Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. எனது ஆக்கத்திற்கு இடையூறு செய்வார்கள் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். சொந்த ஆக்கங்கள் என்று எழுதிவிட்டு, மற்றையவர்களும் வந்து விமர்சிக்கலாம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிலவேளை, உக்ரேன் பற்றி எழுதுவதால் ஏனையவர்கள் வந்து இதனை விதண்டாவாதத் திரியாக மாற்றலாம் என்கிற அச்சம் இருந்தது. விதண்டாவாதிகளுக்கு பதில் சொல்லும் நோக்கம் எனக்கில்லை.
  2. தமிழின முள்ளிவாய்க்காலின் மணற்கரைகளில் வடிந்தோடிய குருதி இன்னும் ஈரமாகவிருக்க, இன்னொரு முள்ளிவாய்க்கால் சுமார் 5,847 கிலோமீட்டர்கள் தொலைவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ராணுவம் ஒன்று சிங்களப் பிசாசுகள் கூறிய அதே காரணங்களை முன்வைத்து "விசேட மனிதாபிமானப் படை நடவடிக்கை" என்கிற பெயரில் பாரிய இனவழிப்பொன்றை உக்ரேன் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையில், தனது இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதியென்று சுதந்திர உக்ரேனின் இரு நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் தன்னுடன் வல்வளைத்துக்கொண்ட ரஸ்ஸிய அரச பயங்கரவாதம், தன்னால் வல்வளைக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளுக்கும் இடையில் அகப்பட்டிருக்கும் உக்ரேனிய துறைமுக நகரான மரியோபுலை முற்றான முற்றுகைக்குள் கொண்டுவந்து, சாட்சியங்களற்ற மிகப்பெரிய இனவழிப்பினை முடுக்கி விட்டிருக்கிறது. தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும், இன்று உக்ரேனின் மரியோபுல்லில் ரஸ்ஸியா நடத்திவரும் முற்றான அழித்தொழிப்பு - இனவழிப்பிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய ஒற்றுமைகளை ஒப்பிடுவதே எனது ஆக்கத்தின் நோக்கம். குறிப்பு : இங்கே என்னுடன் விதண்டாவாதம் செய்ய முனைவோர் தயவுசெய்து அரசியற் களத்திலோ அல்லது உலக நடப்பிலோ அல்லது நிகழ்வும் அகழ்விலுமோ அதைச் செய்யுங்கள். உங்களுடன் வீண் விதண்டாவாதங்களில் எனது நேரத்தை இங்கே நான் விரயமாக்க விரும்பவில்லை. உங்களுக்கான பதில்களை நான் ஏற்கனவே மேல் குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கிவிட்டேன். தயவுசெய்து, இங்கே வேண்டாம் , நன்றி !
  3. தனது ராணுவத்தின் முன்னேற்றம் தடைப்பட்ட கணங்களிலும், தனது ராணூவத்திற்கு அதிக இழப்புக்கள் ஏற்பட்ட கணங்களிலும் பொதுமக்கள் மீதான தனது அகோரக் குண்டுவீச்சினை முடுக்கிவிட்ட சிங்களம் அவ்வப்போது தனது இயலாமையினை அப்பாவிகள் மீது காட்டுவதன் மூலம் வஞ்சம் தீர்த்துக்கொண்டது. தமிழ் மக்கள் மீதான தனது இனவழிப்பின் சாட்சியங்களை முற்றாக மறைத்துவிட்ட சிங்களம், தன்னுடைய வீரப் பிரதாபங்களை தெற்குச் சிங்களவர்களுக்கும், தனது நேச நாடுகளான ரஸ்ஸியா, இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகியவற்றிற்குக் காட்டுவதற்காக அரச தொலைக்காட்ட்சியின் படக்குழுவை தன்னுடன் போர் முன்னரங்கிற்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் தனது ராணூவம் அடைந்துவரும் வெற்றிகள் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு, போரில் அழிக்கப்பட்டுவரும் பொதுமக்களின் விபரங்களை முற்றாக இருட்டடிப்புச் செய்தது. சர்வதேச நாடுகளால் இலங்கையின் போர் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கரிசணைகளையும், கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களையும் பொய்யென்று வாதாடி மறுத்ததுடன், தனது படக்குழுவினரால் சோடிக்கப்பட்டு படமாக்கப்பட்ட "புலிகள் பொதுமக்களைக் கொல்கிறார்கள், யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயுதங்களைக் குவித்து வைக்கிறார்கள், யுத்த சூனிய வலயத்தின் இதயப்பகுதியிலிருந்து எம்மீது எறிகணைத் தாக்குதல் நடத்துகிறார்கள், வைத்தியசாலையின்மீதிருந்து தாக்குதல்கள் நடத்துகிறார்கள், பொதுமக்களின் உணவைப் பறித்துச் செல்கிறார்கள்" பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள்" என்று கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு தன்னால் கொல்லப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலையினை ஒன்றில் புலிகள் கொன்றார்கள் எம்றோ அல்லது புலிகள் இம்மக்களை கேடயமாகப் பாவித்துத் தாக்கினார்கள் என்றோ கூறி நியாயப்படுத்திக்கொண்டது. போரின் இறுதிநாட்களில், புலிகளின் ஆயுதங்கள் மெளனித்திருக்க, பதுங்குகுழிகளிலும், இன்னும் இடிபடாத வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றிலும் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மீது தாங்கிகளை ஏற்றிச் சென்றதுடன், தாங்கிகளின் பின்னால் அணிவகுத்து வந்த ராணுவக் காலாற்படை இன்னும் முனகல்கள் கேட்ட பதுங்கு குழிகளுக்குள் நூற்றுக்கணக்கான கைய்யெறிகுண்டுகளை எறிந்து அம்மக்கள் தாம் தஞ்சமடைந்திருந்த குழிகளுக்குள்ளேயே சமாதியாவதை உறுதிப்படுத்திக் கொண்டது . உச்சகட்ட இனவழிப்பு அரங்கேறிக்கொன்டிருக்க, இனவழிப்பு ராணுவத்தின் இன்னொரு படையணி சரணடைந்தவர்களை கூட்டாக இழுத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி தலையில் சுட்டுக் கொன்று இனவாதப்பசி தீர்த்துக்கொள்ள, இன்னொரு அணி கட்டாயமாக பிடித்து இழுத்துவரப்பட்ட தமிழ்ப் பெண்களையும் சிறுமிகளையும் கூட்டாக வன்புணர்ந்து தனது இன இச்சையினைத் தீர்த்துக்கொண்டது. துப்பாக்கிகளின் ரவை தீரும் வரைக்கும், தமது ஆண்குறிகளின் விந்தணுக்கள் நீர்த்துப் போகும்வரையும் இச்சைதீர்த்த சிங்களப் பிசாசுகள் அப்பிரதேசமெங்கும் குவிந்துகிடந்த தமிழினத்தை கூட்டாக கனரக வாகனங்கள் கொண்டு பாரிய புதைகுழிக்குள் தள்ளி மூடி சாட்சியங்களை அழித்து, தனது வெற்றியை பறைசாற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது. இனக்கொலை யுத்தத்தின் முடிவில், சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்ட 280, 000 அப்பாவிகளை முட்கம்பி முகாமினுள் அடைத்து, விசாரணை என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், பெண்களும் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கும், அதன்பின்னரான படுகொலைகளுக்கும் உள்ளானார்கள். பல பெண்கள் இராணுவத்தாலும், துணைராணுவக் குழுக்களாலும் இழுத்துச் செல்லப்பட்டு கட்டாய விபச்சாரத்தில் தெற்கில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், இவை அனைத்துமே சிங்களத்தால் சர்வதேசத்திடமிருந்து முற்றாக மரைக்கப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை ஆரத்தழுவி வரவேற்கும் ராணுவம், அவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்களைக் கொடுக்கிறது, களைத்துப்போய் , நடக்க திராணியற்று வரும் வயோதிபர்களையும், சிறுவர்களையும் தனது கைகளில் ஏந்தி நீரைக் கடந்து மீட்டு வருகிறது, முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் கொடுத்து மகிழ்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தன்மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்து, சர்பதேசத்தில் தன்மீதான தீர்மானங்களை தனது நீண்டகால நண்பர்களான ரஸ்ஸியா, பாக்கிஸ்த்தான், சீனா, இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் இன்றுவரை தடுத்தோ அல்லது பலவீனப்படுத்தியோ வெற்றிகரமாக இயங்கிவருகிறது. முதலாவது, இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை. யாழ்க் களத்தின் 24 ஆவது ஆண்டு நிறவிற்காக எழுதப்படும் எனது சொந்த ஆக்கம். உங்களுக்குத் தேவையென்றால் ரஸ்ஸியாவைன் இனக்கொலையினை நியாயப்ப்டுத்தி சொந்தமாக ஒரு ஆக்கத்தினை எழுதுங்கள். இங்கே வந்து எனது ஆக்கத்தினை சிதைக்குமாறு நான் கோரவில்லை. இரண்டாவது, நான் என்ன எழுதப்போகிறேன் என்பதை தீர்மானிக்கவோ அல்லது எனது ஆக்கம் எத்திசையில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவோ நீங்கள் யார். இது ஒன்றும் அரசியல் விவாதக் களம் அல்ல. புரிந்துகொள்ளுங்கள். உங்களின் விதண்டாவாதங்கள் இங்கே எனக்குத் தேவையில்லை. அகலுங்கள்.
  4. யுத்தத்தில் பொதுமக்கள் தஞ்சமடையும் முகாம்கள், காயப்பட்டவர்களைப் பராமரிக்கும் வைத்தியசாலைகள், யுத்த சூனிய வலயங்கள் என்பவற்றின்மீது போரிடும் எத்தரப்பாக இருந்தாலும் தாக்குதல் நடத்தமுடியாதென்பது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடைமுறையும், சட்டமும் ஆகும். இதுபோலவே பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பனவும் யுத்தத்தில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட முடியாதவை என்றும் சட்டம் இருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, தானே பிரகடனம் செய்த இரு யுத்த சூனிய வலயங்களுக்குள் மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து, அப்பகுதி மீது தனது விமானப்படையினரைக் கொண்டும், நீண்டதூர எறிகணைகளைக் கொண்டும் அதிகளவு பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் ஒரே நோக்கில் நோக்கில் கர்ணகடூரமான , தொடர்ச்சியான தாக்குதலினை மேற்கொண்டது. ஒரு தாக்குதல் முடிவடைந்து, கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் மீட்க ஏனையவர்கள் அப்பகுதியில் திரளும்போது, தனது இரண்டாவது தாக்குதலினை நடத்தி இன்னும் இன்னும் அதிகமான மக்கள் உயிரிழப்புக்களை அது உருவாக்கியது. தாக்குதல்களில் உயிர் தப்பியவர்கள் தப்பியோடி, தஞ்சமடையும் பகுதிமீதும் அவர்களைத் தொடர்ந்துசென்று தாக்குவதன் மூலம் காயப்பட்டவர்களைக் கூடக் காப்பாற்றும் அம்மக்களின் முயற்சிகளைத் தோற்கடித்திருந்தது. யுத்த சூனியப் பிரதேசங்கள் மீது சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை வானிலிருந்து வீசி, வெண்பொசுபரசு எனும் இரசாயணம் மக்கள் மேல் சிதறிவெடித்து பலர் எரிகாயங்களுடன் உயிரிழக்கும் அவலத்தை ஏற்படுத்தியது. இது போதாதென்று பல்குழல் எறிகணை செலுத்திகளில் தேர்மோபேரிக் எனும் அதிவெப்ப எறிகணைகளைச் செலுத்தி, வீழ்ந்து வெடிக்கும் இடத்தின் ஒக்ஸிஜன் வாயுவை ஊரிஞ்சியெடுத்து பலர் மூச்சுத் திணறியும், காற்றில் எரியுண்டும் கருகிச் சாவதை உறுதிப்படுத்திக்கொண்டது. இவ்வாறே, போரில் கட்டாயமாகத் தவிர்க்கப்படவேண்டிய மிக முக்கிய இடங்களில் ஒன்றான வைத்தியசாலைகள் மீது சிங்களம் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் அகோரமானவை. "இந்த அமைவிடங்களில் இருக்கும் வைத்தியசாலைகளைத் தவிருங்கள்" என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் ராணுவத்திடம் கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிட விபரங்களைப் பாவித்தே குறைந்தது இரு வைத்தியசாலைகள் மீதும், புலனற்றோர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபரைப் பராமரிக்கும் இடங்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு பல நூற்றுகணக்கான அப்பாவிகளைக் கொன்று தள்ளியது. முதலாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் மீட்கவந்த மருத்துவ பணியாளர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலிலும் பலர் உயிரிழப்பதையும் இதன்மூலம் சிங்களம் உறுதிப்படுத்திக்கொண்டது.
