Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. துரோகதின் நாட்காட்டி : நாள் 11, சித்திரை 2004 அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் தென்பகுதிகள் நோக்கி முன்னேறிவரும் புலிகள் அம்பாறை மாவட்டத்தில் கருணாவின் கட்டுப்பாட்டினுள் இருந்த பகுதிகளை புலிகள் சனியிரவு விடுவித்தனர். மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கருணாவின் பிரதான தளமான கஞ்சிகுடிச்சியாறு புலிகளின் அணிகளால் தளபதி ஜனார்த்தனன் தலைமையில் மீட்கப்பட்டது. இதேவேளை புலிகளின் விசேட படையணிகள் மட்டக்களப்பின் தென் மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றிவருவதுடன், அப்பகுதிகளில் தமது நிலைகளைப் பலப்படுத்தியும் வருகின்றன. திருக்கோயில், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்த கருணா குழுவினர் புலிகள் அப்பகுதிநோக்கி முன்னேறியபோது எதுவித எதிர்ப்புமின்றி விலகிச் சென்றதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். தளபதி ஜனார்த்தன் தலைமையிலான படையணி அம்பாறை மாவட்டத்தில் இன்னும் கருணாவின் கீழிருக்கும் போராளிகளை அவரிடமிருந்து விலகிச் செல்லுமாறு அறிவித்து வருகின்றனர்.
  2. துரோகதின் நாட்காட்டி : நாள் 10, சித்திரை 2004 வாகரைப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த புலிகள் சனிக்கிழமை மாலையுடன் வெருகல் ஆற்றிற்கு தெற்கே அமைந்திருந்த வாகரைப் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டின்கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டுவந்துள்ளனர். புலிகளின் ஜெயந்தன் படையணி இப்பகுதியினுள் நுழையும்பொழுது கருணா குழுவினரிடமிருந்து எதுவித எதிர்ப்பும் இருக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வாகரையைத் தமது கட்டுப்பாடின்கீழ் கொண்டுவந்துள்ள புலிகள் அப்பகுதியில் தமது நிலைகளைப் பலப்படுத்திவருவதோடு, பனிச்சங்கேணி கரையோரப்பகுதிகளையும் அதனோடு அண்டிய பிரதேசத்தையும் பலப்படுத்திவருகின்றனர். புலிகளின் ராணுவ நடவடிக்கை தொடங்கிய நாட்களில் அப்பகுதியினை விட்டு வெளியேறிய மக்கள், அப்பகுதி மீட்கப்பட்ட பின்னர் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர். தமிழர் தாயகத்திலிருந்து துரோகி கருணாவை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம் - விடுதலைப் புலிகள் தெரிவிப்பு புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்குவதாக அறிவித்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கெதிரான ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பணிமனை சார்பாக அதன் பேச்சாளர் தயா மாஸ்ட்டர் தெரிவித்தார். புலிகளின் அறிக்கையின் விபரங்கள் வருமாறு, "புலிகளியக்கத்திலிருந்து தனித்துச் செயற்படப்போவதாக அறிவித்திருக்கும் கருணா தலைமைக்கெதிராகவும், மக்களுக்கெதிராகவும் தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.தமிழ்த் தேசியத்திற்கெதிரான சக்திகள் அவரின் பின்னால் நிற்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கருணாவின் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவரும் முகமாக நாம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்திருப்பதோடு கிழக்கில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையினையும், அசெளகரியங்களையும் களைய முயன்றுவருகிறோம். ரத்தம் சிந்துதலையும், உயிரிழப்புக்களையும் எம்மால் முடிந்தவரையில் தவிர்க்கும் முகமாக எமது நடவடிக்கைகள் அமையப்பெற்றிருக்கின்றன. தன்னால் பலவந்தமாக இணைக்கப்பட்ட அப்பாவிச் சிறார்கள் மீண்டும் தமது பெற்றோருடன் இணைவதை கருணா தொடர்ச்சியாகத் தடுத்து வருவதுடன், புலிகளியக்கத்தில் மீள இணையவிரும்பும் போராளிகளையும் தடுத்துவருகிறார். கருணாவின் சுயநலச் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் போராளிகளையும், மக்களையும் பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கிருக்கிறது. ஆகவே, கருணாவை எமது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்திருக்கிறோம். கருணாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த பல போராளிகள் எம்முடன் வந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள். தேவையற்ற இரத்தம் சிந்துதலைத் தடுக்கும் முகமாக இப்போதுவரை கருணாவுடனிருக்கும் ஏனைய போராளிகளையும் அவரை விட்டு விலகி எம்முடன் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் நாசகார துரோகச் செயற்பாடுகளுக்குல் பலியாகும் முன்னம் தமது பிள்ளைகளைப் பெற்றோர் கருணாவிடமிருந்து பிரித்து அழைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்".
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004 கருணா துணை ராணுவக் குழு மீதான நடவடிக்கையினை புலிகளின் "ஜெயந்தன்" படைப்பிரிவே முன்னின்று நடத்தியது புலிகளின் மிகச்சிறந்த தாக்குதல் அணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியே கருணா துணைராணுவக்குழுவுக்கெதிரான பல்முனைத் தாக்குதலை முன்னின்று நடத்தியது. ஜெயந்தன் படையணியின் நடவடிக்கைக்கெதிராக துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர்களான ஜிம் கெலித் தாத்தா மற்றும் ரொபேர்ட் ஆகியோர் நடத்த முயன்ற எதிர்த்தாக்குதல்களை புலிகள் மிகவும் வெற்றிகரமாக முறியடித்து, துணைராணுவக்குழுவுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். மட்டு - அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதி ரமேஷ் மற்றும் ஜெயந்தன் படையணியின் தளபதி ஜெயாந்தன் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெருகல் ஆற்றிலிருந்து மாங்கேணி வரையான நீண்ட கரையோரப் பகுதியினைக் கைப்பற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்துவருகிறது. தளபதி ரமேஷ் புலிகளின் விசேட படையணிகளின் திடீர் தாக்குதல்களில் நிலைகுலைந்துபோன துணைராணுவக் குழுவினர் குறைந்தது எட்டு 120 மி மீ மோட்டார்களுடன் முன்னேறிவந்த புலிகளின் அணிகளிடம் சரணடைந்தனர். ஆரம்பத்தில் கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தளபதி பிரபாவேஇத்தாக்குதல்களில் பாலைச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்ட புலிகளின் கட்டளை மையத்தினை வழிநடத்தினார். புலிகளின் ஜெயந்தன் படையணி பெரும்பாலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் போராளிகளைக் கொண்டே அமைக்கப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தாண்டிக்குளம் - ஓமந்தை நடவடிக்கைகளில் புலிகள் இலங்கை ராணுவத்தின் மிகப் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் நடவடிகையான ஜெயசிக்குருவிற்கு எதிராக ஜெயந்தன் படையணி 1997 இலிருந்து 1999 வரை போரிட்டது. 1999 இறுதிப்பகுதியில் வன்னியின் தென்புறத்தே ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்த சிங்கள ராணுவத்தை தாக்கியழித்து, பின்வாங்கச் செய்ததில் ஜெயந்தன் படையணியே முன்னின்றது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன், சிங்கள ராணுவத்தின் பெருந்தளங்களில் ஒன்றான ஆனையிறவுத் தளம் மீதான புலிகளின் வெற்றிகரமான தாக்குதலிலும் ஜெயந்தன் படையணி கணிசமான பங்கினைச் செலுத்தியிருந்தது. முன்னேறிவரும் புலிகளின் அணிகளுக்கெதிராக எதிர்த்தாக்குதல்களை உப்பாறு மற்றும் கண்டலடி , பனிச்சங்கேணிப் பகுதிகளூடாக நடத்த கருணா துணைராணுவக் குழு முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வாகரை நோக்கி முன்னேற்றம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வெருகல் ஆற்றினைக் கடந்து வாகரை நோக்கி முன்னேறிவருவதாக அப்பகுதியிலிருந்து வாழைச்சேனையை வந்தடைந்த வாகரை வாசிகள் தெரிவித்தனர். விசேட தாக்குதல் அணிகள் தலைமைதாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகளின் தாக்குதல் அணிக்கு பின்புலத்திலிருந்து ஆட்டிலெறிச் சூட்டாதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. கருணா - துணைராணுவக் குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளின்பொழுது, இக்குழுவின் வாகரைப் பொறுப்பாளர் ஜெயம் காயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரையிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பால்ச்சேனைப் பகுதியில் புலிகள் தற்போது தமது நிலைகளை அமைத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணை ராணுவக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம் கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான நடவடிக்கை தொப்டங்கியதிலிருந்து இதுவரையில் 300 இற்கு அதிகமான இளவயதுப் போராளிகள் சண்டையிடாது புலிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் ஆற்றின் தென்பகுதியிலும், வாகரைப்பகுதியிலும் கருணாவினால் பலவந்தமாக நிலைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அணிகளின் தளபதிகளில் ஒருவர் இச்சிறுவர்கள் பற்றி கூறுகையில், "அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டிருக்கிறோம், விரைவில் அனைவரும் அவர்களது வீடுகளுக்குத் திரும்பவிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். இதேவேளை கருணா துணை ராணுவக்குழுவினரால் வாகரைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் செலுத்திகளும் சரணடைந்த போராளிகளால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, வாகரையிலிருந்து 12 கிலோம்மீட்டர்கள் தொலைவில் கடலையண்டி அமைந்திருந்த கருணாவின் பாரிய தளம் ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கதிரவெளிப்பகுதியில் முகாமிட்டிருந்த கருணா துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர் "மார்க்கானின்" நிலைபற்றி இதுவரை தகவல்கள் வரவில்லை. இதேவேளை கருணாவின் சகோதரரான, துணை ராணுவக்குழு முக்கியஸ்த்தர் ரெஜி இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா துணை ராணுவக்குழுவின் வாழைச்சேனைக்கு வடக்கேயான மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பிரதேசத்தின் பொறுப்பாளராக இவர் கருணாவால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதல்களின் பொழுது தப்பிவந்த துணை ராணுவக் குழுவினருடன் இவரும் சேர்ந்து காலையில் வாகரைப் பகுதியை வந்தடைந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடந்த மோதல்களில் புலிகள் தரப்பிலும், துணை ராணுவக் குழு தரப்பிலும் மொத்தமாக எட்டுப்பேர் மரணமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. காயப்பட்ட துணைராணுவக்குழுவினரில் 7 பேர் வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் இருவர் மரணிக்க, மீதிப்பேரை கருணா குழு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ராணுவத்தினரின் உதவியுடன் கொண்டுசென்றதாகவும் வாழைச்சேனை வைத்தியசாலை அதிகாரிகள் கூறினர். இதேவேளை வாகரைப்பகுதியில் நடந்த மோதல்களில் காயப்பட்ட 5 பெண்கள் அடங்கலாக 8 துணை ராணுவக்குழுவினர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, சித்திரை 2004 யாழ்ப்பாண வைத்தியர்களை கருணா குழு விரட்டியதால் மட்டக்களப்பு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களை துணை ராணுவக்குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து பலவந்தமாக விரட்டியதனை அடுத்து ஏனைய வைத்தியர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். ஆறு வைத்திய நிபுணர்கள் அடங்கலாக பதினொரு யாழ்ப்பாணத் தமிழ் வைத்தியர்கள் கருணாகுழுவினரால பலவந்தமாக விரட்டப்பட்டு பொலீஸ் காவலுடன் மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டு வெளியேற்றப்பட்டனர். செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் இவ்வாறு கருணா குழுவினரால விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களை வந்தடைந்தனர். இதேவேளை மட்டக்களப்பு நகரிலிருந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையொன்று கருணா ஆதரவாளர்களால் சூரையாடப்பட்டபின்னர் தாக்கிச் சேதமாக்கப்ப்ட்டதாக மட்டக்களப்பு நகரப் பொலிஸார் பதிவுசெய்திருக்கின்றனர். கருணா குழுவெனும் துணை ராணுவக்குழுவினரின் பிரதேசவாத சுத்திகரிப்பினைக் கடுமையாகச் சாடிய மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் ஒருவர், "கருணா குழுவினரின் மிலேச்சத்தனமான இந்த பிரதேசவாத சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உண்மையிலேயே பாதிக்கப்படப்போவது மட்டக்களப்பு வாழ் மக்களே அன்றி யாழ்ப்பாணத் தமிழர்கள் அல்ல" என்று கூறினார்.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று புலிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் வடபகுதியைச் சேர்ந்த தமிழர்கள் கருணா குழுவின் கொலை மிரட்டலினையடுத்து ஆயிரக்கணக்கில் வெளியேறிவரும் நிலையில், அவர்களை வெளியேற வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது. கருணாவின் முறைகேடான நடத்தைகளுக்காக புலிகளியக்கம் அவரை வெளியேற்றியிருக்கிறது. தனிப்பட்ட ஆளாக இருக்கும் கருணா மட்டக்களப்பு அம்பாறை புலிகள் என்கிற பெயரில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருவதோடு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கெதிரான அரசியல் நிலைப்பாடு உள்ளவர்களை துன்புறுத்தி விரட்டிவரும் கருணா, அம்மக்களின் உடமைகளை அவரது துணை ராணுவக் குழு கொண்டும், இன ஒற்றுமையினைச் சிதைக்கும் சக்திகளின் துணைகொண்டும் சூரையாடி வருகிறார். கருணாவினால் வெளியிடப்படும் எந்த அறிக்கையினையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழினத்தின் ஒரு பகுதியினருக்கெதிராக கருணாவினால் இன்று மேற்கொள்ளப்படும் கட்டாய சொத்துப் பறிமுதல்கள், சொத்தழிப்புக்கள், கடத்தல்கள் ஆகியவை மனித நாகரீகத்திற்கெதிரான மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் என்று நாம் கண்டிக்கிறோம். கருணாவினால் விடுக்கப்படும் எந்த அறிவுருத்தல்களையும் செவிமடுக்கவேண்டாமென்றும், தமது வாழிடங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், வடபகுதித் தமிழர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் அயலவர்கள் அத்தமிழர்களின் பாதுகாப்பில் கவனமெடுக்கவேண்டும் என்றும், உதவிடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். என்றும் அவ்வறிக்கை கோரியது.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களைப் பலவந்தமாக கருணா வெளியேற்றியதையடுத்து மட்டுநகரில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டுக் கிடந்தன மட்டுநகர், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, பாண்டிருப்பு, கல்முனை ஆகியவிடங்களில் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தமிழருக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்படுள்ளன. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களை கருணா 12 மணிநேர அவகாசத்தில் விரட்டியடித்ததையடுத்து பெருமளவு யாழ்ப்பாணத் தமிழர்கள் உயிர் அச்சத்தில் வடக்கு நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்தார்கள். முதல் நாளில் மட்டும் குறைந்தது 5000 யாழ்ப்பாணத் தமிழர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் நோக்கிப் பயணித்ததாக மட்டக்களப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் அறியத் தந்தார். யாழ்ப்பாண தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கல்வியங்காட்டுப்பகுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணத் தமிழருக்குச் சொந்தமான ஆடை நெசவு ஆலையும் மூடப்பட்டிருந்தது. தமக்கு கருணா குழு கொலை அச்சுருத்தல் விடுத்துவருவதால் தாம் வெளியேறுகிறோம் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பொலீஸிடம் கொடுத்த முறையீடுகளைப் பொலீஸார் கண்டுகொள்ளவில்லையென்று அவர்கள் தெரிவித்தனர். பாண்டிருப்பில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்திவந்த தர்மரத்தினம் எனும் வர்த்தகர் அவரது கடையிலிருந்த அனைத்துப் பண்டங்களும் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரும் அவரது குடும்பமும் கடத்திச் செல்லப்பட்டு, "இனிமேல் இங்கிருந்தால் உங்களைக் கொல்வோம்" என்று கருணா குழுவினரால் எச்சரிக்கப்பட்டு உடுத்திருந்த உடையுடன் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு செங்கலடி ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாணத்தமிழர்களுக்குச் சொந்தமான பெருமளவு வீடுகளும், வியாபார நிலையங்களும் கருணா குழுவினராலும், அவர்களது ஆதரவாளர்களாலும் சூரையாடப்பட்டபின்னர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் மீதமிருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து அன்றைய பொழுதுகளைக் கழித்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்ச் 2004 யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டக்களப்பிலிருந்து உடனே வெளியேறுமாறு கருணா அறிவிப்பு இன்று மட்டக்களப்பின் சகலவிடங்களிலிம் இருந்து யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உடனேயே மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு துரோகி கருணா எச்சரித்திருப்பதால் மட்டக்களப்பில் அசாதாரணமான அச்சநிலையும் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கருணா துணை ராணுவக்குழுவுடன் இணைந்து சிங்களப் பொலீஸாரும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை உபயோகித்து யாழ்ப்பாணத்தமிழர்களை 12 மணிநேரத்திற்குள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறுமாறும் அல்லது விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தமிழர்களை கடுமையாக விமர்சித்த துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு நகரின் பலவிடங்களிலும் ஒட்டப்பட்டதோடு, "யாழ்ப்பாணத்தமிழர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிணிகள், சாபக்கேடுகள்" என்றும் விழித்திருந்தன. மட்டு நகரில் பல்லாண்டுகளாக அரச அதிகாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கானோரை சகல அசையும், அசையா சொத்துக்களையும் அப்படியே விட்டு விட்டு வெறும் 500 ரூபாயோடு மட்டும் 12 மணிநேர அவகாசத்தினுள் வெளியேறவேண்டும் என்கிற எச்சரிக்கை நகர் முழுதும் கருணா குழுவினராலும், சிங்களப் பொலீஸாரினாலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்தது.