Everything posted by ரஞ்சித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இனத்துரோகி கருணாவோடு சேர்ந்து, அவனுக்கு நிகராக, தமிழினத்திற்கு துரோகம் இழைத்து, சிங்கள போர்க்குற்றவாளிகளின் வேட்டைநாயாக நெடுங்காலம் வலம்வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினரும், தனது இறுதிமூச்சுவரை தமிழ்த் தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் நேசித்தவருமான அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொன்றான் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பினும், அதனை இன்றுவரை மறுத்தும், பிள்ளையானால் கொல்லப்பட்ட பரராஜசிங்கத்தை வேண்டுமென்று இழிவுபடுத்தியும் அவனை ஆதரித்தும் இத்தளத்திலியேயே இன்றுவரை சிலர் எழுதிவரும் நிலையில் , அவன் 2015 இல் கைதுசெய்யப்பட்டபோது அவனது கைது தொடர்பாக கொழும்பு டெலிகிராப் எனும் ஆங்கிலமூல இணையத்தில் வெளிவந்த செய்தி. பரராஜசிங்கத்தைச் சுட்டுக்கொன்றதற்காகக் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான். 11, ஐப்பசி 2015 பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன், பரராஜசிங்கம் அவர்களைக் கொன்றதற்காக சற்று முன்னர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டான் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அணியில் செயற்பட்டு வந்து பின்னர் பிரதேசவாதம் பேசிக்கொண்டு வெளியேறிய கருணாவின் வலதுகரமான பிள்ளையானை குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் பலமுறை ஜோசேப் பரராஜசிங்கத்தின் கொலைதொடர்பாக விசாரித்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. நேற்று அவனைக் கைதுசெய்யும் முகமாக அவனது விட்டீற்கு குற்றப்புலநாய்வுத்துறையினர் சென்றிருந்தவேளை அவன் ஓடி ஒளித்துக்கொண்டதாகவும், அவனது வீட்டிலிருந்தவர்களிடம் பேசிய அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் குற்றப்புலநாய்வு அலுவலகத்திற்குச் சமூகமளிக்கவேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றதையடுத்து, பிள்ளையானும் அவனது சகாக்களில் ஒருவனும் மாலை 5:15 மணிக்கு குற்றப்புலநாய்வுத் தலைமையகத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜோசேப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு மரியன்னை தேவாலயத்தில் கடந்த 2005 மார்கழி 25 அதிகாலை நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொழுது பிள்ளையானின் கொலைக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மேலும் 8 பொதுமக்களும் பிள்ளையானின் கொலைக்குழுவின் தாக்குதலில் காயமடைந்திருந்தனர். மேலும், குற்றப்புலநாய்வுத்துறையினர் பிள்ளையானின் கொலைக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மேலும் இருவரை கடந்த வியாழன் அன்று கைதுசெய்திருந்தனர். கொழும்பு மஜிச்த்திரேட் நீதிமன்றம் இக்குற்றவாளிகள் இருவரையும் 90 நாட்களுக்கு விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறது. இக்குற்றவாளிகள் இருவரும் கொலையில் இட்டுபட்ட 10 வருடங்களுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இக்கொலையில் ஈடுபட்டிருந்த பிள்ளையானின் கொலைக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு. பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த எட்வின் சில்வா கிருஷ்ணா கந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரங்கசாமி கனயகம. நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த குற்றப்புலநாய்வுத்துறையினர் பரராஜசிங்கத்தின் கொலையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இன்னும் இரு குற்றவாளிகள் பிள்ளையான் மற்றும் கருணாவின் உதவியுடன் தப்பி வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவர்களைக் கைதுசெய்து மீண்டும் இலங்கைக்கு இழுத்துவர சர்வதேச பொலீஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியினை தாம் நாடியிருப்பதாகவும் தெரிவித்தனர். ஜோசேப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொல்வதற்கு பிள்ளையானின் கொலைக்குழு மூன்றுவிதமான துப்பாக்கிகளைப் பாவித்திருந்ததாகவும், அவர் கொல்லப்பட்டவிடத்தில் 9 மி மீ வெற்று ரவைக்கூடுகள் ஆறினைத் தாம் கண்டெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், இத்துப்பாக்கிகளையும், பிள்ளையான் கொலைக்குழு அன்றிரவு பாவித்த வெண்ணிற வானையும் கைய்யகப்படுத்தும் நடவடிக்கையில் தாம் இறக்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். https://www.colombotelegraph.com/index.php/pilliayan-arrested-for-pararajasingham-murder/ கருணாவையும் பிள்ளையானையும் தமது தலைவர்களாக வரிந்துகொண்டு, இன்றுவரை அவர்களை ஆதரிப்பவர்கள் இச்செய்தியைப் படித்தபின்னர் எள்ளி நகையாடலாம். அவர்களின் துரோகமும் சொந்த இனத்தையே வேட்டையாடிய கொடூரமும் உண்மையென்றால் கிழக்கு மாகாண மக்கள் ஏன் அவர்களை, குறிப்பாக பிள்ளையானை மீண்டும் அதிக விருப்புடன் பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்று கேட்கலாம். அவன் இதற்கு முன்னரும் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்திருக்கிறான். அப்போதிருந்ததும், அவன் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆகியபோது இருப்பதும் அதே போர்க்குற்றங்களைப் புரிந்த , இவனையும் கருணாவையும் வேட்டை நாய்களாகப்பாவித்த இனக்கொலையரசுதான் என்பதை இவர்கள் நினைவில் கொள்வதில்லை. எது எப்படியாயினும் இவர்கள் இருவரும் எமதினத்திற்கெதிராகச் செய்த துரோகமும், ஆடிய நரவேட்டையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை. அவர்களின் கதாநாயகர்கள் எங்கள் மக்களைக் கொன்றதற்காகவே எதிரியினால் கொண்டாடப்படுகிறார்கள் என்பது அவர்ளுக்குத் தெரிந்தாலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கேள்வி : புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகள் இன்றுவரை வாழ்வாதாரத்திற்காக அல்லற்பட்டு வருவதாகக் கூறியிருந்தீர்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து இவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வகையான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? கருணா : ஆம், நான் இதுதொடர்பாக அவர்களுடம் பேசவிருக்கிறேன். வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்யும் பாரிய பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களிடையே பெரிய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்குவந்து பல தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பல முன்னாள்ப் போராளிகளுக்கு வாழ்வாதார உதவியினை வழங்க முடியும். பிரண்டிக்ஸ் நிறுவனம் கிழக்கில் பாரிய தொழிற்சாலையொன்றினை நிறுவவிருக்கிறது. இதன்மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் 40,000 விதவைகள் வாழ்கிறார்கள், இவர்களுக்கும் இதில் பணிபுரியும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு சிங்கள தொழிலதிபர் வேலைவாய்ப்பு வழங்கமுடியும் என்றால், உலகெங்கும் பரந்து வாழும் பல புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் தமது மக்களுக்கு ஏன் இந்த உதவியினைச் செய்யமுடியாது? மலேசியாவின் இரு பெரிய கோபுரங்களுக்கு உரிமையாளராகவிருக்கும் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்த கிருஷ்ணன் போன்ற பல கோடீஸ்வரரத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது மக்களுக்காக உதவிசெய்யும் காலம் வந்துவிட்டது. நான் இவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இங்குவந்து முதலீடுகளை செய்ய ஊக்குவிக்கப்போகிறேன். வடக்கினை கொழும்பினைக் காட்டிலும் அபவிருத்திசெய்து நவீனமயப்படுத்தும் பணபலம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்கிருக்கும் ஒரே முட்டுக்கட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் செய்துவரப்படும் புலிசார்பு அரசியலும், அரசுக்கெதிரான போலிப் பிரச்சாரமும் ஆகும். பெரிய தமிழ்ச் செல்வந்தர்கள் இந்த பரப்புரைகளுக்கு அஞ்சியே கொழும்பிற்கு வரப் பயப்படுகிறார்கள். நான் அவர்களுடன் பேசி நாட்டின் சுமூக நிலைமையினை விளக்கி, தெற்கு அரசியலின் நேசக்கரத்தை அவர்களுக்கு நீட்டி மீண்டும் அழைத்துவரப்போகிறேன். கேள்வி : ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவித்து இங்கு அழைத்துவரமுடியும். ஆனால் அவர்கள் அதனை ஏன் இதுவரை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கருணா : ஆம், கூட்டமைப்பில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற மூத்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கிருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், இலங்கையிலிருக்கும் அனைத்து இனங்களையும் பாதிக்காவண்ணம் தமது கருத்துக்களை முன்வைக்கத் தெரியாமல் இருப்பதுதான். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் நிலவும் சுமூக நிலை, நல்லிணக்கம், அமைதி பற்றி புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்துரைக்கும் திறமையும் இவர்களிடம் இல்லை. தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்றால் அவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிடலாம் என்று மாவையார் சொல்கிறார். நான் புலிகளுடன் இணைவதற்கு அவரும் ஒரு காரணம். இவர்களின் பசப்பு வார்த்தைகளை உண்மையென்று நம்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெற்றுகனவான ஈழம் தேடிப் போராடக் கிளம்பியிருந்தோம். இந்த அனுபவம் மிக்க அரசியல் வாதிகளால் நாம் தவறாக வழிநடத்தப்பட்டோம். ஆனால், நாங்கள் எமது இலட்சியத்திற்காகப் போராடியபோது, இவர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போர் முடிந்தவுடன், தமது இந்திய மறைவிடங்களில் இருந்து வெளியே வந்த இந்த மூத்த அரசியல்வாதிகள் இன்று மீண்டும் அதே போர் முழக்கங்களை முன்வைக்கிறார்கள். தமிழர்களை மீண்டும் மூடர்களாக்கி, வெற்று கனவுகளை முன்வைத்து, இனவாதக் கருத்துக்களை பரப்பி மீண்டு தமிழர்களை ஒரு இரத்தகளரி மிக்க போரிற்குள் தள்ளும் இந்தக் கைங்கரியத்தைச் செய்யவேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். போர்முடிந்த கடந்த 10 வருடங்களாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள், ஆனால் இன்றுவரை தமிழ் மக்களுக்காக ஒரு துரும்பைத்தன்னும் இவர்களால் நகர்த்த முடியவில்லை. குறைந்த பட்சம் தமிழர்களின் நிலங்களில் இருந்து ராணுவமுகாம்களை நகர்த்தும் முயற்சியைக் கூட இவர்களால் எடுக்க முடியவில்லை. தமது பேசும் தொனியினை மாற்றி, இனவாத அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலில் கைகோர்க்கும் நிலையினை அவர்கள் அடையவேண்டும். ராணுவ முகாம்களை அகற்றுமாறு அரசினைக் கோருவதை நிறுத்திவிட்டு, அம்முகாம்களை அரச காணிகளுக்கு நகர்த்துவதன்மூலம் அப்பகுதிகளில் ராணுவப் பிரசன்னத்தை அவர்கள் நீட்டிக்க முன்வரவேண்டும். நான் அங்கம் வகித்த அரசாங்கம் முதற்கொண்டு எந்தவொரு தேசிய அரசாங்கமும் தனது ராணுவ நிலைகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் அகற்ற ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கி நாட்டின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு ஆளாகும் நிலையினை அரசு ஒருபோதும் கொண்டுவராது என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனெறால், எமது நாட்டின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. நான் முன்னர் கூறியதுபோல, தமிழர்களுக்கு என்போன்ற மிதவாத அரசியல்த் தலைவர்களே இப்போது தேவை. பழமைவாத அரசியல்த் தலைவர்களின் இனவாதச் சிந்தனை ஒருபோதும் மாறப்போவதில்லை. போர் முடிந்தபின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்கும் யதார்த்த நிலையினை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. தமிழர்களுக்கு அடிப்படைவாத இனவாதத் தலைவர்கள் இனிமேல்த் தேவையில்லை. முழு நாட்டிற்குமே நாட்டினை அபிவிருத்துசெய்து, மக்களை முன்னேற்றுகின்ற அரசியல்த் தலைமையே இன்று தேவை. நாம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடிய அதே பல்லவியினையே இன்றும் அவர்கள் பாடுகிறார்கள். எமக்கு அது அலுத்துவிட்டது. கேள்வி: தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு மகிந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட முன்வந்ததா? கருணா : நான் மகிந்த ராஜபஹ்க்ஷவின் அரசில் அமைச்சராக இருந்தபொழுது சம்பந்தன் அவர்களை அரசுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைத்திருந்தேன். கூட்டமைப்பு எம்முடன் சேருமிடத்து எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதோடு, தேவையான முயற்சிகளை முன்னெடுக்கவும் வாய்ப்பிருந்தது. மக்களின்மேல் உண்மையான அக்கறைகொண்ட, செயல்திறன் மிக்க தலைவரான மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று இருந்தது. மகிந்த ராஜபக்ஷவைப்போன்ற நேர்மையான, துணிவான செயல்த்திறன் மிக்க ஒரு தலைவரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அவர் தான் சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் வல்லமை மிக்க ஒரு பெரும் தலைவராக எனக்குத் தெரிகிறார். சம்பந்தன் மகிந்த ராஜபஹ்க்ஷவின் ஆதரவு தனக்குத் தேவையென்று கோரிவருவதாக நான் அண்மையில் அறிந்துகொண்டேன். அவர் எதற்காக எனது தலைவரின் ஆதரவினை இப்போது எதிர்பார்க்க வேண்டும்? மகிந்த போன்ற துணிவான, திறமையான தலைவர்கள் எமக்குத் தேவை. அரசாங்கம் பழிவாங்கும் படலத்திலிருந்து, நாட்டினை அபிவிருத்தி செய்யும் படலத்திற்கு மாறவேண்டும் என்பதே எனது விருப்பம். கேள்வி : இன்றைய நல்லிணக்க அரசாங்கம் தாம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றும், ஆனால் நீங்கள் அமைச்சராகவிருந்த மகிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற பாரிய முறைகேடுகள் பற்றியே விசாரிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்களே? கருணா : நான் ஒருபோதுமே அக் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தவறான பிரச்சாரத்தினை முன்னெடுத்து எனது முன்னாள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களை அது கைதுசெய்து வைத்திருக்கிறது. இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டத்திற்குப் புறம்பான நீதிவிசாரனை அமைப்பொன்றினை உருவாக்கி தமது அரசியல் எதிரிகளை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகிறது. இந்த நாடே சந்தித்த மிகெப்பெரிய ஊழல் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்பே நடந்தேறியது. இந்த ஊழல்தொடர்பாக விசாரணைகளை நடத்தி உண்மையினை மக்கள் அறியும்படி