நாளை மின்சாரக் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் வரும். கைதடிச் சந்தியிலிருந்து வாகனத்தை மறித்து அவர்களுக்கு இடத்தைக் காட்டும்படியும் கூறினார்கள். அடுத்த நாட் காலை கைதடிச் சந்தியிற் காத்திருந்த வேளை மின்சாரம் பொருத்துவதற்கான வாகனம் தூண்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதனை மறித்து வாகனத்தில் ஏறி இடத்தைக் காட்டினேன். கடற்கரையிலிருந்து தூண்கள் பறிக்கப்பட்டு விரைவில் வேலைகளைத் தொடங்கினார்கள். முதலாவது தூண் தற்போது வயலோரம் அம்மன் கோயில் செல்லும் வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி நாட்டப்பட்டது. திரு.க.ஆறுமுகம் இந்த இறைபணியைச் செய்தார். விரைவாக மின்சார வேலைகள் செய்து முடிக்கப் பெற்றது. மக்களும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டாடினர். இதுவே மின்சாரம் கிடைத்த வரலாறு. இதனைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திக்குப் பல வேலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறன பணிகள் தொடங்கவும் நிறைவேறவும் ஏதே ஒரு மாபெரும் சக்தி துணை நின்றதை உணர்கின்றேன். வாழ்க்கை முறைகளும் வழிபாடுகளும் ஆரம்ப காலம் இம் மக்கள் கூட்டுறவு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஒரே காணிக்குள் பல வீடுகளைக் கட்டியும் ஒரே வீட்டில் சில குடும்பங்களுடனும் வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் உதவியும் புரிந்தும் உணவு வகைகளைப் பங்கிட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து வரலாயினர். பனை ஓலையாலும், கிடுகுகளாலும் வேயப் பெற்றதும், கிடுகுகளால் மறைப்புத் தட்டிகள் அமைத்தும், மண் தரையுமாக வீடுகள் அமைந்துள்ளன. வேலிகளை கிடுகளாலும், அலம்பல் எனும் தடிகளாலும், மட்டை வரிந்தும் மறைப்புச் செய்தனர். தற்போது மாற்றமடைந்து கல்வீடுகளாகவும் மதில் சுவர்களாகவும் மாறியுள்ளன. கிராமத்தில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சகலரும் பங்கு பற்றியும் சில நாட்கள் அவ் வீட்டிலேயே தங்கி நின்று உதவி செய்தும் தமதன்பை வெளிப்படுத்தினர். ஆதிகாலம் தொட்டு இவர்களது வழிபாட்டுத் தலங்களாக பெரும்படை அம்மன் கோயில், மகாவிஷ்ணு ஆலயம், வைரவர், வீதிகளில் சிறு கட்டிடங்களில் அமைந்த அம்மன் ஆலயங்கள் என அமைந்துள்ளன. இரண்டாகப் பிரிந்து நின்றவர்கள் தற்போது சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருவதோடு ஒற்றுமையையும் வளர்ப்பது ஆண்டவன் அருளாகும். இத்தோடு முன்பள்ளி பாடசாலை, அறநெறிப் பாடசாலையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமத்தின் வளர்ச்சியில் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகாவிஷ்ணுக.தொ.கூசங்கம், ஸ்ரீ மகாவிஷ்ணு சனசமூக நிலையம், ஸ்ரீ மகாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் போன்றவை அரும் சேவையாற்றி வருகின்றன. இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இக்கிராமம் மேன்மேலும் சிறப்புறவும் அபிவிருத்தியடையவும் இக்கிராம மக்கள் உறுதுணையாக இருப்பதோடு குறிப்பாக அறிவுசால் பெரியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஒத்துழைத்தும் நல்சேவையும் ஆற்றி கிராமத்தைச் செழிப்புறச் செய்வார்களாகுக. வே.இராமர் ஓய்வு நிலை அதிபர் https://raamu.vaathiyaar.blog/ Download PDF file
  3. இப்பிரச்சனை ஆதவன் தளம் ஏதாவது ஒரு காரணத்தினால் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இணைக்கப்பட்டிருந்தால் ஆதவன் தளம் அதனை நீக்க முயற்சி செய்ய வேண்டும். அல்லது உங்கள் கணினியில் அத்தளம் கறுப்புபட்டியலில் இணைக்கப்பட்டதாக இணைக்கப்பட்டிருக்கலாம்.
