-
Posts
8740 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2015 கிரானில் காணி உரிமையாளரைத் தாக்கிய கருணா மட்டக்களப்பு மாவட்டம், கிரான் பிரதேசத்தில், நூறு ஏக்கர் பகுதியில் விவசாயம் செய்துவரும் வனராஜா என்பவரை துணையமைச்சரும், துணை ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கருணா என்றழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளையடுத்து இப்பகுதியில் வசித்துவந்த வனராஜாவும் அவரது குடும்பமும் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் வந்தபோது, வனராஜாவின் காணி புலிகளால் பாவிக்கப்பட்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், வனராஜாவும் அவரது குடும்பமும் மீண்டும் தமது பகுதிக்குத் திரும்பிவந்து தமது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அக்காணி தனக்கே உரியதென்றும், தனது வர்த்தக நோக்கங்களுக்காக அக்காணியை தான் எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறிய கருணா வனராஜாவை தனது சகாக்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். சனிக்கிழமை காலை 10:30 கருணாவால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து வனராஜா வாழைச்சேனை வைத்தியசாலையில் கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது தொண்டர்கள் புடைசூழ வான்களில் வந்திறங்கிய கருணா வனராஜாவின் காணியில் வேலைபார்த்துக்கொண்டு நின்ற தொழிலாளர்களை அடித்து விரட்டியுமிருக்கிறார். கருணாவின் அடாவடித்தனத்திற்கெதிராக வாழைச்சேனை பொலீஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருக்கிறது. அரச மாற்றத்தின்பிறகு துணைராணுவக் குழுக்களின் கொட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், நிலைமைகளில் மாற்றமேதும் ஏற்படவில்லையென்று, வழமைபோலவே கருணா துணைராணுவக்குழு ராணுவத்தினருடன் பவனி வருவதாகவும், வெளிப்படையாக ஆயுதங்களைக் கொண்டு திரிவதாகவும் கூறுகின்றனர். ராணுவத்தினரிடையே கருணாவுக்கு இருக்கும் செல்வாக்கு இன்னமும் குறையவில்லையென்றும், அவரைத் தொடர்ந்தும் தமது துணைராணுவக் குழுவின் தலைவராகவே அவர்கள் நடத்திவருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருணாவின் செல்வாக்குப் பற்றித் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கருணாவுக்குமிடையிலான தொடர்பு அப்பட்டமாகத் தெரிவதாகவும், அவரது நடவடிக்கைகளில் ஆட்சிமாற்றம் எதுவித மாற்றத்தினையும் உருவாக்கவில்லையென்றும் கூறினார்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மாசி 2015 அம்பாறையில் செயற்பட்டுவரும் அரச ராணுவக் கொலைக்குழுவிற்கெதிராக நடவடிக்கையெடுங்கள் - அரசைக் கோரும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் - கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இனியபாரதி எனப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மிக முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமாரை உடனடியாகக் கைது செய்து, தண்டனை வழங்குமாறு அம்பாறை மாவட்டத்தில் இவனால் வலிந்து காணமலாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் பெற்றோர் அரசை வேண்டிக்கொண்டுள்ளனர். 2007 இற்குப் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து இனியபாரதியால் இதுவரையில் குறைந்தது 200 இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், புலிகளிடமிருந்து பிரிந்து பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பல முன்னாள்ப் போராளிகளும் இவனது குழுவினரால் காணாமலாக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இனியபாரதி தனக்கென்று தனியான கொலைக்குழுவொன்றினை நடத்திவருவதாகத் தெரிகிறது. சுமார் 700 ஆயுதம் தரித்த கொலைக்குழுவினர் இவனது கட்டுப்பாட்டில் இயங்குவதோடு, கடத்தல்கள், காணாமற்போதல்கள், கப்பம் உட்பட மிகக் கொடூரமான வன்முறைகளில் இவனும் இவனது குழுவும் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பல சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல மனிதவுரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, மகிந்தவின் அரசுக்கும் இவனுக்குமான நெருக்கம் பற்றியும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தன. இனியபாரதி ஆரம்பத்தில் செய்த கொலைகளில் குறிப்பிடத் தக்கது கிழக்கின் அனுபவம் மிக்க செய்தியாளரான ஐய்யாத்துரை நடேசன் என்பவரது படுகொலையாகும். 2004 இல் அவரது இல்லத்திற்கு மிக அருகே இனியபாரதியால் பலதடவைகள் தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நடேசனின் மரணத்தில் தற்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிரிசேனவின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனியபாரதியால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஐய்யாத்துரை நடேசனின் இறுதி நிகழ்வு ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரி அபயரட்ணவின் நேரடி வழிகாட்டலில் செயற்படும் இனியபாரதியின் கொலைக்குழு, கருணா கொலைக்குழு அங்கத்தவர்களையும், ஈ என் டி எல் எப் எனும் இந்தியாவின் துணையுடன் இயங்கும் துணைப்படையின் உறுப்பினர்களையும், சில முஸ்லீம் ஆயுதக் குழு உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் இக்கொலைக்குழு அவ்வப்போது தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான பிணக்கினை பெரிதுபடுத்தவும் மகிந்த அரசினால் பாவிக்கப்பட்டு வந்தது, இன்றும் நிலை அப்படித்தான். 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் சரணடைந்த இரு இனியபாரதி கொலைக்குழு உறுப்பினர்களின் தகவல்களின்படி இனியபாரதி மைத்திரிபால சிரிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா அக்கியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்திருந்தான் என்று தெரியவந்திருந்தது. இவ்வாறு புலிகளிடம் சரணடைந்த இனியபாரதியின் கொலைக்குழு உறுப்பினர்கள், தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தாம் இனியபாரதியுடன் சேர்ந்தது அவனைக் கொல்வதற்காகவே என்றும், தாம் தப்பி வருமுன்னர் இனியபாரதியையும், அவனது சகாக்கள் சிலரையும் கொன்றுவிட்டுத் தப்பிவந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால், இனியபாரதி அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டான் என்பது நாம் அறிந்ததே. கடந்த புதனன்று, திருக்கோயில் பிரதேச செயலகத்தின்முன்னால் கூடிய ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 உறவினர்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொன்றுபோட்ட இனியபாரதியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனியபாரதியின் கொலைக்குழு முகாம் அமைத்திருந்த பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டு தமது சொந்தங்களின் எச்சங்கள் இருக்கின்றதா என்று கண்டறியப்படவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். இனியபாரதியின் கொலைமுகாமிலிருந்து தப்பிவந்த ஒரு சிலரின் தகவல்ப்படி இனியபாரதியால் கடத்திக் கொண்டுவரப்பட்ட பல இளைஞர்கள் இம்முகாமிலேயே கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அத்துடன், தம்பிலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சந்தைப் பகுதியில் இனியபாரதி அமைத்திருக்கும் அவனது "பாதுகாப்பு வீடு" உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு அவன் கைதுசெய்யப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இனியபாரதி இப்போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் கூறுகையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு, நாவிதான்வெளி, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் குறைந்தது 5000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமற்போயுள்ளனர் என்றும், இவர்களுள் பலநூற்றுக்கணக்கானவர்களின் காணாமற்போதல்களோடு இனியபாரதி நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறான் என்றும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அம்பாறை மாவட்டத்தின் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் பங்கெடுத்திருந்தார்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, தை 2015 மட்டக்களப்பில் துணை ராணுவக் கொலைக்குழுக்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துங்க்கள் - உள்ளூர் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரசரட்ணம் சசிதரன் விடுத்துள்ள வேண்டுகோளில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கிழக்குமாகாணத்தில் பல படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட துணைராணுவக் கொலைக்குழுக்களின் உறுப்பினர்களை புதிய அரசாங்கத்தின் எந்தப் பதிவிகளிலும் அமர்த்தக் கூடாது என்று கோரியிருக்கிறார். மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சிக் கிளையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தில் நான்கு முக்கிய துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இவர்கள் புதிய அரசின் எந்தப் பதவியிலோ அல்லது அரசின் ஆதரவுக் கட்சிகளினூடாக எந்தப் பதவிகளிலுமோ அமர்த்தப்படக் கூடாதென்று கோரப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்க ரணிலோ அல்லது மைத்திரியோ உண்மையாகவே விரும்பினால் இக்கொலைக்குழுக்களை மட்டக்களப்பிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளனர் மட்டக்களப்பு ஐக்கியதேசியக் கட்சியினர். "விலைபோன" பியசேன இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்றம் சென்றுவிட்டு பின்னர் பெருந்தொகைப் பணத்திற்காக மகிந்தவின் கட்சிக்குக்குத் தாவிய பியசேனவுக்கு எதிரான போராட்டம் ஒன்று அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. கொலைக்குழு ஆயுததாரி "தேஷமான்ய" இனியபாரதி அத்துடன், மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் பிரதான ஆயுதாரியுமான "தேஷமான்ய" இனியபாரதிக்கெதிரான போராட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் திகதி திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஆயுததாரி இனியபாரதியின் வீட்டைச் சூந்துகொண்ட சுமார் 3000 