இவர்கள் ஏன் இதுவரை செய்யவில்லை? இவர்களுக்குப் பழிவாங்கும் நோக்கமே இருக்கிறது. நிச்சயமாக இவர்களால் 2020 இல் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் இவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். பல கடன்களைப் பெற்றுக்கொண்டதாக மகிந்தவின் அரசாங்கத்தினை இன்றைய அரசாங்கம் குறை சொல்கிறது. ஜி எஸ் பி சலுகையினை தான் நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்துள்லதாக அரசு மார்தட்டுகிறது. ஆனால், நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் அடகுவைத்து 58 நிபந்தனைகளுக்கு இணங்கியே இந்த வரிச்சலுகையினைஇந்த அரசு பெற்றிருக்கிறது. இதே வரிச்சலுகையினைத் தருகிறோம், எமது கோரிக்கைகளுக்கு உடன்படுங்கள் என்று மகிந்தவின் அரசாங்கத்திற்கும் தூது அனுப்பினார்கள். ஆனால், இந்த வரிச்சலுகை இல்லாமலேயே நாட்டினை அபிவிருத்தி செய்யமுடியும் என்று நாம் அதனை முற்றாக நிராகரித்திருந்தோம். அதன்பிறகே நாம் சீனாவிடம் கடன்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். நான் எமது ஆட்சியில் வெறும் 750 ஏக்கர்களை மட்டுமே சீனாவுக்கு வழங்கியிருந்தோம். ஆனால், இந்த அரசாங்கமோ சீனாவுக்கு 15,000 ஏக்கர்களை வழங்கியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், ஒருவருக்கு உங்கள் நிலத்தினை வழங்கும்போது அதன் வான்பகுதியும் சேர்த்தே வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெருமளவு பெருமளவு நிலப்பரப்பும், வான்பரப்பும் சீனாவுக்கு வழங்கப்படுமிடத்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு உள்ளாவதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதற்ற நிலைமையும் உருவாகக் காரணமாகிவிடும். மகிந்தவை அன்று ஆட்சியில் இருந்து அகற்ற பின்னாலிருந்து இயங்கிய இந்தியா இன்று அவரையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் பாடுபடுவது தெரிகிறது. அதேவேளை, மகிந்த அவர்களின் ஆட்சி மீண்டும் அமையும்போது, அவர்களும் பழிவாங்கும் நடவடிக்கையினைத் தொடங்கக் கூடாதென்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 30 வருடகாலப் போரின் பின்னர் எமக்குக் கிடைத்திருக்கும் இந்த அருமையான சந்தர்ப்பத்தினை சில்லறைப் பிணக்குகளில் செல்வழிப்பதை நிறுத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாவிக்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். முற்றும். https://www.ft.lk/article/600192/Karuna-Amman-takes-on-TNA
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கேள்வி : கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷன் தனது விசாரணைகளின் முடிவில் சில விடயங்களைச் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அப்பரிந்துரைகளை நீங்கள் அங்கம் வகித்த முன்னைய அரசாங்கம் செய்யத் தவறியது ஏன்? கருணா : ஆம், அது ஒரு நல்ல திட்டம்தான், அதில் பல அருமையான விடயங்கள் கூறப்பட்டிருந்தன. ஆனால், துரதிஷ்ட்டவசமாக எவருமே அதனைச் செயற்படுத்த விரும்பவில்லை. தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் கமிஷனுக்கு நிகராக இதனைக் குறிப்பிட முடியும். நாம் அரசில் அமைச்சராக இருந்தபொழுது தென்னாபிரிக்காவுக்குச் சென்று இந்த கமிஷன் தொடர்பான கலந்துரையாடல்களிலும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கும்கூட காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சிக்கல் ஒன்று இருந்தது. அங்கு 22,000 பேர் காணாமலக்கப்பட்டதாக கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டது. கமிஷனின் முடிவில் இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து, அவர்களுக்கான நட்ட ஈட்டினையும் வழங்கியது. அதன் பின்னர் எவருமே காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசவில்லை. அதே செயன்முறையினைத்தான் நாமும் இங்கு செய்யவேண்டும். கேள்வி : ஆனால், தமிழர்கள் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை அமைப்பொன்று தேவையென்று கோரிவருகிறார்களே, இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? கருணா : நிச்சயமாக இல்லை. சர்வதேச விசாரணை அமைப்பொன்று இங்கு வந்தால் அது தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும் என்று நாம் நிச்சயமாக நம்புகிறேன். சர்வதேச விசாரணைகள் என்று வரும்போது யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் விசாரிக்கப்படவேண்டும். ஆனால், இரத்தம் தோய்ந்த கடந்த 30 ஆண்டுகால கொடிய போரிலிருந்து மீண்டுவரும் தெற்கின் சிங்கள மக்களும் வடக்கின் தமிழர்களும் தற்போதுதான் சகோதரர்கள் போல மீளவும் நெருங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சர்வதேச விசாரணை என்பது தெற்கின் மக்களை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக அமைவதோடு, இன நல்லிணக்கத்தினையும் முற்றாகப் பாதித்து விடும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். எங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும், இதற்கு வெளியார் தலையீடு எதுவும் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டு உதவிகள் நிச்சயம் தேவை, ஆனால் எமது போர்க்குற்றங்களை விசாரிக்கவோ அல்லது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கோ வெளியாரின் உதவியினை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எமது எதிர்ப்பினையும் மீறி சர்வதேசம் ஒரு விசாரனையினை ஆரம்பித்தால், அவர்கள் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரான புலிகளையும், ராணுவத்தினரையும் விசாரிப்பது அவசியம். இன்று நாம் புலிகளை முற்றாக அழித்துவிட்ட நிலையில், அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்குவது எப்படிச் சாத்தியம்? ஆகவே இது இலங்கை ராணுவத்தினரை மட்டும் இலக்குவைத்து தண்டிக்க ஏற்படுத்தப்படும் ஒரு சர்வதேச சதியென்றுதானே தெளிவாகிறது? அவர்கள் போரின் இறுதிக்காலத்தில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அப்படியானால் அதற்கு முன்னர் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி என்ன செய்யப்போகிறார்கள்? அவைபற்றியும் விசாரித்து தண்டிக்கப்போகிறார்களா? சிங்கள ராணுவத்தை மட்டுமே தண்டிப்பதுதான் இவர்களின் நோக்கமா? இது தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தப்போவது இவர்களுக்குத் தெரியாதா? அப்படியானால், பயங்கரவாதப்புலிகளுக்காக இன்று குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் செய்த போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படட்டும், அப்போது இருபக்கமும் சமமாகப் பார்க்கப்படும் வாய்ப்புக் கிடைத்துவிடும். கேள்வி : முன்னாள்ப் புலிப் போராளிகளைக்கொண்டு தன்னைக் கொல்வதற்கான சதி நடப்பதாக தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கிறார்கள், இதுபாற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? கருணா : அவரது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதுடன், போலியானது என்பதுதான் எனது நிலைப்பாடு. வடக்குத் தமிழர்கள் அவர்மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதால் தனது பாதுகாப்பைப் பலப்படுத்தவே இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்துவருகிறார். கொழும்பில் பிறந்து வளர்ந்த அவருக்கு வடக்கின் மக்களின் பிரச்சினைகள் குறித்து எதுவுமே தெரியாது. அவர் வடக்கில் இன்று பாரிய பிரச்சினகளை உருவாக்கிவருவதால், அவர்மீது வடக்குத் தமிழர்கள் கடுமையான அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவரால் இன்று வடக்கிற்குச் செல்வதை நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது. புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளை தனது சுய லாபத்திற்காக அவர் பகடைக் காய்களாகப் பாவிப்பது துரதிஷ்ட்டவசமானது. அப்பாவிகளான அவர்கள், இன்றுவரை தமது வாழ்விற்காக அல்லற்பட்டு வருகின்றார்கள். இதுவரை 6 முன்னாள்ப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வன்முறையினைக் கைவிட்டு சகஜவாழ்விற்குத் திரும்பியிருக்கும் இவ்வாறான பல முன்னாள்ப் போராளிகளின் வாழ்வும் சுமந்திரன் போன்றவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கேள்வி : உங்களின் தாய்க்கட்சி சுதந்திரக் கட்சியாக இருக்கும் நிலையில் நீங்கள் மீண்டும் அக்கட்சியில் இணைந்துகொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? கருணா : சுதந்திரக் கட்சியுடன் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அக்கட்சிக்காக நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன். கிழக்கில் 30 வருடங்களுக்குப் பின்னர் என்னால்த்தான் சுதந்திரக் கட்சிக்கென்று அலுவலகமும் அரசியல் வேலைப்பாடுகாளும் ஆரம்பிக்கப்பட்டன. பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே நான் துணிவாக இதனைச் செய்தேன். வேறு எவராலும் பிரபாகரனை எதிர்த்து இவ்வாறான துணிச்சலான நிலைப்பாட்டினை எடுத்திருக்க முடியாது. சுதந்திரக் கட்சி அரசுக்கான மக்கள் ஆதரவை கிழக்கில் வளர்த்து, தெற்கின் தேசியக் கட்சியொன்று தமிழர் பகுதிகளில் காலூன்றமுடியாது எனும் நிலையினை உடைத்து, அக்கட்சிக்கு வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறேன். நான் எனது பொதுக் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் தமிழர்களுக்காகப் பேசுவதற்காகவே. நாம் எவருக்கெதிராகவும் அரசியல் செய்யப்போவதில்லை. தமிழ்த் தேசியம் எனும் மாயைக்குள் வீழ்ந்திருக்கும் தமிழர்களின் மனங்களை மாற்றி பலமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை நான் வழங்குவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே எனது நோக்கம். அப்பாவித்தமிழர்களை தமிழ்த் தேசியத்தினுள் இழுத்து வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைத் தோற்கடிப்பதே எனது நோக்கம். இதற்கு நல்ல உதாரணம்தான் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். கொழும்பில் வாழ்ந்த மிதவாதியான அவர் வடமாகாணத்தின் முதலமைச்சர் ஆகி இன்று இனவாதம் கக்கி வருகிறார். தன்னை ஒரு கதாநாயகனாக தமிழர்கள் முன் நிலைநிறுத்தப் பார்க்கிறார். அவர் முதலமைச்சராக வந்தபொழுது வடக்குத் தமிழர்கள் தமது பிரச்சினைகளை அவர் தீர்த்துவைப்பார் என்று நம்பியிருந்தனர். ஆனால், அதில் அவர் தோல்வி கண்டிருப்பதோடு, பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டார். இன்று அவர் வேறொரு வழியில் பயணிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்வதுபோலத் தெரிகிறது. ஆனால், அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இன்றுவரை தமிழர்களுக்கு எதனையுமே செய்யவில்லை. கேள்வி : கிழக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் என்று கூட்டமைப்பு கூறிவருபவர்கள் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ? கருணா : காணாமலாக்கப்பட்டவர்களுக்கான விசாரணை, ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டாலும்கூட, அவர்கள் அதனை முன்வைக்கும் விதத்தினை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தமது அரசியல் லாபத்திற்காக அப்பாவிகளின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். பல்லாண்டுகளாக காணாமலாக்கப்பட்ட தமது சொந்தங்களைத் தேடித்தாருங்கள் என்று இன்றுவரை ஏங்கிவரும் எவருமே கூட்டமைப்பின் இந்த போலியான அரசியல் பரப்புரைகளுக்கு இலகுவாக உள்வாங்கப்பட்டு விடுவார்கள். கூட்டமைப்பு அண்மையில்கிழக்கில் நடத்திய எழுக தமிழ் நிகழ்வில் அப்பாவித்தமிழர்களின் உணர்வுகளைப் பாவித்து அரசியல் ஆதாயம் தேடிவருவது தெரிகிறது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டினை உண்மையுடன் தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியொன்று தனது லாபத்திற்காக இந்த காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் இன்றுவரை ராணுவத்தால் ஏதோவொரு தடைமுகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இதனை எவராவது ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு இவர்களால் கூறப்படும் ரகசிய தடுப்புமுகாம்கள் அம்பாந்த்தோட்டையிலோ அல்லது அநுராதபுரத்திலோ நடத்தப்பட்டு வந்தால் அவை இன்றுவரை வெளியுலகிற்குத் தெரியாமல்ப் போனது எப்படி? அமெரிக்கா தனது செய்மதிகளைப் பாவித்து முழு நாட்டினையும் சல்லடைபோட்டு வைத்திருக்கும்போது, இம்முகாம்களை நாங்கள் நடத்துவது சாத்தியமா? காணாமலாக்கப்பட்ட தமிழர்களை அடைத்துவைத்திருப்பதாகக் கூறப்படும் இம்மாதிரியான ரகசிய முகாம்கள் இலங்கையில் எங்கும் நடத்தப்படவில்லை என்பதை என்னால் அதிகாரபூர்வமாகக் கூறமுடியும். உண்மையைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது, அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டு விட்டார்கள், இதில் மறைப்பதற்கு எதுவுமேயில்லை. காணாமலாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் நட்ட ஈடு வழங்கவேண்டும். அவர்களுக்கான இறுதி வணக்கத்தினை அவர்களின் குடும்பங்கள் இனிச் செய்ய வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களை தேடும் கமிஷனை ஆரம்பிப்பதால் எதுவுமே நடக்கப்போவதில்லை, இதனால் யாருக்கும் லாபம் இல்லை. எனது சகோதரர் கூட காணாமல்ப்போயிருந்தார். புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்ட அவர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று நான் எனது தாயாரிடம் கூறிவிட்டேன். அவருக்கான இறுதி மரியாதையினை நாங்கள் செலுத்திவிட்டோம். அவரது உடலினை நாம் இதுவரையில் கண்டுபிடிக்காததால், அவரையும் காணமாலாக்கப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டோம். ஆனால், நான் எனது தாயாரிடம் அதுபற்றித் தெளிவாகக் கூறிவிட்டேன். உண்மையினைச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். பலருக்கு இது கடிணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதே கசப்பான உண்மையாகும். புலிப்பயங்கரவாதிகள் ஆனையிறவு முகாமைத் தாக்கியபோது பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை பொறுப்பெடுக்குமாறு புலிப்பயங்கரவாதிகள் அரசாங்கத்தினைக் கேட்டபோது, அரசு உடனடியாக மறுத்துவிட்டது. பெருமளவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களைப் பொறுப்பெடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பும்போது பாரியளவிலான பதற்றமும், அச்ச நிலையும் தோன்றலாம் என்று அரசு அஞ்சியது. ஆகவே கிளிநொச்சியைச் சேர்ந்த பொதுமக்களும் புலிப்பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட பலநூறு ராணுவ வீரர்களை தாங்களே அடக்கம் செய்தார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் கூட காணமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். தமிழர்கள் மட்டுமல்லாமல் ராணுவ வீரர்களும், புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிங்களக் குடியேற்றவாசிகளும் கூட காணமலாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற உண்மை அவர்களின் சொந்தங்களுக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கேள்வி : உங்களின் புதிய கட்சி பற்றி விபரமாகச் சொல்ல முடியுமா? கருணா : நான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினை ஆரம்பித்ததன் ஒரே நோக்கம் மிதவாத அரசியலைச் செய்வதுதான். கிழக்கில் இன்று பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களும் எனது கட்சியில் இணைந்து இனிச் செயலாற்றமுடியும். முஸ்லீம்களும் எனது கட்சியில் இணைந்து பயணிக்கமுடியும். எனது கட்சி வெறுமனே கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது வட கிழக்கு மாகாணங்களுக்கோ மட்டுமே சொந்தமான கட்சியல்ல, மாறாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமான தேசியக் கட்சி. நான் பிராந்திய, மாகாண அரசியல் செய்வதற்காக இதனை ஆரம்பிக்கவில்லை. கேள்வி : வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத மிகப்பெரிய பிரச்சினை எதுவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? கருணா: வடக்கில் புலிகளாலும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் மூளைச்சலவைச் செய்யப்பட்டு இன்றுவரை இனவாதம் பேசும் தமிழர்களின் மனோநிலையினை மாற்றுவதே எம்முன் உள்ள மிகப்பெரிய சிக்கலாக நான் பார்க்கிறேன். வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசம் தமது பூர்வீக தாயகம் எனும் போலியான கற்பனைக்குள் அவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னர் இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டபோதும் ஜே வி பியினரின் நீதிமன்ற முயற்சியின்மூலம் அவை மீண்டும் பிரிக்கப்பட்டு விட்டன. கிழக்கில் வாழும் தமிழர்கள் வடக்குத் தமிழர்களுடன் இணையவே விரும்புகிறார்கள். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் தமது சனத்தொகை வீதம் வெகுவாகக் குறைக்கப்படும் என்று கிழக்கு முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள். சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றே எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நாம் நம்புகிறேன். இலங்கை 80 வீதம் சிங்களவர்களையும் 20% வீதம் தமிழ்பேசும் தமிழர்களையும் முஸ்லீம்களையும் கொண்ட நாடு. சிங்களவர்களின் ஆதரவு இல்லாமலும், விருப்பம் இல்லாமலும் நாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம் என்று கனவு காணக்கூடாது. தமிழர்கள் இன்னொரு போருக்கு இனிமேல் ஒருபோதும் தயாரில்லை என்பதை நாம் சிங்களவர்களுக்கு சரியான வழியில் விளங்கப்படுத்தவேண்டும். கேள்வி : வடக்கில் இருக்கும் இதுவரை தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகள் என்ன? கருணா: வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் கடந்த 30 வருடகாலப் போரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து விட்டார்கள். புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் போர்ச்சூழலினுள் பிறப்பதால் அவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய எந்தவிதமான பார்வையும் இல்லை. யுத்தக் காயங்களை ஆற்றுவதற்கு சரியான நல்லிணக்க முயற்சிகள் அவசியம். கேள்வி : கடந்த அரசாங்கத்திலும், தற்போதைய அரசாங்கத்திலும் மீளிணக்கம் என்பதே பெரும் பேசுபொருளாக இருந்துவருகிறது. இனிமேலும் இது தொடர்பாக நாம் செய்வதற்கு என்னவிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? கருணா : மீளிணக்கச் செயற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடந்துவருகின்றன. இரு அரசாங்கங்களுமே திறம்படச் செயலாற்றித்தான் வருகின்றன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். புலிகள் அமைப்பு தமிழர்கள் சிங்கள மொழியினைக் கற்றுக்கொள்வதை முற்றாகவே தடைசெய்து வைத்திருந்தது. துரதிஷ்ட்டவசமாக தமிழரில் ஒரு தரப்பினர் இன்னமும் சிங்களம் கற்பதை எதிர்த்தே வருகின்றனர். பல ஐரோப்பிய நாடுகலில் தொழில்வாய்ப்புகளுக்காக ஜேர்மன் மொழியினையோ பிரெஞ்சு மொழியினையோ அவர்கள் மறுபேச்சின்றிக் கற்றுக்கொள்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை நல்லிணக்க முயற்சிகள் திறம்பட நடப்பதற்கு தமிழர்கள் சிங்கள மொழியினையும், சிங்களவர்கள் தமிழ்மொழியினையும் கற்றுக்கொள்வதன்மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையினை உருவாக்கலாம் என்று நம்புகிறேன். மகிந்தவின் கடந்த ஆட்சியின்போது சுமார் 12000 முன்னாள்ப் புலிப் போராளிகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தொழில் ரீதியிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில்முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அவர்களில் பலருக்கு தாம் தவறவிட்ட கல்வியினைத் தொடரவும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இன்று அவர்கள் அமைதியான மக்களாக விளங்குவதோடு, வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிப் பயங்கரவாதிகளுக்காக எப்போதுமே முதலைக் கண்ணீரைச் சிந்திக்கொண்டுதான் இருக்கும். புலிகளின் இனவாதக் கோட்பாடுகளை ஆதரித்துக்கொண்டும், மூன்னாள்ப் போராளிகள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதையும் அது எதிர்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், முன்னாள்ப் போராளிகளின் அரசியல் வருகை பாராட்டப்படவேண்டிய ஒன்று. இவர்களை முன்னாள் அரசுத்தலைவர் மகிந்தவின் கைக்கூலிகள் என்று கூட்டமைப்பு கூறினாலும், அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னாள்ப் போராளிகளை வெளிப்படையாக நிராகரித்திருக்கிறார். ஆனால், எனது கட்சியில் அவர்கள் எப்போதும் இணையலாம், அவர்களின் ஜனநாயக அரசியலுக்கான எனது ஆதரவு என்றும் அவர்களுக்குக் கிடைக்கும். மக்கள் விடுதலை முன்னணியினரே இலங்கையில் வன்முறைக் கலாசாரத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள். அப்படியானால் முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் இணைவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? கூட்டமைப்பில் இருக்கும் சில அரசியல்வாதிகள் கூட முன்னாள்ப் போராளிகள்தான், அப்படியிருக்கும்போது முன்னாள்ப் புலிப் போராளிகள் இணைவதில் என்ன தவறு இருக்கிறது. அடுத்த முக்கியமான பிரச்சினை என்னவென்றால், யுத்தத்தில் தமது கணவன்மாரை இழந்த விதவைகளுக்கான உதவி. சுமார் 85,000 குடும்பங்கள் குடும்பத் தலைவியினாலேயே கொண்டுநடத்தப்படுகின்றன. இவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கேள்வி : நீங்கள் ஒருகாலத்தில் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரிய தளபதி. உங்களின் கடந்தகால செயற்பாடுகள் உங்களை திரும்பிவந்து பாதிக்காது என்று நினைக்கிறீர்களா? கருணா: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆயுதப்போராட்டம் சாத்தியப்படாது என்பதை உணர்ந்துகொண்டு நான் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியதை அனைத்துத் தமிழ்மக்களும் சரியென்றுதான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களும் எனது முடிவினை ஏற்றுக்கொள்வதோடு, பிரபாகரனும் என்னைப்போன்றே ஜனநாயக வழியினைப் பின்பற்றி அரசியலுக்கு வந்திருந்தால் இந்த அழிவுகளையெல்லாம் தடுத்திருக்கலாம் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் அப்பாவிகள், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமைதியான வாழ்வும், தம் பிள்ளைகளுக்கான கல்வியும்தான். எனது பழைய வரலாறு எனக்கு ஒரு ஆசீர்வாதத்தினைப் போன்றது. அவற்றிலிருந்து சரியான பாதையினைத் தெரிவுசெய்து நான் வழிநடக்க எனக்கு அவை உதவுகின்றன. நான் புலிகளிடமிருந்து பிரிந்து சென்றபின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர். தமிழர்கள் எதிலுமே வெற்றிபெறவில்லை. தெற்குச் சிங்கள மக்களும் நான் புலிகளிடமிருந்து வெளியேறி வந்போது என்னை ஆதரித்து ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், நாம் எமது வெற்றியை ஓர் இரவிற்குள் பெற்றுவிட முடியாது. எனது கடந்த 10 வருட அரசியல் சாணக்கியத்தைப் பாவித்து தமிழர்களை சரியான பாதையில் தலைமைதாங்கிச் செல்லமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கேள்வி : ஆனால் சில் அரசியற்கட்சிகள் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதோடு, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்வதுபற்றி உங்களின் கருத்து என்ன? கருணா : உண்மை, அதனை எவரும் முயற்சிக்கலாம். அவர்கள் அப்பாவித் தமிழர்களை இனவாதிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால், உலக அரங்கில் இனவாதத்தினை அரசியலகாச் செய்துவரும் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ இன்று இடமில்லை. பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் ஆதாயத்திற்காக இனவாதம் பேசுகிறார்கள். தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் குறிக்கோள்களைத் தூக்கிப்பிடித்து என்னதான் இனவாதம் பேசினாலும், மக்கள் ஒருபோதுமே அவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. போராட்ட்த்தினால் தாம் அடைந்த அழிவுகள் இனி வேண்டாம் என்கிற நிலைக்கு அவர்கள் எப்போதோ வந்துவிட்டார்கள்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சானிக்க சிறியானந்தவுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் கீழே கேள்வி : நீங்கள் ஒரு தீவிர சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர். எதற்காக உங்களின் அரசியல் நிலையினை மாற்றினீர்கள்? கருணா : நான் ஒரு மிகவும் தீவிரமான சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளன், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவே என்னை கட்சியில் சேர்த்தவர். அவரது அமைச்சரவையில்துணையமைச்சராக நான் பல சேவைகளைப் புரிந்துள்ளேன். ஆனால், கடந்த 2 வருடங்களாக வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களை சில நயவஞ்சகமான தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்திவருகின்றார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மிகவும் பொய்யான வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்று பலர் தமிழர்களுக்கு சரியான, பலமான கட்சியொன்று தேவையென்றும், அக்கட்சிக்கு என்னைத் தலைமை தாங்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் கேட்டுவந்ததன் விளைவாகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல்க் கட்சியை நான் உருவாக்கினேன். கேள்வி : வடக்குக் கிழக்கில் பெரும் வாக்காளர் தளத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால் விடும் நிலையினை உங்களது கட்சி அடையும் என்று நம்புகிறீர்களா? கருணா : நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பதிவுசெய்யப்பட்ட அரசியல்க் கட்சி கிடையாது. அது பல கட்சிகளின் மொத்த அமைப்பாகும். தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள், இலக்குகள், கொள்கைகளுக்காக அவை தமக்குள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு வருகின்றன. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று கூட்டமைப்புக் கூறிவந்தாலும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அவர்களை நிராகரித்தே வருகின்றனர். தமது சொந்த லாபங்களுக்காக கடந்த பல வருடங்களாக தமிழ் மக்களை அவர்கள் தவறாக வழிநடத்தி வருகின்றனர். தாம் தருவதாகக் கூறிய எதனையுமே அவர்கள் இன்றுவரை பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பினர் மீது தமிழர்கள் தமது நம்பிக்கையினை இழந்துவிட்டார்கள். கூட்டமைப்பினருக்கு இனிமேல் எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. கடந்த 2015 தேர்தலில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எண்ணிலடங்கா வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தனர். மேலும், மைத்திரிபாலவின் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினையும் அவர்கள் வழங்கினர். வெறும் வாய்ப்பேச்சினால் வழங்கப்பட்ட "100 நாட்களில் தீர்வு வழங்கப்படும்" எனும் உறுதிமொழியினை நம்பி கூட்டமைப்பினர் அரசுக்கு ஆதரவளித்தனர். இறுதியில் அவர்கள் எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
நல்லிணக்க அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதவளிக்கக் கூடாது - கருணா அம்மான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும், முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இறுதியுத்தத்தில் அரச ராணுவத்தால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச அமைப்பொன்றின் மூலம் விசாரிக்கும் முயற்சிகளுக்கு தற்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கக் கூடாதென்று தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணூவத்தால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதன் மூலம் இனங்களுக்கிடையே இன்று உருவாகிவரும் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். "இலங்கையில் நடைபெற்ற போர் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். அதில் வெளியார் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. சர்வதேச அமைப்பு ஒன்றின்மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமிடத்து இனங்களுக்கிடையே கடந்த 10 வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு விடும்" என்று அவர் கூறினார். "புலிகள் அமைப்பு முற்றாக எம்மால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே புலிகள் சார்பாக இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்" என்றும் அவர் சுட்டிக் காட்டினார். "புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிக்காது, ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை மட்டுமே விசாரிப்பது எந்தவிதத்தில் நியாயம்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் உருவாக்கியுள்ள புதிய கட்சி, போரில் காணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனும் அவரது நிலைப்பாடு, நல்லிணக்க அரசாங்கத்தின் எதிர்காலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் என்று பல்வேறு விடயங்கள் குறித்து அவர் பேசினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கே பி பற்றி எனக்கு விடயங்களைத் தந்துதவ முடியுமா சிறி?
