Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  23,144
 • Joined

 • Days Won

  80

Posts posted by கிருபன்

 1. ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும்

  என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 01:14 

  அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.   

  சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான்.   

  ராஜபக்‌ஷ குடும்பத்தைத் தாண்டி, வேறு நபரைத் தெரிவு செய்வதில், ராஜபக்‌ஷ குடும்பம் தயாராகவில்லை என்பதை, இது சுட்டி நிற்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   

  மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார் என்பதை அறிவிப்பதில், பெரும் இழுபறி நிலையைச் சந்தித்து நிற்கிறது. வழமை போலவே, ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி தனித்துக் களம் காண்பதைவிட, பெரும் கூட்டணியாகக் களம் காணும் தந்திரோபாயத்தையே முன்வைத்திருக்கிறார்.   

  ஆனால், அத்தகைய கூட்டணியொன்றின் அமைப்பு தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில அதிருப்திகள் பலமாக ஏற்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. குறித்த கூட்டணிக்கு, கொள்கையளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருந்தாலும், சஜித் பிரேமதாஸ தரப்பு, குறித்த கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.   

  இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, பழனி திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மீதான கட்டுப்பாட்டை, எவ்வளவு தூரம் விரும்பப் போகிறார்கள் என்ற கேள்வி, தொக்கி நிற்பதைக் காணலாம்.   

  கூட்டணிப் பிரச்சினை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறிநிலை தொடர்வதைக் காணலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாஸதான் என்ற பிரசாரத்தை, சஜித் பிரேமதாஸ தரப்பு, கடுமையாக முன்னெடுத்து வருகிறது. இது சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக்குவதற்கான அழுத்தத்தை கட்சித் தலைமை மீது, கடுமையாக ஏற்படுத்தி வருகிறது.   

  மறுபுறத்தில், கரு ஜயசூரியவின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், ‘உயிர்த்தெழுந்த ஞாயிறு’ தாக்குதல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் மீது ஏற்பட்ட அதிருப்தி அலை காரணமாக் தனது ஜனாதிபதித் தேர்தல் இலட்சியங்களை, அவர் கைவிட்டுவிட்டதை உணரக் கூடியதாகவுள்ளது.   

  இன்னொருபுறத்தில், மைத்திரிபால சிறிசேனவையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத விடயங்களாக மாறியுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.  

  ஆகவே, இந்தச் சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர் சஜித் பிரேமதாஸ என்று அமைவதற்கான வாய்ப்புகளே, தற்போது தென்படுகிறது. இந்த நிலையில், இந்த இருவருக்கிடையிலான போட்டியில், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நிலை என்ன என்பது தொடர்பில், நாம் சிந்திக்க வேண்டியதாகவுள்ளது.  

  2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், சிறுபான்மையினரின் நிலைப்பாடு என்பது, அத்தனை பிரச்சினைக்கு உரியதாகவோ, சிக்கலானதாகவோ இருக்கவில்லை. அன்று மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், முஸ்லிம்கள் கடும் வெறுப்பையும் வன்முறையையும் சந்தித்திருந்தார்கள்.   

  அத்துடன், தமிழர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மறுபுறத்தில், ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராகச் சிங்கள மக்களிடையேயும் கணிசமானளவு எதிர்ப்பலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, அந்த எதிர்ப்பலையுடன் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதைவுறாது பேணப்பட்டன.   

  அதுபோலவே, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, ஏனைய கட்சிகள் பொதுவேட்பாளராக, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமையால், கட்சி ரீதியாக வாக்குகள் சிதைவடையாது, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார்.  

  தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, ‘சிறுபான்மையினர், தன்னைத் தோற்கடித்துவிட்டார்கள்’ என்ற தொனியில், மஹிந்த கருத்து தெரிவித்திருந்தமை, இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. ஆனால், அதில் உண்மை இல்லை.   

  அன்றைய கால அமைவு, சூழல், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இருந்ததேயன்றி, சிறுபான்மையினர் ஒன்றிணைவதால் மட்டும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது.   

  இலங்கையில் சிறுபான்மையினரின் வாக்குவங்கி என்பது, ஏறத்தாழ 25 சதவீதம் எனலாம். இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழரின் ஒட்டுமொத்த இனவிகிதாசாரத்தைச் சேர்த்தாலும், அது ஏறத்தாழ 15 சதவீதமாகவே அமைகின்றது. இத்தோடு, முஸ்லிம் மக்களைச் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 25 சதவீதமாகவே அமையும்.   

  50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெறுபவர், வெற்றியடைவார் என்ற ரீதியில் அமையும் தேர்தலொன்றில், ஏறத்தாழ 75 சதவீதமான இனவாரி வாக்கு வங்கியைக் கொண்டு, பெரும்பான்மை இனமே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி என்பதுதான் வௌ்ளிடைமலை.   

  அந்தப் பெரும்பான்மை, ஏறத்தாழ இருசம கூறுகள் அளவுக்குப் பிரிந்து நிற்கும் போது மட்டும்தான், 2015 இல் நடந்ததைப் போல, சிறுபான்மையினர் தீர்மானிக்கும் சக்திகளாக மாறுகிறனர். இந்த அடிப்படையில் நாம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அணுகுவது அவசியமாகும்.  

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகக் கடும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பரப்புரைகளையும் பிரசாரத் தந்திரோபாயத்தையும் நாம் அவதானிக்கும் போது, அவை ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை மய்யப்படுத்தியதாக அமைவதை, உணரலாம்.   

  மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கூட்டணி என்பதை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. ராஜபக்‌ஷ என்ற ஆளுமையும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத வாக்குவங்கியும் தான், அவர்களது அரசியல் மூலதனம்.   

  இதற்கு மேலதிகமாக, தற்போது ஆட்சியிலுள்ள ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ மீது, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி அலையும் உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச அலையும் அவர்களுக்குப் பெருஞ்சாதகமாக இருக்கிறது.  சிறுபான்மையினர் வாக்குவங்கியின் ஆதரவு என்று பார்த்தால், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள் கூட கோட்டாபயவை ஆதரிப்பார்களா என்ற கேள்வி, நிச்சயமாக நிலவுகிறது. ஆகவே, சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்ற எடுகோளிலேயே, அவர்களது தேர்தல்த் தந்திரோபாயத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை, அவர்களுக்கு இருக்கிறது.   

  ஏறத்தாழ 75 சதவீதமான சிங்கள வாக்குகளில், மூன்றில் இரண்டுக்கு அதிகமாகக் கைப்பற்றும் பட்சத்தில், இந்தத் தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்பது அவர்களது கணக்காக இருக்கும். கிடைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளெல்லாம், ‘போனஸ்’ ஆகத்தான் கருதப்பட முடியுமேயன்றி, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தையும் சிறுபான்மையினர் நலனையும் ஒரே நேரத்தில் சுவீகரிக்க முடியாது.  

  ஆகவே, ராஜபக்‌ஷவின் தேர்தல் தந்திரோபாயம் என்பது, மிக வௌிப்படையானதாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்று என்ன, மாற்றாக நிற்கப்போகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது அதன் தலைமையில் அமையும் கூட்டணியின் தந்திரோபாயம், அணுகுமுறை என்ன என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகிறது.   

  ஐ.தே.க, எந்த வகையான மாற்றைத் தரப்போகிறார்கள்? அது 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கவருமா என்பதுதான், இங்கு முக்கிய கேள்வி. ஐ.தே.க அல்லது அதன் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராகக் கூடிய வாய்ப்பு, அதிகம் உள்ளவராகக் கருதப்படும் சஜித் பிரேமதாஸவின் ஆரம்பப் பிரசாரப் போக்கைக் கவனிக்கும் போது, அது ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை மய்யப்படுத்தியதாக இருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.   

  அண்மையில், அவர் ஆற்றிய உரையொன்றில், “இலங்கை முழுவதும் 1,000 விகாரைகள் அமைக்கப்படும், புனரமைக்கப்படும்” என்று பேசியிருந்தார். விகாரைகள் அமைப்பது, புனரமைப்பது என்பது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படைகளில் ஒன்று. விகாரைகளுக்குப் பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ, நாடெங்கிலும் மூலை முடுக்கெங்கும் விகாரைகளும் புத்தர் சிலைகளும் எழுப்பப்படுவதானது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடையாள அரசியலைப் பொறுத்த வரையில் முக்கியமானதாகிறது.   

  மறுபுறத்தில், சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி, சஜித் இத்தனை நாள்களில் அதிகமாகவும் அர்த்தம் மிக்கதாகவும் பேசியதில்லை என்பதையும், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.   
  சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில், சஜித் ஒருவகையான ‘கள்ள மௌனம்’ சாதித்தமையைக் காணலாம். இனப்பிரச்சினை அரசியலைப் பேசாத சஜித், பொருளாதார ரீதியிலான அணுகுமுறையை, அரசியலில் கையாண்டார். இது இனப்பிரச்சினை பற்றிய அவரது அமைதியை, அழகாக மறைக்கத் துணைபோனது.    

  வீடமைப்பு, சமூக உதவிகள் எனப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தும் அணுகுமுறையையே சஜித் கையாண்டார். இதுகூட, அவர் புதிதாக உருவாக்கிக் கொண்டதல்ல; அவரது தந்தையார் பிரேமதாஸ முன்னெடுத்த திட்டங்களின் தொடர்ச்சியைத் தான், சஜித் முன்னெடுத்து வருகிறார்.  ஆகவே, இனப்பிரச்சினை, சிறுபான்மையினர் நலன் தொடர்பில், சஜித்தினுடைய நிலைப்பாடு என்னவென்பது, இன்னமும் கேள்விக்குறியாகவே நிற்கிறது.  

  மறுபுறத்தில், தேர்தல் வெற்றிக்காக ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை சஜித்தும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னிறுத்துமானால், அது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குப் பலமான மாற்றாக அமையாது. ஏனெனில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியலில் ராஜபக்‌ஷக்களை எவராலும் தோற்கடிக்கமுடியாது; அதில் அவர்களே ராஜாக்கள்.   

  ஆகவே, அவர்களுடைய விளையாட்டை, அவர்கள் பாணியில் விளையாடி அவர்களைத் தோற்கடிக்க நினைப்பது, அரசியல் சிறுபிள்ளைத்தனம். சஜித்தும் ஐ.தே.கட்சியும், ராஜபக்‌ஷக்களின் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத மய்ய அரசியல் அணுகுமுறையையே கையாளப் போகிறார்கள் என்றால், மறுபுறத்தில் தங்களுடையது என்று, அவர்கள் கருதும் சிறுபான்மையினரின் வாக்குவங்கியை இழக்கப்போகிறார்கள்.   

  ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே, சஜித்தும் ஐ.தே. கட்சியும் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது என்றால், வெறுமனே சிறுபான்மையினத் தலைமைகளைக் கூட்டணியில் வைத்திருப்பதால் மட்டும், அல்லது அவர்களின் ஆதரவைப் பெறுவதால் மட்டும், சிறுபான்மையின மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நம்பினால், அந்த நம்பிக்கை வீணானதாகும்.   

  ஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு, வழங்கிய வாக்குறுதிகளே நிறைவேற்றாத பட்சத்தில், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கடும் அதிருப்தியிலுள்ள வேளையில், மீண்டும் ‘இரு பிசாசில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு’ என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலைத்தான், சிறுபான்மையினர் மீண்டும் சந்திக்கப்போகிறார்கள் என்று தோன்றுகிறது.  இந்தப் பிசாசு விளையாட்டில் அதிருப்தி கொள்ளும் சிறுபான்மையின மக்கள், இந்தத் தேர்தலில் 2015 ஆம் ஆண்டைப் போன்றதான எழுச்சியை, மீண்டும் காட்டாது விட்டால், அது சஜித்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமே வீழ்ச்சியாக அமையும்.  

  ஆகவே, ராஜபக்‌ஷக்களை எதிர்க்க, அவர்களுடைய வழியையே அப்படியே பின்பற்றாது, சரியான மாற்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு சஜித்துக்கும் ஐ.தே.கக்கும், அதன் கூட்டணியில் இடம்பெறப்போகிறவர்களுக்கும் இருக்கிறது.  அது, சரி வரச் செய்யப்படாவிட்டால், இன்னொரு ராஜபக்‌ஷ யுகம், வெகு தொலைவில் இல்லை என்பதை, இந்தத் தலைமைகள் உணரவேண்டும்.  

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தலும்-சிறுபான்மையினரும்/91-236953

 2. ரஜினியின் குரல்: மௌனம் காக்கும் தி.மு.க, அ.தி.மு.க

  எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 12:56
   

  “பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர்,  அர்ஜூணன் போன்றவர்கள்” என்று, ரஜினிகாந்த் பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது.   

  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ‘கேட்டல், கற்றல், வழி நடத்துதல்’ (Listening, Learning, Leading) என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடத்தப்பட்டதே பலரது புருவங்களை உயர்த்தியது. துணைக் குடியரசுத் தலைவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இளம் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். 

  அப்படிப்பட்ட நூலை எழுதியுள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு, தனது புத்தக வெளியீட்டு விழாவை டெல்லியில் வைத்திருந்தால், பிரதமர் பங்கேற்றிருப்பார்; குடியரசுத் தலைவர் பங்கேற்றிருப்பார். ஏன், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் கூடப் பங்கேற்று வாழ்த்தி இருப்பார்கள்.

  ஏனென்றால், வெங்கய்யா நாயுடு அனைத்துக் கட்சித் தலைவர்களின் நண்பர் மட்டுமல்ல; அனைவருக்கும் பொதுவானவராகக் கட்சி சார்பற்ற முறையில், மாநிலங்களவையைக் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கிறார்.   

  ஆனால், இந்தப் பொன்னான வாய்ப்பைத் தவிர்த்து விட்டு, துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும்; காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டது குறித்து, அவர் குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகச் சென்னையில் நடத்தப்பட்டது. 

  அந்த மேடையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டிருந்தார். முதலமைச்சர் பழனிசாமி மிகவும் இலாவகமாக, காஷ்மிர் பிரச்சினை குறித்தோ, அதில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்தோ பேசாமல், “தமிழக அரசாங்கத்தின் நண்பர், தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களுக்கு, அனுமதி பெற்றுத் தந்தவர் வெங்கய்யா நாயுடு” என்ற அளவில் மட்டும், அவரைப் பாராட்டினார்.  

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பாக, முதலமைச்சர் காஷ்மிர் பிரச்சினை குறித்துப் பாராட்டிப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் காஷ்மிர் பிரச்சினை பற்றி எதுவுமே பேசாமல்த் தவிர்த்தது, பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தது. 

  அதுமட்டுமல்ல, இன்றுவரை மத்திய அரசின் சாதனை நடவடிக்கையான காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து இரத்துக் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமோ கருத்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

  அதி.மு.கவின் சார்பில், இது குறித்துக் கருத்து எதுவும் கூறாத நிலையில், காஷ்மிர் பிரச்சினையைத் தமிழ்நாட்டில் முழுவதுமாகக் கையில் எடுத்தது தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். 

  தி.மு.கவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளை அழைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, “காஷ்மிர் மாநில சட்டமன்றத்தைக் கலந்து ஆலோசிக்காமல், அந்த மக்களின் கருத்தைக் கேட்காமல், சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டது தவறு” என்றும், ‘ஜனநாயக படுகொலை’ என்று தீர்மானம் நிறைவேற்றி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மிர் முன்னாள் முதலமைச்சர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்யும் சட்டத்தை, காஷ்மிர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமையும் வரை, நிறுத்தி வைக்க வேண்டும் என்றே, ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

  ஆகவே, தி.மு.கவின் இந்த முயற்சியின் முனையை மழுங்கடிப்புச் செய்யவும், காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்தது, மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான முடிவு என்பதைத் தமிழக மக்களுக்கு அறிவிக்கவே வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா பெரிதும் பயன்பட்டது. அப்படிப்பட்ட விழாவில்தான், பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் ரஜினி பாராட்டினார். தென்னகத்தில் கிடைத்த அந்தப் பாராட்டு, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

  இந்தப் பாராட்டுதலுக்கு எதிர்பார்த்தது போல் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இதற்குக் கண்டனம் தெரிவித்தன. 

  இவை அனைத்தும், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆகும். ஆனால், ரஜினியின் கருத்துப் பற்றி, இக்கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க எவ்வித விமர்சனமும் செய்யவில்லை.  ஒரு பக்கம், மத்திய அரசாங்கத்தின் காஷ்மிர் நடவடிக்கையை அ.தி.மு.க ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை; மௌனமாக இருக்கிறது. 

  இன்னொரு பக்கம், ரஜினியின் காஷ்மிர் ஆதரவுக் கருத்தையும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரை, அவர் பாராட்டியதையும் தன் கூட்டணிக் கட்சிகள் போல் விமர்சனம் ஏதும் செய்யாமல் அமைதி காக்கிறது தி.மு.க. 

  ஆகவே, தமிழக அரசியலில் இனம் புரியாத ஓர் அமைதி, இந்த இரு திராவிடக் கட்சிகள் மத்தியில் இருப்பது, பலருக்கு வியப்பாக இருப்பதைக் காண முடிகிறது. 

  இதை வைத்துப் பார்க்கும் போதுதான், ரஜினியின் பாராட்டு என்பது, காஷ்மிர் விடயத்தையும் தாண்டி, அவர் உருவாக்கப் போகும் புதுக்கட்சி வியூகத்திலும் மறைந்திருக்கிறது என்ற கருத்து, எங்கும் பரவியிருக்கிறது.

  “சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். அதுவும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என்றவர் ரஜினி. ஆனால், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு உடனடி வாய்ப்பில்லை என்பதால், புதுக்கட்சி தொடங்கும் அறிவிப்பை ரஜினி தள்ளிப் போட்டு வருகிறார். இனி, ரஜினி புதுக்கட்சி தொடங்க வேண்டும் என்றால், அவரது நோக்கத்தின்படி 2021 வரை பொறுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

  அ.தி.மு.க ஆட்சி வழக்கம் போல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வருடமும் அதுவே. இது போன்ற சூழலில், ரஜினியை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற யுக்தியை, பா.ஜ.க தலைமை புரிந்து கொண்டிருப்பது போலவே, இந்தப் புத்தக விழா அமைந்தது. 

  அதனால்தான், காஷ்மிர் போன்ற முக்கிய விடயத்தில், ரஜினியின் பாராட்டைப் பெறுவோம்; அவர் கட்சி ஆரம்பிக்கும் போது, தமிழக அரசியலில் எத்திசையில் எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என, பா.ஜ.க தலைமை நினைத்திருக்கும். அதன் வெளிப்பாடுதான், ரஜினியின் இந்தப் பாராட்டு.  

  பாராட்டியதோடு ரஜினி விடவில்லை; அதற்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பியவுடன், தன்னிலை விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அந்த விளக்கத்தில், ‘காஷ்மிர், தீவிரவாதிகளின் தாய் வீடாகவும் பயங்கரவாதிகளின் நுழைவு வாயிலாகவும் இருந்தது. இது மிகப்பெரிய இராஜதந்திர நடவடிக்கை. எதை அரசியல் ஆக்க வேண்டுமோ, அதை ஆக்குங்கள். இது நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். இதில் அரசியல் செய்வது தவறு’ என்று, தமிழகத்தில் தன்னை விமர்சித்த கட்சிகளுக்குப் பதிலடி தந்திருக்கிறார். 