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, மார்ச் 2004 கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பில் காணப்படுகின்றன கருணாவுக்கெதிரான சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பலவிடங்களிலும் காணக்கூடியதாகவிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கருணாகுழுவுக்கு எதுவித உதவிகளையும் செய்யவேண்டாம் என்று கோரும் பல சுவரொட்டிக்களைக் காண முடிந்துள்ளது. பொலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததன்படி பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடமாடி வருவதாகவும், இவர்களே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் விநியோகித்துவருவதாகவும் கூறினர். "பலவிடங்களிலும் வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் வலம்வருவது தெரிகிறது. ஆனாலும், கருணாகுழுவுக்கெதிரான நடவடிக்கைகளை அவர்கள் உடனேயே ஆரம்பிப்பார்களா என்று சொல்லத் தெரியவில்லை" என்று மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மார்ச் 2004 கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு கருணாவின் துரோகத்தனம் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் புலிகள் கருணாவின் முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாணப் போராளிகளுக்கும் பிரிவுத் தலைவர்களுக்கும் புலிகள் விளக்கம் அளித்துள்ளனர். "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "தனது முறைகேடுகளுக்கான தண்டனைகளுக்குப் பயந்தே கருணா வன்னிக்குச் செல்லாது தேசியத் தலைமை பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் மிகவும் தவறான பிரச்சாரத்தை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்". "கருணா எனும் துரோகிக்கெதிரான தண்டனை நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரும் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கெதிரான துரோகியாகவே கருதப்படுவீர்கள். தேசியத் தலைமைக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்பாடு எடுத்து இயக்கத்தினுள் சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அதனை நினைவிலிருத்தி, தமது அறியாமையினால் இதுவரை கருணாவுக்கு ஆதரவாக இருப்பின், உடனடியாக அவரிடமிருந்து தூர விலகி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்". என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. புலிகளின் அறிக்கையின் முழு வடிவமும் இதோ. "அன்பிற்குறிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரிவுத் தலைவர்களே, போராளிகளே" "கருணாவின் முறைகேடான நடத்தைகள் எமது மண்ணிற்கும் மாவீரர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ள நீங்கள், சரியான பாதையினைத் தெரிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தனது முறைகேடுகளை மூடிமறைப்பதற்காக கருணா பிரதேசவாதம் எனும் நஞ்சினைக் கையிலெடுத்திருப்பதோடு, அழிவினைத் தரும் யுத்தம் ஒன்றிற்குள் மொத்த தமிழினத்தையும் தள்ளியிருக்கிறார்" "தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்". "மீனகத்தில் சில போராளிகள் முன்னிலையிலும், சில பொதுமக்கள் முன்னிலையிலும் தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாகவும், இனிமேல் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவராக இயங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தேசியத் தலைமைக்கு தமது விசுவாசத்தினைக் காட்டும் உறுதிமொழியினை பல்லாண்டுகளாக மாவீரரகளும், போராளிகளும் எடுத்துவரும் வழிமுறையினை இனிமேல் செயற்படுத்தப்போவதில்லையென்றும் அறிவித்திருக்கிறார்". "கருணா எமது தேசியக் கொடியினை அவமதித்துள்ளதோடு, உலகெங்கும் தமிழர்களால் வணக்கப்படும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும், உருவ பொம்மையினையும் எரிக்குமாறும் போராளிகளை வற்புறுத்தியிருக்கிறார். தனது அண்மைய செவ்விகளில் தமிழ்த் தேசியத்தை இழிவாகவும், மிகவும் அபத்தமாகவும் பேசிவருகிறார். தனது நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த எதிரிகளுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் மிக நெருக்கமான சிநேகத்தை அவர் இப்போது கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் பத்திரிக்கைகளைக் கொழுத்தியும் முற்றாகத் தடைசெய்தும் தனது துரோகத்தனத்தினை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களிடமிருந்து மறைக்க கருணா முயன்று வருகிறார்". "மேற்சொன்ன முறைகேடுகள் எமது இயக்கக் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணானது என்பதால் இவற்றுக்குச் சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. எமது தலைவரால் கருணாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பினை கருணா உதாசீனம் செய்திருக்கிறார். மட்டக்களப்பு - அம்பாறை மக்களை இல்லாத பிரதேசவாதச் சிந்தனையில் ஆழ்த்திவைத்திருக்கும் கருணா தனது சுகபோக வாழ்வினை அனுபவித்துவருகிறார்". " தனது முறைகேடுகளை மறைக்க கருணா தொடர்ந்தும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுவதை எமது தேசியத் தலைமை இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. மானிடத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் நிற்கும் கருணா, தனது தவறுகளை மறைக்க உங்களைப் பகடைக் காய்களாகவும், கவசமாகவும் பாவிக்கிறார். கருணாவின் சூழ்ச்சிக்கு ஒரு போராளியேனும் பலியாகிவிடக் கூடதெனும் எமது தேசியத் தலைமையின் உண்மையான கரிசணையினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்". " தனது சூழ்ச்சிபற்றித் தெரியாத அப்பாவிப் போராளிகளையும், மக்களையும் பாவித்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் செயற்பட்டுவரும் கருணா எம்மக்களின் விடுதலைக்கெதிரான துரோகிகளோடும், எதிரிகளோடும் கைகோர்த்திருக்கிறார். எமது மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகங்களும், குருதியும் கருணாவினால் இன்று கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது. எமது தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றும் முடிவினை நாம் எடுத்திருக்கிறோம்". “எமது போராளிகள் கருணாவின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவரை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் துரோகத்திற்கெதிராக தேசியத்தலைமை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்போர் தேசியத்திற்கெதிரான துரோகிகளாகக் கணிக்கப்படுவர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்கிற உறுதிப்பாடுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதும், உங்களின் பெற்றோர் இதனடிப்படையிலும்தான் உங்களை எம்மோடு இணைத்திருக்கிறார்கள் என்கிற வகையிலும் உண்மையினை அறியது கருணாவுடன் இன்று நிற்கும் போராளிகள் உடனடியாக அவரை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கருணாவை விட்டு வெளியேறும் போராளிகள் தங்களது குடும்பங்களோடு இணைவதற்கான அனுமதியினை எமது தேசியத் தலைவர் வழங்கியிருக்கிறார் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறோம். “எமது வேண்டுகோள்களுக்குப் பின்னர் எந்தவொரு போராளியோ கருணாவின் சூழ்ச்சிகளுக்கும் துரோகத்தனங்களுக்கு ஆதரவாக நிற்பதென்று முடிவெடுத்தால், அவர்களின் முடிவிற்கு அவர்களே பாத்திரவான்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். கருணாவின் துரோகத்திற்கு ஆதரவாக நின்று மரணிக்கும் எந்தவொரு போராளிக்கும் மாவீரருக்கான அந்தஸ்த்து ஒருபோதும் வழங்கப்படமாட்டட்து என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்". “தாயக விடுதலைக்காக இயக்கத்தில் இணைந்த போராளிகள் கருணா எனும் துரோகியினதும், அவரது கொலைக்குழுவினதும் நலத்திற்காக மரணிக்க வேண்டுமா என்பதை ஒருகணம் சிந்தியுங்க்கள். இன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கும் பிரிவுத்தளபதிகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து அவரிடமிருந்து விலகும் முடிவினை உடனடியாக எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சரித்திரத்தில் அவர்கள் மேல் விழவிருக்கும் பழிச்சொல்லிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். “மட்டக்களப்பு - அம்பாறைப் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டச் சரித்திரம் கருணா எனும் இனத்துரோகியினால் களங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்படுவதன் மூலம் கெளரவத்துடனும் தன்மானத்துடனுன் தலைநிமிர்ந்து வாழ்வோம்" துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்ச் 2004 யோசேப் பரராஜசிங்கத்தை தேர்தலில் நிற்கவேண்டாம் என்று மிரட்டிய கருணா துணை ராணுவக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளரான யோசேப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை உடனே நிறுத்துமாறு கருணா துணை ராணுவக்குழு அச்சுருத்தல் விடுத்திருக்கிறது. தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இவ்வாயுதக்குழு மிரட்டியிருக்கிறது.