Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இம்மருத்துவமனை மீதான திட்டமிட்ட தாக்குதல்களில் உயிர் தப்பியவர்களை மருத்துவப் பணியாளர்கள் வெளியே மீட்டுவரும் ஒளிப்படங்களையும், புகைப்படங்களையும் இவ்விரு ஏ பி செய்தியாளர்களும் சாட்சிப்படுத்திக்கொண்டார்கள். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருத்தி தனது அடிவயிற்றை இருகப்பற்றியிருக்க, அவளது கால்களுகிடையிலிருந்து வழிந்தோடும் குருதியோடு அவளை இன்னும் நான்கு மருத்துவப் பணியாளர்கள் தூக்கிச் செல்வது காண்பிக்கப்படுகிறது. இக்குண்டுவீச்சிலிருந்து அவள் காப்பாற்றப்பட்டாலும், அவளது உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவசர சத்திர சிகிச்சை ஒன்றின்மூலம் அவளது மரணித்துக்கொன்டிருக்கும் சிசுவைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயன்றபோதும், அவள் இறந்துபோனாள், அவளோடு அவளது பிறவாத சிசுவும் இறந்துபோனது. இத்தாக்குதலில் உயிர்தப்பிய இன்னொரு கர்ப்பிணிப் பெண் மரியானா இரத்தம் தோய்ந்த முகத்தோடு நடக்கமுடியாது தள்ளாடியவாறு வந்துகொண்டிருந்தாள். நொறுங்கிப்போன மாடிப்படிகளிலிருந்து தள்ளாடிக்கொண்டு இறங்கிவந்த அவளை உதவியாளர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இத்தாக்குதலில் குறைந்தது ஒரு குழந்தை உட்பட மூன்று சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக உக்ரேனிய மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இன்னும் 17 கர்ப்பிணிப் பெண்கள் காயமடைந்திருந்தனர். ஆனால், இத்தாக்குதல் குறித்து பேசிய ரஸ்ஸிய பாதுகாப்பு அமைச்சர் தமது விமானப்படையே இவ்வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரேனிய ராணுவத்தின் விசேட ராணுவப்பிரிவான அசோவ் பட்டாலியன் இவ்வைத்தியாசாலையில் நிலைகொண்டிருந்ததாகவும் அதனாலேயே இதனை தாம் அழிக்கவேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். உக்ரேன் நாஜிக்களால் ஆளப்பட்டுவருவதாக ரஸ்ஸியர்களை நம்பவைத்துவரும் புட்டினும் அவரது அரசாங்கமும் உக்ரேனில் சிவிலியன்கள் மீதான தாக்குதல்களை நாஜிக்களை அழிக்கும் விசேட நடவடிக்கை எனும் பெயரில் நியாயப்படுத்தி வருகின்றது. ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய ரஸ்ஸிய தூதுவர் வசிலி நிபென்சியா பேசும்போது, " காயப்பட்ட கர்ப்பிணிப் பெண்களாகக் காட்டப்பட்டவர்கள் அனைவருமே நடிகர்கள்தான், இவர்கள் எவருமே அப்பாவிப் பெண்கள்கிடையாது. ரஸ்ஸிய அரசாங்கத்தின்மீதும், ராணுவத்தின்மீதும் கறையைப் பூசுவதற்காகவே இதனை அவர்கள் செய்கிறார்கள்" என்று வெளிப்படையாகவே தாக்குதல்களை நியாயப்படுத்தியிருந்தார். லண்டனில் செயற்பட்டுவரும் ரஸ்ஸிய உயர்ஸ்த்தானிகராலயம் தனது கீச்சகப் பதிவில் காயப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின்படங்களை அருகருகே வைத்து "பொய்ச்செய்தி" என்று தடித்த எழுத்துக்களில் செய்திவெளியிட்டிருந்தது. நடந்துவரும் உண்மைச் சம்பவத்தை பொய்யென்று மறுத்தமைக்காக ரஸ்ஸிய உயர்ஸ்த்தானிகராலயத்தின் இக்கீச்சகப் பதிவினை சட்டத்திற்கு முறணான பதிவென்று கீச்சக நிர்வாகம் நீக்கிவிட்டிருந்தது. காயப்பட்ட பெண் மரியோபுல்லில் வசிக்கும் யூ டியுப் வலைத்தள நடத்துனர் என்பதும், அவர் தனது அண்மைய பதிவுகளில் தனது கர்ப்பம் பற்றி தொடர்ச்சியாகக் காணொளிகளை வெளியிட்டு வந்தவர் என்பதும், இவரே ரஸ்ஸியத் தாக்குதலில் காயப்பட்டவர் என்பதும் ஏ பி செய்தியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டிட இடிபாடுகளையும், சூழவிருந்த எரிந்துபோன வாகன எச்சங்கலையும் சாட்சிப்படுத்தியிருக்கும் ஏ பி செய்தியாளர்கள் இவ்வைத்தியசாலை ராணுவ விவகாரங்களுக்காகப் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது வெளியில் சிதறிக் கிடந்த சேதமடைந்த வாகனங்களில் ராணுவ வாகனங்களையோ காணவில்லயென்று கூறுகிறார்கள். வைத்தியசாலை இடிபாடுகளுக்கிடையே சாதாரண வைத்தியசாலைப் படுக்கைகளையும், மருத்துவ உபகரணங்களையும் தவிர வேறு எவையுமே அங்கு இருக்கவில்லை. .........
  2. துருக்கியில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவ்ரோவ் சிவிலியன் மரணங்களை முற்றிலுமாக மறுத்தார். "இது ஒரு பொய்க் கூப்பாடு. ரஸ்ஸியாவின் எதிரிகளால் செய்யப்பட்டுவரும் பொய்ப்பிரச்சாரம், நாம் உக்ரேனை ஆக்கிரமித்துள்ளோம் என்பதே முழுப் பொய்யாகும்" என்று அடித்துக் கூறினார். சிவிலியன்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது சட்டத்திற்கு முரணானது என்பது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலப் பழமைவாய்ந்த மரபாகும். உக்ரேனில் ரஸ்ஸியா செய்துவருகின்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக ஹேக்கில் அமைந்திருக்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உக்ரேனியர்களாலும், சர்வதேச அமைப்புக்களாலும் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ ஏ கரீம் என்பவர் ரஸ்ஸியாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்க்குற்றங்களுக்காக குறைந்தது 39 சர்வதேச நாடுகளிலிருந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் பைடனும் ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டினை ஒரு போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாட்டியிருப்பதோடு, உக்ரேனில் சிவிலியன்கள் மீதான தொடர்ச்சியாகத் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருக்கும் ரஸ்ஸிய ராணுவத்தளபதிகள் மற்றும் போர் வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களை தமது அரசாங்கம் சேகரித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மீதான தாக்குதல்கள் எக்காலத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் தவிர்க்கப்படல் அவசியம் என்பது சர்வதேசச் சட்டமாக இருந்துவருவதோடு, இத்தாக்குதல்கள் மனித நேயத்திற்கெதிரான மிகவும் கீழ்த்தரமான தாக்குதல்கள் என்றும் கருதப்பட்டு வருகின்றன. ஆனாலும், இத்தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக கருதப்படுவதற்கு, இவை வேண்டுமென்றே நடத்தப்பட்டவைதான் என்பதை குற்றஞ்சாட்டுபவர்கள் நிரூபித்தல் அவசியம். ஆனால், உக்ரேனின் நடத்தப்பட்டுவரும் இத்தாக்குதல்கள் உண்மையிலேயே வைத்தியசாலைகளையும், மருத்துவர்களையும் இலக்குவைத்தே நடத்தப்படுவதை உறுதிசெய்துள்ள இச்செய்தி நிறுவனம் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நடிக்கிறார்கள் என்றோ அல்லது உக்ரேன் அரசால் கொல்லப்பட்டவர்கள் என்றோ காட்டுவதையும் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள். மேலும், ராணுவக் காரணங்களுக்காகவே இவ்வைத்தியசாலைகளைத் தாம் தாக்கியதாக ரஸ்ஸியா கூறிவருவதையும் பொய்யென்று நிரூபிப்பதற்கான சாட்சியங்களும் இச்செய்தியமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. "ரஸ்ஸியா எமது வைத்தியசாலைகளையும், மருத்துவ நிறுவனங்களையும் வேண்டுமென்றே இலக்குவைத்துத்தான் தாக்குகிறது. இன்னொரு நாட்டின் ராணுவத்தைத் தாக்கி அழிப்பது போல எமது வைத்தியசாலைகளைத் தாக்கி அழித்து வருகிறது" என்று முன்னாள் உக்ரேனிய சுகாதார அமைச்சர் கூறினார். உக்ரேனில் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துவரும் அவர் இதுவரையில் உக்ரேனின் அழிக்கப்பட்ட குறைந்தது 34 வைத்தியசாலைகளின் விபரங்களையும், கொல்லப்பட்ட பொதுமக்களின் தகவல்களையும் சேகரித்து வருகிறார். "வைத்தியசாலைகளைக் குண்டுபோட்டு அழிப்பது மிகவும் கொடூரமானது. இதன்மூலம் ரஸ்ஸியா எமது மக்களுக்குக் கூறும் செய்தி ஒன்றுதான், உங்களுக்கு எந்த இடமுமே இனிப் பாதுகாப்பு இல்லை என்பதுதான் அது" என்று அவர் மேலிம் கூறுகிறார். இதுவரையில் பல்வேறு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான தாக்குதல்தான் பங்குனி 9 ஆம் திகதி மரியோபுல் மகப்பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ரஸ்ஸியாவின் ஏவுகணைத் தாக்குதல். ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இந்த நகரத்தினுள் பணிபுரியும் இரு ஏ பி செய்தியாளர்கள், இவ்வைத்தியசாலைமீதான தாக்குதல் நடந்து சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு சென்றிருந்தார்கள். வைத்தியசாலையின் உட்பகுதியில் இரண்டு மாடிகள் ஆளமான பாரிய குழியொன்றிலிருந்து நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அதனைச் சுற்றி எரிந்துய, உருக்குலைந்து போன பல கார்களை அவர்கள் கண்டார்கள். இக்குண்டுவீச்சினால் அவ்வைத்தியசாலையினைச் சுற்றியிருந்த பல கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்திருந்தன. .....