  தமிழ்நாட்டில் உள்ள மற்றைய அரசியல் கட்சிகள் எல்லாம், காஷ்மிர் விடயத்தில் அரசியல் பண்ணுகிறார்கள் என்ற செய்தி, ரஜினியின் குரலாக மாறியிருக்கிறது.  

  பொதுவாக, தமிழ்நாட்டு மக்கள் நாட்டுக்கு எதிராகப் போர் நடைபெறுகின்ற நேரங்களில், தேசத்தின் பக்கம் நின்றவர்கள் என்ற பெயர் எப்போதும் உண்டு. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்ற பல முன்னணித் தலைவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வாக்காளர்கள்தான் காங்கிரஸின் வாக்காளர்களாகத் தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு, அந்த வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு பல்வேறு திசைகளில் விலகிச் சென்று விட்டார்கள். அந்த வாக்காளர்களை ஒன்று திரட்ட, அவர்கள் மத்தியில், நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் இங்குள்ள கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்ற செய்தியை ரஜினி கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். ரஜினியின் இந்தக் குரல் யாருக்குப் பயன்படப் போகிறது? அவருக்கா, பா.ஜ.கவுக்கா என்பது முக்கியமான கேள்வி.  

  ரஜினி பொதுவானவராக, அரசியலுக்கு வருவதுதான், இங்குள்ள தி.மு.கவுக்கோ அ.தி.மு.கவுக்கோ அச்சுறுத்தல். அவர்களின் வாக்கு வங்கிக்கும் ஆபத்து. 

  ஆனால், பா.ஜ.கவின் ஆதரவாளராக, பா.ஜ.கவுடன் நட்பாக இருப்பவராக ரஜினி தமிழக அரசியலில் குதிப்பது தங்களுக்கு எவ்வித ஆபத்தையும் அளிக்காது என்று தி.மு.கவும் நினைக்கிறது; அ.தி.மு.கவும் நினைக்கிறது. 

  இந்நிலையில், காஷ்மிர் விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து, தன் மீது பா.ஜ.க முத்திரையைக் குத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. இந்த முத்திரையுடன், அவர் கட்சி தொடங்கினால் நமக்கு ஒன்றும் கவலையில்லை என்று தி.மு.கவும் அ.தி.மு.கவும் நினைக்கின்றன. 

  ஆகவேதான், மாநிலத்தில் வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுமே, ரஜினியின் கருத்துகள் பற்றி, வேறு விமர்சனமோ, ஆதரவோ கொடுக்காமல் அமைதி காக்கின்றன. 

  குறிப்பாக, தி.மு.கவுக்கு மிக நெருக்கமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை, வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெற்ற அ.தி.மு.க, காஷ்மிர் விடயத்தில் வாய்மூடி இருக்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் ‘புலி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன’  நம்மை கடித்துக் குதறாமல் போனால் போதும்’ என்ற எண்ணவோட்டத்திலேயே, ரஜினியைப் பார்க்கின்றன என்பதுதான் முக்கியமானது. அதனால் கவலைப்படாமல் இருக்கின்றன.     

   

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரஜினியின்-குரல்-மௌனம்-காக்கும்-தி-மு-க-அ-தி-மு-க/91-236952

 3. 2 hours ago, ஈழப்பிரியன் said:

  அது எப்படி கிருபன் ?
  பப்புக்கு போயிட்டு வீட்டுக்குத் தானே போகணும்?
  வேலையால் வாறவரையும் பப்பால் வாறவரையும் கண்டுபிடிக்க இயலாதா என்ன?
  ம் பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தது மாதிரி ஒருத்தருக்கும் தெரியாது என்று நினைப்பு.

   வீட்டுக்குப் போன பின்னர் உண்மை தெரிந்தால் சமாளிக்கலாம் 😁

  ஆனால் பப்பிலிருக்கும்போதே யாரோட இருக்கிறாய் என்று கோல் வருவதை முற்கூட்டியே தவிர்ப்பது நல்லதுதானே😎😬

  • Haha 1
 4. 5 hours ago, ஈழப்பிரியன் said:

  அப்பர் ஆத்தையின் புத்திதானே பிள்ளைகளுக்கு வரும்.

  😂🤣

  சிலசயயம் வேலை முடிந்து நண்பர் எவருடனும் pupக்குப் போகவேண்டி இருந்தால், வெளிக்கிடும்போது data ஐ off பண்ணிவிடுவதுண்டு; அது வேலையில் overtime மாதிரியும் காட்டியிருக்கின்றது.😬

  7 hours ago, goshan_che said:

  ஆனால் ஜிபிஎஸ் குறித்து போலீசார் சொன்னது சரியாகவே படுகிறது. Multi storied கட்டிடங்களில் கண்டு பிடிப்பது முடியாத காரியம். 

  முன்னரைவிட இப்போது பரவாயில்லை. GPS துணையுடன் network base station களில் இருந்தும் தூரத்தைக் கணித்து location ஐ சரியாக கணிக்கமுடியும். ஆனால் direct line of sight இல்லாவிட்டால் கொஞ்சம் கடினம்தான்.

 5. காஷ்மீர் அதிர்வலைகள் –  பகுதி 2

  by in கட்டுரைகள்

  modi-imran-trump-300x206.jpg

  பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக,  பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்து வந்தன.

  மேலைத்தேய கல்வி அறிவையும் வாழ்க்கை முறையையும் தனது சிறு வயதிலிருந்தே பெற்று கொண்டிருக்க கூடிய முன்னைநாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பலநாள் ஏக்கம், ஜூலை 22 ஆம் திகதி , வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்ததன் மூலம், நிறைவேறியது என்றே கூறலாம்.

  அமெரிக்கா கடந்த சில வருடங்களாக,  ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்று பாகிஸ்தான் மீது  குற்றம்சாட்டும் போக்கை கொண்டிருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்க – பாகிஸ்தான்  உறவுநிலையில் பிரதானமான மாற்றத்தை  ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

  ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதில், பாகிஸ்தான் பெரும் பங்காற்றி இருக்கிறது என்றும்,  ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக வெளியேறுவதற்கு பெரும் உதவி செய்திருந்தது என்றும்,  இம்ரான் கானிடம்  வெள்ளை மாளிகையில் புகழ்ந்துரைத்திருந்தார் ட்ரம்ப் .

  அதேவேளை  ஜம்மு – காஷ்மீரை இரண்டு துண்டுகளாக பிரித்து- அரசியல் சாசன அதிகாரங்களை இந்திய மத்திய அரசு கையிலெடுக்க, காரணமாக அமைந்ததும், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பேச்சே என்பது குறிப்பிடத்தக்கது.

  “இந்திய பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்து, பல்வேறு தெற்காசிய விவகாரங்கள் குறித்து பேச்சுகளில் ஈடுபட்டபோது, இந்த விவகாரத்தில் நீங்கள் நடுவராக அல்லது மத்தியஸ்தராக இருக்க விரும்புவீர்களா என்று கேட்டார்.

  நான் எங்கே என்று கேட்டேன்.  காஷ்மீர் விவகாரத்தில் என மோடி பதிலளித்தார்” என்று  ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் கூறினார்.

  இதற்கு இம்ரான்கானும் நீங்கள் இந்த விடயத்தை செய்வீர்களாயின் மில்லியன் வரையிலான காஷ்மீர மக்களின் பிரார்த்தனையை பெறுவீர்கள் என்ற கூறி இருந்தார்.

  இந்த உரையாடல் இந்தியத் தரப்பில் ஒரு அரசியல் சூறாவளியையே உருவாக்கி  இருந்தது. மறுநாள் இந்திய நாடாளுமன்றத்தில் இதனை மறுதலித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் இந்தியப் பிரதமரால் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

  இந்திய நாடாளுமன்றத்தில் இந்து அடிப்படைவாத முதலாளித்துவ போக்குடைய பாரதீய ஜனதாகட்சி மிகுந்த பலம் வாய்ந்த அறுதிப் பெரும்பான்மை கொண்ட நிலையில் உள்ளது. இதனால், உடனடியாக காஷ்மீர் பகுதியை இரண்டு துண்டுகளாக வெட்டி சாய்த்தது மட்டுமல்லாது , ஏற்கனவே இருந்த அதிகாரங்களையும் கிழித்தெறிந்து விட்டது.

  இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் தீர்மானத்தில் உரையாற்றிய, மதிமுக பொதுச்செயலர்,  வைகோ இது ஒரு ஜனநாயக படுகொலை என தனது பாணியில் இடித்தரைத்திருந்தார்.

  இந்த விவகாரம் சட்ட விவகாரமாக்கப்படுமானால் காஷ்மீர் போராட்ட காலத்தில் மீறப்பட்ட மனித உரிமை விவகாரங்கள் எல்லாம் வெளிக் கொணரப்படும். இவற்றை மறைக்க இனப்படுகொலைகளில் ஈடுபடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

  காஷ்மீர் குறித்த பேச்சுக்களில் இடைத்தரகர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த பிரச்சினைக்கான தீர்வு இந்திய -பாகிஸ்தான்  இருதரப்பு உடன்பாடுகள் மூலமே நடத்தப்படும் . ஆனால் பாகிஸ்தான் எல்லையோர பயங்கரவாத நவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சரால் கூறப்பட்டது.

  இந்திய அமெரிக்க உறவு மிகவும் சுமூகமான நிலையில் இன்று இருக்கிறது.  இரு நாடுகளும் மூலோபாய சகபாடிகளாக இருந்து வருகின்றன.

  இந்து சமுத்திரத்தில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், கிழக்காசியாவிலும் தென்சீன கடற்பரப்பு நடவடிக்கைகளும், மத்திய ஆசிய ஈரானிய நடவடிக்கைகளும், சர்வதேச சந்தைப்படுத்துதல்களும் என பல்வேறு மூலோபாய நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவுக்கு மிகவும் தேவையான ஒரு சகபாடியாக இந்தியா இருந்து வருகிறது.

  இத்தகைய  தேவைகளுக்கு மத்தியில்  அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது முக்கியமானதாகும்.  கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த ஜனநாயக நாடு என்றும் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம் என்றும் , சர்வதேச அரங்கில் அமெரிக்கா பறைசாற்றி வந்தது.

  modi-imran-trump.jpg

  அதேவேளை, பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் பலர் அமெரிக்க – இந்திய கூட்டு யுத்த சூழலை உருவாக்கும் கூட்டு என்றும்,  அது இஸ்ரேலிய ஸியோனிச சதிகளுக்கு அமையவே நகர்த்தப்படுகிறது என்றும்  கூறி வந்தனர்.

  ஆனால், இம்ரான்கான் பதவியை ஏற்று கொண்டதில் இருந்து சீனா எல்லா உதவிகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் திறைசேரி இருப்பை வலுப்படுத்தும் முகமாக 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கொடுத்திருந்தது.

  மேலும், சீன- பாகிஸ்தானிய உறவில் அதிக உறுதிப்பாடுகள் ஏற்படும் வகையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஏற்கனவே சீன- பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிட த்தக்கது.

  ட்ரம்பின் பேச்சுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாக உள்ளதா அல்லது இந்தியாவின் அதீத வளர்ச்சியை பயன்படுத்தி பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் இல்லாது ஆக்கப்பட்டு, ஈரானை சுற்றி வளைப்பதற்கான நகர்வுகளில் ஒன்றா- என்பது தான் இங்கே உள்ள கேள்வி.

  ஏற்கனவே இந்திய – பாகிஸ்தான் முரண்பாடுகளை சவுதி அரேபிய நிதி உதவிகள் ஊடாகவும் வியாபார உடன்படிக்கைகள் ஊடாகவும் சமாதானம் செய்யும் முதற்கட்ட நகர்வு, மோடியின் வெற்றி வாய்பை உறுதிப்படுத்தும் விதமாக  நடத்தப்பட்ட இந்திய விமானப்படையின் குறுகிய நடவடிக்கையும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த விடயமும் உறுதிப்படுத்துகிறது.

  இங்கே முக்கியமாக கவனிக்கதக்க விடயம் என்ன வெனில்,  தனது அயல்நாடுகளுடன் முதன்மையான நல்லுறவு என்ற வெளியுறவு கொள்கையை வகுத்திருக்கும் இந்தியா, தனது தனது மாநிலங்களில் பிரச்சினைகள் எழும்போது , அந்த மாநிலங்கள் சார்ந்த உப பிராந்திய நாடுகளுடன் சர்ச்சைக்குரிய வகையிலேயே தனது உள்நாட்டு விவகாரத்தை கையாள வேண்டி உள்ளது.

  இது காஷ்மீர் மட்டுமல்ல அசாம், திரிபுரா, மிசோராம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநில  எல்லைகளில்,  தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில்- பல்வேறு கிராமங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ன.

  மேற்குவங்கமும் வங்காள தேசமும் இதேபோல, பல்வேறு பிராந்திய உப பிராந்திய பிரச்சினைகளை கண்டுள்ளது,  தமிழ்நாடும் சிறிலங்காவும் உத்தர்காண்டும் நேபாளமும் என இன தொடர்ச்சி சார்ந்த பல்வேறு சமூக, மொழி, மத  பிரச்சினைகளை கொண்டிருக்கின்றன.

  இந்தநிலையானது, நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசு அற்ற தரப்புகளால்  அணுகப்படும் பொழுது,  அது மத்திய – புறநில விவகாரமாக இந்தியாவில்  உருவெடுத்து விடுகிறது என்பதாகும்.

  இதனை உணர்ந்து புதிய அணுகுமுறைகளை தமிழர்கள் தமிழ்நாட்டுடன் ஏற்படுத்தி கொள்ள வேண்டியது குறிப்பிட த்தக்கதாகும்.

  தமிழ் நாட்டில் கல்வியும் பகுத்தறிவும் சமூக நீதியும் மொழிப்பற்றும்  இந்தியாவிலேயே  மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது அறிவு சார்ந்த தொடர்புகளை இலகுவாக, ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசியல் நிலைக்கு ஏற்றதாகப்படுகிறது.

  -லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

   

  http://www.puthinappalakai.net/2019/08/19/news/39601

 6. 1 hour ago, Lara said:

  உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது.

  இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை

  நீங்களும் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று இன்னொரு திரியில் சொல்லியிருந்தீர்கள். அப்ப உங்களுக்கும் பொம்மையாகத்தானே தெரிவார்🤥

 7. 6 hours ago, ஈழப்பிரியன் said:

  போன இடத்தில் பேதியா?
  ம் ஒரு படம் பார்க்கிற மாதிரியே இருக்கு.
  தொடருங்கள்.

  எப்பவும் கண்ணுக்குள் எண்ணெய்விட்டுக் கவனமாக இல்லாவிட்டால் பேதிதான். 🙁

   

 8. 31 minutes ago, Lara said:

  ஈழத்தமிழர்கள் தம்மை சைவ சமயத்தவர்களாகவே (இந்துக்கள் என அழைத்தாலும்) கருதுபவர்கள், அதற்கும் வட இந்தியர்களின் இந்து சமயத்திற்கும் வேறுபாடு உள்ளது என.

  சுயாந்தன் எனும் இந்து அறிஞர் இந்தக்கூற்றை மறுதலிக்கின்றார். அவருடைய சில கட்டுரைகளை யாழில் இணைத்திருந்தேன். யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.🥴 ஐந்து வருட விடுப்பில் இருந்ததால் நீங்களும் கண்டிருக்கமாட்டீர்கள். 😬 எதற்கும் படித்துப் பயன்பெறுங்கள்😎

   

  Quote

  இந்து என்பது தமிழரைக் குறிக்காது. அது சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கானது. அதுவடநாட்டுக்காரர்களுக்கானது என்று.  இதுதான் இருப்பதிலேயே ஆகப்பெரிதற்குறித்தனமான நகைச்சுவை. சரிவரப் படித்த ஒருவன் இதனைக் கேட்டதும் கொலாலென்று சிரித்துவிடுவான். தமிழிலுள்ள 35 வீதமான சொற்கள் சமஸ்கிருதத்தை உள்வாங்கியவை. வடமொழிகலந்தவை. அத்துடன் தமிழ்ச்சொற்கள் பலவும் வேற்றுமொழியில் கலந்துள்ளன. பேசும் மொழிதான் வேறே ஒழிய. நம் பூர்வீகத் தெய்வ வழிபாடுகளின் படி நாம் இந்துக்கள்தான். இந்துத் தேசியம் நமது அரசியலுக்கும் இருப்புக்கும் வலுச்சேர்க்கும். அதனை இங்கே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் என்ற தொண்டர்படைக்கான ஆதரவுகளை நாம் அளிக்க வேண்டும். அது இலங்ஙையின் இறையாண்மைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அதனை இங்குள்ள தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்

   

 9. ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! - பாகம் 2

  விடுமுறைக்கு ஆம்ஸ்டர்டாம் போவது பற்றி வேலையிடத்தில் உரையாடியபோது உடன் பணிபுரியும் மலையாளி தான் முன்னர் ஆம்ஸ்டர்டாமில் வேலை செய்ததாகச் சொன்னான். அங்கு பிக்பொக்கற் திருடர்கள் அதிகம் என்பதால், wallet , phone போன்றவற்றை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னான். நெருக்கடி மிகுந்த இலண்டனிலும் திருடர்கள் அதிகம் என்பதால் wallet , phone எப்பவும் எனது ஜீன்ஸின் முன் பொக்கற்களிலேயே வைத்திருப்பேன். எப்பவும் timer interrupt மாதிரி கை தானாகவே ஒரு சீரான இடைவெளியில் பொக்கற்றுகளைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும். அத்துடன் எவரையும் உடலில் உரசுமாறு பயணிப்பதில்லை என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் இணையையும் பிள்ளைகளையும் கூடியவரை பெறுமதியானவற்றைக் காவவேண்டாம் என்றும் கூட்டத்தில் கவனமாகவும் இருக்கச்சொல்லி இருந்தேன். நாங்கள் ஆம்ஸ்டர்டாம் சென்றல் ரயில் நிலையத்திற்கு அண்மையாக சற்று விலையான Double Tree Hilton ஹொட்டேலை தங்ககமாக ஏற்பாடு செய்ததால் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தது.

  .

  இந்த இடத்தில் ஒருவரை ஒருவர் கவனிக்கும் GPS location tracking apps ஐப் பற்றியும் சொல்லவேண்டும். முன்னர் வேலையிடத்து நண்பன் ஒருவன் Life360 app குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் எங்கு நிற்கின்றார்கள் என்று பார்த்துக்கொள்ளவும், phone தொலைந்தால் கண்டுபிடிக்கவும் உதவும் என்று சொல்லியிருந்தான். அவனது நண்பனின் மனைவியின் ஃபோன் கடற்கரையில் தொலைந்தபோது Life360 app இன் உதவியுடன் track பண்ணி அருகில் இருந்த ஹொட்டேல் reception இல் யாரோ நல்லவர் கொடுத்திருந்ததால் இலகுவாக மீட்ட கதையைச் சொல்லியிருந்தான். 

