Everything posted by ரஞ்சித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, பங்குனி 2006 இலங்கை ராணுவத்துடன் இணைந்து கிராமங்களைச் சுற்றிவளைத்த கருணா துணைராணுவக்குழு கருணா துணை ராணுவக்குழு உட்பட இன்னும் இரு துணை ராணுவக் குழுக்களைச் சேர்ந்த 50 பேரும் குறைந்தது 150 இலங்கை ராணுவத்தினரும் இணைந்து வாழைச்சேனைப்பகுதியில் சில கிராமங்களைச் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர். காலை 5 மணியளவில் இலங்கை ராணுவத்தினரின் கவச வாகனங்களில் வந்திறங்கிய கருணா குழுவினர் மக்களை பேச்சியம்மன் கோயிலில் ஒன்றுகூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்ததுடன், துணைராணுவக்குழு முக்கியஸ்த்தரும் கருணாவின் நெருங்கிய சகாவுமான மார்க்கன் புலிகளுக்கு உதவினால் கொல்லப்படுவீர்கள் என்று பகிரங்கமாக மக்களை எச்சரித்தார். கருணா துணை ராணுவக்குழுவுடன் ஈ என் டி எல் எப் குழுவின் நால்வரும் ஈ பி டீ பீ குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவரும் இந்தச் சுற்றிவளைப்பில் ராணுவத்தின் சார்பாகக் இந்த வெளிப்படையான துணைராணுவக்குழுக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றிவளைப்பில் கலந்துகொண்டிருந்தனர். கனரக ஆயுதம் தரித்த இலங்கை ராணுவத்தினர் கண்ணன் கிராமம், விநாயகபுரம், கண்ணகிபுரம் பேத்தாளை, புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் ரோந்துவந்ததுடன், ராணுவத்துணைக்குழுவினால் பேச்சியம்மண் கோயிலில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்திற்கும் பாதுகாப்பளித்தனர். கிராமங்களில் சுற்றிவளைத்து அழைத்துவரப்பட்ட சுமார் 250 முதல் 300 வரையான மக்களிடம் கருணா குழுவின் உறுப்பினர்களான பிரதீபன், ஜெயந்தன், அஜித், ரஞ்சித் ஆகியோர் பேசுகையில் புலிகளுடனான உறவினை மக்கள் கைவிடவேண்டும் அல்லது தாக்கப்படுவீர்கள் என்று பகிரங்கமாக மிரட்டும் தொணியில் பேசினர். ஜோன்சன் ஜெயகாந்தன் எனப்படும் பிரதீபன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினர் புலிகளின் அரசியல் போராளி குவேனி மீதான கொலை முயற்சியின்போது சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் ராணுவ புலநாய்வுத்துறையின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டவரென்பதும், மார்க்கனின் வலதுகையாக விளங்கும் இவரே ராணுவத்தினருக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புலிகளின் போராளியாக முன்னர் இருந்து, வாழைச்சேனையில் சிறுமியொருத்தியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக இயக்கத்திலிருந்து 1992 இல் விரட்டப்பட்ட பிரதீபன், கருணா புலிகளிடமிருந்து பிரிந்ததன் பின்னர் அவருடன் வந்து இணைந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கருணாவுக்கு மக்கள் முற்றான ஆதரவினை வழங்கவேண்டும் என்று எச்சரித்த பிரதீபன், அப்படி ஆதரவு தரத் தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக்குழுவின் அரசியல் போராளி என்று தன்னை அறிமுகம் செய்த பிரதீபன், தம்முடன் சேர்ந்து இன்னும் 300 துணை ராணுவக் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது பேச்சினை முடிக்கும் போது தனக்கும் தனது சகபாடிகளுக்கு உடனடியாக 150 உணவுப் பொட்டலங்களை அக்கிராம மக்கள் தயாரித்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கண்ணன் கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு துணை ராணுவக் குழு உறுப்பினரான கார்த்திகைத் தம்பி ஜெயசீலனும் கருணா குழுவின் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளித்ததுடன் புலிகளுடனான தொடர்புகளைப் பேணவேண்டாம் என்றும் மக்களை எச்சரித்தார். கருணா துணைராணுவக்குழுவின் மற்றொரு முக்கியஸ்த்தரான ரஞ்சித் மாஸ்ட்டர் என்பவர், தமிழகத்தில் தான் கைதுசெய்யப்பட்டுக் காவலில் இருந்ததாகவும், கருணாவின் விசேட வேண்டுகோளின்பின்னர் தமிழக அரசு தன்னை விடுவித்து கருணாவுடன் சேர்ந்து வேலைசெய்ய அனுப்பிவைத்ததாகவும் குறிப்பிட்டார். "உங்களுக்கு எந்தவிதமான சந்தேகங்கள் இருந்தாலும் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள், அங்கே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார். வாழைச்சேனைப் பகுதியில் தமது அலுவலகங்கள் நிறுவப்படப்போவதாகவும் கூறிய ரஞ்சித் மாஸ்ட்டர், தாமும் தமது உறுப்பினர்களும் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இவர்களுடன் வாழைச்சேனை துறைமுக ராணுவ முகாமில் இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத் துறையினருடன் வேலை செய்யும் ஈ பீ டி பீ உறுப்பினர் சிவாவும் பிரச்சன்னமாகியிருந்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, தை 2006 ராணுவத் துணைக் குழுக்கள் பற்றி எழுதியதால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் - பிரெஞ்சு செய்தி நிறுவனம் ரிப்போட்டர்ஸ் சன்ஸ் புரொன்டிரெர்ஸ் எனும் பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச சுயாதீன செய்திச் சேவை தனது அறிக்கையில் இலங்கையில் ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை ராணுவக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவந்ததனாலேயே சுகிர்தராஜன் கருணா துணை ராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறியிருக்கிறது. தமிழ்த் தினசரியான சுடர் ஒளியில் எழுதிவரும் சுகிர்தன், தமிழ் துணை ராணுவக்குழுக்களின் படுகொலைகள் பற்றியும், அரசாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் ஆதரவு மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளை செய்யும் அனுமதி ஆகியவற்றினால் பெருமளவு தமிழர்கள் இக்குழுக்களால் கொல்லப்பட்டு வருவதுபற்றித் தொடர்ச்சியாக எழுதுவந்தார். திருகோணமலை மாவட்டத்தில் இக்குழுக்களால் நடத்தப்பட்டுவந்த படுகொலைகள் பற்றி திங்கள், 23/01/2006 அன்று அவர் எழுதிய கட்டுரைக்காகவே அவர் மறுநாள் காலை பணிநிமித்தம் போக்குவரத்திற்கான காத்திருந்தபொழுது உந்துருளிகளில் வந்த இரு ராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்பட்ட இரு தமிழ் துணை ராணுவக்குழு உறுப்பினர்களால் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 பிரேமினியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கூறுபோட்டுக் கொன்றுதள்ளிய கறுனா குழு வெலிக்கந்தைப் பகுதியில் 24 ஆம் திகயிலும் சில நாட்களுக்குப் பின்னரும் கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட 10 தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உடபட மூவர் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதி ஏழு பேரினதும் கதிபற்றி தெரியாமலேயே இருந்துவந்தது. ஆனால், இக்கடத்தல் சம்பவத்தின் பின்னர் கருணா குழுவில் இயங்கிய ஒருவர் வழங்கிய தகவல்களின்படி அந்த ஊழியர்களுக்கு நடந்த கொடூரம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையினரால் இயக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட பிள்ளையான் என்றழைக்கப்பட்ட ஒருவனே இக்கடத்தல்களின் பின்னால் இருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் அரச படைகளின் கொலைக்குழுவாக இயங்கும் இவன் தலைமையிலான கூலிப்படையே இக்கடத்தல் கொடூரத்தில் ஈடுபட்டது. மட்டக்களப்பு வீரகேசரி நிருபர் நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகளுடன் நேரடியான தொடர்பினை பிள்ளையான் கொண்டிருக்கிறான். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பிற்கும் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக இவனே இருக்கிறான். அத்துடன் கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பமாக பல மில்லியன் ரூபாய்கள் அறவிடப்பட்ட நிகழ்வுகளிலும் இவனே தலைமைதாங்கிச் செயற்பட்டிருக்கிறான். தீவுச்சேனை எனும் கிராமம், பொலொன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. இப்பகுதியினை ஒட்டிய காட்டுப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு பல முகாம்களை அமைத்து வந்தது. இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து குறித்த தினத்தன்று முக்கிய செய்தியொன்று தொலைபேசி மூலம் வந்தது. அம்முகாமின் பொறுப்பாளனாக இருந்த சிந்துஜன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினன் தலைமையிலான கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து வந்த கட்டளையினையடுத்து சிந்துஜன் எனப்படும் பிரதீபன் தலைமையில் கடத்தல்க் குழு உருவாக்கப்பட்டது, இக்குழுவில் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆகிய கொலைகாரர்களும் இருந்தனர். கடத்தப்பட்டவர்களின் மூன்று பெண்களை இக்கொலைக் குழுவின் புலநாய்வுக்குப் பொறுப்பான சீதா எனப்படு பிரதீப்பும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரித்துவிட்டு விடுதலை செய்தார்கள். இந்த சீதாவே பிள்ளையானின் உதவியுடன் நத்தார் தினத்தன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தை ஆலயத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. தெல்லிப்பழையைச் சேர்ந்த கணேசலிங்கம், கிளிநொச்சியைச் சேர்ந்த தங்கராசா ஆகிய இரு ஊழியர்களை விசாரித்த சிந்துஜன் அவர்களை தலையில் சுட்டுக் கொன்றான். விடுவிக்கப்பட்ட நடேஸ்வரியும், சிவமதியும் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுக்கவேண்டிய தேவை இருந்தது. தமது கைதுபற்றி விடயம் தெரிவிக்க பொலீஸ் நிலையம் சென்ற இவர்களை பொலீஸ் வேண்டுமென்றே அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பின்னர் இவர்கள் கொழும்பிற்குச் சென்று மனித உரிமைகள் அமைப்பிடம் தமது முறையீட்டைப் பதிவுசெய்தார்கள். மறுநாள் இதே கொலைக் கும்பல் இன்னும் 15 கழக உறுப்பினர்களைக் கடத்திச் சென்று, விசாரணையின் பின்னர் 10 பேரை விடுதலை செய்தது. இக்கொலைக் குழுவால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்ட ஊழியர்களின் விபரங்கள், அருனேஸ்வரராஜா சதீஸ்வரன் கைலாயப்பிள்ளை ரவீந்திரன் சண்முகனாதன் சுஜேந்திரன் தம்பிராஜா வசந்தராஜன் பிரேமினி தனுஷ்கோடி நான்கு ஆண் ஊழியர்களை கடுமையாகச் சித்திரவதை செய்து விசாரித்த சிந்துஜன் எனும் கொலைகாரன் அவர்களைக் கொண்டே புதைகுழிகளை வெட்டுவித்தான். அவர்கள் தமக்கான குழிகளை வெட்டி முடிந்தவுடன் முழங்காலில் இருக்கவைக்கப்பட்டு அழுத மன்றாடிய நிலையிலேயே அவர்களை தலையில் சுட்டுக்கொன்று குழிக்குள் வீழ்த்தி மூடினார்கள். மீதியாக இருந்த பிரேமினிக்கு நடந்த கதியோ மிகவும் கோரமானது. தமிழ்ப்பெண்கள் மீது சிங்களப் பேரினவாத ராணுவ மிருகங்கள் நிகழ்த்தும் கொடூரத்திற்குச் சற்றும் குறையாத வகையில் கருணா குழு மிருகங்கள் நடந்துகொண்டன. முதலில் சிந்துஜன் எனும் மிருகத்தினாலும், பின்னர் அங்கிருந்த அனைத்து துணை ராணுவக்குழு மிருகங்களாலும் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பிரேமினியின் அரை உயிருடன் துடித்துக்கொண்ட உடலை அந்த மிருகங்கள் வாள்களால் கீலங்களாக வெட்டி அக்காட்டுப் பகுதியில் தூக்கியெறிந்தன. **********" https://www.tamilnet.com/img/publish/2007/03/TRO_release.pdf
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 ஐந்து தமிழர் புணர்வாழ்வுக் கழக உறுப்பினர்களைக் கடத்திச் சென்ற கருணா துணை ராணுவக்குழு மட்டக்களப்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் ஐவரை கருணா துணைராணுவக் குழு வெலிக்கந்தை ராணுவ முகாமுக்கருகில் வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளதாக கழகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். கழகத்திற்குக் கிடைத்த தகவல்களின்படி வேலைநிமித்தம் வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தமது கழக உறுப்பினர்கள் ஐவர் வெலிக்கந்தை ராணுவ முகாமிற்கு மிக அருகில் மாலை 2 மணியளவில் வழிமறிக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக தெரிகிறது. சுமார் 15 பேர் கொண்ட கழக ஊழியர்கள் பயணம் செய்த வாகனம் வெலிக்கந்தை ராணுவ முகாமில் பதியப்பட்டு, தனது பயணத்தைத் தொடர எத்தனித்தபோது, அவர்களைத் தொடர்ந்துவந்த வெள்ளைநிற வான் ஒன்றில் வந்த துணை ராணுவக்குழு வீதிக்குக் குறுக்காக அவர்களை வழிமறித்து, கழக வாகனத்திலிருந்த ஐவரை பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்றி, ஏனையோரை அடித்துத் துன்புறுத்தி மீண்டும் மட்டக்களப்பிற்கே செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறது. மட்டக்களப்பு - பொலொன்னறுவை வீத்யில் வெலிக்கந்தை ராணுவ முகாமுக்கு 100 மீட்டர் தொலைவிலேயே இந்தக் கடத்தல்ச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கழகத்தின் மட்டக்களப்பு தலைமை கணக்காய்வாளர் தனுஷ்கோடி பிரேமினி உட்பட மட்டக்களப்பின் பல நலன்புரி அமைப்புக்களில் செயற்பட்டுவரும் கணக்காய்வளர்களான சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராசா வசந்தராஜன், கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உட்பட இன்னும் புதிதாக கழகத்தில் இணைந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்களே இப்பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இக்கடத்தலினைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுவினரிடமும், பல்வேறு மனிதவுரிமை அமைப்புக்களிடமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் தனது முறைப்பாட்டினை முன்வைத்திருக்கும் கழகம், தனது ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் இருப்பிடம் பற்றி அறியத்தருமாறும் கேட்டிருக்கிறது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அநாதைப் பிள்ளைகளின் வாழ்வு மற்றும் அவர்களின் அபிவிருத்தியில் ஈடுபட்டிருந்த தனது ஊழியர்களின் பாதுகாப்பினையும், அவர்களின் விடுவிப்பினையும் உறுதிசெய்து தருமாறும் கழகம் அரசினையும், காவல்த்துறையினரையும் கேட்டிருக்கிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசேப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூத்த அங்கத்தவருமான ஜோசேப் பரராஜசிங்கம் ஞாயிறு அதிகாலை 1:20 மணிக்கு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இரு ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டார். ஆலயத்தில் அவருக்கருகில் இருந்த அவரது துணைவியார் சுகுணம் பரராஜசிங்கம் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆலயத்திற்கு ஜோசேப் அவர்கள் இரவு 10:30 மணிக்கே வருகை தந்ததாகவும், திருப்பலிப் பூசை இரவு 11:30 மணிக்கு மட்டு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாலயம் மட்டக்களப்பு சென்ட்ரல் வீதியில் , நகர மத்தியில் அமைந்திருக்கிறது. கொல்லப்பட்ட ஜோசேப் பரராஜசிங்கத்திற்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். அன்னாரது படுகொலை தொடர்பாக புலிகள் வெளியிட்ட கண்டனம் வருமாறு, தமிழ்த் தேசியவாதியும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான திரு ஜோசேப் பரராஜசிங்கம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் சிங்கள புலநாய்வுத்துறையினராலும், துணை ராணுவக்குழுவினராலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டவேளை இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கருணா துணை ராணுவக் குழு உறுப்பினர்களாலும், ஈ பி டீ பீ உறுப்பினர்களாலும் மக்கள் பார்த்திருக்கச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மக்களின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் பாடுபட்ட அவர், வழிபாட்டில் தேவநற்கருணையினைப் பெற்றுக்கொண்டு திரும்பும்போது துணைராணுவக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழ்மக்களின் அவலங்களை சர்வதேசத்தில் வெளிப்படுத்தியும், வடக்குக் கிழக்கில் மனிதவுரிமைகளுக்கான அமைப்பினை நிறுவிடவும் முயன்றுவந்த ஒரு மனிதரையே இலங்கைப் புலநாய்வுத்துறை துரோகிகளைக் கொண்டு சுட்டுக் கொன்றிருக்கிறது. இலங்கையின் ராணுவ புலநாய்வுத்துறைக்குள் செயற்படும் இனவாத சக்திகள் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகவும், மனிதவுரிமைக்காகவும் பாடுபட்ட ஒரு மனிதரைக் கொன்றிருக்கின்றன. நாம் இந்தப் படுகொலையினை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரின் குடும்பத்தாருக்கும் எமது அனுதாபத்தினைத் தெரிவிக்கின்றோம். .
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, மார்கழி 2005 இனியபாரதி உட்பட நான்கு கருணா துணை ராணுவக்குழுவினர் பலி புலிகளின் கஞ்சிகுடிச்சியாறு முன்னரங்க நிலைகளுக்கு அருகாமையில் நிலையெடுத்து, புலிகள் மீது தாக்குதல் நடத்த எத்தனித்த கருணா துணைராணுவக்குழுமீது புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் கருணா துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தரும், பல கொலைகளில் நேரடியாகப் பங்குபற்றியவருமான பாரதி என்றழைக்கப்படும் இனியபாரதி உட்பட இன்னும் மூன்று துணைராணுவக் குழுவினர் கொல்லப்பட்டனர். மொன்ராகலை அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் சியம்பலாண்டுவைப் பகுதியில் ராணுவத்தினரின் மாந்தோட்டம் ராணுவ முகாமிற்கும் புலிகளின் கஞ்சிகுடிச்சியாறு முன்னரங்கிற்கும் இடையிலான மக்கள் நடமாட்டமற்ற சூனியப் பிரதேசத்திலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இனியபாரதி ஏறாவூரின் களுவங்கேணியினைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன், இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஏனைய மூன்று துணைராணுவக் குழுவினரின் விபரங்கள் வருமாறு, சித்தாண்டியைச் சேர்ந்த சுமன், களுவங்கேணியைச் சேர்ந்த தேவன் மற்றும் வவுனதீவைச் சேர்ந்த சுரேஷ். சுமார் பத்திற்கும் மேற்பட்ட துணைராணுவக்குழுவினர் விசேட அதிரடிப்படை உதவியுடன் புலிகளின் முன்னரங்குமீது தாக்குதல் நடத்த எத்தனித்த வேளையிலேயே புலிகளின் எதிர்த்தாக்குதலில் சிக்கியிருக்கின்றனர். இனியபாரதி எனும் துணைராணுவக்குழு உறுப்பினர் கிழக்கில் பல கடத்தல்கள் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடையவர் என்பதும், கிழக்கில் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசி மூலமும் கொலைப் பயமுருத்தல் விடுதார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2005 தமிழர் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை நிராகரித்த ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழரின் தாயகக் கோபாட்டையும், சுயநிர்ணய உரிமையினை அடியோடு நிராகரிப்பதாகக் கூறியிருப்பதுடன் இனவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனதா விமுக்திப் பெரமுன ஆகியவற்றுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய மகிந்த சிந்தனையின் கீழேயே ஆட்சிசெய்யப்போவதாகவும் பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய முதலாவது உரையில் தெரிவித்தார். நடைமுறையில் இருக்கும் புலிகளுடனான சர்வதேச சமாதான ஒப்பந்த முயற்சிகளை முற்றாக மறுதலித்த அவர், புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். "பூர்வீகத் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இனம் தனக்கான பகுதியை இந்த நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்வதை நான் ஒருபோதும் அனுமதியேன். நாட்டின் அரசியல் சட்டத்திற்கு அமைவாக எந்தவொரு இன மக்களும், நாட்டின் எப்பகுதியிலும் சுதந்திரமாகச் சென்று வாழவும், அனைத்து உரிமைகளை அனுபவிக்கும் கூடிய வகையில் இந்நாட்டினை அமைக்கப்போகிறேன்" என்று தெரிவித்தார். "தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றினை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு எனது அரசு முன்னுரிமை வழங்கும். போர் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலமே தீர்வினைப் பெற விரும்புகிறோம். அவ்வாறான பேச்சுவார்த்தைகள் சுலபமானதாகவோ அல்லது எளிமையானதாகவோ இருக்காதென்பது எனக்குத் தெரியும். ஆனால், வேறு வழியில்லை. புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்". "இனப்பிரச்சினைக்கான தீர்வு இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மூலமும், விருப்பங்களின் மூலமே கொண்டுவரப்படமுடியும் என்பதுடன், இந்தத் தீர்வு நாட்டின் பெரும்பான்மை மக்களினது ஆதரவினையும் பெற்றிருப்பது அவசியமானதாகும்". "எமது தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளாக பின்வருவனவற்றை நாம் முன்வைக்கிறோம்". "நிரந்தர அமைதியினை அடைவதற்கு, நாட்டின் அனைத்துத் மக்களினதும் விருப்பங்கள் அறியப்படல் அவசியம். அதனடிப்படையிலேயே எமது சமாதான நகர்வுகள் அமையப்பெறுகின்றன". "தற்போது நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீள்பரிசீலினை செய்யப்பட்டு மனிதவுரிமைகளைப் பேணுவதற்கும், சிறுவர்களைப் படையில் இணைப்பதைத் தடுப்பதற்கும், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்றவகையில் மீள அமைக்கப்படுவதோடு, யுத்தநிறுத்த கண்காணிப்பினை தெளிவான , வெளிப்படையான முறையில் செய்யவிருக்கின்றோம்". "முன்னைய அரசாங்கத்தின் சமாதான நடவடிக்களின் தோல்வியென்பது அது வெறுமனே அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் மட்டுமே செய்துகொள்ளப்பட்டதனால் உருவானது. ஆகவே , நாம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இம்முயற்சிகளில் ஈடுபடுத்தவிருக்கிறோம்". "இம்முயற்சிகளில் பங்குபற்றுவதற்கு உண்மையானதும், வெளிப்படையானதுமான வரவேற்பினை நாம் இந்நாட்டின் எதிர்க்கட்சிக்கு விடுக்கிறோம். முஸ்லீம்களுக்கும் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படும். ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிக்கொண்டே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இந்தியா, சர்வதேசம், ஐ நா ஆகிய அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் இப்பேச்சுவார்த்தைகளிலான பங்களிப்பென்பது சரியான முறையில் பாவிக்கப்படுவதோடு, அவர்களின் பங்களிப்பு பேச்சுவார்த்தையினை சரியான வழியில் நகர்த்திச் செல்ல பயன்படுத்தப்படும்". "பிரிக்கப்படாத இறமையுள்ள நாட்டிற்குள், எல்லாச் சமூகத்தினரும் சமமான வழியில் உரிமைகளை அனுபவிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பும், இறைமையும், பிராந்திய ஒருமைப்பாடும் பேணப்படும் வகையில் நாட்டின் கட்டுமாணங்கள் பலப்படுத்தப்படும்". "பூர்வீகத் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றைப் பாவித்து ஒரு இனம் எமது தாய்நாட்டைக் கூறுபோட அனுமதிக்காத அதேவேளை, அனைத்து மக்களும் நாட்டின் எப்பகுதியிலும், தமது வாழ்வை அமைத்திடவும், உரிமைகளை அனுபவிக்கவும் வழிசெய்யப்படும்". "இன்று நடைமுறையில் இருக்கும் புலிகளுடனான சுனாமி செயற்த்திட்டங்களுக்குப் பதிலாக, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்டமைப்பொன்றை மாகாணசபைகள், பிரதேச சபைகள், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உருவாக்குவோம்". "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்கட்டுமாணத்தை ஆரம்பிக்கும் அதேவேளை, இப்பகுதிகளில் இனரீதியிலான பாகுபாடின்றி அனைத்து மக்களையும் மீளக் குடியமர்த்துவோம்" என்றும் அவர் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2005 இரு அரசியல்த்துறைப் போராளிகளைக் கொன்ற கருணா துணைராணுவக்குழு - அக்கரைப்பற்றில் சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லீம் கிராமமான பள்ளிக்குடியிருப்பு எனப்படும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல்த்துறையில் பணியாற்றிவந்த இருபோராளிகளை கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றது. சுரேஷ் மற்றும் வெள்ளை ஆகிய போராளிகள் உணவுப்பொருட்களை வாங்குவதற்காக இப்பகுதிக்கு வந்தபோது அவர்களைக் கடத்திச் சென்ற துணைராணுவக்குழு பின்னர் சுட்டுக்கொன்று, வீதியில் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. பள்ளிக்குடியிருப்பு அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில், அக்கரைப்பற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, கார்த்திகை 2005 ராணுவத்துக்கும் கருணா துணைராணுவக் குழுவுக்குமான தொடர்பினை வெளிப்படுத்திய சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் 16 வயதிற்குக் குறைந்த இரு உறுப்பினர்களான சுரேஷ் கந்தசாமி, பாபு செல்வம் மற்றும் சண்முகம் சர்வராஜா ஆகிய கருணா குழு உறுப்பினர்கள் தமது காவல்நிலையினைக் கைவிட்டு விட்டு புலிகளிடம் வந்து சரணடைந்திருக்கிறார்கள். கடந்த திங்களன்று சோலையகம் கட்டிடத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த இவர்கள் பெருமளவு பணம் தமக்கு வழங்கப்பட்டும் என்கிற உறுதியின்படியே தாம் கருணா குழுவில் இணைந்துகொண்டதாகத் தெரிவித்தனர். இலங்கை ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பின்கீழ் தாம் செய்ற்படவேண்டியிருந்ததாகக் கூறும் இவர்கள், புலிகள் மீது தாக்குதல் நடத்த தம்மை நிர்ப்பந்தித்தபோதே, தமது நிலகளை விட்டு வெளியேறி சரணடைந்ததாகக் கூறினர். சுரேஷ் மற்றும் செல்வம் ஆகியோர் கருணா குழுவினரால் கராபொல எனும் கிராமத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பலவந்தமாக இணைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். காக்காச்சிவெட்டையில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவத்தின் முகாமில் பங்கர் ஒன்றிற்குள் தான் 6 நாட்கள்வரை கருணாவின் சகாவான ஜிம் கெலித் தாத்தாவினால் அடைத்துவைக்கப்பட்டதாக சுரேஷ் கூறினார். மாதச் சம்பளப் பணமாக 6000 ரூபாய்களை தர கருணா குழு தன்னிடம் உறுதியளித்ததாக அவர் மேலும் கூறினார். முகாமில் ராணுவமே தமக்குப் பயிற்சியளித்ததாகவும், புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் சிலவற்றில் தான் ஈடுபட்டதாகவும் கூறிய அவர், மண்டூர் பாலத்தின்மீது ஒருவரைக் கொல்வதற்காக தனக்கு பிஸ்ட்டல் வழங்கப்பட்டதாகவும், தான் அதனை எடுத்துக்கொண்டு புலிகளிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார். செல்வம் தன்னைப்பற்றிக் கூறுகையில், வாகனச் சாரதியான தன்னைக் கடத்திய கருணாகுழு தீவுச்சேனையில் அமைந்திருந்த துணை ராணுவ குழுவினர் முகாமிற்கு கொண்டுசென்றதாக கூறினார். அங்கிருந்த துணைராணுவக் குழுவினர் ஓட்டமாவடியில் உள்ள பல வியாபார நிலையங்களில் களவுகளில் ஈடுபட்டதாகவும் கூறினார். 6000 ருப்பாய்கள் சம்பளத்திற்கு தான் அமர்த்தப்பட்டதாகக் கூறும் செல்வம், குறைந்தது 7 தமிழ் இளைஞர்களைக் கடத்திவந்த கருணா குழு தீவுச்சேனை முகாமில் சுட்டுக் கொன்றதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினார். கட்டாரிலிருந்து வந்து துணைராணுவக்குழுவில் இணைந்துகொண்ட சண்முகம் சர்வராஜா கூறுகையில் கருணா குழுவின் மார்க்கனின் அறிவுரையின்படியே தான் துணைராணுவக்குழுவில் வந்து இணைந்ததாகக் கூறினார். கொக்கட்டிச்சோலையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் மேலும் கூறுகையில், தீவுச்சேனையில் சுமார் 65 துணைராணுவக்குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தான்கூட மாதச் சம்பளத்திற்கே அவர்களுடன் சேர்ந்ததாகவும் கூறினார். சுமார் ஒருமாதகால பயிற்சியின்பின்னர் ராணுவத்தின் பவள் கவசவாகனமொன்றில் ஏற்றப்பட்ட சர்வராஜா வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தளமான சேனைபுறத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்முகாமின் தளபதி கப்டன் முனசிங்கவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டதாகவும் கூறினார். அவரின் கூற்றுப்படி தமக்குத் தேவையான உணவுமுதல், அறிவுருத்தல்கள், கட்டளைகள் வரை அனைத்துமே இந்த முகாம் அதிகாரியினாலேயே வழங்கப்பட்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 7, கார்த்திகை 2005 ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிப்படியே கருணாவைப் பிரித்தெடுத்தோம் - நவீன் திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலிய மாவட்ட முக்கியஸ்த்தர் நவீன் திசானாயக்கா அண்மையில் கருணாவின் துரோகம் பற்றிக் கூறும்போது, "புலிகளை எதிர்த்துப் போராடவேண்டிய தேவை எமது ராணுவத்திற்கு இனிமேல் இருக்காது. பிரபாகரன் யுத்தத்தினை ஆரம்பித்தால் இந்தியாவும் அமெரிக்காவும் தமது படைகளை அனுப்பி