  3. வைத்தியசாலைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பிலும் புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் மருத்துவமனைகள் இலங்கை ராணுவத்தாலும் விமானப்படியினராலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டும் எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். வைத்தியசாலைகள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட, ஒருங்கைமைக்கப்பட்ட தாக்குதல்களை குறைந்தது இரு சர்வதேச செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக சாட்சிப்படுத்திவருகின்றன.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரொப்பா சந்தித்திருக்கும் மிக மோசமான அழிவு யுத்தத்தில் இத்தாக்குதல்கள் போர்க்குற்ற்ங்களாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இச்செய்தி நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்ச் சேகரிப்பில், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், சிவிலியன் குடியிருப்புக்கள் மற்றும் சிவிலியன் கட்டுமானங்கள் மீதும் ரஸ்ஸியா வேண்டுமென்றே நடத்திவரும் திட்டமிட்ட அழிப்பும் உள்ளடக்கப்பட்டு வருகிறது. இச்செய்தி நிறுவனங்களின் கருத்துப்படி, உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் அழித்தொழிப்பு யுத்தம் நடக்கும் காலம்வரை இத்தகவல்கள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு வரும் என்று தெரியவருகிறது. இவ்வாறு தகவல் சேகரிப்பதன் நோக்கம் ஒன்றுதான். அதாவது, பக்கச்சார்பற்ற, உண்மையான அழிவுகளையும், மக்கள் இறப்பையும் ஆவணப்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளுக்கெதிரான சாட்சியங்களைத் தொகுப்பதுதான். இச்செய்தி நிறுவனங்களில் ஒன்றான அஷோஷியேட்டட் பிரஸ் அமைப்பு, காணொளிச் சாட்சிகளாகவும், ஒளிப்படங்களாகவும் பல சாட்சியங்களைச் சேகரித்து வைத்திருக்கிறது. அத்துடன், உக்ரேனுக்கு வெளியில் இயங்கும் நிருபர்கள் போரரங்கிலிருந்து தப்பிவரும் மக்களிடமிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், இழப்புக்கள் பற்றியும் அறிந்து பதிவிடுவதோடு, சமூக வலைத் தளங்களில் பலராலும் தரவேற்றப்பட்டு வரும் ஒளிப்படங்கள் மற்றும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையினையும் உறுதிப்படுத்தி வருகிறார்கள்ர்கள். ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையம் ரஸ்ஸியாவின் தாக்குதல் தொடங்கிய நாளிலிருந்து முதல் நான்கு வாரத்தில் மட்டுமே கொல்லப்பட்ட பொதுமக்களின் இழப்புக்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, குறைந்தது 1035 சிவிலியன்கள் ரஸ்ஸியாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதில் 90 குழந்தைகளும் அடங்குவதாக அது தெரிவிக்கிறது. இதற்கு மேலதிகமாக குறைந்தது 1650 சிவிலியன்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதே ஐ நா அறிக்கை இத்தாக்குதல்கள் பற்றி மேலும் கூறுகையில், "முற்றாக அழிக்கப்பட்டு, வீழ்ந்து நொறுங்கியிருக்கும் கட்டிடச் சிதைவுகளுக்கடியில் இன்னும் பலநூற்றுக்கணக்கான மக்கள் இறைந்து கிடக்கவும் வாய்ப்பிருக்கின்றது" என்று கூறியிருக்கிறது. மேலும், மிகக்கடுமையான தாக்குதல்களும், மோதல்களும் நடந்த பகுதிகள் தற்போது ரஸ்ஸிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் உண்மையிலேயே கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை என்பது ஐ நா வினால் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிரது. இது, தமிழ் இனவழிப்பின் ஆரம்பகாலத்தில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பல தமிழ்க் கிராமங்களில் இருந்து காணாமலாக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலைக்கு ஒப்பானது என்றால் அது மிகையில்லை. ஆனால், தனது தொடர்ச்சியான கண்மூடித்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்திவரும் ரஸ்ஸியா, பொதுமக்கள் எவருமே இத்தாக்குதலில் கொல்லப்படவில்லையென்றும், கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் அனைவருமே நடிகர்கள் என்றும் விடாப்பிடியாக மறுத்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது 2008 இலிருந்து 2009 வரை வன்னியின் கொலைக்களங்களில் எம்மை அழித்த மகிந்த எனும் போர்க்குற்ரவாளியின் மேற்கோளான, "நாம் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்றினையே அங்கு மேற்கொள்கிறோம். ஒரு தமிழ் மகணுக்கும் இழப்பு ஏற்படாதபடி நாம் யுத்தம் செய்கிறோம். கொல்லப்பட்டதாகக் காட்டப்படும் அனைத்துமே புலிகளின் பிரச்சாரம் தான்" என்று தனது தாக்குதல்களை நியாயப்படுத்தியதை நாம் இத்தருணத்தில் நினைவுபடுத்துவது தற்போதைய உக்ரேன் நிலைமையினை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். தொடரும்
  4. உக்ரேனில் ரஸ்ஸியா நிகழ்த்திவரும் போர்க்குற்றங்கள் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலான காலப்பகுதியில் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனின் மருத்துவமனைகள், காயப்பட்டோரைப் பராமரிக்கும் நிலையங்கள், நோயாளர் காவு வாகனங்கள், வைத்தியர்கள், காயப்பட்ட பொதுமக்கள், பாலகர்கள் என்று பல சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட இத்தாக்குதல்களில் குறைந்தது 34 வைத்தியசாலைகளும், நோயாளர் பராமரிப்பு நிலையங்களும் ரஸ்ஸியாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் இத்தாக்குதல்களை தொடர்ச்சியாகச் சேகரித்து வருகின்றன. இவ்வாறான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும் ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினுக்கும், அவரது ஏவலாளிகளான ரஸ்ஸிய ராணுவ ஜெனரல்களுக்கும், புட்டினின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும் எதிரான பலமான போர்க்குற்ற விசாரணைக்கான கூக்குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டு வருகின்றன. இவர்கள் மீதான போர்க்குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு இத்தாக்குதல்கள் வெறும் தற்செயலானவை என்றல்லாமல், வேண்டுமென்றே இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் என்பது உறுதிப்படுத்தப்படுதல் அவசியம். ஆனால், தொடர்ச்சியாக நடந்துவரும் இத்தாக்குதல்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகவும், மிகக் கடுமையாகவும் நடத்தப்படும் இத்தாக்குதல்கள் உக்ரேனின் பலவீனமான வயோதிபர்கள், சிறுவர்கள், நோயாளிகள், காயப்பட்டவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் வைத்தியசாலைகளும் மருத்துவ நிலையங்களும் வேண்டுமென்றே இலக்குவைத்து தாக்கப்பட்டு வருகிறது என்பது புலனாகிறது. சிவிலியன் கட்டடங்கள் மீது ரஸ்ஸியாவினால் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அப்பகுதிக்கு உடனடியாகச் சென்ற பல சர்வதேச செய்தியாளர்கள் பல குழந்தைகளின் உடல்கள் குண்டுச் சிதறல்களால் சல்லடை போடப்பட்டு, உடல்ப் பாகங்கள் பிடுங்கியெறியப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் சிதறிக் கிடந்ததை சாட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறான உருக்குலைந்து கிடந்த பல அடையாளமற்ற சடலங்களை அத்தாக்குதலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பாரிய புதைகுழிகளுக்குள் போட்டு மூடியதை அவதானித்திருக்கிறார்கள். "இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது , இவை வேண்டுமென்றே சிவிலியன்களை இலக்குவைத்து, பாரிய மனித அழிவை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆகவே இவை போர்க்குற்றங்களாக கருதப்படக் கூடியவைதான்" என்று நியு யோக் பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் ரையன் குட்மான் கூறுகிறார். "இப்போர்க்குற்றங்களை விசாரிப்பவர்கள், எத்தனை மருத்துவமனைகள் தாக்கப்பட்டன, ஒரே மருத்துவமனை எத்தனை முறை தக்கப்பட்டது, ஒவ்வொரு தாக்குதலுக்கும் இடையில் எவ்வளவு நேர இடைவெளி இருந்தது என்பதையெல்லாம் கணக்கிடுவார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார். தொடரும்
  5. நான் எழுதி முடிக்கும்வரையாவது உங்களின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தூற்றுதல்களையும் சற்று ஒதுக்கிவைய்யுங்கள். ஏனென்றால், உங்களின் குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளிக்க முற்படுவதால் நான் எழுத நினைப்பது நீண்டு செல்கிறது. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!
  6. சிலரின் விசமத்தனமான கருத்துக்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும்போது, அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. ஆகவே அவர்கள் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல குப்பைகளை இங்கே அள்ளி வந்து கொட்டுகிறார்கள், இது எனது சொந்த ஆக்கம் என்று தெரிந்தும். நானும் என்னால் முடிந்தளவிற்கு அவற்றை பெருக்கி, எரித்து வருகிறேன், பார்க்கலாம்.