  4. நீங்கள் கேட்டுக் கொண்டபடி ஈழவேந்தன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  5. தமிழன் என்ற பெயரில் வேறு உறுப்பினர்கள் இருப்பதால் களத்தில் பதிவு செய்யப்படாத ஒரு பெயரைத் தந்தால் உங்கள் பெயரை மாற்றித் தரலாம்
  6. ஏராளன் குறிப்பிட்டதைப் போன்று இணைப்பினைக் கொப்பி செய்து இங்கு ஒட்டினால் போதுமானது. ஏன் உங்களுக்குப் பிழைக்கின்றது எனத் தெரியவில்லை. படங்களின் முகவரியினையே இணைக்க வேண்டும். சரியாக மின்னஞ்சல் முகவரி கடவுச் சொல் கொண்டு கணினி அல்லது கைத்தொலைபேசியில் இணைந்து கொள்வதில் பிரச்சனையிருக்க சந்தர்பம் இல்லை. நீங்கள் உங்கள் விபரங்களைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பதிவினை இணைத்து 12 மணித்தியாலங்கள் வரை மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். அதன் பின் மாற்ற வேண்டிய தேவையிருப்பின் மட்டுறுத்துனர் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
  7. சில தவறுகளால் தரவுத் தளத்தினை (database) பின்னோக்கி நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு விட்டது. இந்த வகையில் நேற்று அதிகாலை 00:00 (ஐரோப்பிய நேரம்) இல் இருந்து இரவு 21 மணி வரை பதியப்பட்ட அனைத்து விபரங்களும் இழக்கப்பட்டு விட்டது. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்
  8. சிறிய மாற்றங்கள் செய்த பின்னர் கடந்த சில தினங்களை விட நேற்று மாலையில் இருந்து பக்கங்களைத் திறக்க எடுக்கும் நேரம் குறைவாக இருக்கும்.
  9. காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 500 பேர் பலி – சிக்கலாகும் மனித உரிமை பிரச்னை திரியில் இருந்து சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது
  10. Screencast from 03. nov. 2023 kl. 23.05 +0100.webm சரியாகத் தான் இயங்குகின்றது
  11. விம்பக பட இணைப்பினை கொப்பி செய்து இங்கு இணைக்க வேலை செய்கின்றதே
  12. களத்தில் நேரடியாக படங்களைத் தரவேற்றம் செய்ய முடியாது. விம்பகத்தில் தரவேற்றம் செய்து அந்த இணைப்பினை இங்கு இணைத்துக் கொள்ள முடியும். நீங்கள் நேரடியாக களத்தில் தரவேற்றம் செய்ய முயற்சித்துள்ளீர்கள் என நினைக்கின்றேன்
  13. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
  14. புள்ளிகள் வழங்கியவர்களைப் பார்க்க முடிவதோடு சிவப்பு புள்ளிகள் வழங்கவும் முடியும். சிவப்பு புள்ளிகள் வழங்கப்பட்ட பச்சைப் புள்ளிகளில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டாது.
  15. இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
  16. யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி வழங்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை புள்ளிகள் வழங்குபவர்கள் சரியான முறையில் வழங்குகின்றார்களா என்பதையும் கண்காணிப்போம். தவறாகப் பயன்படுத்துவதும் குழுக்களாக இணைந்து புள்ளிகள் வழற்குவதும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினர்கள் சில காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவே புள்ளி வழங்கும் முறையில் தடை வழங்கப்படும். கால மாற்றத்திற்கேற்ப இடை நிறுத்தப்பட்ட இந்த புள்ளி வழங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
  17. ஆம் விளம்பரம் பகுதி நீக்கப்பட்டுள்ளது. யாழில் விளம்பரம் இட விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் நீங்கள் துயர்பகிர்வில் பதிந்து கொள்வதில் தடை எதுவும் இல்லை
  18. "நியாயத்தை கதைப்போம்" கேட்டுக் கொண்டபடி பெயர் நியாயம் என மாற்றப்பட்டுள்ளது.
  19. பார்வையாளர் எண்ணிக்கை சரி செய்துள்ளேன்.
  20. பல பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது.
  21. கருத்துக்களம் இணைய வழங்கி எதிர்பாராத சில பிரச்சனைகளுக்குள்ளாகியதால் பலவிதமான அசெகரியங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைத்துப்பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.
  22. நிலாமதி தனிமடல் மூலம் கேட்டிருந்தார் அதற்கு தனிமடலில் பதிலளித்திருந்தேன். ஏனையவர்களுக்கும் அவ்வழிமுறை பிரயோசனப்படலாம் என்றே கேள்வியை இங்கு மீளப்பதிந்துள்ளார். இது பற்றி முன்னரும் களத்தில் விளக்கமளித்துள்ளேன். சிறிய திரைகள் (உதாரணமாக கைத் தொலைபேசி) போன்றவற்றிற்கு பின்வருமாறும் பெரிய திரைகளுக்கு (உதாரணமாக கணினி) பின்வருமாறும் தெரிவுகள் காண்பிக்கும்
  23. நீங்கள் தவறான ஒரு மின்னஞ்சலைக் கொடுத்து முயற்சிக்கின்றீர்கள் போலுள்ளது. தனிமடல் மூலம் அல்லது yarlinayam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிற்கு நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு முயற்சி செய்கின்றீர்கள் என அறியத் தாருங்கள்.
  24. மின்னஞ்சல் வழியாக உள்நுழைந்து கொள்ளலாம். பிரச்சனையாக இருப்பின் password reset செய்து பாருங்கள். அப்படியும் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் அறியத் தாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.