Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    29347
  • Joined

  • Last visited

  • Days Won

    266

Posts posted by suvy

  1. பெங்களூர் & குஜராத்.........பெங்களூர் பந்து போடுதல், குஜராத் மட்டையடி 

    கடைசி ஓவர்......ஹாட்ரிக் விக்கட் போனது......அதிலும் சிராஜ் பிடித்த மூன்றாவது பிடி மிகவும் சுவாரஸ்யமானது ...... ஆல்அவுட்  147 ரன் ......!   😂

  2. வணக்கம் வாத்தியார்.........!

    ஆண் : ஹேய் மயிலிறகே மயிலிறேகே
    மனம் வருட வந்தாயா
    மணிக்கிளியே மணிக்கிளியே
    மனம் திருட வந்தாயா

    பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
    மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்

    பெண் : ஊராரும் வேராரும் காணாமலே
    கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன்

    பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
    வந்தாடும் பிள்ளை இது

    பெண் : கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
    கண்மூடும் பிள்ளை இது

    ஆண் : எனது பார்வையில்
    எதிரில் தோன்றிடும்
    எதுவும் உன்காட்சிதான்
    அழகே நீயுமென்
    மனதில் பாய்கிற
    ஆசை நீர்வீழ்ச்சிதான்

    பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே
    விரலை வைப்பேன்
    நீ சொன்னால்
    முல்லை என் விழியில் வைப்பேன்
    பெண் : நான் சொன்னால் கூட
    நான் கேட்க்க மாட்டேன்
    நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன்

    ஆண் : ஒ மானே மானே மனதுக்குள்ளே
    உனையின்றி இனிமேலும் யாவரும் இல்லை

    பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி
    உன்னாலே தூக்கம் கெட்டேன்

    பெண் : பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி
    உனக்காக தூது விட்டேன்

    ஆண் : தூதும் வந்தது தகவல் தந்தது
    தனிமை பொல்லாதது உன்போல் என் மனம்
    உருகும் சந்தனம் வெளியில் சொல்லாதது

    பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
    அவரோடு அவனிங்கு அவனை தைத்தான்

    பெண் : உனதென்றும் எனதென்றும் இனியில்லையே
    உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே

    ஆண் : ஏ அன்பே அன்பே காதோடு சொல்
    கல்யாண பூமாலை நீ தரும் நேரம் .....!

    --- மயிலிறகே மயிலிறேகே ---

  3. 5 hours ago, ஈழப்பிரியன் said:

    பிராண்டி விட்டு முட்டைக் கோப்பி.

     

    3 hours ago, ஏராளன் said:

    அண்ணை யாரைப் பிராண்டி விட்டு!! முட்டைக் கோப்பியை குடிக்க?!

    அவர் உங்களுக்கு நல்லதை சொல்கிறார் நீங்கள் அர்த்தம் விளங்காமல் ....... பிராண்டி விட ஒரு பூனை வளர்க்க சொல்கிறார் போல......!  😁

    • Like 1
  4. கோடிக்கணக்கில கொட்டி மட்டையடி மன்னர்களை ஏலம் எடுத்து மட்டையாகிய கொம்பனி என்றால் அது மும்பைதான்......அநியாயத்துக்கு சச்சினும் அதுக்குள் கிடந்து அல்லாடுறார் .......!  😢

  5. வணக்கம் வாத்தியார்.........!

    ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
    அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்

    பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம்
    அது பக்தியை போலவும் இருக்கும்

    ஆண் : தெரிய தெரியத்தான் கனவு
    அது கனிய கனியத்தான் உறவு

    பெண் : புரிய புரியத்தான் இனிமை
    அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை

    ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா……..
    பெண் : உள்ளமா அமுத வெள்ளமா……..
    ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா……..
    பெண் : உள்ளமா அமுத வெள்ளமா……..
    ஆண் : என்னம்மா நாணம் இன்னுமா
    பெண் : இல்லையேல் கால்கள் பின்னுமா
    இல்லையேல் கால்கள் பின்னுமா

    ஆண் : முல்லையோ

    பெண் : ஆஹஅஹஆஹா

    ஆண் : மலர் கொல்லையோ………

    பெண் : ஆஹஅஹஆஹா

    ஆண் : இல்லையோ இடை இல்லையோ

    பெண் : கம்பனோ கவி மன்னனோ
    காதலின் இளம் கண்ணனோ

    ஆண் : அள்ளவோ வாரிக் கொள்ளவோ

    பெண் : சொல்லவோ உரிமை அல்லவோ
    சொல்லவோ உரிமை அல்லவோ .......!