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, மார்ச் 2004 கருணா குழுவின் அடாவடித்தனத்தை கண்டிக்கும் களுவாஞ்சிக்குடி மக்கள் வன்னியிலிருக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கு ஆதரவாகச் செயற்படுவோரை எச்சரித்தும், தேசியத் தலைமையிடமிருந்து தம்மை விலத்திக்கொள்ளுமாறும் கருணா குழு களுதாவளை - களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் விநியோகித்துவரும் துண்டுப் பிரசுரங்களை அப்பகுதிமக்கள் கிழித்தெறிந்துள்ளனர். கிழக்கில் இயங்கிவரும் நாசகார துரோகக் கும்பலின் அழுத்தத்திற்குப் பயந்து தாம் தேசியத் தலைமைக்கெதிரா ஒருபோதும் செயற்படப்போவதில்லை என்றும் இம்மக்கள் கூறியுள்ளனர். மக்களின் செயலினால் ஆத்திரமடைந்த கருணா குழு, சுதா என்னும் முக்கிய உறுப்பினர் தலைமையில் இப்பகுதிக்கு வந்து மக்கள்மேல் தாக்குதலில் ஈடுபட்டுச் சென்றிருக்கிறது. கருணா குழுவின் தேசியத் தலைமைக்கெதிராகச் செயற்படுமாறு கிழக்கு மக்களைக் கோரும் துண்டுப்பிரசுரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆரையம்பதி பகுதியில் பலவிடங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. கருணா குழு தொடர்ச்சியாக இப்பகுதியில் தினக்குரல் பத்திரிக்கையினைத் தடைசெய்து வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களாக இப்பத்திரிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் மக்கள் முன்பாக கருணா குழுவினரால் எரிக்கப்பட்டும், விநியோகஸ்த்தர்கள் துப்பாக்கி முனையில் அச்சுருத்தப்பட்டும் இருக்கும் நிலையில் இப்பத்திரிக்கை சிலவிடங்களில் விநியோகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்திருக்கும் சைக்கிள் திருத்தும் நிலையம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கிறது. கருணா குழுவுக்கு வெளிப்படையான ஆதரவாளராகச் செயற்பட்ட இந்த சைக்கிள் நிலைய உரிமையாளர் பார்த்திருக்க இச்சம்பவம் நடந்திருக்கிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மார்ச் 2004 மட்டக்களப்பு மாகாணத்தைச் சாராத பிற மாவட்ட மாணவர்களின் பாதுகாப்புப் பிரச்சினை மத்தியிலும் திறக்கப்படும் கிழக்குப் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் இரண்டாம் தவணைப் பாடங்கள் ஆரம்பமாகவிருப்பதால் மாணவர்கள் அனைவரையும் உடனடியாக தமது தங்குமிடங்களுக்கும், வாளாகங்களுக்கும் மீளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பல்கலைக் கழகத்தினுள் புகுந்த கருணா குழுவினரால் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயிர் அச்சம் காரணமாக தமது வீடுகளுக்குத் திரும்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள எதனையும் செய்யாது நிர்வாகம் இந்த திடீர் முடிவினை எடுத்திருக்கிறது. தமது உயிருக்கான உத்தரவாதத்தினை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும்வரை தாம் பல்கலைக்கழக நிகழ்வுகளுக்குத் திரும்புவதுபற்றி நினைக்கமுடியாது என்று அம்மாணவர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து கருணா குழுவால் விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய தமிழ் மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை தம்மால் கடமைகளுக்குத் திரும்பமுடியாதென்று கூறியிருக்கின்றனர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராத மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களின் பாதுகாப்புப் பற்றிக் கரிசணை காட்ட விரும்பாத கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தனது செயற்பாடுகளைத் தொடர்வதிலும், பரீட்சைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, மார்ச் 2004 வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் - யோசேப் பரராஜசிங்கம். "நான் எனது தேர்தல் பிரச்சாரங்களை புலிகளின் கட்டளைகளுக்கு இணங்கவே நடத்துவேன். ஒருங்கிணைந்த வடக்குக் கிழக்கு தாயகத்தின் அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர் தேசத்தை உருவாக்கும்வகையில் எனது அரசியல் செயற்பாடு தொடரும். எனது குறிக்கோள்களிலிருந்து விலகி நடக்குமாறு என்னை நிர்ப்பந்தித்தால் நான் இத்தேர்தலில் இருந்து விலக்கிக்கொள்வேன்" என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் கனேடிய தமிழ் வானொலிக்கு செவ்வியளித்தார். . "கடந்த சில தினங்களாக கிழக்கில் தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. நான் எனது நிலையினைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறேன். கருணாவின் பிளவின் பின்னர் இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அரசுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். என்மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு நான் பதில் வழங்கி வருகிறேன். தந்தை செல்வாவின் வழியில் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்யும் நான் ஒருபோதும் அந்த வழியினை விட்டு விலகி அரசுக்குச் சார்பான நிலையினை எடுக்கமாட்டேன் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் எனது அசைக்கமுடியாத நிலைப்பாட்டினை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் கூறியிருக்கிறேன். என்னால் பிரதேசவாதம் பேசமுடியாதென்பதை என்மீது அழுத்தம் செலுத்துபவர்களுக்கு உறுதிபடக் கூறிவிட்டேன். புலிகளால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கடமை இருக்கிறது, அதனை நான் நிறைவேற்றப் போராடுவேன்". "எங்களை கொக்கட்டிச்சோலைக்கு வரச்சொல்லி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மட்டுமே இனிமேல் பேசவேண்டும், தமிழரின் தாயகம், உரிமைகள் பற்றிப் பேசக்கூடாதென்று நிர்ப்பந்தம் தெரிவித்தார்கள். என்னுடன் வந்த பலர் அதனைப் பயத்துடன் ஏற்றுக்கொண்டபோதும், என்னால் அவர்கள் சொல்வதை ஏற்றுகோள்ளமுடியாதென்று அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் கூறிவிட்டேன். நான் தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்தும் போராடுவேன் என்றும், இணைந்த வடக்குக் கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்". "என்னுடன் இருந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் அவர்கள் சொல்வதற்கு இணங்கியிருக்கலாம். ஆனால், அது அவர்களதும் விருப்பமாக இருந்ததா என்பதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை". "திருகோணமலை தேர்தல் கூட்டத்திற்கு கட்சியின் உப தலைவர் என்கிற வகையில் கலந்துகொள்ளச் சென்றபோது என்னைத் தடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன". "கிழக்கில் எனது நிலைப்பாட்டினை முன்வைத்து நான் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்வேன். அவர்கள் என்னைத் தடுக்கும்வரை இது தொடரும்". "கிழக்கின் மக்களும் அரச அதிகாரிகளும் இணைந்த வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திற்கே ஆதரவாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. அவர்கள் பலருடன் பேசியதிலிருந்து நான் இதனைப் புரிந்துகொண்டேன்". "நான் யாருக்கும் எதிராக அரசியல் செய்யவில்லை, எவரையும் தாக்கிப் பேசவில்லை. தமிழ்த்தேசியம் மீதான எனது விருப்பினால் எனது கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறேன். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசியதனால் இலங்கை ராணுவத்தாலும், உளவுப்பிரிவினராலும் பலமுறை அச்சுருத்தப்பட்டேன்". என்றும் அவர் கூறினார்.