  அன்றே  Life360 app ஐ மூத்தவனினதும், இணையினதும், என்னுடைய ஐபோன்களில் டவுன்லோட் செய்து ஆளையாள் எங்கேயிருக்கின்றார்கள் என்று இடையிடையே கவனித்துக்கொள்வதுண்டு. மேலும் இந்த app battery life ஐயும் காட்டும். மூன்று நான்கு நாட்கள் போய் வந்த இடங்களையும், மாதாமாதம் பணம் செலுத்தினால் இன்னும் பல தகவல்களையும் தரும். ஆனாலும் இது ஒரு Big Brother கண்காணிப்பு போல சிலருக்கு படலாம். மேலதிகமாக Find iPhone app இல் எல்லா iOS devices களையும் track பண்ணுவதுண்டு. இந்த இரு அப்ஸின்  tracking accuracy இல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆயினும் mobile data ஐ off செய்துவிட்டால் Life360 app மூலம் கண்காணிக்கமுடியாது என்பது ஒரு குறைபாடே. சில நேரம் மூத்தவன் mobile data ஐ off செய்து கண்காணிக்க முடியாதவாறு செய்துமுள்ளான். Mobile data ஐ off பண்ணிலால் இளையவன் பாவிக்கும் data support இல்லாத Nokia brick phone க்கு மாற்றிவிடுவேன் என்று அவனை எச்சரித்திருந்தேன்.
  .

  என்னை ஹோட்டல் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு எனது ஃபோனிலிருந்தும் உடனடியாக இணையின் ஐபோன் எங்கு இருக்கின்றது என்று Life360 app ஐத் திறந்து பார்த்தால் அதன் GPS புள்ளி ஹொட்டேலில் இருந்து ஒன்றிரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் வாகனமொன்றின் வேகத்தில் விரைவாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. வேகத்தைப் பார்த்தால் இணையின் ஹாண்ட்பாக் காரில் அல்லது மோட்டார் பைக்கில் வந்த ஒருவரால்தான் அபகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியது. ஹாண்ட்பாக் அவ்வளவு விரைவில் கனதூரம் போய்க்கொண்டிருப்பதால், எடுத்தவர் தவறுதலாக எடுத்திருக்கமாட்டார்; இடம் வலம் தெரியாத ஆம்ஸ்டர்டாம் நகரில் அது திரும்பவும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று மனம் துணுக்குற்று ஏற்கனவே வரண்டிருந்த தொண்டை மேலும் உலர்ந்தது.

  ஹொட்டேல் பணியாளர்கள் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளதாயும் அவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எங்களை ஆசுவாசப்படுத்தினார்கள். எங்களை சமாதானப்படுத்த சில ஆறுதல் வார்த்தைகளோடு ஏதாவது குடிக்கின்றீர்களா என்று தொழில்முறைப் பரிவுடன் கேட்டார்கள். இணையின் ஃபோன் GPS புள்ளி நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு போலிஸ் விரைந்து வரவில்லையே என்று மனம் அந்தரித்தது.

  “எப்படி தோளில் எப்பவும் தொங்கும் ஹாண்ட்பாக் களவு போனது?” என்று இணையிடம் கேட்டேன். பிள்ளைகள் இருவரும் மேசையில் காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் அவர்களை மேசையில் இருந்த ஹாண்ட்பாக்கைச் பார்க்கச் சொல்லிவிட்டு தான் உணவை எடுக்கச் சென்றதாகவும் சொன்னார். திரும்பிவந்து பார்த்தபோது ஹாண்ட்பாக்கைக் காணவில்லை. அதை யார் எடுத்தார்கள் என்றும் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றார். 

  இளையவன் தங்களுக்கு அருகில் இன்னொருவர் உணவு உண்டுகொண்டு இருந்ததாகவும், அவர் எடுத்திருக்கலாம் எனவும் சொன்னான். பார்த்தாயா என்று கேட்டதற்கு தோள்களைக் குலுக்கி இல்லை என்றான். மூத்தவன் முன்னுக்கு இருந்தாலும் அவன் எப்போதும் ஃபோனையே நோண்டிக்கொண்டிருந்திருப்பான். அக்கம்பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்திருக்கமாட்டான் என்பதால் நான் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. பிள்ளைகள் இருவர் முகத்திலும் தாங்கள் ஹாண்ட்பாக் களவுபோனதற்கு பொறுப்பில்லை என்ற எண்ணம் தெளிவாகத் தெரிந்தது. அவர்களிடம் மேலும் கேட்பதற்கு எதுவுமில்லை என்பதால் இணையிடம் “உன்னுடைய பொருட்களை நீதானே பார்க்கவேண்டும். பிள்ளைகளை நம்பி பொது இடத்தில் விடலாமா?” என்று முறைத்தேன். இணையின் ஃபோன் GPS புள்ளி அப்போது பெரிய வீதியொன்றில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

  ஹொட்டேல் பணியாளர்கள் இருவரும் போலிஸ் receptionக்கு எந்த நேரத்திலும் வருவார்கள் என்று அங்கு அழைத்துச் சென்றார்கள். காலை உணவருந்திக்கொண்டிருக்கும் மற்றைய விருந்தினர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்று எங்களை receptionக்கு அனுப்புகின்றார்கள் எனத் தோன்றியது. நாங்கள் receptionக்கு போன சில வினாடிகளிலேயே போலீசார் அங்கே வந்தனர். எல்லா அவநம்பிக்கைகளும் உருகிவழிந்து ஹாண்ட்பாக் கிடைக்க வழி பிறந்த உணர்வு ஏற்பட்டது. உடனடியாகவே போலீசாரிடம் நடந்தவற்றை சுருக்கமாக ஹோட்டல் பணியாளர்கள் டச்சில் சொல்லி, எனது ஃபோனில் இணையின் ஃபோன் GPS புள்ளி நகர்வதைக் காட்டினர். நான் உடனடியாகவே தாமதிக்காமல் பறிகொடுத்த உணர்வையும் பதற்றத்தையும் ஒருசேர முகத்தில் காட்டி “இப்போதே போனால் ஹாண்ட்பாக்கை திரும்பவும் எடுத்துவிடலாம்” என்று பரபரத்தேன். களவு எடுத்தவன் ஃபோனை switch off பண்ணினால் தொடர்ந்தும் track பண்ணமுடியாது என்ற அவசரம் என்னிடம் இருந்தது.

  வந்த இரு போலிசாரில் ஒருவன் நடுவயதினனாக சீனியராகவும், இளவயதினன் மற்றவனின் சொல்லைக்கேட்டு நடக்கும் ஜூனியராகவும் பட்டது. நடுவயதினன் எடுத்த எடுப்பிலேயே “ஹாண்ட்பாக்கில் பாஸ்போர்ட் இருந்ததா?” என்று கேட்டான். எப்போதும் போலிஸுக்கு உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டுமாகையால் “அவை பத்திரமாக ரூம் லொக்கரில் இருக்கின்றன; ஆனால் கிரெடிட் கார்ட்ஸ், ஐபோன், மற்றும் சில பெறுமதியானவை ஹாண்ட்பாக்கில் இருந்தன” என்று இணையும் நானும் சேர்ந்தே பதிலளித்தோம். உரையாடலை மேலும் நீட்டாமல் முகத்தில் பதட்டத்தைக் மேலும் காட்டி “இப்பவே போகமுடியுமா?” என்று திரையில் நகரும் GPS புள்ளியைக் சுட்டிக்காட்டிக் கேட்டேன். இப்படியான களவுகளை அதிகம் பார்த்தாலும், ஹாண்ட்பாக்கை track பண்ணக்கூடிய live crime ஆக இருந்ததால் போலிஸாருக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இளைய போலிஸ் காரைச் செலுத்த நான் பின்சீற்றிலும் நடுவயதுப் போலிஸ் முன்சீற்றிலுமாக ஹாண்ட்பாக்கையும் அதை எடுத்தவரையும் பிடிக்கவெளிக்கிட்டோம்.  Life360 app இல் எப்படி track பண்ணுவது என்று விரைவாக விளங்கப்படுத்தி எனது ஃபோனை நடுவயதினனிடம் கொடுத்தேன். அவனுக்கு Life360 app பரிச்சயமில்லாமல் இருந்தது அவன் track பண்ணச் சிரமப்படுவதில் புரிந்தது. மீண்டும் சில அடிப்படை zoom control களைக் காட்டி எனதும் இணையின் ஃபோன்களின் GPS locations ஐத் திரையில் கொண்டுவந்து நம்பிக்கையூட்டினேன்.  ஹாண்ட்பாக் பிரதான வீதியைவிட்டு உள்வீதிகளில் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த இடத்திற்குச் செல்ல இன்னும் பத்து நிமிடங்கள் எடுக்கும் என்றும் திரையில் காட்டியது.

  போலீஸ்கார் மிக வேகமாக நீலவர்ண flashing lights, sirens உடன் சிவப்புச் சிக்னல்களில்கூட நிறுத்தாமல் போகும்; விரைவில் ஹாண்ட்பாக் திருடனைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற உடல் புல்லரித்தது. ஆனால் போலிஸ்கார் நீல வெளிச்சமோ, siren கூவலோ இல்லாமல் ராக்ஸி போவதுபோல சிவப்புச் சிக்னல்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்து மிதமான வேகத்தில் போனது. போலிஸ்காரர்கள் ஹாண்ட்பாக்கை மீட்டுத் தருவார்களா என்ற சந்தேகம் துளிர்விட்டது. காலையில் இருந்து எதுவுமே குடிக்காதது வேறு தொண்டையையும், நாவையும்  உலர்ந்து வறட்டி குரலும் கரகரத்தது. மெல்லிய குரலில் நடுவயதினனிடம் location update ஆகியிருக்கின்றதா என்று கேட்டேன். அவனும் திரையில் பார்த்து ஹாண்ட்பாக் இப்போது மெதுவாக உள்வீதியில் நகர்கின்றது. எடுத்தவர் சிலவேளை நடையில் போகலாம் என்றும் ஐந்து நிமிடங்களில் இடத்தை அண்மிக்கலாம் என்றும் சொல்லி மேலும் zoom பண்ணிக் காட்டினான். இணையின் ஃபோன் GPS புள்ளி நகரும் தெருவை நோக்கி இளவயதினன் போலிஸ்காரைச் செலுத்தினான்.

  large.43792ED4-072A-4ACD-801A-7FF4406AE979.png.20e175af95a4931ab91433ac70fa871f.png

  ஹொட்டேலில் இருந்து குடியிருப்புக்கு போகும் பாதைத் தடம்

  போலிஸ்கார் இப்போது உள்வீதியில் ஒரு தொடர்மாடிக் குடியிருப்புப்பகுதிக்குள் வந்துவிட்டது. வசதிகுறைந்தவர்கள் வாழும் இடம் போலத் தோன்றினாலும், graffiti எதுவும் இல்லாமலும் தெருக்களில் எவரையும் மதிக்காமல் குழப்படிகள் செய்யும் சிறுவர்கள் நிற்காமலும் அமைதியான இடமாக இருந்தது. இலண்டன் குறைடனில் பாதுகாப்பில்லாத குற்றங்கள் மலிந்த இடங்கள் எல்லாம் பழக்கம் என்பதால் ஆம்ஸ்டர்டாம் புறநகர்க்குடியிருப்பு எதுவித அச்சவுணர்வையும் தரவில்லை. இணையின் ஐபோன் GPS புள்ளி இப்போது நகர்வதை முற்றாக நிறுத்திவிட்டது. அதன் இடத்தை சரியாகக் கணிக்கமுடியாததால் போலிஸ்கார் குடியிருப்புப் பகுதி குச்சுவீதிகளினூடாக பலமுறை சுற்றி, நிறுத்தி நிறுத்தி வட்டமிட்டுட்டுக்கொண்டிருந்தனர். இரு GPS புள்ளிகளும் நெருங்குவதும் விலகுவதுமாகப் போக்குக் காட்டின. இரு GPS புள்ளிகளும் 10 மீற்றர் தூர இடைவெளியில் அண்மித்த பின்னர் பொலிஸ்கார் நிறுத்தப்பட்டது. நடுவயதினன் zoom பண்ணப்பண்ண இரு GPS புள்ளிகளும் ஒரேயிடத்தில் நிலைகொள்ளாமல் மாறிக்கொண்டிருந்தன. இணையின் ஐபோன் GPS location இப்போது purple கலரில் இரண்டு மூன்று கட்டடங்களை உள்ளடக்கி பெரியவட்டமாக மாறியது. எனது ஃபோனும் அந்த வட்டத்திற்கு அண்மையாக வந்தாலும் ஓரிடத்தில் நிலைக்கவில்லை. துல்லியமாக இடத்தைக் காட்டமுடியாமல் GPS திணறினாலும் போலிஸார் இறங்கித் தேடுவார்கள் என்று நினைத்து ‘என்ன செய்யலாம்’  என்று அவர்களிடம் கேட்டேன். போலிஸை வழிநடத்துவதோ, அறிவுரை சொல்வதோ அவர்களின் தொழில்சார் அறிவைச் சரியாக மதிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி ஹாண்ட்பாக்கை மீட்பதை பிசகுபடுத்திவிடும் என்று சில வார்த்தைகளிலேயே அளந்து உரையாடிக்கொண்டிருந்தேன். நானே இறங்கித் தேடவேண்டும் என்ற உந்துதலை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன். 

  large.4524D86C-935D-4B90-8C4A-43D964C84C45.png.7cc01d2c664a3384574233810fe30a43.png

  போலிஸ்கார் குடியிருப்பு குச்சுவீதிகளில் சுற்றிய தடங்கள்

  நடுவயதினன் டச்சில் மற்றவனுடன் ஏதோ சில வினாடிகள் ஃபோனைக் காட்டிக் கதைத்தான். இளவயதினன் கீழ்ப்படிவுள்ள மாணவன்போல் எல்லாவற்றையும் ஆமோதித்தது அவர்கள் ஏதோ திட்டத்தை விவாதிப்பதுபோலப் பட்டது. என்னைக் காருக்குள் இருத்திவிட்டு இறங்கித் தேடப்போகின்றார்களாக்கும் என்று மனது சமாதானப்பட்டது. நடுவயதினன் பின்னால் திரும்பி என்னைப் பார்த்து “ஹாண்ட்பாக் நகரவில்லை. அது நகர்ந்தால்தான் இறங்கித்தேடமுடியும்” என்றான். மேலும் “GPS tracking துல்லியம் காணாது. நாங்கள் வீதியினருகே பார்க்கிங்கில் நின்றபோதும் GPS 20 மீற்றருக்கு அப்பால் கட்டடத்தில் நிற்பதுபோலக் காட்டுகின்றது. ஹாண்ட்பாக் வீடுகளுக்குள் இருந்தாலும் எந்தவீடு என்று தெரியாது. எல்லோருடைய வீடுகளையும் சந்தேகப்பட்டு தேடவும்முடியாது. அதற்கு அனுமதியும் இல்லை. எனவே ஹாண்ட்பாக் நகரும் மட்டும் பொறுப்போம்” என்றான். அவன் சொன்னது நியாயமாகப் பட்டாலும் இவ்வளவு அண்மையாக வந்துவிட்டு ஹாண்ட்பாக் இல்லாமல் திரும்பக்கூடாது என அந்தரப்பட்டு “இரண்டு GPS புள்ளிகளும் ஒரேயிடத்தில் வரும்வரை இறங்கி நடந்து பார்க்கலாமா?” என்று கேட்டேன். அதையும் அவர்கள் GPS துல்லியம் காணாது என்று தட்டிக் கழித்து GPS புள்ளி நகர்ந்தால்தான் அல்லது யாரும் சந்தேகமாக நடமாடினால்தான் தாங்கள் இறங்கமுடியும் என்றனர். இணையின் GPS புள்ளி நகராமல் last update: Now என்று தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தது. 5 அல்லது 10 மீற்றருக்குள் நின்றிருந்தும் இறங்கித் தேடமுடியாமல் போலிஸ்காருக்குள் இருந்தது மனதைக் குடைந்தது. காருக்குள்ளேயே இன்னும் 10 நிமிடங்கள் இருந்து நகராமல் purple வட்டத்திற்குள் நிலைத்து நிற்கும் இணையின் ஃபோன் GPS புள்ளியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். 

  சீனியர் போலிஸ்காரர் GPS புள்ளி அசையாததால் இனியும் அங்கு சும்மா நிற்பதில் பிரயோசனமில்லை என்றான். என்னைத் திரும்பவும் ஹொட்டேலில் இறக்கிவிடப்போவதாகச் சொன்னார்கள். எனது நம்பிக்கைகள் எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்தன. ஹாண்ட்பாக் நகர்ந்தால் அவசர நம்பர் 112 க்கு அடித்தால் உடனடியாகப் போலிஸ் வரும். மீண்டும் தேடலாம் என்றார்கள். இவர்கள் இறங்கித் தேடாமலேயே தங்கள் அலுவலை முடிக்கின்றார்கள் என்று உள்ளே கறுவினேன். ஹாண்ட்பாக் மீளக்கிடைக்கும் என்ற நம்பிக்கை வடிந்து உடலும் உள்ளமும்  சோர்ந்தது. எனினும் அந்த இடத்தின் GPS location ஐ உடனடியாக Google map இல் பதிவு செய்தேன். ஹாண்ட்பாக்கை எடுக்கமுடியாத இயலாமையோடு கனத்திருந்த மனத்துடன் இருந்த என்னைச் சுமந்துகொண்டு போலிஸ்கார் மீண்டும் ஹொட்டேலை நோக்கி நகரத் தொடங்கியது.

  - தொடரும்

   

   

  • Like 4
  • Sad 3
 10. மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 65 பேர் கைது..!

  மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

  கடந்த 24 ஆம் திகதி, கத்தாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கிக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர்.

   

  அங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

  https://www.virakesari.lk/article/62840

 11. இலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்

   

   பி.கே.பாலச்சந்திரன்

   கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும்  முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை  இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும்.

  mahinda.JPG

  பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான மத்திய  அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும்  ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி  செல்லுபடியற்றதாக்கியது. ஜனாதிபதியின் அந்த உத்தரவு ஜம்மு -- காஷ்மீர் ' மாநிலத்தை ' மிகவும் குறைந்தளவு சுயாட்சியுடைய இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியிருக்கிறது.

  இந்த நடவடிக்கை மூன்று இலக்குகளை  மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட்டது ;  ஜம்மு -- காஷ்மீரில் பாகிஸ்தானின் அனுசரணையுடனான  பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்த்துப் போராடுதல், ஜம்மு -- காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒன்றிணைத்தல், அந்த மாநிலத்துக்கு இந்திய சட்டங்களை பிரயோகிப்பதற்கும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களும் மூலதனமும் வருவதற்கும்  கட்டுப்பாடுகளை  விதிக்கும்  370 மற்றும் 35 ஏ பிரிவுகளின் விளைவாக இதுகாலவரை அடையமுடியாதிருந்த பொருளாதார அபிவிருத்தியை  காஷ்மீரிகளுக்கும் கிடைக்கச்செயதல். 