  7. உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்ட சில வாரங்களின் பின்னர் இந்த அழிவு யுத்தம்பற்றி சர்வதேசமெங்கிலும் இருந்து சுமார் 150 வரலாற்று ஆசிரியர்கள் கூட்டாக ஒரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார்கள். இனவழிப்பு, நாசிசம் மற்றும் இரண்டாம் உலக யுத்த வரலாறு ஆகியவற்றுடன் மிகுந்த பரீட்சயமுள்ள இந்த வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது, " உக்ரேனியர்களை நாஜிகளாக வர்ணித்து ரஸ்ஸிய அதிபர் புட்டின் செய்துவரும் விஷமப் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது, யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது, கடுமையான தாக்கங்களை மக்களிடையே ஏற்படுத்தக்கூடியது. மிகவும் அருவருக்கத்தக்க, ஏற்றுக்கொள்ள முடியாத, மனதளவில் பலரைக் காயப்படுத்தக் கூடிய தன்மையினைக் கொண்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜிகளால் பாதிக்கப்பட்ட பல மில்லியன் மக்களின் மனங்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியதுடன், நாஜிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடி மடிந்த லட்சக்கணக்கான வீரர்களினதும் புனிதத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கைங்கரியத்தையும் கொண்டது" முன்னாள் ரஸ்ஸிய அமைச்சரான சேர்கி மார்க்கோவ் புட்டினின் நாஜிப் புலம்பல் பற்றிக் குறிப்பிடும்போது, "உக்ரேனியர்கள் நாஜிகளுக்கு எதிரானவர்கள். நாஜிகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஆகவே யாராவது உக்ரேன் நாஜிக்களால் ஆளப்படுகிறது என்றோ அல்லது தம்மை நாஜிகளிடமிருந்து காப்பாற்றும்படி உக்ரேனியர்கள் ரஸ்ஸியாவிடம் கேட்கிறார்கள் என்றோ கூறுவது சுத்த் முட்டாள்த்தனமானது" என்று கூறுகிரார். இறுதியாக, எந்த நாஜீக்கள் உக்ரேனை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று ரஸ்ஸியா புலம்புகிறதோ, அந்த நாட்டின் தலைவரும், யூத இனத்தவருமான உக்ரேனின் ஜனாதிபதி வொலொடொமிர் செலென்ஸ்கி ரஸ்ஸியாவின் "நாஜிப் புலம்பல்கள்" பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "ஏறத்தாள ஐந்து வாரங்களாகியும், ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் அவர்கள் தேடும் நாஜிக்களையோ அல்லது போதைக்கு அடிமையான தலைவர்களையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலவேளை, ரஸ்ஸியப்படை உக்ரேனில் நுழையும்போது மலர்ச் செண்டுகளுடன் தம்மை வறவேற்பார்கள் என்று புட்டின் கூறிய உக்ரேனியப் பெண்களை இன்னும் அவர்கள் தேடுவது போல அந்த நாஜிக்களையும் அவர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் " என்று கூறியிருக்கிறார். அவர்கள் தேடும் விடைகள் எனது திரியெங்கும் பரவியே கிடக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு தேடுவதால் சிலருக்கு அவை தெரிவதில்லை. சிலவேளை கண்களைத் திறந்து பார்க்க அவர்கள் விரும்புவதில்லை போலும். தமது இணையத் தளங்களுக்குச் செய்தி சேர்க்கவும், விபரம் திரட்டவும் சிலர் கேள்வி கேட்கலாம். அதற்காக எனது நேரத்தை நான் மண்ணாக்க விரும்பவில்லை. திரியுடன் தொடர்புடையது என்பதற்காக மட்டும் சில விளக்கங்களை முன்வைக்கவேண்டியதாயிற்று.
  8. அசோவ் எனும் சொல்லே பலருக்கு நாஜிச் சொல்லாகத் தெரிவது அதிசயம் தான். ஆனால் அசோவ் எனும் பெயர் இப்படையணிக்குக் கிடைத்ததற்குக் காரணம் இருக்கிறது. இன்று ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றான அழித்தொழிப்பு ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் மரியோபுல்லில் இருக்கும் "தி சீ ஒப் அசோவ்" அதாவது அசோவ் கடற்கரையில் இப்படையணியின் தலைமையகம் இருப்பதாலேயே இப்படையணிக்கு அசோவ் படையணி என்கிற பெயர் இடப்பட்டிருக்கிறது. 2014 இல் ரஸ்ஸிய படை நடவடிக்கையினை எதிர்கொண்டு வெற்றியீட்டிய இப்படையணியே இன்றும் மரியோபுல்லில் ரஸ்ஸிய தாக்குதலை எதிர்கொண்டு போராடி வருகிறது. ஆனால், இந்த சிறிய படைப்பிரிவை முன்வைத்து பேசும் ரஸ்ஸியா, முழு உக்ரேனுன் நாஜிகளால் ஆளப்படுவதாகக் கூறுகிறது. உக்ரேனை ஆக்கிரமித்து நிற்கும் ரஸ்ஸியாவின் வெளிவிவகார அமைச்சர் ஐ நா வில் பேசும்போது , மரியோபுல்லில் ரஸ்ஸிய ஏவுகணையால் தாக்கியழிக்கப்பட்ட மகப்பேற்று மருத்துவமனை அசோவ் பட்டாலியனின் முகாம் என்று கூறியதோடு, ரஸ்ஸிய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 300 அப்பாவிகள் கொல்லப்பட்ட மரியோபுல் திரையரங்கின்மீது அசோவே தாக்குதல் நடத்தியதாக பொய்யுரைத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அசோவ் படைப்பிரிவிலிருக்கும் சிலரது நாஜிச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தி, உக்ரேன் நாஜிகளால் ஆளப்படுகிறது என்றும், அது ரஸ்ஸியர்களை அழிக்கிறது என்று கூறும் புட்டின் செய்ய நினைப்பதெல்லாம் இரண்டாம் உலகயுத்தத்தில் நாஜிகளால் ரஸ்ஸியர்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் அழிவுகளையும் மீண்டும் அவர்கள் முன் கொண்டுவந்து, ரஸ்ஸியர்களின் உணர்வுகளை உசுப்பேற்றி உக்ரேனை ரஸ்ஸியாவின் எதிரியாகக் காட்டுவதுதான்.
  9. 2014 இல் ரஸ்ஸிய ராணுவம் உக்ரேனை ஆக்கிரமித்தபோது, உக்ரேன் ராணுவம் மிகவும் பலவீனமான நிலையிலும், 2 ஆம் உலகயுத்த கால ஆயுத தளபாடங்களையும் கொண்ட ஒருங்கமைக்கபடாத ராணுவமாகவே இருந்தது. இந்த ராணுவத்தால் மிகப் பலம் பொறுந்திய ரஸ்ஸிய ராணுவத்தின் முன்னால் நிற்கமுடியவில்லை. கடுமையான ஆள்ப்பற்றாக்குறையால் திண்டாடிக்கொண்டிருந்த உக்ரேனிய ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் முகமாக விரும்பியவர்கள் இணையலாம் என்று அறிவித்தலை அரசு விடுத்தது. இந்த அறிவித்தலையடுத்து உக்ரேனிய ராணுவத்தில் வலதுசாரிச் சிந்தனை கொண்டோரும் இணைந்தனர். இந்த வலதுசாரி அமைப்பில் இருந்த ஒரு பகுதியினரே பின்னாட்களில் அசோவ் பட்டாலியன் என்று அழைக்கப்படும் விசேட படைப்பிரிவாக மாற்றம் அடைந்தனர். 2015 இல் பி பி சி செய்தியாளரிடம் பேசிய வலதுசாரி படையணியான அசோவின் தலைவர் தமது உறுப்பினர்களில் 10 முதல் 20 வீதமானவர்கள் நாஜி சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டார். ஆனால், இந்த சிறியளவு நாஜி ஆதரவாளர்களினால் தமது அமைப்பு தனது கொள்கையிலிருந்து மாற்றம்பெறப்போவதில்லையென்றும், அதற்கான காரணமும் தமக்கு இல்லையென்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். அசோவ் பட்டாலியன் எனும் அமைப்பு உக்ரேனின் தேசிய காவலர்கள் எனும் படைப்பிரிவின் கீழ், அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. 2014 இல் ரஸ்ஸியா மரியோபுல் பகுதியை ஆக்கிரமிக்க எத்தனித்தபோது, அத்தாக்குதலை முறியடித்து, ரஸ்ஸியர்களின் முயற்சியைத் தோற்கடித்தவர்கள் இந்த அசோவ் பட்டாலியன் எனும் சிறப்புப் படை அணியினர்தான் என்றால் அது மிகையில்லை. அசோவ் படையணி பற்றி முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரெஷெங்கோவிடம் 2015 இல் பி பி சி செய்தியாளர்கள் கேட்டபோது, "எமது ராணுவத்திலுள்ள மிகச்சிறந்த போர்வீரர்கள் அவர்கள். அவர்களை நாஜிகளாக உருவகப்படுத்தும் ரஸ்ஸியாவின் பொய்ப்பிரச்சாரங்களுக்குத் தயவுசெய்து அகப்பட்டு விடாதீர்கள்" என்று சலிப்புடன் கூறினார். உக்ரேனிய ராணுவத்தின் மொத்த வீரர்களின் எண்ணிக்கை ஏறத்தாள 250,000 பேர். இவர்களைத் தவிரவும் இன்னும் 50,000 வீரர்கள் தேசியக் காவலர்கள் படைப்பிரிவில் இயங்குகிறார்கள். இந்தத் தேசியக் காவலர்கள் படைப்பிரிவில் வெறும் 1000 பேர் மட்டுமே அசோவ் படையணியைச் சேர்ந்தவர்கள். ஆக, வெறும் 0.33 வீதமான அசோவ் படையணியினால் உக்ரேன் ஆளப்படுவதாகவும், நாஜிகளால் உக்ரேன் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புட்டினும் பரிவாரங்களும் கதறுவது வேடிக்கையே அன்றி வேறில்லை. சாதாரண உக்ரேனியர்களிடம் இந்த அசோவ் படையணி பற்றி செய்தியாளர்கள் வினவும்போது, "அவர்கள் சிறந்த போர்வீரர்கள். அசோவ் படையணியில் சேர இளைஞர்கள் விரும்புவதன் காரணம் அவர்களின் தீரமேயன்றி அவர்களின் ஒரு பகுதியினரின் நாஜிக் கொள்கைகளுக்காக அல்ல" என்று கூறுகிறார்கள். உக்ரேனின் ஜனாதிபதியின் ஆலோசகரிடம் பி பி சி அசோவ் படையணி பற்றிக் கேட்டபோது, "உக்ரேனில் இன்றிருக்கும் நாஜிகள் யாரென்று பார்த்தால், அவர்கள் ரஸ்ஸியாவிலிருந்து எம்மை ஆக்கிரமிக்க வந்த புட்டினின் பாஸிஸ்ட்டுக்கள் தானே அன்றி வேறு எவரும் இல்லை" என்று கூறுகிறார். உக்ரேனின் அசோவ் பட்டாலியன் படைப்பிரிவினர் சிலரின் நாஜி சிந்தனைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, "அவர்களின் உத்தியோக பூர்வ இணையத்தளங்களிலும், ஆதரவுத் தளங்களிலும் காணப்படும் பொதுவான அம்சம் தான் ரஸ்ஸிய ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவதும், வெற்றிகொள்வதும். நாஜிகள் தொடர்பாகவோ அல்லது நாஜிக் கொள்கை தொடர்பாகவோ அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லையென்றே தெரிகிறது" என்று கூறுகிறார்கள்......
