Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by uthayakumar

  1. இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன் இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பிரிந்த சக்திகளாக இல்லாமல் அரசியல் வாதிகளில் கைகளில் அகப்பட்டு ஊழலோடு சிக்ககி பலவீனமடைந் திருக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த சமூகவியல் பார்வையில் நாம் இதை பார்க்கும் போது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியிலால பின்னணியைக் கொண்டதாகவே இது இருக்கும் இனங்களுக்கு இடையிலான அரசியல் ஏற்றத் தாழ்வுகள, சமூக அநீதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவுகள், சட்டம் சமத்துவமாக இல்லாமல் அது தனித்துவமாக இயங்காமல் சட்டத்தின் கைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதும், தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வுகளை சரியான முறையில் நடை முறைப் படுத்தாமல் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தல், போதை பொருட்களின் பயன் பாட்டை ஊக்குவிற்பதன் மூலம் சமூக சீரழிவுகளை ஏறபடுத்தி இளைய சமுதாயத்தை கல்வி அறிவு மூலம் சிந்திக்க விடாமல் சிதைத்து ஒரு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தல், ஆட்சி அதிகார சக்திகள் தமது நலன் கருதி போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடப்புகளை பேணுதல் இப்படி பல காரணிகளை சமூகவியல் ரீதியில் பார்க்க முடியும். இதை முழுமையாக நோக்கும் போது இலங்கையின் போதைப்பொருள் பிரச்சனை என்பது சமூக மற்றும் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்பின் குறைபாடுகள் என்பதை விளக்கிக் கொள்ள முடியும். எனவே இந்த சிக்லானான பெரும் சமூக அழிவை ஏற்படுத்தும் இந்த நச்சு விதைகளை சரியாக விளங்கி இதனை சமூகவியல் தத்துவார்த்த கோட்பாடுகள் வழியாகப் புரிந்து தீர்வு வழிகளை ஏற்படுதினால் மட்டுமே சரியானதோர் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாதையாகும் என்பதை எல்லா அமைப்புகளும் ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகவியலாளர் எமில் டர்க்கெய்ம் (Emile Drrkheim ) பல சமூகவியல் கோட்ப்பாடுகளை நிறுவியவர். கையில் அதிகாரம் என்ற படகை வைத்துக் கொண்டு ஆட்டுகிறார்கள் இதனால் மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் பொருளாதார பிரச்சினை வேலை இன்மை இப்படி பல பிரச்சினைகளால் சமூகம் நிலையாக இல்லாமல் அநீதி நிறைந்த குழப்பமான நிலையாக மாறிவிடும் இதனால் இங்கு சமூக சீர்கேடுகளும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன என சமூகவியலாளர் எமில் டர்க்கைம் (Émile Durkheim) விளக்குகிறார் இந்த நிலையை “அனோமி” (Anomie) என்று அழைத்தார். இதன் பொருள் சமூகம் பின்பற்ற வேண்டிய விதிகள், நெறிமுறைகள் குழப்பமாகவோ இல்லாமலோ இருப்பது. அனோமி கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். அனோமி என்ற இந்தக் கோட்பாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். இலங்கை தேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனமுரண்பாடுகளையும் இனவாதத்தையும் ஊக்குவித்ததே தவிர எவருமே சரியானதோர் அரசியல் பாதையில் செல்லவில்லை இதன் பயனை இன்று தொடக்கம் இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை நேசிக்கிறோம் என்று ஊழல் அரசியல் வாதிகளாலும் பொய்மையோடு கலந்த இன வாதிகளாலும் போலி இடது சாரிகளாலும் இந்த நாட்டின் அனைத்து நீதி நிர்வாகங்களும் இவர்களை கையில் சிக்கி ஒரு நாடே நாசமாக போகும் அளவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இது மாத்திரம் இன்றி பாதுகாப்பு படைகள் கூட இந்த அழிவுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு ஒரு காலம் படிப்போடு இருந்தது இப்போ ஐசோடு இருக்கு அப்போதெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை இருந்தது. ஒரு பெண் இரவு சாமத்தில் கூடவே தனியே போகும் காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தத் தமிழர் தலைமை அரசுகளாலும் நம்மோடு இருந்தவர்களாலுமே அளிக்கப்பட்டது. ஆதலால் அரசு படையில் மட்டுமின்றி நாமும் நம் இனத்தின் அழிவுக்கும் துணை நின்றிருக்கின்றோம். போதையை கொடுத்து ஒரு சமூகம் புடுங்கி எறியப்படுகிறது யாரால் என்பது எல்லாம் தெரியும். இந்தத் தலைமையை அழித்து இன்று இந்தத் தமிழ் மக்களை சமூகச் சீரழிவுக்குள் சிக்க வைத்த பெரும் பெறுப்பு இலங்கை இராணுவப் படைகளுக்கு மாத்திரம் இன்றி எம்மவர் கூட இந்த அழிவுக்கு துணை நின்றிக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், களவு கொள்ளை, கொலை போதைப் பொருள் பாவனை, வன்முறைகள் என்று இன்று பெரும் சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ் சமூகம். அன்று இருந்த தமிழ் தலைமையினால் இந்த வகையிலான சமூகச் சீரழிவுகள் வன்முறைகள் எதுவும் தமிழ் சமூகத்தில் அவர்கள் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தது. எனவே இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு அரச படைகளும் அன்று இருந்த தலைமையை எதிர்த்தவர்களாலும் காட்டிக் கொடுப்பு துரோகம் இப்படி பல வழிகளால் இந்த தமிழர் தலைமை இல்லாமல் போவதற்கு துணை நின்றவர்களாலும் இன்று இந்த சமூக சீரழிவுக்கு பெரும் காரணமாக