  5. மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் சரியாகப் 12 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழினம் தனது சரித்திரத்தில் மிகப்பெரும் மனித அழிவைச் சந்தித்தது. தீவிர பெளத்த இனவாத அரசின் தலைமையில் மொத்த சிங்களத் தேசமும் அதன் ராணுவமும் உருவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஆடி 26 ஆம் திகதி தமிழர் மீதான இனக்கொலை யுத்தம் தொடங்கப்பட்டது. கிழக்கில் சிங்கள விவசாயிகளுக்கான நீர் வழங்கலை புலிகள் தடுக்கிறார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழினம் மீதான இனக்கொலை யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி கொடூரமான இரத்தக் குளியலுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இனக்கொலை யுத்தத்தினைத் தொடங்கும் நடவடிக்கைகளில் முதலாவதாக தனது திட்டம் வெளியுலகிற்குத் தெரியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய சிங்களம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றிவந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு "உங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரமுடியாது" எனும் மிரட்டலினை விடுத்து ஒரே நாளில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. பின்னர், சர்வதேசச் செய்தியாளர்கள் எவரும் யுத்தம் நடைபெறும் பகுதிக்குச் செல்லமுடியாதெனும் கட்டளையினை விடுத்து விரியவிருக்கும் கொலைக்களத்திலிருந்து உண்மைச் செய்திகள் வெளியே கசிவதை அது தடுத்துக்கொண்டது. சர்வதேசத்தையும், உள்நாட்டுச் சிங்களவர்களையும் ஏமாற்றும் நோக்கில் தமிழினம் மீது தான் நடத்தத் திட்டமிட்டிருந்த இனவழிப்பிற்கு " மனிதாபிமான மீட்பு நடவடிக்கை" என்று பேர்சூட்டிக்கொண்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மாவட்ட அரச அதிபர்களின் கணிப்பீட்டின்படி உள்ளே தஞ்சம் அடைந்திருந்த மக்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து இருபதினாயிரம் என்றிருக்க, அவ்வெண்ணிக்கையினை வேண்டுமென்றேகுறைத்து மதிப்பிட்டு வெறும் எழுபதினாயிரம் மட்டுமே என்று சர்வதேசத்தை ஏமாற்றி வந்தது. ஆனால், தான் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்ட எண்ணிக்கையான 70,000 மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதற்குப் பதிலாக வெறும் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான உணவுப் பொருட்களை அனுப்பிவைத்து சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றிவந்தது. உணவையும், மருத்துவப் பொருட்களையும் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல் கூடாது எனும் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு முரணாக உணவையும் மருந்தினையும் உள்ளே தஞ்சமடைந்த மக்களுக்கு வழங்கமறுத்து அவர்களை பட்டினிச் சாவினுள் தள்ளுவதன் மூலம் மக்கள் கொல்லப்படுவதை உறுதிப்படுத்தியதுடன், போரிடும் மனோவலிமையினையும் அடித்து நொறுக்கியது. வேண்டுமென்றே குரைத்து மதிப்பிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை, அக்குறை மதிப்பீட்டிற்கும் கூட போதாத உணவுப் பொருட்கள் என்ற சதிகளின் மேல், உணவுப்பொருட்களைக் காவிச் சென்ற பாரவூர்திகளையும் தனது வான்படையைக் கொண்டு அழித்துக் கொண்டது.
  6. ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார். கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான். அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. முற்றும் இணையம் : கொழும்பு டெயிலி மிரர் ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்
  7. "கேர்ணல்" கருணாவும் அவனது பிரதேசவாதப் புரட்சியும் மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு, புலிகளின் தேனகம் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் முக்கிய தளபதிகள் , பொறுப்பாளர்களை கருணா கூட்டியிருந்தான். சுமார் 150 புலிகளின் தலைவர்கள் அடங்கிய அந்த கூட்டத்தை கருணாவே நடத்தினான். கிழக்கில் 1987 இல் இருந்து பிரபாகரனுக்கு விசுவாசமாக போர்நடத்திய அதே கருணா இன்று அதே தலைவருக்கு எதிராக பிரதேசவாதக் கோசத்தைப் பாவித்துப் புரட்சி செய்துகொண்டிருந்தான். அன்று அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினருக்கு தமது காதுகளையே அவர்களால் நம்பமுடியவில்லை. புலிகளின் தலைமைமீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் கருணா முன்வைத்துக்கொண்டிருந்தான். அவனது குற்றச்சாட்டுக்கள் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், நிதித்துறைப் பொறுப்பாழர் தமிழேந்தி, காவல்த்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகிய புலிகளின் மிக முக்கிய தலைவர்கள் மீதே முன்வைக்கப்பட்டன. கருணா விடுத்த கோரிக்கையென்னவென்றால், இந்த மூவரையும் தவிர்த்து, கிழக்கு மாகாணத்திற்கென்று தனியான அதிகார பலம் கொண்ட, தன்னிச்சையாக இயங்கும் நிர்வாக அமைப்பொன்றுதான். "வன்னித்தலைமையின் கீழ் நாம் செயற்பட விரும்பவில்லை, வடக்கு மைய்யத்தைச் சுற்றி நாம் இயங்கப்போவதில்லை, அதனைத் தூக்கியெறிந்துவிட்டு கிழக்கிற்கென்று தனியான ஒரு அமைப்பை நாம் உருவாக்குவோம்" என்று அவன் அங்கு கூடியிருந்தவர்களிடம் கர்ஜித்தான். இதைக்கேட்ட அனைவருமே ஒருகணம் அதிர்ந்துபோயினர். பலரின் முகத்தில் விரக்தியும் விசனமும் ஒட்டிக்கொண்டது. ஆனால், கருணாவின் எண்னத்தை ஏற்கனவே அறிந்துவைத்திருந்த அவனுக்கு நெருக்கமானவர்கள் அமைதியாக இருந்து அவன் சொல்வதை ஆமோதிக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் கருணாவுடன் சேர்ந்து நிற்கப்போவதாக வெளிப்படையாகவே கூறினர். ஆனால், இதில் வேடிக்கையென்னவென்றால், அன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கப்போவதாகக் கூறிய பலர் பின்னர் வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் இணைந்துகொண்டதுடன், கருணாவின் துரோகத்தையும் கடுமையாகச் சாடத் தவறவில்லை.
  8. மக்களால் நேசிக்கப்பட்ட கெளசல்யன் கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட, பிரபலமான ஒரு தலைவராக கெளசல்யன் விளங்கினார். கிழக்கின் பெரும் பணக்காரர்களும், இடைநிலை வசதிபடைத்தோரும் கெளசல்யனின் காணிச் சீர்திருத்தங்களை அவ்வளவாக விரும்பாவிட்டாலும், கிழக்கின் ஏழை விவசாய மக்கள் அவரை போற்றி வந்தார்கள். இந்த ஏழை மக்களாலேயே கிழக்கு மாகாணம் நிரம்பியிருந்தது. கெளசல்யனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான இந்த ஏழைத் தமிழர்கள் அவர்மேல் கொண்ட பற்றினாலும், அவரது இழப்பினால் ஏற்பட்ட உண்மையான சோகத்தினாலும்தான் அங்கு வந்து தம்மால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவனுக்கான அகவணக்கத்தினைச் செலுத்தினார்கள் என்றால் மிகையில்லை. அவரைப்பற்றிய விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும், தனது பணியில் அவர் காட்டிய நேர்மையும், போராட்ட இலட்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியா பற்றுறுதியும் எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது. கெளசல்யனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் கருணா பிரதேசவாதச் சாயம் பூசிக்கொண்டு புலிகளை விட்டுப் பிரிந்து ராணுவத்துடன் இணைந்தபோது ஏற்பட்டது. தனது உயிருக்குக் கருணாவினாலும்ம் அவரது விசுவாசிகளாலும் நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்திருந்தபோதும், தலைமைக்கெதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட்டுவருவதை கெளசல்யன் கடுமையாக எதிர்த்தார். கிழக்கின் மைந்தனாக இருந்தபோதும் கருணாவின் இந்த துரோகத்தனத்தை வெளிப்படையாக அவர் விமர்சித்தார். கருணாவின் துரோகத்தனத்திற்கெதிரான கெளசல்யனின் கடுமையான விமர்சனமும், நிலைப்பாடும் அக்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே, இதுபற்றி நாம் பேசுவது முக்கியமானது.
  9. கிழக்கு முஸ்லீம்களுடன் சமாதானமாகச் செல்ல விரும்பிய கெளசல்யன் நெடுங்காலமாக கிழக்கின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் தலைமையின் நம்பிக்கையினை இழந்த காலப்பகுதியில் கெளசல்யன் கிழக்கு மாகாண அரசியல்த்துறைக்குப் பொறுப்பானவராக தலைவரால் நியமிக்கப்பட்டார். தான் துரோகிகளால் கோழைத்தனமாகக் கொல்லப்படும்வரை தனது பணியில் திடமான உறுதியுடனும், தலைமைக்கு விசுவாசத்துடனும் செயற்பட்டு வந்தார். கெளசல்யனின் அரசியல் ரீதியினான வெற்றிகளில் முதன்மையானது கிழக்கு முஸ்லீம்களுடன் அவர் செய்துகொண்ட நட்புறவு. தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே இனரீதியிலான வன்முறைகள் எழுவதை கெளசல்யன் இறுதிவரை தடுத்து, இரு சமூகங்களுக்குமிடையே ஒற்றுமையினை நிலைநாட்ட தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தார். கெளசல்யன் கொல்லப்பட்ட செய்தி கிழக்கில் பரவியபோது கிழக்கின் பல முஸ்லீம் நகர்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டதும், கெளசல்யனின் வித்துடல் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டபோது அந்நிகழ்வில் கலந்துகொண்ட பெருமளவிலான இஸ்லாமியத் தமிழர்களும் கெளசல்யனின் இன ஒற்றுமை முயற்சிகளுக்கான சாட்சிகள் என்றால் அது மிகையில்லை. கெளசல்யன் இடதுசாரிக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவர். விவசாய குடும்பத்திலிருந்து வந்த கெளசல்யன் காணி சீர்திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். ரமணனுடன் இணைந்து பெரும் பணக்கார தமிழ் , முஸ்லீம் காணி உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். ஆனால், துரதிஷ்ட்டவசமாக கெளசல்யனின் நவீன விவசாய முயற்சிகள் கிழக்கில் வெற்றியளிக்காமல் போய்விட்டன. இதற்குக் காரணம் புதிதாக காணிகளைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளிடம் அவற்றை நிர்வகிக்கவோ, பராமரிக்கவோ தேவையான நிதி வளங்களோ அல்லது அனுபவமோ போதுமானதாக இருக்கவில்லை. புலிகளின் பெருமளவு கவனமும் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு போராடுவதில் குவிந்திருக்கும்போது, ஏழை விவசாயிகளுக்கான அவர்களது உதவியென்பது இக்காலத்தில் போதுமானதாக இருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்லப்போனால், இந்த விவசாயிகளுக்கான உதவித் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வசதிகள் புலிகளிடம் அன்று இருக்கவில்லை. தொடர்ச்சியான போரும், ஆக்கிரமிப்பும் ஒருகாலத்தில் இலங்கையில் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட கிழக்கின் இப்பகுதிகளை கடுமையாகப் பாதித்திருந்தன. கிழக்கில் வரிவிதிப்புகளை மேற்கொண்டாலும்கூட, கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிறு கைத்தொழில் முயற்சிகளை கெளசல்யன் முன்னெடுத்து வந்தார். புலிகளின் உதவியுடன் பாறைகளை அகல்தல், கட்டுமானப் பணிகள், வாகனங்களை வாடகைக்கு விடுதல், வெதுப்பக முயற்சிகள், சிறு கடைகளுக்கான நிதி முதலீடுகள், சிறு புடவைக் கைத்தொழில் என்று பல துறைகளில் கெளசல்யன் இயக்கத்தின் உதவியுடன் மக்களை ஈடுபடுத்தி வந்தார். இவை பெருமளவு லாபத்துடன் இயங்கவில்லையென்றாலும் கூட, நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பொறுப்பான நிதித்துறையிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவினால் இத்திட்டங்களை நடத்தும் பொறுப்பு அவரது விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் இயக்கத்திற்கென்றும், மக்களின் உதவித்திட்டங்களுக்கென்றும் சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் கருணாவினாலும், அவரது விசுவாசிகளாலும் களவாடப்பட்டது.