  14. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 17, மார்ச் 2004 அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தினக்குரல் பத்திரிக்கைக்குத் தடைவிதித்த கருணா குழு அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினக்குரல் நாளிதழை விநியோகிப்பதற்கு முற்றான தடையினை கருணா குழு விதித்திருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த இப்பத்திரிகைக் அலுவலகத்திற்குச் சென்ற கருணா குழு ஆயுத தாரிகள், அங்கிருந்த மேலாளரை அச்சுருத்தியதோடு, இனிமேல் பத்திரிக்கை விநியோகிக்கப்பட்டால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.. அத்துடன், இப்பரிக்கையினை கிழக்கில் விநியோகிக்க உதவிவரும் நிறுவனங்களுக்கும் இக்குழுவினால் கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டன. சில தினங்களுக்கு முன்னால் மட்டக்களப்பின் பல இடங்களிலும் கருணா குழுவினரால் கைய்யகப்படுத்தப்பட்ட தினக்குரல் மற்றும் வீரகேசரி நாளிதழ்கள் மக்கள் முன் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன என்பது நினைவுகூறத் தக்கது.
  15. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 16, மார்ச் 2004 பாராளுமன்ற பதவியினை நோக்கிச் செல்லும் கருணா துணை ராணுவக்குழு கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் புதிதாகத் தெரிவாகும் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கருணாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கருணாவின் நெருங்கிய சகாவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கும்போது, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகும் ஒரு உறுப்பினருக்கு அமைச்சர்பதவியொன்றைத் தர புதிய அரசு விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கருணா குழு பாராளுமன்றப் பதவிகளை இலக்குவைத்து சந்திரிக்கா குமாரதுங்கவுடனும், மக்கள் விடுதலை முன்னணியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருக்கிறது. " தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்துத் தேர்தல் மேடைகளில் பேசக்கூடாதென்னும் எமது நிபந்தனையினை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மட்டக்களப்பின் அபிவிருத்திபற்றி மட்டுமே கவனமெடுக்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டார்கள். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கருணா குழுவுக்கும் கிழக்கு மாகாணத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து புதிய அரசாங்கத்தில் பதவிவகிக்க கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கான சட்ட வேலைப்பாடுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கருணா எம்மிடம் தெரிவித்தார்". "மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோள் என்று இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு உறுப்பினர் தெரிவித்தார்". கொழும்பிலிருந்து வெளியாகும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவான பத்திரிக்கை ஒன்று தனது ஆசிரியர்த் தலையங்கத்தில், " சரணடைந்த எமது போலீஸாரில் 600 பேரைக் கொன்று அரந்தலாவையில் எமது துறவிகளைக் கொலைசெய்து. பள்ளிவாசல்களில் தொழுகையிலீடுபட்ட முஸ்லீம்களை நூற்றுக்கணக்கில் வெட்டிக் கொன்று, சிறுவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்த ஒரு கொலைகாரனான கருணாவுடன் அரசியல் பேரம்பேசலில் சுதந்திரக் கட்சியோ, மக்கள் விடுதலை முன்னணியோ ஈடுபடுவது சரியானதா?" என்று கேள்வி கேட்டிருந்தது. ,
  16. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 15, மார்ச் 2004 கருணா குழுவினரிடையே பிளவு தமிழீழத் தேசியத் தலைவருக்கெதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து செய்தி வெளியிட்ட கருணாவினால் மட்டக்களப்பிலிருந்து இயக்கப்படும் இணையத்தளம் ஒன்று ம் ஒன்று தனது செயலுக்காக பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதன் பின்னர் திடீரென்று இயங்காமல்ப் போனது. பலமணிநேர இடைநிறுத்தத்திற்குப் பினர் தற்போது அது மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. கருணாவிற்கு ஆதரவானவர்கள் இதுபற்றிப் பேசும்போது, வெளியிலிருந்து செயற்படும் சிலரால் தமது இணையத்தளம் தாக்கப்பட்டிருக்கிறதென்றும், தற்போது மீண்டும் அது இயங்குவதாகவும் கூறியிருந்தனர். ஆனால், அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் பாடுமீன் எனும் இவ்விணையத்தளத்தினைத் தொடர்புகொண்டபொழுது, இத்தளம் எவராலும் தாக்கப்படவில்லையென்று, இத்தளத்தினை இயக்குபவர்களே தமது தேவைக்காக இடைநிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். கருணாவினால் நடத்தப்பட்ட பாடுமீன் இணையத்தளத்தில் கருணாவை விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரையின் சில வரிகள் இதோ, "எமது பார்வையாளர்களிடம் பாடுமீன் இணையத்தளம் மன்னிப்புக் கேட்கிறது". "தாயகத்தினை மீட்கும் கனவில் மரணித்துக் கல்லறைகளில் தூங்கிக்கொண்டிருக்கும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் மனதிற்கொண்டு, கடந்த சில தினங்களாக எமது அன்பிற்குறிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கெதிராகவும், எமது தேசிஒய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் செய்திவெளியிட்டுவந்தமைக்காக எனது வாசகர்களாகிய உங்களிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கோருகிறேன். "துரோகி கருணா தமிழ்த்தாயின் குரல்வளையினை நசுக்க பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறான். தனது செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்னை எழுதுமாறு கொடுமைப்படுத்தி வருகிறான். இதனை எழுதும்பொழுது அடக்கமுடியாக் கண்ணீருடனும், இக்கடிதத்தினை வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துச் செல்லும்வரையாவது எனது உயிர் என்னிடம் இருக்கவேண்டும் என்ற வேட்கையுடனும் இதனை எழுதுகிறேன்". "தற்போது நடைபெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கருணா தனது துரோக நாடகத்தினை அரங்கேற்றப் பாவித்துவருகிறான். ஆனால், அவனது துரோகத்தினை முறியடிக்க எமது தேசியத் தலைமை துரிதமாகச் செயற்படும் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கருணாவின் துரோகத்தினை இந்த மண் ஒருபோதும் மன்னிக்காது".
