Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    22124
  • Joined

  • Last visited

  • Days Won

    63

Everything posted by இசைக்கலைஞன்

  1. களத்தின் நட்சத்திர நாயகன் தமிழ்சிறிக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  3. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  5. ரகுநாதன்.. Welcome to our club.. அதற்காக கடவுளைத் தொழாமல் இருக்க வேண்டியதில்லை. அதை ஒரு சிறந்த தியானப் பயிற்சி போல் செய்யலாம். மனதை ஒருநிலைப்படுத்தும்போது மூளையின் செயற்பாட்டுத்திறன் அதிகரிக்கிறது. அதற்காக இப்படித்தான் தியானம் செய்யவேண்டும் என்கிற விதிமுறைகள் ஏதுமில்லை.
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  7. எனது உறவு வழியில் ஒருவரும் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கிறீஸ்தவப் பெண்ணை மணமுடித்திருந்தார். பெண் மதம் மாறினார் (அல்லது அதற்குத் தூண்டப்பட்டார்.) அவர் பிறகு விரதமெல்லாம் இருந்தவர். எவ்வளவுதூரம் ஈடுபாட்டுடன் அது நடந்தது என்பது கேள்விக்குறி. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவே சொல்லிக்கொண்டார். திறந்த மனத்துடன் யோசித்துப் பார்த்தால் அப்பெண் கிறீஸ்தவராக இருக்கும்போதுதான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
  8. நன்றி.. இதைத்தான் நான் சொல்ல வந்தேன். கனடாவில் இருக்கும் ஒரு ஆண் ஊரில் இருக்கும் ஒரு பெண்ணை நீ மதம் மாறினால் நான் உன்னை கட்டுகிறேன் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணும் மாறுகிறார். திருமணம் செய்கிறார். கனடா வருகிறார். இங்கே அவரது மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. மத‌மாற்றத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார் என வைத்துக்கொள்வோம். வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்ற உதவியை நாடுகிரார். கனடாவில் எனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணி மதமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டேன். இப்போது எனக்கு பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது என்று கூறி அதை ஆதாரத்துடன் நிரூபிப்பாராக இருந்தால் (எடுத்த குளிசைகள், மருத்துவ சான்றிதழ்கள் போன்ற‌வை ) மாப்பிளை சிக்கலுக்கு உள்ளாகலாம். இழப்பீட்டுத் தொகையுடன் விவாகரத்து எடுக்கவும் பரிந்துரைப்பார் நீதிபதி.
  9. இரு நிறுவனங்கள் உள்ளதாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று நிறுவனம் "அ". மற்றையது நிறுவனம் "ஆ". நிறுவனம் "ஆ"வுடன் ஒரு ஒப்பந்தம் போட முன்வருகிறது நிறுவனம் "அ". ஆனால் விலை நிர்ணயம் நிறுவனம் "ஆ"வுக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால் மறுத்துவிடுகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பின்வரும் காலங்களில் வேறு எந்த ஒப்பந்தங்களும் எங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்காது என்கிறது நிறுவனம் "அ". வருங்காலத்தை எண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது நிறுவனம் "ஆ". இந்த நடைமுறை சட்டப்படி தவறு. பொருளாதாரத்தைக் காட்டி பணியவைத்தல் தவறு. இது Economic Duress எனப்படும். கையெழுத்துப் போடும்போது யோசித்திருக்க வேண்டியதுதானே என்று நிறுவனம் "ஆ" வைப்பார்த்து நீதிமன்றம் கேள்வி கேட்காது. அதுபோல, பொருளாதார தாழ்வு நிலையால் அல்லது திருமண நிமிர்த்தத்தால் அல்லது காதலால் மதம் மாறுபவர்களை குற்றம் சொல்ல முடியாது. மாற்றுபவர்கள்தான் அந்தக் குற்றத்தை ஏற்க வேண்டும்.