தமிழர்கள் அவனை பிடிக்க எத்தனித்தபோது பொலீஸாரின் உதவியோடு அவன் பாதுகாப்பாகத் தப்பிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். இத்தீர்மானத்தின்படி, முன்னாள் துணையமைச்சரும் துணைராணுவக் குழுவொன்றின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதி அலி சாகீர் மெளலானா, பிள்ளையானின் நெருங்கிய ஆயுததாரி கணபதிப்பிள்ளை மோகன் ஆகியோர் அப்புறப்படுத்தப்படவேண்டிய மக்களுக்கு எதிரான சக்திகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏறாவூர் உள்ளூராட்சிச் சபையின் தலைவராக இருக்கும் அலி சாகீர் மெளலானா புதிய அரசாங்கத்தின் ஆதரவாக செயற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, 2004 இல் புலிகளிடமிருந்து கருணா போலியான பிரதேசவாத காரணங்களை முன்வைத்து பிரிந்துசென்று அரச ராணுவத்துடன் இணைவதற்கு உதவிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அலி சாகீர் மெளலானா தனது தோழனும், ஆயுததாரியுமான கருணா பற்றிக் கூறியது அத்துடன், தற்போது மகிந்தவின் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருக்கும் கொலைக்குழு தலைவன் பிள்ளையானும் புதிய அரசிடமிருந்து தனக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் கேட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கொலைக்குழு ஆயுததாரிகளின் தலைவன் - பிள்ளையான் அதேவேளை, துணைராணுவக் கொலைக்குழுவின் ஆயுததாரி கருணா தனது துணையமைச்சர் அதிகாரங்களை இன்னமும் மீளக் கையளிக்காத நிலையில், புதிய அரசாங்கத்திற்கு தனது ஆதரவு இருக்கும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொலைக்குழு ஆயுததாரிகளின் தலைவன் - கருணா ரணிலும், அமெரிக்காவும், அவர்களது புலிகளுக்கெதிரான சர்வதேச வலையமைப்பும் 2004 இல் ரணில் தலைமையிலான அரசே கருணாவைப் புலிகளிடமிருந்து பிரித்து, புலிகளைப் பலவீனமாக்கி இறுதியில் அழிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெற்கில் மார்தட்டி வந்த நிலையில் கருணாவின் இந்த ஆதரவுக்கரம் ரணிலின் புதிய அரசிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ரணில் அண்மையில்க் கூட வெளியிட்ட அறிக்கையொன்றில் தனது அரசாங்கத்தின் காலத்தில், கருணாவைப் பிரித்து, புலிகளைப் பலவீனமாக்கி, அமெரிக்காவின் உதவியுடன் "பாதுகாப்பு வலைப்பின்னலை " உருவாக்கி, இறுதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை மகிந்த முற்றாக அழித்துமுடிக்க தாமே ஏற்பாடு செய்ததாகக் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, தை 2015 மட்டக்களப்பில் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிய பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்கள் மகிந்த அரசாங்கத்தினால் முன்னர் பதவியில் அமர்த்தப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்றைய மகிந்தவின் கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவொன்றினை நடத்துபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரி பொது எதிரணியினரால் மட்டக்களப்பில் இடம்பெறும் தேர்தல்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிவருவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சித்தாண்டிப் பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்க்களில் கண்காணிப்பாளர்களாக நிறுத்தப்பட்ட பலர் பிள்ளையான் கொலைக்குழுவினரால கொலைப்பயமுருத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இதேவேளை அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பகுதியில் இயங்கிவரும் இன்னொரு கொலைக்குழுவான கருணா குழுவின் பிரதான ஆயுததாரி, "தேஷமான்ய" இனியபாரதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தின் உறுப்பினர் ப. விஜயராஜா என்பவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார். காயப்பட்ட உறுப்பினர் திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. சித்தாண்டிப் பகுதியில் குறைந்தது 3 வாக்குச் சாவடிகளை சுற்றி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் வலம்வருவது அவதானிக்கப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் பணியாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடர்ச்சியாக இக்குழுவினரால மிரட்டப்பட்டுவருகின்றனர் என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராகச் செயற்பட்டுவரும் தவராசா ஜெயசிறியின் வீட்டிற்குச் சென்ற பிள்ளையான் கொலைக்குழு அவரது தங்கையை மிரட்டி, "உனது சகோதரன் தொடர்ந்தும் தேதல் கண்காணிப்பில் ஈடுபட்டால், பாரிய விளைவுகளைச் சந்திப்பீர்கள், உனது சமுர்தி வேலை இல்லாமல்ப்போவதோடு வேறு பல கடுமையான விளைவுகளும் ஏற்படும் " என்று மிரட்டிவிட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. இதுவரையில் பிள்ளையான் கொலைக்குழுவினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 44 தேர்தல் வன்முறைகள் அரங்கேற்றப்படுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் முறையிட்டிருக்கிறது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். "தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, "அவனைப் பிடியுங்கள்" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2014 தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் அம்பிடிய சுமனரத்ன தேரருக்கு ஆதரவாக நிற்கும் காவல்த்துறையும் கருணாவும் தமிழ் அரச அதிகாரிகளைத் தாக்கும் சுமனரத்ன பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையோரத் தமிழ்க் கிராமங்களை அபகரித்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன எனும் பிக்குவே தலைமைதாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பிக்குவின் தலைமையில் அபகரிக்கப்பட்ட தமது நிலங்கள் தொடர்பாக மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்தபோது, பிரதேச செயலகத்தினால் அம்முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். தமிழரின் நிலங்களை அபகரிக்கும் இனவாதப் பிக்குவுடன் சமரசம் செய்யும் கருணா ஆனால், பிரதேச செயலாளரின் துணையோடு மக்களால் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டவேளையில், வெள்ளாவெளிப் பொலிஸார் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் பிக்குவின் தலைமையில் அண்மையில் சிங்களவர்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி படுவான்கரையின் சின்னவத்தை எனும் கிராமம் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் ஊடகவியலாளருக்கு பகிரங்க அச்சுருத்தல் விடும் பிக்கு வெள்ளாவெளி பொலீஸ் நிலையத்தில் தமது காணிகளில் அத்துமீறி சிங்களவர்கள் விவசாயம் செய்துவருவதாக லக்ஷ்மணன் நாகமுத்து, கமலலக்ஷ்மி நாகமுத்து, ராசமணி காத்தமுத்து, ராஜலக்ஷுமி காத்தமுத்து ஆகிய காணி உரிமையாளர்கள் முறையிடச் சென்றபோது பெளத்த பிக்குகளுக்கு எதிராக இலங்கையின் காவல்த்துறை ஒருபோதுமே செயற்படாது , ஆகவே உங்களின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி அவர்களை விரட்டியடித்ததாக அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணிகளை அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கு உள்ளூர் பிக்கு, மட்டக்களப்பு விகாரையின் சுமனரத்ன தேரரின் பணிப்பின்பேரிலேயே செயற்படுவதாக மேலும் இந்த உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த அடாத்தான காணி ஆக்கிரமிப்புப் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. கிழக்கில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் முகவர் பிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டம் முற்றான சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய தோழரான சுமனரத்ன தேரர் எனும் இந்தப் பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களை ராணுவத்தினரின் உதவியோடும், பொலீஸாரின் காவலோடும் , பிரதியமைச்சரும், மகிந்தவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரான கருணாவின் துணையோடும் தொடர்ச்சியாகச் செய்துவருவதாகக் கூறுகிறார். அரசிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கான அரசின் முயற்சிகளும் கருணாவின் துணையோடு பிக்குவினால் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை - மட்டக்களப்பு மற்றும், பொலொன்னறுவை - மட்டக்களப்பு ஆகிய எல்லையோரங்களில் தற்போது நடந்துவரும் இந்தப் பிக்குவின் தலைமையிலான நில அபகரிப்பு தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லையென்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 2013 இல் திருமதி வில்வரட்ணம் எனும் பிரதேச சபை அதிகாரியுடன் பட்டிப்பளையில் விவாதத்தின் ஈடுபடும் இனவாதப் பிக்கு சுமனரத்ன தேரர். சில மாதங்களுக்குப் பின்னர் பொலீஸாரைக் கூட்டிவந்து பிரதேச செயலாளருக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் தேரர். தேரருக்கு ஆதரவாக காவல் நிற்கும் சிங்களக் காவல்த்துறை. சிங்கள அரசாங்கம் தமிழர் பகுதிகளில் தான் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை, அபிவிருத்தி எனும் போர்வைக்குள் மறைத்து அரங்கேற்றிக்கொண்டு வருகிறது. உள்ளூர் அரச அதிகாரிகளால் தலையீடு செய்யப்பட்டபோதும் , அரசின் காவல்த்துறையும், ராணுவமும் அரச அதிகாரிகளை உதாசீனம் செய்து பிக்குவின் தலைமையிலான ஆக்கிரமிப்பினை ஆதரித்து, துணையாகவும் நிற்பது அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சலுகைகளுக்காக சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் தம்பிமுத்து, கருணா மற்றும் பிள்ளையான் இதற்கு மேலதிகமாக கிழக்குத் தமிழர்களின் சுபீட்சமான வாழ்வுக்காக அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் கருணாவும் பிள்ளையானும் பிக்குவிற்கு உதவியாக தமது இனத்தின் நிலங்களை ஆக்கிரமிக்க துணைநிற்பதாக மக்கள் விசனப்படுகின்றனர். இதேவேளை, தமிழர்களின் நிலங்களை வெளிப்படையாகவே சிங்களவர்களது என்று அபகரித்துவரும் சுமனரத்ன எனும் பிக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான விரிசலினை பெரிதாக்க முயன்றுவருவதாகத் தெரிகிறது. முஸ்லீம்களை தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான பொதுவான எதிரியென்று அடையாளப்படுத்தும் பிக்கு, தமிழர்கள் சார்பாக முஸ்லீம்களுக்கெதிராகத் தான் போராடுவதாகக் காட்டிக்கொண்டு, தமிழரின் நிலங்களைத் தொடர்ச்சியாக அபகரித்துவருகிறான் என்று பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2014 கருணாவின் உதவியுடன் சிங்களமயமாகும் கஞ்சிகுடிச்சியாறும் தங்கவேலாயுதபுறமும் புலிகளுடனான யுத்தத்தில் 2007 இன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் இரு புராதன தமிழ்க் கிராமங்களான கஞ்சிகுடிச்சியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளை சிங்கள ராணுவம் முற்றாக ஆக்கிரமித்திருக்கிறது. தற்போது இவ்விரு கிராமங்களையும் படிப்படியாக சிங்களமயமாக்கும் கைங்கரியத்தில் அரசும் ராணுவமும் ஈடுபட்டுவருகின்றன என்று தெரியவருகிறது. கடந்து 3 நாட்களுக்கு முன்னர் இப்பகுதிக்கும் விஜயம் செய்த பெளத்த பிக்கு ஒருவரும் இரு கருணா குழு முக்கியஸ்த்தர்களும் இவ்விரு கிராமங்களுக்கிடையேயும் விகாரை ஒன்றைக் கட்டுவதற்கான பணிகளை இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பிக்கப்போவதாகவும், அப்பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விரு கிராமங்களினது இடையில் வரும் சந்தியொன்றில் மகிந்த ராஜபக்ஷவின் பாரிய உருவப் படம் ஒன்றினை கட்டிய கருணா குழு முக்கியஸ்த்தரும் பிக்குவும், "மகிந்தவின் சிந்தனையையும், செயற்பாடுகளையும் இக்கிராமம் மக்கள் வரவேற்கின்றனர்" என்றும் பதாதைகளையும் தொங்கவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. கட்டப்பட்டுவரும் கஞ்சிக்குடியாறு பெளத்த விகாரையின் அமைவிடம் கூகிள் வரைபடத்தின்படி. https://www.google.com/maps/@7.0447405,81.7732417,196m/data=!3m1!1e3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மகிந்தவின் கட்சிக்குத் தாவிய பொடியப்பு பியசேன எனும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் இக்கிராமங்களில் மகிந்தவுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு தமிழர்கள் சிலரை பணத்திற்காக வாங்கியிருப்பதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தங்கவேலாயுதபுரம் கிராம அபிவிருத்திச் சபையின் தலைவரை அகற்றி மகிந்தவின் விசுவாசி ஒருவரை பதவியில் அமர்த்தும் கைங்கரியத்தில் பியசேன மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது. இவ்விரு கிராமங்களிலும் சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்துவரும்போதும்கூட, சுமார் 200 இற்கும் குறைவான குடும்பங்களே மீள்குடியேற்றப்பட்டு வாழ்வதாகத் தெரிகிறது. மீதிக்குடும்பங்கள் அடிப்படை வசதிகளேதும் அற்று அநாதரவாக அரசாலும், அரசுசாரா நிறுவனங்களாலும் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் தீவிரவாத தடுப்புப் பிரிவான விசேட அதிரடிப்படை இக்கிராமங்களில் ஆடிய நரவேட்டையினயடுத்து தங்கவேலாயுதபுரத்திலிருந்து 435 குடும்பங்களும், கஞ்சிகுடிச்சியாறு பகுதியில் இருந்து 332 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு உயிர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 "இனிமேல் எந்த விதமான கிளர்ச்சிகள் நடந்தாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள்" முன்னாள்ப் போராளிகளை எச்சரித்த ராணுவப் புல்நாய்வுத்துறையும் கருணா குழுவும் கடந்த 5 நாட்களாக கருணா குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலவிடங்களிலும் முன்னாள்ப் போராளிகளைத் தேடி கைதுசெய்தல் மற்றும் விசாரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இனக்கொலையின் நினைவுநாட்கள் இன்னும் ஒருசில தினங்களில் அனுஷ்ட்டிக்கப்படவிருக்கும் நிலையில் முன்னாள்ப் போராளிகளையும் தென் தமிழீழ மக்களையும் அச்சமூட்டும் நடவடிக்கைகளை ராணுவப் புலநாய்வுத்துறை கருணா குழுவின் உதவியோடு ஆரம்பித்திருக்கிறது. ராணுவமும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களால் வழிநடத்தப்படும் கருணா துணைக் கொலைப்படையினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையில் படுவான்கரையிலும், அதனைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் வாழ்ந்துவரும் முன்னாளப் போராளிகள் அனைவரும் அருகிலுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் முகாம்களுக்கு வருமாறு பணிக்கப்பட்டிருந்தனர். முகாம்களுக்கு இழுத்துவரப்பட்ட முன்னாள்ப் போராளிகளை மிரட்டிய புலநாய்வுத்துறை "இனிமேல் ஏதாவது கிளர்ச்சி நடவடிக்கைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கொல்லப்படுவீர்கள்" என்று மிரட்டியதோடு ராணுவ முகாம்களில் துப்புரவாக்கும் பணி போன்றவற்றிற்கு கட்டாயமாக வரவேண்டும் என்று விண்ணப்பப் படிவங்களைத் திணித்து பலவந்தமாக அவர்களின் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டதாகத் தெரியவருகிறது. இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின்பொழுது ராணுவத்துடன் பவனிவந்த கருணா குழு, போராளிகளின் வீடுகளுக்குள் நுழைந்து ராணுவத்தில் சேருமாறும் அப்படியில்லையென்றால் உங்களைக் கவனிப்போம் என்று கூறியும் மிரட்டியதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை மற்றும் படுவான்கரைப் பகுதிகளிலேயே இந்தக் கடுமையான அச்சமூட்டும் சுற்றிவளைப்புத் தேடுதல்களை கருணா குழுவினருடன் சேர்ந்து ராணுவப் புலநாய்வுத்துறை செய்துவருகிறது. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 குடும்பிமலை (சிங்களத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டபின் தொப்பிகல), பூலாக்காடு, கூழாவடி, திகிலவெட்டை, பெண்டுகல்ச்சேனை, கோரளைப்பற்று தெற்கு, கதிரவெளி, வாகரை, பால்ச்சேனை, வம்மிவெட்டுவான், பனிச்சங்கேணி, வாகரை மத்தி மற்றும் கோரளைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளிலேயே இந்தத் தேடுதலும் சுற்றிவளைப்பும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. கோரளைப்பற்று தெற்கின் பகுதிகளுக்குள் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட ராணுவத்தினரும், துணைக்குழுவினரும் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்று சிங்களத்தில் அச்சிடப்பட்டிருந்த படிவங்களில் போராளிகளின் கையொப்பங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. வீட்டு உறுப்பினர்கள், தற்போது செய்யும் வேலை, போய்வரும் இடங்கள், வழமையான பயணப் பாதை ஆகிய விடயங்களை அவர்கள் பதிந்துகொண்டு சென்றதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை பிரதேசத்திலிருக்கும் முன்னாள்ப் போராளிகளில் குறைந்தது 250 பேரின் வீடுகளுக்குச் சென்று அவர்களை தமது முகாம்களுக்கு வருமாறு ராணுவமும் துணைக்குழுவும் பணித்தபோதும்கூட பனிச்சங்கேணி முகாமிற்கு வெறும் 26 முன்னாள்ப் போராளிகளே சமூகமளித்திருந்ததாகத் தெரியவருகிறது. சுற்றிவளைப்புகளின் பொழுது அனைத்து முன்னாள்ப் போராளிகளையும் கைதுசெய்த ராணுவம், ஒரேவிதமான கேள்விகளை அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. கிராமப்புறத் தலைவர்கள் ராணுவத்தின் புதிய பதியும் நடவடிக்கை பற்றிக் கேட்டபோது, முன்னாள்ப் போராளிகளுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவே விபரங்களைச் சேகரிப்பதாகக் கூறியிருக்கிறது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2014 துணைராணுவக் குழுவினராலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுவரும் முன்னாள்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள். ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களின் எடுபிடிகளான துணைராணுவக் குழுவினரும் மட்டக்களப்பில் முன்னாள்ப் போராளிகளையும் சாதாரண பொதுமக்களையும் தொடர்ச்சியாக அச்சுருத்திவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மையில்க் கூட வவுனியாவில் வசித்துவரும் முன்னாள்ப் போராளிகள் குடும்பம் ஒன்றினை கைதுசெய்து அழைத்துச் சென்ற துணைராணுவக் குழுவினரும், புலநாய்வுத்துறையினரும் விசாரணைகளின் பின்னர் பூசா தடைமுகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளனர். கருணாவின் பிரதேசவாதப் பிரிவிற்கு முன்னரே இயக்கத்தைவிட்டு விலகிய இவர்கள் இருவரும் திருமணம் முடித்து பொதுவாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. வவுனியாவில் சாதாரண தொழில்களை செய்து தமது வாழ்க்கையினை ஓட்டிக்கொண்டிருந்த இந்த முன்னாள்ப் போராளித் தம்பதிகளே பிள்ளைகளுடன் கருணா துணைராணுவக் குழுவினராலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும் கைதுசெய்யப்பட்டு பூசாவில் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்களின் மூன்று குழந்தைகளும் மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இருக்கும் அவர்களின் பேத்தியாரின் வீட்டில் விடப்பட்டிருக்கிறார்கள். வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு பூசாவில் அடைக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளின் விபரங்கள் : லோகனாதன் வீரக்குட்டி, 41, ஆயித்தியமலை, மட்டக்களப்பு. மகேஸ்வரி கிருஷ்ணபிள்ளை 30, சந்திவெளி, மட்டக்களப்பு. இவர்களுடன் கைதுசெய்யப்பட்ட இன்னொரு முன்னாள்ப் போராளியின் விபரம் : ரவிச்சந்திரன் கிருஷ்ணபிள்ளை 36, சந்திவெளி, மட்டக்களப்பு. இவர் 2001 இல் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் 2004 இல் விடுதலையாகியிருந்தவர் என்பதும், தற்போது சந்திவெளியில் வாழ்ந்துகொண்டிருந்தவேளை கருணா குழுவினராலும் புலநாய்வுத்துறையினராலும் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தென் தமிழீழத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அனைவரையும் கூட்டம் ஒன்றிற்கு வருமாறு கருணா துணைராணுவக் கொலைக் குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் அண்மையில் பணித்திருந்தனர். இம்மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், "புலம்பெயர் தமிழரின் கதைகளையோ, அவர்களது கருத்துக்களையோ நீங்கள் கேட்கவோ ஏற்றுக்கொள்ளவோ கூடாது. மேற்குலகத்தினர் புலம்பெயர் தமிழர்கள் மூலம் உங்களுக்கு ஆயுதங்களை வழங்கி மீண்டும் ஒரு போருக்குள் இழுத்துவிடப் பார்க்கிறார்கள். அவர்களின் திட்டத்திற்காக வீணே பலியாகாதீர்கள்" என்று கருணாவினாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் தமக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டது என்று இக்கூட்டத்திற்கு வலிந்து கொண்டுவரப்பட்ட முன்னாள்ப் போராளிகள் தெரிவித்தனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, ஐப்பசி, 2011 குறிப்பு : விக்கிலீக்ஸில் வந்த செய்தி. முன்னர் இணைக்கமுடியாமல்ப் போய்விட்டது. அதனால் தொடரின் நடுவே இதன் முக்கியத்துவம் கருதி இணைக்கிறேன். அமெரிக்கத் தூதுவர் பட்ரிஷியா அவர்களால் வோஷிங்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கேபிள் செய்தி அம்பாறைத் தேர்தல்கள் : பயமுருத்தலும், முறைகேடல்களும் "அமெரிக்க தூதரும் (நானும்), யு எஸ் எயிட் மிஷன் நிர்வாகியும் அம்பாறை மாவட்டத்திலிருந்து பத்து வர்த்தகப் பிரமுகர்களையும் அம்பாறை மாவட்ட அரச அதிபர் கன்னங்கரவையும் சந்தித்தோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழர்களின் எண்ணிக்கை அம்பாறையில் மிகவும் குறைவானது. 