Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 23, வைகாசி 2008 கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் உதவியுடன் வாகரையில் சிங்களவர்களைக் குடியேற்றும் சிங்கள ராணுவம் பிள்ளையானின் ஆதரவுடன், இலங்கை ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கோரளைப்பற்று வடக்கில் அமைந்திருக்கும் வாகரைப் பகுதியில் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளிலிருந்து சிங்கள மீனவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் முயற்சியை ஆரம்பித்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். வாகரையின் ஊரியான் பகுதியில் இவ்வாறு குடியேற்றப்படும் சிங்களவர்களுக்கென்று சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதேச செயலகம், தொழிற்பயிற்சி மற்றும் கருத்தரங்கு நிலையம், கூட்டுறவுச் சங்கம் ஆகிய கட்டடங்கள் நிறுவப்பட்டுவருகின்றன. கல்குடா பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான வசதிகளை இங்கே ஏற்படுத்திவரும் ராணுவம், தனது முயற்சிக்கும் கிழக்கு முதலமைச்சர் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பகுதியில் கடலட்டைகளையோ, கவர்ச்சியான வண்ண மீன்களைப் பிடிப்பதையோ மாவட்ட அதிகாரிகள் தடுத்திருக்கும் நிலையில், பிள்ளையானின் ஆசீருடன் ராணுவம் இப்பகுதிகளில் சிங்கள மீனவர்கள் தங்குதடையின்றி மீன்பிடியில் ஈடுபடவும், தேவையேற்படும்பொழுது டைனமைட்டுக்களைப் பாவித்து பெருமளவில் மீன்களைப் பிடிக்கவும் உதவிவருகிறது. இதுபற்றி உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிக் கூட்டுத்தாபானத்திடம் முறைப்பாடுகளைச் செய்தபோதும் கூட, பிள்ளையான் குழுவினரின் தலையீட்டினால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பாரிய வலைகளைப் பாவித்து கடல்வளத்தை நாசம்செய்துவரும் சிங்கள மீனவர்களின் செயலினைக் கட்டுப்படுத்த எவருமேயில்லாத நிலையில், சிங்கள மீனவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஆக்கிரமிப்பு ராணுவம் கிழக்கு மாகாணசபயூடாகச் செய்துவருவதாகவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
  2. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 16, வைகாசி 2008 கிழக்கு மாகாணசபை முதல்வராகப் பதவியேற்ற கொலைக்குழுத் தலைவன் பிள்ளையான் இலங்கை ராணுவத்தின் கொலைக்குழுவாக இயங்கிவரும் பிள்ளையான் கொலைக்கும்பலின் தலைவனான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதைவியேற்றுக்கொண்டான். பிள்ளையானுக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புள்ளா, தானும் தனது இரு உறுப்பினர்களும் தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். சட்டத்திற்கு முரணாகவும், அரசியலமைப்பிற்கு முரணாகவும் நடத்திமுடிக்கப்பட்ட இந்த மோசடித் தேர்தலிலேயே கொலைக்குழுத் தலைவன் ஒருவன் முதலமைச்சராக வரும் சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 18 முஸ்லீம்கள், 10 தமிழர்கள், 7 சிங்களவர்கள் மற்றும் ஒறு போனஸ் ஆசனங்கள் உட்பட 37 உறுப்பினர்கள் இம்மாகாணசபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மொத்த 37 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 20 ஆசனங்களும், 15 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - முஸ்லீம் காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜே வி பி கட்சிக்கு 1 ஆசனமும், முன்னாள் போராளி அமைப்புக்கள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னணிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளன. பிள்ளையான் கொலைக்குழுவின் தலைமையில் இயங்கும் கட்சிக்குத் தமது ஆதரவை இக்கட்சிகள் வழங்க மறுத்துள்ள நிலையில், தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரும் பட்சத்தில் தாம் ஆதரவு தருவதாக முன்னாள் போராளிகளின் அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்குள் உருவாகியிருக்கும் தமிழ் முஸ்லீம் பிணக்கினால் முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகிறது. இறுதிநேர கள்ளவாக்குத் திணிப்பு, கொல்லப்பட்ட, காணாமற்போன தமிழர்களின் வாக்குகளைப் பிள்ளையான் ஆதரவாளர்கள் போட்டமை ஆகிய தேர்தல் மோசடிகள் உடபட பல நாசகார நடவடிக்கைகளை இக்கொலைக்குழு செய்தபோதும்கூட கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானுக்கு ஐந்தாவது அதிகப்படியான விருப்புவாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிட்டவர்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக்கொண்டவன் என்கிற காரணத்தினால் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையான் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டான். இதேவேளை பிரதான எதிர்க்கட்சியுட்பட பல அரசியல் சமூக அமைப்புக்கள் இந்த தேர்தலை ஒரு நாடகம் என்று வர்ணித்துள்ளதுடன், அதிகப்படியான தேர்தல் தில்லுமுள்ளுகள், வன்முறைகள், கடத்தல்கள், படுகொலைகள் ஊடாக அரசாங்கம் தனது அடியாளை பதவியில் அமர்த்தியிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றன. இதேவேளை இத்தேர்தலைக் கண்காணித்துவந்த சுயாதீன அமைப்பான நீதியும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு இத்தேர்தல்பற்றிக் கருத்துக் கூறுகையில், "இத்தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளும், அதிகப்படியான வாக்குமோசடிகளும், இத்தேர்தலின் உண்மையான முடிவினை தலைகீழாய் மாற்றிவிட்டன" என்று கூறியுள்ளது. "அரச ஆதரவுடனான ஒரு ஆயுதக்குழுவினரின் நடவடிக்கைகள் இத்தேர்தலில் மிக மோசமாக இருந்தன " என்று மாற்று அரசியலுக்கான மையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். துரோகத்தின் நாட்காட்டி: நாள் 20, வைகாசி 2008 ஈ பி டி பி துணைராணுவக்குழு மீது தாக்குதல் நடத்திய பிள்ளையான் கொலைக்குழு வாழைச்சேனை பெண்டிக்கோஸ்து ஆலயத்திற்கு அருகில் நிலைகொண்டிருந்த ஈ பி டி பி துணைராணுவக்குழு மீது பிள்ளையான் கொலைக்குழு வாட்களாலும், கத்திகளாலும் கொண்டு நடத்திய தாக்குதலில் 5 ஈ பி டி பி துணைராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயப்பட்டவர்கள் வேலன் யோகராசா, வீரசாமி வாமதேவன், துரையப்பா வடிவேல், ஜெகன் சசிதரன், துரையப்பா நாகமணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மையில் நடந்துமுடிந்த மாகாணசபைத் தேதல் காலத்துப் பகையே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