  10. தீவிர வலதுசாரி அமைப்புக்கள் உக்ரேனில் இருக்கிறதென்பது உண்மைதான். இதை மறுக்கவில்லை. ஆனால், புட்டினும் பரிவாரங்களும் கூறும் இவர்களால் உக்ரேன் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டிருக்கிரதென்பது புட்டினின் உண்மையான நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. நவ நாஜிகள் அல்லது தீவிர வலதுசாரிகள் பூச்சாண்டியை புட்டினும் அவரது ஆதரவாளர்களும் கடந்த 8 வருடங்களாக ரஸ்ஸிய மக்களுக்குக் காட்டி வருகின்றார்கள். ரஸ்ஸியாவின் இந்த விஷமத்தனமான பிரச்சாரம் குறித்து கருத்துத் தெரிவித்த தி வில்சன் சென்டர் எனப்படும் சர்வதேச ஆராய்ச்சி மைய்யம், "முழு உக்ரேனும் நாஜிகளால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று புட்டின் கூறிவருவது மிகத் தவறான பிரச்சாரம் என்றும், ரஸ்ஸிய மக்களின் உணர்வுகளைச் சீண்டி தனது சொந்த லாபமீட்டலுக்காகவே இதனை அவர் செய்கிறார் என்றும் கூறுகிறது. உக்ரேனில் 2013 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரஸ்ஸியச் சார்பு ஜனாதிபதி , ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, ரஸ்ஸியாவின் அழுத்தத்தின் நிமித்தம் வெளியேறினார். தமது நாடு ஐரோப்பாவின் ஒரு அங்கமாகும், நாடு சுபீட்சமாகும், எதிர்காலம் வளமாக பரிணமிக்கும் என்று கனவு கொண்டிருந்த பல லட்சக்கனக்கான உக்ரேனிய இளைஞர்களும் யுதவிதிகளும் அன்றைய ஜனாதிபதி ஒரு தலைப் பட்சமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைக் கண்டித்து தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். சாதாரண ஒன்றுகூடலாக ஆரம்பித்த இப்போராட்டத் தீப்பொறி நாளடைவில் பெரு நெருப்பாக உருவெடுத்து முழு நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதனை அடக்க அன்றைய ரஸ்ஸியச் சார்பு ஜனாதிபது கலகம் அடக்கும் படைப்பிரிவை அனுப்பி மிகக் கடுமையாக போராட்டக்காரர்களுடன் நடந்துகொண்டார். ஈற்றில் தனது கொடுங்கரத்திற்காக மக்களால் வெறுக்கப்பட்டு ரஸ்ஸியாவுக்குத் தப்பியோடினார். தனது பொம்மையான ஜனாதிபதி நாட்டை விட்டுத் திறத்தப்பட்டதும், உக்ரேனிய மக்களின் ரஸ்ஸியாவுக்கெதிரான எழுச்சியும் புட்டினை கோபப்படுத்தியது. உக்ரேன் என்பது ரஸ்ஸியாவின் பிரிக்கப்பட முடியாத பகுதி என்றும், அங்கு நடக்கும் அரசியல் தன்னால் கட்டுப்படுத்தப்படக் கூடியது என்று இறுமாப்புடன் இருந்த புட்டினுக்கு உக்ரேன் மக்களின் எழுச்சி கோபபடுத்தியதால், இதற்குப் பழிவாங்கலாக உடனடியாக உக்ரேனின் கிரிமியா எனும் பிராந்தியத்தை தனது ராணுவத்தை அனுப்பி ஆக்கிரமித்துக்கொண்டதுடன் இன்னும் இரு பிராந்தியங்களில் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவை முற்றான ஆயுதக் குழுக்களாக மாற்றுவதற்கு, ரஸ்ஸிய ராணுவத்திலிருந்து விலகிய, ஓய்வுபெற்ற, விடுமுறையில் நின்ற ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை அங்கு அனுப்பியதுடன், உக்ரேன் அரசுக்கெதிரான தொடர்ச்சியான தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினார். .........
  11. உக்ரேனிலிருந்து நாஜிக்களை அழிப்பதும், உக்ரேனின் ராஅணுவ வல்லமையினை முற்றாக சிதைப்பதும்தான் தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தின் முக்கிய நோக்கம் என்று புட்டின் தனது ஆக்கிரமிப்புத் தொடங்கிய நாளில் திருவாய் மலர்ந்தார். இதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், ரஸ்ஸியாவின் நகரங்களில் போருக்கெதிராகத் திறண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக் காரர்களின் உணர்வையும் கண்டு தடுமாறிய புட்டின், போர் தொடங்கி சில நாட்களிலேயே செரும் பேரணியொன்றினை கூட்டியிருந்தார். நாஜிக் களைவு எனும் தலைப்புடன் அப்பேரணி நடத்தப்பட்டது. அங்கே குழுமியிருந்த தனது ஆதரவாளர்களிடையே பேசிய புட்டின், தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த மிகவும் தவறான காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்தார். உக்ரேன் நாடு போதைக்கு அடிமையானவர்களிடமும், நவ நாஜிகளின் கைகளிலும் சிக்குப்பட்டு பூரண முற்றுகைக்குள் அடக்கப்பட்டிருப்பதாகவும், ஆகவே உக்ரேனை மீட்கவே தான் விசேட படை நடவடிக்கையினை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இதிலுள்ள வேடிக்க என்னவென்றால், உக்ரேனியர்கள் ஒருபோதுமே நவ நாஜிக்களினால் முற்றுகைக்குள்ளாக்கப்படவில்லையென்பதும், அப்வர்கள் போதைக்கு அடிமையானவர்களால் ஆளப்படவில்லையென்பதும் தான். உக்ரேனை ஆளும் இப்போதைய ஜனாதிபதி யூத இனத்தைச் சேர்ந்தவர். 2 ஆம் உலகப் போரில் நாஜிகளுடனான யுத்தத்தில் பல குடும்ப உறுப்பினர்களை அவரது மூதாதையர் பலரை இழந்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் மொத்த உக்ரேனிலும் கொல்லப்பட்ட அப்பாவிகளின் எண்ணிக்கை 8 மில்லியன், இதில் பெரும்பாலானவர்கள் யூதர்கள். யூத இனத்தில் இருந்து வந்த தற்போதைய ஜனாதிபதி 2019 சனாதிபதித் தேர்தலில் 73 வீத வாக்குகளைப் பெற்றவர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலாதுசாரியான ருஸ்லானின் வாக்கு எண்ணிக்கை வெறும் 1.6 வீதம் மட்டுமே. சரி, இந்த வலது சாரிகள் அல்லது நவ நாஜிக்களின் அரசியல் செல்வாக்கு கடந்த வருடங்களில் எப்படியிருக்கிறது என்று பார்த்தால், அவர்கள் 2012 இல் 10 வீத வாக்குகளையும், 2014 இல் 6 வீத வாக்குகளையும், 2019 இல் வெறும் 1.6 வீத வாக்குகளையும் மாத்திரமே பெற்றிருக்கிரார்கள். உக்ரேனின் அரசியலில் சிறியளவு பலம் கூட இல்லாத இந்த வலதுசாரிகள் தான் உக்ரேனை ஆள்கிறார்கள் என்று புட்டின் கூறுவது முற்றான கற்பனைக் கதையே அன்றி வேறில்லை. அத்துடன், உக்ரேனில் புட்டின் அச்சப்படும் வலதுசாரிகளின் அரசியல் பலம் என்பது அவரது சொந்த நாடான ரஸ்ஸியாவிலும், பிரான்ஸிலும், ஜேர்மனியிலும் இருப்பதைக் காட்டிலும் மிக மிக குறைவென்பதும் அவர் அறியாததல்ல. தொடரும்.......