  10. கெளசல்யனின் காலிங்க வகுப்பு கெளசல்யன், மட்டக்களப்பு - அம்பாறை தமிழ் மக்களின் பெருமளவினரை அடக்கிய காலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர். இந்த சமூக அமைப்பு முக்குவர் சமூகத்தில் வருகிறது. படுவான்கரை கிராமங்களான பண்டாரியாவெளி, படைக்காத்தவெளி, அரசடித்தீவூ, கொக்கட்டிச்சோலை, களுதாவளை ஆகியவற்றில் முக்குவர் சமூகத்தினரே வாழ்ந்து வருகின்றனர். காலிங்கக் குடியினர் எனும் சமூகத்தினர் தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த போர்வீரர்களான கலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகிறது. காலப்போக்கில் இந்த போர்வீரர் மரபில் வந்த இக்குடியினர் கிழக்கில் தாம் வாழ்ந்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கெளசல்யன் மட்டுமில்லாமல், புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளான ரமேஷ், துரை, நாகேஷ் போன்றவர்களும் இதே காலிங்க வகுப்பினைச் சார்ந்தவர்கள் தான். இந்த சமூக அமைப்பைச் சேர்ந்த பல இளைஞர்கள் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பின் காலத்தில் புலிகளோடு தம்மை இணைத்துக்கொண்டவர்கள். அதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஏனைய சமூக அமைப்புக்களில் இருந்தே பல போராளிகள் இயக்கத்தில் இணைந்துவந்தனர். தனது 16 வயதில், 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கெளசல்யன் புலிகளின் கஞ்சிகுடிச்சியாறு முகாமில் தனது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர் புலிகளின் வடமுனைப் போர் அரங்கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் கெளசல்யன். இந்திய ராணுவம் வெளியேறி, அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் ஆரம்பித்த நேரத்தில் கெளசல்யன் கும்புறுமூலையில் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டார். அத்துடன் வாகரை - கதிரவெளிச் சமர்களிலும் கெளசல்யன் பங்கெடுத்திருந்தார். சமர்களத்திலும், இயக்கத்தினுள்ளும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டி வந்ததினால், அவர் விரைவாக புலிகளின் பதவி நிலைகளுக்கு உயர்த்தப்பட்டதுடன், சிறிது காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் நிதித்துறைக்குப் பொறுப்பானவராக தலைமையினால் நியமிக்கப்பட்டார். 1994 இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்ட தமிழேந்தியின் கீழ் செயற்பட்டு வந்தார். சந்திரிக்காவுடனான சமாதானக் காலபகுதியில் மீண்டும் கிழக்கிற்கு வந்த கெளசல்யன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிதி மற்றும் வரித்துறைக்குப் பொறுப்பானவராக இயங்கி வந்தார். யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வன்னிக்குச் சென்று, தம்மை மீளவும் ஒருங்கிணைக்கத் தொடங்கிய 1995 காலப்பகுதியில் கெளசல்யன் வன்னிக்குச் சென்றார். 1996 இல் இடம்பெற்ற புலிகளின் மிகவும் வெற்றிகரமான தாக்குதல்களில் ஒன்றான ஓயாத அலைகள் 1 முல்லை முகாம் தகர்ப்பில் கெளசல்யனும் பங்காற்றியிருந்தார். வன்னியில் 1996, 1997, 1998 ஆகிய காலப்பகுதியில் இடம்பெற்ற சமர்க்களங்களில் போரிட்ட படையணிகளுக்கு வழங்கல்களை செய்வதிலும் கெளசல்யன் ஈடுபட்டிருந்தார். 1998 இல் கிழக்கிற்கு மீண்ட கெளசல்யன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் நிதித்துறைக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார். பல லட்சக்கணக்கான பணத்தை மிகவும் நேர்மையுடனும், கண்ணியமாகவும் கெளசல்யன் இயக்கத்தின் சார்பில் கவனித்து வந்தார். அவரின் நேர்மை பற்றி இயக்கத்திற்குள் எல்லாருமே பேசுமளவிற்கு போராட்டம் மீதும், தலைமை மீது அதிக பற்றுடனும் நேர்மையுடனும் செயற்பட்டவர் கெளசல்யன். கிழக்கு மாகாணத்தின் தளபதியாகவிருந்த கருணாவினால்க் கூட கெளசல்யனினின் நேர்மை மீது ஒரு குற்றச்சாட்டையேனும் வைக்க முடியவில்லை. கெளசல்யனின் நேர்மையும், விசுவாசமும் எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும், கருணாவினால் அவர் நிதித்துறையிலிருந்து நீக்கப்பட்டு கிழக்கு மாகாண துணை அரசியல்த் துறைப் பொறுப்பாளராக கரிகாலனின் கீழ் அமர்த்தப்பட்டார். கெளசல்யனுக்கு வழங்கப்பட்டது ஒரு பதவி உயர்வு என்று கருணா சொல்லிக்கொண்டாலும்கூட, அவரை நிதித்துறையிலிருந்து அகற்றுவது கருணாவுக்கு மிகவும் அவசியமானதாகத் தெரிந்தது. நிதிப்பொறுப்பிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவின் நிதிக் கையாடல்களுக்கு இருந்த ஒரே தடையும் அகற்றப்பட்டது. தனது சகோதரனான ரெஜி எனப்படும் ரெஜினோல்ட்டை நிதித்துறைக்குப் பொறுப்பாக நியமித்த கருணா, பாரிய நிதிமுறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியதுடன், இக்கையாடல்களைப் பாவித்து தன்னைச் சுற்றி விசுவாசமான கூட்டத்தையும் கட்டி வளர்க்கத் தொடங்கினார். புலிகளிடமிருந்து கருணா விலகிச் செல்லவேண்டிய அவசியத்தை கருணாவின் நிதிக் கையாடல்களே முதன்முதலில் ஏற்படுத்தின.
  11. கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக் கொன்ற மங்களம் மாஸ்ட்டரும் தூயசீலனும் வாகனத்தில் பயணம் செய்தவர்களான கெளசல்யனையும் ஏனைய போராளிகளையும் சுட்டுக்கொன்றது மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் கருணா குழு முக்கியஸ்த்தரும், தூயசீலன் எனப்படும் அவரது உதவியாளரும் தான் என்று அறியமுடிந்தது. தூயசீலன் புலிகளின் காலத்தில் களுவங்கேணிப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்ததோடு, 2004 சித்திரையில் வாகரையில் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட வினோதன் படையணியின் தளபதியும் கருணாவின் நெருங்கிய சகாவுமான பாரதிதாசனின் முகாம் உதவியாளராக மங்களம் மாஸ்ட்டர் என்பவர் பணியாற்றியதாகவும் அறிய முடிகிறது. இத்தாக்குதலில் ஒரு ஏ கே 47 ரகத் துப்பாக்கியும், எஹ் கே 33 ரக தானியங்கித் துப்பாக்கியும் இவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலைகள் எதுவாக இருந்தபோதிலும், கருணாவினாலும், பரந்தன் ராஜனினாலும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளுக்கு பாரிய இழப்பாகவே கருதப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் போராளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் கெளசல்யன், மேஜர் புகழவன், மேஜர் செந்தமிழன், இரண்டாம் லெப்டினன்ட் நிதிமாறன் ஆகிய பதவியுயர்வுகளை புலிகள் வழங்கியிருந்தனர். இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவுக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை புலிகளுக்கு பாரிய இழப்பாகவே அன்று கணிக்கப்பட்டது. கெளசல்யன் அமைதியான சுபாவம் கொண்ட மென்மையாகப் பேசும் கெளசல்யன் ஒரு சிறந்த சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர். வெளிப்படையாகப் பேசாத, தன்னடக்கம் கொண்ட அவர் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர் என்று பரவலாக அறியப்பட்டவர். அவ்வாறே, இலட்சியத்திலிருந்து விலகாத, எதற்காகவும் இலட்சியத்தை விட்டுக் கொடுக்காத, இலட்சியத்தில் இருந்து பின்வாங்காத உறுதியுள்ள மனிதராக புலிகளால் அறியப்பட்டவர். கூச்சசுபாவமுள்ளவராக இருந்தாலும், மக்களுடன் மிக அதிகமாக நெருங்கிப்பழகியவர் அவர். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருக்கிருந்த வல்லமை புலிகளிடத்தில் பெரும் பேசுபொருளாகவே இருந்துவந்தது. 2005 இல் அவரது படுகொலையின் மூலம் ஒரு சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தவரை, புலிகளின் இரண்டாவதுநிலை தலைவராக எதிர்காலத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவரை அவ்வியக்கம் இழந்தது. இளையதம்பி நாகேந்திரன் லிங்கராசா எனும் இயற்பெயருடைய கெளசல்யன் 1972 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பாண்டாரியாவெளியில் பிறந்தவர். மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் இவ்வூர் அமைந்திருக்கிறது. ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தாலும்கூட, மிகச்சிறந்த போராளியாக அவர் பரிணமித்தார்.
