Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது. மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ? ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன். ---------------------------------------------------------------------------------------------------------------------------- டாக்டர்:தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு மருந்து, கொடுத்தேன். இப்ப தேவலையா...? நோயாளி:தேவலை டாக்டர் முன்பெல்லாம் வேகவேகமா நடந்து கிட்டிருந்த நான் இப்ப மெள்ளமா நடக்கிறேன்.. ----------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :ஏம்ப்பா இப்படி பிக்பாக்கெட் தொழில் பண்ணறே ? ஏதாவது ஒரு லட்சியத்தை வெச்சுக்கிட்டு உழைக்க வேண்டியதுதானே ? மற்றவர்:என்னங்கையா இப்படிக் கேட்கறீங்க ? ஒரு நாளைக்குக் குறைஞ்சது அஞ்சு பர்சையாவது அடிக்கணும்ங்கறதுதானே என்னோட லட்சியமே -------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ? மற்றவர்:மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம். ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :உங்க அப்பா ரொம்பவும் பணக்காரராக இருக்கலாம்... அதுக்காக கடிதம் கூட இப்படியா எழுதறது ? மற்றவர்:அப்படி என்ன எழுதியிருக்கிறார் ? ஒருவர் :பணம்... பணமறிய ஆவல்-னு எழுதியிருக்கிறார்
  2. கவுண்டமணி -- செந்தில் நகைச்சுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  3. ஒருவர் :பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ? மற்றவர்:உள்ளே டிபன் வாசமே வரலியே -------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :கதாசிரியரை உயில் எழுதச் சொன்னது தப்பாயிடுச்சா ? மற்றவர்:மேற்கண்ட பெயர்கள் யாவும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல-னு கடைசியிலே எழுதி முடிச்சிட்டாரு --------------------------------------------------------------------------------------------------------------------------------- மனைவி:என்னங்க.. . ஆபீஸ் லேர்ந்து தினமும் கலகலப்பா வர்ற நீங்க இன்னைக்கு ரொம்ப வாட்டமா வர்றீங்களே, சம்திங் நிறைய வரலையா...? கணவன்:சம்திங் வாங்கி மாட்டிக்கிட்டேன் சரசு.. . --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ? மற்றவர்:அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான் ---------------------------------------------------------------------------------------------------------------------- தயாரிப்பாளர்:உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்... நடிகர்:கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்தக்கு நான் கால்ஷீட் தர்றேன்
  4. சாவி அவர்: உங்க வீட்டுக் குழந்தை, வாசற் கதவு சாவியை முழுங்கிடுச்சா? அப்புறம் என்ன செஞ்சீங்க? இவர்: (வருத்தத்துடன்) ஜன்னல் வழியா ஏறிக் குதிச்சுத்தான் உள்ளே போனேன் ------------------------------------------------------------------------- புகையிலை போடுற பழக்கம் உண்டா ? சில நோயாளிங்க டாக்டர் என்ன சொல்றக்ருங்கிறதை சரியாப் புரிஞ்சிக்கிறது இல்லை. ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்துக்கிட்டிருந்த டாக்டர், உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா ?ன்னு கேட்டார். உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்-னாரு நோயாளி. இப்போ டாக்டருக்குத் தலை சுத்திருச்சி ------------------------------------------------------------------------------- எடை மிஷின் ரொம்பக் குண்டா இருக்கிற ஒரு அம்மா எடை மிஷின்லே ஏறி நின்னுது. அட்டை வந்தது. தயவு செய்து கூட்டம், கூட்டமாக ஏறி நிற்காதீர்கள். சே இந்த மிஷின் ரொம்ப மோசம்னு அந்தம்மா சலிச்சிக் கிட்டாங்க.