  3. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10 வைகாசி 2008 பரவலான வன்முறைகள், இறுதிநேர கள்ளவாக்குகள் உட்பட பல முறைகேடுகளுடன் முடிவிற்கு வந்த கிழக்கின் மாகாணசபைத் தேர்தல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளில் இறுதி மணித்தியாலங்களில் அத்துமீறிப் பிரவேசித்த பிள்ளையான் கொலைக்குழுக் கூலிகள் வாக்குப் பெட்டிகளை அபகரித்ததோடு பலநூற்றுக்கணக்கான போலிவாக்குகளை அப்பெட்டிகளில் நிறைத்ததாக தேர்தல் கண்காணிப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் பகுதிகளில் சுமார் 45 வீதமாகக் காணப்பட்ட வாக்குப்பதிவு சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் சுமார் 55 இலிருந்து 60 வீதம்வரையில் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் கால வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான வன்முறைகள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை ( 64 வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பில் மட்டும்) பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த அமைப்புக் கூறுகையில் போலியான வாக்குப்பதிவு நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்றதாகவும், தமது முன்னிலையில் குறைந்தது 22 தடவைகளாவது பிள்ளையான் கொலைக்குழுவினர் இதனைப் புரிந்ததாகவும் கூறியிருக்கின்றனர். பிள்ளையான் கொலைக்குழுவினரின் அடாவடித்தனம் அதிகம் காணப்பட்ட பகுதிகளாக வாழைச்சேனை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், பொத்துவில், திரியாய் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மீள் வாக்குப்பதிவினை நடத்துமாறு இவ்வமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் குறைந்தது 13 வாக்குச் சாவடிகள் பிள்ளையான் கொலைக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு 12 - 13 வயதுச் சிறுவர்கள் உட்பட பலர் வாக்களிப்பில் கலந்துகொண்டதாகவும், பலநூற்றுக்கணக்கான போலிவாக்குகள் இக்குழுவினரால் இடப்பட்டதை தாம் நேரில் பார்த்ததாகவும் இவ்வமைப்பு தெரிவித்திருக்கிறது. பொலீஸார் எவரும் சமூகமளித்திருக்காத இவ்வாக்குச் சாவடிகளில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களே வாக்குச் சாவடியினை நடத்தியதை தாம் கண்டதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். பொத்துவில் பகுதியில் பிள்ளையான் கொலைக்குழுவினரால ஆக்கிரமிக்கப்பட்ட வாக்குச் சாவடி விபரங்கள், 42 கோரைகலப்பு ஷக்தி வித்தியாலயம், விநாயகபுரம் 48 ஏ கே கல்லியந்தீவு வடிவேல் வித்தியாலயம், திருக்கோவில் 4 50 ஏ கே காஞ்சிரங்குடா அரசு தமிழ்க் கலவன் பாடசாலை, தம்பிலுவில் 51 ஏ கே தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில், அறை 1 52 ஏ கே தம்பிலுவில் மத்திய கல்லூரி, தம்பிலுவில் 53 ஏ கே தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், அறை 2 54 ஏ கே தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம், தம்பிலுவில் 70 ஏ கே ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம், ஆலையடிவேம்பு 71 ஏ கே சிறி ராமக்கிரிஷ்ணா மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று, அறை 1 72 ஏ கே சிறி ராமக்கிரிஷ்ணா மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று, அறை 2 73 ஏ கே அக்கரைப்பற்று ராமகிரிஷ்ண மிஷன் பாடசாலை, அக்கரைப்பற்று 74 ஏ கே அக்கரைப்பற்று அஸ் சிபாயா வித்தியாலயம், ஜமத் அலிம் நகர்
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, வைகாசி 2008 படுவான்கரையில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களிடம் கட்டாய ஆட்சேர்ப்பினை நடத்தும் பிள்ளையான் கொலைக்குழு படுவான்கரையில் அண்மையில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களிலிருந்து வீட்டிற்கு தலா ஒருவரை தமது கொலைக்குழுவில் இணைக்கும் செயற்பாடுகளில் பிள்ளையான் குழு இறங்கியிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மையில் நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் பிள்ளையான் கொலைக்குழு சார்பில் போட்டியிட்டு வென்ற கூலிகள் துப்பாக்கி முனையில் இவ்வாறான கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் உள்ளூராட்சிச்சபை ஆயுததாரிகள் தம்முடன் இணையாதவிடத்து ஒவ்வொரு குடும்பமும் தலா ஒரு லட்சம் ரூபாய்களைக் கப்பமாகத் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தினைவிட்டு உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள் என்றும் மீளக்குடியமர்ந்த மக்களை மிரட்டிவருகின்றனர். மேலும் வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தமது குழுவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் வற்புறுத்திவரும் இக்கொலைக்குழுவினர், அவ்வாறு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்றும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக பொலீஸாரிடம் பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லையென்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, வைகாசி 2008 துணை ராணுவக்குழுத் தலைவன் கருணா சிறையிலிருந்து விடுதலை, ஆனாலும் பிரித்தானிய குடிவரவுச் சட்ட அதிகாரங்களின் அடிப்படையில் தடுத்துவைப்பு - பிரித்தானியா புலிகளின் தலைமைக்குத் துரோகம் இழைத்து சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து பிரித்தானியாவில் புக முயன்றார் என்கிற குற்றச்சாட்டில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முரளீதரன் தொடர்ந்தும் குடிவரவு அதிகாரத்தின் தடுத்துவைக்கப்பட்டுவருவதாக கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. கடந்த தை மாதம் போலியான பெயரினைப் பாவித்து பிரித்தானியாவுக்குள் நுழைந்ததற்காக கைதுசெய்யப்பட்டு 9 மாதகாலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கருணா தனக்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து வழங்கியது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவே என்று வழக்கில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, வைகாசி 2008 கொலைக்குழு தலைவன் பிள்ளையானின் துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்து தூவிய இலங்கை விமானப்படை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்திகள் கிழக்கின் பலவிடங்களிலும் தூவிச்சென்றதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்திருக்கிறது. புலியின் முகத்தினை இலச்சினையாகக் கொண்ட பல லட்சம் இவ்வாறான துண்டுப் பிரசுரங்கள் கொழும்பில் அரச அச்சகத்தில் அச்சிடப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை நள்ளிரவு முடிவடைந்த பின்னரும் கூட, வியாழன் அதிகாலைவரை விமானப்படை வானூர்திகள் இவற்றினைத் தூவியதாக முறைப்பாடு மேலும் தெரிவிக்கிறது. கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை நேரடியாகச் சென்று மிரட்டிய பிள்ளையான் கொலைக்குழு, அவரைத் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அச்சுருத்தியிருந்த நிலையில் அரசின் துணையுடன் விமானப்படை உலங்குவானூர்திகளை பிள்ளையான் தனது பிரச்சாரத்திற்குப் பாவித்துவருவது இத்தேர்தலில் தமது கொலைக்குழுவின் தலைவன் எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதில் ஆளும் கட்சி உறுதியாக இருப்பது தெரிகிறது என்று கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, வைகாசி 2008 "எமக்கு வாக்களிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திப்பீர்கள்" - களுவாஞ்சிக்குடி வாக்காளர்களை அச்சுருத்திய பிள்ளையான் கொலைக்குழு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் பிரதான வேட்பாளரான கொலைக்குழு முக்கியஸ்த்தர் பிள்ளையானுக்கு வாக்களிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திர்ப்பீர்கள் என்று களுவாஞ்சிக்குடி மக்களுக்கு பகிரங்க மிரட்டலினை பிள்ளையான் கொலைக்குழுவினர் இன்று விடுத்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இப்பகுதிமக்கள் தேர்தலில் அதிக ஈடுபாடு காட்டாது விலகியிருந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய இக்கொலைக்குழுவினர், இம்முறை தேர்தல்களில் இதே நிலைப்பாடினை எடுக்க விரும்பினால் அது தமது தலைமையினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கும் என்றும், மக்கள் அவ்வாறு நடந்துகொண்டால் பாரதூரமான விளைவுகளை உங்களுக்குப் பரிசாக வழங்குவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வெறும் 48 வீதமான வாக்குகளே இப்பகுதியில் பதியப்பட்டதாகவும், இவ்வாறு பதியப்பட்ட வாக்குகளில் குறைந்தது 13 வீதமான வாக்குகளை மக்கள் செல்லுபடியற்றதாக்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, வைகாசி 2008 இலக்கத்தகடற்ற வாகனங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிள்ளையான் கொலைக்குழு - சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் முறைப்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே (CAFFE) அமைப்பு இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள உத்தியோகபூர்வ முறைப்பாட்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வேட்பாளரான கொலைக்குழு முக்கியஸ்த்தர் பிள்ளையானும், அவரது ஆதரவாளர்களும் இலக்கத்தகடற்ற வாகனங்களை தமது தேர்தல் முறைகேடுகளுக்காக பாவித்துவருவதாகத் தெரிவித்திருக்கின்றனர். மக்கள் தொடர்ச்சியாக இதுபற்றி பொலீஸாரிடம் முறையிட்டபோதும்கூட, மிகவும் வெளிப்படையாக பிள்ளையான் கொலைக்குழுவினர் இவ்வாறான இலக்கத்தகடற்ற வாகனங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் உட்பட பல தேர்தல் தில்லுமுள்ளுகளில் ஈடுபட்டு வருவதாக இவ்வமைப்பினர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இந்தச் சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் தலைவரான கீர்த்தி தென்னக்கோன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், "அரசுக்குச் சார்பான ஆயுதக் குழுவொன்று இவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதானது இத்தேர்தல்கள் பற்றிய கடுமையான சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான பல திணைக்கள வாகனங்களும், அலுவலகங்களும் அரசுக்குச் சார்பான குழுவொன்றின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் உட்பட ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
  9. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 31, பங்குனி, 2008 மகிந்த கட்சியின் கிழக்கு மாகாணசபை பிரதம வேட்பாளராக கொலைக்குழுத் தலைவன் பிள்ளையான் அறிவிப்பு ராணுவத்தின் பிரதான கொலைக்குழுவின் தலைவரும், தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவின் துணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மகிந்த அரசாங்கத்தின் கட்சியான ஒன்றுபட்ட மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்திருக்கிறது. இதனை இக்கட்சியின் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்தார். கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் தனது வேட்பாளர் பத்திரத்தினை திங்கள் மாலை 3 மணிக்குத் தாக்கல்செய்தார்.