  ராஜபக்சவின் கருத்து

  இலங்கையில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பிலான அரசியல் விவாதம் ஜம்மு -- காஷ்மீரில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகளை கணக்கில் எடுத்தவையாக அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் வீரகேசரிக்கு அளித்த முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

  ராஜபக்ச அதை விளக்கமாகக் கூறவில்லை.ஆனால், இஸ்லாமியப் பயங்கரவாதம் மற்றும் தமிழ்ப் பிரிவினைவாத்திடமிருந்து வருவதாக நோக்கப்படுகின்ற அச்சுறுத்தலின் பின்புலத்தில் தேசிய பாதுகாப்பு பற்றி அவருக்கு இருக்கும் வெளிப்படையான அக்கறையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி எடுத்திருக்கும் நடவடிக்கைகளை அவர் அங்கீகரிக்கிறார் என்பது தெளிவானது.

  " இப்போது இரண்டு வகையான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.சிலர் புதிய அரஙியலமைப்பொன்றை விரும்புகிறார்கள்.வேறு சிலர் சமஷ்டி ஏற்பாடு வேண்டும் என்கிறார்கள்.இன்னும் சிலர் 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொனறே போதுமானது என்று கூறுகிறார்கள்.ஆனால், காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக அமைந்துவிடக்கூடாது.காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் பாருங்கள்.இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டுதான் எமது நடவடிக்கைகள் அமையவேண்டும்.அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது நாம்  இந்தக் காரணிகளை விளங்கிக்கொள்ளவேண்டும் " என்று மகிந்த ராஜபக்ச அந்த  நேர்காணலில் கூறியிருந்தார்.

  தனது இந்த நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்கக்கும் வகையில் அவர் இன்னொரு கருத்தையும் கூறினார்.அதாவது 2019 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வருகின்றவர் ' தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் " ஒருவராகவே இருப்பார் என்று அவர் சொன்னார்.

  இந்த நேர்காணலை ராஜபக்ச வழங்கியதற்கு மறுநாளான ஞாயிறன்று (11/ 😎 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அவரது இளைய சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ச என்பது அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டவர்  கோதாபய என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.நரேந்திர மோடியைப் போன்று அவரும்  பெரும்பான்மையின வாதத்தின் உறுதியான ஆதரவாளரே. அதுவே  மகிந்த ராஜபக்சவின் பாதையுமாகும்.

  கோதாபயவின் வெற்றி வாய்ப்புகள் மூன்று காரணிகளினால் மேம்படுத்தப்படுகின்றன ; இஸ்லாமிய தீவிரவாதிகளினால் ஈஸ்டர் ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ; அந்த தாக்குதல்கள் தொடர்பில் இந்தியாவிடமிருந்து முன்கூட்டியே கிடைத்த புலலனாய்வுத் தகவல்கள் அலட்சியம் செய்யப்பட்டமை ; ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு இயந்திரம் பெருமளவுக்கு பலவீனப்பட்டிருக்கின்றமை.

  அத்தகைய ஒரு பின்புலத்தில், தமிழ்ச் சிறுபான்மையினத்தவர்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற முறையில் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவந்த செயன்முறைகள் கைவிடப்படுவது சாத்தியம். உண்மையில் அது ஏற்கெனவே கைவிடப்பட்டுவிட்டது.

  புதிய அரசியலபை்பை வரைவதற்கான செயன்முறைகள் இறுதிக்கட்டமொன்றை அடைந்திருந்தன.ஆனால், எதிரணியிடமிருந்து மாத்திரமல்ல, ஐ.தே.க.வுக்குள்ளிருந்தும் வந்த எதிர்ப்புகளின் காரணமாக அரசாங்கம் அதை முன்னெடுப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டது.

  " இரண்டரை வருடங்களுக்கும் கூடுதலான காலமாக நடத்தப்பட்ட பல  கலந்துரையாடல்களையும் வெளியிடப்பட்ட பல  அறிக்கைகளையும் அடுத்து,  அரசியலமைப்புச்சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழு வினால் தயாரிக்கப்பட்டது என்று கூறப்பட்ட ஆவணம் ஒன்றை பிரதமர் 11 ஜனவரி 2019 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் " என்று கடந்த மாதம் 26 ஆம்திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச கூறினார்.

  " பாராளுமனறத்தில் அந்த ஆவணத்தைச் சமர்ப்பித்த வேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதில் உள்ளடங்கியிருப்பவை அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல, நிபுணர் குழுவே அறிக்கையைத் தொகுத்தது என்று குறிப்பிட்டார். இறுதியாகப் பார்த்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கைக்கு உரிமைகொண்டாட ஒருவரும் இல்லை.அந்த வரைவுக்கு எவரும் பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில்  எவ்வாறு அரசியலமைப்புச்சீர்திருத்த செயன்முறைகள் வெற்றிபெறமுடியும்? " 

   " பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை முற்றுமுழுதாக நாம் எதிர்க்கிறோம்.அது நாட்டை ஒன்பது அரைச் சுதந்திர அரசுகளாகப் பிரித்துவிடக்கூடிய அம்சங்களைக் கொண்டது ; தனித்தனியான ஒன்பது பொலிஸ்படைகளை உருவாக்குவதற்கான யோசனையையும் அது கொண்டுள்ளது. மாகாண அலகுகளுக்கு பரவலாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்களில் எந்தவொன்றையும் மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதை சாத்தியமற்றதாக்கும் ஏற்பாடுகளையும் அது கொண்டிருக்கிறது " 

    " 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு அப்பால் அதிகாரங்களைக் கொண்ட ஆட்சிமுறை பற்றி -- அதாவது 13 பிளஸ் -- நானும் பேசியதாக சிலர் கூறுகிறார்கள்.மாகாணங்களின் தலைவர்களும் தேசிய விவகாரங்களில் பங்கேற்பதற்கு வசதியாக மாகாணசபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபையொன்றை பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவது குறித்து யோசிக்கிறேன் என்று அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு  ஒரு தடவை நான் கூறியிருந்தேன்.எனது அந்த யோசனையை 13 பிளஸ் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர்தான் வர்ணித்தார்.ஆகவே 13 பிளஸ் என்று நான் கருதியதை பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவில் முன்வைக்கப்பட்டுள்ள நாட்டை ஒன்பது அரைச் சுதந்திர அரசுகளாகப் பிரிக்கும் ஏற்பாட்டைப் போன்றதாக விளங்கிக்கொள்ளக்கூடாது."

  " பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சில அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்ததேயாகும் பாரளுமன்றத்தில்  சமர்ப்பித்த பிறகு அந்த வரைவுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று பிரதமர் திரும்பத்திரும்ப  கைவிரித்துவிட்டார்.இறுதியில் பார்த்தால் இந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எப்போதும் தனிநாடென்று பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் உண்மையில் தனிநாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்புத் திருத்தங்களையே வரைகிறார்.அவர்கள்தங்களது கருத்துக்களை ஆவணத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்." என்று மகிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறினார்.

     வழிதெரியாமல் தடுமாறுகின்ற ஐ.தே.க.தலைமையிலான அரசாங்கத்துக்கு முற்றிலும் வேறுபட்டதாக உறுதியானதும் செயற்திறன் மிக்கதுமான அரசாங்கம் ஒன்றின் தேவை பற்றி பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ச வெற்றிபெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது. அத்தகையதொரு சூழ்நிலையில் தற்போது இருப்பதற்கு அப்பால் கூடுதல் அதிகாரப்பரவலாக்கலை தமிழச் சிறுபான்மையினத்தவர்கள் பெறுவதற்கான சாத்தியங்கள் உண்மையில் அரிதே.

  https://www.virakesari.lk/article/62877

   

 12. கல்முனைக்கு தீர்வுகாண கூட்டமைப்பே விரும்பவில்லை - தமிழர் மகா சபையின் தலைவர் விக்கினேஸ்­வரன்

  கல்­மு­னை­யையும் அதன் தென் பகு­தி­யி­லுள்ள பிர­தே­சத்­தையும் ஒரு மத ரீதி­யான தென் கிழக்கு மாகா­ண­மாக்க வேண்டும் என்று இந்­திய அர­சாங்­கத்­திடம் 1986ஆம் ஆண்டு கூட்­டணித் தமிழ் தலை­வர்­களே விதைந்­து­ரைத்­தார்கள். அன்­றைய கூட்­ட­ணியின் வாரி­சாக இருக்கும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அதே­பாணியில் கல்­முனை விட­யத்­தினை தீர்ப்­பதற்கு விரும்­ப­வில்லை என்று தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்­வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரி­வித்தார்.

  kalmunai.jpg

  கேள்வி:- கல்­முனை பிரச்­சினை இது­வரை காலமும் தீர்க்கப்படா­மைக்கு கிழக்குத் தமிழர் கூட்­ட­மைப்பின் ஓர் அங்­க­மா­க­வி­ருக்கும் அகில இலங்கை தமிழர் மகா­சபை என்ன காரணம் என்று கரு­து­கின்­றது?

  பதில்:- அம்­பாறை மாவட்டத் தமிழர்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக அர­சியல் ஞானம் படைத்த தலை­வர்­களைத் தெரிவு செய்­யா­மையே இப்­பி­ரச்­சினை தீர்க்க முடியாமல் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்றமைக்கு  காரணமாகும். 

  கேள்வி:- இது­வரை காலத்தில் அங்­கி­ருந்து பல தமிழ் புத்­தி­ஜீ­விகள் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கை­ய­தொரு குற்­றச்­சாட்டை முன்­வைக்­கின்­றீர்­களே?

  பதில்:- கல்­மு­னை­யையும் அதன் தென் பகு­தி­யி­லுள்ள பிர­தே­சத்­தையும் ஒரு மத ரீதி­யான தென் கிழக்கு மாகா­ண­மாக்க வேண்டும் என்று இந்­திய அர­சாங்­கத்­திடம் 1986ஆம் ஆண்டு  விதந்­து­ரைத்த தலை­வர்­களை வேறு எவ்­வாறு வர்­ணிக்­கலாம்? அன்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­வர்கள் முஸ்லிம் தலை­வர்கள் ஓர் இர­க­சிய ஒப்­பந்­தத்தை செய்­தி­ருந்­தார்கள் எனக் கூறப்­பட்­டது. எனவே தான், கல்­முனை பிரச்­சி­னைக்கு தீர்வு ஒன்று கிட்ட முடி­யாது இருந்­தது. அன்­றைய கூட்­ட­ணியின் வாரி­சாக இருக்கும் இன்­றைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அதே­பா­ணியில் இந்­த­ வி­ட­யத்­தினை தீர்ப்­ப­தற்கு விரும்­ப­வில்லை.        

  கேள்வி:- கல்­முனை பிரச்­சி­னைக்கு உங்­க­ளு­டைய தரப்பில் எவ்­வ­கை­யான தீர்­வினை முன்­மொ­ழி­கின்­றீர்கள்? 

  பதில்:- 1989ஆம் ஆண்டில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு வெளி­யிட்ட பிரகட­னத்தின் அடிப்­ப­டை­யில்தான் அந்தத் தீர்வு இருக்க வேண்டும். தற்போ­தைய கள நிலை கருதி ஒரு சில மாற்றங்களைச் செய்­யலாம். 

  கேள்வி:- 1989ஆம் ஆண்டு முன்­மொ­ழி­யப்­பட்ட விடயம் என்ன என்­பதை விப­ரிக்க முடி­யுமா?

  பதில்:- 1989ஆம் ஆண்டில் உள்நாட்டு அலு­வல்கள் அமைச்சு விடுத்த பிரகடனத்தில், கல்­முனை தமிழர் பிரிவு என அழைக்­கப்­படும் கல்­முனை வடக்குப் பிரிவில்,  பத்து கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வுகள் அடக்­கப்­பட்­டன. அவையாவன கல்­முனை-1, கல்முனை2, கல்­முனை-3, பாண்­டிருப்பு-1, பாண்டிருப்பு-2, பெரி­ய­நீ­லா­வணை-1, பெரி­ய­நீ­லா­வணை-2, நற்­பிட்­டி­முனை-1, நற்­பிட்­டி­முனை-2 மற்றும் சேனைக்­கு­டி­யி­ருப்பு என்­ப­ன­வாகும்.

  கேள்வி:- நீங்கள் பத்து கிராம உத்தியோ­கத்தர் பிரி­வு­களை கூறுகின்றீர்கள். ஆனால் தற்போது 29 கிராம உத்தியோ­கத்தர் பிரிவுகள் அல்லவா காணப்படுகின்றன?

  பதில் :- நான் குறிப்­பிட்ட பத்து கிரா­ம­சேவகர் பிரி­வு­க­ளுக்கும் தற்­போ­துள்ள 29 கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்கும் இடையில்  எவ்­வி­த­மான வித்­தி­யா­சமும் கிடை­யாது. பழைய கல்­முனை பிரி­வுகள் மூன்றும் புதி­தாக 11 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும், பழைய பாண்­டி­ருப்பு பிரி­வுகள் இரண்டும் புதி­தாக 8கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும், பழைய பெரிய நீலா­வணைப் பிரிவுகள் இரண்டும் புதி­தாக நான்கு கிராம உத்தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும் பழைய நற்­பிட்­டி­முனை பிரி­வுகள் இரண்டும் புதிதாக மூன்று கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும் பழைய சேனைக்­கு­டி­யி­ருப்பு புதி­தா­க­மூன்று கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளா­கவும் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அவை தான் தற்­போது 29 கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளாக உள்­ளன. 

  கேள்வி:- எனினும் கல்­முனை தமிழ் பிரிவு, கல்­முனை முஸ்லிம் பிரிவு என்று 1989 இல் பிரிக்­கப்­பட்ட பொழுது மரு­த­மு­னைக்கும் நற்­பிட்­டி­மு­னையின் முஸ்லிம் பகு­திக்கும் என்ன நடந்­தது?

  பதில்:- அவை இரண்டும் நிலத்­தொ­டர்­பற்ற இரண்டு துண்­டு­க­ளாக கல்­முனை முஸ்லிம் பிரி­வுடன் சேர்க்­கப்­பட்­டன. 

  கேள்வி:- அப்­ப­டி­யாயின் மரு­த­முனை, நற்­பிட்­டி­முனை பற்றி உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

  பதில்:- நிலத்­தொ­டர்­பற்ற துண்­டு­க­ளாக இருக்கும் அவை சீரான நிர்­வா­கத்­திற்கு இடைஞ்­ச­லாக இருக்கும். அத­னாலே தான் மரு­த­மு­னையை  தனி­யான பிரிவாக உரு­வாக்க  வேண்டும் என்று நாம் விரும்­பு­கின்றோம். அங்கே 17000 முஸ்­லிம்கள் மட்­டுமே குடி­யி­ருப்­பார்கள். 

  சீரான நிர்­வாகம் கருதி நற்­பிட்­டி­முனை முஸ்லிம் பகு­தியை தமிழர் பெரும்­பான்மைப் பிரி­வான  கல்முனை வடக்குடன்  சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்­வாறு சேர்க்கும் போது கல்­முனை வடக்கில் 30சத­வீத முஸ்­லிம்­களும் 70 சத­வீத தமி­ழர்­களும் குடியிருப்பர். இதுவே எமது முன்­மொழிவா­கவும் உள்ளது.

  கேள்வி:- வவு­னியா மாவட்­டத்தில் வவு­னியா தெற்கு சிங்­களப் பிரிவின் சில நிலத்­தொ­டர்­பற்ற பகு­திகள் அவற்றை அண்­மித்த தமிழ்ப் பிரிவில் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ள­தைப்­போன்று கல்­மு­னை­யிலும் அமைக்­க­லாமே? 

  பதில்:- அது 50 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட பழைய கதை. தற்­போ­தைய சூழ்­நி­லையில் எந்த அர­சாங்­கமும் நிலத்­தொ­டர்­பற்ற பகு­தி­களை இணைப்­பதை விரும்­ப­மாட்­டாது என்­பது தான் யதார்த்­த­மாகும்.  

  கேள்வி:- தற்­போதைய கல்­முனை01 எனப்­படும் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரிவுக்­குள்ளும் கல்­முனை03 எனப்­படும் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வுக்­குள்ளும் 5000 முஸ்­லிம்கள் குடி­யி­ருக்­கி­றார்கள். மேலும் இஸ்­லா­மாபாத் என்ற பிர­தேசமும் அங்குள்­ள­தல்­லவா?

  பதில்:- 1989ஆம் ஆண்­டிற்குப் பின்னர் காணிக் குடி­யேற்­றத்­திற்கு அதி­காரம் படைத்த பிரிவு கல்­முனை பிர­தேச செய­லாளர் பிரிவு எனப்­படும் முஸ்லிம் பிரிவு மட்­டுமே. அப் பிர­தேச செய­லாளர் KP/59, KP/59/1  எனப் பெயரிட்ட இரண்டு சட்­டத்­திற்குப் புறம்­பான  பிரிவுகளை உரு­வாக்கி அங்கு 5000 முஸ்­லிம்­களைக் குடி­யேற்­றி­யுள்ளார். 

  சட்­டத்­திற்குப் புறம்­பான இவ்­விரு கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­களும் உட­ன­டி­யாக நீக்­கப்­பட வேண்டும். அக் கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வுகள் கல்­முனை 01 அல்­லது KP/61/1, கல்முனை03 அல்­லது KP/59/1  என்பவற்றின் பகு­தி­க­ளா­கவே கரு­தப்­பட வேண்டும். அது மட்­டு­மல்­லாது அங்கு வாழும் 5000 முஸ்லிம் மக்­களும் கல்­முனை வடக்கு எனும் பிரிவில் வசிப்­ப­வர்­க­ளாக கரு­தப்­பட வேண்டும். 

  கேள்வி:- உங்­க­ளு­டைய முன்­மொழிவின் பிர­காரம், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு என முழு அதிகாரம் கொண்ட பிரிவுகளையும் மூன்றாவது பிரிவான மருதமுனையையும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்துகையில்  கல்முனை தெற்கின் நிர்வாக மத்திய நிலையம் கல்முனை வடக்கில் தானே இருக்கப்போகின்றதே?  

  பதில்:- உண்மைதான். கல்முனை தெற்கு தனக்கான ஒரு நிர்வாக மத்தியை அமைக்கும் வரை அவ்வாறான நிலைமைதான் இருக்கும். அவ்வேளையில் அவர்கள் அம்மத்திக்கு அருகாமையில் புதிய இஸ்லாமாபாத்தையும் அமைக்கலாம். அதில் எமக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. இந்த முன்மொழிவை உள்ளீர்ப்பது தவிர்க்கப்படுகின்ற போது கல்முனை விவகாரம் தீரா நோயாகிவிடும்.    

  நேர்­காணல்:- ஆர்.ராம்

   

  https://www.virakesari.lk/article/62875

 13. அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்

   

  நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார்.

  ragavan.jpg

  வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்..

  மேலும் கருத்து தெரிவித்த அவர்,

  கூட்டுறவு என்ற இயக்கம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாகரிகத்தைகொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது. அது மனிதாபிமான ரீதியான நுண்கடன்களை வழங்கி மக்களிற்கு உதவி செய்திருந்தது. ஆனால் இப்போதும் நுண்கடன் நிறுவனங்கள் இருக்கிறது அவற்றிடம் மனிதாபிமானத்தை காணவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் கூட்டுறவின் மூலமான செயற்பாடுகள் தற்போதும் நடைபெற்ற வண்ணமே இருக்கிறது.