  17. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 13, மார்ச் 2004 தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா கையாடினார், தண்டனைக்குப் பயந்தே இயக்கத்திலிருந்து பிரியும் நிலைப்பாட்டினை எடுத்தார் - கரிகாலன் கிழக்குமாகாண அரசியல்த்துறைப் பிரமுகரும், கருணாவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியிருந்த கரிகாலன் வன்னியிலிருந்து அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தினார் என்றும், இந்த நிதிமுறைகேடுகள் பற்றி தலைவர் அறிந்தபோது, அதுபற்றிப் பேசுவதற்கு வன்னிக்குக் கருணாவை அழைத்தபோது தனக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்றஞ்சிய கருணா தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே தாந்தோன்றித்தனமாக பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்தார் என்று தெரிவித்தார். கரிகாலன் மேலும் கூறுகையில் தனது ராணுவ செயற்பாட்டினால் தமிழ்மக்கள் மத்தியிலும், தலைவரின் மனதிலும் இடம்பிடித்த கருணா, சிறிது சிறிதாக தனது சொந்த நலன்கள்பற்றியும், தனது ஆசைகள் பற்றியும் அதிகம் அக்கறை காட்டத்தொடங்கினார். இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக இயக்கத்தின் நிதியினை தனது சொந்த விருப்புகளுக்காகக் கருணா கையாடியபோது தேசியத் தலைமையுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அவர் வந்தார். கருணா தலைவரினால் பெரிதும் நம்பப்பட்டார் என்றும், அவரை மிக உயரிய ஸ்த்தானத்தில் தலைவர் வைத்திருந்தார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். "மிக அண்மைய நாட்களிலேயே கருணா தேசியத் தலைமை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகப் பேசி வந்தார். இயக்கத்திற்கு எதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட ஆரம்பித்த போதே அவர் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்". " எங்களை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, கிழக்கின் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களைக் கருணா செய்யத் தொடங்கினார். நிதித்துறை, உணவுத்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளை தன்னிடம் எடுத்துக்கொண்ட கருணா, தனக்கு விசுவாசமானவர்களை முக்கிய ராணுவப் பொறுப்புக்களில் அமர்த்திக்கொண்டார்". "இந்தக் காலகட்டத்தில் கருணா பெருமளவு நிதியினைக் கையாடுவதை போராளியொருவர் அறிந்துகொண்டார். தனது நிதிக்கையாடல்பற்றி அறிந்துகொண்ட போராளியை கருணா கொல்லமுயன்றபோது, அப்போராளி சமயோசிதமாகத் தப்பி வன்னியை வந்தடைந்து கருணாவின் அனைத்து நிதிக் கையாடல்களையும் தேசியத் தலைமையிடம் அறியத் தந்தார். கருணாவின் நிதிக்கையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்ட அவரது பிரத்தியேக வாகனச் சாரதியும் ஒரு வாரத்திலேயே அவரால் கொல்லப்பட்டார். தனது சாரதி காய்ச்சலால் இறந்துவிட்டதாகக் கருணா கூறியபோதும், அவர் கருணாவினால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதை தளபதிகள் அறிந்துகொண்டார்கள். தனது நிதிக்கையாடல்கள்பற்றி தமிழ்மக்கள் அறிந்துகொண்டபோது கருணா வெட்கித்துப்போனார். ". "கருணாவின் நிதிக்கையாடல்கள், கொலைகள் பற்றி தேசியத் தலைவர் அறிந்துகொண்டபோது, இதுபற்றிப் பேசுவதற்காக அவரை வன்னிக்கு அழைத்தார். தனது முறைகேடுகளுக்காகவும், கொலைகளுக்காகவும் தான் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா, வன்னிக்குச் செல்ல மறுத்ததோடு, தன் சார்பாக ஒரு பிரதிநிதியை வன்னிக்கு அனுப்பிவைத்தார்". "இதே காலத்தில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு அனுப்பிவைத்த கருணா, இந்தவிடயம் தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றதாக மற்றைய தளபதிகளை நம்பவைத்தார். ஆனால், இந்த வழியனுப்பலின் பின்புலத்தில் கருணா மிகவும் திட்டமிட்ட வகையிலேயே தனது பிரிந்துசேலும் துரோகத்தனத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகிறது". "கிழக்கு மாகாண மக்களுக்கிருந்த ஒரே கேள்வியென்னவென்றால், தலைவருக்கு மிக நெருங்கிய தளபதியாகவிருந்த கருணாவினால், அவர் இன்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை ஏன் நேரடியாக தலைவருடன் பேசமுடியாமற்போனது என்பதுதான்". "தனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படக் காத்திருந்த சக்திகளுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கருணாவின் தொடர்பின் மூலம் இயக்கத்தில், கருணாவின் கீழிருந்த ராணுவப் பலம்பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும், இயக்கத்தில் கருணாவின் பங்குபற்றியும் இச்சக்திகள் அறிந்துகொண்டன. கருணாவின் சுயநலத்தையும், அவரது இச்சைகளையும் மூலதனமாகக் கொண்டு, இயக்கத்திலிருந்து இவரைப் பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் இச்சக்திகள் இறங்கின". "பெருமளவு போராளிகளையும் ஆயுதங்களையும் பராமரிப்பதற்கு பெருமளவு பணமும் வளங்களும் தேவை. ஆகவே கருணா தலைமைக்கெதிராக களம் இறங்குவதற்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கக் காத்திருக்கும் சக்திகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. கிழக்கில் கருணாவோடு ராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு சிறிதுநேரத்திலேயே நகர்த்திச் செல்வதற்கு இலங்கை ராணுவம் உதவிவருகிறது" என்றும் அவர் தொடர்ந்து விவரித்தார். .
  18. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 11, மார்ச் 2004 புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையில் நோர்வே தலையிடப்போவதில்லை - எரிக் சொஹெயிம் கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளரிடம் பேசிய சமாதானத் தூதுவர் சொல்ஹெயிம், புலிகளின் உள்வீட்டு விவகாரத்தில் நோர்வே தலையிடாது என்று கூறினார். "பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பிணக்கில் நாம் தலையிடாது இருந்தது போன்றே, புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையிலான பிரச்சினையிலும் நாம் தலையிட விரும்பவில்லை. முதலாவது விடயம் தெற்கின் உள்வீட்டுப் பிரச்சினைபோல, இரண்டாவது விடயம் வடகிழக்கின் உள்வீட்டுப் பிரச்சினை" என்று அவர் கூறினார். தமிழ்ச்செல்வனையும், தளபதி ரமேஷ், கரிகாலன், கெளசல்யன் ஆகியோரையும் சந்தித்துப் பேசிய சொல்ஹெயிம், " நாம் மூன்று விடயங்கள் பற்றிப் பேசினோம். முதலாவது கருணா பிரச்சினை, இரண்டாவது வடக்குக் கிழக்கு மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான சர்வதேச உதவி, மூன்றாவது தேர்தல்கள்" என்று அவர் மேலும் கூறினார். நீங்கள் கருணாவைச் சந்திப்பீர்களா என்று கேட்டபோது, "அவர்களின் உள்வீட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்று சொல்ஹெயிம் கூறினார்.