2005 கணக்கெடுப்பின் பிரகாரம் 40 வீதம் சிங்களவர்களும், 40 வீதம் முஸ்லீம்களும் 18 வீதம் தமிழர்களும் அம்பாறையில் வாழ்கிறார்கள்". மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் சூழ்நிலை ஆயுததாரி "தேசமான்ய" இனியபாரதி "அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்கள் எம்மிடம் கூறிய தகவல்களின்படி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளரான கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி சுமார் 700 ஆயுததாரிகளை வைத்துக்கொண்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கிறார் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதனை அச்சுருத்தித் தடுத்துவருகிறார் என்றும் தெரியவருகிறது". "ஆனாலும், மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு மிகவும் பலவீனமாகவே இங்கு காணப்படுகிறது. கடந்த தை மாதம் அவரது ஒருங்கிணைப்பாளர்களால் இங்கு கூட்டப்பட்ட தேர்தல் கூட்டமொன்றிற்கு வந்த பொதுமக்கள் 500 பேரில், ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன் உலர் உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. தமிழ் வக்காளர்களைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ஷவைக் காட்டிலும் சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. அம்பாறை மாவட்ட வர்த்தகப் பிரமுகர்களின் கருத்துப்படி குறைந்தது 85 வீதமான தமிழர்களும், 60 இலிருந்து 80 வீதமான முஸ்லீம்களும், 50 வீதமான சிங்களவர்களும் சரத் பொன்சேக்காவுக்கே வக்களிப்பார்கள் என்று கருதுகிறார்கள். ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் ராஜபக்ஷ 67 வீதமான வாக்குகளையும் பொன்சேக்கா 30 வீதமான வாக்குளையுமே பெற்றதாக இறுதியில் அரசால் அறிவிக்கப்பட்டது". ------------------------------------------------------------------------------------------------------------ "அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் அரச அதிபர் இதுதொடர்பாக தன்னாலான முயற்சிகளை எடுத்துவருவதாகக் கூறுகிறார். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி எதிரணியினரின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த பேரூந்துகள் மீது உந்துரிகளில் வந்த சுமார் 40 ஆயுததாரிகள் ராணுவச் சாவடியொன்றில் வைத்து வாட்களாலும் தடிகளாலும் தாக்கியிருக்கின்றனர். இப்பேரூந்துகளின் அமைவிடம் மற்றும் பாதை பற்றிய தகவல்களை தாக்குதல் நடத்தியவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்கிறது. அதே நாள் வேறொரு சம்பவத்தில் குறைந்தது 25 எதிரணி ஆதரவாளர்கள் இதே அணியினரால் தாக்கப்பட்டுக் காயப்பட்டிருக்கிறார்கள். பொலீஸாரைப் பாவித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட அரச அதிபர் முயல்கிறார். சுமார் 70 - 8- பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோதும் குறைந்தது 25 - 30 வரையான பொலீஸார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று தெரியவருகிறது. இதனால் பொதுக்கூட்டங்களை தேர்தல் முடியும்வரை ஒத்திவைப்பதாக மாவட்ட அரச அதிபர் கூறுகிறார். -------------------------------------------------------------------------------------------------------------------- "சுமார் 420,000 இலிருந்து 627,000 வரையான வாக்களர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், அரச ராணுவத் துணைக்குழுக்களின் வன்முறையினால் பலர் வாக்களிப்பில் கல்ந்துகொள்ளத் தயங்குவதுபோலத் தெரிகிறது. சுமார் 59,000 சிங்கள ஊர்காவல்ப் படையினைக் கொண்ட அணியொன்றினை உள்ளூர் அரசியல்வாதியான சரத் வீரசேகரா எனப்படுபவர் தலைமைதாங்கி நடத்துவதாகத் தெரிகிறது. இம்மாவட்டத்தில் இருக்கும் சிங்களவர்களுக்கான பாதுகாப்பிற்கே இப்படை அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது". ---------------------------------------------------------------------------------------------------------------------- தேர்தல் செயன்முறைகள் "அம்பாறை மாவட்டத்தின் அதிகாரம் வாய்ந்த தேர்தல் அதிகாரியாக அம்மாவட்டத்தின் அரச அதிபரே இருக்கிறார். சுமார் 20 ஒருங்கிணைப்பு நிலையங்களை இம்மாவட்டத்தில் நிறுவியுள்ள அவர், தேர்தல் கால முறைகேடுகளைக் கண்காணிக்க அதிகாரிகளையும் நிறுத்தியிருக்கிறார். இம்மாவட்டத்தில் முறையிடப்படும் தேர்தல் கால முறைகேடுகளை மக்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் பெற்றுக்கொண்டு தேர்தல் ஆணையாளருக்கு அதுபற்றி அறிவிப்பது அவரது கடமையாகும். தேர்தல்களின் நிறைவில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், இம்முறை தேர்தல்களில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரின் தகவலின்படி மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களுட்பட 8 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்த உத்தியோகபூர்வ பணிப்பின் பேரில் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு அறியத்தருமாறு கட்டளையிடப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்". "இதற்கு மேலதிகமாக போலி வாக்காளர் அட்டைகளைப் பாவித்து வாக்களித்தமை, வாக்குப் பெட்டிகளை போலியான வாக்குகளைக் கொண்டு நிரப்பியமை, கைகளில் இடப்பட்ட மையினைக் கழுவியபின்னர் பலதடவைகள் வாக்களர்கள் வாக்களித்தமை உட்பட பெருமளவு தேர்தல் மோசடிகளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மகிந்தவின் ஒருங்கிணைப்பாளர்கள் நடத்தியிருக்கிறார்கள்".
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்கழி 2013 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னர் மட்டக்களப்பில் குடியேறிய தமிழர்களை வஞ்சித்த கருணா முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர்தப்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுமார் 1100 குடும்பங்கள் மீளவும் மட்டக்களப்பில் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் உதவிகள் அனைத்துமே மறுக்கப்பட்டு மிகவும் அவலமான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 2004 இல் மட்டக்களப்பிலிருந்து வன்னிநோக்கி இம்மக்கள் இடம்பெயர்ந்தபொழுது, இவர்களின் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துக்கொண்ட கருணாவும் அவரது குழுவினரும், மீதமிருந்த வீடுகளையும், ஏனைய சொத்துக்களையும் அழித்தது நினைவிலிருக்கலாம். இனவழிப்புப் போரின் பின்னர் இவர்கள் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து குடியேறியபோது அரசசார்பற்ற நிறுவனங்களும், ஐ நா அமைப்புக்களில் சிலவும் இவர்களுக்கான தற்காலிக தங்கு கொட்டகைகளை வழங்கியிருந்தன. ஆனால், அதன்பிறகு இம்மக்களுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரியவருகிறது. தமக்கு ஐ நா வினாலும், அரசாரா தொண்டர் நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட கொட்டகைகளைக் கொண்டே தாம் வேறுபடுத்தி அடையாளம் காணப்படுவதாகவும், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணங்கள் தமது கொட்டகைகளை தாண்டிச் சென்றுவிடுவதாகவும், வன்னியில் புலிகளுடன் இருந்த காரணத்தினாலேயே தாம் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்தியாவின் இலவச வீட்டுத் திட்டத்திலும் தாம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கொடூரமான இனவழிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுத்து, அவலங்களைச் சுமந்து மீண்டும் தமது மாவட்டத்திற்குத் திரும்பியிருக்கும் இத்தமிழர்களுக்கான அனைத்து நிவாரணங்களையும் கருணா தனது அரசியல் பலத்தினைப் பாவித்து தடுத்து வருவதாகவும், தம்மை வந்து பார்ப்பதற்குக் கூட அரச அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 4000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் திட்டத்தின்படி, மட்டக்களப்பில் மாத்திரம் 2000 வீடுகள் கட்டப்படுவதாகவும். இவற்றுள் ஒரு வீடுகூட வன்னியிலிருந்து மட்டக்களப்பு திரும்பியிருக்கும் மக்களுக்கு ஒதுக்கப்படவில்லையென்றும், பெரும்பாலான வீடுகள் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர் தப்பி, ராணுவ தடுப்புமுகாம்களில் சித்திரவதைகளைச் சந்தித்து, முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு அல்லற்பட்ட இம்மக்கள் கோரளைப்பற்று வடக்கு - வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான், வவுணதீவு, கோரளைப்பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று மற்றும் மண்முனைப்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, புரட்டாதி 2013 முன்னாள்ப் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கத் தொடங்கியிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் கைங்கரியத்தில் கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டிருப்பதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண் போராளிகளை பலவந்தமாக இணைக்க ஆரம்பித்திருக்கும் இத் துணை ராணுவக் கொலைக்குழுக்கள் அவ்வாறு