இருக்கிறார்கள். சர்வதேசம் கூடவே பெரும் யுத்தத்திற்கு துணை நின்றது பெரும் துன்பத்தை இனப் படுகொலையை எதிர் கொண்ட தமிழ் சமூகத்துக்கு யுத்தம் முடிவடைந்த பின்பும் ஒரு நீதியான தீர்வை தமிழர்க்கு பெற்றுத் தர உதவவில்லை. தமிழர் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய ஒரு தீர்வை இன்று வரை எந்த அரசும் வழங்கவில்லை. இந்தியா கூடவே தனது அதிகாரத்தை பயன் படுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத் தரவில்லை. இன்று இறுதியில் ஒரு சமூகச் சீரழிவுடனும் இராணுவ ஆக்கிரமிப்புடனும் எந்த வித தீர்வும் இன்றி இருப்பது பெரும் அவலமே. இலங்கை தேசமானது இன்னும் மாற்றமடைய போக வேண்டிய பாதை இன்னும் தூரமே. சரியான பாதையில் போக சிந்திக்காத வரையிலும் இலங்கை இன்னும் எதிர் காலாத்தில் பெரும் அரசியல் பொருளாதாரப் பிரசினைகளை தான் எதிர் கொள்ள வேண்டி வரலாம் உண்மையான இந்த பெரும் தொற்று நோயான போதைத் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் மாற்றங்களோடு கூடிய அரசியல் சீர்திருத்தத்தாலும், நேர்மையான உண்மையான சமத்துவ ரீதியில் சிந்திக்கக் கூடிய ஆட்சியாளர்களாலும், சமூகவியல் சரியான பார்வையிலும், இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நடை முறைப் படுத்தி மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படுவது அவசியம். இந்தப் போதை காலாச்சாரத்தை ஒழிக்க எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாடசாலைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவரும் இணைந்து இதற் காக உழைக்க வேண்டும் பேச வேண்டும் எழுத வேண்டும் ஒரு சமூக விழிப்புணர்வை இளையர் மத்தியில் உருவாக்க வேண்டும். இந்த நச்சு விதையை ஒழிக்க வேண்டும். அழகான ஒரு வாழ்வை எல்லா இனங்களும் தமது உரிமையோடும் கடமையோடும் வாழும் வழியை ஏற்படுத்த வேண்டும். பா.உதயன் ✍️
  2. போரும் சமாதானமும்-பா.உதயன் யுத்த அழிவுகளினால் போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களுமாக நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல் ( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லாம் இன்று தொலைந்த மனிதனாக வெறுப்பும் வேதனையுமாக மனித அவலங்களாக உலகம் இருப்பது பெரும் அவலம். உலக வளங்கள் எல்லாம் பணக்கார வர்க்கத்திடம் இருப்பதும் எத்தனையோ ஏழை நாடுகள் எவ்வித வளர்ச்சியும் இன்றி அந்த நாட்டில் வாழும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழி இன்றி திண்றாடுகின்றனர். உலக சமத்துவமின்மையால் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை. மானிட வரலாறுகள் எல்லாம் சரிகளோடும் பிழைகளோடுமே நகர்த்திருக்கிறது. மதங்களின் பெயரிலும், காலனித்துவ அதிகார சுரண்டலின் பெயரிலும், வல்லரசுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தும் உலகம் எத்தனையோ அழிவுகளை சந்தித்தது. யுத்த வடுக்கள் சுமந்து சென்ற வலிகள் எண்ணில் அடங்காதவை. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலைஸ்தீனம் இப்படி எத்தனையோ நாடுகள் ஆதிக்க வல்லரசுகளின் நலன் சார்ந்த யுத்தங்களினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் எத்தனை. இந்த யுத்தங்களுக்காக செலவிடும் எத்தனையோ பில்லியன் பணத்தை கொண்டு எத்தனையோ வறிய நாடுகளை முன்னேற்ற உதவி இருக்கலாம். பசியோடும் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு பசியையும் போக்கி கல்வியை கொடுத்து உதவி இருக்கலாம். யுத்தம் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இன்று ரஷ்யா உக்ரைன், பாலைஸ்தீனம் இஸ்ரேல் யுத்தங்களினால் உலகம் அமைதியை இழந்திருக்கிறது. மனித அழிவும் துன்பங்களும் தொடர்கிறது இது நிறுத்தப்பட்டு சமாதானகத்துக்கான பாதைகள் திறக்கப் பட வேண்டும். யுத்தங்கள் கொடியவை இவைகள் தவிற்கப்பட வேண்டும். மனிதத் துயர்கள் இல்லாதிருக்க வேண்டும். எதிர்கால குழந்தைகள் பயமின்றி நடந்து செல்லும் அமைதிப் பூங்காவாக உலகமே மாறும் நம்பிக்கையோடு இன்று உலகை சூழ்ந்துள்ள இருள் விலகி இதுகும் கடந்து போகட்டும். இவை எல்லாம் கடந்து போய் யுத்தம் இன்றி சமாதானமாக மனிதனை மனிதன் நேசிக்கும் மானிடமும் அறமும் கொண்ட சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் கொண்டு அன்பு என்ற மொழி பேசட்டும் அழகான பூ பூக்கட்டும். பா.உதயன் ✍️
  3. மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக நின்று ஒரு இளைஞன் “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று வரலாறு ஒன்றை எழுதிச் சென்றிருக்கிறான். வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்கி இருக்க மாட்டோம்.