  19. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 9, மார்ச் மாதம், 2004 கருணா ஆதரவாளர்களால் மட்டக்களப்பில் விநியோகிக்கப்படவிருந்த தினக்குரல் பத்திரிக்கைகள் பறிமுதல் கொழும்பிலிருந்து மட்டக்களப்பில் விநியோகிக்கப்படவென அனுப்பிவைக்கப்பட்ட பிரபல தமிழ் நாளிதழான தினக்குரலின் 3000 பிரதிகள் வாழைச்சேனை, வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் கருணா குழு ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக எடுத்துசேல்லப்படு எரிக்கப்பட்டதாக அப்பத்திரிக்கையின் விநியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர். தினக்குரல் நாளிதழ் ஒரே நேரத்தில் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பிலிருந்து வந்த தகவல்களின்படி வாழைச்சேனைப் பகுதியில் பஸ்ஸில் ஏறிய கருணா ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிக்கைகளை விட்டு விட்டு தினக்குரல் பத்திரிக்கைகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அப்பத்திரிக்கைகளைக் கொண்டுவந்தவர்களை எச்சரித்த கருணாகுழு, இனிமேல் இப்பத்திரிக்கைகள் மட்டக்களப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுருத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். சுதந்திர ஊடக சம்மேளனத்திடம் இச்சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் சில ஜனநாயக அமைப்புக்களும் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர்.
  20. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004 என்னை வீட்டுக்காவலில் புலிகள் வைத்திருப்பதாக கருணா கூறிவருவது முழுப்பொய் - திருகோணமலைத் தளபதி பதுமன் அஷோஷியேட்டட் பிரஸ் எனும் செய்திச் சேவைக்குப் பேட்டியளித்த திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் பதுமன், தன்னை புலிகள் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக துரோகி கருணா கூறிவருவது பொய்யான தகவல் என்றும், நகைப்புக்கிடமானதென்றும் கூறினார். அவர் கிளிநொச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபொழுது பி பி சி செய்திச்சேவைக்கு கருணா கூறிய பொய்களை முற்றாக நிராகரித்தார். இப்பேட்டியின்போது பதுமனுடன், தமிழ்ச்செல்வன், கரிகாலன், ரமேஷ், ராம், கெளசல்யன் ஆகியோரும் உடனிருந்தனர். கருணாவின் துரோக நாடகம்பற்றிக் கருத்துக்கூறிய கிழக்கின் தளபதிகள் கிழக்கில் இருக்கும் போராளிகளை நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் தமிழ்த்தேசிய தலைமைக்கும் , தாயகவிடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்தனர். "எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தனிப்பட்ட துரோகியின் செயல் தமிழ்ச் சமூகத்தினை பிரிக்கவோ, தேசியத்தின் குறிக்கோளினை உடைக்கவோ அனுமதியளிக்கப்போவதில்லை" என்றும் அவர்கள் உறுதிபடக் கூறினர்.
  21. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004 மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயரும் அவரது குழுவும் புலிகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்கள். மட்டு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் மட்டக்களப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான தமிழ்ச்செல்வன், சிறப்புத்தளபதி ரமேஷ் மற்றும் கரிகாலன் ஆகியோரை வன்னியில் சந்தித்தார்கள். கிழக்கிலிருந்து வருகைதந்திருந்த இக்குழுவிற்கு கருணாவை இயக்கத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை ஏற்பட்டதற்கான காரணங்களை தமிழ்ச்செல்வனும் கிழக்கின் தளபதிகளும் எடுத்துரைத்தனர். அவர்கள் மேலும் இதுபற்றிக் கூறுகையில் தனது முறைகேடுகளையும், இச்சைகளையும் மறைப்பதற்காக கருணா மக்களையும் போராட்டத்தினையும் காட்டிக்கொடுத்து, பிரதேசவாதம் எனும் நச்சுவிதையினை தமிழ்ச் சமூகத்தினுள் விதைக்கமுற்படுவதாகவும் கூறினர். தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர்கள், கருணாவுக்கெதிரான நடவடிக்கைகள் கிழக்கின் பொதுமக்களோ, போராளிகளோ எவ்விதத்திலும் பாதிப்படையாவண்ணம் மிக அவதானத்னத்துடன் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். புலிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த ஆயர் தலைமையிலான குழு, இப்பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டது.
  22. 7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... தனது தவறுகளுக்காகவும், முறைகேடான நடத்தைகளுக்காகவும் தலைமையினால் இயக்கதிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சிய கருணா நேரடியாக தலைமையைச் சந்திப்பதைத் தவிர்த்தார் - தளபதி ரமேஷ் ஐ பி சி செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில், தளபதி ரமேஷ் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியே இயங்குவதற்கான முடிவு கருணாவினாலேயே எடுக்கப்பட்டதென்றும், பல முக்கிய தளபதிகளும் பிரமுகர்களும் கூறிய அறிவுரைகளைக் கருணா ஏற்கமறுத்ததாகவும் அவர் கூறினார். இன்று கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலை கருணா எனும் தனிமனிதரால், தனது முறைகேடுகளை மறைப்பதற்காக அவரால் ஆடப்படும் நாடகம் என்றும், இதற்காக அப்பாவிப் போராளிகளையும் கிழக்கு மக்களையும் அவர் பகடைக்காய்களாகப் பாவிக்கப் பின்னிற்கவில்லையென்றும் கூறினார். தனது இந்த முடிவுபற்றி மூத்த தளபதிகளிடனோ, கிழக்குவாழ் மக்களுடனோ கலந்தாலோசிக்காத கருணா, இறுதிவரை இப்பிரச்சனை குறித்து தலைவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் கூறினார். தான் உட்பட, ராம், பிரபா, கெளசல்யன், கரிகாலன், வாமன் ஆகிய பலர் கருணாவின் இந்த முடிவு தொடர்பாக அவருடன் பேசியதாகவும், தேசியத் தலைவருடன் இதுபற்றிப் பேசி நிலைமையினைச் சுமூகமாகத் தீர்த்துவைக்க தாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் கருணா தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். தமது அறிவுரைகளை விடாப்பிடியாக ஏற்கமறுத்த கருணா, தலைமையிடமிருந்து வந்த அனைத்துக் கட்டளைகளையும் ஏற்கமறுத்ததுடன், தனது நடவடிக்கைகளுக்காக தான் இயக்கத்திலிருந்து அகற்றப்படலாம் என்று அவர் அச்சமுற்றிருந்தார் என்றும் கூறினார். "அவர் இப்போது தனது தவறுகளை மறைக்க தமிழர்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்கும் உளரீதியான புரட்டுக்களையும், புனைவுகளையும் கொட்டிவருவதுடன் கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றும் முகமாக மிகவும் தவறாக, துரோகத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்". "இவரது இந்தச் செயற்பாடுகள் அவரை இயக்கத்திலிருந்தும் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேற்றுவதைத் தவிர தலைமைக்கு வேறு எந்த முடிவினையும் விட்டுவைக்கவில்லை". "தனது தவறான நடவடிக்கைகளாலும், முறைகேடான நடத்தைகளினாலும் இயக்கத்திலிருந்து விரட்டப்படலாம் என்று அஞ்சிய கருணா தலைவரை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். புலிகளியக்கத்தின் கட்டுக்கோப்பும், ஒழுக்கமும், தனிமனித ஒழுக்கமும் நீங்கள் அறியாததல்ல. நாம் இயக்கத்தில் இணையும்போதே இக்கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிவோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் தலைமையின் கட்டளைகளை ஏற்கமறுப்பதும், தலைமைக்கெதிராகச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத குற்றமாகும்". "கிழக்குமாகாணத் தமிழர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எமது தேசியத்தலைவர் மீது