Jump to content

Innumoruvan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    790
  • Joined

  • Last visited

  • Days Won

    14

Innumoruvan last won the day on October 4 2015

Innumoruvan had the most liked content!

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Recent Profile Visitors

3868 profile views

Innumoruvan's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

648

Reputation

  1. குறிப்பு: யாழ் களம் ஒரு சமூகம்சார் களம் என்ற வகையில் இப்பதிவு இங்கு இடப்படக்கூடியது என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றேன். எனினும், இப்பதிவு யாழ் கள வரையறைகளை எவ்வகையிலேனும் மீறுவதாய் உணரப்படின் தாராளமாக நீக்கி விடவும். இவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாய் இருந்துவந்திருந்த போதும், நிழலியின் ‘மழைத்துளிகள்’ தலைப்பில் இடப்பட்டுள்ள லண்டன் கள்ளக் காதலர்கள் துணுக்கினை வாசித்தபோது தான் இதை எழுதிவிடுவது என்று முடிவெடுத்தேன். எமது சமூகத்தில் ஒன்றுகூடல்கள், கடை வீதிகள், கோவிற் தேர் முட்டிகள், மதகுகள், பள்ளிக்கூட மதில்கள், பொது இடங்கள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாலியல் “முறைகேடுகள்” பிரபல்யமான கதைப்பொருளாகக் கனகாலம் இருந்து வருகின்றன. ஊரில் தெருவோரத்துச் சுவர்களில் பல துணுக்குகள் அவ்வவ்போது கரிக்கட்டியால் அறிவிக்கப்பட்டிருந்ததை பலர் பார்த்திருப்பர். அதுபோன்றே பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பொதுவாகப் பாலியல் விடயங்கள் பேசாப்பொhருளாகிக் கிடக்கும் நமது கட்டுப்பட்டிச் சமூக வழமையே இவ்வாறான செய்திகளின் பிரபல்யத்திற்குக் காரணம் எனச் சிலர் கூறினும், இக்கதைகள் எமது சமூகத்திற்கு மட்டுமான பிரத்தியேக குணவியல்பல்ல. தாராளவாதத்தின் சுவரொட்டிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஹொலிவுட் தொட்டு அனைத்து மக்களிற்கும் பாலியல் கதைகள் பலான கதைகளாகச் சுவாரசியம் கொடுக்கவே செய்கின்றன. இந்தச் சுவாரசியத்தின் அடிப்படை என்ன என்பதனை எனக்குத் தெரிந்தவரை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம். மனிதனும் விலங்கு இராச்சியத்தின் ஒரு அம்சமே என்றவகையி;ல் மனிதனின் பாலியல் இச்சையின் அடிப்படையும் இனப்பெருக்கம் சாhந்;து தான் அமைகிறது. எனினும், சொத்துச் சேர்ப்பு முதற்கொண்டு மனிதன் அடிப்படை விலங்கு நிலையில் இருந்து பல வகையில் விலத்தி வந்து விட்டான். குழந்தை உருவாகி விடாது இருப்பதற்கும், உருவான கருவைக் கலைத்து விடுவதற்கும் ஆன ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்தபடிதான் உள்ளன. அவ்வகையில் மனிதனின் இன்றைய பாலியல் இச்சையினை இன்பெருக்கத்தோடு மட்டும் முடிந்து வைத்துவிட