இணைய மறுக்கும் போராளிகளின் பெற்றோரை அல்லது குடும்பஸ்த்தவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர் என்று இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை, வெள்ளாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளில் முன்னாள்ப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் துணைராணுவக் கொலைக் குழுக்கள் போராளிகளை மிரட்டி வருவதுடன் அவர்களைப் பலவந்தமாக ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இறுதிப் போரின்பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து, புணர்வாழ்வு எனும்பெயரில் கடுமையான உடல், உல சித்திரவதைகளுக்குப் பின்னர் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட பல போராளிகள் இன்னும் மன ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்பட்டே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இப்போராளிகளை மிரட்டி ஆக்கிரமிப்பு ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தினை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கொலைக்குழுக்களான கருணாவும் பிள்ளையானும் செய்துவருகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் எஜமானர்களால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரையில் ஒவ்வொரு துணைப்படை உறுப்பினரும் குறைந்தது இரு போராளிகளையாவது ஒரு மாதத்தில் ராணுவத்தில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என்றும் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே கருணாவும் பிள்ளையானும், திருமணம் முடித்த அல்லது தனியே இருக்கும் ஆண் மற்றும் பெண் போராளிகளைக் கட்டாயப்படுத்தி இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இந்த பலவந்த ஆட்சேர்ப்புப் பற்றி மனிதவுரிமை அமைப்புக்களிடம் தெரிவித்தால் தாக்குதலுக்கு உள்ளகலாம் என்கிற அச்சத்தில் இப்போராளிகள் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ராணுவத்திடம் சரணடைந்து கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் நடைபிணங்களாக சமூகத்தில் உலவ விடப்பட்டிருக்கும் முன்னாள்ப் போராளிகளை ராணுவப் புலநாய்வுத்துறையும், துணைப்படைக் கொலைக் குழுக்களும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது வீட்டிற்கு வந்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் தனது வீட்டிற்கு வந்துபோகும் உறவினர்கள் பற்றிக் கடுமையாக விசாரணை செய்ததாக ஒரு பெண்போராளி கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னாள்ப் போராளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில நிவாரணங்களைக் கூட ராணுவப் புல்நாய்வுத்துறையினரும், துணைப்படைக் கொலைக் குழுவினரும் சந்தேகிப்பதாகவும், இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்கள் போராளிகளைச் சந்தித்த மறு நிமிடமே புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழுக்களும் போராளிகளை விசாரணைகளுக்கு இழுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்து கையொப்பம் இடும்படி தம்மைச் சித்திரவதை செய்யும் ராணுவப் புலநாய்வுத்துறை, ஒவ்வொருமாதமும் தம்மால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து போராளிகளின் ஒப்புதல் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்வதாகவும், நிவாரணம் என்று இதுவரை அரசால் தமக்கு எதுவுமே வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, ஆவணி 2013 ஐ நா மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருகைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துணை ராணுவக் குழுக்கள் திருகோணமலை மாவட்டத்தில் ராணுவ ஆக்கிரமிப்பினால் இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இலங்கை ராணுவமும் துணை ராணுவக் குழுவும் ஐ நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகைதொடர்பாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் எவரையும் பங்குகொள்ளவேண்டாம் என்றும், அவ்வாறு பங்குகொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதேவேளை, நவிப்பிள்ளை தமிழ் மக்களுடன் கலந்துரையாடும் எந்த நிகழ்வினையும் வெளியிடக் கூடாது என்று தீர்மானித்துள்ள அரசு, உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் இந்தக் கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதனை பொலீஸாரைக் கொண்டு தடுத்திருக்கிறது. இது இவ்வாறிருக்க, ராணுவ புலநாய்வுத்துறையினரால இயக்கப்படும் பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்களை சேர்ந்தவர்கள் ஐ நா ஆணையாளரின் வருகையினையொட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறார்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றும், அவர்களே தமிழர்களுக்கு இதுவரை பிரச்சினையாக இருந்தார்கள் என்றும், அரசு தமிழர்களைக் காத்து வருகிறதென்று எழுதப்பட்ட பதாதைகளை இத் துணைராணுவக் குழுவினர் தாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. துணைராணுவக் குழுக்களுக்கு பக்கதுணையாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிகல உறுமய மற்றும் மக்கள் விடுததலை முன்னணி ஆதரவாளர்கள் பொய்யான சாட்சிகளை திருகோணமலை செயலகத்திற்கு அழைத்துவந்து நவிப்பிள்ளையின் முன்னால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்றினை நடத்தியதாகவும் தெரியவருகிறது. ராணுவத்தினரினதும், கருணா பிள்ளையான் கொலைக்குழுக்களினதும் அச்சமூட்டும் மிரட்டல்களுக்கு மத்தியிலும்கூட சில தமிழர்கள் ஆங்காங்கே கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், காணாமற்போனவர்களுக்கான நீதிவழங்கல், அத்துமீறிய அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் மீள்குடியேற்றம் பற்றி பேசியதாகவும் தெரிகிறது. நவிப்பிள்ளையின் வருகையினையொட்டி முஸ்லீம்கள் பெரியளவில் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கவில்லையென்று தெரிகிறது. சம்பூர் பகுதியிலிருந்து ராணுவத்தால் விரட்டப்பட்ட அகதிகள் தங்கியிருந்த கிளிவெட்டி தங்கு முகாம் மற்றும் நாவலடி, வெருகல் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்ததாகத் தெரியவருகிறது. ஆணையாளரைச் சந்தித்த தமிழ் சமூக அமைப்புக்கள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட சைவக் கோயில்கள், சிங்களமயமாக்கப்படும் தமிழர் தாயகம், மீள்குடியேற்றத்தில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள், அகதிமுகாம்களின் இன்றைய அவலநிலை என்பன பற்றிய விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்ததாகத் தெரியவருகிறது. இதேவேளை, கடந்த 2 அல்லது 3 வருடங்களாக தமிழர்களுக்கு வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப்பொருட்களுக்கான அட்டைகளை அரச அதிகாரிகள் அவசர அவசரமாக வழங்கியதைக் காணமுடிந்தது என்று உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், ஆணையாளரின் வருகையினையொட்டி, இதுவரை காலமும் அகதிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 400 தமிழர்களை ராணுவம் அவசர அவசரமாக கூனித்தீவில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் குடியேற்றியிருப்பதாகவும் தெரிகிறது. சிங்கள ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுனர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் ஜயவிக்கிரம மற்றும் திருகோணமலை அரச அதிபர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி டி ஆர் டி சில்வா ஆகியோர் ஆணையாளருடன் மேற்கொண்ட சந்திப்புக்களை உள்ளூர்பத்திரிக்கையாளர்கள் பார்வையிடுவதற்கு பொலீஸார் அனுமதிக்கவில்லை. இலங்கை ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளுடனான நவிப்பிள்ளையின் சந்திப்பிற்கு மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
-
இப்பகுதிகளில் தற்போதைய நிலைமை எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நிலைமை சுமூகமாகியிருக்கும் என்று நம்புவதற்கும் எந்தக் காரணமும் இல்லை. ஆகவே, இப்பகுதி மக்களுக்கான குறைந்தபட்சம் நன்னீர் வசதிகளையாவது புலம்பெயர் அமைப்புக்கள் செய்துகொடுத்தால் நல்லது. இதுபற்றி மேலதிகமாக தகவல் தெரிந்தோர் பரிமாறலாம். ஆனால், செய்யப்படுவது அவசியம்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, ஆவணி 2013 தமது மீள்குடியேற்றத்திற்காக புலம்பெயர் தமிழர்களிடம் உதவிகோரும் அரசாலும், அரச தூனைராணுவக் குழுக்களாலும் கைவிடப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் அமைப்புக்களும் இலங்கை அரசு ஊடாகவும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துவருவதாக திரும்பத் திரும்பக் கூறப்பட்டாலும் கூட இந்த உதவிகள் எவையுமே பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை வந்தடையவில்லை என்று அம்பாறை மாவட்டத்தில் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து அவதியுறும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்களிலிருந்து தமக்கு எதுவித உதவிகளும் கிடைக்கப்போவதில்லை என்று கூறும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள், தமது மீள்குடியேற்றத்திற்கு புலம்பெயர் அமைப்புக்களும், தனிநபர்களும் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். திருக்கோயில், நாவிதான் வெளி, ஆலையடி வேம்பு, கல்முனைத் தமிழ்ப் பகுதி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 6 வருடங்களுக்கு மேலாகியும் உறுதியளிக்கப்பட்ட மீள்குடியேற்ற உதவிகளை அரசோ அல்லது அரசின் மீள்குடியேற்றத்திற்கான துணையமைச்சராகவிருக்கும் துணைராணுவக்குழுத் தலைவர் கருணாவோ இதுவரையில் எதுவிதமான உதவிகளையும் தமக்கு வழங்கவில்லை என்றும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்ட தமிழர்கள். இம்மாவட்டத்தின் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலும் நன்னீருக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும், பெருமளவு பிள்ளைகள் போஷாக்கிண்மையினால் அல்லற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் தாய்மார்கள் இதுபற்றித் தெரிவிக்கையில், தமது வீட்டிற்கான குடிநீருக்காக பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்றுவரவேண்டியிருப்பதாகவும், பல நேரங்களில் சுகயீனமுற்றிருக்கும் தமது குழந்தைகளை வீட்டில் தனியே விட்டிவிட்டே தாம் செல்வதாகவும் கவலைப்படுகின்றனர். மீள்குடியேற்றம் என்கிற பெயரில் இக்குடும்பங்கள் தற்காலிகக் கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இம்மக்களின் வீடுகளும், விளை நிலங்களும் அழிக்கப்பட்டு காடுகளாக மாறிவருவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள். இக்கிராமங்கள் யுத்த காலத்தில்கூட தன்னிறைவான நிலையில் இருந்ததாகவும், இப்பகுதியில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட வாழ்வாதார அழிப்பினால் இன்று இந்த மக்கள் மற்றையவர்களிடம் கையேந்தும் நிலையினை அரசும் அரசின் ஏஜெண்டுக்களும் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. பலவிடங்களில் தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ள இக்குடும்பங்கள் தமக்குள் ஒன்றாக இணைந்து தமது பகுதியை அபிவிருத்தி செய்வதையோ, தமது அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதையோ அரசும் அரசின் துணைராணுவக் குழுக்களும் தடுத்துவிட்டதாக மேலும் இம்மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள். அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேசத்தில், தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சியாறு மற்றும் உடும்பன்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்கள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும், மீள்குடியேற்றத் துணையமைச்சரான கருணா தமது அவலங்கள் பற்றி அக்கறை கொண்டவராகத் தெரியவில்லையென்றும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 450 குடும்பங்கள் வசித்து வந்த தங்கவேலாயுதபுரத்தில் அரச துணை ராணுவக்குழுக்களினதும், தொடர்ச்சியான அரச ராணுவ அடக்குமுறையினாலும் பெருமளவு குடும்பங்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 89 குடும்பங்கள் மட்டுமே இப்பகுதியில் பல சவால்களுக்கு மத்தியிலும் வசித்துவருவதாகத் தெரிகிறது. இதே வகையான அவல வாழ்வே இப்பகுதியில் பல கிராமங்களிலும் தொடர்வதாக மக்கள் மேலும் தெரிவித்தனர். ஐரோப்பிய அபிவிருத்தி நிலையத்தினால் கட்டப்பட்ட இரு நன்னீர்க் கிணறுகளைத்தவிர இப்பகுதியில் வேறு கிணறுகள் ஏதும் அரசால் இதுவரையில் அமைக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இப்பகுதி மக்கள் தமது நன்னீர் தட்டுப்பாடு பற்றி மேலும் கூறுகையில், இப்பகுதியில் பாரிய கற்பாறைகள் இருப்பதால், இவற்றினைக் குடைந்து கிணறுகளை வெட்டுவதென்பது தமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் என்றும், இப்பகுதியில் குறைந்தது 30 அடிகள் வரை தோண்டினால் மட்டுமே நீரைப் பெறுதல் சாத்தியம் என்றும் தெரிவிக்கின்றனர். இப்பகுதிச் சிறார்கள் குறைந்தது 7 கிலோமீட்டர்கள் நடந்தே தமது பாடசாலைக்குச் செல்லவேண்டியிருக்கிறது. கஞ்சிகுடிச்சியாறு பாடசாலையில் இன்றுவரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வசித்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்கும் என்று தலா 320,000 ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அரசு கூறினாலும், இதுவரை ஒன்று அல்லது இரண்டு வீடுகள் மட்டுமே பார்வைக்காகக் கட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகள் பற்றி அரசோ கருணாவோ பேசுவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இப்பகுதியில் உலவும் யானைகளினால் பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்க் கிராமங்களுக்கிடையே தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய தற்காலிகள் வீதிகளைக் கூட அரசு அமைத்துத்தர மறுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தமிழர்கள் சிங்கள அரசாலும், அரசின் துணைராணுவக் குழுக்களாலும் திட்டமிட்ட ரீதியில் வாழ்வாதார அழிப்பிற்கும், புறக்கணிப்பிற்கும் உட்பட்டு அவதிப்பட்டுவரும் அதேவேளை இக்கிராமங்களுக்கு அப்பாலிருக்கும் சிங்கள முஸ்லீம் கிராமங்கள் அரசினாலும், முஸ்லீம் அமைச்சர்களினாலும் வெகுவாக அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதாகத் தெரிகிறது. இதற்குமேலதிகமாக பல கரையோரத் தமிழ்க் கிராமங்கள் அபிவிருத்தி எனும்பெயரில் சிங்களவர்களால் குடியேற்றப்பட்டு வருகின்றன என்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய முகாம் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் தமது அவலம் பற்றிக் கூறுகையில், முன்னர் 300 குடும்பங்கள் வாழ்ந்துவந்த இக்கிராமத்தில் தற்போது வெறும் 150 குடும்பங்கள் மட்டுமே வசிப்பதாகவும், தமது கிராமத்தின் ஒருபகுதியில் மற்றைய இரு இனங்களையும் சேர்ந்த குடும்பங்கள் அரசால் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆவணி 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான ஆதரவுக்காக மக்களை வஞ்சித்த கருணா உன்னிச்சைக் குளத்தின் இடப்புற வாய்க்கால் பகுதியிலிருக்கும் சுமார் 1830 ஏக்கர் விவசாய நிலம் நீரின்றி வறண்டு போகும் நிலையினை அடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காக இப்பகுதிமக்களைப் பழிவாங்க மகிந்தவின் கட்டளையின்பேரில் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதிக்கான நீர்வழங்கும் நீர்க்கதவுகளை முற்றாக மூடிவிடுமாறு பணித்துள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளரை இது தொடர்பாக கண்டித்திருப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப. செல்வராசாவிடம் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றினையும் பதிவுசெய்துள்ளனர். மேலும், இந்தப் பழிவாங்கல் நடவடிகையில் தொடர்புபட்ட அதே பொறியியலாளர் மகிந்தவின் அரசுக்கு நெருக்கமானவர் என்று அறியவருவதுடன், கடந்த மாதம் கொழுவாமடு, வாகனேரி பொத்தானைப் பகுதியில் கமச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதில் நேரடியாகப் பங்குபற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தத் தாக்குதலில் 22 விவசாயிகள் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து கருணாவின் நெருங்கிய சகாவான இந்தப் பொறியியலாளருக்கும், கருணாவுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் ஒன்றினை இப்பகுதி விவசாயிகள் நிகழ்த்தியதும் நினைவிலிருக்கலாம்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, ஆனி 2013 தமிழர்களின் விவசாயத்திற்கான நீரை நிறுத்தி தமது உல்லாச விடுதிகளுக்கு வழங்கும் பிள்ளையானும் மகிந்தவும் தமிழர்களின் விவசாயத்திற்கும், வாழைச்சேனை காகித ஆலைக்கும் வழங்கப்பட்டுவரும் நீரினை நிறுத்தி, தமது உல்லாசப் பயணிகள் விடுதிக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரான பிள்ளையானும் அவரது எஜமானர்களில் ஒருவருமான மகிந்தவும் வழங்கிவருவதாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசாங்கத்தின் நிதியமைச்சினை தன்னகத்தே வைத்திருக்கும் மகிந்த வாகனேரிக்குளத்திலிருந்து பெறப்படும் நீரினை அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்குவதனை முற்றாகத் தடுத்திருப்பதாகவும் தெரிகிறது. நிதியமைச்சினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் பணிப்புரையின்படி கல்க்குடா மற்றும் பாசிக்குடா ஆகிய பகுதிகளில் பிள்ளையானினாலும், மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினாலும் நடத்தப்படும் உல்லாசப் பயணிகள் விடுதிகளுக்கே இந்த நீர் வழங்கப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், வாழைச்சேனை காகித ஆலைக்கு காவத்த முனைப் பகுதியிலிருந்து வழங்கப்படும் நீரினை முற்றாகத் தடுக்குமாறும் நிதியமைச்சு நீர்ப்பாசனத் திணைக்களத்தினைப் பணித்திருக்கிறது. வாகனேரிக் குளத்திலிருந்து பெறப்படும் நீரினால் சுமார் 8,156 ஏக்கர்கள் நிலத்தில் விவசாயம் செய்வது ஏதுவாக்கப்பட்டிருந்ததோடு, குறைந்தது 6700 குடும்பங்கள் பயனடைந்துவந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் இதே நீர்ப்பாசனத் திட்டத்திலிருந்து காகித ஆலைக்கும் நீர் வழங்கப்பட்டு வந்ததனால் குறைந்தது 700 தமிழ் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். தற்போது மகிந்த அரசினாலும், பிள்ளையானினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் தடையின்மூலம் குறைந்தது 7500 தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த காலத்தில் 1994 இலிருந்து விவசாயத்திற்கும் காகித ஆலைக்கும் தங்குதடையின்றி நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, ஆனி 2013 மட்டக்களப்பில் மக்களிடம் கப்பம் அறவிடும் ராணுவமும், துணைநிற்கும் துணைராணுவக் குழுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் துணைராணுவக் குழுக்களின் உதவியோடு தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்து, சிங்களவர்களைக் குடியேற்றிவரும் ஆக்கிரமிப்பு ராணுவம் அதே துணைராணுவக் குழுக்களின் உதவியோடு பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து புதிய கப்பம் அறவிடுதல் நடவடிக்கையினையும் தொடங்கியிருக்கிறது. இதன்படி கோரளைப்பற்று தெற்கின் கிரானைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் தமது கால்நடைகளை மேய்த்துவரும் தமிழர்களிடமிருந்து ஒவ்வொரு கால்நடைக்கும் 300 ரூபாய்களைத் தமக்குக் கப்பமாக வழங்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. அத்துடன் இக்கப்பமானது ஒவ்வொருமாதமும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தம்மிடம் கொடுக்கப்படவேண்டும் என்றும் அச்சுருத்தியிருக்கிறது. அல்லி ஓடைப் பகுதியில் இவ்வாறு தமிழ் விவசாயிகளிடமிருந்து கப்பம் அறவிட்ட துணை ராணுவக் குழுவினரும் ராணுவமும் இந்தப் பணத்தினை யுத்தத்தில் அங்கவீனமான சிங்கள ராணுவத்தினருக்கான வீடுகளைக் கட்டுவதற்காகப் பாவிக்கப்போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். முன்னதாக, கருணா குழுவும், பிள்ளையான் குழுவும் இந்த விவசாயிகளிடம் தமது பங்கிற்கும் கப்பம் அறவிட்டு வந்தனர். ஆனால், இம்முறை அந்தக் கப்பத்திற்கு மேலதிகமாக