-
Posts
8740 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 30, 2012 படுவான்கரையில் மீளக் குடியேறிவரும் மக்களின் வாழ்வாதாரத்தினைத் தட்டிப் பறிக்கும் கருணா துணைராணுவக் குழு நன்னீர் மீன்பிடியில் தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், படுவான்கரையில் மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது மீன்களை அரசின் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணாவின் சகாக்கள் பறித்துச் செல்வதாக முறைப்பாடு செய்துள்ளனர். சிங்கள ராணுவத்தால் இயக்கப்பட்டுவரும் கருணாவின் துணைக்குழு இப்பகுதியில் மக்கள் பிடிக்கும் மீன்களைக் கருவாடு போடுவதனைத் தடுத்து வருவதாகவும், சந்தையில் குறைந்தது 1,100 ரூபாய்களுக்கு விற்கப்படக் கூடிய கருவாட்டினை தமக்கு மீன்களாகவே வெறும் 50 ரூபாய்களுக்குத் தரவேண்டும் என்று அச்சுருத்திப் பறித்துச் செல்வதாகவும் முறையிடப்பட்டிருக்கிறது. குடும்பிமலையின் அமைவிடம் இலங்கை ராணுவத்தின் ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த 439 குடும்பங்கள் மீண்டும் படுவான்கரையின் பெரிய நுரைச்சோலை மற்றும் சின்ன நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் மீளக் குடியேறியுள்ளன. மீளக்குடியேறிய இம்மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக குடும்பிமலையினை அண்மித்த மீரான்கடவைக்குளம், ஆத்திக் காட்டுக்குளம் ஆகிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு மீளக்குடியேறிய மக்களால் பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள் சந்தைப்பகுதியில் ஓரளவு நல்ல விலைக்கு விற்கப்பட்டு வந்தன. ஆனால், கருணா துணைராணுவக் கொலைக்குழுவினரால் அச்சுருத்தப்பட்டிருக்கும் இம்மக்கள் தமது மீன்களை மிகக் குறைந்த விலைக்கு இவர்களுக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களாலும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்கிற பெயரில் வழங்கப்படும் பணம் கருணா தலைமையிலான துணைராணுவக் குழுவினருக்கே பகிர்ந்தளிக்கப்பட்டுவருவதாக இம்மக்கள் மேலும் கூறுகின்றார்கள். மக்களுக்கான நிதியில் களவடால்களைப் புரியும் கருணாவின் சகாக்களிடம் இதுபற்றிக் கேட்ட அதிகாரிகள் பயமுருத்தலுக்கு ஆளானதோடு, வேறிடங்களுக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மிக அண்மையில் கல்லடிப் பாலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிதியில் தமக்கு ஒரு பங்கு தரப்படவேண்டும் என்று கருணா அதிகாரிகளை வற்புறுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான், ராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ஆதரவுடன் சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டுவருவது நாம் அறிந்ததே.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 28, 2012 மாகாணசபைத் தேர்தல்களில் தமக்குச் சார்பாக தமிழர்களை பயமுறுத்த இனியபாரதியை இறக்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனது கட்சி சார்பாக மக்களை அச்சுருத்தி தனக்கு வாக்களிக்கப் பண்ணுதல் முதல் பல தேர்தல் முறைகேடுகளுக்காக தனது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா துணைராணுவக் கொலைக்குழுவின் முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்பவரை மகிந்த ராஜபக்ஷெ நியமித்திருப்பதாகத் தெரிகிறது. கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி பல கொலைச்சம்பவங்களிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் இலங்கை நீதிமன்றத்திலேயே வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மகிந்தவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்னர் சந்திரநேரு சந்திரகாந்தன் எனும் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாகக் கொலைமிரட்டலினை விடுத்ததற்காக இனியபாரதி மீது கல்முனை நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இனியபாரதிக்கு இருவருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையினை நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம் விதித்திருந்தார். ஆனால், இந்தத் தீர்ப்பு 10 வருடங்களுக்கு தடைசெய்யப்பட்டு வெறும் 25,000 ரூபாய்கள் தண்டப்பணத்துடனும், மக்களை மிரட்டக் கூடாது எனும் நிபந்தனையோடும் இனியபாரதி விடுவிக்கப்பட்டார். மக்களுக்கெதிரான வன்முறைகளான கடத்துதல், சட்டத்திற்குப் புறம்பான வகையில் படுகொலை செய்தல், கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக இனியபாரதியின் பெயர் பல்வேறு மக்களாலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நடத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் கொமிஷனின் முன்னால் தெளிவாக முறையிடப்பட்டிருந்தது. சுமார் 20 பெயர்கள் அடங்கிய முதன்மை மனிதவுரிமை மீறல்க் குற்றவாளிகளில் இனியபாரதியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் 2006 முதல் 2007 காலப்பகுதியில் பல சிறுவர்களையும், பொதுமக்களையும் கடத்திச் சென்றது, படுகொலை புரிந்தது போன்ற குற்றச்செயல்களில் இனியபாரதி ஈடுபட்டிருந்தார் என்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. 2008 மாகாணசபைத் தேர்தல்களில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடனான கட்சிக்கு கிழக்கில் மக்கள் வாக்களிக்குமாறு இனியபாரதி மக்களைக் கொடுமைப்படுத்தியதுடன், பாரிய தேர்தல் கால வன்முறைகளிலும் இறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு புதிதாகத் தேர்தல்கள் வருகிற புரட்டாதி மாதம் நடைபெறவுள்ளதையடுத்து மிகக் கொடூரமான ஆயுததாரியான இனியபாரதியை மீண்டும் கிழக்கில் அரசாங்கம் களமிறக்கியுள்ளது. இனியபாரதியைப் போன்றே, அரசால் முன்னைய தேர்தல்களில் களமிறக்கப்பட்ட பல முன்னாள் துணைக்குழு ஆயுததாரிகளும் இம்முறை தேர்தல்களில் அரசிற்காக வேலைசெய்ய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மவட்ட செயலகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
-
குடும்பிமலையின் அமைவிடமும், புதிதாக அல்லை ஓடை மற்றும் மாவட்டான் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சோதனைச் சாவடிகளும். இனவழிப்பு அரசின் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேரா என்பவன் ஆடி மாதத்திற்கிடையில் இத்திட்டத்தைனைப் பூர்த்தியாக்குவேன் என்று சூளுரைத்திருக்கும் நிலையில், அரசின் மீள்குடியேற்ற, இணக்கப்பாட்டு துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதியிலிருந்து மக்களை ராணுவத்தின் சொற்படி உடனடியாக வெளியேற வேண்டும் என்று வற்புறுத்திவருகிறார். ராணுவத்தால் அமைக்கப்படும் புதிய வீதிகள் இப்பகுதியை அபிவிருத்தி செய்யவே என்று கூறப்பட்டாலும், இவ்வீதிகளை தமிழ் மக்கள் பாவிப்பதை ராணுவம் தடுத்துவருவதாக மக்கள் முறையிட்டிருக்கிறார்கள். மக்களுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளற்ற இப்பகுதியில் மக்கள் கால்நடையாகவே நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கையில், இவ்வீதிகள் ஊடாக ராணுவமும், உல்லாசப் பயணிகளும் சொகுசு வாகனங்களிலும், கனரக டிரக் வண்டிகளிலும் பவணிவருவதாகத் தெரிவிக்கும் மக்கள், இவ்வீதியூடாக நடந்துசெல்வதற்குக் கூட வெலிக்கந்தைப் பகுதியிலுள்ள ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதிபெற்றபின்பே முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அடுத்தபடியாக சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நேரடியாக உதவிவரும் தெற்கின் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்களும் இவ்வீதிகளை பாவித்துவருவதாகத் தெரிகிறது. இரு வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி என்கிற பெயரில் மாவட்டத்தின் எழுவான்கரைப்பகுதியின் பெருமளவு கரையோரக் காணிகளை அபகரித்து, மூலிகைக் காடுகள் உட்பட பாரிய காடழிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இதேவேளை சிங்கள ராணுவத்தினதும், கடற்படையினதும் உதவியுடன் பெருமளவு சிங்கள மீனவர்கள் தமிழ்ப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தொடங்கியிருப்பதுடன், கரையோரக் கிராமங்களான கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மண்முனைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளில் குடியேறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இனவழிப்புப் போரினால் இவ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் இன்றுவரை அகதிமுகாம்களில் வாழ்ந்துவரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் காணிகளில் உல்லாசப்பயண விடுதிகளையும், புத்த தாதுகோபங்களையும் கட்ட அரசிற்கு எங்கிருந்து நிதிவருகிறதென்றும் இம்மக்கள் கேட்கின்றனர். அபிவிருத்தி என்கிற பெயரில் இனவழிப்பு அரசுக்கு பண உதவிகளை வழங்கும் சர்வதேச நாணைய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய முதலீட்டாளர்கள் இதுபற்றிப் பதிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கிழக்கின் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 15, 2012 படுவான்கரையில் சிங்களக் குடியேற்றத்தில் ஈடுபட்டுவரும் ராணுவம், மக்களை ராணுவம் சொல்வதைக் கேட்குமாறு வலியுறுத்தும் கருணா. தமிழர்களின் தாயகப்பகுதியான படுவான்கரையினை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஆக்கிரமித்துக்கொண்ட சிங்கள ராணுவம், இயற்கை மழையினால் செழிப்புற்ற நெல்வயல்ப் பகுதிகளான