(If the Sinhala rulers had been real Buddhists we would not have taken up arms). அவர்களை போன்று எமக்குமான சம உரிமையை வழங்கி இருந்தால் நாம் இந்த பாதைக்கு வந்திரிருக்க மாட்டோம் என்று கூறி தனி ஒரு மனிதனாக நின்று திருப்பி அடித்தால் தான் எம் மக்களுக்கான உரிமையை அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மூன்று படைகளை கட்டி சம பலமாக நின்று தமிழன் அடையாளத்தை உலகறியச் செய்தவன். ஒரு காலத்தில் உலகம் எம்மை பார்த்ததும் அதேவேளை எம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் எமக்குள் இருந்த இந்த படை வலுச் சமநிலையாகும். போராட்டம் என்பது பூக்களின் மேல் நடப்பது இல்லை. முள்ளும் கல்லுமாக எத்தனையோ தடைகளை தாண்டி நடக்க வேண்டும். இதில் சரிகளோடும் பிழைகளோடும் துரோகங்களோடும் கடந்து போவதென்பதும் உலக பூகோள அரசியலின் மாற்றங்களோடும் அவர் அவர் நலன் சார்ந்த மாற்றங்களுடன் பயணித்து எமது இலக்கை அடைவதென்பதும் இலகுவானதல்ல. எல்லா விடுதலைப் போராட்டங்களும் சரியோடும் பிழைகளோடுமே நகர்ந்திருக்கின்றன. எல்லா கைகளுமே தூய்மையான கைகள் இல்லை பாலைஸ்தீன விடுதலை வீரன் யாசிர் அரபாத்தின் கையிலும் கியூபா விடுதலை வீரன் பிடல் காஸ்ரோ கையிலும் சேகுவேரா கைலும் இருந்ததெல்லாம் துப்பாக்கி தான் இவர்கள் எல்லோருமே சரிகளோடு பிழைகளோடும் தான் தம் இனத்தின் போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் நினைவு கூரப் பட வேண்டும். இன்று இவர்கள் போற்றத் தக்க தலைவர்களாக அந்த மக்களால் நினைவு கூரப் படுகிறார்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர்களாக மதிப்பளிக்கப் படுகிறார்கள் அவர்கள் இன்று இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் இருந்து போராடுகிறார்கள் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். உலகின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பூகோள அரசியல் நலனுக்கு ஏற்பவும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அந்த போராட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கி இருக்கும். பூகோள அரசியல் என்பது ஒரு சதுரங்க பலகை போலவே Geo Politics is like a chessboard, அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இந்த ஆட்டத்தை ஆடுகின்றன. இன்று சர்வதேசத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் அதையொட்டிய போர்களும் இந்த நலன்களொடு தான் நகர்கின்றன. நீதி, தர்மம், அறம், மனிதாபிமானம், எல்லாம் இன்று இருக்கும் உலக ஒழுங்கில் ஒன்றுமே இல்லை. ஆதிக்க வலு மிக்க சக்திகள் அவர் அவர் பூகோள அரசியல் சுயநலன் சார்ந்து அங்கீகரிப்பதோ அழிப்பதோ அவர் கைகளில் தான் இருக்கிறது இதில் தமிழர் போராட்டமும் சிக்குண்டு பயங்கரவாதத்துக் எதிரான யுத்தமென கூறி ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் பெரும் பூகோள அரசியலில் சுய நலன் சார்ந்தவர்களால் எம் கண்ணை குத்தி அளிக்கப்பட்ட வரலாற்றோடு இது மெளனிக்கப் பட்டது. வரலாறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நடந்த வரலாறுகளை யாரும் மறைக்கவோ அல்லது அந்த மக்களிடம் இருந்து அந்த நினைவுகள் பிரிக்கவோ முடியாது. தன் இனத்தின் விடுதலைக்காக நின்ற இடத்திலேயே நின்று போராடியவன் எங்குமே சென்று ஒளித்து இருக்க மாட்டான் இது அவனுக்கான அடையாளம் இல்லை அந்த வகையில் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதிய மேதகு என்ற வீரனின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் அந்த மக்களால் நினைவு கூரப்பட வேண்டும். தன் நலனும் சுயநலன் உடன் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஈழத்து மக்கள் யதார்த்தத்துடன் கூடிய அறிவு பூர்வமான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும் இதில் நம்பிக்கையோடு அவன் காட்டிய பாதையில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்பதே அந்தத் தலைவனுக்கு நாம் நன்றியோடும் நினைவோடும் செய்யும் கடமையாகும். பா.உதயன் ✍️
  4. ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி பெளத்த மத முன்னுருமை சிந்தனையில் இருந்து மாறுவதோ அல்லது தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றோ இது வரை அனுரா அரசு முயற்சிற்ததாகவும் இல்லை இவை பற்றி எதுகும் தமிழர் தரப்புடன் பேசியதாகவும் இல்லை. அது வேண்டுமா உங்களுக்கு இது வேண்டுமா என்று அனுரா கேட்க்கிறாரே தவிர தமிழருக்கு எதை கொடுக்க வேண்டும் அவர்கள் இதுவரை எதற்காக போராடினார்கள் எத்தனை துயரம் எத்தனை உயிர் தியாகம் செய்தார்கள் எத்தனை தம் உறவுகளை இழந்தார்கள் என்று கூட ஒரு போராடத்தின் பாதையில் இருந்து வந்து ஆட்சி அமைத்தவர்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான். தமிழர்களின் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, தொலைந்து போனவர்களின் நீதி, காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை இப்படி பல முக்கியமான தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுகளை இந்த நாட்டில் பல காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த முக்கிய பிரச்சினை குறித்து தமிழர் தரப்புடன் பேசுவதை தவிர்த்து வருகிறார்கள். ஒரு சில மாற்றங்களை தவிர பழையவைகள் தொடர்கின்றன. மீண்டும் மீண்டும் தமிழ் கட்சிகள் தங்களிடையே மோதிக் கொள்வதையும் அவர்கள் திரட்சி ரீதியாக பலவீனம் அடைவதையும் அனுரா தலைமையிலான அரசு விரும்புகிறது அப்போது தான் தாம் வட கிழக்கை கை பற்றி தமிழர்கள் தம்மோடு தான் நிற்கிறார்கள் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அபிவிருத்தி மட்டுமே அன்றி அரசியல் தீர்வல்ல அதே போல் தமிழர் கோரும் சர்வதேச விசாரணை மற்றும் தொலைத்து போனவர்களுக்கான நீதி இவற்றை கூட நீர்த்து போக செய்யலாம் புலம்பெயர் தமிழர்களையும் இந்த வழியில் கொண்டு வரலாம் என்ற நிகழ்ச்சி நிரலோடு பயணிக்கிறது. தமிழர்களிடையே சில படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவரும் இதை ஆதரிப்பது