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கே பி இறுதியுத்தத்தில் ஆற்றிய பங்கினைப் போலவே தயா மாஸ்ட்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதியின் பங்களிப்பும் ஆராயப்படவேண்டியது. 2006 காலப்பகுதியில் கொழும்பில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும், புலிகளின் ஊடகப்பிரிவின் பேச்சாளராக அவரே பலராலும் அறியப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தான் கொழும்பில் சிகிச்சைபெற்று வந்த காலத்தில் புலிகளுக்கு எதிரான சக்திகளோடு அவர் நட்பினை வளர்த்துக்கொன்டிருந்தார் என்பதும், பின்னர் அவர் மீண்டும் வன்னிக்குத் திரும்பியபோது தனது புதிய நட்புவட்டாரங்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க வன்னியிலிருந்து புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பற்றீய புலநாய்வுத்தகவல்களை அவர் வழங்கிவந்தார் என்றும் நம்பப்படுகிறது. தனக்கு எஜமானர்களால் வழங்கப்பட்ட வேலையினைக் கன கச்சிதமாக முடித்துக்கொடுத்த தயா மாஸ்ட்டரும் புலிகள் ராணுவ ரீதியில் வீழ்த்தப்பட மூன்று வாரங்களுக்கு முன்னதாக சித்திரை 2009 இல் ராணுவத்திடம் சரணடைந்துகொண்டார். கே பி மற்றும் தயா மாஸ்ட்டர் ஆகியோர் அரசிடம் அடைக்கலமானதற்குக் காரணமாக இவர்கள் இருவரும் கொண்டிருந்த உடல் நலக் குறைவே காரணம் என்று அரசாலும், இவர்களின் அனுதாபிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ இதுபற்றி எவருமே பேசுவதில்லை. ஆக, இவர்களின் துரோகத்தினை மறைக்க இவர்களின் உடல்நலக் குறைவினை அன்று பாவித்தவர்கள், இவர்களின் வேலை முடிந்தவுடன் அதனைக்கைவிட்டு விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் இன்றிருக்கும் ஒரே உடல் நலக் குறை என்னவென்றால், "எதை விற்றாவது உனது உயிரையும், வயிற்றையும் பார்த்துக்கொள்" என்பதாகத்தான் இருக்கும். இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நான் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறேன் அரசாலும் ராணுவத்தாலும் புனையப்பட்ட பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைக்கெதிரான எனது 5 வாதங்களை முன்வைக்கிறேன். இவை ஐந்தும் தவறென்று எவராவது எனக்கு சரியான பதிலை வழங்கினால், அரசு கூறும் பிரபாகரனின் மரணம் தொடர்பான புனைவினை நான் ஏற்றுக்கொள்கிறேன். 1. மே 17 ஆம் திகதியிலிருந்து மே 19 ஆம் திகதி வரையான 2 நாட்களில் மட்டுமே இலங்கை ராணுவமும் அரசும் பிரபாகரன் கொல்லப்பட்ட நிகழ்வினை முன்னுக்குப் பின் முரணாக பல தடவைகள் மாற்றி மாற்றிச் சொல்லி வந்திருக்கின்றன. 2. பிரபாகரன் மரணமடைந்த உண்மையான விதம் கண்டறியப்பட்டுவிடும் என்பதற்காக, தடயங்களை மறைக்கும் நோக்குடன் பிரபாகரன் அவர்களது உடல் அவசர அவசரமாக ராணுவத்தால் தகனம் செய்யப்பட்டமை. 3. இன்றுவரை "பிரபாகரனை நான் தான் எனது துப்பாக்கியால் குறிபார்த்துச் சுட்டுக் கொன்றேன்" என்று எந்தச் சிங்களச் சிப்பாயோ அல்லது தளபதியோ தனது வீரப்பிரதாபத்தை வெளியிடவில்லை. 4. உருமாற்றம் செய்யப்படாத பிரபாகரன் உயிருடன் பிடிப்பட்டதற்கான தெளிவான புகைப்படம் ஒன்று இதுவரை சிங்களத்தால் காட்டப்படவில்லை. அவர் சேகுவேராவைப் போன்றோ அல்லது முகம்மர் கடாபியைப் போன்றோ உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவரது மேலாடையினைக்கிழித்து, மேல் உடலினைக் காட்டி தமது வெற்றியைப் பறைசாற்றியிருப்பார்கள், ஆனால் அதுவும் நடக்கவில்லை. 5. பிரபாகரன் மரணமடைந்து பல வருடங்கள் கடந்துவிட்ட பின்னர்கூட அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை (கோத்தாவின் யுத்தம்) பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான தெளிவான விபரங்களோ, ஆதாரங்களோ இல்லாமல் ஓட்டை விழுந்த பொத்தலாகக் காட்சி தருகிறதே . பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நிறுவ முடியாது, ஆனால் நிச்சயம் அவர் அதைச் செய்யக்கூடியவர்தான் என்பது நம்பக் கூடியது. மேலே நான் முன்வைத்த ஐந்து கேள்விகளைக் கொண்டு, பிரபாகரன் அவர்கள் ராணுவத்தின் தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார் எனும் புனைவுடன் ஒப்பிடும்போது பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார் என்பதே அதிகம் சாத்தியப்பாடு கொண்டது என்பது தெளிவாகிறது. ஆனால், நான் மேலே கேட்ட ஐந்து கேள்விகளுக்கும் இலங்கை ராணுவத்தால் தெளிவானதும், ஆதாரபூர்வமுமான பதில்களைத் தரமுடியுமானால் நான் அவர்கள் கூறும் புனைவினை ஏற்றுக்கொள்கிறேன். முற்றும்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சரி, இனி கோர்டண் வைஸின் The Cage எனும் புத்தகத்திற்கு வரலாம் புத்தகத்தின் பின்புற அட்டை கோர்டண் வைஸின் புகழைப் பாடுகிறது. நியூ யோர்க்கில் வாழ்ந்தவர், உள்நாட்டு யுத்தங்கள் நடந்த நாடுகளில் பணிபுரிந்தவர், பேரிடர் காலங்களில் பணியாற்றியவர், பொஸ்னியா, ஆப்கானிஸ்த்தான், சூடானின் டார்பூர் மற்றும் ஹெயிட்டி என்று பல நாடுகளில் ஐ நா வின் சார்பாக குறைந்தது 12 வருடங்க்ச்ளாவது பணியாற்றியவர் , தற்போது அவுஸ்த்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகத்தின் அதிதியாக உரையாற்றி வருபவர், தி குளோபல் மெயில் எனும் பத்திரிக்கையின் நிருபர் என்று புகழ்வதோடு இலங்கையில் நடந்த படுகொலைகள்பற்றிய தனது விசாரணை அறிக்கையாக இப்புத்தகத்தினை வெளியிடுவதாகவும் கூறுகிறது பின்பக்க குறிப்பு. ஆனால், கோர்டன் கூறும் விடயங்கள் பற்றி நான் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், அவர் தனது புத்தகத்தின் உள்ளடக்கத்திற்காக பெரும்பாலும் இலங்கை ராணுவத்தினதும், அரசினதும் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கை அரசின் தகவல்களை தவிரவும் அவருக்கென்று தகவல் வழங்கும் சில புலியெதிர்ப்புப் புத்தி ஜீவிகளும் இப்புத்தகத்தில் தமது பங்களிப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் எனும் புலியெதிர்ப்பு அமைப்பின் ராஜன் ஹூல், பணம் பார்க்கும் ஒரே நோக்கத்திற்காக புலியெதிர்ப்புக் கட்டுரை வரையும் டி பி எஸ் ஜெயராஜ் எனும் பிரபலங்கள் உட்பட பலர் கோர்டன் வைஸின் தகவல் மூலங்களாக இருந்திருப்பது அவரது புத்தகத்தின் உண்மைபற்றிய நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இப்புத்தகத்தம் எழுதுவதற்கு கோர்டன் வைஸுக்கு மிக முக்கியமான 3 காரணங்கள் இருந்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன். 1. தனது எஜமானான பான் கீ மூன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோர் உட்பட இலங்கையிலும், ஐ நா விலும் பணியாற்றிய கையாலாகாத்தனமான கோழைத்தனமான அதிகாரிகளின் முற்றான தோல்வியினை மறைப்பது. 2. தமிழ்மக்களின் படுகொலைக்கான மொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் மீது சுமத்துவது. 3. கண்துடைப்புக்காக சிங்கள அரசுமீது "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீயும் அழுவது போல அழு" என்று செல்லமாகக் குட்டுவது. புலிகளை விட்டோடிய இரு துரோகிகளின் பங்களிப்பு புலிகளை விட்டோடி, அரசுடன் இணைந்துகொண்ட இரு துரோகிகளான தயா மாஸ்ட்டர் மற்றும் குமரன் பத்மநாதன் ஆகியோர் 2009 இல் இனவழிப்பில் வகித்த பாகம் பற்றியும் இங்கு பேசப்படுதல் அவசியம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் தன்னை புலிகளின் தலைவராக பிரகடனப்படுத்திக்கொண்ட செல்வராசா பத்மநாதன் எனும் கே பி, 2009 இல் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டபோதுதான் புலிகளை விட்டோடியதாக நான் நினைக்கவில்லை. அவருக்கே தெரிந்த காரணங்களுக்காக பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே தமிழரின் எதிரிகளுடன் அவர் கள்ள உறவில் ஈடுபடத் தொடங்கியிருந்தார் என்று அம்பலமாகியிருக்கிறது. அவரின் துரோகத்தனத்தினை நான் ஆரம்பத்திலேயே என்னுடைய இன்னொரு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு கே பி யின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வந்த அறிக்கையிலேயே அவரின் கைங்கரியம் வெளிப்பட்டது. இவ்வாறு வெளிவந்த அறிக்கைகளில் தமிழில் அவர் கூறியிருந்த விபரங்களுக்கும் ஆங்கிலத்தில் அவர் வெலியிட்ட விபரங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "எமது தேசியத் தலைவருடன் இப்போரில் பலியான அனைத்து தளபதிகள், மாவீரர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். இப்போரில் பலியான மாவீரர்களின் விபரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்று அவர் தமிழில் கூறியிருந்தார். ஆனால், அவரது ஆங்கில அறிக்கையில் தலைவர் பற்றியோ அல்லது மாவீரர்களின் விபரங்கள் பற்றியோ எதையுமே அவர் குறிப்பிடவில்லை. அவரின் கைதின் பின்னரான நேர்காணல்களில் தான் எப்போது புலிகளை விட்டு வெளியேறினேன் என்பதுபற்றியோ அல்லது தான் வெளியிடவிருப்பதாகக் கூறிய மாவீரர் விபரங்கள் பற்றியோ அவர் மூச்சுக்கூட விடவில்லை. கே பி தமிழர்களுக்கெதிரான துரோகம் 2009 இற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது என்பது புலனாவதால், புலிகளின் தலைமையின் மரணத்தில் கே பி யினால் வழங்கப்பட்ட புலநாய்வுத்தகவல்கள் நிச்சயம் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சேகுவேரா, கடாபி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் மரணங்களை ஒப்பிடுதல். சேகுவேராவினதும் கடாபியினதும் மரணங்களுக்கிடையில் 44 வருடங்கள் இடைவெளி இருந்தாலும், இவை இரண்டுமே ஒரேவையானவை. இணையத்தில் காணப்படும் ஒளிப்படங்களைப் பார்க்கும்போது கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு அவரின் எதிரிகளால் சித்திரவதை செய்யப்படுவது தெரிகிறது. அவரைக் கொன்றபின்னர், அவரின் எதிரிகள் அவரின் உடலின் மேற்பகுதி வெளித்தெரியும் வண்ணமே புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதேவகையான கொடூரத்தையே சேகுவேராவும் சந்தித்தார். ஆனால், பிரபாகரனுக்கும் அவர் உயிரோடு இருக்கும்பொழுதோ அல்லது இறந்தபின்னரோ இதேவகையான கொடூரம் நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைக்கவில்லை. பல நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினருக்கிடையே காணப்பட்ட பிரபாகரனின் உடல் என்று ரொயிட்டர் வெளியிட்ட புகைப்படம் வேறுவகையான செய்தியைச் சொல்கிறது. அவரது உடல் கொடுமைப்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்களோ அல்லது கடாபியின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களோ பிரபாகரனின் உடலில் தென்படவில்லை. சந்திரப்பிரேமா "நூற்றுக்கண்க்கான வீரர்கள் முண்டியடித்துக்கொண்டு பிரபாகரனின் உடலை பார்க்க ஒருவர் மேல் ஒருவர் ஏறியதாக" கூறியிருந்தாலும்கூட, புகைப்படத்தினைப் பொறுத்தவரை பிரபாகரனின் உடலுக்கு அவர்கள் போர்க்களத்தில் மரியாதை செய்ததுபோலவே தென்பட்டது. உலகின் மிகக்கொடிய பயங்கரவாதியின் உடல் என்று சந்திரப்பிரேம கூறியிருந்தாலும், அதனை உறுதிப்படுத்துவதுபோல பிரபாகரனின் உடலை அலங்கோலப்படுத்தி, அவரின் சீருடையினைக் களைந்து, வெற்றுடம்பாக மாற்ற அவர்கள் முயற்சித்திருக்கவில்லை. இதற்கான காரணம் என்ன? சிலர் பெளத்த மதத்தில் இறந்தவருக்கான மரியாதையினைச் செலுத்துவதற்காகவே அப்படி அவர்கள் நடதுகொண்டார்கள் என்று கூறலாம். ஆனால், பிரபாகரன் எனும் சரித்திரத்தை தாம் கண்களால் கண்டது தொடர்பான ஆச்சரியமும், வியப்பும், தமது வாழ்விற்கான அர்த்தத்தினை அம்மனிதன் தந்திருந்தான் எனும் உணர்வுமே அவர்களை ஆட்கொண்டிருக்கலாம். கடைநிலைச் சிங்களச் சிப்பாய்கள் பிரபாகரனின் உடலுக்கான மரியாதையினை வழங்கியபோது, மகிந்தவும் அவரது வட்டத்தினருமே பிரபாகரனை அவமானப்படுத்தி தமது மேலாதிக்கத்தினை வெளிக்காட்ட அவரின் சீருடையினைக் களைந்து நிர்வாணப்படுத்தியிருப்பது தெளிவாகிறது. அவரை நிர்வாணப்படுத்தி அவமரியாதை செய்து, தமது அரசியல் பெருமையினை காட்டிக்கொண்டதுடன், தமது விருப்பத்தின் பேரிலேயே அவரது உடலினை தகனம் செய்து தமிழ் மக்கள் தமது தலைவனை இறுதியாகக் கண்டு வணக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தினையும் மறுத்திருந்தனர். முஸ்லீம்கள் இறந்த ஒருவரது உடலை 24 மணித்தியாலங்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை என்றபோதும், கடாபியின் உடல் பலநாட்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டே அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரனின் உடலை அவசர அவசரமாக மகிந்த வட்டம் தகனம் செய்திருப்பது அவர் கொல்லப்பட்ட விதம்பற்றி தாம் புனைந்த பொய்கள் வெளிப்பட்டுவிடும் என்கிற அச்சத்தினாலேயே என்பது தெளிவாகிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