மீரான் கடவை, நுரைச்சேனை மற்றும் பெரியவெளி ஆகிய கிராமங்களை உல்லாசப் பயணத்துறைக்காக அபிவிருத்திசெய்யப்போவதாக அறிவித்து அப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேறுமாறு பணித்திருக்கிறது. இப்பகுதியில் அபிவிருத்திவேலைகளுக்கென்று தென்பகுதியிலிருந்து சிங்கள வேலையாட்களை வரவழைத்திருக்கும் ராணுவம், தமது கட்டளையினை ஏற்று இதுவரையில் இடம்பெயராதிருக்கும் தமிழர்களை விரட்ட கருணா துணைராணுவக்குழுவினை ஏவிவிட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதிக்கு வீதிகளை புதிதாக அமைத்துவரும் ஆக்கிரமிப்பு ராணுவத்தில் அதிகாரி கேணல் பெரேரா, யுத்தத்தினால் இன்றுவரை இடம்பெயர்ந்து வேறிடங்களில் அல்லற்பட்டுவாழும் தமிழர்களுக்கான நன்னீர் வசதிகள் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளைச் செய்துதர தொடர்ந்தும் மறுத்து வருகிறார் என்று இம்மக்கள் தெரிவிக்கின்றனர். குடும்பிமலைப் பகுதியும், வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பிலிருந்து அதன் அமைவிடமும் இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும் மக்கள் கூறுகையில், தமது வயற்காணிகளை கருணா குழுவின் உதவியுடன் பறித்திருக்கும் இலங்கை ராணுவம் அபிவிருத்தி என்கிற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றம் ஒன்றினை அங்கு உருவாக்கிவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். புலிகளிடமிருந்து 2007 இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடமே சில தமிழர்கள் இப்பகுதியில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அடிப்படை வசதிகளேதுமின்றி நிர்க்கதியாக விடப்பட்ட இம்மக்களுக்கான அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைப்பதை இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ராணுவம் தடுத்துவிட்டது. சில அரச சார்பற்ற நிறுவனங்களால் 2007 இற்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், மரங்களின் கீழ் கொட்டகைகள் அமைத்துமே இம்மக்கள் இன்னமும் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்றில் அமைந்திருக்கும் குடும்பிமலை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரத்திலமைந்திருக்கும் குடும்பிமலை, தன்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் மிகச்செழிப்பான வயற்காணிகளையும், உயர்நிலத்தில் செழித்து வளரக்கூடிய தாவரங்களையும் கொண்டதுடன், தன்னைச்சுற்றி சில நீர்த்தேக்கங்களையும் கொண்ட ஒரு பகுதியாகும். இப்பகுதியைச் சுற்றியிருக்கும் மீரான் ஓடை, நுரைச்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களின் பலநூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வயற்காணிகள் இந்தத் திட்டத்தின்மூலம் பறிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 5000 ஏக்கர்கள் வயற்காணிகளும், குறைந்தது ஆயிரம் ஏக்கர்கள் விளைச்சல் நிலங்களும் சிங்களமயமாக்கப்பட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உல்லாசப் பயணத்துறைக்கான அபிவிருத்தி என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நில அபகரிப்பு உண்மையிலேயே தமிழர்களை கலாசார ரீதியில் இனவழிப்புச் செய்வதனை நோக்கமாகக் கொண்டதென்றும், காணிகளைப் பறிப்பதுடன் நின்றுவிடாத இத்திட்டம், தமிழரின் வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தும் நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்றும் கிழக்கின் கல்விமான்களும் சமூகவியலாளர்களும் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, ஆனி, 2012 கிழக்கு பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு கருணாவால் வலிந்து நியமிக்கப்பட்ட வைத்திய காலாநிதி ஜாபர் - மாணவர் போராட்டம் கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு அரசாங்கத்தினாலும் துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்களைத் தடுக்கும் சக்தி பல்கலைக்கழகத்திற்கு இல்லையென்று அதன் துணைவேந்தர் பேராசிரியர் கே. கோபிந்தராஜா தெரிவித்திருக்கிறார். அண்மையில் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணாவினால் பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் மேற்கொள்ளப்பட்ட நியமனம் ஒன்றினையடுத்து மாணவர்கள் கடந்த மூன்றுநாட்களாக கல்விநடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துவருவது தொடர்பாகப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கல்முனை வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரான வைத்திய கலாநிதி ஜாபர் என்பவரை பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் கருணா பலவந்தமாக நியமித்ததன் விளைவாகவே மாணவரின் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. நிர்வாக சபையின் உறுப்பினராகவிருந்து மரணித்த வணக்கத்திற்குரிய சில்வெஸ்ட்டர் சிறிதரன் எனும் பாதிரியாரின் வெற்றிடத்திற்கே கருணாவினால் ஜாபர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கருணாவின் இந்த தாந்தோன்றித்தனமான நியமனம், பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தினையும், அதன் உணர்வுகளையும் அடக்கியாண்டு கைய்யகப்படுத்தும் கருணவினதும் அவரை வழிநடத்தும் கொழும்பின் நடவடிக்கையே என்று குறிப்பிட்டுள்ள மாணவர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் இப்பல்கலைக் கழகங்களின் சுயாதீனத்தை பெருமளவில் பாதிக்கும் நோக்குடனேயே நடைபெற்றுவருகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர், இந்த நிர்வாக சபைக்கு முழு அதிகாரங்களையும் கொண்ட சிங்களவர் ஒருவரை அரசு நியமித்திருந்தபோதும், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்த நியமனத்தை அரசு செய்யமுடியாமற் போனது என்பது குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைப் போலவே மட்டக்களப்புப் பல்கலைக்கழகமும் தமிழ்த் தேசியத்தின், விடுதலை எழுச்சியின் மைய்யங்களாக இருந்துவருவதால், அவற்றினை தமது அரசியல்மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் மூலம் கட்டுப்படுத்தி, தமிழர்களின் எழுச்சியை, தேசிய உணர்வினைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று அரசாங்கமும், அதன் கூலியான கருணாவும் செயற்பட்டு வருகிறார்கள். புலிகளிடமிருந்து பிரிந்து சென்று அரச ராணுவத்தின் புலநாய்வுத்துறையால் இன்று வழிநடத்தப்படும் துணை ராணுவக் குழுக்களின் தலைவர்களான கருணா , பிள்ளையான் ஆகிய இருவருமே கிழக்குப் பல்கலைக்கழகத்தைத் தத்தமது கட்டுப்பாடினுள் கொண்டுவரப் பகீரதப் பிரயத்தனம் செய்வதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று உப வேந்தராக இருக்கும் பேராசிரியர் கூட கருணாவின் ஆதரவுடன் வந்தவர் தான் என்று கூறும் மாணவர்கள், "அரசியலே பிரதானம் கல்வியெல்லாம் அதன் பிறகுதான்" என்னும் கோட்பாட்டிலேயே கருணா செயற்படுவதாக மேலும் தெரிவித்தனர். மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர், மரணமடைந்த பாதிரியாரின் இடத்திற்கு இன்னொரு தமிழ்ப் பாதிரியாரை நியமிப்பதன் மூலம் 6 தமிழர்கள், 3 முஸ்லீம்கள், 3 சிங்களவர்கள் என்று நிர்வாக சபையில் தமிழரின் பிரதிநித்துத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட முடியும் என்று சிபாரிசு செய்தபோதும், அதனை நிராகரித்தே கருணா முஸ்லீம் இனத்திலிருந்து ஜாபரை நியமித்திருக்கிறார். ஆயரின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்ப் பாதிரியாரே நியமிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்வரைக்கும் தமது போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்புத் தலைவர் டி. கிரிஷ்ணனாத் தெரிவித்தார். ஆனால், கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்நியமனத்தில் எந்த மாற்றத்திற்கும் இடமில்லையென்று அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்பொள்ளா கூறியிருக்கிறார்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆனி, 2012 அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சிங்களமயமாக்கும் கடமையில் அமர்த்தப்பட்டிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் அமைந்திருக்கும் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அபகரிக்கும் அரசின் திட்டத்திற்கு துணைராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றை ராணுவம் பாவித்து வருவதாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு கையகப்படுத்தப்படும் தமிழர்களின் காணிகள் சிங்கள முதலீட்டாளர்களுக்கு ராணுவத்தால் விற்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிற அரசியல்வாதிகளுக்காகவும் இதனைச் செய்துவருவதாக மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவுப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட பகுதியில், காரைதீவு கிராமத்தருகில் கடலோடு இணைந்த காணியொன்று சிறுவர் பூங்கா ஒன்றிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், துணைராணுவக் குழுவொன்றின் பின்புலத்துடன் அப்பகுதி அரசியல்வாதியொருவர் கைய்யகப்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. பிரதேசச் செயலகத்தில் பணியாற்றிவரும் அதிகாரி ஒருவர் இதுபற்றி மேலும் கூறுகையில், உள்ளூர் அதிகாரசபை ஒன்றின் தலைவர் துணைராணுவக் குழுவொன்றின் தலையீட்டூடன் இக்காணியைக் கையகப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் காரைதீவுக் கடலோரத்தில் வாழ்ந்துவந்த