பெரும் வெட்கமானது. அது அவர்கள் ஜனநாயக உரிமை என்று சொல்லிக்கொண்டாலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலை வேண்டியே இந்த மக்கள் போராடுகிறார்கள் என்பதை சிவப்பு தோழர்கள் உணர்ந்தால் நல்லது. அவர்கள் கூட ஒரு காலம் விடுதலை வேண்டிப் போராடியவர்களே. சமத்துவம் என்ற பார்வையை இவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையே என எண்ணத் தோன்றுகின்றது. அண்மையில் இலங்கையில் அனுரா அரசால் நடாத்தப்படும் பெளத்த மதம் சார்ந்த சமய நிகழ்ச்சிகளும் அதன் பார்வையும் முன்னைய அரசுகள் போன்றே பெளத்த மதத்தை முன்னிலைப் படுத்திய பெரும் பேரினவாத சிந்தனை போன்றே அமைந்திருக்கிறது. எல்லா இனமும் மதமும் சமத்துவம் என்ற சிந்தனை வெறும் பேச்சோடு தான என எண்ணத் தோன்று கின்றது. உரிமைகளை கேட்பவர்களை இனவாதிகள் என்று சொல்லுவதே பெரும் இனவாதம். தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப் படுபவர்களாகும் ஏமாறுபவர்களாகும் இருக்கக் கூடாது எனவே தமிழர் ஒரு திரட்சியாக தம் எல்லா தீர்வையும் வென்று எடுக்கும் வரை பலமாக இருக்க வேண்டும் தமிழர் வாக்கு சரியான எதிர்கால சிந்தனையோடு இருக்க வேண்டும் இதை எல்லா தமிழர் கட்சிகளும் உணர்ந்து செயல் பட வேண்டும் இல்லையேல் உங்கள் எதிர் காலமும் இருப்பும் கேள்விக் குறியதாகிவிடும். எது எப்படி இருப்பினும் தென் இலங்கையில் ஒரு சில மாற்றம் வந்ததன் மூலம் கொலைகள் ஊழல் உடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தால் நீதியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் வரும். ஆதலால் அனுரா அரசு சரியான பாதையில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து சரியான பொருளாதார ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவத்திலேயே தான் இதன் எதிர் காலா வெற்றியும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்தால் நல்லது. அப்போது தான் நிலத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா அபிவிருத்தி வேண்டியும் உழைப்பார்கள் எதிர்காலத்திலும் உண்மையான சமத்துவதுடன் உங்களுடன் தமிழர் பயணிப்பார்கள். பா.உதயன் ✍️
  5. அனுராவின் அலை இன்னும் வருகுதாம் அள்ளிப் போக வாக்கை கண்டீர் என்னென்னமோ தாறம் என்று ஏமாற்றும் வித்தை பாரும் வடக்கையும் கிழக்கையும் இரண்டா பிரிச்சுப் போட்ட வந்து இப்போ என்ன கதை சும்மா பொய்கள் சொல்ல வேண்டாம் அண்ணன் தம்பி என்று சொல்லி இப்ப என்ன சமத்துவக் கதை அப்போ எல்லாம் என்ன செய்தீர் நாங்கள் பட்ட துன்பம் கண்டும் கூட ஆமியோடு சேர்ந்து இருந்து எங்கள் இருப்பை எல்லாம் தொலைத்தனீங்கள் அகதியாக்கி எம்மை அலைந்து திரிய கலைத்தனீர்கள் இனவாதப் பேய்களோட நீங்கள் இருந்ததெல்லாம் உண்மை தானே சோசலிசம் கொம்யூனிசம் என்று கொள்கை எல்லாம் சொல்லிறியள் அங்க அது ஒன்றும் இல்லை என்று அறிந்தவனும் தெரிந்தவனும் அறிவர் உண்மையான சோஷலிசவாதி ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுப்பான் எங்கள் பாதிக் காணியை பிடிச்சுப் போட்டு தமிழர் தேசமெல்லாம் எல்லாம் ஆமிக்காரன் வந்திருக்கான் எம் மண் முழுக்க ஈயைப் போல மொச்சிருக்கான் அரசியல் தமிழ் கைதிகளை அடுத்த நாளே விடுவோம் என்றீர் காணி எல்லாம் விடுவிப்போம் என்றீர் அந்தக் கதையைக் கூட காணவில்லை பயங்கரவாத சட்டத்தை எடுபோம் என்றீர் இப்ப கூட இந்த சட்டம் தமிழருக்காய் தொடருதெல்லோ புதுது புதிதாய் புத்தர் விகாரை கட்டியெல்லோ வைக்கிறீர்கள் ஏதும் நாங்கள் கதைக்கப் போனால் இது இனவாதம் என்கிறீர்கள் தொலைந்த பிள்ளையை தேடி அலைந்து திரியும் தாய்மாருக்கு இனியும் என்ன சொல்லப் போறீர் எங்கு எல்லோரும் பாவம் கழுவப் போறீர் பழசுகளை மறக்க சொல்லி சிலர் வந்து சொல்கிறார்கள் கடந்து நாங்கள் போனாலும் மறந்து நாங்கள் போவோமா அது வேண்டுமா இது வேண்டுமா என்று தமிழரிடம் கேட்கிறியள் இப்போ எதுகுமே தராமல் இருக்கிறியள் வருகிறது அபிவிருத்தி என்று வாயால் மட்டும் சொல்லுறியள் இனப்பிரச்சினை பற்றி எதுகுமே சொல்லவில்லை இது இருக்குதென்று தெரியாததுபோல் நடிக்கிறியள் அபிவிருத்தி என்ற மாய மானை காட்டுறியள் இனிக்க இனிக்க ஏதோ எல்லாம் பேசுறியள் எழுபது வருடமாக எத்தனை துன்பம் தமிழருக்கு இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை தாரும் இருளைக் கடந்து இலங்கையில் சமத்துவமாய் வாழ இது ஒன்றே வழியென்று அறியும் தமிழன் அடையாளம் தொலையாமல் இனி சரியான தலைமை ஒன்றை தமிழர்கள் தெரிய வேண்டும் ஒன்றாக ஒரு சக்தியாக நின்றாக வேண்டும். பா.உதயன் ✍️
  6. காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு வாறேன் மச்சாள் உன் கைக்கு மருதாணி பூச மறக்காமல் அது கூட வேண்டி வாறேன் முத்து வைத்த மூக்குத்தி உனக்காய் மறக்காமல் மச்சாள் வேண்டி வாறேன் பார்த்திருப்பேன் உன்னை படலையில் மச்சான் பார்த்து பத்திரமாக வந்து நீ சேரு ஆசையாய் நீ உண்ண அலுவா அரைக் கிலோ நேசமாய் உனக்காய் வேண்டி நான் வாறேன் அளவாக சக்கரை போட்டு நான் மச்சான் ஆடிக் கூழ் உனக்காய் காச்சி வைப்பேன் ஊரிலே எல்லோரும் சுகமாடி பிள்ளை உனக்காக நான் வச்ச மாமரம் பூக்குதா காச்சுக் குலுங்குது என்னைப் போல் மச்சான் கறுத்தக் கொழும்பான் உனக்காக இருக்கு நேசமாய் நீ வந்து பாசமாய் உண்ண பழுத்துக் கிடக்குது மாங்கனி மச்சான் பார்த்திருப்பேன் உன்னை பகல் இரவாக காத்திருப்பேன் மச்சான் கண்ணும் உறங்காமல் அம்மன் திருவிழா தேருக்கு வா மச்சான் ஆசையாய் இருவரும் சேர்ந்தே போவோம் அட மச்சான் ஆடி ஆடி வரும் அம்மன் அழகை கூடி கூடி நின்று நாம் பாடி ரசிப்போம் பா.உதயன் ✍️