    --- சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் ---

  6. நிஜமாகவே இருமல் ஒரு பரிசுதான்.......!

    உடலும் கடலும் ஒன்று........

    அந்நியமானவற்றை அரசியல்வாதிகள் போல்

    தமக்குள் சேர்த்து வைத்திருக்காது......

    வெளியே தள்ளி விடும்......

    அதனால் இருமலும் தும்மலும்........

    விலைமதிப்பில்லா பரிசே ......!   😂

    • Haha 1
  7. 438173015_2565585120275621_9516850993392

      · 
    மணவாழ்க்கை*_
    யார்க்குத்தான்*_
    சரியாக*_ _*இருந்தது*_
    தசரதனுக்கும்_
    அவன்_ _மனைவிகளுக்கும்_
    மணவாழ்க்கை_
    சரியில்லை*_
    இராமனுக்கும் சீதைக்கும்_
    மணவாழ்க்கை_
    சரியில்லை*_
    கண்ணகி_
    மாதவி_ _கோவலனுக்கும்_
    மணவாழ்க்கை_
    சரியில்லை*_
    அகலிகைக்கும்_
    முனிவனுக்கும்_
    மணவாழ்க்கை_
    சரியில்லை*_
    புத்தனுக்கும்_
    யசோதைக்கும்_
    மணவாழ்க்கை_
    சரியில்லை*_
    பட்டிணத்தார்க்கும்_
    மணவாழ்க்கை_
    சரியில்லை*_
    ஒவ்வொரு_
    சாமியார்க்கும்_
    சித்தனுக்கும்_
    மணவாழ்க்கை_
    சரியாக இருந்தால்*_
    அவன் ஏன்*_
    காட்டை நோக்கிச்*_
    செல்கிறான்*_
    ஐந்துவிரலும்_
    ஒரே நீளமாகவா_
    இருக்கு_
    ஒவ்வொரு*_
    தலையிலும்*_
    ஒரு விதி*_
    எழுதப்பட்டிருக்கு*_
    அதை அழிக்க_
    முடியுமா_
    பணக்காரன்*_
    ரகசியமாகப்*_
    புலம்புறான்*_
    ஏழை வெளியில்_
    புலம்புறான்_
    அனைவருடைய*_
    வாழ்விலும்*_
    ஓட்டையும்*_ _*ஒடச்சலும்*_ இருக்கத்தானே*_
    செய்கிறது*_
    எல்லாமே_
    சரியாக இருந்தால்_
    இறைவனை_
    மறந்துவிடுவாய்_
    என்ற_ _காரணத்தினால்_
    கூட்டியும்*_ _*பெருக்கியும்*_
    கழித்துவிடுகிறான்*_
    மனிதனின்*_
    வாழ்க்கையை*_
    ஆணும்_ _புலம்புகிறான்_
    பெண்ணும்_
    புலம்புகிறாள்_
    இருந்தும்*_
    வாழ்க்கை*_
    நடந்துக்கொண்டுதான்*_
    இருக்கு*_
    அதில் நாமும்_
    கடந்துக்கொண்டே_
    இருக்கோம்_
    வாழ்வதும்*_
    வாழ வைப்பதும்*_
    நம்ம*_ _*கையில்தான்*_
    இருக்கிறது*_
    புரிந்து கொண்டு வாழுங்கள்......!
     