  12. ரஸ்ஸியாவின் விஷமப் பிரச்சாரங்கள் வெளியுலகில் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து, உக்ரேன் அழிவதை நியாயப்படுத்தும் பலர் ரஸ்ஸியாவுக்கு வெளியே இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் ஈழத்தமிழருக்குள்ளேயே பெரும்பகுதியினர் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்தும், புட்டினை ஒரு மாபெரும் வீரனாகப் போற்றியும், உக்ரேன் அழிக்கப்படுவதை கைகொட்டி ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் சமூக வலையூடகங்களில் எழுதிவரும் ரஸ்ஸிய ஆதரவு, உக்ரேன் அழிவு நிலைப்பாடுகளும், முன்வைத்துவரும் கேள்விகளும் எந்த அடிப்படியில் முன்வைக்கப்படுகின்றன என்பது ஒன்றும் ரகசியல்மல்லவே? ஆகவே நான் தடை செய்யப்பட்ட ரஸ்ஸிய ஊதுகுழல்களைத் தேடிப் பயணித்து , அதன் விஷமப் பிரச்சாரங்களை தோண்டியெடுக்கத் தேவையில்லை, தாராளமாகவே அவை கிடைக்கப்பெறுகின்றன. மரியோபுல் அவலம் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் ஆளாளுக்கு கேள்வி கேட்டு அலைக்கழிக்கிரார்கள் யுவர் ஆனர். பரவாயில்லை, நானும் எழுத நினைத்த ஒருவிடயம் தான், இங்கே இன்னொருவரும் கேட்டிருக்கிறார், ஆகவே இதனையும் விளக்கிவிட்டு, என் பாதையில் செல்லலாம் என்று நினைக்கிறேன்.
  13. ரஸ்ஸியாவின் விஷமப் பிரச்சாரத்தினுள் அகப்பட்டு, மூள்கிப்போயிருக்கும் சிலருக்காக எனது திரியின் பாதையிலிருந்து சற்று வெளியே சென்று வரவேண்டியதாகிவிட்டது. தடங்கலுக்கு வருந்துகிறேன். இனி, மரியோபுல்லில் நடைபெற்றும் வரும் ரஸ்ஸியாவின் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றிப் பார்க்கலாம்.........
  14. விஷமப் பிரச்சாரம் 7 : நேட்டோவின் திமிரான விரிவாக்கத்தினால் ரஸ்ஸியா இன்று எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே தன்னைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ரஸ்ஸியா எடுத்து வருகிறது. எந்தவொரு நாடோ அல்லது நாடுகளின் கூட்டமைப்போ ரஸ்ஸியாவை ஆக்கிரமிக்கும் நோக்கத்தினைக் கொண்டு இயங்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனும் ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கப்போவதாக உறுதிமொழி அளித்தே வருகிறார்கள். நாம் கவனிக்கத் தவறும் ஒரு விடயம் தான் ரஸ்ஸியா என்பது நிலப்பரப்பில் உலகின் பெரிய ஒரு நாடு என்பதும், 140 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டிருக்கிறதென்பதும், உலகின் மிகப்பெரிய ராணுவத்தையும், மற்றைய எல்லா நாடுகளையும் விட மிக அதிகளவான அணுவாயுதங்கலையும் கொண்டிருக்கிறது என்பதும். ஆகவே, ரஸ்ஸியா என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களால் இலகுவாக அச்சுருத்தப்படக் கூடிய நாடு என்று எவராவது எண்ணினால் அது வேடிக்கையானதும், அறிவற்ற நிலைப்பாடும் ஆகும் என்பதே உண்மை. சரி, நாம் பூகோள ரீதியில் இதை அணுகினால்க் கூட, ரஸ்ஸியாவின் மொத்த எல்லையின் சுற்றளவில் வெறும் 6 வீதமான நீளத்தையே நேட்டோ உறுப்புரிமை நாடுகளுடன் அது பகிர்ந்துகொள்கிறது. ரஸ்ஸியாவைச் சுற்றியிருக்கும் எதிரிகள் என்று ரஸ்ஸியா குறிப்பிடும் 14 நாடுகளில் 5 நாடுகள் மாத்திரமே நேட்டோவில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் எல்லைகளைத்தான் ரஸ்ஸியா வெறும் 6 வீதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆகவே, ரஸ்ஸியா தனது பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதென்றால், நிச்சயமாக ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தால் அதனைச் செய்யத் தேவையில்லை. ஜனநாயக ரீதியில் , பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எடுக்க பல வேறு வழிகள் இருக்கின்றன. பல சர்வதேச அமைப்புக்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்று யுத்தத்தைத் தவிர்த்து சுமூகமான முறையில் பேசித் தீர்க்கக் கூடிய பல வழிமுறைகள் இருக்கின்றன. ரஸ்ஸியாவுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணுவதற்கென்று, ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்ஸியா தொடர்பான தனது கொள்கையில் தனியான ஐந்து சட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. தொடர்பாடல்களைப் பேணுவதற்கு தேவையான பல்வேறு உடன்படிக்கை முறைகளும், பேச்சுவார்த்தை நடைமுறைகளும் சர்வதேச தொடர்பாடல் முறைகளில் இருக்கின்றன. எவை எப்படி இருப்பினும், ஒரு இறைமையுள்ள நாடான உக்ரேன் தனது கொள்கைகளைத் தீர்மானிப்பது தொடர்பாகவும், தனது நண்பர்களைத் தெரிவு செய்வது தொடர்பாகவும் பூரணமான சுதந்த்திரத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பூகோள உறுதிப்பாடு மீதான வீட்டொ அதிகாரத்தினை ரஸ்ஸிய கொண்டிருக்கிறது என்ற புட்டின்னினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு அடிப்படையில் தவறானது, சட்டத்திற்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நடைமுறைகளுக்கும் முரணானது.
  15. விஷமப் பிரச்சாரம் 6: "உக்ரேனில் நடக்கும் போர் மேற்கு நாடுகளின் தவறுகளாலும், நேட்டோவின் தவறினாலுமே உருவாக்கப்பட்டது. அவர்கள் தாம் ஒத்துக்கொண்ட "விரிவாக்கத்தினைச் செய்யமாட்டோம்" எனும் உடன்பாட்டிற்கு மதிப்பளித்திருந்தால் ரஸ்ஸியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக உக்ரேன் மீது ராணுவ நடவடிக்கையொன்றினை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே இந்தப் போர் மேற்குநாடுகளினால் உருவாக்கப்பட்டதே அன்றி, ரஸ்ஸியாவினால் அல்ல". ரஸ்ஸியாவினா தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் இந்த "விரிவாக்கம் செய்வதில்லை என்று ஒத்துக்கொண்டார்கள்" எனும் கூப்பாடு மிகவும் பொய்யானது. ஏனென்றால், அவ்வாறானதொரு உறுதிமொழி எக்காலத்திலும் எவரிடமும் நேட்டோவினால் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. புட்டினும் அவரது ஆதரவாளர்களுன் தொடர்ச்சியாக கூறிவரும் ஒரு பரப்புரைதான், "முன்னாள் ரஸ்ஸிய அரசுத்த தலைவர் மிக்கேல் கொர்பச்சேர்விடம் நேட்டொ, ஒருமித்த ஜேர்மனியைத் தாண்டி விரிவாக்கம் செய்வதில்லை என்று வாய்மொழி உத்தரவாதம் அளித்தது" என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அனைவரும் கூறும் மிக்கேல் கொர்பெச்சேர்வ் 2014 இல் இதுபற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இப்படியானதொரு உறுதிமொழியினை நேட்டோவோ அல்லது வேறு எவருமே தன்னிடம் வழங்கவில்லையென்றும், தாம் அவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைக்கவில்லையென்றும் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் என்பது. அவர் தனது பேட்டியில் பேசும்போது, "நேட்டோவின் விரிவாக்கம் தொடர்பாக நாம் அவர்களுடன் எதுவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை. நான் பதவியில் இருக்கும் எக்காலத்திலும் இது தொடர்பாக எவருமே பேசியதுமில்லை அதற்கான தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை. நான் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொன்டு உறுதிபடக் கூறுகிறேன், ஒரு சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடு கூட என்னிடம் இது தொடர்பாக பிரச்சினையினை எழுப்பவில்லை. வோர்சோ ஒப்பந்தம் 1991 முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட எவருமே இது தொடர்பாக என்னிடமோ அல்லது எனது அரசிடமோ பேசவோ, கோரிக்கை முன்வைக்கவோ இல்லை என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஒருமித்த ஜேர்மனியைத் தாண்டி, தாம் விரிவாக்கம் செய்யப்போவதில்லையென்பதை நேட்டோவோ அல்லது நேட்டோவின் உறுப்புரிமை நாடுகளில் ஒன்றோ ஒருபோதுமே ரஸ்ஸியாவுடனோ அல்லது அவர்களின் அதிகாரிகளுடனோ ஒப்பந்தங்களைக் கூட்டாகவோ அல்லது தன்னிச்சையாகவோ செய்யவில்லையென்பதை நேட்டோ உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒருமித்த ஜேர்மனிக்கு அப்பால் நேட்டொ விரிவாக்கம் நடைபெறாது என்று நேட்டோ உத்தரவாதம் அளித்தது என்று ரஸ்ஸியா முன்வைத்துவரும் பரப்புரை நேட்டோவின் நியதிகளுக்கு முற்றிலும் மாறானது. அப்படியான ஒரு உத்தரவாதத்தை நேட்டொ எப்போழுதும் செய்யப்போவதில்லை என்பது அதன் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நேட்டோவில் இணைவதற்கு எந்த நாடுகளும் முன்வரலாம் என்பதும், அவற்றின் விண்ணப்பங்கள் சரியான வழியில் அணுகப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்பதும் ரகசியமானதல்ல. நேட்டொ என்பது நாடுகளுக்கிடையிலான ஒரு பாதுகாப்பு நட்பு ஒப்பந்தம். அது , எல்லைகளை மீறி அயல் நாடுகளை பலாத்காரமாக ஆக்கிரமிக்கும் ஒரு அமைப்பு அல்ல. ஒரு நாடு நேட்டோவில் அங்கத்துவம் அடைய விரும்பினால், அந்த முடிவானது நேட்டோவின் 30 உறுப்பு நாடுகளுக்கும், விண்னப்பிக்கும் நாட்டிற்குமிடையிலான ஒரு செயற்பாடே அன்றி இதல் மற்றையவர்கள் தீர்மானம் எடுப்பதோ அல்லது தடுப்பதோ சட்டத்திற்கு முரணானது. ஒவ்வொரு இறைமையுள்ள நாடும் தான் செல்லவேண்டிய பாதையினை முடிவெடுக்கும் அதிகாரத்தையும், தான் எவருடன் எல்லைகளைப் பகிரவேண்டும் எனும் முடிவினையும் எடுக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த விடயத்தில் தலையிடும் உரிமை ரஸ்ஸியாவுக்குக் கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை.