  எனது அனுபவத்தின் பிரகாரம் கூட்டுறவிற்கு பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி பெண்களின் சக்தியாகவே இருக்கும். எனவே இந்த கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் இணைந்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி என்ற தாய்வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியினை இன்னும் வலுவாக செய்து கொள்வதற்கான தேசிய, சர்வதேச ரீதியாலான வழிமுறைகள் உங்களிற்கு கிடைக்கும். 

  இலங்கையின் பிரதான வருமானமாக தற்போது அமைந்திருப்பது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு உழைத்து அனுப்பும் அந்நிய செலாவணி பணமே. அது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. அந்த தொகையில் 40 சதவிகிதமானது தமிழர்கள் அனுப்பி வைக்கும் பணமாக இருக்கிறது. 

  இந்ததொகையில் ஒரு சதவீதத்தையாவது, எமது வங்கிமூலம் பராமரிக்க முடியுமாக இருந்தால் அது தேசிய அளவிலான வங்கியாக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக நாம் மத்தியவங்கி ஆளுனருடன் கதைத்து வருகிறோம். எனவே எதிர்காலத்தில் வணிக வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகள் பெருவளர்சியை அடையும் அதனுடாக மக்களிற்கு கிடைக்கும் சேவைகள் அதிகரிக்கும்.

  முன்னதாக நிகழ்வு நடைபெற்ற மேடையில் தொங்க விடப்பட்டிருந்த பதாதை தனி தமிழ் மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுனர் மூவினமக்களும் ஒன்றாக வாழும் நல்லுள்ளங்கள்‌ கொண்ட மாவட்டம் வவுனியா. எனவே இனிவரும் காலங்களில் சாராம்சமாகவேனும் சிங்கள மொழியிலும் பதாதைகளை அமைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். 

  அப்பொழுது தான் நாங்கள் கேட்டுகொண்டிருக்கும் உரிமையை நாம் அடுத்தவருக்கு கொடுக்கும் போது தான் எங்கள் உரிமை ஸ்தாபிக்கபடும் என மேலும் தெரிவித்தார்.

   

  https://www.virakesari.lk/article/62890

   

 14. பேரம் பேசுவதற்கு இது பொன்னான சந்தர்ப்பம் ; செ.கஜேந்திரன்.

  கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டதன் மூலம்  பேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு தமிழ் தரப்பிற்கு கிடைத்திருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். 

  Kajendran-740x430.jpg

  வவுனியா கனகராயன்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து‌ கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

  மேலும் தெரிவித்த அவர்,

  அண்மையில் பொது ஐன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழர்களிற்கு ஆபத்தான பல விடயங்கள் அறிவிக்கபட்டிருப்பதுடன் தமிழர்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட கோத்தபய ராஜபக்ஷ ஐனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருக்கிறார். இது மீண்டும் முள்ளிவாய்கால் நோக்கி தமிழ்மக்களை அழைத்து செல்லும் என்ற அச்ச நிலையை அவர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

  அவர் தமிழர் பகுதியை சிங்கள பௌத்த மயமாக்குகின்ற மிகவேகமான செயற்பாட்டை மேற்கொண்டு தமிழர்களை தனித்துவமாக வாழமுடியாத வண்ணம் செயற்பாடுகளை அரங்கேற்றிய ஒரு ஆபத்தானவர். அவர் எந்த சூழலிலும் வெற்றி பெற்று விடக்கூடாது. 

  தமிழர்களிற்கு ஆபத்தானவர் போலவே இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிற்கும் விரும்படாத ஒருவராகவும் அவர் இருக்கிறார். காரணம் இவர்களது காலப்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எற்படும் விதமாக சீனாவின் ஆதிக்கம் மிகபெரியளவில் இலங்கையில் அதிகரித்திருந்தது. 

  எனவே அவர் வெற்றி பெற்றால் தமிழர்களிற்கு மாத்திரமல்லாமல் இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவருக்கு எதிராக இந்தியா உட்பட அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் செயற்படும். இது தமிழர்களிற்கு ஒரு வாய்பான சூழல். 

  எனவே இந்த நிலையில் தமிழ் தரப்பு கண்ணை மூடிகொண்டு முட்டாள்தனமாக இருந்து தொடர்ந்தும் ஒரு அழிவுப்பாதைக்கு செல்லாமல் பூகோள அரசியலை புரிந்து கொண்டு காத்திரமான முடிவினை எடுத்து  செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

  ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் இந்தியாவிற்கும், மேற்கு நாடுகளிற்கும் சார்ந்த ஒருவராகவே இருப்பார் அதனாலே கூட்டமைப்பும் அவரை ஆதரிக்க போவதாக அறிவித்திருக்கிறது. அப்படிபட்ட ஒருவரை வெற்றி பெறவைப்பதற்கு தமிழர்களின் வாக்குகள் நிச்சயம் தேவை. 

  தமிழர்களின் வாக்குகள் மூலமாக தான் அவரை வெல்லவைக்க முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளபடுகின்றபோது, இந்தியாவிடம் தமிழ்மக்கள் ஒரு காத்திரமான பேரம் பேசலை முன்வைக்க வேண்டும், குறிப்பாக  இந்தியா தமிழ்தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நிபந்தனையாக முன் வைக்கவேண்டும். எனவே பேரம் பேசுவதற்கு இது ஒரு பொன்னான சந்தர்ப்பம் என மேலும் தெரிவித்தார்.

   

  https://www.virakesari.lk/article/62883

   

 15. ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள்

  காணாமல்போனோர் விடயத்திற்கு இன்றுவரை தீர்வு கிட்டாத நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல்போன உறவின் தாயார் கந்தசாமி தவமலர்  தெரிவித்தார்.

  Image result for à®à®¾à®£à®¾à®®à®²à®¾à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®°à®¿à®©à¯Â  à®à®±à®µà¯à®à®³à¯

  நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல்கள்'என்னும்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் வடக்கு கிழக்கு மாவட்டப் பெண்கள் சமாசங்கள் இணைந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளினைப் பகிர்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை  திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள  லட்சுமி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. 

  இதன்போது  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

  இங்கே இது தொடர்பில் குறித்த பெண்மணி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,

  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனையானது மிகப் பெரியது.  நான் கணவரை இழந்து இரு பிள்ளைகளை இழந்து தனிமையில் வாடுகின்றேன். 3 பேர் காணாமல் போன நிலையில் நான் தனிமையில்  உள்ளேன். எனது உறவுகளையும் அதேபோன்ற உறவுகளையும் தேடும் ஆயிரக் கணக்கானோரில் நானும் ஒருவர்.

  காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும். எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட  தெரியாமல் இன்று நிலமை உள்ளது. அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது.

  ஓ.எம்.பி வேண்டும் உடனடியாக அந்த அலுவலகம் இங்கே உடனடியாக அமைக்கப்பட வேண்டும். என்றார்.

   

  https://www.virakesari.lk/article/62882

 16. ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி

  வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

  ananthsangari.JPG

  யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

  அவர் மேலும் தெரிவித்ததாவது,

  வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச் சட்டு வைக்கப்பட்டது.

  அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

  வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமனரத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன.

  இவ்வற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.என்றார்.

  https://www.virakesari.lk/article/62881

 17. JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..

  August 18, 2019

   

  மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

   

  http://globaltamilnews.net/2019/129148/

   

 18. தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? நிலாந்தன்

  August 18, 2019

   

  சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்………
  ‘சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி!
  சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.ஒரு சின்னக் கணக்கு.
  பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096.
  வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676.
  வெற்றிபெறத் தேவையானது-6,396,839.
  தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393.
  அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914.
  இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839.
  ஆக சிங்கள மக்களின் வாக்குகளில் 70.74 வீத வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரால் சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட இல்லாமல் ஜனாதிபதி ஆகிவிடமுடியும்.இந்தத் தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!’

  குகநாதனின் கணக்கில் ஒரு தர்க்கம் உண்டு. 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை இலங்கை வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டு எதிரணி தமிழ் பகுதிகளில்தான் பெருமளவு வெற்றி பெற்றது. அதேசமயம் சிங்களப் பகுதிகளில் அக்கூட்டு எதிரணி கொழும்பு, கண்டி,கம்பகா திகாமடுல்ல ஆகிய பகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மஹிந்த 47.58 வீத வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சிறிசேன 51.28 விகிதத்தை பெற்றார். அதாவது மஹிந்த 3.07 விகித வாக்குகளால் தோல்வியுற்றார்.

  இது ஓர் அரும்பொட்டு வெற்றி இந்த வெற்றிக்கு பெருமளவு காரணம் தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகளே
  அதே ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தின் அலை ஒன்று வீசியது. எனினும் நல்லாட்சிக்கான ரணில்-மைத்திரி கூட்டுக்கு கிடைத்தது 45.66 விகிதமாகும.; மகிந்த ராஜபக்ஷ அணிக்கு கிடைத்தது 42.38 விகிதமாகும். அதாவது 3.28 விகித வேறுபாட்டில் ரணில் மைத்திரி அணி வெற்றி பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் ஒரு வெற்றி அலை வீசிய போதிலும் மகிந்த அணிக்கும் ரணில் மைத்திரி அணிக்கும் இடையிலான வாக்கு விகித வித்தியாசம் எனப்படுவது 3.28 விகிதம்தான்.

  அதன் பின் நிகழ்ந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் ராஜபக்ச அணி பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றியைப் கண்டு அஞ்சியே ரணல் – மைத்திரி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைத்தது. முடிவில் கடந்த ஆண்டு தேர்தல்களை நடாத்தியது. அத்தேர்தலில் ராஜபக்ச அணி தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் பொது ஜன பெரமுன என்ற கட்சியாக போட்டியிட்டு பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றிதான் மைத்திரியைக் குழப்பியது. அதன் விளைவே கடந்த ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குழப்பம் ஆகும்.

  பொது ஜன பெரமுன எனப்படுவது யுத்த வெற்றியின் குழந்தை. யுத்த வெற்றியை நிறுவன மயப்படுத்தி அதைக் கட்டிறுக்கமான ஒரு கட்சியாக மகிந்த கட்டி எழுப்பியுள்ளார். மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டி எழுப்பியதில் ராஜபக்ஷக்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனினும் சந்திரிக்காவின் கண்டிச் சிங்கள மேட்டுக்குடி வம்சத்துக்கு நிகராக நின்று பிடிப்பதில் ராஜபக்ஷக்களுக்கு அடிப்படையான சவால்கள் முன்பு இருந்தன. ஆனால் யுத்த வெற்றியின் மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த மேட்டுக்குடி கண்டிச் சிங்கள வம்சங்கள் எதனாலும் முடியாத ஒன்றை ராஜபக்ச சாதித்துக் காட்டினார.;

  வெல்ல முடியாது ஒர் அமைப்பு என்று நம்பப்பட்ட புலிகள் இயக்கத்தை அவர் தோற்கடித்தார். அதன்மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த கண்டிச் சிங்கள மேட்டுக்குடிகளுக்கு எதிராகத் தன்னை தோற்கடிக்கப்பட முடியாத ஒருவராக ஸ்தாபித்தார.; பண்டாரநாயக்காக்களின் கட்சியாகக் காணப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனது முதன்மையை ஸ்தாபிப்பதை விடவும் தனது யுத்த வெற்றிகளையே ஒரு கட்சியாகக் கட்டியெழுப்புவது என்று அவர் முடிவெடுத்தார். அப்படி முடிவெடுத்துக் கட்டி எழுப்பப்பட்டதே தாமரை மொட்டுக் கட்சியான பொது ஜன பெரமுன. இதன் மூலம் ராஜபக்சக்கள் யுத்த வெற்றியைத் தமது குடும்பச் சொத்தாக்கி அதை நிறுவனமயப்படுத்தியும் விட்டார்கள்.

  ‘கடந்த உளூராட்சி மன்றத் தேர்தலில் இக்கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றது. ஆசியாவிலேயே சீனக் கொம்மியூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய கட்சி அதுவென்றும் டிஜிட்டல் தளங்களிலில் அது பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது என்றும்’ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

  மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 இல் இருந்து மஹிந்ததான் சிங்கள-பௌத்த பெருந் தேசிய வாதத்தின் கேள்விக்கிடமற்ற தலைவராக காணப்படுகிறார.; 2015இல் அவரைத் தோற்கடித்தது தமிழ் முஸ்லிம் வாக்குகள்தான். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை பொறுத்தவரை மஹிந்த தான் அதன்; தலைவர்.

  2015இல்; மைத்திரி கட்சியை இரண்டாக உடைத்தார். அதுதான் மஹிந்தவின் தோல்விக்கான வழிகளைத் திறந்து விட்டது .ஆனால் 2015இலிருந்து தொடர்ச்சியாக நடந்த எல்லா தேர்தல்களிலும் மஹிந்ததான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இதயத்தில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தி தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது. இப்பொழுது மகிந்த யுத்த வெற்றி வாதத்தை நன்கு நிறுவன மயப்படுத்தி அதை ஒரு கட்சியாகக் கட்டி எழுப்பி விட்டார். பிளவுண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெருந்துண்டு மகிந்தவிடம் சென்று விட்டது. அக் கட்சியின் சிதைவின் மீது பொது ஜன பெரமுன கட்டியெழுப்பப்படுகிறது. பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக யுத்த வெற்றி நாயகர்களில் ஒருவரான கோத்தபாயவை அறிவிக்கப்பட்ருக்கிறார்.

  யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009 க்குப் பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் ஆகப் பிந்திய வளர்ச்சிதான். எனவே யுத்த வெற்றி வாதத்தை ஒரு கட்சியாகக் கட்டியெழுப்பியதன் மூலம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாக்;குகளை அப்படியே கொத்தாக அள்ளியெடுக்க ராஜபக்ச சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள். இவ்வாறு ராஜபக்ச சகோதரர்கள் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து தமது வியூகத்தை வகுக்கும் வகுத்திருக்கும் ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்யப் போகிறார்?
  அவர் இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பை காலம் தாழ்த்துவதன் மூலம் சஜித்தின் ஆதரவாளர்களை எப்படிச் சமாளிக்கலாம் என்று அவர் சிந்திக்கிறார். கட்சித் தலைமையை அவர் வேறு யாரிடமாவது கையளிக்கத்; தயாரா?

  அவருடைய தரப்பு வேட்பாளர் யாராகவும் இருக்கலாம் ஆனால் அந்த வேட்பாளர் மூவின வாக்குகளை திரட்டும் ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு மூவின வாக்குகளைத் திரட்டப்போகும் வேட்பாளருக்குப் பின்வரும் சவால்கள் உண்டு.
  முதலாவது சவால் – ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் ஒரு பகுதி சிங்களப் பொதுக் கூட்டு உளவியல் எனப்படுவது உறுதியான ஒரு தலைமைத்துவத்தை கோரத் தொடங்கிவிட்டது. அப்படி ஓர் உறுதியான தலைமை யுத்த வெற்றி வாதிகள் மத்தியில்தான் உண்டு. லிபரல் ஜனநாயக முகமூடி அணிந்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகள் மத்தியில் உண்டா?

  இரண்டாவது சவால் – ஒரு புதிய மாற்றத்தை அல்லது பெருந்திருப்பத்தை ஏற்படுத்தத் தேவையான ஒரு புத்துணர்ச்சி மிக்க கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப வல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் எவரும் அந்த அணியிடம் இல்லை. 2015இல் மைத்திரிபால சிறிசேன அப்படி ஒரு வேட்பாளர் போல தோன்றினார். அப்பொழுதும் கூட அவருடைய அமைச்சின் கீழ் வேலை செய்த சில தமிழ் மருத்துவர்கள் சொன்னார்கள்…….அவர் காட்டும் லிபரல் ஜனநாயக முகம் ஒரு முகமூடி என்று. தென்னிலங்கையில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரைகள் யாவும் சிங்களத்தில் அமைந்திருந்த பொழுது அதைச் சுட்டிக்காட்டிய தமிழ் மருத்துவர்களிடம் நீங்கள் சிங்களம் பழகுங்கள் என்று அவர் கூறியதாகத் தகவல் உண்டு.

  இப்பொழுது மைத்திரியின் முகமூடி கிழிந்து விட்டது. இனி அவரைப் போல யாரைக் கொண்டு வந்தாலும் அது முகமூடியா நிஜமா என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பார்கள். முஸ்லிம் மக்களும் சந்திப்பார்கள.; ஏன் மைத்திரி வாக்களித்த சிங்கள மக்களும் சந்திப்பார்கள்.அதாவது மாற்றத்தை குறித்து புத்துணர்ச்சி மிக்க எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் நாட்டில் இப்பொழுது இல்லை. இது ரணில் அணிக்குப் பாதகமான அம்சம்.

  மூன்றாவது சவால்;. 2015இல் பிளக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இப்பொழுது பெருமளவுக்கு மீள இணைக்கப்பட்டு அதில் பெரும்பகுதி மகிந்தவோடு நிற்கிறது. சிறு துண்டு மைத்திரியோடு நிற்கிறது.

  நாலாவது சவால்;. தமிழ் மக்களின் கூட்டுக் உளவியல் 2015ல் காணப்பட்டதை போல இப்பொழுது இல்லை. கூட்டமைப்பின் மீதும் ரணிலின் மீதும் அதிருப்தியும் கோபமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. கம்பெரலிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிகள் மைதானங்கள் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாவற்றையும் மேவிக்கொண்டு நாவற்குழியில் கட்டப்பட்டு வரும் விகாரை தெரிகிறது, கன்னியா தெரிகிறது, பழைய செம்மலை தெரிகிறது. எனவே தமிழ் மக்களின் கூட்டுக் உளவியலை ராஜபக்சவுக்கு எதிராக திரட்டுவது என்ற ஓர் உத்தியில் மட்டுமே கூட்டமைப்பும் ரணிலும் தொங்க வேண்டி இருக்கும்.

  ஐந்தாவது சவால் – முஸ்லிம் வாக்குகள். ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் முஸ்லிம் சமூகம் பெருமளவிற்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. வெல்ல முடியாத பேரினவாதத்தோடு மோதுவதை விடவும் அதோடு சுதாகரித்துக் கொள்ளலாம் என்று ஒரு தரப்பு முஸ்லிம்கள் யோசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஆற்றிய உரையில் வெற்றி பெறும் தரப்பு எது என்று பார்த்துத் தாம் முடிவெடுக்க போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் 2015இல் மாற்றத்துக்காக விழுந்த வாக்குகளில் முஸ்லிம்களின் வாக்குகளும் கணிசமானவை. முஸ்லிம் கூட்டுக் உளவியல் 2015இல் காணப்பட்டதை போல இப்பொழுதும் காணப்படுகிறதா?

  ஆறாவது சவால் – 2015இல் ஆட்சி மாற்றத்திற்காக ஒரு பகுதி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் லிபரல் ஜனநாயக வாதிகளும் பல்கலைக்கழக புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும்; படைப்பாளிகளும் மத குருக்களும் தென்னிலங்கையில் ஒரு கூட்டாகத் திரண்டு வேலை செய்தார்கள.; ஆனால் இம்முறை அப்படி மாற்றத்தை குறித்த ஓர் அலையை உருவாக்குவது யார்? அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் மீதும் வாக்காளர்கள் மீதும் தார்மீகத் தலையீட்டை மேற்கொள்ளவல்ல சோபித தேரர் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது சோபித தேரர் இல்லை. இருப்பதெல்லாம் ஞானசார தேரர்களும் ரத்தின தேரர்களும்தான.;இதுவோர் எதிர் மறை வளர்ச்சி.

  எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ராஜபக்ச அணியின் யுத்த வெற்றி வாதத்திற்கு எதிராக நின்று பிடிக்கக்கூடிய ஒரு வேட்பாளருக்குப் பாதகமான அம்சங்களே அதிகம் உண்டு. இப்பாதகமான அம்சங்களை எதிர்கொண்டு மூவினத்து வாக்குகளைக் கொத்தாகத் திரட்டக் கூடிய ஒரு வேட்பாளர் யார்?  #தனிச்சிங்கள  #வாக்குகள் #மூவின #சிறுபான்மையினர்

   

  http://globaltamilnews.net/2019/129090/

 19. யாழ் பல்கலை மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு முடிவு

  August 18, 2019
  Jaffna-university1.jpg?resize=600%2C450

  வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தமது புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறித்துள்ளனர்.

  இந்த விடயம் தொடர்பான நேற்று (சனிக்கிழமை) மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  “ஒரு இனத்தினுடைய வளர்ச்சியின் முதுகெலும்பாக விளங்குவது கல்வி ஒன்றேயாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்பும் எழுந்து நிற்க நாம் இன்று கல்வியைத் தவிர வேறு எதனையும் நம்பியிருக்க முடியாது.

  எமது பல்கலைக்கு மாணவர்களை உரிய காலத்தில் உள்ளீர்த்தல், வெளியேற்றல், அவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்துதல், சிறந்த பௌதீக சூழலில் கல்வி கற்றல் போன்ற வழமையான செயற்பாட்டை செய்வதென்பதே இன்று கடினமாகிவிட்ட நிலையில் நாம் வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதென்பது சற்றுக் கேலியாகவே உள்ளது.

  இராமநாதன் நுண்கலைத்துறையும் சித்த மருத்துவ அலகும் இன்றுவரை வளர்ச்சியடையாது அடுத்த கட்டத்திற்கு தரமுயர்த்தப்படாமலேயே உள்ளது.

  எமது பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை எமது அரசியல் தலைவர்களோ கல்வியாளர்களோ அறிந்திருப்பார்களெனில் அவை இன்று அவ்வாறு தரமுயர்த்தப்படாமல் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்காது.

  எமது பல்கலைக்கழகத்தில் பல கட்டடங்கள் உரிய காலத்தில் கட்டி முடிக்கப்படாமல் தற்காலிக கட்டடங்களில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

  இவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் மாணவர்கள் மட்டும் அல்லர். இவற்றை சிந்திப்பதற்காகவே பல்கலையில் பேரவை, மூதவை என்பன இருக்கின்றது. அத்துடன் இவற்றை சுட்டிக்காட்டவேண்டியது எமது அரசியல் தலைவர்களதும் ஊடகங்களினதும் கடமையாகும்.

  நாம் முக்கியமான சில பிரச்சனைகளுக்காக மட்டுமே வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தோம். எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இம்முறையை கையாண்டால் எமது கல்வியே பாதிக்கும்.

  அந்தவகையில் எமது முக்கிய பிரச்சினையாகக் கருதிய சில பிரச்சினைகளை தீர்க்கக்கோரி கடந்த 15 ஆம் திகதி முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் எமது பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியால் நாமறிய இவை குறித்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இந்த நடவடிக்கைகள் மீது பூரண திருப்தியற்ற போதிலும் தகுதி வாய்ந்த அதிகாரியின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் நாளை முதல் வழமைபோல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

  இனிமேலாவது தமிழினத்திற்கு எமது பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தையும் அது உருவாக்கப்பட்ட உன்னத நோக்கத்தையும் அறிந்தவர்களாக பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தமிழ் அரசியல் தலமைகள் விளங்குமாறு உரிமையுடன் பொறுப்புள்ள மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  #யாழ் #பல்கலை  #மாணவர்களின் #வகுப்பு #புறக்கணிப்பு #முடிவு

   

  http://globaltamilnews.net/2019/129108/

 20. 19 hours ago, goshan_che said:

  ரதி - நானும் கிருபனும் இங்கே கடவுள் நம்பிக்கை இல்லை என எழுதி விட்டு, வீட்டுக்கு போய் காவடியே ஆடினாலும் நீங்கள் என்ன கண்டுபிடிக்கவா போரியள். நாமே வலிய வந்து சொல்கிறோம் இதில் வெக்கம் என்ன வெக்கம்?

  அதுதானே! எல்லாத்தையும் கறுப்பு-வெள்ளையாகவே பார்த்துப் பழகிவிட்டது. இடையில் சாம்பலும் இருக்கலாம். சாம்பலிலும் 50 வகை  வர்ணங்களும் இருக்கலாம்!

 21. மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்

  ko.sa_.jpg

  [கோ சாரங்கபாணி]

  [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] 

  தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது.

  மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்தது. ஒப்பந்தக் கூலிகளாக ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கப்பல் கப்பலாக தமிழர்கள் சென்றார்கள். இலங்கையின் மலையக பகுதிகளுக்கும், மொரிஷியஸ் தீவிற்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும், மலேசிய, சிங்கபூர் நாடுகளுக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றார்கள். பஞ்சம் வாட்டியெடுக்கும் வாழ்விலிருந்து தப்பித்து ஒரு வளமான வாழ்வின் மீதான கற்பனையின் பாற்பட்டு சாரை சாரையாக புறப்பட்டுச் சென்றார்கள். இலக்கடைவதற்கு முன்னரே கணிசமானவர்கள் இறந்தும் போனார்கள்.

  சென்றவர்கள் வெகு அரிதாகவே திரும்பினார்கள். அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும் புதிய நிலத்தில் வேரூன்றி வாழத் துவங்கினார்கள். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியின் மலைக்காடு நாவல் இப்படியாக கிராமங்களில் இருந்து ஆசை வார்த்தையை நம்பி புறப்பட்டு கப்பலேறுவதையும் அதன் பின் சந்திக்கும் அவமானங்களையும் நுட்பமாக சொல்கிறது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இடம் பெயர்வு நிகழ்ந்தது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் ஆற்றல் மிகுந்த சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய பேரரசின் ராணுவத்தின் கீழ் பணியாற்றி அடையாளமற்று மரணித்தும் போனார்கள். இலக்கிய ரீதியாக எந்த சுவடும் அற்று போனவர்கள் இவர்களே.

  இதற்கு பின்பான புலம் பெயர்வு அலை என்பது 80 களின் மத்தியில் ஈழப் பிரச்சனையின் காரணமாக நிகழ்ந்தது. இந்தியா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடாவிற்கு ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக சென்று சேர்ந்தார்கள். இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இன்று கணிசமான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏறத்தாழ இந்த அலை இருபது ஆண்டுகள் நீடித்தது. இவைத் தவிர்த்து புதுச்சேரி ஃபிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் இரு நாட்டு குடியுரிமை மற்றும் சலுகைகள் வழியாக அங்கும் பண்பாட்டு தொடர்ச்சி உள்ளது. ஏறத்தாழ ஈழ புலம் பெயர்வின் காலகட்டத்தில், குறிப்பாக தாராளமயமாக்களுக்குப் பின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பல மத்திய வர்க்கத் தமிழ் குடும்பங்களை வளைகுடாவிற்கும், அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் குடி பெயரச்செய்தது இன்றைய தேதியில் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

  இது ஒரு பொது வரலாற்றுச் சித்திரம். இலக்கியப் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டால் காலனிய  அலை, ஈழ அலை, தகவல் தொழில்நுட்ப அலை என மூன்றாக வரையறை செய்யலாம். மூன்றிற்கும் நுட்பமான வேறுபாடுகளும் தொடர்ச்சியும் உண்டு.

  மலையகத் தமிழரான தெளிவத்தை ஜோசப் காட்டும் நிலக் காட்சிகளும் சித்தரிப்புகளும் மலேசிய எழுத்தாளரான சீ. முத்துசாமியின் படைப்புலகிற்கு வெகு அண்மையாகவே உள்ளன. தேச எல்லைகளுக்கு அப்பால் ஆங்கிலேய ஆளுகை, கங்காணிகள், தோட்டப்புறம் என அவை ஒன்றைப் போலவே தோற்றம் கொள்கின்றன. பிராந்திய ரீதியாக பிரிக்கலாம் என்றால் சிங்கப்பூர்-மலேசிய- மலையக இலக்கியம், ஐரோப்பா- அமெரிக்க – ஆஸ்திரேலிய இலக்கியம் என இரண்டாக வகுக்கலாம். இதிலும் சிங்கப்பூர் இலக்கியத்தின் துவக்கக் காலத்தை மலேசிய-மலையக இலக்கியத்துடன் சேர்த்துக்கொண்டாலும் தற்கால சிங்கப்பூர் இலக்கியத்தை அமெரிக்க- ஐரோப்பா வகையிலேயே கொணர முடியும் எனத் தோன்றுகிறது.

  சிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா எழுதிய ஒரு கட்டுரையில் சிங்கப்பூர் இலக்கியத்தை தினையற்ற திணை என குறிக்கிறார். திணை சார்ந்து இயங்கி வந்த தமிழ் இலக்கியம் திணையற்ற சூழலை முதன்முறையாக எதிர்கொண்டது சிங்கப்பூரில் என சொல்லலாம் என்பது அவருடைய வாதம். ஒருவகையில் அது நவீன நகர்மயமான சூழல். இந்த திணையற்ற திணை எனும் வரையறை எல்லா பேரு நகரங்களுக்கும், நவீன நகர்புற வசிப்பிடங்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அல்லது பெருநகரம் என்பதே ஒரு புதிய திணை. உலகெங்கும் பெருநகர வாழ்வு ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கிறது.

  தமிழின் எல்லா வடிவிலான சிறுகதைகளுக்கும் முன்னோடியாக இருக்கும் பேறு பெற்ற (சற்றே சலிப்பும் பொறாமையும் கொள்ளத்தக்க) புதுமைப் பித்தனே அவருடைய ‘துன்பக் கேணி’ கதை வழியாக புலம் பெயர் கதை களத்திற்கும் முன்னோடி ஆகிறார். நெல்லை வாசவன்பட்டியில் பஞ்சம். ஆனால் கப்பலில் அரிசி சென்று கொண்டிருக்கிறது. என நுட்பமாக சொல்கிறார். பண்ணையாரை பகைத்துக்கொள்ளும் வெள்ளையன் கைதாகிச் சென்றதும். அவனுடைய மனைவி மருதியும் அவளுடைய அன்னையும் இலங்கை தேயிலைத் தோட்டத்திற்குச் செல்கிறார்கள். நோய்மை அடைந்து சீரழிந்து வாழ்கிறாள். மருதியின் மகள் வெள்ளச்சியின் வாழ்க்கை வரை நீள்கிறது கதை. கொடுமைக்கார கங்காணிகள், சீரழிக்கும் மேலாளர்கள், சர்வ வல்லமை வாய்ந்த ஆங்கிலேய துரைமார்கள், இவற்றுள் உழன்று அழியும் கூலிப் பெண்கள் என இன்று வரை எழுதப்படும் தோட்டப்புற கதைகளின் பெரும்பாலான இயல்புகள் புதுமைப் பித்தனின் கதையிலேயே துலங்கி வருகிறது. ம. நவீன் தொகுத்த ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ ஒரு முக்கியமான நேர்காணல் தொகுப்பு. சிங்கை- மலேசிய இலக்கிய/ சமூக ஆளுமைகளை நேர்காணல் செய்து தொகுத்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள மா. ஜானகிராமனின் நேர்காணலில் வரும் ஒரு வரி என்னை வெகுவாக அலைகழித்தது- “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வது சாவதற்காக அல்ல. இந்த நாட்டுக்கு வந்து மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு நாட்டை உருவாக்க வந்து உயிர்ப்பலி கொடுத்திருக்கிறார்கள்.” விண்ணை முட்டும் கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் உப்பாக தமிழர்கள் இருக்கிறார்கள்.

  நாவல்களில் ப. சிங்காரம் இரண்டாம் உலகப் போர் பின்புலத்தில் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ ஒரு சாதனையாக தமிழ் வாசகர்களால் வாசிக்கப்படுகிறது. அதற்கு சற்று முந்தைய காலத்தில் வெளிவந்த எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ சிங்காரத்தின் நாவல் அளவிற்கே முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப்போர், பிரித்தானிய வீரராக ஜப்பானின் போர் கைதியாக சிலகாலம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் கதை நாயகர் சிலகாலம் வாழ்கிறார்.

  si-muthu.jpg

  புலம் பெயர் இலக்கியத்தின் படிநிலைகள் யாவை?

  பெரும் கனவுகளுடன் பொருளீட்டி தன் நிலத்திற்கு திரும்பிவிட முடியும் எனும் நம்பிக்கையிலேயே கப்பல் ஏறினார்கள். ஆனால் ஒருபோதும் அது நிகழப் போவதில்லை என்பதை உணர்ந்ததும் தன் நிலம் மற்றும் மனிதர்களைப் பற்றிய நினைவேக்கமே படைப்பின் முதல் உந்து விசையாக இருக்கிறது. கண்காணா தொலைவில் இருக்கும் தன் நிலத்தின் நினைவுகளை கவிதைகளாகவும் கதைகளாகவும் ஆக்கினார்கள். லதா சிங்கப்பூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே குஜிலி பாடல்களாக ஊர் நினைவுகள் புழங்கியதை அடையாளம் காட்டுகிறார். சிங்கை- மலேசிய – மலையக இலக்கியத்தின் ஆரம்ப கதைகள் பெரும்பாலும் இத்தகையத் தன்மை உடையவையே.

  தற்கால கதைகள் அவர்கள் வளர்ந்த ரப்பர் தோட்டத்தின் நினைவுகளை சொல்பவையாக இருக்கின்றன. சிங்கப்பூர்-மலேசிய பயணத்தின் போது இன்றும் அங்கு மு.வ, நா. பார்த்தசாரதி மற்றும் அகிலனுக்கு இருக்கும் வாசிப்பு செல்வாக்கு அளப்பறியாதது என உணர முடிந்தது. தமிழ் நவீன இலக்கிய கர்த்தாக்களிடம் தங்கள் ஆதர்சம் யார் எனக் கேட்டால் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரையே பெரும்பான்மையினர் அடையாளப்படுத்துவர். மு.வ., நா.பா., அகிலன் போன்றோரை தங்கள் ஆதர்சம் என நவீன எழுத்தாளர் கருதுவதில்லை. அரிதாக அப்படி எவரும் சொன்னாலும்கூட அவர்களின் இலக்கிய தகுதி குறித்து சில ஐயங்கள் எழுப்பப்படும். வெகு மக்கள் எழுத்தாளர்கள் என்றே அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். மலேசிய இலக்கியவாதிகள் தங்கள் ஆதர்சமாக மு.வ., நா.பா., அகிலனைச் சொல்கிறார்கள். அதிலிருந்து மேலெழும்பி, விலகி சிலருக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாகிறார். வேறு சிலர் வண்ணதாசனையும் வண்ணநிலவனையும் வந்தடைகிறார்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த பி. கிருஷ்ணன் மட்டுமே புதுமைப்பித்தனை தன் ஆதர்சமாக சொல்கிறார். ‘புதுமை தாசன்’ எனும் பெயரில் இயங்கினார்.

  1950 களில் கோ. சாரங்கபாணியால் உருவான இலக்கிய அலை என்பது திராவிட கருத்தியல் அடிப்படையில் உருவானது. ஒருவேளை புதுமைப்பித்தன் இன்னும் பலருக்கு ஆதர்சமாக இருந்திருந்தால் நவீன சிங்கப்பூர் மலேசிய இலக்கியப் போக்கு வேறு திசையில் காத்திரமாக வளர்ந்திருக்குமோ எனும் எண்ணம் ஏற்பட்டது. தன் நிலத்திலிருந்து வேறொரு நிலத்தில் வேர் பிடித்து வாழ முனைந்து அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறைக்கு மு.வவும், நாபாவும், அகிலனும் ஆசுவாசம் அளித்திருக்கக்கூடும். புதுமைப்பித்தன் ஒருபோதும் அந்த ஆசுவாசத்தை அளித்திருக்க மாட்டார். அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வில் எதையும் கடந்துவிட முடியாது. நவீன இலக்கியம் கூரையற்ற வெட்டவெளியில் நிற்கும் மனிதனின் காலடி மண்ணையும் சரிப்பது. இந்த புரிதல்கள் லட்சியவாத எழுத்துக்களின் மீதான மதிப்பீடுகளை என்னளவில் மறுபரிசீலனை செய்யத் தூண்டின.  ஆனால் சிக்கலே வாழ்க்கை தோட்டங்களை விட்டு வெளி நகர்ந்த பின்னரும் கூட பழையவற்றையே இறுகப் பற்றிக்கொள்வதுதான்.

  புலம் பெயர் எழுத்தின் அடுத்தக் கட்டம் தான் வாழுமிடத்தை தன் சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் அதற்கு அவசியமானவை என்பதை உணரும் நிலையில் நிகழ்கிறது. சைனா டவுன் மாரியம்மனும், பத்துமலை முருகனும், அங்காளம்மனும், இசக்கியும், முனியாண்டிகளும் அப்படித்தான் வந்து சேர்கிறார்கள். அடையாளமிழப்பிற்கு அஞ்சி பண்பாட்டை இறுகப் பற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த பின்னும் சாதி அடையாளம் இறுக்கமாக பின் தொடர்கிறது. பின்னர் ஒரு நுனி தன் பண்பாட்டு தனி அடையாளத்தை துறந்து புதிய வசிப்பிடத்தின் அன்னிய பண்பாட்டில் தன்னை முற்றிலுமாக கரைத்துக்கொள்ள விழைகிறது. இந்த நிலையில்தான் பிற பண்பாடுகளை உற்று நோக்கத் துவங்குகிறார்கள். அதீத சுயமிழப்பிற்குப் பின் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பண்பாட்டு மீட்பை பேசுகிறார்கள்..