  12. இந்தியாவின் ஒரிஸா மாநிலத்திலும், கர்நாடகாவின் பெங்களூரு பகுதியிலும் ஈ என் டி எல் எப் துணைராணுவக் குழு முகாம்களை அமைத்திருந்தது. இந்திய உளவுத்துறையின் செல்லப்பிள்ளையான இந்த துணைராணுவக் குழுவுக்கு ரோ மூலம் பாரிய உதவிகள் செய்யப்பட்டு வந்தன. புலிகளிடமிருந்து கருணா வெளியேறிய பின்னர் பரந்தன் ராஜன் அவருடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். புலிகளால் பாரிய அச்சுருத்தலினை எதிர்கொண்டிருந்த கருணாவுக்கு பரந்தன் ராஜனின் உதவி அந்நேரத்தில் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. ஆகவே, பரந்தன் ராஜனின் உதவியுடன் கருணா இந்தியாவுக்குச் சென்றார். கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவும், பரந்தன் ராஜனின் ஈ என் டி எல் எப்ப் உம் இணைந்து தமிழீழம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பின் ராணுவப்பிரிவாக தமிழ்த் தேசியப் படை எனும் துணைராணுவக் குழு இவர்களால் உருவாக்கப்பட்டது. கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டு மூன்று தினங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் இயங்கிவந்த கருணா துணைக்குழு உருப்பினரான சேரன் என்பவர் மூலம் இத்தாக்குதல் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் கெளசல்யனை தமது தமிழ்த் தேசியப் படை எனும் ராணுவப்பிரிவே கொன்றதாக அக்குழு வெளிப்படையாக உரிமை கோரியிருந்தது. இத்தருணத்தில் புலிகளின் அரசியல்த் துறைப் பொறுப்பாளரும் இன்னும் சில போராளிகளும் கொல்லப்பட்டது கருணா குழுவும் ஈ என் டி எல் எப்பு குழுவும் இணைந்து நடத்திய தாக்குதலில்த் தான் என்று கருணாவுக்கு ஆதரவானவர்கள் கிழக்கில் பெருமையாகப் பேசத் தொடங்கியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
  13. கெளசல்யனின் வாகனம் வரும்வரை காத்திருந்து ஏ 11 நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் ஏ 11 நெடுஞ்சாலையின் மக்கள் நடமாட்டமில்லாத 104 மற்றும் 105 ஆகிய மயில்க்கல்களுக்கிடையிலான பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழர் பகுதிகளுக்குள் துணைராணுவக்குழுக்களின் ஆதரவோடு நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களில் ஒன்றான நாமல்கம எனப்படும் புத்தம்புதிய சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே இந்த நெடுஞ்சாலைப்பகுதி இருக்கிறது. நெடுஞ்சாலையில் வெலிக்கந்தப்பகுதியில் அமைந்திருக்கும் 23 ஆவது பிரிகேட் படைமுகாமிலிருந்தே கெளசல்யனின் வாகனத்தை கருணா குழுவினரின் வெண்ணிற ஹயேஸ் வாகனம் தொடர்ந்துவந்ததாக நம்பப்படுகிரது. கெளசல்யனின் வாகனத்தின் சாரதியும், இரு பொலீஸ்காரரும் பிள்ளையாரடிப் பகுதியில் வழிபாட்டிற்கு இறங்கியிருந்தவேளையில் இவர்களைக் கடந்து இந்த வாகனம் சென்றதை போராளிகள் அவதானித்திருக்கிறார்கள். மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்ட எல்லையிலேயே இந்தப் படுகொலை நடந்தேறியிருக்கிறது. சுமார் 14 கிலோமீட்டர்களுக்கப்பால் அமைந்திருந்த புணாணை மற்றும் வெலிக்கந்தை ராணுவ முகாம்களுக்கு இடையிலான மக்கள் நடமாட்டமில்லாத பகுதியினை கொலைகாரர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வெலிக்கந்தை முகாமிலிருந்து 5 கிலோமீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் இத்தாக்குதலை கருணா குழு நடத்தியிருந்தாலும்கூட, எதுவித தடைகளுமின்றி இவ்விரு ராணுவ முகாம்களையும் கடந்து தப்பிச்செல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. தாக்குதல் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், இதனை நடத்தியது ராணுவத்தோடு சேர்ந்தியங்கும் கருணா குழுதான் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கருணா குழுவினர் இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பியிருந்த அவரின் பல ஆதரவாளர்களுக்குப் பேரிடியாக அமைந்தது, அத் தாக்குதலினைச் செய்தது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "தமிழீழம் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் தமது அமைப்புத்தான் என்று கருணாவின் தோழர்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தமது தாக்குதல் தொடர்பாக பெருமையாகப் பேசிக்கொண்டது. இதனைக் கருணா குழுவே செய்ததென்பதை அவர்களால் மறுக்கமுடியவில்லை. கருணா குழுவினரால் பெருமையோடு பேசப்பட்ட இந்த புதிய தாக்குதல் அணியென்பது கருணா குழுவின் உறுப்பினர்களையும் ஈ என் டி எல் எப் எனப்படும் பரந்தன் ராஜன் தலைமையிலான இந்திய ஆதரவு துணைராணுவக் குழுவும் இணைந்து உருவாக்கப்பட்ட துணைராணுவக் குழு என்பது குறிப்பிடத் தக்கது. பங்குனி 2004 இல் கருணா தனது தோழர்களோடு புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் இணைந்துகொண்டார். ஆனால், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கையினை புலிகள் 2004 சித்திரையில் ஆரம்பித்திருந்தார்கள். இதனையடுத்து ராணுவத்தின் துணையுடன் கொழும்பிற்குத் தப்பியோடிய கருணாவும் அவரது தோழர்களும் தெற்கிலேயே மறைந்து வாழ்ந்துவந்தார்கள். கருணாவால் கிழக்கில் கைவிடப்பட்ட அவரின் எடுபிடிகள் கிழக்கிலிருந்து ராணுவ முகாம்களில் அடைக்கமாகியதுடன், பலர் மட்டக்களப்பு பொலொன்னறுவை எல்லையில் அமைந்திருந்த பாரிய காட்டுப்பகுதியில் ஒளிந்துகொண்டார்கள். மட்டக்களப்பு - பொலொன்னறுவை எல்லைக் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கருணா குழு - ஈ என் டி எல் எப் குழுவினரின் குடில்களை புலிகள் தாக்கியபின்னர் (எச்சரிக்கை : ஒட்டுக்குழுவினரின் சடலங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன) அதேநேரம், கருணா துணைராணுவக் குழுவினரை வேட்டையாட புலிகள் தெற்குநோக்கி தமது அணிகளை அனுப்பி வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஒரு கட்டத்தில் பரந்தன் ராஜனின் உதவியுடன் கருணா நேபாளத்தினூடாக இந்தியாவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. 1987 இல் இருந்து 1990 வரையான காலப்பகுதியில் இந்திய ராணுவத்தின் துணையுடன் புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்தவர்களே இந்த ஈ என் டி எல் எப் எனும் துணைராணுவக் குழுவினர். இத்துணைராணுவக் குழுவினரின் சில தலைவர்கள் இந்தியாவின் ஆசீருடன் அமைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையிலும் அங்கத்துவம் வகித்தவர்கள். இக்குழுவிலிருந்து மாகாணசபை அமைச்சராக தெரிவான ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து இன்னொருவரை இப்பதவிக்கு இக்குழு நியமித்தது. 1990 இல் இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, பரந்தன் ராஜனின் துணைராணுவக் குழுவும் அவர்களுடன் இந்தியாவிற்குக் கப்பலேறித் தப்பித்துக்கொண்டது.
  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனின் படுகொலை 2005 ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கிழக்கு மாகாணத்தின் நாமல்கம எனும் பகுதியினை ஊடறுத்துச் செல்லும் ஏ 11 நெடுஞ்சாலையில் கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாசி மாதம் 7 ஆம் திகதி ஒரு திங்கட்கிழமையாகும். 57 - 1020 எனும் இலக்கத்தகட்டினையுடைய டொயோடா ஹயேஸ் ரக பயணிகள் வாகனம் மரதங்கடவல - திருக்கொண்டாட்சிமடு ஆகிய பகுதிகளை இணைக்கும் ஏ 11 நெடுஞ்சாலையூடாகப் பயணித்துக்கொண்டிருந்தது. வீதியில் இந்த வாகனத்திற்கு முன்னால், ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு வாகனத்தைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி வேகத்தைக் குறைக்கத் தொடங்கினார். ஆனால், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டு, அபாய விளக்குகள் எரிந்துகொன்டிருந்த அந்த வெண்ணிற வாகனத்திலிருந்தவர்கள் கெள்சல்யன் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யவே, அவர்கள் வாகனத்தை ஓய்வுக்குக் கொண்டுவரத் தொடங்கினார்கள். அப்போது நேரம் இரவு 7 மணி 45 நிமிடம். கெளசல்யன் பயணித்த ஹயேஸ் வாகனத்தில் 9 பேர் இருந்தனர். முன்னிருக்கையில், சாரதி விநாயகமூர்த்தியும், அருகில் முன்னாள் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனும், அவருக்கு அருகில் திருக்கோயிலைச் சேர்ந்த பொலீஸ் காவலர் சந்திரசேகரனும் அமர்ந்திருந்தனர். நடுவரிசை இருக்கையில் புலிகளின் கிழக்கு மாவட்டங்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யனும், இன்னொரு அரசியல்த்துறைப் போராளி புகழனும், அவர்களுக்கருகில் இன்னொரு பொலீஸ் காவலர் நாகராஜாவும் அமர்ந்திருந்தனர். பின்னிருக்கையில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகளான செந்தமிழன், நிதிமாறன், விநோதன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். இவர்களின் வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளைநிற ஹயேஸ் வாகனத்தைக் கடந்து செல்லும் தறுவாயில், அவ்வாகனத்தின் முன்னால் வீதியில் சீருடை தரித்த மூவர் நின்றுகொண்டிருப்பதை வாகனத்திலிருந்தவர்கள் அவதானித்திருக்கின்றனர். அவ்விடத்தில் நின்றவர்களின் ஒருவர் இவர்களின் வாகனத்தை நோக்கி கையசைக்கவே, மெதுவான கதியில் சென்றுகொன்டிருந்த இவர்களின் வாகனம், தனது வேகத்தை இன்னும் வெகுவாகக் குறைத்துக்கொண்டது. கெலசல்யன் பயணித்த வாகனம் ஓய்வுக்கு வரவும் அதனை நோக்கி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்தும், வீதியில் நின்றவர்களும் சேர்ந்து சரமாரியான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தார்கள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த விநோதன், கெளசல்யனும், சாரதியும் குண்டடிபட்டு முன்னோக்கிச் சாய்வதை அவதானிக்கிறார். கெளசல்யனின் வாகனத்தில் பயணித்த இரு பொலீஸ்காரரும் சந்திரநேருவின் காவலுக்கு வந்தவர்கள். அவர்கள் இருவரிடமும் டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகள் இருந்தன. இதை விடவும் சந்திரநேருவிடம் அவரின் பாவனைக்கென்று 9 மி மீ கைத்துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தம்மீது தாக்குதலை நடத்தும் கொலைகாரர்கள் மீது திருப்பித் தாக்கவோ, மறைவாக ஒளிந்துகொள்ளவோ அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காது தொடர்ச்சியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனத்தில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடந்தபோது, ஒரு பொலீஸ்காரர் வாகனத்திலிருந்து வெளியே குத்தித்து தப்பிக்க முயன்றார். வாகனத்தில் பயணித்த ஐந்து புலிகளின் செயற்பாட்டாளர்கள் எவரிடமும் எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை. இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த படுகொலையினைச் செய்துவிட்டு அந்த வெள்லைவான் கொலைகாரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்ரார்கள். வாகனத்தில் பயணம் செய்த 9 பேரில் கெளசல்யன், புகழன், நிதிமாறன், செந்தமிழன் ஆகிய விடுதலைப் புலிகளும், வாகனச் சாரதியான விநாயகமூர்த்தியும் அவ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்கள், சந்திரநேரு மற்றும் வினோதன் ஆகியோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த துப்பாக்கித் தாக்குதல் நடந்து பத்து நிமிடங்களின் பின்னர் அருகிலிருந்த வெலிக்கந்தை முகாமிலிருந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு ராணுவத்தினர் வந்து சேர்ந்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் முதலில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும், பின்னர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கும் கொன்டு சென்றனர். பின்னர் காயப்பட்டவர்கள் உலங்கு வானூர்திமூலம் கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவசர சத்திரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேருவின் உடல்நிலை ஆரம்பத்தில் தேறினாலும், இறுதியில் அதிகப்படியான இரத்தப் பெருக்கினால் மரணமடைந்தார். தாக்குதலில் உயிர் தப்பிய விநோதன் எனும் போராளியும், இன்னொரு பொலீஸ்காரரும் நடந்த படுகொலைபற்றிய விபரங்களை வெளிக்கொணர்ந்தனர்.