மனிதன் பின்வரும் நான்கு வழிகளில் ஒன்றில்த்தான் மரணிக்க முடியும். அவையாவன, இயற்கைச் சாவு, விபத்து, கொலை அல்லது தற்கொலை. இதன்படி முதல் இரு வழிகளின்மூலம் பிரபாகரன் இறந்திருக்கலாம் என்பது சாத்தியமற்றது. மற்றைய இரு வழிகளில், பிரபாகரன் தம்மாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால், கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பார்க்கும்போது பிரபாகரன் தற்கொலைசெய்துகொண்டு இறைந்தார் என்பதே மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது. ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரும், கெரில்லா தலைவருமான சேகுவராவின் 45 ஆவது நினைவுதினம் ஐப்பசி 9 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறே, ஐப்பசி 20 ஆம் நாள் லிபியாவின் நீண்டநாள் தலைவர் முகம்மர் கடாபியின் முதலாவது நினைவுநாளும் அனுட்டிக்கப்படுகிறது. இவர்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டபின்னர் எதிதிரிகளால் கொல்லப்பட்டவர்கள். இவர்களின் உடல்களின் மேற்பகுதியினை புகைப்படமாகக் காண்பித்து செய்திவெளியிட்டிருந்தார்கள். அவர்களின் உடல்களில் இருந்த காயங்களும், இரத்தப் பெருக்குமே என்னை பிரபாகரனின் மரணம் தொடர்பாக மீளாய்வு செய்யவேண்டிய உந்துதலினைக் கொடுத்தது. பிரபாகரனின் மரணம் தொடர்பான எனது முதலாவது கட்டுரையினை 2010 இல் எழுதியதன் பின்னர் , மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிந்த, பலவிடயங்கள் தொடர்பான அறிவும், தெளிவான பார்வையும் கொண்ட ஊடகவியலாளர் ஒருவருடன் நான் நடத்திய சம்பாஷணையின் எழுத்துவடிவினை இங்கே பகிர்கிறேன். சச்சி : பிரபாகரனின் மரணம் தொடர்பான உங்களின் நிலைப்பாட்டினை நான் அறியலாமா? நீங்கள் அண்மையில் நியூ யோக்கர் பத்திரிக்கையில் ஜொன் லீ அண்டர்சன் அவர்களின் இதுதொடர்பான கட்டுரையினையும், அதற்கான எனது பதிலையும் படித்திருப்பீர்கள். அவர் தனது கட்டுரையில் பிரபாகரனின் உடலின் புகைப்படங்கள் தனக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், குண்டு அவரின் மண்டையோட்டினை துளைத்து வெளியேறும் "எக்ஸிட் வூண்ட்" காணப்பட்டதாகவும் எழுதியிருந்தார். அவரின் இந்த கூற்று என்னைக் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற இப்புகைப்படங்களின்படி அவரின் இரு கைகளிலும் சுருக்கங்கள் தெரிகின்றன. அதாவது தண்ணீரில் பல மணித்தியாலங்கள் தோய்ந்த நிலையில் அவை சுருக்கங்களுடன் காணப்பட்டன. சாதாரண மரணங்களில் இவ்வகையான தோல்ச் சுருக்கங்கள் காணப்படுவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை பிரபாகரன் பொட்டாஸியம் சயனைற்றினை உட்கொன்டு முன்னரே மரணித்துவிட்டிருக்க வேண்டும். உயிரற்ற அவரது உடலை எடுத்துவந்த ராணுவத்தினர் தாமே அவரைக் கொன்றதாகக் காட்டுவதற்காக, பின்னரே அவரின் தலையில் துப்பாக்கியினால் சுட்டிருக்க வேண்டும். இவ்விடயம் தீர ஆராயப்படவேண்டிய தேவை இருப்பதாலும், அவரின் உடலை இனிமேல் எம்மால் பார்க்கமுடியாது என்பதாலும், அவரது நெற்றியில் ஏற்பட்ட காயம் அவர் உயிருடன் இருக்கும்போது ஏற்பட்டதா அல்லது மரணம் அடைந்தபின்னர் உருவாக்கப்பட்டதா என்பதை உங்களால் கூறமுடியுமா? என்னைப்போன்றே, உடல்த் தடயவியல் நிபுணரான பேராசிரியர் கீத் சிம்ப்சனும் இதனை நிச்சயம் அவதானித்திருக்கிறார். எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் தடயங்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். 1. பிரபா உண்மையாகவே உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், அவரைக் குறிபார்த்துச் சுட்டவர் இன்றைக்கும் தனது வீரப்பிரதாபங்களை வெளியே பறை சாற்றிக்கொண்டு இருந்திருப்பார். ஆனால், இதுவரை சிங்கள ராணுவத்தில் ஒருவராவது பிரபாகரனைச் சுட்டது தானே என்று உரிமை கோரவில்லை. 2. பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய கருணா வேண்டுமென்றே "அவரது உடலில் சயனைட் வில்லை காணப்படவில்லை" என்று கூறியிருந்தான். இது தனது எஜமானர்களின் கட்டளைப்படியே கருணாவினால் கூறப்பட்டது என்பது தெளிவாவதுடன், கருணா கூறியததற்கு எதிர்மாறாக, பிரபாகரன் சயனைட் உட்கொண்டே மரணித்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது. அந்த ஊடகவியலாளர் : மரணமானவுடன், நீர்ப்பற்றுக் குறைவதால் தோல் சுருங்கிவிடுகிறது. அதேவேளை, மரணமானபின்னர் உடல் நீரிற்குள் இருந்திருந்தால் தோல் வீங்கியதாகவோ அல்லது நீர் கட்டியது போன்றறே தென்படும். ஒருவர் உயிருடன் இருக்கும்போது ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கும், இறந்தபின்னர் ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குமிடையே வேறுபாட்டினைக் கன்டறிவது சாத்தியமானதே. உயிருடன் இருக்கும் ஒருவர் சுடப்படும்போது சூட்டுக்காயப்பகுதியில் தோலும் அதன் கீழான பகுதிகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுடப்பட்டதாகக் கூறப்படும் தலைப்பகுதியின் சிதறல்களும், குருதிக் கசிவும் ஏற்பட்டிருக்கும். இறப்பின் பின்னர் குருதி கசிந்துவிடுவதால் பெரும்பகுதி இரத்தம் கொல்லப்பட்டவரின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. பெரும்பகுதி இரத்தம் கட்டியாகிவிடுவதால், வேறு பகுதிகளுக்கு இரத்தம் செல்வதும் தடைப்பட்டு விடுகிறது. ஆனால், இது எவற்றையுமே எம்மால் இப்போது உறுதிப்படுத்த முடியாது. சச்சி : நான் முன்னர் உங்களுக்குக் கூறியதன்படி, இலங்கை ராணுவத்தால் வெளியிடப்பட்டிருக்கும் பிரபாகரனின் இரு புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன். இப்படங்களில் பிரபாகரனின் கைகளிலும் கால்களிலும் காணப்படும் வெண்ணிறத்தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில் : மரணத்துடன், உடலின் பகுதிகளுக்கான ரத்த ஓட்டத்தை இதயம் நிறுத்திவிடுகிறது. இரத்தம் இறந்தவரின் உடலின் சில பகுதிகளில் தேங்கிவிட்டபின்னர் கட்டியாகிவிடுகிறது. உடல் அண்ணாந்து கிடக்குமாயின் இந்த இரத்தச் சேர்ப்பு பெரும்பாலும் அடிப்பகுதியிலேயே நடக்க வாய்ப்பிருக்கிறது. படத்தின்படி, மேற்சட்டைக்கும், காற்சட்டைக்கும் இடையிலான பகுதியில் ஊதா நிறத்திலான பகுதியொன்றினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதேவகையான ஊதா - நீல நிற பகுதி அவரின் தலைப்பகுதியிலும், காதுக்கு அருகிலும் காணப்படுகிறது. அதேவேளை, உடலின் அவசியமற்ற பகுதிகளான கை கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிவிடுவதாலேயே அவை வெண்ணிறத்தன்மையுடையனவாகக் காணப்பட்டிருக்கலாம். மரணத்தின் பின்னர் இப்படி நடப்பது இயல்பானது. உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால், மரணம் உடனடியாக நடந்திருக்கும், இரத்தக் கசிவும் அதிகம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், மேலே படத்தில் காணப்படும் காயங்களைப் பார்க்கும்போது அவர் மரணமடைந்தபின்னரே சுடப்பட்டதாகத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் சில நேரத்தின்பின்னர் உடல் ஒரேவிதமாகவே தென்பட்டிருக்கும். உடலில் இருந்து ரத்தம் வெளியேறிவிடுவதனால் உடலின் சில பகுதிகள் வெண்மையாகக் காட்சிதருவது இயல்பானது. சச்சி : உடலின் அனைத்துப் பாகங்களும் வெண்மையாக இருப்பதற்கும், உயிருடன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா? உடலின் சில இடங்களில் காணப்பட்ட ஊதா - நீல நிறப் பகுதிகள் கூறும் விடயம் சயனைட் உட்கொண்டதன் விளைவுதான் என்று நம்புகிறீர்களா? பதில் : தடயவியல் பரிசோதனையிலிருந்து தோலின் தோற்றத்தினைப் பயன்படுத்தி மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பது கண்டறிவது கடிணமானது. சில இடங்களில் இரத்தம் தேங்கிவிடுவதாலேயே ஊதா நிறத் தோல்கள் தெரிகின்றன. சிலவேளை இரத்தத்தில் ஒக்சிஜன் குறைபாட்டினால் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சயனைட் உட்கொண்டால் கடும் சிவப்பு நிறத்திலேயே இப்பகுதிகள் இருந்திருக்கும். உடலில் ரத்தம் முற்றாக ஓடிவிடுவதால் அவை வெண்மையாகக் காட்சியளிக்கும் என்று நான் கூறினாலும், சிலவிடங்களில் இரத்தம் தேங்கி நீல நிறமாகக் காட்சியளிப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். ஆகவே, நான் அவதானித்தவை நிச்சயமாக நடந்திருக்கும் என்று என்னால் உறுதிப்படுத்த முடியாது. சச்சி : உங்களின் விளக்கத்திற்கு நன்றி. உண்மையாக நடந்ததைக் கண்டறிய முடியாதிருப்பது துரதிஷ்ட்டமே.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பிரபாகரனின் மரணம் தொடர்பாக இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு சந்திரப்பிரேமவினால் எழுதப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் இறுதியுத்தகால சம்பவங்களின் தொகுப்பினை இலங்கை ராணுவத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியும். இதற்கான முக்கிய காரணம் இப்புத்தகம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபயவினதும், அவரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இலங்கை ராணுவத்தினதும் முழுமையான ஆசீர்வாதம் இப்புத்தகத்தினை எழுதவும், வெளியிடவும் கிடைத்தது என்பது. பிரபாகரனின் மரணம் தொடர்பாக இப்புத்தகம் வெளியிட்ட நிகழ்வினை , இப்புத்தகம் தொடர்பான எனது முந்தைய விமர்சனத்தில் சேர்த்துக்கொள்ள முயலவில்லை. ஆகவே அப்புத்தகத்தின் 488 ஆம் 489 ஆம் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் பிரபாகரனின் மரணம் தொடர்பான செய்தியிலிருந்து இதனை ஆரம்பிக்கிறேன். "மே 18 அன்று பிற்பகல் 59 ஆவது டிவிஷன் படையினர் புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் பாணு ஆகியோரின் தலைமையில் முன்னேறிவந்த புலிகளின் அணியொன்றினை எதிர்கொண்டு , அவர்கள் அனைவரையும் கொன்றனர். மறுநாள் அதிகாலை, நந்திக்கடல்ப் பகுதியில் அமைந்திருந்த 800 மீட்டர்கள் நீளமும், 20 மீட்டர்கள் அகலமும் கொண்ட சதுப்பு நிலப் பற்றைக்காடுகளுக்குள் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கென்று 4 ஆவது விஜயபாகு ரெஜிமென்ட்டினதும், 8 ஆவது சிறப்புப் படைகள் அணியினதும் வீரர்கள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டது. ராணுவ அணி உள்நுழைந்தவுடன் தமது அணிகளைவிட்டு சிதறி தனித்தனியாக இயங்கிவந்த புலிகளுக்கும் ராணுவ அணிக்கும் இடையில் துப்பாக்கிச் சமர் ஆரம்பமானது. கேணல் ரவிப்பிரியவின் கருத்துப்படி சுமார் 30 புலிகள் வரை அப்பற்றைக் காட்டுகளுக்குள் ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதன்பின்னர் மேலும் இரு கொமாண்டோ அணிகளை பற்றைக்காட்டினுள் இறக்கிய ரவிபிரிய மூன்று புலிகளை உயிருடன் கைதுசெய்தார். அவர்களின் கூற்றுப்படி பிரபாகரனும் இன்னும் 30 புலிகளும் அப்பற்றைக்காடுகளுக்குள் ஒளிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பற்றைக்காட்டினை நோக்கிக் கடுமையான தாக்குதலை அங்கிருந்த படையினர் நடத்தினர். எதிர்த்தாக்குதல்கள் முற்றாக நிற்கும்வரை படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதன்பின்னர் இப்பற்றைக்காடுகளுக்குள் தேடுதலினை ஆரம்பித்த படையினரின் தளபதி பிரபாகரனின் உடலைக் கண்டுபிடித்தார்" . "பிரபாகரனின் உடல் இன்னமும் சற்று வெப்பமாகவே இருந்தது அவர் அப்போதுதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அன்று காலை பிரபாகரன் சவரம் செய்யாததனால், அவரின் முகத்தில் வெண்ணிறமான முடிகள் மெதுவாக முளைக்க ஆரம்பித்திருந்தது தெரிந்தது. 4 ஆவது விஜயபாகு அணியின் வீரர்கள் பிரபாகரனின் உடலைத் தோள்களில் சுமந்துவந்து தமது உயர் அதிகாரிகளின் முன்னால் அடையாளப்படுத்தலுக்காக வைத்தனர். உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாதிகளின் தலைவனின் உடலை பிரிகேடியர்கள் ஜகத் டயஸ், சவேந்திர சில்வா, சகி கல்லகே மற்றும் கமால் குணரட்ன ஆகியோர் பார்வையிட்டனர். பிரபாகரனின் உடலை பார்வையிட நூற்றுக்கணக்கான படையினர் ஆர்வம் மிகுதியால் , ஒருவர் மீது ஒருவர் ஏறி முண்டியடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அன்று பிற்பகல் புலிகளின் முன்னாள்ப்பேச்சாளர் தயா மாஸ்ட்டர் மற்றும் கருணா அம்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் அங்குவந்து இறந்தது பிரபாகரன் தான் என்பதை உறுதிப்படுத்தினர்". சரி, சந்திரப்பிரேமவினால் இங்கே தரப்பட்ட இத்தகவல்களை நாம் ஆராயலாம். முதலாவது பந்தியின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள விடயங்களின்படி, 1. பிரபாகரனின் நெற்றியில் பட்ட துப்பாக்கிக் குண்டினாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிப்பதற்கான கண்ணால் கண்ட சாட்சியங்கள் இராணுவத்திடம் இல்லை. 2. பெயர் குறிப்பிட விரும்பாத குறிபார்த்துச் சுடும் வீரர் கூட தான் பிரபாகரனைக் குறிவைத்தே தாக்கியதாகக் கூறமுடியவில்லை. 3. ஆக, முதலாவது பந்தியின் சாராம்சம் என்னவெனில் பிரபாகரனின் உயிரற்ற உடல் ராணுவ அணித்தளபதியினால் கண்டெடுக்கப்பட்டது என்பதுதான். 4. கொழும்பின் சில சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரபாகரனின் உடல் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தபோதும்கூட, சந்திரப்பிரேம இதுபற்றி தனது புத்தகத்தில் மூச்சுக் கூட விடவில்லை. ஆக, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியவர்கள் கருணாவும் தயா மாஸ்ட்டரும் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவரும் புலிகளால் வெளியேற்ரப்பட்டவர்கள் என்பதும், தமது பிழைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ராணுவம் தமக்குச் சொல்லிக்கொடுத்த "இது பிரபாகரன் தான்" எனும் கிளிப்பிள்ளைப் பாடத்தினை தவறாமல் ஒப்பிவிப்பார்கள் என்கிற சிந்தனையில்லாமலேயே இவர்களை மேற்கோள் காட்டி சந்திரப்பிரேம இதுதொடர்பாக உறுதிப்படுத்தியதுதான்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
சேகுவேரா கேணல் கடாபி போன்றவர்களின் வாழ்வினூடு வேலுப்பிள்ளை பிரபாகரணின் மரணத்தை மீளாய்வு செய்தல் ஆக்கம் : சச்சி சிறிகாந்தா காலம்: புரட்டாதி, 2012 இணையம் : தமிழ்ச் சங்கம் அமெரிக்கா நான் இன்றுதியாக பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றி எழுதியது ஜூன் மாதம் 2 ஆம் திகதி, 2010 இல் என்று நினைக்கிறேன். "பிரபாகரனின் மரணம் தொடர்பான கதையினை பகுப்பாய்வு செய்தலும், பொய்யர்களை வெளிப்படுத்துதலும்" எனும் தலைப்பில் அதனை நான் எழுதியிருந்தேன். சுமார் 28 மாதங்கள் கடந்த நிலையில் அந்த நிகழ்வினை நான் மீண்டும் மீளாய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த 28 மாத காலத்தில் நடந்த சில முக்கியமான காரணங்களுக்காக இதனை மீலாய்வுச் செய்வது அவசியம் என்று கருதுகிறேன். அவற்றுள் முதலாவது 2010 ஆமாண்டு புரட்டாதியில் நடத்தப்பட்ட லிபியாவின் நீண்டகால அதிபரான கேணல் முகம்மர் கடாபியின் படுகொலை. இரண்டாவது இறுதிப்போர்க்காலத்தில் ஐ நா வின் பேச்சாளராக கொழும்பில் தங்கியிருந்த கோர்டன் வைஸ் எழுதிய "தி கேஜ் - சிறிலங்காவுக்கான போரும், தமிழ்ப் புலிகளின் இறுதிநாட்களும்" எனும் புத்தகத்தின் வெளியீடு. மூன்றாவது, மே மாதம் 2012 இல் சந்திரப்பிரேம என்பவரால் புனையப்பட்ட "கோட்டாவின் போர்" எனும் தலைப்புடன் வெளியான, இறுதியுத்தம் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டது என்பதுபற்றிய இலங்கை ராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட சில நிகழ்வுகளின் தொகுப்புக்கள். முன்னுரை மேலும் இதுதொடர்பாக நான் எழுதுவதற்கு முன்னர் சில விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரு பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் பல தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் அவர்களின் கூட்டத்தைச் சார்ந்தவன் அல்ல. ஆகவே, 2009 மே மாதத்தில் பிரபாகரன் அவர்கள் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைக் கொண்டே நான் இதனை எழுதுகிறேன். ஆனால், பிரபாகரன் என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு இடத்தில் மீண்டு தோன்றினால் பல லட்சக்கணக்காணோர் ஆச்சரியப்படலாம், அதிர்ச்சியடையலாம், ஆனால் நான் இந்த லட்சக்கனக்காணோரில் ஒருத்தன் அல்ல. அதேவேளை, நான் விடயங்கள் இவ்வாறுதான் நடக்கும் என்று எதிர்வுகூறும் பூசாரியும் அல்ல. நான் ஒரு விஞ்ஞானி. கிடைக்கும் தகவல்களைக் கொண்டு எனது முடிவுகளை நிறுவுகிறேன். சில முக்கியமான தகவல்கள் எனக்குக் கிடைக்காதவிடத்து, வேறு வழிகளில் அத்தகவல்களுக்கு நிகரான தகவல்களைக் கொண்டு நான் எனது முடிவுகளை அடைகிறேன். அதேவேளை, எனக்குத் தேவையான சரியான தகவல்கள் கிடைக்கப்பெறும் இடத்து, அதற்கேற்றாற்போல் எனது முடிவுகளையும் மாற்றிக்கொள்கிறேன். புலிகளை விட்டு பிரிந்தோடிய குமரன் பத்மநாதன் மற்றும் அவரின் ஏவலாளிகள் தற்போது பிரபாகரனின் மரணம் தொடர்பாகப் பேசவேண்டிய அல்லது மீளாய்வுசெய்யவேண்டிய தேவை என்னவென்று என்னைக் கேட்கலாம். ஆனால், அதுபற்றி தற்போது பேசவேண்டிய தேவை இருப்பதாகவே நான் கருதுகிறேன். சுமார் 190 வருடங்களுக்கு முன்னதாக மரணமடைந்த நெப்போலியனின் மரணம் தொடர்பாக இன்றுவரை பேசப்பட்டும், மீளாய்வுசெய்யப்பட்டும் வரும் நிலையில், தமிழரில் பிறந்து நெப்போலியனின் தரத்திற்கு நிகராக வாழ்ந்த பிரபாகரனின் மரணம் பற்றியும் நிச்சயம் பேசப்படவும், ஆழமாக மீளாய்வு செய்யப்படுதலும் அவசியமானது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