  10. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 26, பங்குனி, 2008 சித்தாண்டி வீட்டுத்திட்டத்தினைத் தடுத்து நிறுத்திய பிள்ளையான் கொலைக்குழு சுவிட்ஸர்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் சித்தாண்டியில் அமைக்கப்படவிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை பிள்ளையான் கொலைக்குழு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்று இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர். இந்த இரு அரசு சாரா அமைப்புக்களால் நிர்மாணிக்கப்படவிருந்த குறைந்த வருமானம் கொண்ட சுமார் 375 குடும்பங்களுக்கான வீடுகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி இலங்கை ரூபாய்களில் 750,000 என்பது குறிப்பிடத் தக்கது. மகிந்த அரசின் எந்த உதவிகளும் இன்றி சுவிட்ஸர்லாந்து மக்களின் உதவியோடு நிர்மாணிக்கப்படவிருந்த இவ்வீட்டுத் திட்டத்திற்கான திட்டமிடல், வடிவமைப்பு, பொறியலாளர்கள், கட்டுமானப் பொருட்கள், உபகரணங்கள் அனைத்துமே இந்த இரு அரசுசாரா நிறுவனங்களினாலேயே வழங்கப்படவிருந்தது. அத்துடன், கட்டட நிர்மானத்தில் அவ்வீட்டிற்கான எதிர்கால உரிமையாளர்களே ஈடுபடப்போவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தினை தடுத்து நிறுத்தியிருக்கும் பிள்ளையான் கொலைக்குழு இத்திட்டம் தமக்கூடாகவே நடைபெறவேண்டுமென்றும், கட்டுமானப் பொருட்கள் முதல் தொழிலாளர்வரை தம்மாலேயே வழங்கப்படும் என்றும், அதற்கான நிதியினைத் தம்மிடமே தரவேண்டும் என்றும் விடாப்பிடியாக நிபந்தனை விதித்து மறுத்துவிட்டிருக்கிறது. எற்கனவே தளவாய்ப்பகுதிய்ல் இவ்வாறான வீட்டுத் திட்டமொன்றினை தமக்குக் கப்பம் தரவேண்டும் என்று பிள்ளையான் குழு வற்புறுத்தியதால் அதிகாரிகள் நிறுத்திவைத்திருப்பதும் தெரிந்ததே.
  11. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10, பங்குனி, 2008 50 வீதமான வாக்காளர்களே வாக்களிப்பில் பங்கேற்பு, துணை ராணுவக் கூலிகள் தேர்தலில் அட்டகாசம் மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் மிக குறைந்தளவிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டதாக பிற்பகல்வரை வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், கிராமப் புறங்களில் சுமார் 50 வீதமான வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீனத் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்திற்கு மத்தியிலும் இத்தேர்தல்களில் பரவலான வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. கிராமப்புறங்களில் பலரை தமது வாகனங்களில் வாக்குச் சாவடிகளுக்கு பிள்ளையான் கொலைக்குழுவினர் பலவந்தமாக ஏற்றிச் சென்றதை பலரும் பார்த்திருக்கின்றனர். முஸ்லிம்களுக்கெதிரான கடுமையான பிரச்சாரத்தினை முன்னெடுத்துவரும் பிள்ளையான் கொலைக்குழுவினர், தமிழர்கள் தமக்கு வாக்களிக்காத பட்சத்தில் முஸ்லீம்களிடம் அதிகாரம் சிக்கிவிடும் என்றும் கூறிவருகின்றனர். வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைப் பலவந்தமாக தமக்கு வாக்களிக்கும்படி பிள்ளையான் கொலைக்குழுவினர் வாக்குச் சாவடிகளுக்கு இழுத்துவந்ததாக மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர். வந்தாறுமூலை, சித்தாண்டி, பேத்தாழை, கல்மடு, கும்புறுமூலை மற்றும் கல்குடா ஆகிய வாக்குச் சாவடிகளில் அதிகளவான வாக்குமோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்க் கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறாது சில இடங்களில் பிள்ளையான் கொலைக் கூலிகளும் பொலீஸாருடன் வாக்குச் சாவடிகளின் அருகில் நின்றதாகவும், பலர் அடையாள அட்டையின்றியே வக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. காலை 7 மணியிலிருந்து 9:30 மணிவரை அடையாள அட்டைகளைப் பரிசோதித்த பொலிஸார் அதன்பின்னர் அவற்றினைப் பரிசோதிப்பதைத் நிறுத்திவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி, கறுவாக்கேணி ஆகிய வாக்குச் சாவடிகளுக்கு பிள்ளையான் கொலைக்குழுவினரே வாக்காளர்களைத் தமது வாகனங்களில் ஏற்றிவந்து தமக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையான் குழுவினர் மக்களை ஆயுதமுனையில் பயமுறுத்தி தமக்கே வாக்களிக்குமாறு பல வாக்குச் சாவடிகளில் நிலகொண்டிருந்ததாகவும், இதனால் தமக்கு ஆதரவானவர்கள்கூட பிள்ளையான் குழுவுக்கே வாக்களித்ததாக இன்னொரு துணை ராணுவக் குழுவான ஈ பி டி பி குற்றஞ்சாட்டியிருக்கிறது. வெள்ளைநிற இலக்கத்தகடற்ற வான்களில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினரே இவ்வாறான அச்சமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஈ பி டி பி துணைக்குழு முறைப்பாடு செய்திருக்கிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 09, பங்குனி, 2008 "எனக்கு வாக்களியுங்கள், இல்லையேல் உங்கள் பிள்ளைகளைப் பலவந்தமாக எமது குழுவில் இணைப்போம்" பிள்ளையான் கொலைக்குழு முக்கியஸ்த்தர் பகிரங்க மிரட்டல் பிள்ளையான் கொலைக்குழுவின் முக்கியஸ்த்தரும் வந்தாறுமூலையில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வருபவருமான இராசையா சதீஷ்குமார் என்பவர் அப்பகுதி மக்கள் கட்டாயம் தனக்கே வாக்களிக்கவேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் அப்பகுதியிலுள்ள குடும்பங்களில் இருந்து கட்டாயம் வீட்டிற்கு ஒரு பிள்ளையென்று தான் கடத்தப்போவதாக பகிரங்க அச்சுருத்தலினை விடுத்திருக்கிறார் என்று வந்தாறுமூலை மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வந்தாறுமூலையினையும் உப்போடைப் பகுதியினையும் இணைக்கும் பாதையினைத் தான் நிரந்தரமாக மூடிவிடப்போவதாகவும் மிரட்டியுள்ள இவர், இத்தேர்தலில் தனக்கு வாக்களிப்பதைத் தவிர அம்மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லையென்று கூறியிருக்கிறார். ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட புலிகள் ராசையா சதீஷ்குமார் எனும் இக்கொலைக்குழு முக்கியஸ்த்தரின் பெயரினை குறித்து விபரங்களை வெளியிட்டிருந்ததுடன் இவரால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட பலரின் விபரங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  13. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 04, பங்குனி, 2008 காணாமல்ப்போன தமிழர்களின் வாக்கு அட்டைகளைச் சேகரித்துவரும் பிள்ளையான் கொலைக்குழு பிள்ளையான் கொலைக்குழுவைச் சேர்ந்த ஆயுததாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலகிராமங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களின் வீடுகளில் இருந்து காணாமற்போன, மரணித்த, வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் வாக்கு அட்டைகளைப் பலவந்தமாக பறிக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்று மக்கள் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர். மக்களின் வீடுகளுக்குச் சென்ற இக் கொலைக்குழுவினர் அவ்வீடுகளில் இருக்கும் மக்களது விபரங்களைத் தருமாறு வற்புறுத்தி வருவதுடன், அவர்களிடமிருக்கும் வாக்காளர் அட்டைகளையும் பறித்தெடுப்பதில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தவர்களுக்கு மேலதிகமாக வாக்காளர்கள் அட்டைகள் இருக்குமிடத்து அவற்றைப் பறித்தெடுக்கும் இக்கொலைக் குழுவினர், அப்படி மக்கள் தரமறுக்குமிடத்து கொலைசெய்துவிடுவதாக துப்பாக்கிகளைக் காட்டிப் பயமுறுத்தியும் வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர்.. மட்டக்களப்பில் 9 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் 2006 ஆம் ஆண்டு சர்வஜனக் கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சிங்கள ராணுவம் இம்மாவட்டத்தில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையினையடுத்து பலர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காணமல்ப் போயுள்ளார்கள். இவற்றிற்கு மேலதிகமாக பலநூற்றுக்கணக்கானவர்களை சிங்கள ராணுவம் கைதுசெய்தும் வைத்திருக்கிறது. பங்குனி மாதம் 10 ஆம் திகதி தேர்தல்கள் நடைபெறும் என்று முடிவானதையடுத்து இப்பகுதியில் பல அரசியற்கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ராணுவம் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் பற்றித் துருவித் துருவி விசாரிப்பதுடன், அவற்றில் உள்ளவர்கள் பற்றித் தமக்கு அறியத்தருமாறும் வற்புறுத்திவருவதாகத் தெரிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் 101 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட இருப்பதோடு சுமார் 285 வாக்களிப்பு நிலையங்களில் 270,471 வாக்களார்கள் வாக்களிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
  14. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 25, மாசி, 2008 புலிகளின் முன்னாள்ப் போராளிகளை தம்முடன் இணையுமாறு துன்புறுத்திவரும் பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையைக் கைப்பற்றியதையடுத்து, புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி சாதாரண வாழ்வில் ஈடுபட்டுவரும் முன்னாள்ப் போராளிகளை தமது கொலைக்குழுவில் இணையுமாறு பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் வற்புறுத்திவருவதாக இப்போராளிகள் உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களிடம் முறையிட்டிருக்கின்றனர். கடந்தவருடம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பலபகுதிகளை ராணுவம் ஆக்கிரமித்தபோது பலபோராளிகள் வன்னிக்குச் சென்றுவிட்ட நிலையில் இன்னும் சிலர் இப்பகுதியிலேயே இருப்பதாகத் தீர்மானித்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்தும் இப்பகுதியில் வாழ முடிவெடுத்த பல முன்னாள்ப் போராளிகள் திருமணம் முடித்து பொதுவாழ்க்கைக்கும் திரும்பியிருந்தனர். கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவ்வாறான முன்னாள்ப் போராளிகளை பிள்ளையான் கொலைக்குழுவினர் பலவந்தமாக தமது கொலைக்குழுவில் இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இவ்வாறு தம்முடன் இணையாத முன்னாள்ப் போராளிகள் பற்றி ராணுவத்திற்கு தகவல் வழங்குவோம், அதன்பின்னர் உங்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயமுறுத்தியே இப்போராளிகளை பிள்ளையான் கொலைக்குழுவினர் தம்முடன் இணைத்துவருவதாக இப்போராளிகள் பொலீஸாரிடமும் மனிதவுரிமை அமைப்புக்களிடம் புகார் அளித்துள்ளனர்.