  15. கிழக்கு மாகாணம் என்னதான் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தபோதிலும், அந்த மாகாணம் தொடர்ச்சியாக சிறிலங்காவிலும், பிரபாகரனின் தமிழீழத்திலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இலங்கையின் சிங்களவரைப் பொறுத்தவரையிலும், தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கிழக்கு மாகாணம் ஒரு பலவீனமான இணைப்பாகவே இருந்துவருகிறது. ஏனென்றால், இம்மாகானம் தமிழரும் சிங்களவரும் சமமாக வாழ்ந்துவருவதனால், தமிழரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ, சிங்களவரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ கூறமுடியாத நிலை காணப்படுகிறது. முஸ்லீம்களையும் நாம் எடுத்துக்கொண்டால், ஏறத்தாள மூன்று இனங்களும் சமமாக வாழ்வதால், இம்மாகாணம் இலங்கையினைப் பொறுத்தவரைய்லும், தமிழரின் ஈழத்தைப் பொறுத்தவரையிலும் பலவீனமான தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. கிழக்கு மாகானத்தின் சேர்ப்பின்றி, இலங்கையினை பிரிவுபடாத ஒற்றை நாடாக வைத்திருப்பது சாத்தியமற்றது. அதேபோல, கிழக்கு மாகாணம் இல்லாது புலிகளின் ஈழமும் பூரணப்படாது. ஆகவே, கிழக்கு மாகாணமே இந்த விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அது எந்தப் பக்கம் சாய்கின்றதோ, அதுவே இலங்கை ஒற்றைநாடா அல்லது இரு நாடுகளா எனும் நிலையினைத் தீர்மானிக்கப்போகிறது. கிழக்கு வடக்கைக் காட்டிலும் வறுமையானதாக, அபிவிருத்தியில் குன்றியதாக இருந்தாலும்கூட, புலிகளின் போராளிகளில் கணிசமானவர்கள் கிழக்கைச் சேர்ந்த போராளிகளே. ஆனால், தளபதிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள். கிழக்கைச் சேர்ந்த போராளிகள் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டபோதும்கூட, அவர்களுக்கான மரியாதை அமைப்பினுள் வழங்கப்படவில்லை. இரு பிரிவுகளுக்கிடையிலான பிணக்குகளுக்கும், அதனூடான இழப்புக்களுக்கும் காரணமான முதலாவது தலைமைக்கெதிரான கிளர்சி நடந்தது கூட கிழக்கில்த்தான். இது பலருக்குத் தெரியாது இருந்தாலும்கூட, முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. "மிக அண்மைக் காலம்வரையில் கிழக்கு மாகாணப் போராளிகள், தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஒருபோதும் நினைக்காதவர்களாகவும், அமைப்பினுள் ஏற்படக்கூடிய பிளவுகளை எதிர்ப்பவர்களாகவுமே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது தலைமைக்கெதிரான சில கிளர்ச்சிகள் தோற்றம்பெற்றபோது, வடக்கிலிருந்து அனுப்பப்படும் அணிகள் கிழக்கில் போராளிகளுக்கிடையே பிளவுகளை உண்டாக்கி, தலைமைக்கெதிரான அவர்களின் கிளர்ச்சியைத் திசை திருப்பியே வந்திருக்கிறார்கள். 1986 இல் புலிகள் டெலோ இயக்கம் மீது தாக்குதலை ஆரம்பித்த வேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கடவுள் என்பவர் கிழக்கு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும், டெலோவுக்கெதிராக தாம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இதனால் ஆத்திரப்பட்ட புலிகளின் தலைமைப்பீடம் வடக்கிலிருந்து பொட்டு அம்மாணையும், குமரப்பாவையும் கிழக்கிற்கு அனுப்பி கிழக்கில் அமைப்பில் பிளவுகளை உருவாக்கியது. அதேபோல, 1987 இல் கிழக்கில் வாழ்ந்த சிங்களவர்கள் மீதான புலிகளின் தாக்குதல் முயற்சிகளையும் மட்டக்களப்பில் பிறந்த புலிகளின் தளபதியான பிரான்ஸிஸ் என்பவர் முழுமையாக நிராகரித்திருந்தார். ஆனால், 1987 இல் கிழக்கில் சிங்களவர்களைக் கொல்லுமாறு வடக்குத் தலைமை உத்தரவிட்டிருந்ததுடன் அதற்கு பணிய மறுத்த பிரான்ஸிஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்". இந்தக் காரணிகள் அனைத்தினதும் விளைவாகவும், வடக்குத் தலைமையின் மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும், பிரதேசத்தின் அமைவிடத்தின் யதார்த்தினை மனதில்க் கொண்டுமே 2004 இல் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியில் கருணா இறங்கவேண்டி ஏற்பட்டது. பிரபாகரனின் செல்லப்பிள்ளையாகவும், புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராகவும், கிழக்கின் மைந்தனாகவும் இருந்த கருணா தான் பிறந்த மண்ணிற்கே மீண்டும் வந்து தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தார். தன்னால் வலிந்து இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கிழக்கின் சிறுவர்கள் எவருமே வடக்கின் போர்முனைகளுக்கு அனுப்பப்படப்போவதில்லை என்கிற உத்தரவாதத்தினை வழங்கவேண்டும் என்று தலைமையிடம் அவர் நிபந்தனை முன்வைத்தார். எதிர்பார்த்ததைப்போலவே பிரபாகரன் இந்த வாக்குறுதியை வழங்க மறுத்து விட்டார். அதன் பின்னர் கிழக்கு மாகாணப் புலிகள் தனித்து இயங்கும் சுயாதீனத்தை தலைமை வழங்கவேண்டும் என்று கருணா கோரிக்கை வைத்தார். ஆனால், வன்னிக்கு வா, பேசித்தீர்க்கலாம், கருத்து வேறுபாடுகளைக் களையலாம் என்று பிரபாகரன் கருணாவுக்குக்ப் பதிலனுப்பினார். பிரபாகரனின் வேண்டுகோளை வெளிப்படையாகவே நிராகரித்து, வன்னிக்குச் செல்ல மறுத்ததன் மூலம் கருணா புலிகளின் சரித்திரத்திலேயே முதலாவதான தலைமைக்கெதிரான கிளர்ச்சியைத் தொடக்கி வைத்தார். பாகம் ஒன்று - முற்றும்
  16. பிரபாகரனிடமிருந்து கருணா பிரிந்துவந்து புரட்சி செய்த சந்தர்ப்பத்தினை நாம் சரியாகப் பாவித்திருந்தால், புலிகளுக்குள் அது இன்னும் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தினைக் கருணாவும், அவரைப் பாவித்த ஆளும்வர்க்கமும் தவிடுபொடியாக உடைத்துவிட்டார்கள். கருணாவை நாம் கையாண்ட விதத்தினைப் பார்க்கும் எந்தப் புலி உறுப்பினரும் எமது சிங்களத் தேசத்தினை நம்பி வெளியேறி வரப்போவதில்லை. சிலர் வெளியேறிச் செல்லலாம், ஆனால் நிச்சயமாக பிரபாகரனுக்கெதிராகச் சதிசெய்யப்போவதில்லை. புலிகளுக்கெதிரான எந்த உள்வீட்டுச் சதியும் சிங்கள அதிகாரவர்க்கத்தின் முழுமையான ஆதரவின்றி வெற்றிபெறப்போவதில்லையென்பது கருணாவின் தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. சிங்களத் தலைமைகளை நம்பி ஏமாற்றப்பட்டு தமது புரட்சி கருணாவைப்போன்று படுதோல்வியில் முடியப்போவதை எந்தத் தமிழரும் விரும்பப்போவதில்லை. கருணாவின் புரட்சிக்கு முன்னர் புலிகள் என்று கூறும்போது முதலில் வரும் போராளியின் பெயர் கருணாதான். அவரது புரட்சி புலிகளின் சரித்திரத்தில் முன்னர் அறிந்திராதது. கருணாவுக்கு முதல் சில மாற்றுக்கருத்தாளர்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் கருணாவைப்போன்று புரட்சி செய்யவில்லை. உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு யார் தலைவன் என்கிற சுயகெளரவத்தால் ஏற்பட்டது. பிரபாகனுக்கெதிரான மாத்தையாவின் எழுச்சியென்பது இயக்கத்தின் துணைத்தலைவர் என்கிற அந்தஸ்த்தினைத் தாண்டி மேலே எழவில்லை. பிரேமதாசாவுடனுனான பேச்சுக்களில் ஈடுபட்ட மாத்தையா சமாதானத் தீர்வொன்று சாத்தியம் என்று நர்பத் தலைப்பட்டார். இதனால், பிரபாகரன் பேச்சுவார்த்தையினை முடித்துக்கொண்டு இரண்டாவது ஈழப்போரினை ஆரம்பித்தது மாத்தையாவைப் பொறுத்தவரை உவப்பானதாக இருக்கவில்லை. எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மாத்தையா தனது அதிருப்தியை தன்னைச் சுற்றியிருந்த புலிகளின் தலைவர்களிடம் தெரிவித்திருந்தார். மாத்தையா தனது அதிஉர்ப்தி தொடர்பாக வெளிப்படையாக பேசாமலும், பிரபாகரனுக்கெதிராகப் புரட்சி செய்யாமலும் இருந்தபோதிலும், பிரபாகரன் மாத்தையாவுடன் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். பிரபாகரனின் சர்வாதிகார, கொலைகார மனோநிலையினை சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிய மாத்தையா, தானாகவே புலிகளின் விசாரனைக் குழுவில் சரணடைந்தார். அதன்மூலம் மிகவும் வலிமிகுந்த மரணத்தை அவர் சந்தித்தார். ( மாத்தையாவின் சதிபற்றி நாம் தெரிந்துவைத்திருப்பதற்கும், சிங்களப் பேரினவாதிகள் நினைத்துவைத்திருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டினைக் கவனியுங்கள்) மாத்தையாவுக்கு நடந்த அவலமான மரணமே புலிகளியக்கத்தை அடுத்த புரட்சியாளனான கருணாவைக் காப்பாற்றியது என்ற்கூடச் சொல்லலாம். மாத்தையாவின் தூரொகத்தின்போது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யும் பணியில் பிரபாகரனால் கருணா ஈடுபடுத்தப்பட்டார் என்று அறியவருகிறது. தனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் புலிகளை பிரபாகரன் எப்படி தண்டிப்பார் என்பதை தனது கண்களாலேயே கண்டுணர்ந்த கருணாவுக்கு 10 வருடங்களின் பின்னர் தானே அவ்வாறானதொரு புரட்சியினைச் செய்யும்போது தெளிவாகத் தெரிந்தே வைத்திருந்தார். அதனாலேயே உன்னுடன் பேச வேண்டும், வன்னிக்கு வா என்று பிரபாகரன் கருணாவை அழைத்தபோது அவர் முடியாதுஃ என்று சமயோசிதமாகத் தப்பித்துக்கொண்டார். ஆனால், கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட திருகோணமலைத் தளபதி பதுமன் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, அவரின் தந்திரம் தெரியாது, வன்னிக்குச் சென்று புலிகளின் வலையில் சிக்கினார். அவர் உடனேயே கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரபாகரனுக்கெதிரான கருணாவின் புரட்சி, பல புலியெதிர்ப்பாளர்களுக்கும், அவர்களது அரசியலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. கருணாவின் புரட்சி நடக்காது போயிருக்குமானால், ரணிலின் சமாதான நடவடிக்கைகள் புலியெதிர்ப்பு அரசியலினை முற்றாகவே அழித்திருக்கும் என்றுகூடச் சொல்லலாம். அரசியலில் சகுனங்கள் ஆதிக்கம் செலுத்துவது உண்மையென்றால், ரணிலின் சமாதானப் பேச்சுவார்த்தை பயனற்றதாகவே ஆரம்பிக்கப்பட்டது. ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டு மார்கழி 24 நள்ளிரவில் அமுலுக்கு வந்த சில கனப்பொழுதுகளிலேயே முன்னாள் உறுப்பினரான ஆனந்தராஜா என்பவரைப் புலிகள் கொன்றார்கள். ஆனால், இதனை ரணில் அரசோ நோர்வேயின் சமாதான தூதர்களோ கவனிக்கத் தவறிவிட்டார்கள். புலிகளுக்கெதிரான அரசியலைச் செய்பவர்களின் கதி சமாதான காலத்தில் எப்படியிருக்கப்போகிறதென்பதை இந்தக் கொலை எடுத்துக்கூறியிருந்தபோதும், எவருமே அந்நேரத்தில் இதனைக் கண்டுகொள்ளவில்லை. தெற்குச் சிங்களவர்கள் சமாதான போதையில் மூழ்கியிருக்க, புலிகளுக்கெதிரான தமிழர்கள் சமாதானத்திற்கான விலையாகச் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த அரசியல், உளவியல் சூநிலையிலேயே கருணாவின் புரட்சி இடம்பெற்றது. அதுவும், இருக்கக்கூடிய ஒரே காறனமான "வடக்கின் தலைமைக்கெதிரான கிழக்கின் எழுச்சி " எனும் பிரதேச வாத கருத்தியலை முன்வைத்தே நடத்தப்பட்டது. வடக்கின் அடைமைப்படுத்துதலுக்கெதிரான கிழக்கின் எழுச்சி மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கான மனிதவுரிமைகளையும், பிரதேச உரிமைகளையும் வடக்கின் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்பது எனும் நோக்கிலேயே கருணாவின் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனாலேயே கருணாவின் புரட்சியினை பெருமளவு கிழக்கு மக்கள் ஏற்க முன்வந்தார்கள். கிழக்கு மாகாணம் என்பது சிங்கல நாட்டின் பிரிக்கமுடியாத பகுதியாக உறுதியாக கருதப்பட்ட அதேவேளை பிரபாகரனின் ஈழம் எனும் மாயையான நாட்டின் பிரிக்கமுடியாத பகுதியாகவும் அவர்களால் கருதப்பட்டது. அபிவிருத்தியும், குறைவிருத்தியும் கிழக்கின் அடையாளமாகக் காணப்பட்டது. கிழக்கு மாகானத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியன ஆளும் சிங்கலவர்களாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும், புலிகளாலும், முஸ்லீம் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டுக் கைவிடப்பட்டே வந்தது.