அளப்பரிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்கள். கிழக்குவாழ் மக்களும் பெருமளவு போராளிகளும் இச்சிக்கல் தொடர்பாகத் தலைவருடன் பேசி சுமூகமான தீர்வொன்றினைப் பெறவே விரும்பினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி தலைவருடன் பேசி இப்பிரச்சினையினைச் சுமூகமாகத் தீர்க்கவே நாம் முயல்கிறோம்". "தலைவர் எமக்கிட்ட கட்டளையின் பிரகாரம் கிழக்கின் மக்களுக்கோ அல்லது போராளிகளுக்கோ எதுவித தீங்கும் ஏற்படாது இச்சிக்கலைத் தீர்ப்போம். கருணா தன் பங்கிற்கு மிலேச்சத்தனமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும் இன்று மக்கள் அவரை விட்டு மிக விரைவாக வெளியேறிவருகிறார்கள்". "கருணா எனும் தனிமனிதரால் ஏற்படுத்தப்பட்ட இந்த துரோக நாடகத்தில் அப்பாவிகளோ போராளிகளோ பாதிக்கப்படாவண்ணம் அவருக்கான தண்டனையினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மிக அவ்தானமாகத் திட்டமிட்டு அதன் சில படிகளை இப்போது முன்னெடுத்துவருகிறோம்". "கருணாவின் துரோக நாடகம்பற்றிய விளக்கத்தினை நாம் கிழக்கு மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இன்று மக்கள் அவரின் உண்மையான முகத்தினைக் கண்டறிந்துவிட்டார்கள். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் கருணாதான் என்பதை ஏற்றுக்கொள்வதோடு, தேசியத் தலைவர்மீதான முழுநம்பிக்கையினையும் வெளிப்படுத்திவருகிறார்கள்". "கிழக்கு மகாணத்திற்கு சரியான பிரதிநித்துவம் தரப்படவில்லை என்று கருணா கூறுவது மிகப்பெரிய பொய். மத்திய குழுவில் முக்கிய அங்கத்தவரான அவர் தலைவருக்கு அடுத்த படியில் உள்ள ஒருவர். அதுமட்டுமல்லாமல் எமது நிர்வாகத்துறையின் தலைவராக இருப்பது புதியவன் எனப்படும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த ஒரு போராளியே. இவர்போன்ற பல கிழக்குமாகாணப் போராளிகள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். கருணா உண்மையிலேயே கிழக்கு மாகாணத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று எண்ணியிருந்தால் ஏன் அவர் இறுதிவரை தலைவருடன் இதுபற்றிக் கலந்துரையாடியிருக்கவில்லை?" "நாம் புலம்பெயர் தமிழருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எமது தலைவரின் கரத்தைப் பலப்படுத்த எமக்கு உற்றதுணையாக இருங்கள். கிழக்கு மாகாண மக்களை எம்முடன் இன்னும் அதிகமாக ஒருங்கிணைத்து எமது இயக்கத்தை நாம் பலப்படுத்துவோம். இந்தப் பிரச்சினையால் நாம் துவண்டுபோகாது எமது தாயகத்தை மீட்டெடுக்கும் உறுதியில் நிலைத்திருப்போம்". என்றும் அவர் மேலும் கூறினார்.
  23. 7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... தனது துரோகத்தினையும், தனது தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்- கரிகாலன் ஐ பி சி தமிழ்ச்சேவைக்கு வன்னியிலிருந்து கரிகாலன் வழங்கிய செவ்வியில் தனது துரோகத்தினையும், தான் விட்ட பல தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான , ஏற்கமுடியாத பொய்களை சர்வதேச செய்திநிறுவனங்களிடம் தெரிவித்து வருகிறார் என்று கூறினார். உலகத் தமிழரின் முன்னால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டு, துரோகியெனும் அடையாளம் சூட்டப்படுவதைத் தடுக்க இவ்வாறான பொய்களைக் கூறி வருகிறார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். கரிகாலம் மேலும் கூறுகையில், கருணாவின் துரோகத்தினால் தம்மீது பூசப்பட்டிருக்கும் இழிச்சொல்லை மிகவிரைவில் துடைத்தழித்துவிட்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்திற்கான தமது அசைக்கமுடியாத ஆதரவினை மீண்டும் நிரூபிப்பார்கள் என்றும் கூறினார். அவர் மேலும் பேசும்பொழுது, தற்போதுவரை கருணாவின் துரோகத்தினை மன்னித்து அவரது தவறுகளை மறந்து ஏற்றுக்கொள்ள தேசியத் தலைவர் தயாராகவே இருக்கிறார் என்றும் கூறினார்.
  24. 7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... துரோகி கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் கருணா எனும் துரோகிக்கெதிரான ராணுவ நடவடிக்கையொன்றினை அவனுக்குக் கீழிருந்த தளபதிகளும் போராளிகளும் திட்டமிட்டு வருகையில், கருணாவின் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய நிலை தொடர்பாக விளக்குவதற்கு அம்மாவட்டங்களின் முக்கிய தளபதி ஒருவர் வன்னியை வந்தடைந்தார். ரமணன் மற்றும் ராம் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வருவதான முடிவினை அவரின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் எடுத்ததனால், கிழக்கினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கமுடியும் என்ற கருணாவின் கனவில் பாரிய இடிவிழுந்திருப்பதாக வன்னியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் தேசியத் தலைவரின் கொடும்பாவியினை எரித்ததுடன், கருணாவை விட்டு விலகிச் சென்ற ஏனைய தளபதிகளினது கொடும்பாவிகளை எரித்தனர். இவ்வாறான தமிழ்த் தேசியத் தலைமைக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்று திருக்கோவில் பிரதேசத்திலும் கருணாவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது. கிழக்குப் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அங்குள்ள நிலைமைபற்றிக் கருத்துக்கூறுகையில் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த கருணா ஆதரவாளர்கள் அங்கிருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கு அச்சுருத்தல் விடுத்ததாகவும், பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாகவும், உயிருக்குப் பயந்து பெருமளவு வடமாகாண மாணவர்கள் பல்கலைக் கழகத்தினைவிட்டு தற்போது வெளியேறிவருவதாகவும் தெரிவித்தார்.
  25. பொல்பொட் எனும் சர்வாதிகாரக் கொலைகாரனுக்கு நிகரானவர் கருணா - கரிகாலன் தெரிவிப்பு "மக்கள்மேல் தொடர்ச்சியாக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பொறுப்பின்றி நடந்துகொள்வாராக இருந்தால், தமிழர்களின் வரலாற்றில் கருணா பொல்பொட் போன்ற சர்வாதிகாரியாகவே பார்க்கப்படுவார்" என்று மட்டக்களப்பிலிருந்து வன்னியை வந்தடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். மேலும், கிழக்கு மாகாணத்தின் புலிகளின் பல முக்கிய தளபதிகளும், பிரமுகர்களும் தலைமையுடன் கிழக்கில் நடந்த விடயங்களை விளக்கும் முகமாக வன்னியினை வந்தடைந்திருக்கிறார்கள். வன்னியில் கருணாவின் எதேச்சாத்திகார முடிவினையும் நடவடிக்கைகளையும் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய கரிகாலன், கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறினார். "புலிகள் இயக்கத்திலிருந்து பிரியும் தனது துரோக எண்ணத்தினை அவர் தானாகவே டுத்துக்கொண்டார். இதுபற்றி அவர் கிழக்கின் தளபதிகளிடமோ, அரசியல்த்துறையினரிடமோ கலந்தாலோசித்திருக்கவில்லை. தனது முடிவினை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கிழக்கின் தளபதிகளையும், முக்கியஸ்த்தர்களையும் பயமுறுத்திவருகிறார், ஆனால் அவரது எண்ணம் நிறைவேறப்போவதில்லை". "இன்று கிழக்கில் எந்தத் தமிழரும் எமது தேசியத்தலைவரின் தலைமையினை நிராகரிக்கப்போவதில்லை. இதை நான் இங்கு உறுதிபடக் கூற விரும்புகிறேன். அண்மையில் கிழக்கில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவரின் படத்தினைத் தாங்கி வந்ததோடு, புலிகளே தமிழர்கள், தமிழர்களே புலிகள் எனும் கோஷத்தினையும் மிகத் தெளிவாக முன்வைத்து தேசியத் த்லைமைக்கான தமது ஆதரவினையும், தாயக விடுதலைக்கான தமது உறுதியாத நிலைப்பாட்டினையும் எடுத்தியம்பியிருந்தார்கள்" என்றும் கூறினார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.