  5. ஒருவர் :இப்பவெல்லாம் ஆபீசுல தூங்கமாட்டேங்கறீங்களே... ஏன் ? மற்றவர்:நீங்க தூங்கறதாலதான் ஆபீசுல உங்களுக்கு லஞ்சம் கிடைக்க மாட்டேங்குதுன்னு பொண்டாட்டி சரமாரியா திட்டுறா -------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ? மற்றவர்:சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா --------------------------------------------------------------------------------------------------------------------------- திருடன் 1: நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ? திருடன் 2: எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. ----------------------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. . மற்றவர்:அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை ------------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ? மற்றவர்:என்னவாம் ? ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்
  6. தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ? தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார் --------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா... மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு ------------------------------------------------------------------------------------------------------------ ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ? மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ? -------------------------------------------------------------------------------------------------- தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ? தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் ------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...? மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன் --------------------------------------------------------------------------------------------------------- ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்:அப்புறம் ? ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்
  7. முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங ஆசிரியர் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க. (ஒரு மாணவன் மட்டும் எழுந்து நிற்கிறான்) ஆசிரியர் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்? மாணவன் : உங்களுக்குத் துணையாகத்தான், சார் -------------------------------------------------------------------------------- ஆசிரியர் ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ, அவன் ஒரு முட்டாள். புரிகிறதா? மாணவர்கள் (கோரஸாக) : புரியவில்லை சார்... ------------------------------------------------------------------------------------------------------ பணக்கார மாமியார் என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க. அப்படியா... என்ன பண்ணினாங்க? எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம் ------------------------------------------------------------------------------------------------------ டார்ச்லைட் வச்சுக்குங்க... நோயாளி : டாக்டர்..அடிக்கடி ஒரு இருட்டான காட்டுக்குள்ளே போகிறமாதிரி கனவு வருது. என்ன செய்யலாம்? டாக்டர் : படுக்கும்போது பக்கத்துல டார்ச்லைட் வச்சுக்குங்க...
  8. அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா? அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும். *** டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க. அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது? *** எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு, ஸார்! எங்கேயிருந்து? பழனிலேர்ந்து! *** இனிமே கட்சிக்கு நாய்போல உழைப்பவன் நான் தான் என்று அடிக்கடி சொல்லாதீங்க ஏன்? தலைவர் 'வாள்'க 'வாள்'க என்று தொண்டர்கள் கத்தறாங்க! *** ஏன் கால்குலேட்டருடன் அந்தப் பெண் பின்னாலே சுத்தறே? கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன் *** எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார் ஏன், ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? எங்க ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே! *** என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள், அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி வீணை வாசிப்பா--- சரி, நீ என்ன பண்றே வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!
  9. ஒரு அமெரிக்க கணவன் மனைவி ஒரு ஞாயிற்று கிழமை வீட்டில் குளிப்பதற்கு தயாராகின்றார்கள். மனைவி முதலில் குளித்து முடியவும் கணவன் குளிக்க தயாராகும் போது வீட்டு மணியடிக்கவும் சரியாக இருந்தது.கணவன் மனைவியிடம் யார் என்று பார்க்க சொல்லி விட்டு குளிக்க தயாராகின்றார்.மனைவி அவசர அவசரமாக துவாயை சுற்றி கட்டியபடி மேல் வீட்டிலிருந்து படி வழியாக கீழிறங்கி வாசல் கதவை திறந்த போது பக்கத்து வீட்டு பொப் நின்று கொண்டிருந்தார்.மனைவி வாய் திறக்க முதல் பொப் சொல்கிறார் "உந்த துவாயை ஒரு கணம் களற்றி விடுங்கள் $800 தருகின்றேன் என்று".மனைவியும் ஒரு கணம் யோசித்து விட்டு துவாயை களற்றி பிறந்த மேனியாக நிற்க ,பொப் $800 கொடுத்து விட்டு நன்றி கூறிவிட்டு சென்று விடுகிறார்.மனைவியும் மனதுக்குள் ஒரு வித சந்தோசத்துடன் மேலெ கணவர் குளிக்கும் அறைக்கு செல்ல கணவர் வந்தது யாரென வினவ மனைவி அது பக்கத்து வீட்டு பொப் என கூறினார். உடனே கணவர் "பொப் என்னிடம் வாங்கிய $800 பற்றி ஏதாவது கூறினாரா " என்று கேட்டார்.
  10. இலக்கியனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  11. ஸ்ரோபரி அல்லது வனிலா ஐஸ்கிறீம் கூலாக்குமென நினக்கிறேன்.so strawberry or vanala ice cream for Nila please.
  12. தத்துவம் இவ்வளவுதாங்க 1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது. 2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது. 3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது 4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு 5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். 6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது. 7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!! 8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா? 9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது. 10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
  13. கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல் டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே. ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே. ஏன்டா அந்த கருமத்தை போட்டே. ஒரு சந்தேகம் அண்ணே. எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே. இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே. அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா. சொல்லுங்கண்ணே. அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா. அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க. அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான். அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது. டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க. அதுக்கு என்ன பண்றது அண்ணே. அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன். கெடா வாங்கிட்டீங்களா. டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா. அப்புறம். நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா. --------------------
  14. சரியா வாசியுங்கோ நிலா.12 பில்லியன் செல்வளித்தது அமெரிக்கன்.பென்சில் பாவித்தது ரஸ்யன்.தத்துவம் 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
  15. நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது. ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.