  16. நண்பர்கள் மன்னிக்க வேண்டும். இடையிடையே வேலைகள் இருப்பதால் தொடர்ந்து எழுத முடிவதில்லை. முடிந்தளவிற்கு இந்தக் கட்டுரையினை நான் நினைத்தவகையில் முடிக்க முயல்கிறேன். சிலருக்கு இதனால் என்மீது ஆத்திரம் வரலாம். ஆனால், இது நான் படித்தும், கேட்டும் அறிந்தும் கொண்டவை. நடப்பது இவைதான் என்கிற உணர்வால் எழுதப்படுபவை. எவரையும் தனிப்பட்ட ரீதியில் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. இந்த நிகழ்வைத்தவிர எம்மில் பலர் எமது தேசத்தின் நிலை குறித்து ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கிறோம் என்பது ஆறுதல். சரி, தொடரலாம், விஷமப் பிரச்சாரம் 5: "தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டமான சூழ்நிலை உக்ரேனின் திமிரான செயற்பாடுகளாலும், அவர்களை ஆதரிக்கும் மேற்குலக அதிகாரங்களின் நடவடிக்கைகளினாலுமே உருவாக்கப்பட்டது. ரஸ்ஸியா தனது நலன்களை சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் முடிவுகளுக்கு ரஸ்ஸியா எந்த விதத்திலும் பொறுப்பாளியாக இருக்க முடியாது". உண்மை என்னவென்றால், ரஸ்ஸியா தான் கடைப்பிடிப்பதாக ஒத்துக்கொண்டுள்ள அனைத்துச் சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் மீறியே உக்ரேன் மீது ஆடாத்தாக இந்த ஆக்கிரமிப்பு - அழித்தொழிப்புப் போரைத் தொடங்கி நடாத்தி வருகிறது. 2014 இல் உக்ரேனின் நிலப்பகுதியான கிரிமியாவை அடாத்தாக அக்கிரமித்தது முதல், இன்றுவரை உக்ரேன் நாட்டிற்கெதிராக தொடர்ச்சியான ஆயுத ரீதியிலான நடவடிக்கைகளைச் செய்துவரும் , ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஸ்ஸியா இதுவரையில் குறைந்தது 12 சர்வதேச ஒப்பந்தங்களையும், இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடுகளையும் , இணக்க ஒப்பந்தங்களையும் ஒரு தலைப்பட்சமாக மீறியிருக்கிறது. ரஸ்ஸியாவினால் ஒத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் ஒருதலைப்பட்சமாக ரஸ்ஸியாவினால் மீறப்பட்ட ஒப்பந்தங்களுக்கு உதாரணங்களாக ஐ நா சாசனம், ஹெல்சிங்கி இறுதி ஒப்பந்தம், நாடுகளின் இறைமை, பூகோள ஒருமைப்பாடு ஆகியவற்றை மதித்தல் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கை, நாடுகளின் எல்லைகளை மதிப்பளித்து செயற்படுதல் எனும் உடன்படிக்கை, நாடுகளுக்கிடையிலான பிணக்குகளுக்கு போரினைக் கொண்டு தீர்வுகளை அடைவதைத் தவிர்த்தல் உடன்பாடு, ஒரு சுதந்திர நாடு தனது பாதுகாப்புத் தொடர்பாக சுயாதீனமான முரையில் முடிவெடுக்கும் உரிமையினை மதித்தல் ஆகியவை உட்பட பல சட்டங்களையும், இணக்கப்பாடுகளையும் ஒரு தலைப்பட்சமாக அது மீறியிருக்கிறது. உக்ரேனின் இறைமை, பூகோள ஒருமைப்பாடு, அதன் சுதந்திரம் ஆகியவற்றினை அச்சுருத்தலுக்குள்ளாக்கி ரஸ்ஸியா இன்று செய்துவரும் ஆக்கிரமிப்பு யுத்தம் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி, நாடுகளுக்கிடையிலான அனைத்து சர்வதேசச் சட்டங்களையும் மீறும் ஒரு நடவடிக்கையாகும். ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை மீறி இந்த யுத்தத்தினை நடாத்தி வரும் ரஸ்ஸியாவின் செயல், மொத்த ஐரோப்பாவினதும் பாதுகாப்பினைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தமிழ்வின்னையும், லங்காசிறியையும் நம்பி எழுதும் அளவிற்கு நான் கருத்துப் பஞ்சம் கொண்டவனோ, மற்றையவன் எழுதியதை எனது இணையத் தளத்தில் போடும் சொந்த தேடுதல் அற்றவனோ இல்லை. ஒருவனைக் கருத்தினால் எதிர்கொள்ளமுடியாவிட்டால் எல்லோரும் எடுக்கும் கடைசி ஆயுதம் "நீ கொப்பியடிக்கிறாய்" என்பதுதான். எனக்கு அந்தத் தேவையில்லை. வேறு ஏதாவது இருந்தால் முயன்றுபாருங்கள். நான் எழுதுவதை உங்களால் எதுவும் செய்ய முடியாது.
  17. உங்களின் புரிதல் தொடர்பாக நான் எதுவும் கூறமுடியாது. ஆனால் உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு - அழித்தொழிப்பு யுத்தத்திற்காக அது முன்வைக்கும் பொய்க் காரணங்கள் பற்றி விளக்குவதும், எவ்வகையான பொய்ப்பரப்புரைகளை அது மேற்கொண்டு உக்ரேனியர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தி வருகிறதென்பதை விளக்குவதும் எனது நோக்கம். இதை உங்களால் வேறுவிதமாகத்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால், நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.
  18. விஷமப் பிரச்சாரம் 4 : டொன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேனியர்கள் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பு - அழித்தொழிப்பு யுத்தத்திற்கு ரஸ்ஸியா காரணங்காளாக முன்வைத்து வருபவற்றில் இந்தக் காரணம் மிகவும் முதன்மையானது. கடந்த சில வருடங்களாக ரஸ்ஸிய அரசு ஊடகங்கள் மனம் நெகிழச் செய்யும், உணர்ச்சி ததும்பும் செய்திகளை உள்நாட்டு ரஸ்ஸிய மக்களை நோக்கி முன்வைத்து வருகின்றன. இவ்வாறான உணர்வுபூர்வமான செய்திகளைத் தொடர்ச்சியாக வானலையில் பரவ விடுவதன் மூலம் உக்ரேனியர்கள் மீதான இயல்பான ஆத்திரத்தையும், வன்மத்தையும் உள்ளூர் ரஸ்ஸியர்களிடையே ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். ரஸ்ஸிய செய்தி வாசிப்பவர் ஒருவரால் விஷமத்தனமாக வெளியிடப்பட்ட 2014 இன் ரஸ்ஸிய சிறுவனை உக்ரேனியர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் எனும் பொய்யுரையினையடுத்து, இதேபோன்ற பல பசப்புரைகளை ரஸ்ஸியர்களைக் கோபப்படுத்தும் நோக்கில் மட்டுமே ரஸ்ஸிய அரசும் புட்டினும் பரப்பி வந்தார்கள். அவற்றில் சிலவான, "மேற்கு நாடுகளின் செல்வந்தர்கள் டொன்பாஸ் பிராந்தியத்திற்கு வந்து, மிருகங்களை வேட்டையாடுவது போன்ற சபாரிகளில் ரஸ்ஸியர்களை வேட்டையாடலாம் என்று உக்ரேன் ஒரு போட்டியை ஆரம்பித்திருக்கிறது" என்பதும், "மேற்குநாட்டவர்கள் டொன்பாஸுக்கு வந்து தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் போட்டியினை ரஸ்ஸியர்களை இலக்குகளாக வைத்து நடத்தலாம் என்று உக்ரேன் அரசு அறிவித்திருக்கிறது" என்பதுமான மிலேச்சத்தனாமன கற்பனைப் பொய்யுரைகளை ரஸ்ஸியர்களிடையே பரப்பிவருவதன் மூலம் உக்ரேனியர்கள் மீதான ஆக்கிரமிப்பிற்கு ரஸ்ஸிய மக்களை தன் பின்னால் ஒன்றுதிரட்ட புட்டின் முயன்று வருவதும் கண்கூடு. இதேபோல, 2012 இல், ரஸ்ஸிய சிறுவன் ஒருவனை உக்ரேனிய விமானப்படை ட்ரோன் விமானத்தைப் பயன்படுத்திக் கொன்றதாக ரஸ்ஸிய உளவுத்துறை தன்னிடம் கூறியதாக அரச தொலைக்காட்சியொன்றின் செய்தி வாசிப்பவர் போகிற போக்கில் கூறிச்சென்றதும் நடந்தது. இதற்கான காரணமாக அச்சிறுவன் சில ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தான் என்பதாலேயே உக்ரேனியர்கள் அவனை ட்ரோனைக் கொண்டு தாக்கியதாக வேறு அந்தச் செய்தி வாசிப்பவர் கூறியிருக்கிறார். ரஸ்ஸியாவினால் பல்லாண்டுகளாக செய்யப்பட்டுவரும் "நாஜி எதிர்ப்பு" பரப்புரைகளும் இவ்வாறான பொய்யான புனைவுகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. உக்ரேனை ஆக்கிரமிக்கும் தனது நியாயப்படுத்தல்களில் ரஸ்ஸியா கூறிய ஒரு விடயம் தான் உக்ரேனிலிருந்து நாஜிகளை முற்றாக துடைத்து அழிப்பதென்பது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், உக்ரேன் அரசு ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட ஒரு அரசு என்பதுடன், குறைந்தது 8 மில்லியன் உக்ரேனியர்கள் நாஜிகளுக்கெதிரான யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதும் வேண்டுமென்றே புட்டினாலும் அவரது அரச ஊதுகுழல்களாலும் இது மறைக்கப்பட்டு வருகிறது.
