Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
  2. ஆண்களே உங்கள் கவனத்திற்கு.! மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.... ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்தது கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள்ளு விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள். மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க. கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...வந்து ... மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள்ளு விடுறத பார்த்து பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன். கணவன் : மீண்டும் வாயடைத்தான்
  3. ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்
  4. மலர்கின்றது மனிதநேயம்!இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றவரை அருகில் இருந்த பொதுமக்கள் யாரும் தங்கள் மொபைலில் புகைப்படம் எடுக்கவோ அல்லது தற்கொலையை தங்கள் மொபைலில் இருந்து லைவாக ஒளிபரப்பு செய்யவோ முயற்சிக்காமல் உடனடியாக அவரது காலை இறுகப் பிடித்துக்கொண்டும் பெல்ட் போன்று தங்கள் கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு அவரை பாலத்துடன் சேர்த்துகட்டி காப்பாற்றிவிட்டார்கள்.
  5. பாலைவனச்சிங்கம்_உமர்முக்தார்பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்து உயிர்தியாகி உமர் முஃக்தார்.உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.சிறு வயது வாழ்க்கை16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”முசோலினி ” யார் அவர்களை வழி நடத்துவது ?”தளபதி: ” ஒமர் முக்தார் “முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது).சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.- மருதுபாண்டியன் இரா. பதிவிலிருந்து!
  6. தோழர் பாலகுமாரின் 73வது பிறந்த நாள் ..என முகநூலில் பார்த்தவுடன் எழுந்த சில நினைவுகளும் ....அவை தொடர்பான தருணங்களும்....வரலாற்றில் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் ...படங்களில் தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் தோழர் நாபாவும் தோழர்கள்: இரத்தினசபாபதி, பாலகுமார் ,ஜோர்ஜ் ,சாந்தன். இது ஒரு கலந்துரையாடலின் பின் எடுக்கப்பட்ட படம் பின்னணியில் ENDLF தோழர் ராஜனும் காணப்படுகிறார்.
  7. தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது; நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையை கவனித்தேன். ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன். அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார். எனது படை வீரன் என்னிடம் சொன்னான்..... அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய்வாய்ப் பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றான்.. நான் குறுக்கிட்டேன்..... அது அல்ல உண்மை. வீரனே....!! உண்மை என்ன தெரியுமா......!! நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக் காவலராக இருந்தார்.என்னை அடிக்கடி கொடுமைப் படுத்திக் கஷ்டப்படுத்தும் போதெல்லாம்.... நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்.. இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார். இப்போது அவர் என்னை இனம் கண்டு கொண்டார். நான் இப்போ தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்.... ஆனால் இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதுமல்ல.. பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டி யெழுப்பாது. அழித்து விடும். அதே நேரம் சில விஷயங்களில் மனதின் சகிப்புத் தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்...... என்றார் மண்டேலா.. Nelson Mandela: "After I became president, I asked some members of my close protection to stroll with me in the city and have lunch at one of its restaurants. We sat in one of the downtown restaurants and all of us asked for some sort of food." "After a while, the waiter brought us our requests and I noticed that there was someone sitting in front of my table waiting for food". I then told one of the soldiers: go and ask that person to join us with his food and eat with us. The soldier went and asked the man so. The man brought up his food and sat by my side and began to eat. His hands were trembling constantly until everyone had finished their food and the man went. The soldier said to me: The man was apparently quite sick. His hands trembled as he ate!" "No, not at all," said Mandela. "This man was the guard of the prison where I was jailed. "Often, after the torture I was subjected to, I used to scream and ask for a little water. "The very same man used to come every time and urinate on my head instead". "So I found him scared, trembling, expecting me to reciprocate now, at least in the same way, either by torturing him or imprisoning him as I am now the president of the state of South Africa." "But this is not my character nor part of my ethics". "The mentality of retaliation destroys states, while the mentality of tolerance builds nations". I say, treat others well because no one knows tomorrow.