மக்கள் வேறிடங்களுக்கு குடிபெயரவேண்டும் என்ற அரசின் கட்டளையினையடுத்து இம்மக்கள் தமது வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இக்காணிகளை துணைராணுவக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் கைய்யகப்படுத்தி ஆக்கிரமிப்பு ராணுவத்துடன் சேர்ந்து சிங்கள முதலீட்டாளர்களுக்கு விற்றுவருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். கருணாவினாலும் பிள்ளையானினாலும் இந்த ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கப்படுவதால், சிலர் இதன் தார்ப்பரியம் தெரியாமல் அவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். காரைதீவு கடற்கரையினை அண்டிய காணியில் அமைக்கப்படவிருந்த உத்தேச சிறுவர் பூங்காவினை அமைக்க சுமார் ஒன்பது லட்சம் ரூபாய்கள் செலவாகும் என்று கணிப்பிடப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் இதன் ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் , உள்ளூர் அரசியல்வாதியொருவரினால் துணை ராணுவக்குழுக்களைக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, மாசி 2015 போற்குற்ற விசாரணைகள் தொடர்பான ஐ நா வின் தீர்மானத்திற்கெதிராக மக்களை கட்டாயப்படுத்தி போராடவைத்த கருணா மற்றும் பிள்ளையான் இலங்கை ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணை ராணுவக் கொலைக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையானின் அடியாட்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சபை தலைவர்களைச் சந்தித்துவந்தனர். இச்சந்திப்பின்போது ஒவ்வொரு தலைவரும் குறைந்தது 150 மக்களை தாம் ஒழுங்குசெய்யும் பேரூந்துகளில் மட்டக்களப்பு நகருக்கு அழைத்துவரும்படி பணிக்கப்பட்டது. இவ்வாறு அழைத்துவரத் தவறும் கிராமசபைத் தலைவர்களின் பதவிகளைத் தாம் பறிக்கப்போவதாகவும் துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் இவர்களை மிரட்டியிருந்தனர். இவ்வாறு வற்புறுத்திக் கூட்டிவரப்பட்ட மக்கள் மட்டு இந்துக் கல்லூரியிலிருந்து மணிக்கூட்டுச் சந்தி நோக்கி பேரணியாக அழைத்துவரப்பட்டு நகர் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் தொடர்பாகவும் கடுமையான கண்டனக் கோஷங்களை எழுப்புமாறு பணிக்கப்பட்டனர். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலிருந்து பேரூந்துகளில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான சிங்களவர்களுக்கு மட்டக்களப்பு மங்கள ராம விகாரையின் விகாராதிபதி சுமனரத்ன தேரர் தலைமை தாங்கிச் சென்றர். அதேவேளை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் பிரதியமைச்சர்கள் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தமது ஆதரவாளர்களை நகருக்குக் கூட்டிவந்ததுடன் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியினை எரித்தும், மனிதவுரிமைச் சபையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். வாகரையில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் மற்றும் காட்டிற்கு விறகிற்காகச் செல்லும் மக்களை அச்சுருத்திய ராணுவத்தினர், ராணுவத் துணைக்குழுக்களால் ஒழுக்ன்குசெய்யப்படும் பேரணியில் கலந்துகொள்ளாதவிடத்து மீன்பிடியினை அனுமதிக்கப்போவதில்லையென்றும், காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்போவதில்லையென்றும் மக்களை அச்சுருத்தியிருக்கின்றனர். இத்தனைக்கும், ஐக்கிய நாடுகள் சபையில் இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென்பதும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கொமிஷன் வழங்கிய அனுசரணையின்படி செயற்படுங்கள் என்கிற கோரிக்கையினை மட்டுமே ஐ நா தீர்மானம் கேட்டுக்கொள்கிறது என்பது தெரிந்தும்கூட, மகிந்த அரசினால் நாட்டில் செயற்கையாக உருவேற்றப்பட்ட சிங்களத் தேசியவாதம் நாட்டினைப் பிரிக்க ஐ நா முயல்வதாகவும், படையினரையும் அரசியல்த் தலைமையினையும் நீதியின்முன் நிறுத்தப்போகிறதென்றும் ஒரு மாயையினை உருவாக்கி பாதிக்கப்பட்ட தமிழருக்கெதிராக தமிழர்களையே போராட வற்புறுத்துகிறதென்று கிழாக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட்ட கிழக்கு வாழ் கல்வியாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார், "கடந்த தசாப்த்தத்தில் இங்கே இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை அவதானித்த ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? போர்க்காலத்தில் இங்கே பணியாற்றிய அரச சார்பில்லாத அமைப்பினர் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சுனாமியின்போதும், கருணாவின் துரோகத்தின்போதும் இங்கே நாட்கணக்கில் வலம்வந்து செய்திகளைச் சேகரித்த வெளிநாட்டு ஊடக அமைப்புக்கள் மக்கள்மீது மனிதவுரிமை மீறல்கள் அரசாங்கத்தினாலும், துணை ராணுவக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது ஏன் அதுபற்றி ச் செய்தி சேகரிக்க வரமுடியாமற்போனது? " என்று கேள்வியெழுப்பினார்.
-
துரோகத்தின் நாட்காட்டி : 15, மாசி 2012 மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்த பிக்குவும், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கருணாவும் மட்டக்களப்பு விகாரையின் பெளத்த குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் 2010 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பில் தமிழர்களுக்கெதிரான கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது உண்ணாவிரத நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவது தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக இந்த பிக்கு தற்பொழுது மீண்டும் உண்ணாவிரதச் சம்பவமொன்றினை ஆரம்பித்துவைத்துள்ளார். மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத் திட்டம் மூலம் மட்டக்களப்பில் அவர்களுக்கு உரிய காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை அரச அதிகாரிகள் வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இது தமிழர்களுக்கு சிங்களவர்களின் காணிகளை பலவந்தமாகக் கொடுக்கும் செயல் என்றும், தமிழ் அதிகாரிகளால் சிங்களவரின் காணிகள் பறிபோகின்றது என்றும், இதனால் மட்டக்களப்பில் அரச திணைக்களங்கள் அனைத்திற்கும் சிங்கள அதிகாரிகளை மட்டுமே நியமிக்கவேண்டும் என்று கோரி இந்தப் பிக்கு புதிய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் குதித்திருக்கிறார். பிக்குவைச் சமாதானப்படுத்தும் முகமாக துணைராணுவக் குழுத்தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணாவை பிக்குவிடம் தூதராக அனுப்பினார் மகிந்த ராஜபக்ஷ. பிக்குவோடு சமரசத்தில் ஈடுபட்ட கருணா அவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இதுபற்றி மகிந்தவிடம் பேசி அவற்றினை நிறைவேற்றுவதாகவும் கூறியபின்னர் பிக்குவும் தனது உண்ணாவிரத மிரட்டலை முடித்துக்கொண்டதாகத் தெரிகிறது. 2010ஆம் ஆண்டில் மங்கள ரஜ மகாவிகாரையின் விகாராதிபதியான இப்பிக்கு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான அரச உயர் பதவிகளுக்கு சிங்களவர்களை அரசு நியமித்திருந்தது. நீதிமன்ற அலுவல்கள், மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகங்கள் ஆகிய முக்கிய மக்கள் சேவைகளுக்கு சிங்கள அதிகாரிகளை மட்டுமே இம்மாவட்டத்தில் பணியில் அமர்த்தவேண்டும் என்று இந்த இனவாதப் பிக்கு 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு சம்மதித்த கணமே அவரது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதென்பது கவனிக்கப்படவேண்டியதொன்று. கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான அதியுயர் பதவி மற்றும் இதர அரச நிர்வாகச் சேவைகளுக்கான உயர் பதவிகளை சிங்கள அதிகாரிகள் அலங்கரித்ததையடுத்து, நடுத்தர மற்றும் கீழ்மட்ட பதவிகளுக்கும் தற்போது சிங்களவர்களை இம்மாவட்டத்தில் அரசு நியமித்து வருகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்த பிக்கு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலினை இந்தப் பிக்குவைக் கொண்டே அரசு நடத்திவருவதாகவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் தெரிவித்துவருகின்றனர். மகிந்த சிந்தனய எனும் சிங்கள இனவாதச் சிந்தனையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கொழும்பின் சிங்கள பெளத்த இனவாத அரசின் ஒரு முகம் என்றும் பரவலாகக் கருதப்படும் இப்பிக்கு, தமிழ் மக்களுக்கெதிரான அநீதியான கோரிக்களைகளை முன்வைத்துவருவதுடன், அரச ராணுவத் துணைப்படையினரின் உதவியோடும், அரச பின்புலத்தோடும் தனது கோரிக்கைகளைத் தடையின்றி நிறைவேற்றிவருவதாக பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : 29, மார்கழி 2011 பிள்ளையானின் சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்தவர்கள் மீது முறக்கொட்டாஞ்சேனை ராணுவம் தாக்குதல் சந்தன மடு ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டுவரும் பிள்ளையானின் சமூகவிரோதச் செயலினைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமது முகாமிற்குச் சமூகமளிக்குமாறு அழைத்த முறக்கோட்டாஞ்சேனை ராணுவம் பிள்ளையானுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கடுமையாக அச்சுருத்தியிருக்கின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டிய ராணுவம், இரு சமூகநலன் செயற்பாட்டாளர்களான 30 வயது நிரம்பிய முத்துப்பிள்ளை நடேசன் மற்றும் 28 வயது நிரம்பிய ரூபன் வேலாயுதம் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது. நடேசனும் ரூபனுன் முன்னாள் புலிகள் இயக்கப்போராளிகள் என்பதும், ரூபன் மிக