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  11. இந்த ரயில் சேவையை சிறப்பாக நடத்திக்காட்டி மற்ற மாநிலங்களுக்கு நல்லுதாரணமாக விளங்க வாழ்த்துகிறேன்.
  12. உயரமான கட்டுமானங்களுக்கு பிரமிட்கள் ஒப்பீட்டளவில் இலகுவான வடிவம் என்பது உண்மையே.. ஆனால் மாயன்களும், எகிப்தியர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்தார்கள்; அல்லது தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்முன் கடல்கடந்து தொழில்நுட்பங்கள் பரவியிருக்கும் வாய்ப்பு மிகக்குறைவானதாக இருந்திருக்கும். அதுபோக, இவற்றைக் கட்டவேண்டிய தேவை என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி.
  13. ஒரு உதாரணத்துக்கு நாயின் உடம்புக்குள் நாம் இருப்பதாக எண்ணிக்கொள்வோம். எமது எஜமானர் பணக்காரர் என்று வைத்துக்கொள்வோம். நாயின் பார்வையில் எஜமானர் அதிக வலிமை உள்ளவர். அவர் நினைத்தால் பறப்பார். நம் அவர் உலங்கு வானூர்தியில் ஏறிப் பறந்து போகும்போது, நாமும் வள் வள் என்று குலைத்துக்கொண்டு துள்ளிக் குதிப்போம். இரண்டடிக்கு மேல் எம்மால் குதிக்க முடியாது. ஆனால் எஜமானர் பறக்கும் வல்லமை பெற்றவர். சில நாட்கள் நம் எஜமானர் பரிதாபப்பட்டு, எம்மையும் உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்லலாம். திரும்பி வந்த நாமும் அயலட்டையில் உள்ள நாய் உறவினர்களிடம் நாம் கடவுளிடம் சென்று வந்ததாகக் கூறுவோம். பறந்த அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுவோம். உறவினர் நாய்கள் நம்மை மேலும் கீழும் பார்த்து றேபீஸ் வந்துவிட்டதோ என்று எண்ணுவார்கள். இதுபோலத்தான் மனிதனுக்கும், வேற்றுக்கிரக வாசிகளுக்குமான தொடர்பாடல்கள் இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பறந்த நாய்கள் சொல்லக்கேட்ட கதைகள் திரிபடைந்து இன்று நமக்குள் நாமே முரண்பட்டுக்கொள்கிறோம்..
  14. மதத்திற்கான விவாதங்கள் சுவாரசியமாக இருந்தன. தனிப்பட்டமுறையில், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் எமக்கு மேலான ஒரு சக்தி இருப்பதை நம்புகின்றேன். அதனால் அனுதினமும் காலை எழுந்தவுடன் விபூதி இட்டு குங்குமம் வைத்து கடவுளைத் தொழ மறப்பதில்லை. ஒவ்வொருமுறை முகம் கழுவும்போதும் இதே முறைகளைப் பின்பற்றத் தவறுவதில்லை. இதை ஒரு தியானப்பயிற்சிபோல் செய்து வருகிறேன். ஆதி தமிழன் இயற்கையை வழிபட்டான் என்று படித்திருக்கிறோம். மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த‌ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், புயல், மழை போன்றவற்றை வணங்கியிருக்கவே சந்தர்ப்பம் உண்டு. ஏனென்றால் அவனால் கட்டுப்படுத்த முடியாதவையாக அவை இருந்தன. அதே சமயம் ஒரு எலியையோ அன்றி பூனையையோ வணங்கியிருக்க மாட்டான். காரணம் இலகுவானதுதான். கல்லில் ஆயுதங்கள் செய்ய மனிதன் கற்றுக்கொண்டது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் நாற்பத்தெட்டாயிரம் ஆண்டுகள் இறைவன் அவனைக் கைவிட்டது எவ்வாறு? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள்தான் கிறீஸ்தவமும், இஸ்லாமும் தோன்றி இன்று உலகில் பெரிய மதங்களுள் இரண்டாக உருவெடுத்துள்ளன‌. அடுத்ததாக இந்து மதத்திற்கு வருவோம். இந்துக் கோயில்களின் கோபுர அமைப்பும், எகிப்தின் பிரமிட் அமைப்பும், தென்னமெரிக்காவின் மாயன்களின் பிரமிட் அமைப்புக்களும் ஏறக்குறைய ஒரே வடிவம் கொண்டவை. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவை ஏன் ஒத்த உருவ அமைப்பைக் கொண்டுள்ளன? இவ்வாறான ஒரு உருவ அமைப்பை மனிதன் உருவாக்குவதற்கான காரணி எது? அவுஸ்திரேலியாவில் வாழும் புங்கையைக் கேட்டால் எல்லாம் அவன் செயல் என வானத்தைப் பார்த்துக் காட்டுவார். அதே சமயத்தில் அதே கேள்வியை கனடாவில் உள்ள வல்வை அக்காவைக் கேட்டால் எல்லாம் மாரியாத்தாவின் செயல் என்று வானத்தைக் காட்டுவார். இருவருமே கடவுள்களையே குறிப்பிட்டார்கள். ஆனால் இவர்கள் சுட்டிக்காட்டிய திசைகள் முற்றிலும் எதிர்த்திசைகளில் இருக்கும். ஆக கடவுள் இருப்பதாக சொல்லப்படும் மேலுலகம்தான் எங்கே? என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், பூவுலகுக்கு வந்த கடவுள்கள் வெளியேறிச் சென்ற ஊர்திகள் ஈர்ப்புவிசையை மீறி வெளியேறிச் சென்றிருப்பார்கள். இது அவுசில் நடந்தாலும், கனடாவில் நடந்தாலும் வானத்தை நோக்கித்தான் மனிதன் கையைக் காட்டியிருப்பான். கோயில்கள், பிரமிட்டுகளின் உருவ அமைப்பும் கடவுளர்கள் வந்து சென்ற ஊர்தியின் அமைப்பிலேயே பின்னாட்களில் கட்டப்பட்டிருக்கும். எகிப்தின் ஃபெரோக்கள் மேற்பட்ட ஒரு நிலையை (higher realms) அடைவதற்காக பிரமிட்டுகளைக் கட்டியதாக வரலாறு சொல்கிறது. அதாவது இறந்தபின் பிரமிட்டுக்குள் படுத்துக் கொண்டால் கடவுளர்கள் எவ்வாறு ஊர்தியில் வானம் நோக்கிச் சென்றார்களோ அவ்வாறே தாங்களும் மேலுலகுக்குச் செல்லமுடியும் என நம்பினார்கள். கோயில் கோபுரங்களுக்கும் அதுவே காரணமாக அமைய வாய்ப்பு உண்டு. ஆதி தமிழனுக்கு இவ்வாறான அனுபவங்கள் ஏற்படவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் இயற்கை வழிபாட்டுடன் நிறுத்திக்கொண்டான். கோபுரங்கள் அமைக்கப்பட்டமை சமய ஊடுருவல்கள் நிகழ்ந்த பின்னாட்களில்தான் என்பதுவும் உண்மை. இதற்குள் தமிழன் சமண‌ மதமா, புத்த மதமா என்கிற ஆராய்ச்சி தேவையற்றதுதானே.. பின்குறிப்பு: நான் இங்கே கடவுளர்கள் என்று குறிப்பிட்டதை வேற்றுக்கிரகவாசிகள் என்று மாற்றிப் படிக்கவும்.
  15. மகிழ்ச்சியான செய்தி.. ஜூன் மாதத்தில் தொடங்குவதுதான் முதற்கட்ட ஓட்டமா? முதற்கட்டத் திட்டத்தில் எத்தனை சதவிகிதம் முடிவுக்கு வந்துள்ளது?
  16. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  17. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  18. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  20. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  21. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
  23. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.