  எனது வாசிப்பு எல்லைக்குட்பட்ட சிங்கப்பூர்-மலேசிய எழுத்துக்களில் அரிதாகவே பிற இனத்தைப் பற்றிய வலுவான சித்திரம் வருகிறது. அனோஜனின் ‘பச்சை நரம்பு’ தொகுதியை முன்வைத்து சிங்களர்கள் பற்றிய பதிவு குறித்தும் இதே பார்வையை முன்வைத்தேன். சீனர்கள், மலாய் காரர்கள், சிங்களவர்கள் என பிறரைப் பற்றிய நுண்மையான சித்திரம் மிகக் குறைவே. மீறி இருப்பவை பெரும்பாலும் அவர்களைப் பற்றிய வழமையான பொதுபுத்தி சித்திரங்களே. தமிழ் சமூகம் ஒரு மூடிய சமூகமா என்றொரு கேள்வி எழுகிறது. தன்னை மட்டுமே உற்று நோக்குவது தான் அதன் இயல்பா. யுவால் நோவா ஹராரி ஐரோப்பியர்களுக்கும் ஆசியர்களுக்கும் (குறிப்பாக இந்தியர்கள் சீனர்கள்) இடையிலான மத்திய காலகட்டத்து வேறுபாடை பற்றி சொல்லும்போது ஐரோப்பியர்கள் அடிப்படையிலேயே புதியவற்றை தேடித்தேடி செலபவ்ர்களாக அனுபவங்களுக்காக ஏங்குபவர்களாக இருந்தார்கள் என்கிறார். அவர்கள் உலகை வெல்ல காரணமும் கூட. இந்தியாவில் துறவு ஒரு உச்ச விழுமியமாக சமூகத்தால் போற்றப்படுவதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்றும் இந்திய வரலாற்றை அதன் பண்பாட்டி அறிய நாம் ஐரோப்பிய கண்களையே சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. ஒப்பந்தக் கூலி வாழ்வை பற்றிய கதைகள் பொதுவாக ஒரேவிதமானவை. அந்நிய நிலத்தில் அழிந்து போகும் மக்கட் கூட்டத்தின் நினைவுகளை தக்க வைக்க வேண்டும் எனும் குறிக்கோளை முதன்மையாக கொண்டவை. துன்பங்களின் ஊடாக இருட்டுக்கோ அல்லது வெளிச்ச கீற்றுக்கோ படைப்பாளியின் அகச் சான்றைப் பொருத்து பயணிக்கக் கூடியவை. பெரும்பாலும் மானுடத்துவ இயல்பு கொண்ட கதைகள் என வரையறை செய்யலாம். தற்கால சிங்கப்பூர் மலேசிய கதைகள் மெதுவாக தோட்டங்களில் இருந்து மாறிவரும் வாழ்வு சூழலை இக்கட்டுக்களை சித்தரிக்கின்றன. நவீன் மலேசிய இலக்கியத்தில் அவ்வகையில் முக்கியமான ஆளுமை. பாலமுருகன், அ. பாண்டியன், யுவராஜன் என சி.முத்துசாமி- சை.பீர்மொஹமதுக்கு அடுத்த வரிசை ஒன்று உருவாகி வந்திருக்கிறது. வல்லினம் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க முனைந்து வருகிறது. சிங்கப்பூரிலும் லதா, சித்துராஜ் பொன்ராஜ், எம்.கே.குமார், அழகுநிலா போன்றோர் புதிய களங்களில் எழுதி வருகிறார்கள்.

  இந்த அமர்விற்கு சீ. முத்துசாமி மற்றும் நவீனின் கதைகளை பரிசீலனைக்கு எடுக்கவில்லை. காரணம் அவர்கள் நமக்கு ஓரளவு பரிச்சயமானவர்கள். இந்தியாவிற்கு வெளியே வாழும் அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து எழுதப்படும் கட்டுரையும் அல்ல. ஒரு பறவை கோணத்தில் சில அவதானிப்புகளை வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். நவீன் மலேசியாவின் சிறந்த பந்து கதைகள் என எனக்கு சிலவற்றை அனுப்பி இருந்தார். அவற்றில் மூன்று கதைகள் மட்டுமே தோட்டப் பின்புலம் இல்லாத கதைகள். நவீன், பாலமுருகன், மஹாத்மன் கதைகள் அவ்வகையில் முக்கியமானவை. பாலமுருகனின் பேபிக் குட்டி குழந்தையின் மரணமும் அதற்கு சாட்சியாக வாழும் சபிக்கப்பட்ட முதியோரின் கதையையும் இணையாகச் சொல்கிறது. அகத்தில் மெல்லிய பதட்டம் குடிகொள்கிறது. இந்த கதை எந்த பின்புலத்திலும் எழுதப்படலாம். புலம் பெயர் இலக்கியங்களில் நமக்கு இப்படியான ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அது எந்த நிலத்தை பேசுகிறதோ அதன் பண்பாட்டுக் கூறுகளை கொண்டு வந்து சேர்த்தே ஆக வேண்டும். ஒருவகையில் பண்பாட்டை பண்டமாக காணும் ஒரு நிலை என எண்ணத் தோன்றுகிறது. ‘எல்லா கதைகளிலும் பண்பாட்டுக் கூறுகளை தேடுவதும், அக்கதைகளை மதிப்பிட அதை ஒரு காரணியாக பயன்படுத்துவதும் தேவையில்லை. மஹாத்மனின் சிறுகதைகள் பெரும்பாலும் அகத்தில் நிகழ்பவை. புற விவரணைகள் சொற்பம். நீண்ட தன்னுரையாடல் வகைக் கதைகளை தேர்ந்த மொழியில் எழுதுகிறார். அவருடைய ‘ஒ லாவே’ எந்த பண்பாட்டுப் பின்புலத்திலும் நல்ல கதையாகவே மதிப்பிடப்படும். மலேசிய வாழ் எழுத்தாளர்களின் கதைகள் மற்றும் மலேசிய கதைகளுக்கும் மெல்லிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது.

  விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட “சீனலட்சுமியின் வரிசை” ஒரு சிங்கப்பூர் கதை என சொல்லலாம். சிங்கப்பூரின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை படைப்பூக்கத்துடன் கதையில் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பான் ஆக்கிரமிப்பு காலத்தில் தனித்து சுற்றி அலையும் சீனக் குழந்தைகளை பல இந்தியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்பது ஒரு கட்டுரைத் தகவலாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆனால் அப்படியில்லாமல் விரிவாக சீன லட்சுமியின் வழி அந்த பாத்திரத்தின் இயல்புகள் நிறுவப் படுகின்றன. சிங்கப்பூர்வாசிகளுக்கு தங்கள் கட்டுக்கோப்பின் மீதிருக்கும் பெருமிதம் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. வரிசையை கடைப்பிடித்தல் என்பது கட்டுக்கோப்பை பறைசாற்றும் மிக முக்கியமான சடங்கு. சீனராக பிறந்து, தமிழர்களால் வளர்க்கப்பட்ட ஒருவர் தன்னை முழு சிங்கப்பூர்வாசியாக உணர்கிறார். ஒருவகையில் இந்த கட்டுகோப்பு, வரிசை என்பது கீழ்படிதலும் கூட. தேர்தலுக்கு வாக்களிக்க வரிசையில் நிற்பதும் அதில் எதிர்கட்சிக்கு வாக்கு அளிக்கும் சிலரும் இருக்கக்கூடும் என்பதை அவள் உணர்வதும் கதையின் போக்கில் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான தகவல். அவள் மனம் அதை ஒரு மீறலாக, வரிசைக் குலைவாக காண்கிறது. தனக்கு பாதுகாப்பு தரும் மற்றொரு வரிசையில் தன்னை புதைத்துக் கொள்கிறாள். ஒரு பண்பாட்டு புலத்தை நுட்பமாக படைப்பூக்கத்துடன் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. லதாவின் மற்றொரு கதை ‘அலிசா’ சிங்கப்பூருக்கு அருகே இருக்கும் உபின் தீவை களமாகக் கொண்டது. சிங்கப்பூருடன் தொடர்பற்ற பண்பாட்டுப் பரப்பு. அங்கிருந்து கருங்கற்களை வெட்டி சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்கிறார்கள். நகர் மயமான ஒழுங்கு நிறைந்த சிங்கப்பூரும் உபின் தீவும் இணையாக சித்தரிக்கப் படுகிறது. அதன் வழியாக அந்த தீவே ஒரு பாத்திரமாக கதையை வடிவமைக்கிறது. இங்கே மற்றொரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு கதை அதன் ஆவணத் தன்மையால் முக்கியத்துவம் அடையாது. அது ஒரு கூடுதல் தளம் மட்டுமே. ஒரு நிகழ்வையோ, சடங்கையோ வேறு எவரும் ஆவணப்படுத்தாதல் கதையில் விரிவாக ஆவணப்படுத்தினால் அது நல்ல கதை என்றொரு எண்ணம் நமக்கு உண்டு. வேறு எவரும் சொல்லாத நிகழ்வைக் கொண்டு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதே கதைக்கான இடத்தை அளிக்கிறது. ‘லங்கா தகனம்’  நடன அடவுகளின் துல்லிய ஆவணத் தன்மையால் முக்கியத்துவம் பெறவில்லை. ஒரு கலைஞனின் எழுச்சியை சொல்வதாலேயே முக்கியமானதாக கருதப்படுகிறது.

  A_Muttulingam_Amuttu_Muthulingam_DSC_029

  ஈழ இலக்கியம் தனக்கென தனித்த வரலாறும் பண்பாடும் கொண்டது. மொத்த ஈழ இலக்கியத்தையும் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறது என்பதானாலேயே புலம் பெயர் இலக்கியம் என வரையறை செய்யக் கூடாது. மலையகத் தமிழ் இலக்கியத்தை மட்டுமே புலம் பெயர் இலக்கியம் என அடையாளப்படுத்த இயலும்.  இன்றைய ஈழ இலக்கியம் என்பது அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, கவிஞர் சேரன், தேவகாந்தன், கலாமோகன், நோயல் நடேசன், பொ. கருணாகரமூர்த்தி துவங்கி தற்போது எழுதிக் கொண்டிருக்கும் குணா கவியழகன், சயந்தன், அனோஜன் வரை நீளும் ஈழ இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஈழத்திற்கு வெளியே வாழ்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழம் தமிழக நில வரம்பிற்குள் இல்லை என்றாலும் தமிழ் இலக்கியத்தின் உயிர்ப்பான நீட்சியே. ஆனாலும் தமிழக இலக்கிய பரப்பில் வட்டார இலக்கியங்களுள் ஒன்றாக ஈழ இலக்கியம் எக்காலத்திலும் கருதப்பட்டது இல்லை. குணா கவியழகன் போர் என்பது ஒரு புதிய திணை என முன்வைக்கிறார். ஒரு நிலத்தில் போர் நிகழும்போது, அதுவும் நெடுங்கால போர் நிகழும்போது அதன் இயல்புகள் திரிந்து புதிய வடிவத்தை அடைகின்றன உலகெங்கிலும் போர் திணையில் சில பொதுத்தன்மைகளை உள்ளூர் பண்பாட்டிற்கு அப்பால் காணமுடியும் என்பது ஒரு சுவாரசியமான பார்வை. அனோஜனின் மன நிழல், நானூறு ரியால் போன்ற கதைகளை போர் திணை எனும் பின்புலத்தில் வாசிக்கும்போதே அதன் முக்கியத்துவம் புரிகிறது. ஈழத்தில் இருந்து எழுதும் கதைகளுக்கும் (அதாவது ஈழத் தமிழில் கதை சொல்வதற்கும்) ஈழக் கதைக்கும் வேறுபாடுண்டு. ஈழக் கதையில் போர் இன்றியமையாத பாத்திரம், ஏதோ ஒரு புள்ளியில் இழப்பின் வலியை அதன் நினைவை மீட்டும். இவ்விரண்டை செய்வதாலேயே அது நல்ல கதையாக ஆகிவிட முடியாது. பண்பாடு பண்டமாக்கப்படுவது போலவே மெல்லுணர்வும் பண்டமாக்கப்படுகிறது. அனோஜன் தன் நேர்காணலில் இப்படிச் சொல்கிறார் “கழிவிரக்கத்தை உண்டு செய்யும் ஆக்கங்கள் ஒரு பக்கம் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் அவை ஒருவகை பண்டப் பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது.” அரங்கிற்கு எடுத்துக்கொண்டிருக்கப்படும் ஈழ எழுத்தாளர் யதார்த்தனின் கதை “வொண்டர் கோன்” போருக்கு பின்பான காலகட்டத்தை சித்தரிக்கிறது. யதார்த்தன் தொன்னூறுகளில் பிறந்தவர். போரின் இறுதி பகுதியும் பால்யத்தின் இறுதி பகுதியும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கும். தற்போது ஜாப்னாவில் வசிக்ககிறார். முகாம்களில் ‘சதோசோ’ (sodexo) பூட் சிட்டி(food city) இருந்ததும் அங்கு வகை வகையாக மக்கள் வாங்கி உண்டார்கள் என்பதும் நாம் ஈழம் குறித்து கொண்டுள்ள பொதுச் சித்திரத்தை குலைப்பவை. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு தேவாலயங்களில் பயங்கர கூட்டம் கூடியது என ஸ்வெட்லான அலேக்சிவிச் எழுதியது நினைவுக்கு வந்தது. ஷோபா முதல் அனோஜன் வரை பலரும் லட்சியவாதத்தின் மீதான அயர்ச்சியை எழுதியுள்ளார்கள். நிம்மதியான வாழ்விற்கும் விடுதலைக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் மனிதர்கள் நிம்மதியான வாழ்வையே தேர்வார்கள். வாழ்வின் இனிமை அனோஜனின் கதையில் பேரீச்சை என்றால் யதார்த்தன் அதே இனிமையை வொண்டர் கோன் எனும் ஐஸ் கிரிமீல் காண்கிறார். கதை நாயகன் பதினேழு வயது ஜீவநேசன் (அதாவது உயிர்களை நேசிப்பவன்). ஜீவநேசன் வொண்டர் கோன் ஐஸ்க்ரீம்களை திருடியதற்காக பிடிபடுகிறான். அவனை புவனாவும் அவருடைய மகள் மயூரதியும் மீட்கிறார்கள். கதை இறுதியில் புவனாவின் வளத்திற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஜீவநேசனின் வொண்டர் கோன் திருட்டு அவர்களுக்கு முன் சிறுத்து ஒன்றுமில்லாமல் ஆகிறது. உருகி வழியும் வொண்டர் கோனை மூவரும் உண்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது. உணர்வு சுரண்டல் ஏதுமின்றி வாழ்விச்சையின் இயல்புகளை யதார்த்தன் இக்கதையில் கையாண்டுள்ளார். புவனாவிற்கு கணவர் சார்ந்த தோற்ற மயக்கம் ஆகட்டும், அல்லது அவர்கள் இறந்தவர்களின் மீதிருந்து எடுத்த தாலிக்கொடிகள் ஆகட்டும் வாழ்விச்சையின் வெளிப்பாடே. ஒருவகையில் ஜீவநேசனின் வொண்டர் கோனும் அதுவே.

  உலகளாவிய கதைகள் என்பது அமெரிக்காவில் நிகழும் குடும்பச் சண்டை என்பதல்ல. அந்த கதை அமெரிக்காவில் ஏன் நிகழ வேண்டும்? அந்த களம் மேலதிகமாக என்னவிதமான பண்பாட்டு துலக்கத்தை அளிக்கிறது? பண்பாட்டு அழுத்தம், பண்பாட்டு கலப்பு, பண்பாட்டு ஏற்பு ஆகிய நிலைகளை கடந்து ஒருவகையில் கரம் விரித்து உலகை தழுவும் உள்ளார்ந்த பண்பாட்டு மதிப்பினால் எழுவது இவ்வகைக் கதைகள் என சொல்லலாம். தமிழில் நாஞ்சில் நாடனையும் அ.முத்துலிங்கத்தையும் உலகப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் என சொல்லலாம். இந்தியா முழுக்க அலைந்து திரிந்த அனுபவம் நாஞ்சிலுக்கு உண்டு. கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற அவருடைய பாத்திரங்களை மறக்க முடியாது. முத்துலிங்கம் ஐ.நா பதவியில் உலகம் முழுக்க வசிக்கும் பேறுபெற்றவர். அந்த அனுபவங்கள் படைப்புலகில் வெளிப்பட்டு மிளிர்கிறது. சில கதைகளில் அவை சுவாரசியமான தகவல் என்ற அளவில் நின்றுவிடுவதும் உண்டு. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்ககாரி’ தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என சொல்வேன். கதை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு படிக்க சென்றவளின் பண்பாட்டு சிக்கல்களை பேச துவங்குகிறது. உச்சரிப்பு, மொழி பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகள் அவளை தனித்து காட்டினாலும் நுட்பமான அறிவால் அதை புரிந்துகொண்டு பழகி கொள்கிறாள். பலரும் அவளை நெருங்க முயன்று விலகுகிறார்கள். முதலாமவன் ;மூன்றாம் நாள் அவளிடம் அறையில் தங்க முடியுமா என கேட்கிறான், இரண்டாமவன் அன்றே கேட்கிறான். மூன்றாமவன் வாயில் முத்தம் கொடுக்கிறான், நன்றி கூறல் விழாவிற்கு இல்லத்திற்கு அழைத்து சென்று வீட்டினரை அறிமுகம் செய்கிறான். விருந்துண்டு உறங்கி கொண்டிருக்கும்போது நடுசாமத்தில் அவன் வந்து நிற்கிறான். துரத்தி விடுகிறாள். அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. இலங்கையில் அவளுடைய சூட்டிகையிம் காரணமாக ‘அமெரிக்ககாரி’ என அழைக்கப்பட்டவள். அவளும் அப்படித்தான் எண்ணினாள், கனவு கண்டாள். ஆனால் அவள் அமெரிக்காவிலும் ‘இலங்கைக்காரியாகவே’ இருந்தாள்.

  QrIndfo0z8XybVZRWlbeA_pdbfjyl4pyRKSQoKzNWWINweUgqlVGU_UpGUBZRmxnpjtlTH98my2ALby85jP5mpcFh3UDOjS4cXctlK4dsI8jsHndyoJV7NjkoyR5ujDJqGlEnXi8O5aUJ5yrNud2MoBfofaIh6yIlt96T0ZlDrakwhNAGbrHDFdCi9bD_oYA29CKfbsUNGzkxtz_fWR5HeipZOpdNv_jonfCeQ_uJ8vaRyRBeBektU3D7I8tDhdBBV-1YvQBmuvmfWVe0M1yr-N5_Avv1mTyTIfXOZSmHHf-ji5D_88lEZmz9nJhPt-7Nfu5HlqmR-03IAsnFWt8OFNUqsS_fS4pid-UnS8vn962wDkeWYMi4YugqxLJw0qZz3wmImlP37lV1FsNVltYfMIFBtNReuG5U83-nmeT82SoSGM7SHTgs_9pV2RRse2H1yDrKqkX7S9E6xhcp6QNzyiKhxOTc36_pV-nbVgu6q4GbvWP_1tFw441n27UMf45K08VA0C0tliunqiL9Y9g_vPllq3XBqY3RMQ_htwRx756Z4yGh9cYzeNHBg_CwsriBt7aSQOhKrI3M7Q4Ggh_9LSlvLj3fY21BichfMlm-ZRHGV1q=w995-h659-no

  கனகலதா

  கலாச்சார விழாவில் அவள் பாடி அபிநயம் பிடித்த  ‘என்ன தவம் செய்தனை’ பாடலை வெகுவாக ரசித்த வியட்நாமியகாரன் அவளை நெருங்குகிறான். பலசந்திப்புகளுக்கு பின்னரும் அவன் அவளை அறைக்கு அழைக்கவில்லை. அவனோடு இயல்பாக இருக்க அவளால் முடிந்தது. மெல்ல உறவு வளர்ந்து உறுதியாகி மணமுடித்து கொள்கிறார்கள். நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவனுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு இருக்கிறது. வீடு வாங்க சேர்த்த பணத்தை கொண்டு அவனுடைய ஆப்ரிக்க ஆசிரியரின் விந்தணுவை தானமாக பெற்று ஐ.வி.எப் முறையில் கருதரித்து பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். // ‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல்  இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.// என்று இக்கதை முடிகிறது.

  yatha.jpg

  [யதார்த்தன்]

  அவன் அவளிடம்  அவசியமென்றால் என்னைவிட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுகொள் என்கிறான். அவள் மறுக்கிறாள். அப்போது கிளிண்டன் – மோனிகா உறவு அமெரிக்காவில் செய்தியானதை பற்றிய ஒரு வரி வருகிறது. அவன் அவளிடம். ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் சொல்லாமல் விட்டபதில் ‘ஆசியன் ஆசியனை மணப்பாள்’ என்பதே. விளையாட்டாக சொல்லப்படும் ஒரு வரியாக இக்கதைக்குள் இது வருகிறது “அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது.  ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். “ ஏனோ அவனை மணக்க அவளுக்கு இது தான் காரணம் என தோன்றியது.