அண்மையிலேயே ராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே முன்னாள்ப் போராளிகள் என்பதால், சந்தன மடு ஆற்று மண் அகழ்விற்கெதிராக போராடினால் உங்களை மிக இலகுவாகக் கொன்றுவிடுவோம் என்றும் இவர்கள் ராணுவத்தால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். ராணுவத்தால் இவர்கள் இருவரும் தாக்கப்பட்டதை வெளியே கூறினால் கொல்லப்படுவீர்கள் என்கிற எச்சரிக்கையினையும் மீறி இவர்கள் சிவில் மனிதவுரிமை அமைப்பொன்றிடம் முறையிட்டபோதும், அவ்வமைப்பினால் இதுவரை இதுதொடர்பாக எதனையும் செய்யமுடியவில்லை. மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கனிமப்பொருள் மத்திய நிலையம் ஆகியவற்றினல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த மண் அகழ்வினால் சந்தன மடு ஆற்றங்கரைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுவரும் அழிவுகள் பற்றிய அறிவுரைகளையும் மீறி, பிள்ளையானின் கொலைக்குழுவிற்கு இப்பகுதியில் மண் அகழும் அனுமதியை அரசு வழங்கியிருப்பதுடன், இந்த சமூகவிரோதச் செயளுக்கான ராணுவப் பாதுகாப்பினையும் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது. இவ்வாற்றிலிருந்து தொடர்ச்சியாக மண் அகழப்படும் இடத்து, இன்னும் ஒருவருடத்தினுள் ஆறு சுமார் ஒரு கிலோமீட்டர் ஊர்மனைகள் நோக்கி வரும் பாரிய ஆபத்து இருப்பதாக சூழலியல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். சந்தனமடு ஆற்றிலிருந்து மண் அகழ்ந்துவரும் பிள்ளையான் இதில் தலையிட வேண்டாம் என்று உள்ளூர் அதிகார அமைப்புக்களை எச்சரித்திருப்பதனால், இதுதொடர்பாக பேசுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற்கோ எவரும் முன்வரவில்லையென்று மக்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆம் திகதி மக்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை முறக்கொட்டாஞ்சேனை ராணுவமும், ஏறாவூர்ப் பொலீஸாரும் சேர்ந்து அடித்துக் கலைத்தது நினைவிலிருக்கலாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சித்தாண்டி முருகன் ஆலய வன்னியனார் தலைமையில் நடைபெற்றதென்பதோடு, அவர்கள் பிள்ளையான் கொலைக்குழுவினரின் இந்த சமூகவிரோத நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தம்படியும் கோரியிருந்தனர். இவ்வாறான சமூகநலன் போராட்டமொன்றில் ஈடுபட்ட சமூகவியலாளரான கேதீஸ்வரன் தேவராஜா எனும் இளைஞர் ஈ பி டி பி கொலைஞர்களால் யாழ்ப்பாணத்தின் குடத்தனைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். டக்கிளசின் சட்டவிரோத மண் அகழ்வினை ஆதாரங்களோடு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிர்ந்தமைக்காகவே அவர் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, மார்கழி, 2011 மேலும் 3500 ஏக்கர் மேய்ச்சல் நிலம் சிங்களமயமாக்கப்படுகிறது, மெளனமான கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 3500 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தினை உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் தாம் எடுத்துக்கொள்வதாக இலங்கை ராணுவத்தின் மட்டக்களப்புத் தலைமைப் பீடம் அறிவித்திருக்கிறது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இப்பகுதியில் இருந்து தமிழ் கால்நடை விவசாயிகளை உடனடியாக தமது கால்நடைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு ராணுவம் அறிவித்துவருகிறது. சிறந்த மேய்ச்சல் தரையான இப்பகுதி 1978 ஆம் ஆண்டு வர்த்தமாணி வெளியீட்டின்மூலம் தமிழர்கள் தமது கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தமிழர்களின் மேய்ச்சல் நிலத்தினை அபகரித்து நிற்கும் ராணுவம் இப்பகுதியில் தமது பயிற்சித்தளங்களை நிறுவப்போவதாக கூறியிருக்கும் நிலையில், இந்நிலம் சிங்கள விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதோடு இச்சிங்களக் குடியேற்றத்திற்கு ராணுவப் பாதுகாப்பும் வழங்கப்படப்போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட அரச அதிபருக்கும், விவசாய நிவாரண உத்தியோகத்தருக்கும் இதுபற்றி முறைப்பாடு செய்திருக்கின்றனர். மாதவனைக் கண்டம் பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ராணுவம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இப்பகுதிக்குள் எவரும் நுழையக் கூடாதென்று மிரட்டி வருகின்றனர். தமது மேய்ச்சல் நிலங்கள் பறிபோயுள்ளதனால் நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும், துணைராணுவக் குழுத் தலைவனுமாகிய கருணாவின் உதவியாளர் ரவீந்திரனிடம் இதுபற்றி முறையிட்டதாகத் தெரிகிறது. ரவீந்திரன் மக்களின் முறைப்பாடு பற்றி மட்டக்களப்பு ராணுவத்திற்குத் தெரியப்படுத்தியபோது, "ராணுவத் தேவைக்காக இப்பகுதியை நாம் கையகப்படுத்தியிருக்கிறோம்" என்று சொல்லப்படவே அவரும் மெளனித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் , மாதவணைக்கண்டம், மண்திண்டி, மயிலத்தமடு, மொழிவளை ஆகிய நீண்டு செல்லும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் மேய்சால் நிலங்களில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டிருப்பதுகண்டும் மக்கள் செய்வதறியாது நிற்பதாக தெரியவருகிறது. கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் அரசில் இருந்த 1978 ஆம் ஆண்டில் இப்பகுதி முழுவதும் தமிழருக்கான மேய்ச்சல் நிலங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது நினவிலிருக்கலாம். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34689
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, மார்கழி, 2011 சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் பிள்ளையான் கொலைக்குழு, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவம் தாக்குதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்தன மடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியும், செங்கலடிப் பிரதேச சபையின் உறுப்பினருமான நபர் ஒருவருக்கெதிராக இப்பகுதிமக்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். தமக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களைக் கலைப்பதற்கு பிள்ளையான் குழு முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாம் அதிகாரியினையும், ஏறாவூர் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரியையும் துணைக்கு அழைத்திருந்தனர். பிள்ளையானின் உத்தரவின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய ராணுவமும் பொலீஸாரும் அவர்களைக் கலைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சந்தன மடு ஆற்றுப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வினால் தமது நிலம் விரைவில் ஆற்றினால் அடித்துச் செல்லப்படப் போகிறதென்று இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பி வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவரும் கிழக்குமாகாணசபை தலைவர், கொலைக்குழு பிள்ளையான், தொடர்ந்தும் இப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டத்தின்மேல் ராணுவத்தை ஏவிவிட்டு மக்களை அடித்துத் துரத்திய பின்னர் அப்பகுதிக்கு வந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவரை தாம் தமது கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், இன்னொருவர் இப்பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறி தமது மணற்கொள்ளையினை மறைக்கமுயன்றபோதும்கூட, நடப்பதை நன்கு அறிந்துவைத்திருந்த மக்கள் அவர்களின் விளக்கத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகத் தெரிகிறது. ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கி கலைத்த ஒரு சில நாட்களிலேயே பிள்ளையான் மீண்டும் சந்தன மடு ஆற்றிலிருந்து மண் அகழ்வினை ஆரம்பித்துள்ளதாகவும், இதுபற்றி பேசினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மக்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34679
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, மார்கழி, 2011 மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கியமான எல்லைக் கிராமங்களில் ஒன்று சிங்கள மயமாகிறது - உபயம் கருணா பதுளை - செங்கலடி ஏ 5 நெடுஞ்சாலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் முக்கிய தமிழ்க் கிராமம் ஒன்று சிங்கள மயமாகிறது. மங்கள ஆறு எனும் தூய தமிழ்க் கிராமத்திலிருந்து சுமார் 2500 ஏக்கர்கள் கொண்ட பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள வர்த்தகர் ஒருவருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்றப் பிரதியமைச்சராக இருக்கும் துணைராணுவக் குழுத் தலைவர் கருணாவின் தலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழு இப்பகுதியில் அண்மையில் நில அளவையில் ஈடுபட்டதுடன், எல்லைகளையும் நிர்ணயம் செய்திருக்கின்றனர். கடந்த ஒருவாரமாக இந்த நில அளவை, எல்லை நிர்ணய வேலைகள் நடந்துவருகின்றன. தமிழர்களின் முக்கிய நிலப்பரப்பான "மங்கள ஆறு" எனும் இக்கிராமத்திற்கு ஆக்கிரமிப்புச் சிங்கள ராணுவ "மங்கள கம" எனும் சிங்களப் பெயரினைச் சூட்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டில் படுவான்கரை இருந்த பொழுது புலிகளின் முன்னணித் தாக்குதல் பிரிவான ஜெயந்தன் படையணி இக்கிராமத்தில் தனது தளங்களை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இன்று இந்நிலம் சிங்களவர்களால் தமிழ்த் துரோகிகள் துணையுடன் ஆக்கிரமிக்கப்படுவது கண்டு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கிழக்கின் தமிழர்களின் இன்னொரு கிராமமான பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தெவுலாளக்குளம் எனும் கிராமம் சிங்களவர்களால் அரச துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த மேய்ச்சல் நிலமான இப்பகுதியிலிருந்து போரினால் தமிழர்கள் விரட்டப்பட்ட நிலையில், இப்பகுதியில் சிங்களவர்களை அரசு துணைராணுவக்குழுவினரின் உதவியோடு குடியேற்றி வருகிறது. இப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தியும் கால்நடைகளைச் சுட்டுக்கொன்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சிங்களவர்கள் பலமுறை தமிழர்களின் மாடுகளை களவாடிச் செல்வதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் முறையிட்டிருக்கின்றனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34674