ராணுவமும் கப்பம் அறவிடத் தொடங்கியிருக்கிறது. துணை ராணுவக் குழுக்களாலும், ஆக்கிரமிப்பு ராணுவத்தாலும் தமது வாழ்வாதாரத்தைச் சிறிது சிறிதாக இழந்துவரும் தமிழ் விவசாயிகள், தம்மை நிரந்தரமாகவே இந்த மேய்ச்சல் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த சிங்கள் அராணுவம் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும், அதற்கு துணைராணுவக் குழுக்கள் ஒத்தாசையளித்துவருவதாகவும் கூறுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் மேய்ச்சலில் ஈடுபடும் விவசாயிகளை பதிவுசெய்யும்படி கேட்கப்பட்டதற்கிணங்க பல விவசாயிகள் தமது பெயரினைப் பதிவுசெய்திருந்தனர். தற்போது இந்த பெயர்ப் பட்டியலைக் கொண்டே ராணுவமும் துணை ராணுவக் குழுக்களும் மக்களிடம் கப்பம் அறவிடுவதாகக் கூறப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு தமிழ் விவசாயியும் குறைந்தது 3000 ரூபாய்களை மாதாந்தக் கப்பப் பணமாக ராணுவத்திற்கும், இன்னொரு தொகையினை துணைராணுவக் குழுக்களுக்கும் செலுத்திவருகின்றனர். இப்பகுதியில் ராணுவத்தால் சுமார் 500 சிங்களக் குடும்பங்கள் அண்மையில் குடியேற்றப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவென்று சிவிலியன் பாதுகாப்புப் பிரிவு எனும் பெயரில் ராணுவத்திலிருந்தும் பொலீஸிலிருந்தும் பதவிவிலகியவர்களைக் கொண்டு சிங்கள துணைராணுவக் குழுவொன்றினை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் விவசாயிகளின் கால்நடைகளைக் கொல்வது, களவாடிச் செல்வதுபோன்ற குற்றச்செயல்களில் இந்தச் சிங்கள துணைராணுவக் குழுவே ஈடுபட்டு வருவதாகவும், தேடிச் செல்லும் தமிழர்களைத் தாக்குவது கட்டிவைப்பதுபோன்ற செயல்களிலும் இந்த துணைராணுவக் குழு ஈடுபட்டுவருவதாகவும் தமிழர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இப்பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்களால் அல்லி ஓடை எனும் தமிழ்க் கிராமத்தின் பெயர் தற்போது "அல்லியாய ஓட" எனும் சிங்களப் பெயருடன் அழைக்கப்படுவருவதாகவும் கூறப்படுகிறது. இணைக்கப்பட்ட படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பு பெளத்தவிகாரை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குடும்பிமலைப் பகுதிக்கு அண்மையாகத் தமிழர்கள் பிரவேசிப்பதைத் தடுத்திருக்கும் ராணுவமும், சிங்களத் துணைராணுவக் குழுவும் பாரிய நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுவருவதாக தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, சித்திரை 2013 இந்திய அரசின் வீட்டுத்திட்டத்திட்டத்தினை தமது உறுப்பினர்களுக்கு வழங்கிய துணைராணுவக் குழுக்கள் மட்டக்களப்பில் இந்திய அரசின் உதவியோடு கட்டப்படத் தீர்மானிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தீர்மானிப்பதில் சமூக தலைவர்கள், கிராமப்புற அபிருத்தி அதிகாரிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , ஆலய நிர்வாகிகள் உள்ளடங்கிய பலதரப்பட்ட அமைப்புக்களும் உள்வாங்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து தனது துணைராணுவக் குழுக்களிடம் தகுதியானவர்களைத் தேர்வுசெய்யும்படி மகிந்த அரசு பணித்திருப்பதாகத் தெரியவருகிறது. அரசாங்கத்தின் துணைராணுவக் குழுக்களிடம் வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தினை, இந்திய அரசு நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், கூட்டமைப்பின் தலைமைப் பீடமும் இந்தியாவிடம் கோரியபோது, இந்தியா இதுபற்றி கவனம் எடுக்கத் தவறிவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 4000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் உதவித் திட்டட்தின்படி 2000 வீடுகள் மட்டக்களப்பிலும் இன்னும் 1000 வீடுகள் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கட்டப்படவிருக்கின்றன. 75 வீதமான வீடுகள் படுவான்கரைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன. இவ்வீட்டுத் திட்டத்தின் 300 வீடுகளை சித்திர மாத முடிவிற்குள் பூர்த்தியாக்க இந்தியா விரும்புவதாகத் தெரிகிறது. இவ்வீடுத்திட்டத்திற்கான கூட்டங்களை கருணா துணைராணுவக் குழுவும் பிள்ளையான் துணைராணுவக் குழுவுமே தற்போது நடத்திவருவதாகத் தெரிகிறது. இத்திட்டத்திற்காக மக்களைத் தெரிந்தெடுக்கும்போது தாம் தெரிவுசெய்துவைத்திருக்கும் பெயர்ப்பட்டியலுக்கு அமைவாகவே மக்கள் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று துணைராணுவக் குழுக்கள் பிரதேசச் சபை அதிகாரிகளை பணித்திருப்பதாகவும், இதன்மூலம் துணைராணுவக்குழு உறுப்பினர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு பிரதேசச் செயலாளர் பிரிவிலிருந்தும் சுமார் 100 குடும்பங்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் வீடுகள் வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒருவீட்டின் பிரதான குடியிருப்பாளர் உயிருடன் இருந்தால் அவருக்கு 10 புள்ளிகளும், பிரதான குடியிருப்பாளர் துணையினை இழந்திருந்தால் அவருக்கு 20 புள்ளிகளும், பெற்றோர்களை இழந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளை திருமணம் முடிக்காத பெண்ணாகவிருந்தால் 30 புள்ளிகளும் கொடுக்கப்பட்டன. மேலும் குடும்பத்தில் 12 வயதிற்குக் குறைந்த சிறுவர்களுக்கு 20 புள்ளிகளும், 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்பட்டன. ஆனால், இவை ஆரம்பத்தில் நடத்தப்பட்ட 100 வீடுகளுக்கான தெரிவுகளுக்கு மட்டுமே பாவிக்கப்பட்டதுடன் பின்னர் துணைராணுவக்குழுவினர் தேர்வை நடத்தத் தொடங்கினர். இந்தத் தேர்வில் முன்னாள்ப் புலிகளின் போராளிகளின் குடும்பங்கள் முற்றாக பிள்ளையானினாலும் கருணாவினாலும் புறக்கணிக்கப்பட்டதுடன் அவர்களின் குடும்பங்களை தேர்வில் சேர்க்கமுடியாதென்று புறக்கணிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான படுவான்கரைக் குடும்பங்கள் புலிகளின் குடுபங்களாகவோ மாவீரர் குடும்பங்களகவோதான் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. ஆக, பெரும்பாலான வீடுகள் துணைராணுவக் குழுவினரின் குடும்பங்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2013 படுவான்கரையில் சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் சிங்களத் தேர்தல் தொகுதியொன்றினை அமைக்கும் மகிந்த - தமக்குள் போட்டிபோட்டுக்கொண்டு உதவும் கருணாவும் பிள்ளையானும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் ஆசீருடன் படுவான்கரையில் துரித கதியில் சிங்களக் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்துவருவதாக அப்பகுதிவாழ் தமிழ்மக்கள் தெரிவித்திருக்கின்றனர். மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட இப்பகுதியில் அண்மையில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களால் இதுவரையில் சுமார் 25,000 ஏக்கர் நிலம் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் சிங்களக் குடியேற்றம் பூர்த்தியாக்கப்படும் நிலையில், இப்பிரதேசத்திலிருந்து சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதியொருவர் தெரிவாகும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இப்பகுதியில் பணிபுரிந்துவரும் தமிழ் உத்தியோகத்தர்கள் இந்த குடியேற்றம்பற்றியோ நில ஆக்கிரமிப்புப் பற்றியோ பேசக்கூடாதென்று துணையமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. படுவான்கரையில் அரச அழுத்தத்திற்கும் மத்தியில் இக்குடியேற்றம் தொடர்பான செய்திகளை வெளிக்கொண்ர முயன்ற பல தமிழ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு, கருணாவினாலும் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஆலோசகர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயற்பட்டுவரும் கருணாவும் பிள்ளையானும் தமிழ் அதிகாரிகளை மிரட்டி, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், இவர்கள் இருவருக்குமிடையிலான போட்டியினால், மகிந்தவுக்கு அதிகம் நெருக்காமானவர் யார் என்பதை நிரூபிக்க இந்தக் குடியேற்றங்களுக்கு ஆதரவாக இவர்கள் இருவரும் செயற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துமீறிய நில அபகரிப்பிற்கும், சிங்களக் குடியேற்றத்திற்கு இதுவரை காலமும் ஓரளவிற்காவது தடையாக இருந்துவந்த சில தமிழ் அதிகாரிகள் பலவந்தமாக சிங்களப் பகுதிகளுக்கு கருணாவினால் இடமாற்றப்பட்டதையடுத்து, இப்பகுத்யில் குடியேற்றங்கள் தங்குதடையின்றி நடைபெறத் தொடங்கியிருப்பதாக தமிழ் மக்கள் தெரிவிக்கிண்ரனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் ஊடறுத்துக்கொண்டு நிகழ்ந்துவர, வடக்கிலிருந்து முஸ்லீம்களும் தம் பங்கிற்கு தமிழ் நில ஆபகரிப்பில் இறங்கியிருப்பதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2012 கருணாவினதும் பிள்ளையானினதும் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேறும் 25,000 சிங்களக் குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா மற்றும் பிள்ளையான் அகியோரின் உதவியுடன் சுமார் 25,000 சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதாக மட்டக்களப்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதன் முதற்கட்டமாக குறைந்தது 5,000 சிங்களக் குடும்பங்கள் 16 கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பகுதியான பாசிக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்று பகுதியான சவுக்கடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான பிள்ளையான் மற்றும் அரச துணையமைச்சரும் இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுத் தலைவருமான கருணா ஆகியோரின் உதவியுடன் இப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு, சிங்களவர்கள் மட்டக்களப்பின் மேற்கிலும் கிழக்கிலும் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் அமைந்திருக்கின்ற பெரியமாதவணை பகுதியில் அத்துமீறி நுழைந்து தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களைக் கையகபடுத்தியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 450 இலிருந்து 500 வரை இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கணிப்பிட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தைக்கண்டிய