மனிதகுலத்திற்கெதிரான போர்க்குற்றங்களைப் புரிந்த கருணா எனும் குற்றவாளியை தப்பிக்க விட்டது இங்கிலாந்து அரசின் திட்டமிட்ட தவறாகும் - கருணா இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அதிகாரிகள் சகிதம் வந்திறங்கியவேளை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட கண்டனம் காலம் : ஆடி, 5, 2008 மூலம் : ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் புலிகளைப் பிளவுபடுத்தி, பிரிந்து சென்று இயங்கி, பின்னர் இங்கிலாந்திற்குப் போலியான கடவுச் சீட்டுடன் சென்று பிடிபட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீண்டும் இலங்கையினை வந்தடைந்திருக்கிறார். கடந்த கார்த்திகை மாதம், இலங்கையின் ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் கடவுச் சீட்டினைப் பாவித்து, பாதுகாப்புச் செயலாளரின் உதவியுடன் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்ற கருணா, அங்கு குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது பலருக்கும் நினைவிலிருக்கலாம். கொழும்பிலிருந்துவரும் ஊடகச் செய்திகளின்படி கருணாவோடு இங்கிலாந்து அதிகாரிகள் சிலரும் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. புலிகளின் தலைவருக்கு அடுத்ததாக அமைப்பில் மிகச் செல்வாக்குள்ளவராக விளங்கிய கருணா 2004 இல் புலிகள் இயக்கத்தை பிரதேச ரீதியாகப் பிளவுபடுத்திக்கொண்டு அரச ராணுவத்துடன் சேர்ந்துகொண்டார். பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எனும் பெயரில் தனது குழுவைப் பதிவு செய்திருந்தார். பின்னர் அக்கட்சியும் இரண்டாகப் பிரிந்தபின்னர், கருணா இலண்டனுக்கு பாதுகாப்புச் செயலாளரின் அறிவுருத்தலின்பேரில் உருவாக்கப்பட்ட போலிக்கடவுச் சீட்டினைப் பாவித்து சென்றார். இதேவேளை, சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்றான ஹியூமன் ரயிட்ஸ் வொட்ச் அமைப்பு கருணாவை சிறையிலிருந்து விடுவித்தமைக்காக இங்கிலாந்து அரசை சாடியிருப்பதுடன், போர்க்குற்றங்களைச் செய்தவர் என்று நம்பப்படும் ஒரு குற்றவாளியினை விசாரணையெதுவும் இன்றி மீண்டும் இலங்கைக்கே திரும்பிச் செல்ல அனுமதித்தது குறித்தும் கடுமையான கண்டனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த மனிதவுரிமை அமைப்பு இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கருணாவின் கட்டளையின் கீழ் அவரின் ஆயுதக் குழு இலங்கையில் நடைபெற்றுவரும் சிவில்யுத்தத்தில் மிகவும் கொடிய மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், சிறுவர்களையும், இளைஞர்களையும் கடத்திச் செல்வது, சித்திரவதை செய்வது, பொதுமக்க்களையும், எதிரணிப் போராளிகளையும் கூட்டாகச் சுட்டுக் கொல்வது ஆகிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது. "இங்கிலாந்து அரசிடம் ஒரு ஒரு பேர்போன போர்க்குற்றவாளி கடந்த 6 மாதங்களாக அடைக்கலமாகியிருந்தார், ஆனால் அவர்மீது குற்றங்களைப் பதிவுசெய்து விசாரிக்க இங்கிலாந்து அரசு முயலவில்லை. கொடூரமான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒருவரைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்தை இங்கிலாந்து அரசு தெரிந்தே தவறவிட்டு விட்டது" என்று அவ்வமைப்பின் அதிகாரி பிரட் அடம்ஸ் தெரிவித்தார். https://www.hindustantimes.com/search?q=TMVP
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பிரபாகரனை வீழ்த்தி, இப்போரில் வெல்வதற்கு நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறோம் - கருணா காலம் : 5, ஆடி, 2008 மூலம் : ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தி, வெளியேறிச் சென்ற கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் , "பிரபாகரன் தலைமையிலான புலிகள் குழு தற்போது மிகவும் பலவீனமான நிலையினை அடைந்து விட்டது. ஆனால், அவர்களை முற்றாக அழிக்க சில மாதங்கள் ஆகலாம்" என்று கூறியுள்ளார். "பிரபாகரனின் புலிகள் குழு தற்போது ஒரு பாதுகாப்பு முன்னரங்கினையே அமைத்துவருகின்றது. அவர்களால் தற்போது வலிந்த தாக்குதல் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளமுடியாதவாறு மிகவும் பலவீனமான நிலையினை அடைந்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார். "ஆனாலும், அவர்களை முற்றாக அழித்து, போரினை வெற்றிகொள்ள ராணுவத்தினருக்கு ஒரு சில மாதங்களாவது தேவைப்படலாம். அது வருகிற மாதமோ அல்லது அதன்பின்னரோ நடக்க வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இப்போரினை வெல்லும் நோக்கில் செயற்பட்டு வருகிறோம்" என்று பிரபாகரனின் முன்னாள் தளபதியும் நெருங்கிய சகாவுமான கருணா பி பி சியின் சிங்களச் சேவையான சந்தேஷயவுக்குத் தெரிவித்தார். இங்கிலாந்திற்குப் போலிக் கடவுச் சீட்டுடன் உள்நுழைய முயன்று, குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, 9 மாதங்கள் சிறப்பு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் இலங்கை - இங்லிலாந்து அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் மீளவும் இலங்கைக்கு வந்துசேர்ந்த கருணா, தற்போது பரவலாக பல செய்திச் சேவைகளிலும் பேட்டியளித்துவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இங்கிலாந்துப் பயணத்திற்கோ அல்லது அவர் மீண்டும் நாடு திரும்பியதற்கோ தாம் உதவவில்லை என்று அரசாங்கம் தொடர்ச்சியாக மருத்துவருவத்ரும் குறிப்பிடத் தக்கது. இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியிருக்கும் கருணா சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு விடுத்துவரும் வேண்டுகோளில் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளான புலிகளை முற்றாக அழித்து இப்போரில் வெற்றியீட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்று கூறிவருகிறார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த கருணா, தனது முன்னாள் சகாவான பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், தனது கட்சியின் தலைவராகவும் இயங்குவது தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். https://www.hindustantimes.com/search?q=karuna amman
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இலங்கையில் தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களே தாம் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழ்வதற்காக பிரபாகரனுக்குப் பணம் அனுப்பி வன்முறையினை வளர்த்துவந்தார்கள் - கருணா மூலம் : சண்டே ஒப்சேர்வர் மற்றும் ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் காலம் : வைகாசி 23, 2010 புலிகளின் முன்னாள் தளபதியும், இந்நாள் அரச அமைச்சருமாக விளங்கும் கருணா எனப்படும் முரளீதரன் அவர்கள் "புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தமக்குள் பிளவுபட்டுப் போயுள்ளதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் மாயைபற்றி அவர்கள் வெகுவாகக் குழம்பிப்போயிருப்பதாகவும்" கூறியுள்ளார். "தமக்குள் ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துவார்கள் என்பது அறிவீனமானது" என்று மீள்குடியேற்ற அமைச்சரான கருணா தெரிவித்தார். 2004 ஆம் அண்டில், புலிகள் இயக்கத்தினை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பினை உருவாக்கியிருந்தார். பின்னர் அக்கட்சியும் இரண்டாக உடைந்ததையடுத்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சராகவும், அக்கட்சியின் உப தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார். "புலம்பெயர் தமிழர்கள் தமக்குள் மூன்று பிரிவுகளாக உடைந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் விஸ்வநாதன் ருத்திரகுமார், நோர்வேயினைத் தளமாகக் கொண்டியங்கும் நெடியவன், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் இன்னொரு பிரிவினர் என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொருவரும் தத்தமது சிந்தனைகளில் நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுகிறார்கள். தோல்வியடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஈழக் கனவுபோல இவர்களின் நாடுகடந்த தமிழீழ அரசுக் கனவும் உடைந்து சுக்குநூறாகிப் போகும்" என்று அவர் மேலும் கூறினர். "இலங்கையில் வாழும் தமிழர்களின் சிறியளவு ஆதரவுகூட இல்லாமல் புலம்பெயர் தமிழர்களால் எவ்வாறு ஒரு நாட்டை நிறுவிட முடியும்? தம்மை அழித்ததாற்காகப் புலிப் பயங்கரவாதிகளை இலங்கையிலிருக்கும் தமிழர்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளார்கள். இலங்கையில் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான எந்த அமைப்போ அல்லது கட்சியோ தமிழர்களுக்கு என்று தனியான நாடொன்றினை உருவாக்க நினைத்தால் தமிழர்கள் நிச்சயம அவர்களைத் தோற்கடிப்பார்கள்". "வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது ஜனாதிபதி கெளரவ மகிந்த ராஜபக்ஷ மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தமது கவலைகளுக்கெல்லாம் அவர் தீர்வுகளைத் தருவார் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்களுக்கான அப்விருத்தியென்பது கடந்த 30 ஆண்டுகளாக முன்னைய அரசாங்கங்களினாலும் , புலிகளாலும் மறுக்கப்பட்டிருந்தது" என்று அரச ஆதரவுப் பத்திரிக்கையான சண்டே ஒப்சேர்வருக்கு அவர் தெரிவ்fத்தார். "முன்னைய அரசுகளின் தவறுகள் எவ்வாறாக இருந்தபோதும், தமிழர்களின் குறைகளை நீக்கப்போவதாக எமது ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதுமே இலங்கைக்கு வரப்போவதில்லை. தாம் தொடர்ந்தும் அந்த நாடுகளில் வாழ்வதற்காக அங்கிருந்துகொண்டு இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த அவர்கள் முயன்று வருகிறார்கள்" என்றும் அவர் கூறினார். "புலம்பெயர் தமிழர்கள் புலிகளின் கைகளில் அல்லற்படவில்லை. புலிகளால் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் இருப்பவர்கள் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களே. ஆகவே, தாம் தொடர்ந்தும் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்வதற்காகப் பயங்கரவாதப் புலிகளுக்குத் தொடர்ந்தும் பணம் அனுப்புவதன்மூலம் இலங்கையில் வன்முறைகளை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் வளர்த்துவந்தார்கள்" என்று கருணா கூறினார். புலம்பெயர் தமிழர் பற்றி தொடர்ந்தும் பேசிய கருணா, "ஆனால், சில புலம்பெயர் தமிழர்களுக்கு உண்மை இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து, சுகபோகங்களை அனுபவிக்கும் இந்த புலம்பெயர் தமிழர்களிடமிருந்து அவர்கள் தம்மை அந்நியப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். நான் எமது ஜனாதிபதி மகிந்தவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றம், புணர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்கள் பற்றி இந்த புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறேன்" என்றும் அவர் கூறினார். https://www.hindustantimes.com/world/tamil-diaspora-divided-over-transnational-govt-karuna/story-SCcX4YVMKJ5gi2KmrwXnHK.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ரஜீவ் காந்தியின் படுகொலையினை திட்டமிட்டு நடத்தியவர்கள் பிரபாகரனும் பொட்டு அம்மானுமே. பிரபாகரனினாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின. சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனையடைந்தேன் - கருணா காலம் : சித்திரை 29, 2009 மூலம் : பிரஸ் டஸ்ட் ஒப் இந்தியா & ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவ்வியக்கத்தின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுமே முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினைத் தீட்டி, இயக்கத்தினுள் எவருமே அறியாவண்ணம் நடைமுறைப்படுத்தினார்கள் என்று புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும், பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவருமாக இருந்து பின்னர் இயக்கத்திலிருந்து விலகி இலங்கை ராணுவத்தில் இணைந்து தற்போது மகிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். "அவர்கள் இருவரும் , இயக்கத்தில் வேறு எவரும் அறிந்திடாவண்ணம் இந்தப் படுகொலைக்கான திட்டத்தினை வகுத்துச் செயற்பட்டார்கள்" என்று அவர் கூறினார். புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, "நான் எப்போதும் சமாதானத்தையே விரும்பி வந்தேன். பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சாத்தியமானது என்று முழுவதுமாக நம்பியிருந்தேன். ஆனால், மாயையான உலகில் வாழ்ந்துவந்த பிரபாகரனுக்கு நான் சொல்லிவந்தது புரியவில்லை" என்று கூறினார். "ராஜீவைக் கொல்லும் நாசகாரத் திட்டத்தினை அவர்கள் இருவருமே மிகவும் ரகசியாமத் தீட்டினார்கள். வேறு எவரையும் அவர்கள் நம்பவில்லையென்பதையே இது காட்டுகிறது. எனக்கு இவ்வாறான நாசகாரப் படுகொலைகளில் நம்பிக்கை இருக்கவில்லை, இவ்வாறான அவர்களின் செயல்களை நாம் எப்போதும் எதிர்த்தே வந்திருந்தேன்" என்று இன்று அமைச்சராகவிருக்கும் கருணா பி டி ஐ செய்திச் சேவைக்குக் கூறினார். ராஜீவ் காந்தி 1991, மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாடு சிறிபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தவேளை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். அவரைக் கொல்ல உத்தரவிட்டது பிரபாகரனும் பொட்டு அம்மானும் தான் என்கிற முடிவினை கருணாவும் உறுதிப்படுத்தினார். 