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, கார்த்திகை 2011 பிரபல துணைராணுவக் குழு கொலையாளியும், கருணாவின் சகாவுமான ஆயுததாரி இனியபாரதிக்கு தேசத்தின் கெளரவம் எனும் பட்டம் வழங்கிக் கெளரவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இனவாத அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க்குற்றவாளியென்று பிரகடனப்படுத்தப்பட்டவனும், பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், விநாயகபுரம் ஆகிய இடங்களில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் படுகொலைகளைப் புரிந்தவனும், கருணாவின் மிக நெருங்கிய சகாவுமான இனியபாரதி எனப்படும் ஆயுததாரிக்கு "தேசமான்ய" என்றழைக்கப்படும் தேசத்தின் கெளரவம் எனும் விருதினை வழங்கிக் கெளரவித்திருக்கிறது. இனியபாரதி எனும் இந்த ஆயுததாரி கருணா குழுவெனும் துணைராணுவக் குழுவின் மிக முக்கியமானவன் என்பதும், கருணாவின் மிக நெருங்கிய சகாவென்பதும், மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்டத்திற்கான கட்சி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வருபவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. மகிந்த ராஜபக்ஷவின் 66 ஆவது பிறந்த தினத்தினையொட்டி, இம்மாதம் 18 ஆம் திகதி இனியபாரதி எனும் துணைராணுவக் குழுக் கொலையாளிக்கு அம்பாறைமாவட்டம் திருக்கோயிலில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் மகிந்தவுக்காக இயங்கும் அமைப்பொன்று இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்ததுடன், திருக்கோயில் பொலீஸ் நிலைய அதிகாரியும் இந்நிகழ்வில் மகிந்த சார்பாகப் பங்கேற்றிருந்தார். http://2.bp.blogspot.com/-hiPrziFhrrM/U5hMM08fpFI/AAAAAAAA8BM/RY3x-0DkuwI/s1600/unnamed+(3).jpg கடந்த பங்குனி மாதம் 26 அம் திகதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் கொமிஷனிடம் அம்பாறை மாவட்டத்தில் காணாமல்ப்போன தமது உறவுகள் பற்றி முறையிட்டவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது உறவுகளைக் கடத்திச்சென்றதுமுதல் படுகொலை செய்ததுவரை அனைத்துமே இனியபாரதியின் தலைமையின் கீழ்த்தான் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்திருந்தனர். கணவன்மார்கள், மனைவிமார்கள் பிள்ளைகள் என்று பலநூற்றுக்கணக்கானோர் கருணாவின் வழிநடத்துதலில் இனியபாரதியினால் கடத்தப்பட்டு, சித்திரவதைகளின்பின்னர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்கள், உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகிய அனைத்திலுமே இனியபாரதி வாக்குமோசடி, கொலைமிரட்டல், வாக்காளர்களை அச்சுருத்தியது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது, வேட்பாளர்களைப் படுகொலை செய்தது போன்ற பல தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்முனைப்பகுதியில் இனியபாரதியால் நடத்தப்பட்ட நாசகார நடவடிக்கை ஒன்றிற்காக அந்நீதிமன்றம் அவனுக்கு 10 ஆண்டுகாலம் சிறைத்தண்டை விதித்திருந்தது நினவிருக்கலாம். தற்போது இந்த கருணா கொலைக்குழு ஆயுததாரி கொழும்பில் தனியார் பாடசாலையொன்றில் சட்டத்துறையில் பயின்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிற்குறிப்பு : 2019 ஆம் அண்டு மன்னாரில் கேரளாக் கஞ்சா எனும் போதவஸ்த்தின் 160 கிலோவை தனது சொகுசு வண்டியில் கடத்திவந்தவேளை இவனும் இவனது சகாக்கள் இருவரும் பொலீஸாரினால் கைதுசெய்யப்படனர், இவன் அப்போது கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்தவன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2011 மட்டக்களப்பில் 40,000 ஏக்கர்களை சிங்களக் குடியேற்றமாகமாற்றும் அரசு - பிள்ளையான், கருணா துணைராணுவக் குழுக்கள் அமைதியாக ஆமோதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்திருக்கின்ற நல்ல விளைச்சல் நிலங்களான கோரளைப்பற்று வடக்கு, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, செங்கலடி, ஏறவூர்ப்பற்று தெற்கு மற்றும் பட்டிப்பளை ஆகிய இடங்களில் தமிழரின் நிலங்களில் குறைந்தது 40,000 ஏக்கர்களைச் சிங்கள விவசாயிகளுக்காக அரசு தன்வசப்படுத்தியிருக்கிறது. மாவட்ட அரசின் அனுமதியின்றியும், மாகாணசபையின் அனுசரணையின்றியும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழரின் நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் தெரிவித்திருக்கிறார். கிழக்கு மாகாணசபை முதல்வர் பிள்ளையான் இந்தக் குடியேற்றம் குறித்து எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததால் இதுதொடர்பாக தான் அவருக்கு சட்டரீதியான முறைப்பாட்டினை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் ஒரு பிரதியொன்று துணைராணுவக் குழுத்தலைவரும் அரச பிரதியமைச்சருமான கருணாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சிவநேசதுரை சந்திரகாந்தனும், விநாயகமூர்த்தி முரளிதரனும் அரச ராணுவத்தால் இயக்கப்படும் இரு கொலைக்குழுக்களின் தலைவர்கள் என்பதும், அரச அதிகாரத்தில் இரு மட்டங்களில் இருக்கும் இவர்கள் சிங்கள அரசின் பிரதிநிதிகளாகவே செயற்பட்டுவருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. தான் பிள்ளையானிடம் இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர் இதுபற்றி அக்கறைகொள்ளாது இருப்பதாகவும், எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் சிறிது சிறிதாக திட்டமிட்ட சிங்கள மயமாக்கலுக்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதை இவர்கள் இருவரும் மெளனமாக ஆமோதித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 8, ஐப்பசி 2011 கருணாவின் உதவியுடன் மட்டக்களப்பில் அழிக்கப்பட்டுவரும் மூலிகைக் காடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பிரதேசச் செயலகத்திற்கு உட்பட்ட கோரளங்கேணி முதல் பாலையடித் தோனை வரையான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மூலிகைக் காட்டுப் பகுதி நகர்ப்புற அபிவிருத்தி எனும்பெயரில் கருணாவின் துணையுடன் அரசால் அழிக்கப்பட்டுவருவதாக அப்பிரதேச மக்களும், மூலிகைகளைப் பாவித்து வைத்தியத்தில் ஈடுபட்டுவரும் வைத்தியர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். அரிய மூலிகை வகைகளான காக்கணம், மருங்கை, கருவா, பிலாலி, பிலாசா போன்ற பாம்புக்கடி, நாய்க்கடி வைத்தியங்களுக்குப் பாவிக்கப்பட்டுவரும் மரங்களும் இவ்வாறு அழிக்கப்பட்டுவரும் காட்டுப்பகுதிக்குள் இருக்கின்றன என்று ஆயுர்வேத வைத்தியர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். இந்தக் காடழிப்புப்பற்றி பிரதேசச் செயலாளருக்கோ அல்லது கிராமசேவக அதிகாரிகளுக்கோ எதுவித அறிவித்தலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகது. தமிழரின் தாயகத்தை சிங்களமயமாக்கும் அரசாங்கத்தின் இன்னொரு சதியே இந்தக் காடழிப்பும், நகர்ப்புற அபிவிருத்தியும் என்று கூறுகின்ற மட்டக்களப்பு சமூக நல ஆர்வலர்கள், கொடிய இனவழிப்பு யுத்தத்தாலும், இயற்கை அழிவுகளாலும் தமது இருப்பிடங்களைவிட்டுத் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் இன்றுவரை தற்காலிக முகாம்களிலும், பிறர் வீடுகளிலும் தங்கிவரும் நிலையில், உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்திசெய்கிறோம் என்கிற பெயரில் அரசு தமிழரின் நிலத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது என்றும் விசனம் தெர்வித்தனர். மேலும், அரசாங்கத்தின் உல்லாசப் பயணத்துறையினை அபிவிருத்தி செய்யும் இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கும் பரவுமிடத்து தமிழர்கள் தமது தாயகத்தை ஒரு கட்டத்தில் நிரந்தரமாகவே இழக்கும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளனர். இப்பகுதிகளில் அரச வேலைகளில் இருக்கும் தமிழர்கள், தமது திணைக்களங்கள் ஊடாக நடக்கும் இந்த திட்டமிட்ட அரச மயப்படுத்தப்பட்ட தமிழரின் நில அபகரிப்பிற்கு எதிராகக் குரல் உயர்த்தினால் தமது வேலைகள் பறிபோகலாம் அல்லது வேறிடங்களுக்கு தாம் மாற்றப்படலாம் என்கிற அச்சத்தில் இதுபற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். இதேவேளை பாசிக்குடா பகுதியில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் "மாலு மாலு" எனும் உல்லாச விடுதியில் வேலை செய்வதற்கென்று நூற்றுக்கணக்கான தென்பகுதிச் சிங்களவர்கள் இப்பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். இந்த உயர்தர உல்லாச விடுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது. மேலும் இந்த நட்சத்திர