  15. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை 2008 "பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, மார்கழி 2007 பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி அரசுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொள்ளச் செய்த கொலைப்படைக் கூலி பிள்ளையான் தமிழினக் கொலையாளியும், அவனது வேட்டை நாயும் இலங்கை ராணுவத்தின் கொலைப்படையாகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் கதிரவெளி மற்றும் வாகரைப் பகுதிகளில் இருந்து ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த மக்களை ஆயுதமுனையில் மிரட்டி மட்டக்களப்பு நகருக்கு இழுத்துவந்து அரசுக்கும் ராணுவத்திற்கும் ஆதரவான பேரணியில் கலந்துகொள்ளச் செய்ததாக அம்மக்கள் தெரிவித்திருக்கின்றனர். கிழக்கின் கொலைக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம் பொலொன்னறுவை, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்குச் சொந்தமான பஸ்களில் பலவந்தமாக ஏற்றி அடைக்கப்பட்ட நூற்றுகணக்கான மக்கள் பிள்ளையான் கொலைப்படையினருடன் செயற்பட்ட விசேட அதிரடிப்படை மற்றும் பொலீஸாரினால் மட்டக்களப்பு நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதேவேளை மட்டக்களப்பு மக்கள் அமைப்புக்களின் சம்மேளனத்தைத் தொடர்புகொண்ட பிள்ளையான், மனிதாபிமான தேவைகளை அரசு வழங்கவேண்டும் என்று கோரும் போராட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கிறோம், ஆகவே உங்கள் அமைப்புக்கள அனைவரையும் மட்டக்களப்பு நிகழ்விற்கு வரச் சொல்லுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. வாகரை மற்றும் கதிரவெளி ஆகிய பகுதிகளில் அரச ராணுவ நடவடிக்கயினால் இடம்பெயர்ந்துவாழும் மக்களுக்கு போதிய நிவாரணங்களை அரசு வழங்கமறுத்துவருவதனால், இதுபற்றியே பிள்ளையான் போராடக் கூப்பிடுவதாக எண்ணிய பல தமிழ் அமைப்புக்களும் இப்பேரணியில் கலதுகொள்வதற்காக வருகை தந்த நிலையில், இறுதிநேரத்தில் அம்மக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கு சார்பான பதாதைகள், சுலோகங்களால் அப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் குழம்பிப் போய் நின்றதாகவும் தெரிகிறது. இப்பேரணியில் கட்டாயப்படுத்திப் பங்குகொள்ள வற்புறுத்தப்பட்ட அரசசாற்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் தம்மை அரசுக்கெதிரான போராட்டம் ஒன்றிற்கு வரச்சொல்லியே அழைத்துவந்ததாகவும், பின்னர் இறுதிநேரத்தில் பிள்ளையான கொலைக்குழு தம்மை அரசுக்கும் ராணுவத்திற்கும் சார்பான சுலோகங்களை எழுப்புமாறு கட்டாயப்படுத்தியதாகவும், மறுத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர். மட்டக்களப்பு நகரில் இருந்து மாவட்ட செயலகம் நோக்கி இழுத்துச்செல்லப்பட்ட பேரணியில் இருந்த மக்களிடம் "பொதுமக்கள்" எனுன் பெயரில் பிள்ளையானினால் தயாரிக்கப்பட்ட "தொப்பிகல பகுதியினை புலிகளிடம் இருந்து மீட்டதற்காக வீரம் மிக்க ராணுவத்திற்கும், எமது ஜனாதிபதிக்கும் எமது உளமார்ந்த நன்றியையும், பாராட்டுதலினையும் தெரிவிக்கிறோம்" என்கிற தலைப்பில் மகஜர் ஒன்று வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு செயலாளரிடம் வழங்கப்பட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், அரசினால் வாகரை யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணத்தை கூட்டமைப்பு உறுப்பினர்களே தடுத்துவருவதாகவும் இம்மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. பிள்ளையான் கொலைக்கும்பலின் பிரதான கொலைஞர்களான ஜெயம் மற்றும் வைரவன் ஆகிய இருவரின் தலைமையில் இழுத்துச் செல்லப்பட்ட இப்பேரணியில் கலந்துகொண்ட மக்களிடம் புலிகளுக்கெதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கெதிராகவும் சுலோகங்களை உரக்கக் கூவுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மக்களும், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முறையிட்டிருக்கின்றனர். பல பகுதிகளிலிருந்து பஸ்களில் இழுத்துவரப்பட்ட பொதுமக்களை கொழும்பு வீதி, திருகோணமலை வீதி, கல்லடியூடாக கல்முனை வீதி ஆகிய வழிகளில் இழுத்துவந்த இக்கொலைக் கும்பல் இறுதியாக மட்டக்களப்பு நகர் நோக்கி பல கிலோமீட்டர்கள் நடத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, கார்த்திகை 2007 பாராளுமன்ற உறுப்பினரின் உறவினரைக் கடத்திச்சென்ற பிள்ளையான் துணைப்படைக் கூலி அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களிக்கவேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுருத்தல் இலங்கை ராணுவத்தின் கொலைப்படையாகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் குழு எனப்படும் கொலைக்கும்பலின் உறுப்பினர்கள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபையின் வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து அவரது மகளின் கணவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிள்ளையான், அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களித்தால் உனது மருமகனைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாக அவர் தெரிவிக்கிறார். களுதாவளையில் , பொலீஸ் பாதுகாப்பிலிருந்த பாரளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு வெளிப்படையாகச் சென்ற இக்குழு அவரது மருமகனைக் கடத்தியதுடன், பொலிஸாரும் இதுபற்றி எதுவித நடவடிக்கையினையும் எடுக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த பொலீஸ் பாதுகாப்பினை முற்றாக விலக்கிக்கொண்டுள்ள அரசாங்கம், அவர்களின் பாதுகாப்பினை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்ற உறுப்பினரின் மருமகனின் பெயர் சஜிதரன் என்றும், அவர் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசுக்கெதிராக வரவுசெலவுத் திட்டத்தில் வாக்களித்தால் கொல்லப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையினை பிள்ளையானே மட்டக்களப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி, அரியநேந்திரன் ஆகியோருக்கு விடுத்ததாகவும், இதன் பின்னரே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலீஸ் பாதுகாப்பினை அரசு நீக்க்கியதாகவும் தெரியவருகிறது.