எனும் பகுதியிலிருந்து தற்காலிக விவசாய செய்கைக்கு வருகிறோம் என்கிற பெயரில் இதுவரை இப்பகுதிக்கு வந்த சிங்களக் குடும்பங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் இப்பகுதிகளில் நிலையான வீடுகளையும், களஞ்சியங்களையும் கட்டிவருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். இதுபற்றி மட்டக்களப்பு அரச அதிபர் ஊடாக மக்கள் ராணுவ அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தபோது இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று மறுத்த பிரிகேடியர் ஒருவர், தமது ராணுவம் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கான உதவிகளையே வழங்குவதாக கூறினாலும், தமிழர்களின் நிலங்கள் தொடர்ச்சியாக சிங்கள விவசாயிகளாலும் ராணுவத்தினராலும் நாளாந்த ரீதியில் கையகப்படுத்தப்பட்டுவருவதை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாத கைய்யறு நிலையிலேயே தமிழர்கள் இருக்கின்றனர். இதுபற்றி சமூக ஆர்வல்களும், கிழக்கின் கல்விமான்களும் ராணுவ அதிகாரியிடம் பேசியபோது, "தமிழர்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேறுவது உண்மைதான். இதனை நீங்கள் அரசாங்கத்திடம் தான் கேட்கவேண்டும். எங்களுக்கு இடப்பட்ட கட்டளையைத்தான் நாம் பின்பற்றமுடியும், முடிந்தால் உங்களின் அரச அதிபரை அரசுடன் பேசச் சொல்லுங்கள்" என்று ஏளனமாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஏறாவூர்ப்பற்று - செங்கலடிப் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றக் கிராமமான மங்களகம எனும் பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாகவும், புதிதாக ஈணும் கன்றுக்குட்டிகளை களவாடிச் செல்வதாகவும் முறையிடும் தமிழர்கள், தமது முறைப்பாடுகளை பொலீஸார் ஏற்கமறுப்பதோடு, தம்மை விரட்டியடிப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள். இதேவேளை கோரளைப்பற்று தெற்கு, வெள்ளாவெளி, பட்டிப்பழை, ஏறாவூர்ப் பற்று ஆகிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள தமிழக் கிராமங்களில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள், இப்பகுதி அம்பாறை மாவட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், தமிழர்களை இங்கிருந்து அடித்துவிரட்டுவோம் என்று மிரட்டிவருவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆவணி 2012 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆசீருடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் கொலைக்குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இத்தேர்தல்களில் 35 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். கொலைக்குழு ஆயுததாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான புஷ்பராசா என்னும் நபரும் அவரது கொலைக்குழுவினருமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்கிவரும் இவரது குழுவினருக்கெதிராக கடந்த 2008 மாகாணசபைத் தேர்தல்களிலும் வன் முறைகளில் ஈடுபட்டார்கள் என்று பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேவேளை இம்மாவட்டத்தில் சமுர்தி உத்தியோகத்தர்களை கூட்டமொன்றிற்கு அழைத்த பிள்ளையானும் அவரது கொலைக்குழுவினரும், தமக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அவர்களை மிரட்டியுள்ளதுடன், தமது கூட்டங்களுக்கு வரமறுக்கும் சமுர்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பணவு நீக்கப்படும் என்றும், அவர்களின் நியமனம் இரத்துச் செய்யப்படும் என்றும் மிரட்டப்பட்டிருக்கிறது.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, ஆடி 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வக்களித்தால் இந்த மாவட்டத்திலிருந்து துரத்தப்படுவீர்கள் - வாகரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவர் பிள்ளையான். முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் அவரது ஆயுதக் குழுவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பகுதியில் உள்ள மக்களை மகிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிடும் பிள்ளையானுக்கு வக்களிக்கும்படியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவீர்கள் என்றும் மிரட்டிவருகிறார்கள். ஜெயம் என்று அழைக்கப்படும் திவ்வியநாதன் எனும் பிள்ளையான் குழுவின் முக்கிய ஆயுததாரியும் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதோடு, இவர் தலைமையில் வாகரையில் ரோந்தில் சுற்றித்திரியும் கொலைக்குழுவினரே மக்களை இவ்வாறு எச்சரித்திருப்பதாகத் தெரிகிறது. வாகரையில் சுமார் 7,500 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர்கள் தொலைவில், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைப்பகுதியில் இப்பிரதேசம் அமைந்திருக்கிறது. ஜெயம் எனும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியினாலும், அவரது சகாக்களினாலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுவரும் வாகரை மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2008 மாகாணசபைத் தேர்தல்களிலும் ஜெயமும் அவரது சகாக்களும் மக்களை அச்சுருத்திப் பணியவைத்தே வாக்குகளை பெற்றதாகப் பரவலான குற்றச்சாட்டுக்கள் வந்திருந்தன. இம்முறையும் இக்குழுவினர் அதேவகையான அச்சமூட்டும் வன்முறைகளிலும், மிரட்டல்களிலும் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் துணையுடன் ஜெயமும் அவரது குழுவினருமே வாழைச்சேனையின் கல்குடா மற்றும் பேத்தாழை பகுதிகளில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான பிள்ளையானின் முக்கிய சகாவான ஜெயமும் அவரது குழுவும் செய்துவரும் சமூகவிரோதச் செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் செய்யப்பட்டபோது, பொலீஸாரோ ராணுவமோ அதுபற்றி நடவடிக்கை எடுப்பதனை மறுத்துவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆடி 21, 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை மிரட்டிவரும் துணைராணுவக்குழு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்பாக போட்டியிடும் உறுப்பினர்களை அரச ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் துணைராணுவக் குழுவொன்று அச்சுருத்திவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த செவ்வாயன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர்களான துரைராஜசிங்கம் மற்றும் இந்திரகுமார் பிரசண்ணா ஆகியோரின் வீடுகள் துணைராணுவக்குழுவினரால் வெளியிலிருந்து பூட்டுப் போடப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததாக இவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இவர்களால் பொலீஸாருக்கு இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டபின்னர், பொலீஸாரே கதவுகளை திறந்துவிட்டதாகத் தெரிகிறது. துரைராஜசிங்கம் என்பவர் முன்னாள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன் வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர். அவரது வீடு மட்டக்களப்பு வாவிவீதியில் , முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையானின் அலுவலகத்திலிருந்து சுமார் 15 மீட்டர்கள் தொலைவிலேயே இருக்கின்றதென்பதும் குறிப்பிடத் தக்கது. இந்திரக்குமாரின் வீடு மட்டக்களப்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கிறது. இவ்விரு வீடுகளுமே நகரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர், துணைராணுவக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆடி 03, 2012 கல்குடா கல்வி வலயத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்திவரும் துணைராணுவக் குழு கல்குடா கல்வி வலயத்தின் அதிகார நிலையம் துணைராணுவக் குழுவினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவருவதாக இவ்வலயத்தின் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் புகார் அளித்துள்ளனர். துணைராணுவக் குழுவினரின் அத்துமீறல்களாலும், அச்சுருத்தல்களாலும் மாணவர்களுக்கான கல்விநடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றன்ர். கல்குடா கல்வி வலயமானது மாகாண ரீதியில் 9 ஆவது இடத்தினை 2007 இல் பெற்றிருந்தது. ஆனால், துணைராணுவக்குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் அக்கல்வி வலயம் செயற்படத் தொடங்கியதன் பின்னர் அது 16 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன், இவ்வலயத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கென்று ஒதுக்கப்படும் பெருமளவு பணமும் துணைராணுவக்குழுவினரால் களவாடப்பட்டு வருகிறதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்குடா கல்வி வலயத்தில் 85 பாடசாலைகள் அடங்குகின்றன. இவற்றுள் 35 பாடசாலைகள் மிகவும் பிந்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 26 பாடசாலைகள் குறைந்தளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளிலும் மீதி 20 பாடசாலைகள் ஓரளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளிலும் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகிந்த சிந்தனையின் கீழ் கிழக்கின் வெளிச்சம் திட்டத்தின் மூலம் இவ்வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பாடசாலைகளின் அபிவிருத்திக்கென்று ஒருபங்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இப்பாடசாலைகளில் கழிவறைகளுக்கான உதவித்தொகையாக சுமார் பத்து லட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியிருந்தன. ஆனால், இந்த அபிவிருத்திகளுக்கான டென்டர்கள் துணைராணுவக் குழுவினருக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி வட்டாரத்தின் நிர்வாக அதிகாரி, சுயமாகச் செயற்பட முடியாமல், துணைராணுவக் குழுவினரின் நேரடிக் கட்டளையின் கீழேயே செயற்பட்டு வருவதாக அறியமுடிகிறது. முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் அண்மையில் இக்கல்வி வட்டார ஆசிரியர்களையும் அதிபர்களையும் அழைத்துப் பேசியபோது, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனக்கே வாக்களிக்குமாறு அச்சுருத்தியுள்ளதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.