  19. விஷமப் பிரச்சாரம் 3 : டொன்பாஸ் பிராந்தியம் மீது உக்ரேன் இரசாயண, அணுவாயுத ஆயுதங்கள் அடங்கலாக பல தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. உக்ரேன் ஒருபோதுமே இரசாயண ஆயுதங்களைத் தயாரிக்கவில்லையென்பதுடன், அவற்றை சேமித்தும் வைக்கவில்லையென்பதே உண்மை. இரசாயண ஆயுதங்களைப் பாவிப்பதில்லை எனும் சாசனத்தில் அங்கத்துவம் வகிக்கும் உக்ரேன் இவ்வகையான ஆயுதங்களைப் பாவிக்கும் என்று ரஸ்ஸியா கூறுவது முற்றான பொய்ப்பிரச்சாரமே அன்றி வேறில்லை. மேலும் ரஸ்ஸிய அரச ஊடகங்கள் உக்ரேன் வெண்பொசுபரசு ஆயுதங்களைத் தயாரிப்பதாகவும், அவற்றைப் பாவிப்பதாகவும் தொடர்ச்சியான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன், ரஸ்ஸிய உளவுத்துறையுடன் நெருக்கமான டெலிகிராப் சனல் எனும் செய்திச் சேவை, உக்ரேனியர்கள் பெற்றோல்க் குண்டுகளை வீடுகளில் தயாரிப்பதை, "வீட்டில் தயாரிக்கும் அணுவாயுதங்கள்" என்று விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ரஸ்ஸியாவின் அரச ஊடகங்களில் அண்மையில் வெளிவந்த "உக்ரேனியர்கள் முன்னாள் அணு உலையான செர்னோபிலில் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறார்கள்" எனும் பொய்ப் பரப்புரை எதுவித சாட்சியங்களையும் முன்வைக்க முடியாத நிலையில் ரஸ்ஸியர்களாலேயே கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் நடந்தது. இவ்வாறான பரப்புரைகளை மேற்கொள்வதன் மூலம் உக்ரேனிய ராணுவத்தினரை மிக மோசமான வில்லன்களாகவும், ரஸ்ஸிய வீரர்களை காவல் தெய்வங்களாகவும் காட்டியதுடன், செர்னோபில் அணு மின் நிலையத்தை தான் அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டதனையும் ரஸ்ஸிய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. இரசாயண ஆயுதங்களின் பாவனை தொடர்பான ரஸ்ஸிய அரசு மற்றும் ஆரசு சார் ஊடகங்களின் பொய்ப் பரப்புரைகள் நெடுங்காலமாக நடந்துவருபவை. சிரிய சர்வாதிகாரி ஆஸாத்துடன் இணைந்து அப்பாவிச் சிரியர்களின் மீது கடுமையான இரசாயன ஆயுதத் தாக்குதலினை ரஸ்ஸியா மேற்கொண்டு வந்தபோதிலும் அதனை இன்றுவரை ரஸ்ஸியா மறுத்தே வருகிறது. இதுமட்டுமல்லாமல், ரஸ்ஸியாவின் முன்னாள் உளவாளிகளை சர்வதேசமெங்கும் தேடி வேட்டையாடி வரும் புட்டின், இவர்களைக் கொல்வதற்கு இரசாயணங்களையே பாவித்துவருகிறார் என்பதும் ரகசியமல்ல.
  20. விஷமப் பிரச்சாரம் 2 : உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் அரசு இனவழிப்பினை மேற்கொள்கிறது. மனிதநேயத்திற்கு எதிரான மிகவும் மோசமான அக்கிரமங்களை உக்ரேன் அரசு செய்வதாகப் பொய்யுரைக்கும் ரஸ்ஸியா, உக்ரேனை மிகப்பெரும் வில்லனான ரஸ்ஸிய மக்களிடையே சித்தரித்து வருகிறது. ஆனால், 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா மனித உரிமை சாசனத்தின்படி இனவழிப்பு என்பதன் வரைவிலக்கணத்தினை முற்றாக மறைத்து இனவழிப்பு என்பதற்கான புதிய விளக்கத்தினை ரஸ்ஸியா கொடுக்க முயன்று வருவது கண்கூடு. ஆனால், புட்டினாலும், அரச பயங்கரவாத ஊடகங்களினாலும் பரப்பப்பட்டுவரும் இந்த நகைப்பிற்கிடமான "இனவழிப்பு" குற்றச்சாட்டை ரஸ்ஸியாவின் சுயாதீன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுப்பதுடன், இவை அரசினால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்பதையும் பகிரங்கமாகக் கூறி வருகின்றன. உக்ரேனின் நடப்பதாக ரஸ்ஸியா பசப்பும் இனவழிப்பை ஐ நா வின் மனிதவுரிமை ஆணையமோ அல்லது சர்வதேச மனிதவுரிமைகளுக்கான நீதி மைய்யமோ ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், ஆண்டுதோறும் வெளியிடப்படும் மனிதவுரிமை அறிக்கையில் உக்ரேனில் நடப்பது இனவழிப்பு எனும் ரஸ்ஸியாவின் தொடர்ச்சியான பரப்புரையினை முற்றாக மறுதலித்தே வருகின்றன. ரஸ்ஸியாவின் இந்தப் பொயான புனைவினையடுத்து, உக்ரேனின் கிழக்கில் ரஸ்ஸியாவினுடனான போரை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கில் சர்வதேச நீதிமன்றில் ஆணையொன்றினைக் கேட்டிருக்கும் உக்ரேன், ரஸ்ஸியா கூறுவதுபோன்று அங்கே இனவழிப்பொன்று நடைபெறவில்லையென்பதை எவர் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
  21. சரி, தூற்றுபவர்களும்,பிழைகாண்பவர்களும் ஒருபக்கம் எழுதட்டும். அது அவர்களின் வேலை. நான் எனது திரி தொடங்கிய நோக்கத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கலாம். உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் காரணங்கள் என்று ரஸ்ஸியப் பயங்கரவாத அரசினால் முன்வைக்கப்படும் கற்பனைக் காரணங்கள் பற்றி தெளிவுபடுத்துவது இத்திரியின் நோக்கத்திற்கு அவசியமானது என்பதால், அதுகுறித்தும் சில விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே தொடர்ந்தும் பயணிக்கலாம். மேற்குலக ஊடகங்கள் பொய்யுரைப்பதாகவும், இப்போரின் மறுபக்கம் என்றொன்று இருக்கிறது, அது ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை நியாயப்படுத்தும் என்று நம்பிக்கொண்டு இக்களத்தில் எழுதிவரும் சிலருக்காகவும் நான் இதனை இங்கே தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று உணர்வதாலும் இதைச் செய்யவேண்டியிருக்கிறது. உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்து ரஸ்ஸியாவுக்குச் சார்பான செய்திச் சேவைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக பரப்பப்பட்டுவரும் பொய்யான பரப்புரைகளையும், காரணங்களையும் களைவது மிக அவசியம். 2014 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு முரணான வகையில் கிரிமியாவை ஆக்கிரமித்துக்கொண்டது முதல் இன்று உக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்புப் போரை கட்டவிழ்த்துவிட்டதுவரையான இக்காலப் பகுதியில் ரஸ்ஸிய அரசு தனது உள்ளூர் மக்களை நோக்கியும், தனது அயல் நாடுகள் நோக்கியும் உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் தொடர்ச்சியான, மிகவும் பாரதூரமான பொய்ப் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் உலக மக்களின் அபிப்பிராயம் தன் பக்கம் திரும்பலாம் என்று அது எதிர்பார்க்கிறது. ரஸ்ஸியாவில் வேண்டுமென்றே முடுக்கிவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாக நாம் களையலாம். விஷமப் பிரச்சாரம் 1 : உக்ரேனில் நிலவும் நிலைமையே இந்த ஆக்கிரமிப்பிற்குக் காரணமாகும். உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழி பேசும் சிறுபான்மையினருக்கெதிரான உக்ரேனின் நடவடிக்கைகளே இந்த ஆக்கிரமிப்பைத் தூண்டிவிட்டன. ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே நாட்டு, ஒரே தேசம், ஆகவேதான் உக்ரேனின் கிழக்கில் மக்களைக் காக்க ரஸ்ஸியா தலையிட வேண்டியதாகியது. இந்தப் பொய்யுரையினை மெய்யாக்க ரஸ்ஸிய அரசு ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. தன் மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் இனவழிப்பை நடத்துவதாக அவை தொடர்ச்சியாக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் உக்ரேனை ஒரு வில்லனாக, ரஸ்ஸியாவின் பிரதான எதிரியாக உள்நாட்டிலும், தனது ஆதரவாளர்களிடையேயும் விம்பப்படுத்தி வருகின்றன. 2 ஆம் உலகப் போரில் நாஜிக்களுடனான போரில் ரஸ்ஸியாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பை மீண்டும் கிளறியெடுத்து, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, உக்ரேனை புதிய நாஜிகள் என்று ஒப்பிடுவதன் மூலம் தனது பொய்ப்பிரச்சாரத்தை ரஸ்ஸியர்களிடையே முன்கொண்டு செல்கிறது ரஸ்ஸிய அரசு. ரஸ்ஸிய அரச ஊடகங்களில் வெளிவந்த பொய்ப்பரப்புரைகளில் ஒன்றினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ரஸ்ஸிய சிறுவன் ஒருவனை உக்ரேனிய ராணுவத்தினர் சிலுவையில் அறைந்து கொன்றதாக ஒரு செய்தியாளர் கூறிவிட, அப்பொய்ச் செய்தியை அனைத்து ரஸ்ஸிய ஆதரவுத்தளங்களும் காவித் திரிந்தன. ஆனால், இப்படியான நிக்ழவு உண்மையிலேயே நடக்கவில்லை என்பதுடன், இந்நிக்ழவு நடந்ததற்கான காரணமாக ரஸ்ஸியா முன்வைத்த காரணமும் மிகவும் நகைப்பிற்கிடமானது. 2014 இல் இடம்பெற்றதாக ரஸ்ஸியா புனையும் இந்த புழுகில், சிறுவன் திருடினான் என்பதற்காகவே உக்ரேனியர்கள் அவனை சிலுவையில் அறைந்தார்களாம். ஆனால், இதுபோன்ற பல புரட்டுக்களை ரஸ்ஸிய செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து வருகின்றன. ஆனால், உண்மையில் கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழி பேசும் மக்களுக்கெதிரான எந்தவித அச்சுருத்தல்களையும் உக்ரேன் அரசு விடுக்கவில்லை என்று நிலைமையிருக்க, ரஸ்ஸியாவோ அங்கே இனவழிப்பு நடைபெறுவதாக கூக்குரலிட்டு வருகிறது. கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழிபேசுவோருக்கு எதிராக மனிதவுரிமை மீறள்கள் நடைபெறவில்லையென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலும், ஐரோப்பிய கவுன்சிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலும் ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே தேசம் எனும் பல் நூற்றாண்டுப் பழமைவாதக் கோஷமானது, சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பில் உக்ரேன் உட்பட்டிருந்த வேளையில் உக்ரேனை ஆக்கிரமித்தவர்கள் உக்ரேன் மீது திணித்த ஒரு கொள்கை. அதே கொள்கையினை மீள உயிர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கையாகவே சுமார் 800 வருடங்களின் பின், தனியான அடையாளங்களைக் கொண்ட, தனித்துவ இனமான, தனிக் கலாசாரத்தைக் கொண்ட உக்ரேனை தன்னுடன் கட்டாயமாக இணைக்க அதே கோஷத்தைப் புட்டின் கையிலெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை. 2014 இல் இருந்து இந்தப் பொய்பரப்புரையினை கடுமையாக முடுக்கி விட்டிருக்கும் புட்டின், உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பிறகு நியாயம் கற்பிக்க இந்த புனைவினை பாவித்து வருகிறார். சுமார் 800 வருடங்களுக்கு முன்னால் எல்லைகளற்ற ரஸ்ஸிய தேசத்தை 21 ஆம் நூற்றாண்டில் கொண்டுவருவேன் என்று புட்டிங் நினைப்பது சுத்த அயோக்கியத்தனமேயன்றி வேறில்லை. உக்ரேன் சுதந்திரமான ஒரு தனிநாடு. தனது வளர்ச்சி எப்பாதையில் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உக்ரேன் மட்டும்தான். யார் யாருடன் தான் சிநேகம் வைக்கவேண்டும், தனது பாதுகாப்புத்துறையும், வெளிவிவகாரத்துறையும் எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட உக்ரேன் தான். அத்துடன், சர்வதேச அமைப்புக்களில் தான் இடம்பெறவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதும் உக்ரேன் தான். ஆனால், அகண்ட ரஸ்ஸிய தேசத்தை சரித்திர காலத்திலிருந்து கிளறியெடுத்து, அதற்கு உயிர்கொடுக்க முனையும் புட்டினும் அவரது பயங்கரவாத அரசும் உக்ரேனின் தனித்தன்மையினைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வருவதுடன், உக்ரேன் என்பது ஒரு சுதந்திரமான நாடு என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தே வருகின்றனர்.
  22. இத்திரி எத்திசையில் பயணிக்கக் கூடாது என்று நான் அஞ்சி , மற்றையவர்களின் விதண்டாவாதங்களை இங்கே செய்யவேண்டாம் என்று கேட்டேனோ, அது இப்போது தத்ரூபமாக நடக்கிறது. இதை எண்ணித்தான் ஒரு பொதுவான வேண்டுகோளை முன்வைத்தேன். இது எனது சொந்த ஆக்கம், குறைந்தது நான் எழுதியதை முடிக்கும்வரையிலாவது என்னை எழுத விடுங்கள் என்று. ஆனால், நிர்வாகமே, "அப்படியில்லை, யாரும் எழுதலாம்" என்று சொன்னதன் பிறகு தமது பக்க நியாயங்கள் என்று ஆளாளுக்கு எழுதுகிறார்கள். உங்களின் சொந்தக் கருத்துக்களை, நியாயங்களை தனியே ஒரு திரி திறந்து எழுதலாமே என்றுகூடக் கேட்டுப் பார்த்தாயிற்று, ஆனால் எவரும் கேட்பதாக இல்லை. சரி, உங்கள் விருப்பத்தின்படியே ஆகட்டும்.
  23. வணக்கம் அண்ணா, யாழில் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்துபவர்களில் நீங்கள் முக்கியமானவர். சிலவேளைகளில் எனது கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றாலும்கூட, அதை எழுதுவதற்கான ஆதரவினை நீங்கள் தர எப்போதுமே பின்னின்றதில்லை. அதற்கு முதற்கண் எனது நன்றிகள். உக்ரேன் பிரச்சினை ஆரம்பித்தது முதல் நான் எழுதிவரும் கருத்துக்களை நிச்சயம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்பிரச்சினை தொடர்பான உங்களின் நிலைப்பாட்டையும், நீங்கள் பெரும்பாலும் மெளனமாக இருந்தாலும் கூட என்னால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது. நெடுக்காலபோவான் எனது தலைப்பை சரியாகப் புரிந்துகொண்டுதான் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். ஏனென்றால், நான் நிச்சயம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும், மரியோபுல் அவலத்தையும் ஒப்பிட்டு எழுதுவதற்காகவே இத்திரியினை ஆரம்பித்தேன். என்ன, பலரும் வந்து விமர்சிப்பார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேண்டும், அது எனது தவறுதான். சொந்த ஆக்கம் என்பதால் விமர்சனம் இருக்காது என்று இருந்துவிட்டேன். நெடுக்காலபோவான் செய்தது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் என்ன, என்னை முழுவதுமாக எழுதிமுடிக்க விடாது அவரே ஆரம்பித்துவிட்டார். சிலவேளை இத்திரியின் பாதை எப்படியிருக்கப்போகிறதென்பதை முன்பே அனுமானித்ததால் அவர் இதைனச் செய்திருக்கலாம். சரி, எவை எப்படியிருப்பினும், மீண்டும் உங்களின் ஆதரவிற்கு நன்றியண்ணா.
  24. வணக்கம் கோஷான், உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உக்ரேன் பிரச்சினைபற்றிய விவாதங்கள் நடந்தபோது நீங்கள் இல்லாமையினை உணர்ந்தேன். உங்களின் புட்டினும் புதுமாத்தலனும் படித்தேன். உண்மையில் சுட்டு விட்டது. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் உக்ரேனியர்கள் எங்கே, யுத்தம் நடக்கும்போது புலிகளிடமும் , தப்பியோட முடியாதவர்களிடமும் போராட்டத்தைத் திணித்துவிட்டு "நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு தப்பியோடி வந்த நான் எங்கே என்று எண்ணிப்பார்த்துக்கொண்டேன். நீங்கள் கூறியதுபோல அந்நியப்பட்டுவிடுவேன் என்கிற அச்சம் இப்போது வருகிறது. அதற்காக நான் நினைப்பதை எழுதாமலும் இருக்கமுடியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்த பலர் விலகிச் செல்லவும் சந்தர்ப்பம் இருப்பதாக நினைக்கிறேன். பார்க்கலாம், எதுவரை என்னால் முடிகிறதென்று. உங்களின் ஆதங்கத்திற்கும், உண்மையான கரிசணைக்கும் எனது நன்றிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.