  17. அதன்பின்னரான கருணாவின் கதை மிகவும் இழிவானதொன்று. கிழக்கு மாகாணம் முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், கருணாவின் பாதுகாவலர்களின் பார்வையில் கருணாவின் முக்கியத்துவம் குறைந்துகொண்டு செல்லத் தொடங்கியது. தனது முக்கியத்துவமும், போர் வல்லமையும் அவர்கண்களின் முன்னே அழிந்துகொன்டு சென்றபோதும் வடக்குக் கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை என்று அவர் அவப்போது சொல்லிக்கொண்டே வந்தார். கருணாவின் இந்த புதிய ஞானோதயம் அவரின் சிங்கள எஜமானர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ராணுவத் தீர்வொன்றின்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைத்தபின், தீர்ப்பதற்கென்று எதுவுமே இல்லையென்பதே கருணாவின் பாதுகாவல்ர்கள் அனைவரினதும் ஒரே முடிவாக இருந்தது. அத்துடன் கருணா - பிள்ளையான் பிளவு என்பது அவரது பாதுகாவலர்களான சிங்களப் பேரினவாத ஆட்சிக்காரர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது போராளியாகவிருந்து கட்டுப்பாடற்ற மிலேச்சத்தனமான ஆயுதக் கும்பலின் தலைவன் என்கிற நிலைக்கு கருணா மறிவிட்டதால் உருவாக்கப்பட்ட பிளவா என்பது இன்றுவரை தெளிவில்லாமலேயே இருக்கிறது. இறுதியில் தனது குடும்பத்துடன் இணைவதற்காக ராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொய்யான பெயருடன் கருணா லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிரபாகரனுக்கு சமனான பலமுள்ள எதிரியாக, பிரபாரனுக்குச் சவால்விடும் வல்லமை கொண்ட ராணுவ வல்லமையுள்ளவனாக, மகாசக்தி பொருந்திய கடவுளின் மகனாகத் தன்னைக் காட்டிக்கொண்ட கருணாவின் கால்கள் களிமண்ணினால் செய்யப்பட்டவைதான் என்பது நிரூபணமாகிறது. இன்று, அதே சர்வ வல்லமை பொறுந்திய ஒப்பார் அற்ற கருணா லண்டன் சிறையொன்றில் சில்லறைக் குற்றங்களுக்காக கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். கருணா எனும் போராளி தோற்றிருக்கலாம், ஆனால் அவரது புரட்சிக்கான காரணமும், நியாயமும் தவறென்று ஆகிவிடப்போவதில்லை. பிரபாகரனுக்கெதிரான கருணாவின் புரட்சி நியாயமானதே ( சாதாரண சிங்களத் தேசியவாதிகளின் மனோநிலைதான் இவருக்கும்). புலிகள் இருக்கும்வரை தமிழர்களுக்கு நிம்மதியோ விடுதலையோ கிடைக்கப்போவதில்லை. கிடைக்கப்போவதெல்லாம் அழிவுகளும், மரணங்களும் மட்டும் தான். ஒருவேளை பிரபாகரன் போரில் வெற்றிபெற்றாலும் அவர் அமைக்கப்போகும் நாட்டில் வாழுவதற்கு பல தமிழர்களே விரும்பப்போவதில்லை. சிங்களவர்களுடன் இருக்கும் நாட்டில் அவர்கள் அனுபவிப்பதாகக் கூறும் அடக்குமுறைகளைக் காட்டிலும் பிரபாகரனின் நாடு பயங்கரமானதாக இருக்கும். தமது மீட்பர்கள், விடுதலைப் போராளிகள் என்று தமிழ் மக்கள் போஷிக்கும் புலிகளுக்கெதிராகப் போராடுவதே தமிழர்களுக்கு உண்மையான விடுதலையினைப் பெற்றுத்தரக்கூடியது. கருணாவின் புரட்சி சரியானதுதான். குறைந்தது தான் பிறந்த கிழக்கு மாகாணத் தமிழர்களின் விடுதலைக்காகவாவது அவர் புரட்சி செய்யத் தொடங்கினார். அவர் புலிகளிடமிருந்து வெளியேறி வந்தபோது எந்த இலட்சியங்களுக்காக தான் வருவதாகக் கூறினாரோ, அவை யாவுமே சரியானவைதான். ஆனால், நாளடைவில் தானே முன்வைத்த இலட்சியத்திலிருந்து அவர் விலகியதே அவரது தோல்வியாகும். இறுதியில் கருணா தனது பிரதேசமான கிழக்கு மாகாணத் தமிழ் மக்களையே ஏமாற்றினார். பிரபாகரன் மொத்தத் தமிழர்களையும் ஏமாற்றியதுபோல, கருணா கிழக்குத் தமிழர்களை ஏமாற்றினார். கிழக்கு மக்களுக்கெதிரான கருணாவின் இந்த துரோகமே அவரது புரட்சி படுதோல்வியில் முடிவடைவதற்குக் காரணமாகியது. கருணாவைப் பயன்படுத்தி புலிகளை அழிக்க திட்டமிட்ட சிங்கள ஆளும்வர்க்கம் கருணாவைப் பாவித்தவிதமும் அவரது புரட்சி தோற்கக் காரணமாகின. சமாதானத்திற்காக முயன்றுகொண்டிருந்தவர்களைப் பொறுத்தவரை கருணா ஒரு துணைராணூவக் குழுவின் தலைவர், கொலைகாரர். சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை கருணா தாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக தமக்கு உழைத்த சேவகன், ஆகவே அவரது தேவை முடிந்தவுடன் அவரைக் கழற்றிவிட்டார்கள். புலிகளுக்கெதிரான தமிழ் அரசியல் சக்திகளோடு, புலிகளுக்கெதிரான தமிழர்களுடனுன் தன்னை தொடர்புபடுத்தத் தவறியதன் மூலம், அரசியலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதும் கருணாவின் வீழ்ச்சிக்குக் மேலும் காரணங்களாகின.
  18. கருணா : ஒரு போராளியின் படுதோல்வி - பாகம் 1 மூலம்: லங்கா கார்டியன் காலம் : 8, மாசி 2008 குறிப்பு : இக்கட்டுரைத் தொடர் திஸ்ஸார குணசேகர எனும் சிங்களவர் ஒருவரால் எழுதப்பட்டது. புலிகளின் போராட்டத்தையே தவறென்று விமர்சிக்கும் இச்சிங்களவர் கருணாவின் "புரட்சி", அதன்பின்னரான அவரது தோல்வி பற்றி இக்கட்டுரையில் எழுதுகிறார். "எம் எல்லோருக்குள்ளும் ஆத்திரம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றினைக் கொண்ட மிருகம் ஒன்று ஒளிந்திருக்கிறது. ஆனால், அந்த மிருகத்தை எம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேல் ஏவிவிடாமல் பாதுகாப்பதே எமது தலையாய கடன். அதனை எதிர்த்து, எமக்குள்ளேயே போராடும் நாம், எம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குள்ளிருக்கும் மிருகங்களுக்கெதிராகவும் போராடுதல் அவசியம்" - அல்பேர்ட் கேமஸ் , ஒரு புரட்சிக்காரன் எனும் நூலில் இருந்து. விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தனது நெடுநாள் தலைவருக்கெதிராகவும், தான் வளர்ந்த புலிகள் இயக்கத்திற்கெதிராகவும் மட்டுமே போராடவில்லை. ஆனால், மிக ஆளமாக வேரூன்றப்பட்ட மொத்தத் தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும் அதன்மீதான தமிழர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுக்கெதிராகவும் அவர் போராடினார். தான் செய்யப்போவதாகக் கூறிக்கொண்டு அவர் வெளியேறிச் சென்ற காரணங்களை அவர் அடையமுடியாது போனது அவரது தோல்வியல்ல. அவரால் புலிகளுக்கெதிரான ராணுவரீதியிலான சக்தியாக தன்னை நிலைநிறுத்தமுடியும் என்று எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அது தோல்வியே அல்ல. ஆனால், அவரது அவமானகரமான தோல்வியென்பது தானே தன்மீது ஏற்படுத்திக்கொண்டது. ஒருவருடத்திற்கு முதல் கருணா பிரபாகரனின் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால்க் கூட அவர் கிழக்கு மாகாண மக்களுக்கும், புலிகளை எதிர்க்கும் தமிழருக்கும் ஒரு வீரனாக, இலட்சியவாதியாகத் தெரிந்திருப்பார். பிரபாகரனுக்கெதிரான எதிர்கால புரட்சிகளுக்கான நாயகனாக பலர் அவரைத் தொழுதிருப்பார்கள். ஆனால், கருணா புலிகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டார். எந்தப் பிரபாகரனும் புலிகளும் ஜனநாயகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், மனித நாகரீகத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று கருணா அன்று கூறினாரோ, இன்று அதே செயல்களை புலிகளை எதிர்த்துச் சண்டை செய்கிறேன் என்கிற போர்வையில் கருணாவும் செய்துவருகிறார். கிழக்கு மாகாணத் தமிழர்களை பிரபாகரன் அடிமைகளாக நடத்துகிறார் என்று அன்று கூறிய அதே கருணா, சிங்களப் பேரினவாதிகளின் ஆசீரோடும், உந்துதலோடும் அதே கிழக்கு மக்களை பிரபாகரனைக் காட்டிலும் மிகவும் கொடுமையான அடக்குமுறையின்கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார். கருணாவின் கீழ் செயற்படும் ராணுவத் துணைப்படை மிகவும் மிலேச்சத்தனமாக சிறுவர்களைத் தனது அணியில் சேர்த்துவருகிறது. மனிதவுரிமைகளுக்கான ஐ நா வின் உயர்ஸ்த்தானிகராலயம், மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல சர்வதேச மனிதவுரிமை மற்றும் சிறுவர் நலன் பேணும் அமைப்புக்கள் கருணாவின் துணைராணூவக் குழுவினரால் நடத்தப்பட்டு வரும் கட்டாய சிறுவர் சேர்ப்பு, கடத்தல்கள், கப்பத்திற்காக் கடத்துதலும் படுகொலைகளும் ஆகிய மிருகத்தனமான சம்பவங்களுக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்த மனிதநேயத்திற்கெதிரான கருணா குழுவின் செயற்பாடுகள், அவர்களைப் புரட்சிக்காரர்கள் என்கிற நிலையிலிருந்து புதிய அடக்குமுறையாளர்களாக தமிழ்மக்கள் முன்னால் நிறுத்தியிருக்கின்றன. ஆனால், சரித்திரத்தில் போராளிகளே தமது சொந்த மக்களின் அடக்குமுறையாளர்களாக மாறி வலம் வருவது சரித்திரத்தில் இதுவே முதற்தடவையும் அல்ல.