புலிகளுடன் மோதுவார்கள்" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ஐரோப்பிய நாடுகளுக்கு கருணா புலிகள் சார்பாக மேற்கொண்ட பயணங்களின்பொழுது, அவர் பிரபாகரனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் சூழ்நிலையினையும், சந்தர்ப்பங்களையும் நாம் உருவாக்கினோம்" என்றும் அவர் கூறினார். உதயன் நாளிதழில் வந்த நவீன் திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றின் விபரங்களின் அடிப்படியில் ரணில் விக்கிரமசிங்கவின் முற்றான ஆதரவு தன்னக்குக் கிடைத்தபின்னரே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து செல்லும் முடிவினை எடுத்ததாக நவீன் கூறினார். "இதானேலே பிரபாகரனினால் இன்னொரு யுத்தத்தை இப்போது நடத்த முடியாமல் இருக்கிறது" என்று அவர் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது கூறினார். அவர் மேலும் கூறும்போது "அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருடன் மிக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, புலிகளுடனான யுத்தத்தின்போது இந்நாடுகளின் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளார். இவ்வாறான யுத்தம் ஒன்றில் இலங்கை ராணுவம் புலிகளுடன் மோதுவதற்கான எந்தத் தேவையும் இருக்காது, அவர்களே பார்த்துக்கொள்வார்கள்" என்றும் தெரிவித்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, புரட்டாதி 2005 மங்களம் மாஸ்ட்டர் தலைமையில் கருணா குழு புலிகள் மீது தாக்குதல் - 3 புலிகள் பலி செவ்வாய் காலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கட்டுமுறிவில் அமைந்திருந்த காவலரன் மீது கருணா குழு நடத்திய தாக்குதலில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயமடைந்ததாக புலிகள் அறிவித்திருக்கின்றனர். மேலும் வெலிக்கந்தைப் பகுதி ராணுவ அதிகாரியொருவர் கூறுகையில் கொல்லப்பட்ட புலிகளிடமிட்ருந்து ஒரு 40 மி மீ கிர்னேட் செலுத்தியும் நான்கு டி - 56 துப்பாக்கிகளும், 10 கிர்னேட்டுக்களும் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர் இதுபற்றிக் கூறுகையில், கருணாவின் சகா மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் துணை ராணுவக்குழு உறுப்பினர் தலைமையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். கொல்லப்பட்ட போராளிகளின் விபரம், சுந்தரலிங்கம் சின்னராசா - இறால்குழி, பத்மநாதன் செந்தூரன் - பெரியகுளம், நிலாவெளி, நாகரட்ணம் சிவதர்சன் - கிளிவெட்டி. இத்தாக்குதல் இலங்கை ராணுவத்தினராலேயே நடத்தப்பட்டதாக முறையிட்டிருக்கும் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கனரக ஆயுதங்களைப் பாவித்ததாகவும், கட்டுமுறிவுப் பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் சிங்கபுர முகாமிலிருந்து வந்த ராணுவ அணியே இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், கருணா துணை ராணுவக் குழுவினரை ராணுவம் புலிகள் மீதான தாக்குதல்களில் பினாமிகளாகப் பாவித்து வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அண்மையில் தீவுச்சேனைப் பகுதியில் ராணுவத்தின் ஆதரவுடன் கருணா துணைராணுவக்குழு முகாம்களை நிறுவிவருவதை சண்டே லீடம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததன் பின்னர், சில திங்களுக்கு முன்னர் அம்முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தில் பலரைக் கொன்றதுடன், மங்களம் மாஸ்ட்டர் எனும் துணை ராணுவக்குழு உறுப்பினரும் காயப்பட்டதாக செய்திகள் வந்தநிலையில், தற்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு - வெலிகந்தை நெடுஞ்சாலையின் 60 கிலோமீட்டர் பகுதியில் குறைந்தது 16 ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, புரட்டாதி 2005 புலிகளின் களுவாஞ்சிக்குடி அரசியல் அலுவலகம் மீது கருணா குழு தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான களுவாஞ்சிக்குடியில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்த்துறை அலுவலகம் மீது கருணா துணைராணுவக்குழுவினர் நடத்திய தாக்குதலில் அருள்நேசன் எனும் அரசியக்த்துறைப் போராளி கொல்லப்பட்டார். கிர்னேட்டுக்கள் கொண்டும், இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், உடலில் ஒன்பது சன்னங்கள் பட்டு அருள்நேசன் உயிரிழந்தார், கூடவிருந்த மூன்று போராளிகள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். அருள்நேசனின் உடல் பிரேதப் பரிசோதனையின் பின்னர் புலிகளிடம் கையளிக்கப்பட்டது. இதே அலுவலகம் சுமார் ஒரு மாதகாலத்திற்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளாகியதென்பதும், இப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. இரண்டு உந்துருளிகளில் வந்திறங்கிய நான்கு கருணா துணைராணுவக் குழுவினர் கைய்யெறிகுண்டுகளை வீசியும், டி 56 இயந்திரத் துப்பாகிகள்மூலம் சரமாரியாகச் சுட்டுக்கொண்டும் அலுவலகத்தினுள் நுழைந்ததுடன் அங்கிருந்த ஆவணங்களை எரித்தும், தளபாடங்களை அடித்து நொறுக்கியுமிருக்கிறார்கள். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அருள்நேசன் ஒருமாத காலத்திற்கு முன்னர் இதே அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர்தப்பியிருந்தார். புலிகளின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் மட்டுமே விசேட அதிரடிப்படை முகாமும், பொலீஸ் அலுவலகமும் அமைந்திருக்கும் நிலையில் கருணா குழுவினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஆவணி, 2005 புலிகள் மற்றும் பொதுமக்கள் மீது கருணா துணை ராணுவக்குழுவும் ராணுவமும் இணைந்து தாக்குதல் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இராசையா இளந்திரையனின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை கிரிமிச்சைப் பகுதிக்குள் ஊடுருவிய கருணா துணை ராணுவக் குழுவும், ராணுவமும் இணைந்து புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் நடத்திய தாக்குதலில் புலிகளின் ரீகன் எனும் போராளி கொல்லப்பட்டதோடு, மேலும் இரு பொதுமக்களும் ஒரு போராளியும் காயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. செவ்வாய் காலை 10 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து கருத்துவெளியிட கண்காணிப்புக்குழு மறுத்துவிட்டது. அதேவேளை வாகரைப்பகுதி மக்களின் கருத்துப்படி, அருகில் அமைந்திருக்கும் பன்னிச்சங்கேணி ராணுவ முகாமிலிருந்து ராணுவ உடையணிந்த ஆயுததாரிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், தாக்குதலின் பின்னர் முகாமினுள் நுழைந்ததை தாம் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்கள். சம்பூர் அரசியல்துறையினரின் செய்திப்படி, கிளேமோர்க் குண்டுகளைப் பாவித்து தாக்குதலை ஆரம்பித்த இக்குழுவினர், பின்னர் புலிகளை நோக்கித் துப்பாக்கித் தாக்குதலினையும் மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. புலிகளின் சமாதானப் பணியகத்தின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிரிமிச்சையினுள் சுமார் 500 மீட்டர்கள் உள்நுழைந்து ராணுவமும், துணை ராணுவக்குழுவும் நிலைகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராணுவத்தினதும், துணை ராணுவக் குழுவினதும் இந்த அத்துமீறல் குறித்து கண்காணிப்புக் குழுவினரிடம் மட்டக்களப்பில் புலிகள் முறையிட்டிருக்கிறார்கள். இதேவேளை, இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு ராணுவ அதிகாரியொருவர் இத்தாக்குதல் பற்றி எமக்குத் தெரியும், ஆனால் நாங்கள் பங்கேற்கவில்லை. கருணா குழு 6 புலிகளைக் கொன்றிருப்பதுடன், இன்னும் 7 பேரைக் காயப்படுத்தியிருக்கிறது " என்று கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