  நவயுகத்தின் அடையாள சிக்கல்களின் மிக முக்கியமான இழைகளை தொட்டு செல்கிறது. அமெரிக்காவின் வசதிகளை அனுபவித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கையில் துயரப்படும் தன் அன்னையை பற்றி எண்ணுகிறாள். நாற்பது டாலர் சப்பாத்து வாங்கியதை எண்ணி அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. ஒருவகையில் அப்படி அந்த பணம் செலவானதை எண்ணி வருந்தும் வரை அவள் இலங்கைக்காரி தான். நவீன காலகட்டத்தின் மிக முக்கியமான சிக்கல்களில் ஒன்று பண்பாட்டு உராய்வினால் நேரும் ‘அடையாள சிக்கல்’. தேச பண்பாடுகள் அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம், கவிதையை பற்றி பேசிகொண்டிருக்கையில் நாஞ்சில் ஒருமுறை “இந்த கோயில்பட்டி எழுத்தாளர்களே இப்படித்தான்..விசும்பு, மௌனம்னு” என்றார். இந்திய இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முகம் இருக்கும், நூறு மைல் கூட தொலைவில்லாத நாஞ்சில் நிலத்துக்கும் கரிசல் மண்ணுக்குமே பண்பாட்டு உராய்வு இருக்கிறது. பதினான்கு கிலோமீட்டர் அப்பால் உள்ள தேவகோட்டை நகரத்தார்களுடன் காரைக்குடி நகரத்தார்கள் மண உறவு கொள்ள யோசிப்பார்கள். நவீன மனிதனின் பொருளியல் சுதந்திரமும் தொழில்நுட்பமும் கல்வியும் அவனுக்கு வாய்ப்புக்களை அளிக்கின்றன. நவீன மனிதனின் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்பது எவ்விதம் தன் அடையாளத்தை தாண்டி செல்வது? எப்படி வேறோர் அடையாளத்தில் தன்னை புகுத்தி கொள்வது?  ‘அமெரிக்ககாரி’ என இலங்கையில் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் அமெரிக்காவில் ‘இலங்கைகாரியாகவே’ இருக்கிறாள். அமெரிக்ககாரி கதையில் வரும் இவ்வரி தான் இக்கதையின் மையம் என எண்ணுகிறேன். //ஒருநாள் கேட்டாள், ‘ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில்  ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்?’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். //

  முந்தைய ரெய்த் உரை ஒன்றில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றினார். அப்பையா ஆப்ரிக்க தந்தைக்கும் ஆங்கிலேயே அன்னைக்கும் பிறந்த அமெரிக்ககாரர். ‘அடையாள சிக்கல்கள்’ ‘பண்பாட்டு உராய்வுகள்’ ஆகியவைகளை திறந்த மனதோடு அணுக முடியும் என்பதே அவருடைய வாதம். ஒற்றை இறுதியான அடையாளம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும்  ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். (எனினும் இன்றைய அமெரிக்காவை அப்படிச் சொல்ல முடியாது. வேண்டுமானால் கானடாவை சொல்லலாம்) முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவும் இது தான். அவள் புக முடியாத அடையாளத்துக்குள் இயல்பாக வந்தமர்கிறாள் அவளுடைய மகள் ‘அமெரிக்ககாரியாக’. இப்போது யோசிக்கையில் இந்த கதை என்றல்ல, முத்துலிங்கத்தின் மொத்த படைப்புலகை தொகுத்து காணும் போது, தமிழின் முதல் (இப்பொழுதைக்கு ஒரே) காஸ்மோபோலிடன் எழுத்தாளர் என இவரையே கூற முடியும் என தோன்றுகிறது.

  இந்த வரிசைய்ல் வைக்கத்தக்க மற்றுமொரு முக்கியமான கதை ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’. பண்பாடு என்பது மொழியில் வெளிப்படுவது. இரு மொழிகளுக்கும் இடையிலான ஊடாட்டம் பண்பாடுகளின் ஊடுபாவும் கூட. அருள், கருணை, கற்பு, நன்றி போன்றவற்றை ஆங்கிலத்தில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் வழியாக இந்த பண்பாட்டு உராய்வுகளை, விழுமிய உராய்வுகளை கதை தொட்டுக் காட்டுகிறது. தற்காலத்தில் அருண் நரசிம்மன் ‘அமெரிக்க தேசி’ எனும் நாவல் இந்த களத்தில் வெளிவந்துள்ள படைப்பு. ஜப்பானிய ஆண்களுக்கு இருக்கும் திருமணச் சிக்கல் குறித்து தமிழில் சித்துராஜ் பொன்ராஜின் ‘கடல்’ பேசுகிறது. சிவா கிருஷ்ணமூர்த்தி இங்கிலாந்தில் வசிக்கிறார். அவருடைய ‘வெளிச்சமும் வெயிலும்’ தொகுப்பு முழுவதுமே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வாழ்வை அடிப்படையாக கொண்டவை. ‘மறவோம்’ எனும் அவருடைய கதை இரண்டாம் உலகப்போரில் இறந்து போன வீரர்களை நினைவுகூரும் கதை. நமக்கு எல்லோரும் வெள்ளையர்கள். ஆனால் அவர்களுக்குள் நிலவும் இன பாகுபாட்டை, மேட்டிமையை நாம் அறிவதில்லை. ‘வெளிச்சமும் வெயிலும்’ ஸ்கண்டிநேவியர்கள் ஆஸ்திரேலியர்கள் மீது காட்டும் இன முன்முடிவை கோடிட்டுக் காட்டுகிறது.  கார்த்திக் பாலசுப்பிரமணியனினின் ‘இரு கோப்பைகள்’ ஆஸ்திரேலியாவில் நிகழ்கிறது. தமிழக சிறுநகர பின்புலம் கொண்டவன் பார்வையில் மேற்கத்திய சமூகத்தின் குடும்பம் மற்றும் தனிமை போன்றவை பரீசிலிக்கப் படுகிறது. அவருடைய மற்றொரு கதையான ‘லிண்டா தாமஸ்’ ஒரு அமெரிக்க ஐடி நிறுவன ஊழியரைப் பற்றிய கதை. இங்கும் நன்றி விசுவாசம் போன்ற இந்திய மதிப்பீடுகள் மேற்கத்திய தொழில் நேர்த்தியுடன் உராய்கிறது. எஸ். சுரேஷின் கதைகள் அதிகமும் செகந்திராபாத்தில் நிகழ்பவை. அவருடைய ‘கூபோ’ ஜப்பானில் நிகழ்வது. ஆனால் அத்தகைய ஒரு காதல் கதை ஜப்பானில் ஏன் நிகழ வேண்டும்? அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். ராம் செந்திலின் ‘தானிவாத்தாரி’ ஜப்பானிய பின்புலத்தில் நிகழும் காதல் கதை தான். ஆனால் அங்கே கதைக்களம் நியாயம் செய்யப்படுகிறது.

  தமிழகத்திற்கு வெளியே வளமான புனைவாக்கம் நிகழ்ந்து வருகிறது. புதிய பண்பாடுகளுடனான் அறிமுகம் வழியாகவே தமிழகத்தின் படைப்புலகம் தம் எல்லைகளை மீற முடியும் எனும் வலுவான நம்பிக்கை எனக்கு உள்ளது. இறுதியாக, ஆசிஷ் நந்தி ஓர் உரையாடலில் தேர்ந்த படைப்பாளியின் மிக முக்கியமான கூரு எதுவென தான் ஆராய்ந்து அறிந்து கொண்டதை சொல்கிறார். “the capacity to host and celebrate the ‘otherness’ of other” என்கிறார். “பிறராதல்’ என இதை கூறலாம். படைப்பாளி ‘பிறராகி’ அவனுடையவற்றை தமதாக்கிக் கொள்கிறான். இருமை அழிந்து புதிய களங்களில் தமிழ் புனைவுலகு விரியும்.

  நன்றி

  தரவுகள்

  எல்லைகள் கடந்த எழுத்து – அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்- சொல்வனம்- நரோபா

  மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன் – 21.10.18 ஆற்றிய உரை

  திணையற்ற தமிழரின் முதல் குரல் – கனகலதா

  யதார்த்தன் – ‘வொண்டர் கோன்’ மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்

  கனக லதா- சீனலட்சுமியின் வரிசை, நகர் மனம் தொகுப்பு

   

   

  https://www.jeyamohan.in/125066#.XVelKC3TVR4

 22. பிள்ளையான் கட்டிய கிணற்றை காணவில்லை! தேடி அலையும் மக்கள்!

  _21190_1565961284_A0AEE48A-2BE6-46E5-90E7-791C9C80E350.jpeg

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாக அரசியல் கைதிகளில் அரைவாசிப் பேருக்கு மேற்பட்டவர்களை விடுவித்து விட்டோம் என குண்டைப் போட்டுள்ளார் தமிழ் அரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம்.

  முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் காலத்தில் கிணறுகள் கட்டப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தபோதும், அங்கு சென்ற பார்த்தபோது கிணற்றை காணவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

  கம்பெரலிய திட்டத்தின் ஊடாக வந்தாறுமூலை விஸ்ணு ஆலய புனரமைப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதிஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்படும் வேலைப்பாடுகளைப் பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்றிருந்த வேளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாகவே முழுமையாக இல்லாது விட்டாலும் அதிகளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று அரசியற் கைதிகளிலும் இருந்தவர்களில் அரைவாசிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக பொறுப்புக் கூறல் என்ற விடயத்தினை ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்குக் கொண்டு வந்து அங்கு இலங்கையையும் முன்நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் இணங்க வைத்துப் பொறுப்புக் கூறல் விடயத்திற்கு இணை அனுசரணை வழங்கும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட்டது. சமஷ்டி ஆட்சி என்பதற்கு அடிப்படையான அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்குரிய செயற்பாடுகள் குறிப்பிட்டளவு தூரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எக்காலமும் இல்லாத விதத்தில் இந்த குறிப்பிட்ட காலத்தில் வடக்கு கிழக்கிற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அபிவிருத்தி தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களால் பல்வேறு நிதிமூலங்கள் கொண்டுவரப்பட்டு அதனூடாகப் பல்வேறு செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  எனவே இவ்வாறான விடயங்கள் பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எமது அன்பர்கள் முயலுக்கு மூன்று கால் என்ற விதத்திலே வெவ்வேறு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

  இதே போன்று கடந்த கிழக்கு மாகாண ஆட்சியின் போது முஸ்லீம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்கள் முண்டுகொடுத்தார்கள் என்று சொல்கின்றார்கள். கிழக்கு மாகாணசபை வெறுமனே பதினெட்டு உறுப்பினர்களை மாத்திரம் கொண்டதாக இருக்கும் என்றால் நிச்சயமாக பதினொரு உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியினைப் பெற்றிருக்கும் அதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையில் முப்பத்தேழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆட்சியமைப்பதற்கு பத்தொன்பது உறுப்பினர்கள் தேவை. நாங்கள் பதினொரு உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் வருவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு முதலமைச்சுப் பதவியைக் கோரினார்கள். அது முடியாத விடயம். ஏனெனில் கிழக்கு மாகாணம் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்குரியது அதில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு விடயம். இருப்பினும் அவர்கள் வந்தாலும் மேலும் மூன்று உறுப்பினர்கள் தேவை ஆட்சியமைப்பதற்கு.

  அதேவேளை ஹாபிஸ் நசீர் அவர்கள் ஏற்கனவே முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவர். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கையெழுத்து வைத்து உருவாக்கிய முதலமைச்சர் அல்ல. கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் படி இரண்டரை வருடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் மிகுதி இரண்டரை ஆண்டுகள் முஸ்லீம் காங்கிரசும் முதலமைச்சர் பதவியை வகிப்பதாகவே நியமிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையிலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதல் இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன், ஜெயம், உதுமாலெப்பை, சுபைர் போன்ற பலரும் கையெழுத்து வைத்து உருவாக்கியவர் தான் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள்.

  அவ்வாறு முதலமைச்சர் உருவாக்கப்பட்டுள்ள போது, எங்கள் பக்கம் பத்தொன்பது பேரைச் சேர்த்துக் கொள்ள முடியாத யாதார்த்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அந்த முதலமைச்சருடன் சேர்ந்து ஆட்சியில் நாங்களும் இணைத்துக் கொள்ளப்பட்டோம். இதுவே உண்மை நிலை. இந்த உண்மை நிலையைப் பலமுறை நாங்கள் தெரிவித்தும் வந்துள்ளோம். ஆனால் அவை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை.

  கடந்த மாகாணசபையில் இறுதி இரண்டரை வருடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்வி, விவசாயம் என்ற இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றது. கல்வி அமைச்சைப் பொருத்தவரையில் கடந்த கால ஆட்சியாளர்களினால் முரணான விதத்தில் செயற்படுத்தப்பட்ட விடயங்களை மாற்றுகின்ற அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் விவசாய அமைச்சு முழுமூச்சுடன் செயற்பட்டு அதில் நாங்கள் வெற்றியும் கண்டோம்.

  அண்மையில் ஒன்பது மாகாணங்களையும் ஒப்பீட்டு நடாத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வின் போது செயற்திறன், வினைத்திறன், நிதியினை அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பயன்படுத்துதல், சிக்கனமாகப் பயன்படுத்துதல், வெளிப்படுதன்மை ஆகிய ஐந்து விடயங்களையும் ஒப்பிட்டு ஒன்பது மாகாணங்களுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியிலே 2017ம் ஆண்டுக்காக கிழக்கு மாகாண விவசாய அமைச்சு தங்க விருதினைப் பெற்றது. அதே நேரத்திலே 2016ம் ஆண்டுக்காக வெள்ளி விருதினையும் பெற்றிருந்தது. இக்கால கட்டத்திலே இவ்விவசாய அமைச்சினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழிநடத்தியது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது என்பதை நமது அன்பர்கள் சொல்லத் தேவையில்லை, அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஆனால் இதனை இலங்கையில் உள்ள மிக உயர்ந்த மதிப்பீட்டாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய கருமங்களை மிகவும் கருத்துக் கருமானங்களோடு செய்திருக்கின்றது.

  எமக்குப் பெரிய தேவைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு நொடியிலே நாங்கள் செய்துவிட முடியாது. ஒப்பீட்டளவில் பார்த்தால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்தளவில் இரண்டரை ஆண்டுகளிலே ஒருவர் கூட விரல் நீட்ட முடியாத அளிவிற்கு நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

  எங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் விவசாய அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரின் காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரத்திலே பதினைந்து கிணறுகள் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எமது ஆட்சியின் போது அப்பிரதேச மக்களின் வேண்டுகோளின்படி கிணறுகள் கட்டுவதற்கு கோவைகளைப் பார்க்கும் போது கோவைகளின் அடிப்படையில் அங்கு கிணறு கட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் தங்கவேலாயுதபுரத்திற்குச் சென்ற பார்ததால் அங்கு வெறும் குழி மாத்திரமே இருக்கின்றது. வெறுமனே குழியை மாத்திரம் வைத்துக் கொண்டு கிணறுகள் கட்டப்பட்டதாக சொல்லிக் கொண்டிருந்தது தான் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆட்சியில் இருந்த விவசாய அமைச்சின் கைங்கரியம்.

  ஆனால் நாங்கள் அவ்வாறு வெறுமனே கோவையில் மாத்திரம் கணக்கு காட்டுபவர்கள் அல்ல. 147 மில்லியன் ரூபாயில் கரடியனாற்றில் விவசாயப் பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்திருக்கின்றோம். அதே போன்று மண்டூர் பண்ணை, தும்பங்கேணி ஆட்டுப் பண்ணை, இது போன்ற பல்வேறு செயற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சொல்ல வேண்டிய நேரத்தில் துல்லியமாக வெளிப்படுத்துவோம். இவை வெறும் உதாரணங்களே. ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று செய்யவில்லை என்று கூறுபவர்களுக்காக இவை.

  எனவே தேசிய மட்டத்திலே அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்கள், மாகாண மட்டத்திலே மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி விடயங்கள் இவற்றையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்தது. அதே நேரத்தில் இறுகி வைரமாக இருக்கின்ற பேரினவாதத்திடம் இருந்து எமது உரிமையப் பெற்றெடுக்கின்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பக்குவமாக உலக நாடுகளை அனுசரித்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற தெரிவித்தார்.

   

  http://www.battinaatham.net/description.php?art=21190

 23. அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி

  _21197_1566018299_24ECE0E8-6C8E-4A04-ABA6-A1AA749F8282.jpeg

  அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட       நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி பதிவாகிய உள்ளமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

  கடந்த பல மாதங்களாக வரட்சியான காலநிலை நிலவி வந்த வேளையில்  அம்பாறை மாவட்டத்தில் பரவலாக  வெள்ளிக்கிழமை (16) மாலை முதல்  திடீரென பெய்து வருகின்றது.

  இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில்  மாலை பெய்த பலத்த மழையின்  காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வரட்சி நிலவியால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.அம்பாறை மாவட்டத்தில் வரட்சி நீடித்ததால்  விவசாயச் செய்கை  மேட்டு நிலப் பயிர்ச் செய்கை போன்றன வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நீர் நிலைகள் வற்றி வரண்டு காணப்பட்டன. குடிநீருக்காக சில பிரதேச மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர்த் தேவையை பூர்த்திச் செய்தனர்.

  கால் நடைகள் நீரின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தன. போதிய மழை வீழ்ச்சி மற்றும் நீர் நிலைகளில் போதிய நீர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயச் செய்கையை இம்மாவட்ட மக்கள் கைவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

   

  http://www.battinaatham.net/description.php?art=21197

 24. வவுனியாவில் கடும் மழை ; வெள்ளத்தில் முழ்கியது பஸ் தரிப்பிடம்

  வவுனியாவில் இன்று (17.08) காலை முதல்  பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பஸ்  தரிப்பிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

  IMG-20190817-WA0002.jpg

  நீர் வழிந்தோடி செல்லும் வடிகானில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய் பைப்புக்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய் பைப்பினுள் குப்பைகள் அடைந்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடி செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பஸ் தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது.

  IMG-20190817-WA0006.jpg

  அத்துடன் கூமாங்குளம் , நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  IMG-20190817-WA0008.jpg

  வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வரட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மனமகிழ்வடைந்துள்ளனர்.

   

  https://www.virakesari.lk/article/62831

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.