  7. வெறி வெறி கொட்டப்பா வேர்க்குது வாடியப்பா ரயேட்டா இருக்குதப்பா கொம்பிளேன் எகேன் கொட்டப்பா கோ வாக்ரு லண்டன் சூனப்பா இப்படியே கத்தி போட்டு பிளைட் ஏற வேண்டியது தான் குமாரசாமி அண்ணன். நான் குளிருக்கு எழுத நீங்கள் வெக்கைக்கு எழுதுறியள் அப்படி போடுங்கோ நல்லாத் தான் இருக்கு.😂👍
  8. நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்🙏🌺 நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்🙏🌺
  9. உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து வந்து மெட்டோடு பாட்டிசைக்கும் வயல்கள் எங்கும் பச்சையாக புல் முளைக்கும் மழைகள் வந்து துளிகளாக நனைந்திருக்கும் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலமரம் ஆடி நிற்கும் அங்கு வந்து மெல்ல மெல்ல குயில்கள் கூவும் செந்தமிழாய் எங்கும் இசை எட்டுத் திசை ஒலிக்கும் எம் தமிழே எழுந்து வர எத்தனையோ மணி ஒலிக்கும் எங்குமே கவிதை மொழி எம் தமிழில் உயிர்க்கும் வண்ணமான வாழ்வு தனை தமிழ் எங்கும் சொல்லும் ஆற்றம் கரை ஓரம் அன்னை சக்தி வாழும் கோவில் மணி ஏழு கடலும் ஒலிக்கிறது எங்கும் அமைதி கொள்கிறது எங்கிருந்ததோ பெண் ஒருத்தி ஏழு சுரம் இசைக்கின்றாள் இனி ஒரு குறை இல்லை என்றே இருள் விலகப் பாடுகிறாள். பா.உதயன்🌺
  10. ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் சுயநிர்ணயம், அடையாளம், இனம் சார்ந்த எந்தத் தெளிவும் இன்றி அவர் அவர் உயரங்களுக்கு தகுந்த மாதிரி எழுதியும் பேசியும் வருகிறார்கள். நாம் வாழும் நாடு நோர்வேயிலே அவர்கள் தமது முழுமை பெற்ற சுதந்திர தினத்தை கொண்டாடும் போது சிறுவர் முதல் பெரியோர் வரை தமது தேசியக் கொடியை தோழில் காவியபடி நாங்கள் எல்லோரும் நமது தேசத்தியும் மண்ணையும் மொழியையும் நேசிக்கிறோம் என்று ஒரே மக்களாக ஒரே திரட்ச்சியாக வானுயர பாடியபடி போவார்கள். இப்படி ஒன்று பட்ட திரட்சியினால் தான் பிரான்சுப் புரட்சியில் இருந்து ரஷியாவின் சிவப்பு சுதந்திர சதுர்க்கம் வரை விடுதலை பெற்ற வரலாற்றை உலகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. ஒரு இனம் ஒடுக்கு முறைக்கு எதிராக தனது இருப்பு தனது சுதந்திரம் வேண்டிப் போராடுவது எல்லாம் இனவாதம் இல்லை. இனவாதம் என்பது தத்துவார்த்த ரீதியிலான பல கருத்துக்களை கொண்டது அதில் ஒன்று சிறு பான்மை இனத்தின் உரிமை மறுக்கப்படுவதும் சொந்த இனத்தை உயர்வாகக் பார்த்து பிற இனத்தை ஏற்றுக்கொள்ளாமல் தாழ்வாகக் கருதுவது போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தில் வாழும் தேசிய இனங்களை மரத்தை சுற்றிப் படரும் கொடி என்று பெரும்பான்மை சமூகம் கூறுவதும் தான் இனவாதம். தன்னாட்சி கோருவது பிரிவினைவாதம் அல்ல. சட்டப்படி உரிமைகளை கோருவது இனவாதம் அல்ல. உரிமைகளை மறுப்பதே இனவாதமாகும். ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய சிறு பான்மை இனம் சுய நிர்ணயம், தன்னாட்சி, உரிமைகள் மற்றும் சமத்துவம் சட்டப்படி தமது உரிமைகளை கோருவது பிரிவினைவாதம் இனவாதம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. கொல்லப்பட்ட எம் மக்களுக்கும் தொலைந்து போனவர்களுக்கும் நீதி கேட்பது இனவாதமா அதற்கு மாறாக, அந்த உரிமைகளை மறுப்பது முறையாக மதிப்பீடு செய்யப்படாத செயலாகும் மற்றும் சமத்துவத்தை மறுக்கும் ஒரு நிலையை பிரதிபலிக்கிறது. தமது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் உரிமைக் குரலை மறுத்து பிரிவினை வாதம் இனவாதம் என்று கதைப்பது வாதிடுவது தான் இனவாதம். இதை சரியாக விளங்கிக் கொண்டே ஆளும் கட்சியாக இருந்தாலும் எவரும் எந்தக் கருத்தையும் கூற வேண்டும். ஆழமாக எதையும் விளங்கி சரியானவைகளை எழுத வேண்டும் பேச வேண்டும். பிளவு படாத ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழ்வோம் என்பதை விட அந்த மக்களின் உரிமைகளை அங்கீகரித்து விட்டு அனைவரும் சமத்துவமாக வாழ்வோம் என்று அழைப்பது தான் உண்மையான சமத்துவம். தமிழர் தேசங்களில் உரிமைகள் மதிப்பு, நீதி, நிர்வாகம், சட்டம், பாதுகாப்பு முறை என்பன அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மரியாதையுடன் சமத்துவமாகவும் நடைமுறைப் படுத்த வேண்டும். இன்று இலங்கையில் பல மாற்றம் நடந்திருக்கிறது குறிப்பாக தெற்கு அரசியல் வாதிகளே முழுக்கு முழுக்கு இனவாதம் பேசியவர்கள் அந்த முகங்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறார்கள் இது வரவேற்கத் தக்க மாற்றமாகும். சமத்துவமான சமுதாயமாகவும் நாம் எல்லாம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடக இலங்கை இருக்க வேண்டும் என்ற கனவு கண்டால் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினையாகும். இதன் மூலம் நாம் எல்லோரும் ஒன்றாக சமத்துவமான ஊழல் அற்ற ஒரு கனவுத் தேசத்தை கட்டி எழுப்ப முடியும் என்ற யதார்த்தத்தை ஆளும் தரப்பினர் சரியாகப் புரிய வேண்டும். நாமும் இனி வரும் காலத்தில் ஒற்றுமையோடு பயணித்தால் தான் எமக்கான விடுதலையும் அடைய முடியும் என்பதையும் தமிழர் தரப்பும் உணர வேண்டும். பா.உதயன் ✍️
  11. நல்ல சிந்தனைகள் கருத்துக்கள் எல்லோருக்கும் நன்றிகள் .
