சுமோ அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
இனி உங்கள் இலக்கத்திற்கான ஜாதகம்..
நீங்கள் சின்ன வயதில் இருந்து முப்பது வயது வரைக்கும் பல அலைச்சல்களை சந்தித்திருப்பீர்கள். எதிலும் ஒட்டாத ஒரு வாழ்வு வாழ்ந்திருப்பீர்கள். உங்கள் கற்பனை உலகிலேயே பாதி வாழ்க்கை கழிந்திருக்கும்.
இறுக்கமான நண்பிகள் இருந்திருக்க மாட்டார்கள். தாமரை இலை மேல் நீர்போல் அவர்களுடனான உங்கள் நட்பு இருந்திருக்கும். சற்று சுயநலம் மிகுந்தவராக இருந்திருப்பீர்கள். அதே சமயம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காத தன்மையை கொண்டிருந்திருப்பீர்கள்.
இன்று அந்த வயதைத் தாண்டியபின் நீங்கள் ஊர் உழவாரத்தில் பிசியாக இருப்பதால் கூட்டு எண் கண்டிப்பாக நாலு இல்லை.