முடியவில்லை. அடுத்து, உடல்சார் இன்னபமாகப் பார்க்கையில், அங்கும் பல முரண்பாடுகள் தென்படுகின்றன. அதாவது, தனது கற்பனை வளம் கொண்டு கருவிகள் ஏதும் இன்றி புராதனம் தொட்டு இன்றுவரை தொடரும் கரபோகத்தையும் தாண்டி, மனிதனின் உடல் சார் தேவைகளைத் திருப்திப் படுத்தும் தொழில் நுட்பங்களும் ஏற்கனவே நிறைந்து கிடப்பது மட்டும் இன்றித் தொடர்ந்தும் வந்தபடி உள்ளன. தான் தானாகத் தன்னை மட்டும் கொண்டு தனது பாலியல் இச்சைகளைத் திருப்திப் படுத்திக் கொள்ளலாம், இல்லாது போனால் அதிகபட்சம் பாலியல் தொழிலாழரை நாடலாம் என்ற நிலையுள்ளது. இருந்தும் கள்ளக்காதல்கள் தொடர்கின்றன. இதற்கும் மேலால், மணமானவர்கள், பாலியல் இச்சையைத் தம்வீட்டிலே தம்மவரோடு தீர்க்கப்படக்கூடிய நிலையிலும் பிறமனை நாடுகிறார்கள். இந்தத்தேடல் எதனால் எழுகிறது? மறுக்கப்பட்ட அப்பிள் பழம் என்ற பைபிள் கதை போல, ஒரு வேளை இதில் ஒரு கிக் இருக்கலாம். அதாவது செய்யக் கூடாது என்பதனைச் செய்வதால் ஏற்படும் ஒருவகை உணர்வு மேலீடு. அதாவது கள்ள மாங்காய் உண்பது போன்று அல்லது வீதிக்கட்டுப்பாட்டை மீறி வாகனம் செலுத்துவது போன்று அல்லது திருட்டுத் தம் அடிப்பது போன்று என்று புரிய முனையலாம். ஆனால், மறுக்கப்பட்டதைச் செய்வதற்கு ஒரு அபராதம் இருக்கும். கத்தரிக்காய் வாங்குவதற்குக் கூட நாட்டில் உள்ள பத்திரிகை எல்லாம் விளம்பரம் தேடி பெற்றோல் கணக்கெல்லாம் பாத்துப் போய் ஐந்து சதம் சேமிக்கும் நம்மவர்களுக்குள் சொத்தில் பாதியை இழக்க நேரிடக் கூடிய, தம் குழந்தைகளின் அன்பையும் அருகாமையையும் இழக்கக்கூடிய கள்ளக்காதல் அபராதம் எவ்வாறு வெற்றி பெறுகிறது? மேலும் எந்த அபராதமும் செலுத்தாது கற்பனையில் எதையும் செய்யலாம் என்கையில், அபராதம் செலுத்த நேரிடக்கூடிய இந்த றிஸ்க் எதனால் எடுக்கப்படுகின்றது? நான் தேடியவரை எனக்குக் கிடைக்கும் ஒரே பதிலாக அமைவது அங்கீகாரத் தேடல் என்பதாகவே இருக்கின்றது. குறிப்பு: சற்று ஆச்சாரமானவர்கள் இப்பந்தியின் மீதி வரிகளைப் படிக்காது அடுத்த பந்திக்குச் செல்லுங்கள். தமிழில் கட்டிலறைக் கதைகள் பற்றி அதிகம் கூறத் தெரியவில்லை, தெரிந்தவர்கள் பிரதியிட்டுக் கொள்ளுங்கள். வெள்ளையரைப் பொறுத்தவரை, கலவி நேரத்தில் எழுப்பப்படும் கூச்சல்களிற் சில “Who's your daddy”இ “Fill me up baby” போன்றனவாகவும் அமைகின்றன. ஒவ்வொரு கலாச்சாரத்திலும், அதுவும் குறிப்பாகக் கள்ளக்காதலர்கள் விடயத்தில், மேற்படி கருத்தை ஒத்த சிந்தனைகள் அல்லது கூச்சல்கள் எதிர்பார்க்க்கக் கூடியன. (மேற்படி வாசகங்கள் விரசத்திற்காக இப்பதிவிற் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதனையும் நான் கூற வருகின்ற கருத்தைக் கட்டியெழுப்புவதற்காக மட்டுமே என்றும் கூறிக் கொண்டும் அப்பால் செல்கின்றேன);. அதாவது, தான் மணமானவன் என்று தெரிந்தும் ஒரு