1987 இல் இலங்கைக்கு இந்திய ராணூவத்தினரை அனுப்பியதற்குப் பழிவாங்கவே பிரபாகரன் ராஜீவைக் கொன்றார் என்று பரவலாக நம்பப்படுகிறது. "வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானத்தில் ஆர்வம் காட்டுமாறும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் நான் அவருக்குத் தனிப்பட முறையில் எழுதிய கடிதத்தை என்முன்னாலேயே கிழித்துப்போட்ட பிரபாகரன், என்னை அவமானபடுத்தினார். புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். பிரபாகரனின் ஒத்துழைக்காமை எனும் அகம்பாவத்தாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே". "பிரபாகரன் ஒருபோதுமே இனப்பிரச்சினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டுமவிடும் என்று நம்பியிருக்கவில்லை. யுத்தத்தினாலும், வன்முறையாலுமே தீர்வு காணலாம் என்று அவர் இறுதிவரை நம்பியிருந்தார். அவர்களின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூட எனது நிலைப்பாட்டிலேயே இருந்தார், ஆனால் பிரபாகரன் அவரைக் கூட மதிக்கவில்லை" என்று கருணா கூறினார். புலிகளிடமிருந்து விலகி ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட கருணா, தனது குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்துகொண்டிருந்தார். ஆனால், அவரின் கீழ் செயற்பட்டுவந்த இன்னொரு ஆயுததாரியான பிள்ளையான் கட்சியின் தலைமைப் பொறுப்பினைக் கைப்பற்றியதையடுத்து கருணா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், அக்ககட்சியின் உபதலைவர்களில் ஒருவராகவும் பதவியேற்றார். கருணா இலங்கையின் நீர்ப்பாசண அமைச்சராகவும், மீலிணக்க அமைச்சராகவும் பதவிவழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட அதேநேரம், அவரது வைரியான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக அரசு ஆதரவுடன் பதவியேற்றார். https://www.hindustantimes.com/world/prabhakaran-pottu-amman-hatched-rajiv-killing-plot-karuna/story-8dfdZvaONlTbBWCv1fFSAP.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
அண்ணை, அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களை தாங்களே முன்னின்று கொன்றும், கொல்லவும் உதவியதை எப்படி ஏற்றுக்கொள்வது? குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தளத்தை அழிப்பதற்கு கருணாவே முதலில் தனது போராளிகளை தயார்ப்படுத்தி வந்தார். ஆனால், பிள்ளையான் இடையில் முறித்துக்கொண்டு ஓட, வெறும் 300 சிறுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த கருணாவால் புலிகளின் தளத்தைக் கைப்பற்ற முடியாது என்று உணர்ந்த ராணுவம் அத்தாக்குதல் திட்டத்தினை பிள்ளையானிடமே வழங்கியிருந்தது. ஆனால், தன்னிடமே அந்தத் தாக்குதல் திட்டம் தரப்படவேண்டும் என்று கருணா மங்களன், இனியபாரதி போன்றவர்களை தூதுக்கு மேல் தூதாக அனுப்பி ராணுவத்தினரிடன் இரைஞ்சியதாக ராணுவம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும்தான்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பிரபாகரன், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் பதினெட்டுப் புலிகளோடு கொல்லப்பட்டார் - கருணா ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் மே 20, 2009 பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கியவரும், பல்லாண்டுகளாக அவரால் வளர்க்கப்பட்டவரும், பின்னர் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவருமான கருணா, பிரபாகரனின் மரணம் பற்றித் தெரிவிக்கும்போது, பிரபாகரனும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 18 மெய்ப்பாதுகாவலர்களும் இராணுவத்தால் மடக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார். கொல்லப்பட்டது புலிகளியக்கத் தலைவர் பிரபாகரன் தான் என்பதை அடையாளங்கண்டு உறுதிப்படுத்திய வெகு சிலரில் கருணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவினால் புலிகளின் தலைமைக்கு எதிராக 2004 இல் நடத்தப்பட்ட கிளர்ச்சியே புலிகளை முற்றாகப் பலவீனப்படுத்தி அழிக்கும் நிலைக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத் தக்கது. புலிகளின் தலைவரின் மரணம் பற்றி மேலும் பேசிய கருணா, "புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார். தற்போது இலங்கை அரசாங்கத்தில் தேசிய நீர்ப்பாசண அமைச்சராகவும், நல்லிணக்க அமைச்சராகவும் இருக்கும் கருணாவுக்கு நந்திக்கடல்ப் பகுதியில் கொல்லப்பட்டுக் கிடந்ததது ஒருகாலத்தில் தனது தலைவனாகவும் ஆசானாகவும் இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லையென்று தெரிகிறது. "முன்னர் நான் பார்த்த பிரபாகரனுடன் ஒப்பிடும்பொழுது, அவர் தற்போது சற்று மெலிந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அவர் முன்பிருந்ததைப் போலவே இருந்தார். அவரது முகம், கண்கள், என்று எல்லாமே அவர் பிரபாகரன் தான் என்பதை எனக்குச் சொல்லியது" என்று தொலைபேசியூடாக எங்களுக்கு கருணா கூறினார். "பிரபாகரனைக் கொன்ற ராணூவ வீரர்கள் ஆச்சரியப்பட்டதாக அறிந்தேன். ஏனென்றால், பிரபாகரன் தன்னைத்தானே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். பிரபாகரனை அன்று அங்கே அவர்கள் காணுவார்கள் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று கருணா கூறினார். "பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும், ராணூவத்தினருக்குமிடையிலான சண்டை காலை 4 மணிக்கு ஆரம்பமாகியதாகத் தெரிகிறது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற கடுமையான சண்டையினையடுத்து சுமார் கால்நூற்றாண்டாக இலங்கையினை ஆட்டிப்படைத்த தீவிரவாதி முல்லைத்தீவு வாவியோரத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தார்" என்று கருணா மேலும் கூறினார். பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும்கட்சியின் உப தலைவராகவும் இருக்கும் கருணா பிரபாகரனின் மரணம் தொடர்பாக மேலும் கூறுகையில் பிரபாகரனின் தலையின் மேற்பாகம் முற்றாகச் சிதைந்தோ அல்லது குண்டுகளால் வெடித்துச் சிதறப்பட்டோ தெரிந்ததாகக் கூறினார். அதேவேளை, ராணுவத்தினர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனியையும் அவரின் மூத்த தளபதிகளையும் கொன்றிருந்தார்கள். இன்று பிரபலமான அரசியல்வாதியாகத் திகழும் கருணா, புலிகளின் மீளுருவாக்கத்திற்கான சாத்தியப்பட்டுகள் குறித்து நாம் வினவியபோது, "சரணடைந்த புலிகளைக் கொண்டு வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர் புலிகளை மீளுருவாக்க நினைப்பார்கள் என்பது வெறும் கனவேயன்றி வேறில்லை" என்று கூறினார். "அது சாத்தியமேயில்லை. அதற்கான சூழ்நிலையோ அல்லது அவசியமோ இனிமேல் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்கு யுத்தத்தின்மேல் வெறுப்பும், அயர்ப்பும் வந்துவிட்டது. இனிமேல் புலிகள் மீள வருவார்கள் என்பதற்கு எதுவிதமான சாத்தியப்பாடுகளும் நிச்சயமாக இல்லை" என்று மிகவும் உறுதியாகவும், ஆணித்தரமாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கருணா 1983 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதியில் முழுக் கிழக்கு மாகாணத்திற்குமான புலிகளின் தளபதியாக உயர்ந்திருந்தார். பல்லாண்டுகளாக பிரபாகரனின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராக அவர் இருந்தார். 2002 - 2003 காலப்பகுதியில் அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட கருணா, 2002 இல் கிளிநொச்சி நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார். பிரபாகரனின் மரணத்திற்காக பிரபாகரனையே குற்றஞ்சாட்டிய கருணா, "பிரபாகரனுக்கு யுத்தம்பற்றிய தெளிவு இருந்திருந்தால் இராணூவம் கடந்த ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்தபோதே தனது போராளிகளையும், பல தளபதிகளையும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்திருக்கமுடியும், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை" என்று கருணா கூறினார். "ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. இது அவரது மடைமையினையே காட்டுகிறது. மக்களின் அவலங்களைக் கண்டவுடன் சர்வதேச அசமூகம் யுத்தநிறுத்தமொன்றினை ஏற்படுத்தும் என்றும், தான் தப்பிவிடலாம் என்றும் இறுதிவரை எதிர்பார்த்திருந்தார்" என்று அவர் கூறினார். "அவர் ஒரு உண்மையான தலைவராக இருந்திருந்தால், சுதந்திரமான தனிநாட்டுக்கான போராட்டத்தை இன்னமும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார். அது ஒருபோதுமே சாத்தியமில்லை என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். யுத்தத்தில் ஈட்டிய வெற்றிகளை அரசியல் ரீதியாக அவர் பாவித்திருந்தால் இன்று தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை". "நான் பிரபாகரனிடமும், தமிழ்ச்செல்வனிடமும் மாறிவரும் உலக ஒழுங்கினை அவதானித்து, புலிகளியக்கமும் சில மாற்றங்களை உள்வாங்கிச் செயற்படவேண்டும் என்று கூறினேன், ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார். "இங்கே பிரச்சினையென்னவென்றால், பிரபாகரனைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஏதோ பெரிய தலைவராகக் கொண்டாடத் தொடங்கியிருந்தார்கள், இதனால் அவரும் தான் பற்றிய அதீத கற்பனைகளை வளர்க்கத் தொடங்கிவிட்டார். அவரை ஒருபோதுமே தோற்கடிக்க முடியாத மாவீரனாக அவர்கள் போற்றத்தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கூறுவதை நம்பிய அவர் அதே சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டார்" என்று தான் இயக்கத்தில் இருந்த காலத்தில் நடந்தவைபற்றிப் பேசும்போது கருணா கூறினார். "தமிழர்களுக்கு இனியிருக்கும் ஒரே வழி ஜனநாயக ரீதியிலான அரசியல்தான். அதைவிட வேறு தெரிவுகள் அவர்களுக்கு இல்லை. எம்மிடம் பலமான பாராளுமன்றக் குழு ஒன்று இருந்திருந்தால் நாம் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு பிரியோசனமும் அற்றது" என்றும் அவர் மேலும் கூறினார். "90,000 தமிழர்களையும், 24,000 இற்கும் மேற்பட்ட புலிப் போராளிகளையும் 1983 ஆம் ஆண்டிலிருந்து போராட்டத்தில் பலிகொடுத்தபின்னரும் கூட தமிழினம் இன்னும் நடுரோட்டிலேயே நிற்கிறது" என்று கருணா கூறினார். "இந்தளவு இரத்தக்களறியின் பின்னரும் தமிழர்கள் கண்டது என்ன, வெறும் அழிவுகள்தானே?" என்று கருணா பதிலளித்தார். https://www.hindustantimes.com/world/prabhakaran-was-with-18-men-when-he-was-killed-karuna/story-UfaVjat36kCwDhBclaajfL.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பிரபாகரன் ஒரு மனநோய் பிடித்த சர்வாதிகாரி, ஒரு துரோகி - கருணா தெரிவிப்பு செய்தி :கல்ப் நியூஸ் பத்திரிக்கை திகதி : ஐப்பசி 8, 2004 தனது பரம வைரியான புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு மதம்பிடித்த சர்வாதிகாரியென்றும், துரோகியென்றும் கருணா தெரிவித்திருக்கிறார். சுமார் ஒருவாரத்திற்கு முன்னர் புலிகளின் பிஸ்ட்டல் குழுவினரால் தனது சகோதரரான ரெஜி கொல்லப்பட்டத்தை உறுதிப்படுத்திய கருணா, தனது சகோதரர் பிரபாகரனின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராகவும், அவரது ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி வீரமரணம் எய்தியிருப்பதாக கூறினார். லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியொன்றிற்குப் பேட்டியளித்த கருணா, தான் இன்னமும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாகவும், தனது சகோதரரின் மரணத்தினையடுத்து தனது ஆதரவாளர்கள் எவரும் துவண்டுபோய், பிரபாகரனுக்கெதிரான தமது எழுச்சிமிகு போராட்டத்தைக் கைவிடக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமக்கு சவாலாக மற்றிவிடுவார்கள் என்கிற காரணத்தினால் கருணா குழுமீதான தமது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்திவருவதாகத் தெரிகிறது. "பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கெதிராகவும், பாஸிச வெறிக்கெதிராகவும் போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். அதனாலேயே நாம் பலத்துடனும், தீரத்துடனும் போராடி வருகிறோம். எனது சகோதரரின் இழப்பினையடுத்து நாம் பின்வாங்கிவிடப்போவதில்லை" என்று அவர் கூறினார். "நான் எனது மக்களிடம் பிரபாகரனின் பயங்கரவாதப் படைகளுக்கெதிராகப் போராட ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபாகரனினால் செய்யப்பட்டுவரும் பாரிய படுகொலைகளையும், மனிதவினத்திற்கெதிரான குற்றங்களையும் தடுத்தி நிறுத்திட தமிழ் இளைஞர்கள் என்னுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன்" என்றும் அவர் மேலும் கூறினார். "நிச்சயமாக பிரபாகரனினால் எமது மக்களுக்கு தேவையான தீர்வினைப் பெற்றுத்தரமுடியாது என்பது எனக்குத் தெரியும். அவரைப்பொறுத்தவரை அவரது பெயரும் புகழும் மக்களின் நலனைக் காட்டிலும் முக்கியமானது. அவர் தன்னை ஒரு பெரிய தலைவராகவும், தேசியத் தலைவராகவும் பிரகடனப்படுத்தியிருப்பதோடு, தன்னை தமிழர்கள் எல்லோரும் தமிழினத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற தலைவராகப் போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தனது இனத்திலேயே பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலைசெய்துவரும் ஒரு பயங்கரவாதி தன்னை எப்படி அவ்வினத்தின் தேசியத் தலைவர் என்று உரிமை கோரமுடியும்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசியாக பல்லாண்டுகள் இருந்துவந்த கருணா, புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிலும் ராணுவத் தளபதி என்கிற என்கிற ஸ்தானத்துடனேயே பங்குகொண்டிருந்தார். ஆனால், கடந்த பங்குனி மாதம் கிழக்கு மாகாணப் போராளிகள் புலிகளால் சமமாக மதிக்கப்படுவதில்லையெனும் குற்றச்சாட்டை முன்வைத்து பிரபாகரனின் தலைமைத்துவத்தை ஏற்கமறுத்து கருணா செயற்பட ஆரம்பித்ததையடுத்து அவரும் அவரது சகபாடிகளும் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். கருணா மேலும் கூறும்போது, "தமிழினத்தில் பல அரசியல்த் தலைவர்களையும், கல்விமான்களையும் கொன்றிருக்கும் பிரபாகரன் அவ்வினத்தின் தலைவர் என்று தன்னை எப்படி அழைத்துக்கொள்ளமுடியும்" என்றும் வினவினார். https://gulfnews.com/world/asia/karuna-calls-prabhakaran-a-mad-dictator-and-a-traitor-1.334990