  12. தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ணி கவலை இல்லை இவர்களோடு கூட நின்று மேடை போட்டு முழங்கியது போலவே அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று நல்லாத் தான் நடிக்கிறார்கள் அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக ஆளுக்கு ஒரு சின்னத்தோட வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல சிலர் சமத்துவமே வந்தது போல் தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் நினைக்கவே கவலையாய் இருக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை ஏதோ ஒரு அலை எல்லோரையும் மயக்கத்தில தள்ளுது தமிழ் யூடியூப் தம்பிமாரே எல்லோரையும் சொல்லவில்லை நல்லோரும் உண்டு லைக்கை மட்டும் பார்க்காமல் கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள் அறிவாய் எதையும் அணுகுங்கள். பா.உதயன்✍️
  13. உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பலம் வாய்ந்த ஒரு தமிழர் கூட்டுத் தெரிவும் மிக அவசியமானதாகும். எவ்வளவு தான் எம் தமிழர்களிடையே பிரிவுகள் இருந்தாலும் எதிர் காலம் எப்படியோ நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையோடு தமிழர்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு கூடிய தமிழ் கட்சிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளுக்கோ அல்லது அவர்களோடு சேர்ந்து போட்டி போடும் கட்சிகளுக்கோ வாக்களிக்கலாமா என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர் வாக்குகளை பிரித்து உங்கள் பலத்தை சிதறடிக்காமல் எதிர்கால உங்கள் இருப்பு நலனை வேண்டி சரியாக சிந்தித்து வாக்களியுங்கள். அனுபவமும் ஆற்றலும் இராஜதந்திரமும் மொழி அறிவும் முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும். நாலு சுவருக்குள் நாம் பேசிக் கொண்டிருக்காமல் வெளி உலகத்துக்கும் நாம் பேசுவது தெரிய வேண்டும். தமிழர் பலமான கூட்டோடு ஒரு அணியை படித்த இளம் சமுதாயத்திடம் இருந்தும் அனுபவம் ஆற்றல் தலைமைப் பண்பு கொண்டவர்களில் இருந்தும் எதிர் காலத்தில் கட்டும் வரையிலாவது எவ்வளவு பிரச்சினை இருப்பினும் இன்று நாம் வீடு, சங்கு, சயிக்கிள், ஜனநாயக போராளிகள் எதுகும் வேண்டாம் என்றால் வேறு என்ன தெரிவு எமக்கு, பின் யாருக்கு வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பி வைக்கப் போகிறோம். புதிதாக அடிக்கும் அலைகளோடு நாமும் சேர்ந்து போனால் நமது நலன்களும் எங்கள் தியாகங்களும் அர்பணிப்புக்களும் பாதுகாக்காப்படுமா என்று நாம் சிந்திக்க வேண்டும். எத்தனை உயிர்களை எத்தனை தியாகங்கள் எத்தனை இரத்தங்களை இந்த மண்ணோடு மண்ணாய் விதைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எமது விடுதலைக்காய் நாம் கொடுத்த விலை அதிகம் என்பதை சிந்தியுங்கள். உங்கள் நேசத்திற்கும் பாசதிற்கும் உரிய பிள்ளைகள் இந்த மண்ணில் தான் புதைந்து கிடக்கிறார்கள். உயிர்களையே தந்து சென்றார்கள் உங்கள் உன்னதமான விடுதலைக்கே. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட பல தேசிய இனங்கள் தம் அடையாளம் தொலையாமல் இருந்து போரடியதனால் தான் இன்று விடுதலை அடைந்த வரலாற்றை உலகம் கற்றுத் தந்திருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை முன் வைத்தால் எந்தப் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடனும் அனைவரினதும் அரசியல் பொருளாதார நலன் கருதி நாம் இணைந்த அரசியல் செய்ய முடியும் அது வரை நாம் நாமாகவே பலமாக இருந்து நமக்காக போராட வேண்டும். நாங்களும் நீங்களும் ஒன்று எனக் கூறுவது சரியான சமத்துவம் ஆகாது இந்தக் கூற்றானது எங்களோடு அதாவது பெரும் பான்மை இனத்தோடு சேர்ந்து வாருங்கள் என்று கூறிக் கொள்வதன் மூலம் இத்தனை காலமும் எந்த உரிமை கேட்டு தமிழர்கள் போராடினார்களோ அவற்றை எல்லாம் அடியோடு நிராகரிற்பதற்கு சமமாகும் இதை தமிழர் தேசம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எமது அடையாளம், எமது மொழி, எமது பாரம்பரிய பிரதேசம், அத்தோடு நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும் நாம் நாங்களாக இருக்க வேண்டும் எங்கள் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று மறந்து விடாமல் இவை அழிந்து விடாமல் ஒரே சக்தியாக பயணியுங்கள். பெளத்தர்களின் அடையாளம் ஆக்கப்பட்டு இந்த நாடு பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் ஏனைய இனங்கள் இரண்டாம் தர பிரஜைகள் போல் ஒரே நாடு ஒரே தேசம் ஒரு நாடு ஒரு சட்டம் என்று இன்னும் ஒரு இனத்தின் உரிமையும் விடுதலையும் மறுக்கப்பட்டு அவர்கள் விருப்புகள் ஏற்றுக் கொள்ளாமையினால் தான் இத்தனை மானிடப் பேரழிவுகளை இலங்கை சந்தித்தது. மாற்றம் என்பது ஏழைகளுக்கு உணவு கொடுப்பதில் இருந்தும் விழுந்து கிடப்பவனை தூக்கி விடுவதில் இருந்து ஆரம்பிப்பதே மானிடம் இதுவே சமத்தும் இதுவே மாற்றம். மாக்ஸ் சொன்ன மகத்தான தத்துவம் இதுதான். நாம் மாற்றத்தை நாடினால், அரசியல் விவகாரங்களை பற்றி மதத் தலைவர்களுடன் எப்போதும் சந்தித்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும். மதத்தை தனிப்பட்ட வாழ்க்கையாக வாழ அனுமதித்து, தனி மனித உரிமையாக அரசியலில் இருந்து விடுதலையாகி இருக்க வேண்டும். அதே போல் பெரும் துன்பமும் துயரமும் நிறைந்து சிறுபான்மை மக்களின் தீர்வுகளையும் வெளிப்படையாக பேச வேண்டும். லெனினின் தன்னாட்சி கொள்கையில் கூறும் ஜனநாயகம் என்பது எந்த மக்களும் தங்கள் எதிர்காலத்தை பெரும்பாலான வாக்குகளின் மூலம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து நிலைத்துவிட்டது. லெனினின் தன்னாட்சி குறித்த சிந்தனைகள் மார்க்சியம்தான், மேலும் இவை போல்ஷெவிக் சிந்தனையாகவும் விளங்கின. ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் சுய நிர்ணய விடுதலையை முழுமையயாக அங்கீகரிக்காத வரை அவர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்று அங்கீகரிக்காத வரை எவன் பேசும் சமத்துவமும் சமத்துவம் இல்லை இதில் சமூக நீதியும் இல்லை என்பதை உண்மையான சோஷலிசவாதிகளுக்கு மட்டுமே இது தெரிந்திருக்கும். இதை விடுத்து சிவப்பாக தெரிவது எல்லாம் சோசலிசம் என்றும் கொம்யூனிசம் என்றும் யானை பார்த்த குருடர்கள் போல இருக்கக் கூடாது. பா.உதயன்✍️