விடுதியில் கருணா குழுவின் உதவியோடு விபச்சாரம் உட்பட பல கலாசார சீரழிவுகளையும் சிங்கள அரசு நடத்திவருவதாகவும், இதில் கருணாவினால் பல தமிழ்ப்பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இவ்வாறான இன்னும் இரு நட்சத்திர விடுதிகள் கும்புறுமூலை ராணுவ முகாமிற்கு அருகிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த இரு நட்சத்திர விடுதிகளில் ஒன்று துணைராணுவக் குழு தலைவரும், அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்திக்குச் சொந்தமானது என்பதுடன் மற்றையது கருணாவின் சகோதரிக்குச் சொந்தமானதாகும். இதேவேளை கருணாவின் சகோதரி அரச வேலை எடுத்துத் தருவதாகக் கூறி அப்பிரதேச இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்றும், இதுவரை பணம்கொடுத்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் இருக்கும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை "கருணாவின் நிதியம்" எனும் அமைப்பில் கட்டாயப்படுத்தி இணைத்துவரும் கருணா அரசாங்கத்தில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி பணத்தினை அறவிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10, புரட்டாதி 2011 காணமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் - உறவுகளிடம் அரச அதிகாரிகள் வற்புறுத்தல் மட்டக்களப்பில் கருணா துணை ராணுவக் குழுவாலும், பிள்ளையான் கொலைக்குழுவாலும், அரச ராணுவ புலநாய்வுத்துறையாலும் கடத்தப்பட்டு இதுவரை காணாமலாக்கப்பட்டிருக்கும் மக்களை இறந்துவிட்டதாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அரச அதிகாரிகள் வற்புறுத்திவருவதாக பாதிக்கப்பட்ட உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழர் மீதான இனவழிப்புப் போரின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கருணா, பிள்ளையான் மற்றும் அரச ராணுவப் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அனைவரும் தற்போது இறந்துவிட்டார்கள் என்று பிரகடனம் செய்து, அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையில் மட்டக்களப்புப் பிரதேசச் செயலகம் இறங்கியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டுவரை இதுவரையில் குறைந்தது 300 பேர் காணாமல்ப் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக செயலாற்றிவரும் மட்டக்களப்புத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா சுமார் 138 பேர்கள் தொடர்பாகச் செயற்பட்டு வருகிறார். கருணா, பிள்ளையான் ஆகிய துணை ராணுவக் குழுக்களாலும், ராணுவத்தாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கப் பாராளுமன்றம் அனுமதியளித்திருக்கிறது. தற்போது வடக்கிலும் கிழக்கிலும் காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் ப்ட்சத்தில் மரண சான்றிதாகளை அரசு வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இவ்வாறு துணைராணுவக் குழுக்களாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் கடத்தப்பட்டுக் காணமலாக்கப்பட்ட பலரின் உறவுகள் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை ஏற்க மறுத்துவருவதுடன், தமது உறவுகள் கடத்தப்பட்டபோது பொலீஸிலும், அதிகாரிகளிடமும் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி இதுவரை எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததுபற்றி விசனப்பட்டிருப்பதுடன், இதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் கேட்டுவருகின்றனர். கடத்தப்பட்ட தமது உறவுகள் இன்னமும் ஏதோவொரு ராணுவ முகாமிலோ அல்லது சிறையிலோ தடுத்துவைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவருகிறார்கள். அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனின் அமர்வில் கலந்துகொண்ட பலர் தமது உறவுகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையாவது சொல்லச் சொல்லுங்கள் என்றுதான் கேட்டிருந்தார்கள். இதில் பலர் இந்த அமர்வின் இறுதியறிக்கை வரும்வரை நம்பிக்கையுடன் காத்திருப்பதாகத் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட உறவுகளில் பலர், காணமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கையில் துரிதப்படும் அரசு, கொமிஷனின் அறிக்கை வரும்வரையாவது காத்திருந்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 05, ஆவணி 2011 மட்டக்களப்பில் மக்களிடம் கருணா பறிக்கும் கப்பத்தில் ராணுவத்திற்கும் பங்கு துணைராணுவக் குழுத் தலைவரும், அரசாங்கத்தில் பிரதியமைச்சராகவும் வலம்வரும் கருணாவின் உத்தரவின்பேரில் அவரது சகாக்கள் மட்டக்களப்பிலிருந்து படுவான்கரைக்கு தொழில்நிமித்தம் செல்லும் மக்களிடம் கப்பமாக பெருமளவு பணத்தினை அறவிட்டுவருவதாகவும், இப்பணத்தில் ராணுவத்திற்கும் ஒரு பங்கு செல்வதால் அவர்களும் இப்பணப்பறிப்பிற்கு உதவிவருவதாகவும் மட்டக்களப்பு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர். கால்நடை உரிமையாளர்கள் , வர்த்தகர்கள், கமச்செய்கையில் ஈடுபடும் "போடியார்கள்" எனப்படும் விவசாயிகள், படுவான்கரையிலிருந்து பாலினை மட்டக்களப்பிற்குக் கொண்டுவரச் செல்லும் வர்த்தகர்கள் என்று அனைவருமே கருணாவின் சகாக்களால் இலக்குவைக்கப்பட்டு பணம் பறிக்கப்படுகிறார்கள். இவ்வாறான பணப் பறிப்பிற்காக கருணாவால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவனான சிவப்பிரகாசம் சுப்ரமணியம் என்பவன் தரவைப் பகுதி முகாம் ஒன்றில் இருந்து இயங்கிவருவதாகவும், இராணுவப் புலநாய்வுத்துறையினரிடம் இவனுக்கிருக்கும் நெருக்கத்தினைப் பாவித்து இவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் வசித்துவரும் முன்னாள்ப் புலிகளையும் அவர்களது குடும்பங்களையும் தொடர்ந்து அச்சுருத்திவரும் இவன், இப்பகுதி மக்களுக்குப் பெரும் தொல்லையாக மாறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மணியம் என்றழைக்கப்படும் இவன் கருணாவின் நெருங்கிய சகாவென்றும் சித்தாண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குடும்பிமலை, அழியாஓடை, மியான்குளம் ஆகிய பகுதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கவரும் மக்களை மணியமும் அவனது சகபாடிகளும் தமது முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான முறைப்பாடுகளை காவல்த்துறை எடுக்க மறுத்தே வருகிறது. மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணத்தில் ஒருபகுதியினை காவல்த்துறையும் பெற்றுவருவதால் இம்முறைப்பாடுகளை அவர்கள் கண்டுகொள்வதில்லையென்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 17, ஆடி 2011 கிரானில் நடந்த கூட்டத்தில் பிள்ளையானின் சகாவைத் தாக்கிய கருணா ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிரானில் நடந்த கூட்டமொன்றில் இன்னொரு கொலைக்குழுவான பிள்ளையானின் சகா ஒருவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். கடந்த வெள்ளியன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கிரானில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சராக தன்னை ஆக்கிக்கொண்ட பிள்ளையானும், அவரது நெருங்கிய சகாவான "வர்த்தகர்" பிரபாவும் வருகை தந்திருந்தனர். இதே கூட்டத்திற்கு தனது சகபாடிகளுடனும், விசேட அதிரடிப்படையினருடனும் வருகைதந்த இன்னொரு துணைராணுவக் குழுத் தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணா அங்கிருந்த பிள்ளையானின் சகாவான பிரபா மீது சரமாரியாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறார். கூட்டத்திற்கு வந்திருந்த உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் இக்குழுத் தலைவர்கள் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். கைகலப்பின் பின்னர் கூட்டம் கலைக்கப்பட்டிருக்கிறது, இதன்பின்னர் பிள்ளையான் கொலைக்குழுவால் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் மதுபோதையில் கூட்டத்திற்கு வருகைதந்த கருணா அங்கிருந்த "வர்த்தகர்" பிரபாவைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அதேவேளை இக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் தெரிவிக்கும்போது பிரபாவின் கடைக்கு கருணாவும் அவரது பரிவாரங்களும் அடிக்கடி சென்று வருவதாகவும், உணவும் மதுபானமும் அவர்களுக்கு இலவசமாகவே பிரபாவால் வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இது இவ்வாறிருக்க, பிள்ளையானினால் வழங்கப்பட்ட பல மாகாணசபைப் பதவிகளுக்கான நியமனங்களை கொழும்பு அரசாங்கம் நிராகரித்திருப்பதாகத் தெரிகிறது. பிள்ளையானினால் அனுப்பப்பட்ட நியமனங்களை நிராகரித்திருக்கும் அரசு, கருணாவின் உறவினர்களையும், நண்பர்களையும் இப்பதவிகளுக்கு நியமிக்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 13, ஆடி 2011 மட்டக்களப்பில் வர்த்தகர்களிடமிருந்து பணம் பறிக்கும் துணைராணுவக் குழுவும் இலங்கை ராணுவமும் கிழக்கு மாகாண முதலமைச்சரும், அரச ராணுவத்தால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவனுமாகிய பிள்ளையானின் சகாக்களும், ராணுவமும் மட்டக்களப்பு நகரின் தெற்குப்பகுதியான படுவான்கரையிலிருந்து நகருக்கு வரும் வர்த்தகர்களிடம் கப்பமாகப் பணம் பறிப்பில் ஈடுபட்டுவருவதாக வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன் படுவான்கரையிலிருந்து மட்டக்களப்பு நகரிற்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்படும் பல உற்பத்திப்பொருட்களை துணைராணுவக்குழுவும் இலங்கை