  16. கிடைத்ததில் சம பங்கு ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார். தென்னாலிராமன் கதைகள்
  17. அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
  18. காளி மகாதேவியின் அருள் கிடைத்தல் அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார். அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன். இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார். இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள். அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள். பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி. தென்னாலிராமன் கதைகள்
  19. தென்மராட்சியில் தான் "நுணாவில்" என்ற ஊர் இருப்பின் நான் சொல்லும் லுனாவில் என்ற பெயரில் ஊர் இல்லை ம்ம் அதே ஊரில் தான் 95 ம் ஆண்டு "வேரும் விழுதுகளும்" என்ற மாபெரும் கண்காட்சி நடாத்தினார்கள். இன்றும் என் மனதில் அக்கண்காட்சி நினைவிருக்கு. நன்றி நிலா அந்த தகவலுக்கு.
  20. ஆம் நிலா "நுணாவில் "என்பது தென்மராட்சியில் தான் உள்ளது. லுணாவில் என்றொரு ஊர் நான் கேழ்விப்படவில்லை. வேரும் விழுதுகளும் நுணாவிலில் நடந்தது பற்றி நான் அறியவில்லை. தமிழினி, சாப்பாடு இல்லாத தென்னாலியின் குதிரை இந்த ஓட்டம் ஓடுகிறது?
  21. டெல்லி மாநகரத்திலிருந்து ஒரு மேஜிக் வித்தைக்காரன் விஜய நகரத்துக்கு வந்திருந்தான். அவன் மேஜிக் செய்வதில் வல்லவன். அவன் அரண்மனையில் மன்னர் கிருஷ்ண தேவராயர் முன்னிலையில் கல்லைப் பொன்னாக்கினான். மண்ணை சர்க்கரை ஆக்கினான். மேலும் வெறும் தாளை ரூபாய் நோட்டுக்கள் ஆக்கினான். மேலும் அவன் தலையையே வெட்டி அவன் கைகளில் ஏந்தினான். இந்நிகழ்ச்சியைப் பார்த்த மன்னர் மகிழ்ந்தார். அப்போது மன்னரிடத்தில் "என்னை வெல்ல உங்கள் நாட்டில் யாரேனம் உண்டா ......." என்று சவால் விட்டான். இது மன்னருக்கு பெருத்த வேதனை அளித்தது. அறிஞர் பெருமக்கள் பலரையும் அழைத்து "டெல்லி மேஜிக் வித்தைக்காரனை உங்களில் யாரேனும் வெல்ல முடியுமா? அப்படி வென்றவருக்கு 1000 பொன்பரிசு" என்றான் மன்னர். "என்னால் அந்த மேஜிக வித்தைக்காரனை வெல்ல முடியும்" என்றான் தெனாலிராமன். அதைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார். மறுநாள் போட்டியைப் பார்க்கக் அரண்மனையில் கூட்டம் கூடிவிட்டது. போட்டி ஆரம்பம் ஆகியது. மேஜிக் வித்தைக் காரனைப் பார்த்து தெனாலிராமன் "நான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்வேன். அதே காரியத்தைக் கண்ணைத் திறந்து கொண்டு உன்னால் செய்ய இயலுமா?" என்றான் தெனாலிராமன் "இது என்ன பிரமாதம். நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தைக் கண்ணைத் திறந்துக்கொண்டே என்னால் செய்ய இயலும்" என்றான் மேஜிக் வித்தைக்காரன் போட்டியை ஆரம்பி என்றான் மேஜிக் வித்தைக்காரன். உடனே தான் தயாராக வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்துக் கண்ணை மூடிக்கொண்டு கண்மேல் வைத்தான். "இதே வித்தையைத்தான் நான் உன்னைக் கண்ணை திறந்து கொண்டு செய்யச் சொன்னேன். செய் கார்க்கலாம்" என்றான். தன்னால் இயலாது என்றுணர்ந்த மேஜிக் வித்தைக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். மன்னர் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி ஆயிரம் பொன் பரிசளித்தார்.
  22. பிறந்த நாள் பரிசு மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது. மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார். ""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். ""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. ""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
  23. எனது ஊர் நுணாவில் அதனால் புனை பெயரை நுணாவிலான் என ஆக்கிக்கொண்டேன். நன்றி கேட்டமைக்கு.
  24. பாத்திரங்கள் குட்டி போட்ட கதை விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான். அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான். இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான். இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான். இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான். "சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம். ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான். அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான். இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான். "என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான். எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர். தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். தென்னாலிராமன் கதைகள்
  25. கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான். "குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான். இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார். தென்னாலிராமன் கதைகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.