    😴
    • Like 1
  8. 440934146_7363872977065816_1582784005758

      · 
    செருப்பு தைக்கிறவங்க கிட்ட நாம காட்டுற வீரம் கோழையை விட கேவலமானது..
    தெருவுல கீரை விக்கிற பாட்டிகிட்ட
    ரெண்டு ரூபா பேரம் பேசி ஜெயிச்சுட்டு 2000 ரூபாய் கோயில் உண்டில போட்றதால எந்த வரமும் கிடைச்சிட போறதில்ல..
    எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,
    சுமார் எட்டு வருசத்துக்கு முன்னாடி,
    நான் ஒரு முறை பேங்க் ல Loan கட்ட போயிருந்தப்ப நடந்த நிகழ்வு இது..
    ஒருத்தர் 70 75 வயசு இருக்கும்..
    பாத்தா விவசாய கூலி வேலை செய்றவர் மாதிரி இருந்தாரு..கையெல்லாம் காச்சு போயிருந்தது..அவர் Passbook Entry போட்றதுக்காக அரை மணி நேரமா வரிசைல நின்னுட்டு இருந்தார்.
    நான் அவர் பின்னாடி நான் நின்னுட்டு இருந்தேன்..
    அவரோட வாய்ப்பு வரும் போது,
    அவர் Entry போட்றவர் கிட்ட,
    "ஐயா.. இந்த புக்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஐயா..
    அப்படியே எழுதி குடுங்கய்யா"
    ன்னு சொல்ல,
    Bank officer,
    "350 ரூபா இருக்கு..
    இதுக்கு ஒரு entry வேறயா..
    போ..போய் வெளிய ATM ல போட்டுக்கோ - ன்னு கேவலப்படுத்தி"
    அனுப்ப,
    அந்த அய்யா ATM எதுன்னு தெரியாம அரை மணி நேரம் அலஞ்சுட்டு மறுபடியும் வரிசைல வந்து நிக்கிறாரு..
    அந்த Employee,
    "யோவ்..மறுபடியும் என்னய்யா நீ வரிசைல நிக்கிற.. போயா.. அந்தப்பக்கம்..னு திட்ட,
    அவர் என்ன செய்றதுன்னு தெரியாம திரு திரு முழிச்சிட்டு இருந்தப்ப,
    Security வாங்கய்யா ன்னு நான் போட்டுத் தரேன் கூட்டிட்டு போனாரு..
    கஷ்டப்படுறவனுக்கத் தான்
    அடுத்தவனோட கஷ்டம் புரியுதுல..
    அப்பவே,இன்னோருத்தர் வேக வேகமா Manager கிட்ட ஓடிவந்து,
    ஐயா..
    "ஏன்யா என் பேர Board எல்லாம் போட்டு இருக்கீங்க, வீட்டுக்கு letter வந்துருக்குன்னு" கேட்டார்..
    அதுக்கு Manager,
    "நீ ரெண்டு மாசம் வட்டி கட்டல..
    அதான் போட்டுட்டோம்..னு Cool aa
    பதில் சொன்னாரு.."
    அந்த மனுஷன்..
    எங்கேயோ போய் யார்கிட்டையோ காசு வாங்கி மொத்த கடன் 22000 த்த
    மொத்தமா அடச்சிட்டு..
    அய்யா..இப்ப என் பேரு அழிங்க அய்யான்னு ஒரு சின்ன கொழந்த மாதிரி கேட்டது..அவங்க இவ்ளோ கஷ்டத்துலயும் அவங்க தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்க தயாரா இல்லன்னு காட்டுது..
    (அது வேற யாரும் இல்ல எங்க அப்பா தான்...22000 ரூபா தறி Loan க்கு மானியம் போக வட்டி அது இதுன்னு 28000 ரூபாபாவ கண் கலங்கிக் கிட்டே கட்டுணது எனக்குள்ள இன்னமும் வலிக்கு)
    Drainage Clean பண்றவங்களை பாத்தா முகம் சுழிக்கறது,
    சர்வர் கிட்ட சவுண்டு விட்றது,
    ரோட்டாரம் காய்கறி விக்கவறங்க கிட்ட கறாரா பேசுறது,
    நமக்கு கீழ வேலை செய்றவங்கள
    ஒருமைல பேசுறது,
    இந்த மாதிரி Scene போட்றத எல்லாம் விட்டுட்டு,அவங்களுக்கும் சரிசமமான மரியாதை குடுத்து பழகுவோம்..
    இங்க யாரும் மேலயும் இல்ல..
    கீழயும் இல்ல.. படிச்சவங்க படிப்புக்கு
    ஏத்த வேலை செய்றாங்க..
    மித்தவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலய செய்றாங்க..
    உழைப்பாளன் கேட்பது தகுந்த ஊதியமும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே..
    உழைப்பாளனின் வியர்வை மணத்திற்கு இணையான நறுமண பொருள் இன்றுவரை கண்டுபிடிக்க படவில்லை..
    உங்களுக்கு மேல இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாதைக்கு
    காரணம் பயம்..
    உங்களுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாததான் உங்களோட Character.
    என்ன வேலைன்னு எல்லாம் பாக்காம வேர்வ சிந்தி உழக்கிறவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகுவோம்..
    முடிஞ்சா அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்..
    நம்ம கிட்ட அதிகாரம் இருந்ததுன்னா அதை வச்சு இல்லாதவங்களுக்கு என்ன பண்ணி அவங்க வாழ்க்கைத் தரத்த உயரத்தலாம் ன்னு யோசிப்போம்..
    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..✨......!  🙏
    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.