ராணுவமும் பறித்துச் செல்வதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படுவான்கரையினைச் சேர்ந்த வர்த்தகர்கள் தினமும் பழங்கள், கருவாடு மற்றும் மீன், மரக்கறிகள், விறகு போன்ற பொருட்களை மட்டக்களப்பு நகருக்குக் கொண்டுவருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் பொருட்கள் வழியெங்கும் இருக்கும் சோதனைச் சாவடிகளான, பட்டிருப்புப் பாலம், மண்முனைத்துறை, அம்பிலாந்துறை , செங்கலடிக் கறுத்தப் பாலம், கிரான் பாலம், சந்திவெளி களப்பு ஊடாக காவத்த முனை ஆகிய இடங்களில் விசேட அதிரடிப் படையினராலும் பிள்ளையான் துணை ராணுவக் குழுவினராலும் வழிமறிக்கப்பட்டு பெருமளவு உற்பத்திப் பொருட்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, மட்டக்களப்பின் கரையோரங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் சமூகங்களிடமிருந்து அப்பகுதியெங்கும் நிலகொண்டிருக்கும் ராணுவம் மீன்களைப் பறித்துச் செல்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் தாம் அகழ்ந்துவரும் மண்ணை பாரவூர்திகளில் நகரூடாக எடுத்துச் செல்லும் போது வீதியில் நிற்கும் பொலீஸார் வாகனத்தை மறித்தும் கப்பம் கேட்பதாகவும், மறுக்கும் பட்சத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டதற்காகத் தண்டப் பணம் செலுத்தும்படி நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகின்றனர். இதேபோல் சீமேந்துக் கற்களை உற்பத்தி செய்து டிராக்டர்களில் எடுத்துச் செல்பவர்கள் மற்றும் சாதாரண வாகனங்களில் பயணிப்பவர்கள் என்று பலரும் பொலீசாரினாலும், துணைராணுவக் குழுவினராலும் மறிக்கப்பட்டு கப்பம் அறவிடப்படுவதாகவும், மறுப்போர் மீது நீதிமன்ற வழக்குகள் பதியப்படும் என்று மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் அரச அனுமதியுடன், வருடந்தோறும் சரியான வரிகட்டி தாம் நடத்தும் வியாபாரத்திற்கு "பாதுகாப்புப் பணம்" என்கிற போர்வையில் பெருமளவு பண கிழக்குமாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமாகிய பிள்ளையானுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் , தமது வியாபாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கோரும் "பாதுகாப்புப் பணம்" கொடுக்கப்பட்டுவருவதாகவும் கூறும் இவர்கள், பிள்ளையான் தம்மை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனது அலுவலகத்தில் இதுபற்றிக் கலந்துரையாட அழைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தனியார் வியாபார நிலையங்களும் பிள்ளையானுக்கு பாதுகாப்புப் பணமாக பெருமளவு பணத்தினை செலுத்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கும் சொத்துக்களுக்கும் பிள்ளையானின் சகாக்களாலும், ராணுவத்தாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில் பெரும்பாலானோர் அவர்கள் கோரும் பணத்தினைச் செலுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 08, ஆனி 2011 துணைராணுவக்குழுக்களால் சிங்களப் பகுதிகளில் தொழில் அடிமைகளாக விற்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள் மட்டக்களப்பில் ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் துணைராணுவக் குழுவொன்றினால் கடத்தப்படு பின்னர் தொழில் அடிமையாக சிங்களப் புதையல் தேடும் குழுவொன்றிற்கு தம்புள்ளைப் பகுதியில் விற்கப்பட்ட தனது 11 வயதுப் பேரனை தேடிவந்து, புதையல் தேடுபவர்களிடமிருந்து மீட்டுவந்த வயோதிபரை அந்தத் துணைராணுவக் குழு கொல்லப்போவதாக மிரட்டியுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த வேல்முருகு சிவலிங்கம் என்பவரின் பேரனான அதிசயராஜா செளந்திரராஜா எனும் சிறுவனே இவ்வாறு துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு விற்கப்பட்டவர் ஆவார். தனது பேரன் புதையல் தேடும் குழுவொன்றினால் தம்புள்ளை பகுதியில் அடிமையாகப் பாவிக்கப்பட்டுவருவதை அறிந்துகொண்ட இந்த வயோதிபர், துணிச்சலாக புதையல் தோண்டும் குழுவினரைத் தேடிச்சென்று அவரை மீட்டுவந்திருக்கிறார். சித்தாண்டி மகாவித்தியாலயத்தில் கல்விபயின்றுவந்த அதிசயராஜ் தூனைராணுவக் குழு ஆயுததாரி ராமச்சந்திரன் மரியராஜ் என்பவரால் கடந்தமாதம் கடத்தப்பட்டிருந்தார். இவரைக் கடத்திச்சென்ற துணைராணுவக் குழு தம்புள்ளைப் பகுதியில் புதையல் தேடும் சிங்களக் குழுவொன்றிற்கு அடிமையாக விற்றிருக்கிறது. தம்மால் விற்கப்பட்ட சிறுவனை அவரது பேரன் மீட்டுவந்ததையறிந்துகொண்ட துணைராணுவக்குழு அவரையும், மீட்கப்பட்ட சிறுவனையும் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளதாக அவரது குடும்பம் ஏறாவூர்ப் பொலீசிலும், இலங்கை மனிதவுரிமைச் சபையிலும் முறைப்பாடு செய்திருக்கிறது. இதே துணைராணுவக் குழுவால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய பகுதிகளில் பெருமளவு சிறுவர்கள் கடத்தப்பட்டு சிங்களப் பகுதிகளில் அடிமைகளாக விற்கப்பட்டுவருவதாக பல புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 18, வைகாசி 2011 கிழக்கில் துணைராணுவக் குழுக்களிடையேயான மோதல்களை இலங்கை அரசாங்கமே ஊக்குவிக்கிறது கிழக்கு மாகாண முதலமைச்சரும், கொலைக்குழுவொன்றினை நடத்திவருபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வீட்டினை கொழும்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவொன்று சோதனையிட்டது. இச்சோதனை நடக்கும்பொழுது அவர் அங்கிருக்கவில்லையென்று தெரியவருகிறது. இச்சோதனையின் நோக்கம்பற்றித் தம்மக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென்று பிள்ளையானின் கொலைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். மகிந்த ராஜபக்ஷவின் ராணுவ இயந்திரத்தால் வழிநடத்தப்படும் இரு துணைராணுவக் குழுக்களான பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் உட்கொலைகளின் மையப்புள்ளியாக விளங்கும் வாவி வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையானின் அலுவலகமே இந்த திடீர் சோதனைக்கு உட்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி இராணுவ புலநாய்வுத்துறையே இவ்விரு கொலைக்குழுக்களுக்குமிடையிலான பகைமையினை உருவாக்கி வளர்த்துவருவதாகத் தெரிகிறது. பிள்ளையானின் ஆதரவாளர்கள் இத்திடீர் சோதனைபற்றிக் கூறுகையில் சோதனைகள் சாதாரண சட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அரசின் அதிகாரத்திலுள்ள கருணாவின் விருப்பத்திற்கேற்ப ராணுவம் சோதனைகளில் ஈடுபடுவது தவறானது என்று கூறியிள்ளனர். தமிழர்கள் மீதான போரின்பொழுது ராஜபக்ஷ அரசு இவ்விரு குழுக்களுக்கும் ஆயுதங்களும், ஏனைய வசதிகளையும் வழங்கி தமிழரைக் கடத்திச் சென்று கொல்லுதல் முதல், கப்பம் கோருதல், பாலியல்த் தொழிலில் தமிழ்ப் பெண்களையும், சிறுமிகளையும் ஈடுபடுத்துதல் வரை பாரிய மனிதவுரிமை மீறல்களைப் புரிவதற்கு இவர்களைப் பாவித்தது. இவ்விரு குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்கிற போர்வையில் அரசாங்கம் செயற்படப்போவதாகக் காட்டிக்கொண்டது. ஆனால், இதே அரசாங்கம் 2008 மட்டக்களப்பு தேர்தல்களின் பொழுது இன்னொரு துணைப்படையான டக்கிளசின் கட்சிக்கெதிரான மோதல்களில் பிள்ளையான் கொலைக்குழுவிற்கு ஆயுதங்களும், அரச வாகனங்கள், வானூர்திகள் என்று பல்வேறான உதவிகளைச் செய்தது. வாழைச்சேனை ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவந்த ஈ பி டி பி ஆயுததாரியான காளியப்பன் ஞானசீலன் என்பவரை பிள்ளையான் கொலைக்குழு 2008 இல் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தது. அதற்குப் பழிவாங்க ஆண்டான்குளம் செங்கலடியைச் சேர்ந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி தேவதாஸ் சுரேஷ்குமாரை ஈ பி டி பி கொலைக்குழு கடத்திச்சென்று கொன்றுபோட்டது. ஈ பி டி பி அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட சுரேஷ்குமாரின் உடலை ராணுவமும், பிள்ளையான் கொலைப்படையும் தேடுதல் ஒன்றின்போது தோண்டியெடுத்திருந்தன. கிழக்கில் பிள்ளையானுக்கெதிராக டக்கிளசின் கட்சி மேலோங்குவதை விரும்பாத அரசாங்கம், டக்கிளசிற்கெதிரான பிள்ளையானின் நடவடிக்கைகளை ஊக்குவித்ததுடன், டக்கிளசின் கட்சிக்கான செயற்படும் வெளியையும் வெகுவாகக் குறைக்கத் தொடங்கியது. ஆனால், இப்போது அரசால் வளர்க்கப்பட்ட பிள்ளையான் கொலைக்குழுவே அரசால் இலக்குவைக்கப்பட்டிருப்பதைத்தான் அண்மைய நிக்ழவுகள் காட்டுகின்றன. அண்மையில் கொல்லப்பட்ட மகிந்த மற்றும் கருணாவின் நெருங்கிய சகாவான ராசமாணிக்கம் மதியழகன் எனப்படும் ஆயுததாரியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரான பிள்ளையானின் சகா பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் எட்வின் கிருஷ்ணராஜா ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருப்பது இதனையே காட்டுகிறது. பிள்ளையானின் கிழக்கு மாகாண அரசின் உறுப்பினரான ஆயுததாரி பிரதீப் மாஸ்ட்டர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலநாய்வுத்துறையினரால் கொழும்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், பிள்ளையானின் கொலைக்குழு முக்கியஸ்த்தரும், செங்கலடி செல்வம் திரையரங்கு உரிமையாளர் மோகன் என்பவரது வீடும் ராணுவத்தால் சோதனையிடப்பட்டுள்ளது. மகிந்த மற்றும் கருணா ஆகியோரின் நெருங்கிய சகாவான, ஆயுததாரி மதியழகன் கொல்லப்பட்ட 72 மணித்தியாலங்களுக்குள் பிள்ளையான் கொலைக்குழு பிரமுகர்கள் ராணுவத்தாலும், கருணா கொலைக்குழுவாலும் இலக்குவைக்கப்பட்டு வருகின்றனர். களுவாஞ்சிக்குடியில் மதுபான நிலையம் ஒன்றினை நடத்திவரும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர் இளங்குமரன் என்பவரைக் கருணா கொலைக்குழு கடத்திச் சென்று சுட்டுக் கொன்றிருக்கிறது.