  18. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, கார்த்திகை 2007 இலங்கை அரசாங்கமே கருணாவுக்கு ராஜதந்திரிகளின் கடவுச்சீட்டை வழங்கியது - சண்டே லீடர் சர்வதேச ராஜதந்திர நியமங்களை மீறி, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்த துணைராணுவக் குழுவின் தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இங்கிலாந்திற்குத் தப்பிப் போவதற்கு போலியான கடவுச்சீட்டினை ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துடன் வழங்க பிரித்தானிய உயர்ஸ்த்தானிகரலாயத்தை இலங்கை பணித்தது என்று சண்டே லீடர் செய்திவெளியிட்டிருக்கிறது. - "இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பணிப்புரையின்பேரில் இந்த ராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டினை சட்டப்படியான இங்கிலாந்து அனுமதி விசாவுடன் கோகில குணவர்த்தன எனும் போலியான பெயரில் வழங்க பிரித்தானிய உயர்ஸ்த்தானிகராலயம் முன்வந்ததாகத் தெரிகிறது". மேலும் இதுபற்றி அப்பத்திரிக்கை கூறுகையில், இங்கிலாந்தில் நடைபெறவிருந்த காலநிலை மாற்ற மாநாடு ஒன்றிற்காக இலங்கை சார்பாக பங்குபற்றும் குழுவினரின் பெயர்ப்பட்டியலை இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலயத்திற்கு அனுப்பிவைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இவர்கள் அனைவருக்கும் ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துடனான கடவுச்சீட்டுக்களை சட்டரீதியான நுழைவு விசாவோடு தயாரிக்குமாறு கேட்டிருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியலிலேயே கருணாவின் போலியான பெயரான "கோகில குணவர்த்தன" எனும் பெயரும் உள்ளடங்கியிருந்தது என்று தெரியவந்திருக்கிறது. குணவர்த்தன என்கிற பெயரோடு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பாவிக்கப்போகும் நபர் சூழல் விவகார அமைச்சரான சம்பிக்க ரணவக்கவின் அமைச்சின் கீழ் பணிபுரிபவர் எனும் அடிப்படியிலேயே அனுப்பப்பட்டிருந்தது. கோகில குணவர்த்தன எனும் போலியான பெயருடன் ராஜதந்திர கடவுச்சீட்டில் பயணம் செய்த கருணா செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் வந்திறங்கியதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதேவேளை கடந்தவாரம் லண்டனில் பொலீஸாரும், குடியேற்ற அமைச்சகத்தின் அதிகாரிகளும் நடத்திய திடீர் சோதனையில் போலியான கடவுச்சீட்டுடன் லண்டன் வந்திருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. கருணாவின் மனைவியும் பிள்ளைகளும் ஏற்கனவே லண்டனிற்கு வந்துவிட்டிருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, கார்த்திகை 2007 கருணா துணைப்படை அலுவலகம் மீது பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் தாக்குதல் கடந்த திங்கள் இரவு, மட்டக்களப்பு நகரில் கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த கருணா துணைப்படைக் கூலிகளின் அலுவலகமான மீனகம் மீது மற்றொரு துணைப்படைக் கூலியான பிள்ளையானின் அடியாட்கள தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் இருக்கும் மீனகம் துணைப்படை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று கருணா துணைப்படைக் கூலிகளை பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் உயிருடன் பிடித்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலினையடுத்து கருணா துணைப்படைக் கூலிகளின் ஏனைய முகாம்களுக்கு விசேட அதிரடிப்படை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினரின் பாதுகாப்பினை வழங்குமாறு அரசு அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. பிள்ளையானின் துணைப்படைக் கூலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று கருணா கூலிகளில் திலீபன் எனப்படும் முக்கியஸ்த்தரும் அடங்குவதாகத் தெரிகிறது. இங்கிலாந்தில் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்ததனால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரனாகிய அரச புலநாய்வுத்துறையின் கூலியான கருணா பற்றிய செய்திகள் கிழக்கில் பரவத் தொடங்கியதையடுத்து, பிள்ளையான் கூலிகள் கருணா குழுமீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி கிழக்கினைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எத்தனிப்பதாகத் தெரியவருகிறது.
  20. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, கார்த்திகை 2007 ஏறாவூர்ப்பகுதியில் கருணா துணைப்படைக்கூலிகளின் ஆயுதமுனைக் கொள்ளைகள் அதிகரிப்பு தனது மோட்டார் வாகனத்தை கருணா துணைப்படைக் கூலிகள் பறித்துச் சென்றதாக சவுக்கடி பகுதியில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர் ஒருவர் பொலீஸில் முறையிட்டுள்ளார். அவ்வாறே, கொம்மாதுறை பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலையான விநாயகர் வித்தியாலயத்தினுள் புகுந்த துணைப்படைக் கூலிகள் அங்கிருந்த தளபாடங்களையும், குறைந்தது 4 லட்சம் ரூபாய்கள் பணத்தையும் திருடிச் சென்றிருப்பதாக பாடசாலை நிர்வாகம் முறையிட்டிருக்கிறது. இப்பகுதியிலிடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களில் சவுக்கடிப் பகுதி கருணா துணைப்படை அலுவலகத்தில் இருந்து இயங்கும் உறுப்பினர்களே ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.