  8. கு.சா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  9. தமிழக வளர்ச்சியின் மறைக்கப்பட்ட உண்மைகள்
  10. தன்னம்பிக்கைக்கு உதாரணமான பறவை பார்ன் சுவாலோ (Barn Swallows) பறவை தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்குகிறது. அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் அமெரிக்க மகாணமான கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? ஆச்சரியம் உண்டு!! பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்? முயற்சி செய்தால் முன்னேற்றம் தான்….தோல்வி உண்டோ….? பார்ன் சுவாலோ தான் வழிகாட்டி பறவை….! https://www.patrikai.com/an-example-bird-for-self-confidence/
  11. சபேசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. கனபேர் மூச்சு திணறுவதாக(suffocate) முறைப்பாடு செய்துள்ளார்களாம்.🙂
  13. தற்போதைய சுவிஸ் பாராளுமன்றம்
  14. பாடல்: கண்ணாடி நீ கண்ஜாடை நான் படம்:மங்காத்தா இசை: யுவன் பாடியவர்கள்: எஸ்.பி.சரண், பவதாரணி வரிகள்: நிரஞ்சன் பாரதி
  15. பரவிப்பாஞ்சான் பால் கோப்பியும் எரிக்சொல்கைமின் ஏவறையும் பலஸ்த்தீனம் மட்டுமல்ல இடைத்தரகர்களால் ஏமாந்தது எங்கள் ஈழமும்தான் கட்டியெழுப்பிய கனவு ராச்சியம் கொட்டி நொறுங்கி பத்து திவசம் கடந்திற்று இப்பொழுது ஒஸ்லோவின் ஒல்லிப்புறா கள்ள முட்டையிட்டு கைமாறு செய்கிறது யாருக்கோ நல்ல வேளை வஞ்சகமின்றி சிரித்தப்படி நம் தமிழ்ச்செல்வன் படைத்த நண்டுக்கறி வறுவலுள் நஞ்சு இருந்ததாய் இன்னும் சொல்லவில்லை தாங்வியூவில் தலைகணியும் இல்லாமல் பாணும் பருப்போடு படுக்கவிட்டார்கள் என்றும் பச்சைப்பொய் இன்னமும் அவிழவில்லை பரவிஞ்சான் பால் கோப்பி செமித்திற்று போல கனவான்கள் சொன்னால் அப்படியே கவ்வி தலையாட்டும் ஓணான் பரம்பரையல்ல உலகத்தமிழன் உள்நோக்கம் அறிந்தும் வெள்ளந்தியாய் சிரித்து வரவேற்றது ஈழத்தின் பண்பு சேடம் இழுத்துக் கிடந்த ஈழத்துக்கு சேலைன் ஏத்துவதற்காக அகாசி சொல்கெய்ம்கள் அன்று வரவில்லையே ஆனையிறவை பிடித்து அடுத்த ஊர் சைபீரிய பறவைகளும் டுயட் பாடி மகிழ பார்த்தன்றோ சிலிர்த்தோம் பளையின் தென்னங்கீற்றில் இரண்டு இளங்கிளிகள் இழுத்து உதடு கவ்வி முத்தமிடத் தொந்தரவின்றி முகமாலை வரையல்லவா எதிரிகளை துரத்தி எல்லையிட்டு எழுந்து நின்றோம் புளியங்குளம் தாண்டி புரவிகள் பாய்ந்து எலுமிச்சையாள் நீராட தடாகத்தை மீட்டு ஒட்டு சுட்டான் குன்றேறி எட்டுத்திக்கும் நோட்டமிட்டோம். அப்போதானே ஐயா சொல்கெய்ம் பூவிலங்கோடு புறப்பட்டு வந்தார் கையோடு புளுதி நிலத்துக்கு புல்டோசர் சாரதிகளாய் சில்வாவும் அல்லவா கொல்லை புதினமறியலானான் கட்டில் மெத்தையோடும் கள்ளக்கூட்டம் எத்தனை அறைகளென அளவெடுத்துப் போனது எல்லாம் தெரியாமல் ஈழமில்லை புட்பகத்தை தேடி எடுத்து சேவிஸ் கராஜ்சில் நிறுத்தி இரணை மடுத் தீர்த்தத்தில் இரண்டு சொட்டுத் தெளித்து பறந்தபோதுதான் கொல்லையில் ஒரு வல்லரசு ஈழத்தில் உருவாதல் கண்டு கள்ளிப்பால் சிரிப்போடு கனபூனைகள் வந்தன வஞ்சகரை ஒருபோதும் மன்னிக்காது காலம் இப்போது தம்பியும் இல்லை தத்துவ ஆசிரியனும் இல்லை கண்ட நாயெல்லாம் காலைத்தூக்கி எங்கள் மாளிகைத்தூண்மேல் மலம் கழிக்கின்றன கவிஞர் பொன் காந்தன்
  16. நந்தனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.