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 11, வைகச்சி 2011 தொடரும் துணைராணுவக் கூலிகளின் உள்வீட்டுப் படுகொலைகள், ராணுவ துணைப்படைத்தலைவர் கருணாவின் ஒருங்கிணைப்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக்கொலை - பிள்ளையான் கொலைக்குழு கைவரிசை உந்துருளியில் வந்த இரு பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் 38 வயதுடைய ராசமாணிக்கம் மதியழகன் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளரும், தூனைராணுவக்குழுத் தலைவர் கருணாவின் உதவியாளருமானவர் கடந்த புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டார். கல்லடித்தெருவில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்கருகிலேயே இக்கொலை சுமார் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது. மதியழகன் ஆரம்பத்தில் ஈ பி டி பி கொலைக்குழுவில் செயற்பட்டு வந்தார் என்றும் பின்னர் இக்குழுவிலிருந்து விலகி நேரடியாக ராணுவப் புலநாய்வுத்துறையின் கடத்தல்கள், கொலைகள் என்பவற்றில் செயற்பட்டுவந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட மதியழகன் மட்டக்கள்ப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில் ஆலய நிர்வாகச் சபைத் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை, இவரே மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷ அரசின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தார். இவரின் கொலையினையடுத்து சிங்கள ராணுவமும் காவல்த்துறையும் இப்பகுதியினைச் சுற்றியுள்ள இடங்களில் தேடுதலினை மேற்கொண்டனர். இப்பகுதியிலிருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஆனாலும், கொலையில் ஈடுபட்ட இருபிள்ளையான் கொலைப்படையினரையும் அவர்களால் கைதுசெய்ய முடியவில்லை. ராணுவத்தின் ஏவல்ப்படைகளாக இம்மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகியவை தமக்கிடையேயான பகைமையினைத் தொடர்ந்தும் பேணிவருவதுடன், துணைராணுவக் குழுத் தலைவர் அரசின் செல்லப்பிள்ளையாக, மகிந்த அரசின் உதவித்தலைவர் பதவியினை அலங்கரித்து வந்ததின்பின்னர் இவை படுகொலைகளாக வெளிப்படுகின்றன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 24, சித்திரை 2011 கிழக்குப் பல்கலைக் கழகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கள காவல்த்துறையின் சோதனைச் சாவடி தொடர்ந்தும் இருக்கும் - அமைச்சர் திசாநாயக்கா கிழக்குப் பல்கலைக் கழகத்தினுள் அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களப் பொலீஸ் சாவடி குறித்து மகிந்த அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசாநாயக்கா கருத்துத் தெரிவிக்கையில் எக்காரணம் கொண்டும் இந்தச் சாவடி அகற்றப்படாதென்றும், தேவையானால் ராணுவத்தையோ, கடற்படையினரையோ அல்லது விசேட அதிரடிப்படையினரையோ நாம் இங்கே பாதுகாப்புக் கடமைகளில் அமர்த்துவோம் என்று கூறியிருக்கிறார். அண்மையில் பல்கலைக் கழகத்தினுள் அமைக்கப்பட்ட காவல்த்துறைச் சாவடியின் பின்னரே பல்கலைக் கழகத்தினுள் கொலைகள் உட்பட வன்முறைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள், இந்தச் சாவடி உடனடியாக அகற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையினையடுத்தே சிங்கள அரசாங்கத்தின் அமைச்சரான திசாநாயக்கா இங்கு வருகை தந்திருந்தார். காவல்த்துறைச் சாவடியினை எக்காரணம் கொண்டும் அகற்றமுடியாது என்று சூளுரைத்த அமைச்சர், இங்கே கல்விகற்கும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே காவல்த்துறை அங்கு நிலைவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இவ்விஜயத்தின்போது ராணுவத்தால் இயக்கப்படுகின்ற துணை ராணுவக் குழுத் தலைவர் கருணா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் பல்கலைக்கழக உப வேந்தர் பிரேம்குமார் ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதேவேளை பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இச்சாவடியினை முற்றாக அகற்றுவதா அல்லது பல்கலைக் கழகத்திற்கு வெளியே இடம் மாற்றுவதா என்பது பற்றி மாணவர்களுடன் பேசித் தீர்மானிப்போம் என்று மாணவர் சம்மேளன தலைவர் டி. கிரிஷாந்த் கூறினார். 2009 ஆண்டு, வன்னி இனவழிப்பு யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்தவேளையில், புதிதாக அமைக்கப்பட்ட பொலீஸ் சாவடியூடாகவே கருணா தூனை ராணுவக் குழுவினர் பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து கருணாவின் கட்டளைப்படி வன்னியைச் சேர்ந்த இரு மாணவிகளையும், சித்தாண்டியைச் சேர்ந்த விடுதி மேற்பார்வையாளரான பெண்ணையும் படுகொலை செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கருத்துப்படி, கருணாவின் கட்டளையின் பேரிலேயே தற்போதுள்ள பல்கலைக் கழக நிர்வாகம் கல்வி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கருணவை இலங்கை அரசும் ராணுவமுமே இதுதொடர்பாக இயக்குவதாகவும் விசனம் தெரிவித்தனர். கிழக்குப் பல்கலைக் கழகம் கருணாவின் பிரதேசவாத அரசியல் ஆடுகளாமாக மாற்றப்பட்டுவிட்டதென்று கல்விசார் நடவடிக்கைகளில் அக்கறைகொண்ட ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி: நாள் 19, சித்திரை 2011 மட்டக்களப்பில் கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு கிழக்குமாகாண முதலமைச்சரும், ராணுவ புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் சகாக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ள்னர். இம்மாதம் 13 ஆம் திகதி ஆரையம்பதி மேற்கு கட்டுமாவடி எனும் காத்தான்குடி பொலீஸ்பிரிவிற்குற்பட்ட பகுதி வீடொன்றில் புகுந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் குறைந்தது பதினைந்து லட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் ஆயுதமுனையில் திருடிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொள்ளை பற்றிப் புகார் அளித்தால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டப்பட்டதையடுத்து, மோகன் எனப்படும் இவ்வீட்டின் உரிமையாளர் இதுபற்றிப் பொலீஸில் முறையிடுவதைத் தவிர்த்துவிட்டார். 4 மாதங்களுக்கு முன்னர் மோகனின் சகோதரியின் புலியடியில் அமைந்திருக்கும் வீட்டினுள் ஆயுதங்களுடன் புகுந்த இதே குழுவினர் அவர்களை அச்சுருத்தி சுமார் 50 லட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றது நினைவிலிருக்கலாம். வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்லது ஆதரவாளர்களின் வீடுகளைக் குறிவைத்தே பிள்ளையான் தனது சகாக்களை ஏவிவிட்டுக் கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக பிரசாந்தன் எனப்படும் ஆயுததாரியை கொள்ளைகளுக்குப் பொறுப்பாக அமர்த்தியுள்ள பிள்ளையான், இவரைக்கொண்டே இக்கொள்ளைகள் கச்சிதமாக அரங்கேற்றிவருவதாகத் தெரிகிறது. அண்மையில் ஆரையம்பதி, மண்முனைப் பகுகளில் பிரதேசச் செயலாளர், கிராம சபை உத்தியோகத்தர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்காக பிள்ளையானின் கொலைக்குழு ஆயுததாரி பிரசாந்தனும் அவரது அடிவருடிகளும் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதும் பிள்ளையானின் அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்டது தெரிந்ததே. பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டுள்ள பிராசாந்தன் தற்போது கடத்தல்கள், கொள்ளைகள் போன்றவற்றில் தடைகளின்றி மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மாசி 2011 மட்டக்களப்பில் மூன்று கிறீஸ்த்தவப் பாதிரியார்களைக் கடத்திச்சென்ற பிள்ளையான் கொலைக்குழு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த மூன்று கிறீஸ்த்தவப் பாதிரியார்களை அரச ராணுவப் புல்நாய்வுத்துறையினருக்காக பிள்ளையான் கொலைக்குழு கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடத்திச்செல்லப்பட்ட பாதிரியார்களின் உறவினர்களின் முறைப்பாட்டின்படி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி ரமேஷ் இந்த மூவரையும் முதலமைச்சர் பிள்ளையான் உங்களைப் பார்க்கவிரும்புகிறார் என்று அழைத்துச் சென்றதாகவும், அதன்பின்னர் இம்மூவரும் காணாமல்ப் போயுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பாதிதிரியார்களான கணேசமூர்த்தி, சிவகுமார் யோனாத் மற்றும் சிவாநந்தன் ஆகிய மூவருமே இவ்வாறு பிள்ளையான் கொலைக்குழுவினரால் கடத்தப்படுக் காணாமற்போயிருக்கிறார்கள். கடைசியாக இவர்களை மட்டக்களப்பு பழைய பொலீஸ் நிலையப் பகுதியில் ரமேஷ் எனும் ஆயுததாரியினால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, இந்த மூவரும் பிள்ளையான் கொலைக்குழுவினராக் கடத்தப்பட்டு , விசாரிக்கப்பட்ட பின்னர் ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கையளிக்கப்பட்டு கொழும்பின் அச்சமூட்டும் விசாரணைபிரிவான நான்காம் மாடிக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துகொண்டிருக்கும் இப்பாதிரியார்களைக் கடத்திச்சென்ற துணைராணுவக் கொலைக்குழுவும், அரச ராணுவ புலநாய்வுத்துறையும் கடுமையான விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரையும் சில நாட்களின் பின் விடுதலை செய்திருக்கின்றன்ர். தாம் கைதுசெய்யப்பட்டதன் காரணம் பற்றியோ, நடைபெற்ற விசாரணைகள் பற்றியோ வெளியில் பேசினால் கொல்லப்படுவீர்கள் என்கிற எச்சரிக்கையோடு இவர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.