  19. அந்தப் பேட்டி........ கேள்வி : வணக்கம் கருணா குழு முக்கியஸ்த்தர் : வணக்கம் அண்ணை, இதுகுறித்து உங்களை தொந்தரவு படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உங்களுடன் கருணா தொடர்பான பல ரகசிய விடயங்களைப் பேச விரும்புகிறேன், அதனைச் செவிமடுப்பீர்களா? கேள்வி : அதுசரி, ஆனால் இப்போது அதிகாலை 12:30 மணி, பரவாயில்லை சொல்லுங்கள்? க.கு.மு : நன்றி கேள்வி : கேர்ணல் கருணாவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். கேள்வி : அவரை ஏன் கருணா என்று மட்டும் அழைக்கிறீர்கள்? ஏன் அவரது கேர்ணல் எனும் மரியாதைப் பெயரினைத் தவிர்க்கிறீர்கள்? அவர் உங்களது தலைவர் இல்லையா? க.கு.மு: முந்தி அவரைத் தலைவராகத்தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போது அவர் அந்தத் தகுத்திக்குப் பொருத்தமற்றவர் என்பதனை நிரூபித்துவிட்டார். அவருக்கும், அவர் எதிர்த்துச் செயற்படப்போவதாகக் கூறிய பிரபாகரனுக்கும் எந்தவேறுபாடும் இல்லை. இருவரும் எமது மக்களையும், போராளிகளையும் நட்டாற்றில் விட்டு விட்டனர். கேள்வி : கருணா எங்கு தப்பியோடியிருக்கிறார்? அவர் இப்போது எங்கு வாழ்கிறார்? க.கு.மு: அவர் இப்போது எந்த நாட்டில் வாழ்கிறார் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பது எம் எல்லோருக்கும் இப்போது தெரியும். அவர் ஒளிந்திருக்கும் இடம்பற்றி நான் பேசமுடியாது, அவரது பாதுகாப்பு முக்கியமல்லவா? கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்ன நடந்தது? க.கு.மு: அது இப்போது இரண்டாகப் பிளந்துபோய்விட்டது. கருணாவின் சுயநலத்தாலும், இலக்குத்தவறிய இயல்பினாலும் இது நடந்தது. கேள்வி : அப்படியானால் உங்களின் அரசியல்ப்பிரிவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: அது ஒரு முற்றான கேலிக்கூத்து. கருணா தனது உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையுமே அந்த அரசியல் கட்சிக்கு நியமித்தார். கேள்வி : மட்டக்களப்பிலும், அதனை அண்டிய ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் இப்போது என்னதான் நடக்கிறது? க.கு.மு: பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், இன்றுவரை கருணா குழு உறுப்பினர்கள் அப்பாவிக் கிழக்கு மக்களிடம் கட்டாய கப்பம் அறவிடுதலை செய்துவருகின்றனர். இப்படியாக மக்களைக் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படும் கப்பப் பணம் கருணாவின் வங்கிக் கணக்கை நிரப்பி வருகின்றன. கேள்வி : மட்டக்களப்பில் ஒருமாதத்திற்கு கருணாவுக்காக எவ்வளவு பணம் கப்பமாக அறவிடப்பட்டு வருகிறது? க.கு.மு: பெருமளவான பணம். நானும் இந்தக் கப்பம் அறவிடல் நடவடிக்கையில் கருணாவுக்காக ஈடுபட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில், கருணா ஒருமாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் ரூபாய்களைக் கப்பமாக அறவிட்டு வருகிறார். கேள்வி : கருணாவுக்கு அரசாங்கத்தினால் பணக் கொடுப்பனவுகள்கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், நிச்சயமாக. கேள்வி: அரசிடமிருந்து ஏனைய சலுகைகள் கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், கிடைக்கின்றன. ஆனால், அந்த விபரங்களைக் கூறுவது எனது பாதுகாப்பிற்கும், கருணா குழுவினரின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறிவிடும், அதனால் அதனைத் தவிர்த்து விடுகிறேன். கேள்வி : உங்களின் எதிர்காலம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் உங்களின் புரிதல் என்ன? க.கு.மு: புலிகளின் எதிர்காலம்போலத்தான் எமது எதிர்காலமும். புலிகளை பலவீனமாக்கி அழிக்க கருணாவின் பிளவு காரணமாக இருந்ததுபோல எமது அமைப்பு பிரிந்து அழிக்கப்படவும் கருணாவே காரணமாக இருக்கிறார். இன்று எம்மை நடத்துவதும், ஆட்டுவிப்பதும் அரசாங்கமும், அவர்களது ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் தான். இந்த மொத்த அவலநிலைக்கும் காரணமே கருணாதான். முற்றும்
  20. "கிழக்கில் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் ராணுவத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவரும் இந்நிலையில், அரசுக்கும் ராணுவத்திற்கும் கருணாவின் தேவை குறைந்துவருவதுடன், அவரின் முக்கியத்துவமும் குறைந்துவருவதாகத் தெரிகிறது. கருணாவுக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுவரும் பாரிய விரிசலே இதற்குச் சிறந்த அடையாளமாகக் காட்டப்படமுடியும். குறிப்பாக வாகரை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டபின் கருணாவின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டதோடு, தனது உறுப்பினர்களிடையே இருந்தும் அவர் அந்நியமாகிப்போனார்". "கருணா புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் அவர் கிழக்கு மக்களிடம் இரு விடயங்கள் பற்றிப் பேசி வந்தார். முதலாவது தமிழ் மக்களிடையே பிரபாகரன் குறித்து இருந்த எண்ணத்தை முற்றாக உடைப்பது அல்லது சிறுமைப்படுத்துவது. அடுத்தது கிழக்கு மக்களுக்கெதிராக வடக்குத் தமிழர்களும் புலிகளும் செயற்பட்டுவருகிறார்கள் எனும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது. ஆனால் இவை இரண்டுமே தவறான, முரணான முடிவுகள். பிரபாகரனின் கொடுங்கரங்களிலிருந்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பேன் எனும் கருணாவின் சூளுரை இன்னமும் அப்படியே இருக்கிறது". இப்போது அவர் தனது குறிக்கோளில் இருந்தும், இலட்சியத்திலிருந்தும் முற்றாக விலகி, தான் சேர்த்துவைத்திருந்த பெருமளவு பணத்தையும், அரசால் அவருக்கு வழங்கப்பட்ட செல்வங்களையும் எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். இந்தச் செவ்வியின்போது இலங்கை ராணூவப் புலநாய்வு அதிகாரிகளுடன் கருணா கொண்டிருந்த தொடர்புகள் பற்றி விலாவாரியாக விபரங்களை வெளியிட்ட அவர், இவர்களுக்கிடையிலான தொடர்பாடல்களின் விபரங்களையும் வெளியிடத் தயங்கவில்லை. இந்தச் செவ்வியை நாம் ஒழுங்குசெய்யவில்லை. ஆனால், இந்தக் கருணா குழு முக்கியஸ்த்தர் தானாகவே எம்முடன் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசவேண்டும் என்று தொலைபேசி வாயிலாக எம்மைக் கேட்டிருந்தார். கிழக்கு மக்களுக்கான விடியலைப் பெற்றுத்தரப்போவதாக புலிகளிடமிருந்து ராணுவத்தினரின் பக்கம் தாவிய கருணாவின் உண்மை முகம் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதற்காகவே தான் இதனைச் செய்வதாக அவர் கூறினார். இவ்விடயங்கள் எமது பத்திரிக்கையில் நிச்சயம் வெளிவரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனது விடயங்களின் உண்மைத்தன்மையினை அறிய விரும்பினால் கிழக்கு மக்களிடமோ அல்லது ஏனைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு உறுப்பினர்களிடமோ நீங்கள் கேட்டு அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.
  21. மட்டக்களப்பு மக்களிடமிருந்து கருணா மாதா மாதம் எண்பது லட்சம் ரூபாய்களை கப்பமாகப் பறித்து வந்தார் - கருணா குழு முக்கியஸ்த்தர் செவ்வி மூலம் : லங்கா கார்டியன் காலம் : செப்டெம்பர் 29, 2007 "நாங்கள் கருணா அம்மானை ஒரு மக்கள் தலைவானகவே பார்த்துவந்தோம். ஆனால், அவர் அப்படியில்லை என்பது இப்போது தெளிவாகிறது" தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் சேர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவை அமைத்து இயக்கிவரும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் மட்டக்களப்பில் மக்களை அச்சுருத்தி பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகப் பெற்றுவருவதாக அவரது குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவர் லங்கா கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார். கடந்த இரவு வழங்கப்பட்ட இச்செவ்வியில், அந்த முக்கியஸ்த்தர் மேலும் கூறும்போது கருணாவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு குறைந்தது எண்பது லட்சம் ரூபாய்கள் மக்களிடம் இருந்து கப்பமாக அறவிடப்பட்டு வருவதாகக் கூறுகிறார். மட்டக்களப்பு நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கும் வியாபார நிலையங்கள், வீடியோக் கடைகள், மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய தனியார் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து கருணா இக்கப்பங்களைப் பெற்றுவருவதாக அவர் கூறுகிறார். தமது குழுவிற்குள் அண்மையில் ஏற்பட்டிருக்கும் உள்வீட்டுப் பிணக்கினையடுத்து கருணா சில நாட்களுக்கு முன்னதாக நாட்டினை விட்டு பெருமளவு பணத்துடன் தப்பியோடிவிட்டதாகக் கூறும் இந்த முக்கியஸ்த்தர், அவரின் உயிருக்கு தமது குழுவிற்குள் இருந்தே பாரிய அச்சுருத்தலை எதிர்கொண்டுவந்த கருணாவுக்கு நாட்டை விட்டு தப்பியோடுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லையென்றும் தெரிவித்தார். லங்கா கர்டியனுடனான கருணா குழு முக்கியஸ்த்தரின் பேட்டி கீழே : "அவர் தப்பியோடிவிட்டார், ஆனால் அவரது தாக்கம் இன்னமும் இங்கே அப்படியே இருக்கிறது, நாங்கள் அவரை ஒரு நல்ல மக்கள் தலைவனாகவே எண்ணியிருந்தோம், ஆனால் அவர் அப்படியில்லை என்பது தெளிவாகிறது". கடந்த வருட இறுதியில் பதியப்படாத அரசியல் கட்சியாக தனது குழுவை கருணா ஆரம்பித்திருந்தார். ஆனால், ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பாரிய உள்வீட்டு குத்துவெட்டுக்களை அவரது கட்சி சந்தித்து வந்ததுடன், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட கருணா ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. தனது கட்சிக்குள் நடைபெற்று வந்த பல படுகொலைகளைப் பற்றித் தன்னும் கருணா அக்கறை செலுத்தவில்லை. திலீபன் மற்றும் வீரா ஆகிய முக்கியஸ்த்தர்கள் உடபட பல கருணா உறுப்பினர்களின் படுகொலைகள் பற்றி கருணா அலட்டிக்கொள்ளவில்லை. "பிள்ளையான் குழுவைப் பொறுத்தவரை திலீபன், வீரா ஆகியோரைக் கொல்வது அவசியாமனது என்று கருதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பிள்ளையான் இவர்களைக் கொல்வதன்மூலம் புலிகளின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கு தம்மைப்பற்றிய செய்திகள் செல்வதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். ஆகவே புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என்று கருதப்பட்ட பல உறுப்பினர்களை கட்சிக்குள்ளேயே அவர்கள் கொன்றுதள்ளினார்கள்" என்று அந்த முக்கியஸ்த்தர் கூறுகிறார். "கருணா குழு இரண்டாகப் பிளவுபட்டபின்னர் எம்மில் ஒருகுழுவினருக்கு இலங்கை ராணுவமும், மற்றைய குழுவுக்கு இலங்கைக் கடற்படையும் உதவிவந்தன. ஆயுதங்கள், அடைக்கலம் உள்ளிட்ட சகல வசதிகளும் இக்குழுக்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டன". "கருணா பிரபாகரனிடமிருந்து பிரிந்து வெளியே வந்தபோது, எமது மக்களுக்கான நல்லதொரு தலைவர் தோன்றிவிட்டார் என்றே நாம் நம்பினோம். ஆனால் நாளடைவில் எந்தப் பிரபாகரனின் கீழ் நாம் அல்லற்பட்டோம் என்று கருதினோமோ, அதைவிட அதிகமான இன்னல்களை நாம் கருணாவின் கீழ் அடைந்தோம், ஆனால் பெயர் மட்டுமே மாறியிருந்தது". "புலிகளின் இலக்கு மாறிப்போனதைப் போன்றே, கருணாவின் இலக்கும் முளையிலேயே மாறிப்போனது. ஆனால், இலங்கை அரசுக்கும் ராணுவத்திற்கும் இது வரப்பிரசாதமாகவும், மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவும் மாறிப்போனது. எம்மைப் பாவித்தே புலிகளை அவர்களால் அழிக்க முடிகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
  22. இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது. நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது. இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
  23. அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே). 5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும். 7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும்.