  14. நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும் -பா.உதயன் பல படைகளை உருவாக்கி ஒரு காலம் சிங்கள அரசையும் அதன் படைகளையும் நிலை குலைத்து போராடி தமிழர் அடையாளத்தை உலகுக்கு சொல்லி யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காது ,எவனுக்கும் தலை வணங்காமல் பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( TNA ) என்ற அரசியல் பலத்தை உருவாக்கி எல்லோரையும் நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும். “Not only must you stand, but you must also stay.” என்று வட கிழக்கு உட்பட நாம் தமிழர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து போராடி மடிந்த தலைவர் பிரபாகரனுக்கு இருந்த வீரம், நெஞ்சுரம், திறமை, பொறுப்பு, சுய நலன் இல்லாத பார்வை இதில் ஏதாவது இன்று தேர்தலில் நிற்கும் தமிழ் தலைவர்களிடம் அல்லது பல பிரிவுகளாக தமிழர் தமக்குள்ளேயே போட்டியிடுபவர்களிடம் இருக்கின்றதா என்று எல்லோரும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் ? இருந்த அனைத்தையும் அழித்ததை தவிர. ஒரு சிலரை தவிர இன்று இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காகவும் சுய நலனுக்காகவும் இருப்பவர்கள் இது எம் நிலத்துக்கு மட்டும் இன்றி புலத்துக்கும் பொருந்தும். இன்று சுமந்திரனும், சாணக்கியனும், தவராசாவும், கஜேந்திரனும், விக்கினேஸ்வரனும் ஏனைய அனைத்து தேசியக் கட்சிகளும் இணைந்து வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்கு இணங்க” “Unity in diversity.” தேர்தலில் ஒரே அணியில் நின்றிருந்தால் எமது பலத்தை ஏனும் நிரூபித்து இருக்கலாம். சிங்கள தேசம் ஒற்றுமையாக நின்று வாக்களித்து பெரும் ஊழல் வாதிகளையும் இனவாதிகளையும் இவர்களுடன் சேர்ந்து நின்ற டமிழ் ஊழல் வாதிகளையும் இருந்த இடம் தெரியாமல் கலைத்து இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாமமும் ஒரு திரள்சியாய் எமது பிரச்சினைகளையும் தீர்பதற்கான வழி முறைகளை கையாண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட அழுத்தம் கொடுத்திருக்கலாம் சிங்களத்துக்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கலாம். அதை விடுத்து இன்று தமிழர் தலைமை என்ற அங்கீகாரத்தையும் தொலைத்து எல்லோரும் சிரிக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது எமது பலம். எத்தனையோ மாவீரர்களின் உயிர்த் தியாகங்கள் இந்த மக்கள் பட்ட வலிகள் சொந்த மண்ணை விட்டு அகதியாக தமிழன் அலைந்தும் எல்லாமே மறந்து இன்று நீங்கள் எல்லோரும் நாளுக்கு நாள் பிரிந்து நின்று வட கிழக்கு தமிழர் பிரதேசத்தில் இருந்து பெரும் வாக்கு வங்கியை சிங்களத்துக்கு உருவாக்கி தமிழரை பிரித்து விட்டிருக்கிறீர்கள். இதன் எல்லாப் பொறுப்பும் நீங்கள் தான் என்பதை உணருங்கள். ஈழத் தமிழரிடம் இன்று இருக்கும் பெரும் குறையானது ஒற்றுமையீனம் தான் இதனால் நாமே நம் தலையில் மண்ணை போட்டுக் கொண்டு வாழ்கிறோம். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்கள் தம் எதிர்கால இருப்புக்கு சரியான பாதையை தெரிவார்கள் என நம்புவோம். உங்களிடம் இருக்கும் ஒரே அரசியல் கூட்டுப் பலத்தையும் இழந்தீர்களேயானல் உங்கள் எதிர் காலம் பெரும் இருள் சூழ்ந்ததாகவே அமையலாம். இதுவும் போனால் உங்களுக்கு எதுகும் இல்லை என்று நினையுங்கள். வெறும் ஊமை மக்களாகவே உலகம் உங்களைப் பார்க்கும். இருந்தும் நம்பிக்கையோடு இருப்போம் நாளை என்றோ ஒரு நாள் உலக ஒழுங்கு மாற்றத்திற்கு ஏற்ப எமக்கும் ஒரு மாற்றம் வரும் என்றே ஒற்றுமையை அரசியல் பலத்தை தொலைக்காமல் எதிர்காலத்திலாவது வாழப் பாருங்கள். பா.உதயன் ✍️
  15. நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன் They tried to bury us. They didn’t know we were seeds.” அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது. இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால் என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும். அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️