பெண் தன்னைத் தேடுகிறாள் சவால்களைச் சமாளிக்கிறாள் என்கையில் தனது ஆண்மை சிறப்பானது என ஆணும், ஒரு ஆண் தன்னைத் தேடி இத்தனை சவால்களைச் சமாளித்து வருவதால் தனது பெண்மை சிறப்பானது எனப் பெண்ணும் அங்கீகாரம் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வங்கீகாரம் ஒருவரோடு நின்றுவிடாது பல அங்கீகாரங்களை வேண்ட விளைவதும் எதிர்பாhக்க்க் கூடியது. கற்பனையில் யாரும் யாரையும் நினைக்கலாம் என்ற போதும், கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், கற்பனையில் ஒரு பெண் தன்னைத் தேடுவாள் என்று தான் மட்டுமே நினைக்கக் கூடிய ஆணிற்கு உண்மையில் அவள் தன்னை ஏற்பாளா என்ற கேள்வி எங்கேயோ தொக்கி நிற்கவே செய்யும். பெண்ணிற்கும் இத்தகைய கேள்வி இருக்கும். ஆனால் நிஜத்தில், கள்ளக்காதலர்கள் சேர்கையில், கேள்விக்கிடமின்றி அங்கீகாரம் கிடைக்கும். மேலே கூறப்பட்ட ஆங்கிலக் கூச்சல்களில் இவ்வங்கீகாரத் தேடலும் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலும் தெளிவாக வெளிப்படுகிறன. கள்ளக் காதல் எல்லாம் மகிழ்வாய் அமைந்து விடுவதில்லை. வெளி;த்தோற்றம் கொண்டு அல்லது இதர மதிப்பீடுகள் காரணமாய்க் கவரப்பட்ட சிலர் படுக்கை அறையில் ஏமாற்றம் அடைவதும் நிகழ்வதுண்டு. ஏற்கனவே தனக்கு உள்ள அங்கீகாரம் போதாது என்ற நினைப்பில் அங்கீகாரம் தேடி கள்ளக்காதலை ஏற்படுத்திய ஒருவர், தனது கள்ளக்காதல் முதற்சந்திப்பின் பின் தன்னைக் கண்டால் ஓடுகிறது என்று அறிகையில் முன்னரைக் காட்டிலும் இப்போது அவரிற்கு அதிக அங்கீகாரம் தேவைப்படும். யாராவது நம்மால் திருப்திப்படமாட்டாரா என ஏங்கி அலையவும் புதிய கள்ளக்காதல்களிற்கும் வழிசமைக்கும். பணம், அறிவு முதலான இன்ன பல விடயங்கள் பொதுவாகச் சமூகத்தில் அங்கீகாரச் சுட்டிகளாக அமைகின்ற போதும், அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு என்ற வகையில், தக்கன பிழைக்கும் என்ற கூர்ப்பியல் விதியில் தான் தக்கது தானா என்று அறிந்து கொள்வதிலேயே மனிதன் என்ற விலங்கிற்கு உண்மையான திருப்தி இன்னமும் கிடைத்துக் கொண்டிருப்பதே கள்ளக் காதல்களிற்கான அடிப்படையாக எனக்குப் படுகின்றது. இதை எதிர் கொள்வதற்கு, ஒருவர் தனது சிந்தனையில் முதலில் இந்தப் பிரச்சினையினைப் பதிவு செய்து அதன் பின்னர், அத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவதால் தான் என்னத்தைச் சாதித்து விடமுடியும். அத்தகைய அங்கீகாரம் இல்லாத பட்சத்தில் என்னதான் நிகழ்ந்து விடும் என்ற ரீதியில் சிந்திப்பது கள்ளக்காதல் சிக்கல்களிற்குள் சிக்கிக்கொள்ளாது வாழ்வதற்கு உதவலாம். நிழலியின் பதிவை வைத்துத் தொடங்கிய பதிவு என்பதனால் நிழலியின் பதிவைப் பற்றிப் பேசி இதை முடிக்கிறேன். பொதுவாக நாம் அனைவருமே (என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்) நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்தில் நாமறிந்த