  21. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, புரட்டாதி 2007 கருணா துணைப்படைக் கூலிகளின் துன்புறுத்தல்களுக்கெதிராக மட்டக்களப்பு மீனவர்கள் போராட்டம் மட்டக்களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் குறைந்தது 300 மீனவர்கள் தமது மீன்களை கருணா துணைப்படைக் கூலிகள் மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் செல்வதாகவும், சிலவேளைகளில் பணம் கொடாது பறித்துச் செல்வதாகவும் கூறி, இந்த நடவடிக்கைகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு துணைப்படைக் கூலிகளால் தமது மீன்கள் எடுத்துச் செல்லப்படுவதால் தமது நாளாந்த வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் வாழ்க்கையினை கொண்டுசெல்வது கடிணமானதாக மாறிவருவதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன், துணைப்படைக் கூலிகளின் அச்சுருத்தலினால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும், தமது உயிர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதால், தாம் தொழிலைக் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். துணைப்படைக் கூலிகளால் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் கல்லடியில் அமைந்துள்ள தேசிய மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் தமது முறைப்பாட்டினப் பதிவுசெய்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் மட்டக்களப்பில் மீன்களின் விலை அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தினை அரசு வழங்கும்வரை தாம் மீண்டும் தொழிலுக்குச் செல்லப்போவதில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
  22. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, புரட்டாதி 2007 முன்னாள் துணைப்படையுறுப்பினரைக் கொன்ற கருணா துணைப்படைக் கூலிகள் வவுணதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாப்புல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணிக்கு கருணா துணைப்படைக் குழுவிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவரின் வீட்டிற்குச் சென்ற துணைப்படைக் கூலிகள் அவரை விசாரிக்கவேண்டும் என்று பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முயன்றதாகவும், அவர் பிடிவாதமாக மறுக்கவே தலையில் சுட்டுக் கொன்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி கருணா துணைப்படைக் குழுவில் இணைந்து கொண்டவர் என்றும், குழுவின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினையடுத்து துணைப்படையிலிருந்து விலகி பொதுவாழ்க்கையில் இணைந்தவர் என்றும், திருமணமாகி சில நாட்களிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் தெரிகிறது.
  23. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, ஆவணி 2007 தமக்குள் மோதிக்கொண்ட கருணா துணைப்படைக் கூலிகள் - ஒருவர் பலி திருகோணமலை நகருக்கு வடக்கே 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் சாம்பல்த்தீவு பகுதியில் கருணா துணைப்படைக் குழுவின் இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு துணைப்படைக் கூலி கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் இருவர் காயமடைந்திருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 2:15 மணிக்கு இந்த உள்வீட்டு மோதல் இடம்பெற்றிருக்கிறது. கொல்லப்பட்டவரையும் காயப்பட்டவர்களையும் உப்புவெளிப் பொலிஸார் திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதுடன், இப்பகுதியில் பாதுகாப்பினையும் பலப்படுத்தியிருக்கிறார்கள்.
  24. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2007 பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படை கடந்த திங்கள் மாலை 6:30 மணிக்கு, வாழைச்சேனைப் பகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரர் ச தியாகராஜா அவர்களை கருணா துணைப்படைக் குழுவினர் சுட்டுக்கொன்றதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்தவருடம் ஆடிமாதம் 21 ஆம் திகதி ஜெயனந்தமூர்த்தி மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் மீது கருணா துணைப்படைக்குழுவினர் நடத்திய ஆர் பி ஜி தாக்குதலில் அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியது நினைவிலிருக்கலாம். நேற்றுக் கொல்லப்பட்ட தியாகராஜா 54 வயது நிரம்பியவர் என்பதும், இரு பிள்ளைகளுக்குத் தகப்பன் என்பதும், வாழைச்சேனைக் காகித ஆலையில் வேலைபார்த்து வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
  25. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, ஆடி, 2007 இரு துணைப்படைக் கூலிக் குழுக்களிடையே மோதல் - கொம்மாதுறை ராணுவ முகாமில் சம்பவம் கடந்த புதனன்று, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொம்மாதுறை ராணுவ முகாமில் இருந்து இயங்கிவரும் துணைப்படைக் கூலிக் குழுக்களான கருணா குழுவினருக்கும் ஈ பீ டி பி யினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு கருணா துணைப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதோடு இரு ஈ பி டி பி துணைப்படையுறுப்பினர்கள் காயமடைந்திருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கும் ஒரே துணைப்படைக் கூலிக் குழுவான ஈ பி டி பியினருக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் கருணா துணைப்படைக் கூலிகள் கொம்மாதுறை முகாமினுள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணைப்படைக் கூலிகள் ஈ பி டி பியினரின் செயற்பாடுகளுக்கு தடங்கலாக இருந்து வருகின்றனர். சம்பவ தினம் கொம்மாதுறை முகாமில் ஈ பி டி பியினர் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 5 கருணா துணைப்படைக் கூலிகள் கிர்னேட்டுக்கள் கொண்டும், தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டும் உள்ளிருந்தவர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் சிவஞானம் சுதாகரன் மற்றும் கோவிந்தன் விஷ்ணு ஆகிய ஈ பீ டி பி துணைப்படையினர் காயமடைந்தனர். இவ்விரு துணைப்படையினருக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் இலங்கை ராணுவம், சண்டையினை முடிவிற்குக் கொண்டுவர தாக்குதலாளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே கருணா துணைப்படைக் கூலியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அத்துடன் சண்டை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், காயப்பட்டவர்களை இராணுவம் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றது. மட்டக்களப்பு வாழைச்சேனை நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் ராணுவ முகாம்களில் கொம்மாதுறை ராணுவமுகாமே மிகவும் பெரியது என்பதுடன், இம்முகாமின் இருவேறு பகுதிகளில் இவ்விரு துணைப்படைக் கூலிக்குழுக்களும் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகள் தமது தளங்களை வன்னிக்கு நகர்த்தியிருக்கும் வேளையில், அரசு மட்டக்களப்பில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டு வரும் பின்னணியிலேயே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழுக்களுக்கிடையேயான மோதல் வெடித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களை கருணா துணைப்படைக் கூலிகள் கிழக்கில் தடைசெய்துள்ள நிலையில், கருணா குழுவும் ஈ பி டி பி யினரும் தமது சொந்தப் பிரச்சாரப் பத்திரிக்கைகளை இப்பகுதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக விநியோகித்து வருவது நடக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.