  24. அடுத்தது கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் கூட்டு. சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிராக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடியவர்கள் என்று மக்களால் கருதப்பட்டவர்கள். ஆனால், தாந்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், சுயநல அரசியலைனாலும் கூடவிருந்தவர்களின் நம்பிக்கையினை இழந்து பலர் வெளியேறக் காரனமாகவிருந்தவர்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு மட்டுமல்லாமல், இதர கட்சித் தலைமைகளுக்கும் எதிரான பிடிவாதமான அரசியல் நிலைப்பாட்டினால் இன்றுவரை தமிழ்த் தேசியப் பரப்பில் பல கட்சிகள் ஒன்றுபடுவதை விரும்பாதவர்கள். கூட்டமைப்பிலிருந்து பிரிந்ஹ்டு வந்ததன் பின்னர் தமக்குள் மோதுண்டு, மணிவண்ணன் வெளியேறவும், அரசுக்குச் சார்பான துனைராணுவக் குழுவின் உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யவும் காரனமானவர்கள். பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகக் கதைப்பதே அரசியல் எனும் நிலைப்பாட்டில் வாழ்பவர்கள். சித்தார்த்தன், அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு. முன்னாள் அரச ராணுவத் துனைக்குழுக்களின் தளபதிகள் அல்லது தலைவர்கள். இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்துடன் நேரடியான தொடர்பை நெடுங்காலம் பேணிவந்தவர்கள். பல தமிழர்களின் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புகொணடிருந்தவர்கள். தொடர்ச்சியாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துவரும் இவர்கள், சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு எதிரானவர்கள். தமது அரசியல் எதிர்காலமே இவர்களின் ஒரே இலக்கு. தொடர்ந்து அரச ராணுவ குழுக்களாக இயங்கமுடியாத பட்சத்தில் தமது இருப்பிற்காக அரசியலைத் த்ர்ரெந்தெடுத்தவர்கள். அடுத்தது விக்னேஸ்வரன். சம்பந்தன் - சுமந்திரன் கூட்டிற்கு பதிலாக தமிழ் மக்களால் தலைவராகப் பார்க்கக்கூடியவர் எனும் மாயையினை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் நம்பிக்கையினைத் தந்து பல மேடைகளில் தமிழரின் இழப்புக்கள் குறித்து வெளிப்படையாகப்பேசியவர். ஆனால், கூடவிருக்கும் இதர அரசியல்வாதிகளினதும், ஆதரவாளர்களினது பேச்சிற்கு அடிபணிந்து, இலக்கு மாறி இன்று பத்தோடு பதினொன்றாக நிற்பவர். சிறிதரன். கிளிநொச்சி மக்களால் முன்னர் ஆதரிக்கப்பட்டவர். வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தமிழரசுக் கட்சியூடாக பாராளுமன்ற ஆசனம் என்பதைத்தவிர இவரின் அரசியல் அதிக தூரம் செல்வதில்லை. ஒரு சில பாராளுமன்ற உரைகளும், மாவீரர்களுக்கான வணக்கமும் தன்னைத் தொடர்ந்தும் அரசியலில் வைத்திருக்க உதவும் என்று நம்புபவர். இவர்கள் எவராலும் தமிழருக்கான விடிவு கிடைக்கப்போவதில்லை. இது இவர்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும், ஆனாலும் தமது அரசியல் எதிர்காலத்திற்காக, வருவாய்க்காக அதனைச் செய்கிறார்கள். தமது சொல்கேட்டு, தமது சுரண்டல்களை ஏற்றுக்கொன்டு, தமது பிராந்திய நலன்களுக்கான பகடைகளாகவிருந்து தமக்கு சலாம்போடும் அமைப்பாக புலிகள் இருக்கவேண்டும் என்று இந்தியாவும், மேற்குலகும் எதிர்பார்த்தது. அப்படி புலிகள் இருக்காதவிடத்து அவர்களை அழித்து நாடு முழுவதையும் சிங்களப் பேரினவாதிகளிடம் கொடுப்பதன்மூலம் மொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தமக்குத் தேவையானதை அடைந்து கொள்ளலாம் என்று இந்த அந்நிய சக்திகள் விரும்பியதன் விளைவே எமது மக்களின் அழிப்பும், போராட்டத்தின் வீழ்ச்சியும். இன்று தமிழருக்கான தீர்வு எதனையும் கொடுக்கவேண்டிய தேவை இந்த சக்திகளுக்கு இல்லை. தமக்குத் தேவையானவற்றை சிங்களமே கொடுத்துவரும்வேளையில், சிங்களத்திற்கு எதிராகச் சென்று எதுவுமேயற்ற தமிழர்களை ஆதரிக்க இந்த சக்திகளுக்கு தேவையென்று ஒன்றில்லை. ஆகவேதான் இன்றுவரை தமது பிணாமிகளாக தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளைக் குழுக்களாகப்பிரித்து தம்பாட்டிற்கு இயக்கி வருகிறார்கள். மனிதவுரிமை மீறள்கள், போர்க்குற்ற விசாரனைகள், சிறுபான்மையினங்களுக்கான அரசியல் பாதுகாப்பு, சிறுபான்மையினக் குழுக்கள் என்று வார்த்தை ஜாலங்களைப் பாவித்து கானல்நீரைப் போன்று இன்றுவரைத் தமிழர்களை நம்பிக்கையுடன் ஏங்கவைத்து தமது நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சக்திகள். இந்தியாவென்றும், அமெரிக்காவென்றும், ஐரோப்பாவென்றும் தொடர்ச்சியாக தமது பிணாமிகளை வரவழைத்து தமிழர்களை "அரசியல்த் தீர்வு ஒன்று வரப்போகிறது" எனும் மாயைக்குள் அடைத்துவைத்திருப்பவர்கள். பலமுறை தாம் பாவித்து வெற்றிபெற்ற "தமிழர்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன் பேணல்" எனும் அதே கைங்கரியத்தை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கத் தயங்காத சுத்த சுயநல சக்திகள். இவர்களாலும் தமிழருக்கென்று தீர்வொன்றும் கிடைக்கப்போவதில்லை.
  25. இன்றிருக்கும் தமிழரின் அரசியத் தெரிவுகள் யார்? 1. அரசுக்குச்சார்பானவர்கள் 2. அரசையும் சாராமல், தமிழ் மக்களையும் சாராமல் ஆனால் தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்பவர்கள் அரசுக்குச் சார்பானவர்கள் டக்கிளஸ், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், ஆனந்த சங்கரி போன்றவர்கள். இவர்களால் தனித்து ஒரு முடிவினையோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்வினையோ எடுக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திற்குச் சேவகம் செய்யும் இவர்களினால் இவர்களுக்கும், இவர்களோடு கூடவிருக்கும் ஒரு சில தமிழருக்கும் நண்மைகள் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களால் தமிழருக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவை. போர்க்காலத்தில் மக்களினதும், போராட்டத்தினதும் அழிவோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இவர்கள், போரின் பின்னரான அரசின் எஜென்ட்டுகளாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பிலும், வளங்களைச் சூறையாடுவதிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் இவர்களைக் காட்டியே தான் தமிழ் மக்களுக்கு அரசியலில் சம அந்தஸ்த்தினை வழங்கிவருவதாகவும் அரசினால் காட்ட முடிகிறது. உள்நாட்டில் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை சிறிது சிறிதாகக் குரைத்து, தமிழர்களின் அரசியல்ப் பலத்தினை அழிப்பதில் இவர்களை முன்னிறுத்தியே அரசு செயற்பட்டு வருகிறது. தமிழர்கள் என்பதற்கு அடையாளமாக பெயர்களை மட்டுமே கொன்டிருப்பதைத்தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்று எவையுமே இல்லை. 2. தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய அரசியல்வாதிகள். சுமந்திரன், சம்பந்தன், சிறிதரன், அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், மணிவண்ணன், சித்தார்த்தன் போன்றவர்கள். புலிகளால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். அன்று எதற்காக அழைக்கப்பட்டார்களோ, அதற்கு நேர்மாறாக தமிழ்த் தேசிய அரசியலை, அதன் பலத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்குவதில் மட்டுமே தமது நேரத்தையும் வளங்களையும் பாவித்து வருபவர்கள். எடுப்பார் கைப்பிள்லைகளாக பிரிந்து நின்று உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நூற்பொம்மைகளாக ஆளாளுக்கென்று ஒவ்வொரு திசையில் பயணிப்பவர்கள். சம்பந்தன் சுமந்திரன் கூட்டு செய்யும் அரசியல் தமிழ்த் தேசியத்திற்கு அமைவானதில்லை என்பது கண்கூடு. புலிகளை விமர்சிப்பதிலும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவத்ன் மூலம் மட்டுமே சிங்களவர்களௌக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கமுடியும் என்று நம்புபவர்கள். இந்தியாவினதும், மேற்குலகினதும் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தமிழரின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிடவும், அல்லது விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஐ தே க கட்சியுடனான இவர்களின் நெருக்கத்தினைப் பாவித்து 2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் தமிழருக்குச் செய்யக்கூடிய சிறு உதவிகளான கைதிகளை விடுவித்தல், மாகாணசபை தேர்தலினை நடத்துதல், அரசியலமைப்பினை மாற்றுதல் ஆகிய எந்தவித முயற்சியினையும் எடுக்க விரும்பாது வாளாவிருந்தவர்கள். இன்றுவரை இவர்களின் பின்னால் நின்று ஆட்டுவிக்கும் சக்தியெது என்பதை மிகவும் லாவகமாக மறைத்து அரசியல் செய்பவர்கள். இவர்களுடன் அண்மையில் அணிசேர்ந்திருக்கும் சாணக்கியனின் அரசியல் பின்புலம் அலாதியானது. அரச ராணுவத்தின் துனைக்குழுவான பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக, பிள்லையானின் பேச்சாளராக தனது அரசியலை ஆரம்பித்தவர் இவர். தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்பி தமிழ்த் தேசிய அரசியலினையும், முஸ்லீம்களுடனான நட்பையும்பற்றிப் பேசும் கெட்டிக்காரன். சிங்கலத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பரீட்சயமுள்ள இவர் செய்யும் அரசியல் தனக்கானது மட்டும்தான். கிழக்கு மாகானசபை அல்லது இணைந்த வட - கிழக்கு மாகாணசபை முதல்வராகும் கனவில் வாழ்பவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.