இரு அரசியல்த்துறைப் போராளிகளைக் கொன்று எல்லையில் எறிந்த கருணா துணை ராணுவக்குழு மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்ட எல்லைகளில் அரசியல்த்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு போராளிகளைச் சுட்டுக்கொன்ற கருணா துணை ராணுவக்குழு அவர்களின் உடல்களை எல்லைப்பகுதியில் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. கப்டன் சுபன் ( அரசரட்ணம் விக்னேஸ்வரன் - வளத்தைப்பிட்டி) மற்றும் லெப்டினன்ட் நிலவரசன் ( ராசலிங்கம் ஷங்கர் - களுவங்கேணி) ஆகிய அரசியல்த்துறைப்போராளிகளே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர். வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகப் புலிகளிடம் கையளிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, சித்திரை 2005 வெலிக்கந்தை - சொறிவில் துணைராணுவக்குழு மறைவிடங்கள் மீது தாக்குதல் - 9 துணை இராணுவக்குழுவினர் பலி ! மட்டக்களப்பு நகரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் சொறிவில் - வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவந்த கருணா குழு மற்றும் ஈ என் டி எல் எப் துணை ராணுவக்குழுக்களின் மறைவிடங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 துணை ராணுவக் குழுவினர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் பற்றிக் கருத்துக்கூறிய மட்டக்களப்பு ராணுவ அதிகாரியொருவர், "இதனை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ என்னால் இப்போது முடியாது" என்று கூறினார். கொல்லப்பட்ட ஒன்பது துணை ராணுவக்குழுவினரின் உடல்களும் சொறிவில் ஆற்றுப்பகுதியில் காணப்படுவதாக அக்கிராமவாசிகள் தெரிவித்தனர். கருணா துணைராணுவக் குழுவினரும், இந்தியாவில் இயங்கிவரும் ஈ என் டி எல் எப் துணைராணுவக்குழுவினரும் இணைந்து இப்பகுதியில் 5 சிறிய முகாம்களை அண்மையில் நிறுவியிருந்தனர். இவற்றுள் வண்ணத்துரையடியில் அமைந்திருந்த மூன்று முகாம்களே புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மற்றைய இரு முகாம்களும் துணைராணுவக்குழுவினருக்கான உணவுப்பொருட்களைச் சேமித்துவைக்கப் பயன்பட்டுவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்களின்படி இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் துணைராணுவக்குழுவான ஈ என் டி எல் எப் இன் முக்கியஸ்த்தர் விஜயன் உட்பட இக்குழுவின் மேலும் இரு துணைராணுவக்குழுவினரும் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சொறிவில் ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்களை பொலிஸார் அரலகன்வில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுளானர். மேலும் காயமடைந்த யோகராஜா மற்றும் சின்னத்தம்பி மகேந்திரன் ஆகியோர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இயங்கிவரும் துணைராணுவக்குழுவினரே புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்களை நடத்திவருவதாக குற்றஞ்சாட்டியிருந்த யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், இலங்கை ராணுவமே இவர்களை இயக்குவதாக வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தநிலையில் இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதேவேளை தம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டமொன்றிற்கு வரமறுத்தார்கள் என்கிற காரணத்தால் சொறுவில், மலியதேவபுர, நாமல் பொக்குன ஆகிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களிருந்த சிங்களவர்கள் மற்றும் தமிழர்களிடமிருந்து தண்டப்பணமாக பெருந்தொகையினை இந்த துணை ராணுவக்குழுவினர் அறவிட்டதாக சிங்கள நாளிதழான லங்காதீப செய்தி வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிக்கை மேலும் கூறுகையில், அண்மைக்காலமாக கருணா குழுவும் ஈ என் டி எல் எப் குழுவும் இப்பகுதியில் இணைந்தே இயங்கிவருவதாகவும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தமது செயற்பாடுகள் பற்றி விளக்கமளிப்பதற்கே இக்கூட்டத்தினை இவர்கள் கூட்டியதாகவும் கூறியிருக்கிறது. https://yarl.com/forum2/thread-4478.html
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, பங்குனி 2005 ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான தீவுச்சேனையில் இயங்கும் கருணா துணை ராணுவக்குழு முகாம் - சண்டே லீடர் பொலொன்னறுவை மாவட்டத்திலிருக்கும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தீவுச்சேனைப் பகுதியில் கருணா குழுவின் முகாம் இயங்கிவருவதை கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் வாரப் பத்திரிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. வாழைச்சேனை - ஹபரணை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செவனப்பிட்டிய எனும் சிங்களக் குடியேற்றக் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இப்பகுதிக்கு இப்பத்திரிக்கையின் நிருபர்கள் அண்மையில் விஜயம் செய்திருந்தனர். இப்பகுதியில் இரு சிறுவர்களை அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் சிலநாட்களுக்கு முன்னதாக சுட்டுக் கொன்றிருந்தனர். தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த இக்கிராம மக்கள் தமது இறந்த பிள்ளைகளின் உடல்களை பிரதான வீதிக்கு முன்பாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், இந்த துணை ராணுவக் குழு முகாம் இப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். அக்கிராமவாசிகளின் கருத்துப்படி இந்த துணைராணுவக் குழுவின் முகாமிலிருந்து வந்த கருணா குழு ஆயுததாரி லக்ஷ்மண் என்பவரே இப்படுகொலைகளைப் புரிந்ததாகக் கூறினர். இதேவேளை, இச்சிறார்கள் கொல்லப்பட்டபொழுது, புலிகளே இவர்களைக் கொன்றதாகக் கூறியிருந்த பாதுகாப்பு அமைச்சு, உண்மையான குற்றவாளிகள் ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா துணைராணுவக் குழுவினர்தான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையிலும், இதுபற்றிக் கருத்துக் கூறவில்லை. தீவிச்சேனைப் பகுதி கடுமையான ராணுவ பிரசன்னத்தை எப்போதும் கொண்டிருப்பதுடன் ராணுவத்தின் பாரிய படைமுகாம்களும் சிறு முகாம்களும் இப்பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன என்பதோடு, முத்துகலையில் அமைந்திருக்கும் ராணுவ முகாமிலிருந்து இக்கிராமம் வெறும் 2 அல்லது 3 கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைதிருக்கிறது. இப்பத்திரிக்கை