பிறர்பற்றி ஏதேதோ மதிப்பீடுகளை முன்வைப்பதை எம்மை நாம் ஆராய்ந்தால் காணக் கூடியதாய் இருக்கும். பல சமயங்களில் எமது மதிப்பீடுகள் கேள்விக்கப்பாற்பட்ட உண்மைகள் என்பதாய் எமக்குப் படும். எனினும் எமது மதிப்பீடுகளை நாம் ஆழ ஆராய்ந்தால் சில சமயங்களில் எமது ஏக்கங்களின், ஆசைகளின், நிராகரிப்புக்களி;,; அந்தரங்கங்களின், ஏமாற்றங்களின், மறைப்புக்களி;ன், குற்ற உணர்வுகளின் சாயல் மற்றையவர் தொடர்பான எமது மதிப்பீடுகளில் தெரிவதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாய் இருக்கும். உதாரணமாய், நாளை அல்லது அடுத்தவாரம் முக்கிய சோதனை உள்ளது என்ற ரீதியில் இன்று நான் பொறுப்பான மாணவனாய் படித்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பிடித்த கலை நிகழ்வோ பாட்டியோ அருகில் நிகழ்கிறது. படிப்பதால் அங்கு போகக் கூடாது என்று எனது மனம் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால் எனது அறை நண்பன், அவனிற்கும் அதே சோதனை உள்ளபோதும் அந்நிகழ்விற்குப் போகிறான். இப்போது அனேகமாக நான் கூறக் கூடியது அவன் ஒரு பொறுப்பில்லாத பெடியன் என்பதே. பொறுப்பென்றால் என்ன, பொறுப்பின்மை என்றால் என்ன என்றெல்லாம் எனக்கு இங்கு ஆராயத் தோன்றாது. ஏனெனில் நான் போகமுடியாத படி எனது பெறுமதிகள் எனக்குத் தளை போட்டுள்ள வேளையில் அவன் போய் மகிழ்வது பற்றிய எனது மதிப்பீட்டில் எனது ஏக்கத்தின் சாயல் இருக்கவே செய்யும். நான் நினைக்கின்றேன் மற்றையவர்களின் பிரத்தியேககங்கள், எங்களைத் தாக்காத வரைக்கும், அவற்றை அவர்களோடு விட்டுவிடுவதே நல்லது. எனினும் நாம் விரும்புகின்ற சமூகம் எமது மகவுகளிற்கும் நாளை கிடைக்;க வேண்டுமாயின், எமது பெறுமதிகளிற்கு முரணான சமூக நிகழ்வுகளை நாம் இன்று விமர்சித்து அகற்ற முயன்றே தீரவேண்டும் என்றொரு நியாயமான எதிர்வாதம் இங்கு எழலாம். இந்த வாதத்தோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. ஆனால். எமது பெறுமதிகள் நாளை எமது மகவுகளிற்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நாங்கள், எமது பெறுமதிகளின் தார்ப்பரியம் என்ன என்று ஆராயாத வரைக்கும் எம்மைப் பயமுறுத்தும் நாளைகள் பயமுறுத்திக் கொண்டே இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். நானும் மற்றையவர் பற்றிய எனது மதிப்பீடுகளை முன்னர் பரபரப்பாய் வெளிப்படுத்தினேன் தான் எனினும் இப்போது அது முடியவில்லை. எனினும் இது எனது கருத்து மட்டுமே.
  2. ஞாபகப் படுத்தியமைக்க நன்றி. ஆடிக்கூழ் எவ்வாறு நம் பண்பாடு ஆனது. ஆடிக்கூழின் தனித்துவம் (அதற்குள் இடப்படும் மாவுருண்டைகள் முதலிய தனித்துவங்கள்) எதனைச் சித்தரிக்கின்றது முதலிய தகவல்கள் அறிந்தவர்கள் அறியத்தரமுடியுமா? (பதிவாகவோ தனிமடலாகவோ) நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.