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
அத்துடன், வடக்கிலிருந்து கிழக்கினை முற்றாக பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை கருணாவையும் அவரது ஆதரவாளர்களையும் முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுவருகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அனுசரணையுடன் இணைக்கப்பட்ட இம்மாகாணங்களை பிரிக்கும் முன்னர் இந்தியாவின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வடக்கிலிருந்து கிழக்கினை நிரந்தரமாகப் பிரிப்பதன் மூலம் கருணாவுக்கான அரசியல் பலத்தினை கிழக்கு மக்களிடையே அதிகரிக்கலாம் என்று கருதும் அரசு, இப்பிரிப்பினூடாக அதாவுள்ளாவுக்கு ஆதரவான முஸ்லீம் ஆயுதக் குழுக்களையும் தமது நடவடிக்கைக்குப் பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கிறது. கிழக்கு மாகாணம் முற்றாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தனது பிணாமிகளான கருணா, டக்கிளஸ், வரதர் அணி, முஸ்லீம் அமைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் தனது சிங்கள பெளத்த அரச அதிகாரத்தை கிழக்கில் முற்றாக நிறுவிவிடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது. கிழக்கில் தனது அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஒரு அங்கமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் அடங்கும். வடக்கில் மாகாணசபை சிறப்பாக இயங்காத போதும், கிழக்கில் அதன் செயற்பாடு சிறப்பானதாக இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகவே, கிழக்கு தனித்து இயங்கவேண்டும் என்கிற கோஷத்தை கருணா போன்றவர்களைப் பாவித்து அரசு முன்வைக்கக் கூடும். பின்னர் வடக்கிலும் டக்கிளஸை முன்னிறுத்தி, மாகாணசபையினைக் கைப்பற்றுவதன் மூலம் தனது அதிகாரத்தை அங்கும் பரவலாக்கும் கைங்கரியத்தில் அரசு இறங்குவதற்கான சாத்தியமும் இருக்கிறது. அரசின் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பரராஜசிங்கம் போன்றவர்கள் எப்போதுமே ஒரு தடைக்கல்லாகவே இருந்துவந்துள்ளனர். புலிகளின் தீவிர ஆதரவாளராக அவர் இருந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழரின் பூர்வீக தாயகம் எனும் கோட்பாட்டில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததுடன், அதற்காகத் தொடர்ச்சியான பரப்புரைகளையும் அவர் முன்னெடுத்து வந்திருந்தார். இதனாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்று அரசும் அரசுக்குச் சார்பான கருணா குழுவும் முடிவெடுத்தன. முற்றும் https://sangam.org/taraki/articles/2006/01-02_Real_Reasons_Behind_Murder_in_the_Cathedral.php?print=sangam
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பரராஜசிங்கம் அவர்கள் கொல்லப்பட்டமைக்கான ரெண்டாவது காரணம் மிகவும் பொதுவானது. ஆனால் இந்த அநியாயப் படுகொலையின் விளைவாக உருவாகியிருப்பது மிகவும் ஆபத்தான, விரும்பத் தகாத சூழ்நிலையென்றால் அது மிகையில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, அதிலும் குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அரசியல் ராணுவ அரங்கில் செயற்பட்டு வந்த சக்திகளின் கூட்டு முயற்சியாக இப்படுகொலை பார்க்கப்படவேண்டியதாகிறது. கடந்த சில வருடங்களாக சிங்கள அரசாங்கங்கள் தமது ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. ராணுவத்தினருக்கான சம்பளம் பற்றிய கவர்ச்சியான விளம்பரங்களோ அல்லது நாட்டைக் காக்கும் பணியென்கிற அறைகூவல்களோ சிங்கள இளைஞர் யுவதிகளை ராணுவத்தில் பெருமளவில் இணையும் விருப்பினை இதுவரை ஏற்படுத்தவில்லை. குறைந்தது அரசாங்கம் போரை உடனேயே ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தளவு எண்ணிக்கையில் கூட அவர்கள் இணைய முன்வரவில்லை. வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல் தலைநகர் கொழும்பு கூட போர்க்களமாக மாறலாம் என்கிற நிலையில், ராணுவப் பற்றாக்குறை என்பது அரசைப்பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாகவே உருப்பெற்றிருக்கிறது. இதனால், தனக்குச் சாதகமான பிரதேசங்களில் ராணுவப் பிரசன்னத்தினை அதிகரித்து அப்பகுதிகளைப் பலப்படுத்தும் அதேவேளை, கண்மூடித்தனமாக பெருமளவு நிலப்பரப்பினை தனது உண்மையான கட்டுப்பாடின் கீழ் இல்லாமல் வெறுமனே காவல் செய்வதை அது தவிர்க்கவே விரும்புகிறது. இதன் ஒருபகுதியாகவே கிழக்கில் புலிகளுக்கு எதிராக இயங்கிவரும் கருணா குழுவினரின்மூலம், போராட்டம் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே கடந்த இரு வருடங்களாக முடக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பார்க்கிறது. ஆனால், இந்த சாதகமான சூழ்நிலையென்பது வடக்கில் புலிகளின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளாலும், தேர்தல் புறக்கணிப்புக்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இதனாலேயே, திருகோணமலையுட்பட கிழக்கு மாகாணத்திற்குள் தமது அரசியல் ராணுவச் செயற்பாடுகளை விரிவாக்குவதுடன், வடக்கு நோக்கிய தமது ராணுவ நடவடிக்கைகளை தற்போதைக்கு ஓரத்தில் போட்டுவிடலாம் என்று அரசாங்கம் நினைப்பதுபோலத் தெரிகிறது. இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தனது அனைத்துச் சக்திகளையும் அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. இதற்காக கருணாவையும், அவரது ஆதரவாளர்களையும் தனது ராணுவத்தினருடன் சேர்த்து கிழக்கு மாகாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் அது தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியிருப்பது தெரிகிறது. இந்த நடவடிக்கைகளில் மட்டக்களப்பு வாவியின் மேற்கில் அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் அடங்கும் என்பதும் தெரியவருகிறது. தற்போதைய நிலவரத்தின்படி மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவே நிலைகொண்டிருக்கிறது. சில பிரதேசங்களில் ராணுவத்தினரின் பிரசன்னமே காணக் கிடைப்பதில்லையெனும் அளவிற்கு ராணுவத்தினரின் அளவு குறைவாகவே காணப்படுகிறது. இதேபோல திருகோணமலை - மணலாறு பகுதியினை 22 ஆவது டிவிஷன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ விசேட படைகளின் 53 ஆவது டிவிஷன் அடங்கலாக 6 டிவிஷன்கள் நிலைவைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கினை முற்றாக மீட்கும் நடவடிக்கையில் வடக்கில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. வடக்கில் புலிகளுக்கெதிரான ராணுவத்தினரின் நடவடிக்கைகள் மந்தகரமான நிலையினை அடைந்திருக்கும் நிலையில், இவர்களை கிழக்கில் நகர்த்துவதன் மூலம் கிழக்கை முற்றாக மீட்கலாம் என்று அரசு எதிர்ப்பார்க்கிறது. இப்படியான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் வெறுமனே ராணுவத்தினரால் மட்டுமே மேற்கொள்ளப்படக் கூடியதல்ல. கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக புலிகளுக்கெதிரான போரில் குறிப்பிடத் தக்களவு வெற்றிகளைப் பெற்றிராத ராணுவத்தைக் கொண்டு, கிழக்கினை முற்றாக மீட்கலாம் என்று அரசு நம்புவதாகத் தெரியவில்லை. அதனால், ஆப்கானிஸ்த்தான் ஈராக் ஆகிய நாடுகளில் பிரதேசங்களை மீட்க அந்நாடுகளில் பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்கியது போல, கிழக்கில் தனது பொம்மை அரசொன்றை உருவாக்கி, அதன் உதவியுடன் கிழக்கினை மீட்கலாம் என்று அரசு கருதுவது தெரிகிறது. இதனாலேயே கருணாவையும் அவரது ஆதரவாளர்கலையும் முன்னிறுத்தி கிழக்கின் தலைவர்கள் என்று காட்டியும், மக்கள் ஆதரவுகொண்ட, செல்வாக்குள்ள, புலிகளுக்குச் சார்பான தலைவர்களைக் களையெடுத்தும், கிழக்கில் புலிகளின் பிரசன்னத்தை சிறிது சிறிதாக அழிக்க கங்கணம் கட்டியிருக்கிறது. இந்த களையெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஜோசேப் பரராஜசிங்கத்தின் படுகொலை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரை தமது உறுப்பினர்கள் கொல்லப்படப்போவது இதுவே முதலாவதாகவும் இறுதியானதாகவும் இருக்காது என்பது வெளிப்படை.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
புலிகளாலும் தமிழ் மக்களாலும் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை முயற்சிகள் சித்திரை 2003 இல் புலிகள் பேச்சுவார்த்திகளிலிருந்து வெளியேறியதன் பின்னர், அரசுக்கெதிரான பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. அரசாங்கத்தின் தூதுவரலாயங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கெதிராகவும் புலிகளுக்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை சர்வதேசத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும், புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரைகள் மூலமும் புலிகளும் மக்களும் மழுங்கடித்து வந்தனர். புலிகளின் பரப்புரையின் வெற்றியாக இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் போராட்ட அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட சட்டரீதியான அழுத்தங்களை புலிகள் தொடர்பில் தளர்த்தவும் சர்வதேசம் தலைப்பட்டிருந்தது. புலிகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்கவும், சர்வதேச ராஜதந்திரிகளைச் சந்தித்து தமது பக்க நியாயங்களைக் கூறவும் அனுமதியளிக்கப்படும்வரை தமது பிரச்சார உத்திகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. புலிகளின் இந்த வெற்றிகரமான சர்வதேச பரப்புரைகளை முறியடிக்க அரசாங்கம் இருவகையான நகர்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்தது. 1. கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்குப் புலிகள் பயணிப்பதற்கான பயண ஒழுங்குகளில் தடைகளை ஏற்படுத்துவது. இதன்மூலம் கொழும்பினூடாக வெளிநாடு செல்லும் புலிகளைத் தடுப்பது. 2. புலிகளை சர்வதேசத்தில் வேண்டப்படாதவர்கள் எனும் நிலையினை உருவாக்கும் வகையில் தனது பிரச்சார உத்திகளை புதிப்பித்தல். இதில் முதலவாது இலக்கினை அடைய கிளிநொச்சிக்கும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான உலங்குவானூர்தி வசதியினை அரசு மறுக்கத் தொடங்கியது. சர்வதேச மத்தியஸ்த்தர்களின் அழுத்தத்தினால் வேண்டாவெறுப்பாக சில நேரங்களில் இந்த பயண ஒழுங்குகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், அண்மையில் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட சில மோதல்களையடுத்து புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தை அணி வெளிநாடு செல்லும் பயண ஒழுங்குகளை அடியோடு துண்டித்துக்கொண்ட அரசு, தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கூடாக புலிகளின் போராளிகள் பயணிப்பதையும் தடுத்து விட்டது. இரண்டாவது இலக்கினை அடைய சர்வதேசத்தில், குறிப்பாக மேற்குலகில் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் அந்நாடுகளில் புலிகளோ அல்லது தமிழர்களோ அரசுக்கெதிராகவும், தமது பக்க நியாயத்தினை முன்வைத்தும் செய்யும் பரப்புரைகளை தடுத்து நிறுத்துவது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாளிலிருந்தே இதற்கான முஸ்த்தீபுகளை அரசு எடுத்து வந்தாலும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரின் கொலையோடு இது முனைப்புப் பெற்றது. இலங்கை அரசு சார்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட ஜயந்த தனபால அவர்களின் கடுமையான பிரச்சாரத்தினாலும், அழுத்தத்தினாலும் புலிகளின் சர்வதேச பயணங்களுக்குத் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டது. அதேபோல இலங்கைக்குள்ளும் நோர்வேயின் சமாதானக் குழுவினர் தவிர்ந்த ஏனைய சர்வதேச ராஜதந்திரிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு இலங்கையரசாங்கம் தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல், கிளிநொச்சிக்குப் போக எத்தனித்த வெளிநாட்டவர்கள் அனைவரும் அரச அனுமதியுடனேயே செல்லமுடியும் எனும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே புலிகளைத் தனிமைப்படுத்த உதவியிருந்தன. அரசாங்கமும், சர்வதேச சமூகமும் புலிகள் மீதான தடைகளை மாறி மாறி விதித்துக்கொண்டு வந்த வேளையில், இத்தடைகளினால் கட்டுப்படாத பரராஜசிங்கம் போன்றவர்கள் புலிகளின் தலைவர்களால் செல்லமுடியாது போன சர்வதேச மேடைகளுக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமது பக்க நியாயங்கள் குறித்தும் தொடர்ச்சியாகப் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர். கனடா நாட்டிற்கு அவர் செல்ல எடுத்த முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஏனைய மேற்குலக நாடுகளுக்குச் சென்று பரப்புரைகளை மேற்கொண்டே வந்தார். பரராஜசிங்கம் போன்றவர்கள், சுயமாக சர்வதேச நாடுகளுக்குச் சென்று, தமிழரின் நியாயங்களையும், சிங்கள அரசின் அக்கிரமங்களையுன் தொடர்ச்சியாக வெளிக்கொன்டுவருவது, புலிகள் மீதான தடையின் வீரியத்தை வெகுவாகப் பாதித்துவிடும் என்று அஞ்சிய அரசாங்கம் பரராஜசிங்கத்தைக் கொல்வதன் மூலம் தமிழருக்குச் சார்பான பரப்புரைகளை நிறுத்துவதுடன், பரராஜசிங்கம் போன்ற ஏனையவர்களுக்கும் ஒரு பாடத்தினைப் புகட்ட நினைத்தது. இதனாலேயே பரராஜசிங்கம் ஆலய ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளையில் அரச ஆதரவு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.