இம்முகாம் பற்றி மேலு கூறுகையில், கருணா குழுவின் "மங்களன்" என்பவர் தலைமையிலேயே இம்முகாம் இயங்கிவருவதாகக் கூறியிருப்பதுடன், இம்முகாமின் முன்னரங்கில், வீதியினை மறித்து காவலில் ஈடுபடும் இரு துணை ராணுவக்குழு உறுப்பினர்களின் படங்களையும் இணைத்திருக்கின்றது. தம்முடன் துணை ராணுவக்குழுவினர் என்று எவருமேயில்லை என்று சந்திரிக்கா தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், இப்பத்திரிக்கை இம்முகாம்பற்றிய செய்திகளை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, பங்குனி 2005 ஆறு கிராமவாசிகளைச் சுட்டுக்கொன்ற கருணா துணை ராணுவக்குழு கடந்த சனிக்கிழமை, மட்டக்களப்பு நகரிலிருந்து 65 கிலோமீட்டர்கள் வடக்கேயிருக்கும் கோலகுணவெளி, வெலிக்கந்தைப் பகுதியில் நான்கு முஸ்லீம்கள், ஒரு சிங்களவர் ஒரு தமிழர் அடங்கலாக ஆறு கிராமவாசிகளை கருணா துணை ராணுவக் குழுவினர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இரு முஸ்லீம்களும் ஒரு சிங்களவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்திருக்கின்றனர். பொலிஸார் மேலும் கூறுகையில் புலிகளுடன் தொடர்பை வைத்திருந்தார்கள் என்கிற காரணத்தினாலேயே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தமது நடவடிக்கைகள் பற்றி புலிகளுக்குத் தகவல் வழங்கியவர்கள் என்று கருணா குழுவினரால் இம்மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பொலொன்னறுவை நெடுஞ்சாலையில், கோலகுணவெளியெனும் பகுதியில், பொலீஸ் காவலரணில் இருந்து வெறும் 300 மீட்டர்கள் இருக்கும் இடத்திலேயே இந்தப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. கொல்லப்பட்ட தமிழர் கோலகுணவெளியில் வியாபாரம் பார்த்து வந்தவர் என்றும், புலிகளுக்குத் தகவல் வழங்கினார் என்கிற அடிப்படையிலேயே இவர் கடையினுள் இருந்து இழுத்துவரப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்த பொலீஸார், தாம் இப்பகுதியை அடையுமுன்னரே கருணா குழு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறினர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, மாசி 2005 துரோகிகளால் கொல்லப்பட்ட புலிகளின் வித்துடல்கள் மட்டக்களப்பு கிரானில் மக்களின் அஞ்சலிக்கக வைப்பு துரோகிகளான கருணா துணை ராணுவக்குழுவினரால் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்கு மாவட்டங்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் மற்றும் ஏனைய போராளிகளினதும் வித்துடல்கள் கிரானுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. தமிழீழத் தேசியக்கொடியினால் போர்த்தப்பட்ட போராளிகளின் வித்துடல்களுக்கு பலநூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த இறுதிநிகழ்வுகளில் கலந்துகொண்ட கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இங்கு பேசுகையில், "மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்காகத் தொடர்ந்து செயலாற்றிவந்த ஒரு சேவையாளனை அரச ஆதரவுடனேயே துணைராணுவக்குழு கொன்றிருக்கிறது, ஆகவே அரசே இக்கொலைகளுக்கு முழுப்பொறுப்பினையும் ஏற்கவேண்டும்" என்று கோரினார். கொல்லப்பட்ட போராளிகளின் வித்துடல்கள் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ராணுவத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல், சமூக, மத பிரமுகர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், படுகொலைகளையும் கண்டித்தனர். மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்தபின்னர், அவை கிரானுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. கிரான் அஞ்சலி நிகழ்வின் பிற்பாடு, தாண்டியடி மாவீரர் துயிலுமிடத்திற்கு போராளிகளின் வித்துடல்கள் கொண்டுசெல்லப்பட்டன. செல்லும் வழியெங்கும் மக்கள் தமது போராளிகளுக்குத் தமது அஞ்சலியைச் செலுத்தியதைக் காண முடிந்தது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, மாசி 2005 கருணா துணை ராணுவக்குழுவின் தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம் கடந்த திங்களன்று கருணா துணை ராணுவக் குழுவால் கெளசல்யன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு இன்று கொழும்பில் மரணித்தார். அன்னார், கிழக்குமாகாண தமிழ்த்தேசிய ஆர்வலர்களான அறபோர் அரியநாயகம் அவர்களின் சிரேஷ்ட்ட புத்திரனும், 2001 இல் அம்பாறை மாவட்டத்திலிருந்து கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவருமாவார். இதேவேளை புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்த்துறையினர் துரோகிகளால் கொல்லப்பட்ட கெளசல்யன் மற்றும் ஏனைய போராளிகளின் வித்துடல்களை பொலொன்னறுவை வைத்தியசாலையிலிருந்து பொறுப்பேற்று மட்டக்களப்பிற்குக் கொண்டுவர ஏற்பாடு செய்துவருகின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, மாசி 2005 புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கருணா துணை ராணுவக் குழுவால் படுகொலை கடந்த திங்களன்று, மாலை 7:45 மணியளவில் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் அவர்கள் வீதியில் அவர்களை வழிமறித்த கருணா துணைராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த இன்னும் மூன்று புலிகளின் அரசியல்த்துறைச் செயற்பாட்டாளர்களும் இக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நான்குபேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவும் கெளசல்யனுடன் வாகனத்தில் பயணித்ததாகவும், அவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையில் இலங்கை ராணுவத்தின் வெலிக்கந்தை மற்றும் புணாணை முகாம்களுக்கிடையிலிருக்கும் நெடுஞ்சாலையின் பகுதியிலேயே இந்தப் படுகொலையினை கருணா துணைராணுவக்குழு நிகழ்த்தியிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டதையடுத்து கொல்லப்பட்ட புலிகளின் அதி உயர் முக்கியஸ்த்தர் கெள்சல்யன் தான் என்பது குறிப்பிடத் தக்கது. கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விஸ்த்தரிப்பது தொடர்பாக வன்னியில் தலைமையுடன் கலந்தாலோசித்து விட்டு மட்டு நோக்கித் திரும்புகையிலேயே அவர் துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் பயணித்தபோது கொல்லப்பட்ட மற்றைய இரு போராளிகளும் மதிமாறன் மற்றும் குமணன் என்று அடையாலம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை புலிகளின் நிதிப்பொறுப்பாளரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று கொழும்பில் பரவிய செய்திகளை மறுத்துள்ள புலிகள், தமிழேந்தி கிளிநொச்சியில் அந்நேரத்தில் இருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். புலிகள் மேலும் தெரிவிக்கையில், கெளசல்யனுடன் வினோதன், புகழன், செந்தமிழ் மற்றும் நிதிமாறன் ஆகிய போராளிகளும் கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, கார்த்திகை 2004 மாவீரர் நிகழ்வுகளில் ஈடுபட்ட இருவரை சுட்டுக்கொன்றது கருணா துணை ராணுவக்குழு மட்டக்களப்பு நகரிலிருந்து 18 கிலோமீட்டர்கள் வடக்கேயிருக்கும் வந்தாறுமூலைப் பகுதியில் மாவீரர் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு கிராமவாசிகளை கருணா துணைராணுவக்குழு புதன் மாலை 8 மணியளவில் சுட்டுக் கொன்றது. மோட்டார் சைக்கிளில் இப்பகுதிக்கு வந்த துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தவர்கள்மீது சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கருணா துணை ராணுவக்குழுவினரைப் பாவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மனங்களில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவ்வருட மாவீரர் நினைவேந்தலை எப்படியாவது தடுத்துவிட சிங்கள ராணுவம் முயன்றுவருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இதேவேளை புலிகளையும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தி கருணா துணைராணுவக்குழுவினரின் பெயரில் மீண்டும் துண்டுப்பிரசுரங்களை இலங்கை ராணுவம் மட்டக்களப்பு நகரில் இன்றும் விநியோகித்தது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள்18, கார்த்திகை 2004 இலங்கை ராணுவப் புலநாய்வு அதிகாரியும், கருணா துணை ராணுவக் குழு உறுப்பினரும் புலிகளின் பிஸ்ட்டல் குழு நடவடிக்கையில் பலி மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் கதுருவெல எனப்படும் சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் இயங்கிய இலங்கை ராணுவ உளவுவுப்பிரிவின் அதிகாரி லான்ஸ் கோப்ரல் அஜித் திசானாயக்கவும், அவரது உதவியாளரும் கருணா துணைராணுவக்குழு உறுப்பினருமான வசந்தநாயகம் பிரபாகரன் எனும் உறுபினரும் புலிகள் பிஸ்ட்டல் குழுவினரின் நடவடிக்கையொன்றில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிங்கள அதிகாரி தாக்குதலின்பொழுது ஸ்தலத்திலேயே கொல்லப்பட, துணை ராணுவக்குழு உறுப்பினர் ராணுவத்தினரால் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியிலிருக்கும் மின்னேரியா இலங்கை ராணுவ முகாமில் துணைராணுவக்குழுவினரை ராணுவபுலநாய்வுத்துறையினர் இயக்கிவருவதாகவும், அவ்வாறான நாசகார நடவடிக்கையின்றிற்காக மட்டக்களப்பு நோக்கி இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்பொழுதே புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்றும் கூறப்படுகிறது. மின்னேரியாவில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் செயலகத்திலிருந்து இயங்கும் ஆள ஊடுருவும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு - பொலொன்னறுவை எல்லைப்பகுதியில் தொடர்ச்சியான நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவர்களுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தாம் முடுக்கிவிட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, ஐப்பசி 2004 மட்டக்களப்பில் கருணா துணை ராணுவக்குழு சார்பாக துண்டுப்பிரசுரங்களை ராணுவம் விநியோகித்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினை கொச்சைப்படுத்தியும், துணைராணுவக் குழு உறுப்பினர் கருணாவை புகழ்ந்தும் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் மட்டக்களப்பு நகரில் ராணுவம் மக்களிடம் விநியோகித்தது. துணை ராணுவக்குழு உறுப்பினர் கருணா பெயரில் வெளியிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரங்களில் புலிகளுக்கெதிரான பல விமர்சனங்களும், தனிமனித தாக்குதல்களும் இடம்பெற்றிருந்தன. மட்டக்களப்பு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே ராணுவம் இந்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததைக் காண முடிந்தது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, புரட்டாதி 2004 துணைராணுவக்குழுத்தலைவர் கருணாவின் சகோதரர் பலி மட்டக்களப்பு பொலொன்னறுவைப் பகுதியில் அமைந்திருக்கும் மாதுருஓயா பகுதியில் நடந்த தாக்குதல் ஒன்றில் துணைராணுவக்குழுத் தலைவர் கருணாவின் சகோதரரும், அக்குழுவின் பிரதித் தலைவருமான ரெஜி என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார். மாதுரு ஓயாக் காட்டுப்பகுதியில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கெதிராக இயங்கிவந்த கருணா துணைராணுவக் குழுவினருக்கெதிராக தாம் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் ஒன்றிலேயே துணைராணுவக்குழு உறுப்பினர் ரெஜி கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். இவருடன் சேர்ந்து, துணைராணுவக் குழு முக்கியஸ்த்தர்களான எழிலன் மற்றும் துமிலம் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதாக புலிகள் மேலும் தெரிவித்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆள ஊடுருவி மக்களையும் புலிகளையும் கொன்றுவரும் இலங்கை ராணுவத்தின் 8 வீரர்கள் அடங்கிய விசேட படைப்பிரிவின் பிரதான பயிற்சிமுகாம் மாதுருஓயா காட்டுப்பகுதியிலேயே அமைந்திருப்பதும், இம்முகாமினுள்ளேயே கருணா துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் ராணுவத்தினருடன் பயிற்சிகளிலும், தமிழருக்கெதிரான நாசகார அழிவுநடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆடி 2004 கருணாவைத் தன்னுடன் தொடர்புபடுத்தி செய்திவெளியிட்டதற்காக ரணிலைச் சாடும் அநுர பண்டாரநாயக்க துணைராணுவக்குழுத் தலைவரான கருணாவை சிங்கப்பூருக்குப் பாதுகாப்பாக தான் அழைத்துச் சென்றதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது தனது பாதுகாப்பிற்குக் கடுமையான பாதகத்தினை ஏற்படுத்தியிருப்பதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கத்தினை உண்டுபண்ணியிருப்பதாகவும் அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான அநுர பண்டாரநாயக்க இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். முதலீட்டுச் சபை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அநுர, கருணாவை தான் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதை முற்றாக மறுதலித்துள்ளதோடு, அவரை இதுவரை தான் சந்திக்கவில்லையென்றும், இனிமேலும் சந்திக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் திட்டவட்டமாகக் கூறினார். தனக்கு புலிகள் மூலம் ஆபத்தினை உருவாக்கவே ஐக்கிய தேசியக் கட்சியினர் முயல்வதாகத் தெரிவித்திருக்கும் அநுர, இக்கட்டுக்கதையினால் தனது நற்பெயரும் களங்கப்பட்டிருப்பதாக மேலும் கூறினார். "இது ஒரு மிகவும் பாரதூரமான அறிக்கை. பிரபாகரன் இச்செய்திபற்றி எவ்வாறான முடிவை எடுக்கப்போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நான் கருணாவை பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியதை சில பத்திரிக்கைகள் வேண்டுமென்றே பிரதான செய்தியாகப் பிரசுரித்து வருகின்றன. நான் இதுபற்றிய எனது கண்டங்களை பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது எடுத்துரைப்பேன்" என்று அவர் மேலும் கூறினார். "முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் மிகத்தவறான ஆட்சிமுறைபற்றி நான் விமர்சனங்களை முன்வைத்ததற்குப் பழிவாங்கவே அவர் என்மீது இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்" என்றும் அவர் மேலும் கூறினார்.