  16. அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறுபான்மை தேசிய இனம் தனது போராட்டத்தின் சம பலத்தை இழக்கிறதோ (Balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power) இழந்து பெரும்பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகி விடுகிறது. அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்கு முறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக ஒடுக்கப்படுவர். ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. வெற்றி கொள்பவன் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்கிறான். Winner takes it all. தொலைந்தவனை தேடும் தாயின் கண்ணீர் நிலம் முழுக்க நனைகிறது. யுத்தம் முடிந்து பல வருடம் ஆகிறது பதின் மூன்றுக்கு மேல் (13th plass amendment) தருவோம் என்றார்கள் அதில் பாதி கூடி தரவில்லை. இன்று வரையில் எந்த அதிகாரப் பகிர்வையும் ( Devolution of power) செய்ய முயலவில்லை .அரசியல் கைதியாக அவர்கள் படும் துன்பம் வேறு. தாய் வேறு பிள்ளை வேறாய் தமிழன் துயர் தொடர்கின்றது. தானாகவே வந்து சிங்களம் தமிழனுக்கு தருவதற்கு என்ற ஒன்றும் இல்லை. அன்று ஒரு நாள் அந்த கிழவன் கேட்ட சமஸ்டியை (Federal state ) கொடுத்து இருந்தால் இத்தனை அழிவு இலங்கையில் இருந்திருக்குமா, அன்று தொடக்கம் அரசியல் தலைவர்கள் விதைத்த இனவாதம், மதவாதம், இன்று எல்லா இன மக்களையும் பிரித்து இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அமைதியையும், சமாதானத்தையும் , அன்பையும் , போதித்த புத்த பகவானின் சிந்தனையில் இருந்து விலகி இன்று இலங்கையின் பௌத்த தேரர்கள் முழுமையான இனவாதத்தை பேசி இலங்கையின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் விளைவிப்பதோடு மட்டும் அன்றி சகல இனங்களுக்கு இடையிலான பிளவை ஏற்படுத்தி மேலும் இனங்களுக்கு இடையிலான மோதலை வன்முறையை வளர்த்து வருகின்றனர். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்து இருந்தால் நாம் துப்பாக்கி ஏந்தி இருக்க மாட்டோம். if jayawardana was real buddhist we would not be carrying a gun. என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் (India today) இந்தியா ருடே என்ற இதழுக்கு பேட்டி கொடுக்கும் போது கூறியது இன்று எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று தெரிகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குடும்ப ஆட்சியில் இருந்த கட்சிகளும் அதன் தலைவர்களும் இன்று வரை எமக்கு தந்த துன்பம் எழுத்தில் அடங்காது. தமது மண்ணை விட்டு ஓடினார்கள் அகதியானார்கள. கல்வியே வாழ்வு என்று இருந்த தமிழன் வாழ்வை தீ இட்டு எரித்தது இன்னும் ஒரு இனவாத அரச பயங்கரவாதம். தமிழனின் வாழ்வும் வளமும் அடையாளமும் அழித்து ஒழித்த வரலாறு அந்த மண்ணுக்குள் சிவப்பாக சிதறிக் கிடக்கிறது. வட கிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்து அங்கெல்லாம் புத்தர் சிலையை கொண்டு வந்தார்கள். எழுதுவதும் ஏமாற்றுவதும் கிழிப்பதுமாய் எத்தனை ஒப்பந்தங்கள். அரசியல் தீர்வு ரீதியாக நாங்கள் ஏமாற்றபட்ட (Political duplicity) வரலாறுகளே அதிகம் . இதே போல் இன்று வரை பல சகாப்தமாக மலையக தமிழர் இன்று வரை தொடரும் துன்பம் இன்னும் ஒரு கறை படித்த அத்தியாயம். எல்லா குடும்ப ஆட்சியாளரின் கையில் ஈழ தமிழனின் இரத்த கறைகள் பதிந்துள்ளன. இப்படி இருக்கையில் ஜனாதிபதி தெரிவு நடக்கவிருக்கிறது எவரை தெரிவு செய்வது என்ற பெரும் குழப்பம் தமிழர்களிடையே நிலவுகின்றது. எந்த ஜனாதிபதி வேட்ப்பாளர்களிடமும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் தீர்வுக்கான முழுமையான எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. வேறு எந்த தெரிவும் இல்லாத தமிழ் மக்கள் முள்ளி வாய்க்காலின் பின் தம் பலத்தை இழந்து நிற்கும் தமிழ் மக்கள் என்ன தெரிவை மேற்கொள்ள போகின்றார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் விட்டு சில பிழைகளையும் படிப்பினையாக கொண்டு என்ன முடிவை எடுப்பதென்பது அந்த மக்களின் நீண்ட கால அரசியல் விடுதலைக்கு வித்து இடுவதாக அமைய வேண்டும். யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசதில் அபிவிருத்தி எதுகும் இல்லை. அரசியலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே. அரசியல் தீர்வு ஒன்று அடிப்படையாக அமையும் இடத்து அவிவிருத்தி பாதைக்கு இது வழி சமைக்கிறது. இன்றும் கூட சர்வதேச நாடுகளினால் ஒரு பாரிய அவிவிரித்தி பணி செய்ய முடியாமைக்கு அங்கு ஓர் அடிப்படை அரசியல் தீர்வு ஒன்று இல்லாமல் இருப்பது தான். அரசியல் ஸ்திரத்தன்மை( Political stability) இல்லாமல் செய்யும் எந்த அபிவிரித்தியும் உதவிகளும் அந்த மக்களுக்கு போய் சேர முடியாது மாறாகவே ஊழ அரசியல் வாதிகளின் கைகளுக்குகே போய் சேருகின்றன. ஒரு காலம் ஒற்றுமையோடு இருந்த ஈழத் தமிழர் இனம் இன்று ஒற்றுமை இன்றி சிதைந்து கிடக்கிறது. ஒரு பொது தெளிவான இலக்கின் அடிப்படையிலேனும் இவர்களால் ஒன்று பட முடியவில்லை. ஜனநாயக சூழலுக்கு ஏற்ப பல கட்சி அமைப்பு இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் சார்பில் ஒற்றுமையாக குரல் கொடுக்க முடியாதவர்களாகிப் போனார்கள். இன்று 70 வருடங்களுக்கு மேல் தீர்வு தருவார்கள் என மாறி மாறி சிங்கள அரசை நம்பி பேச்சுவார்த்தைள் நடத்தியும் இவர்களுக்கு ஆதரவு வழங்கியும் இதுவரை எதுவுமே தராத எந்த சிங்கள தலைமைகளையும் இனி நம்பி பிரியோசனம் இல்லை என்று தெரிந்து இன்று தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தமது எதிர்காலம் கருதி தமிழ் மக்கள் நிதானமாக அறிவு பூர்பமாக சிந்திப்பார்கள் என நம்புவோம். பா.உதயன் ✍️
  17. தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் -பா.உதயன் ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே உங்கள் பொக்கற்றை மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership and planning என்பது தெரிந்து தான் இருக்கவேண்டும் இல்லாவிடில் ஆலோசனைகளை அந்த மக்களிடமோ சிவில் அமைப்புகளிடனோ கூடி கதைத்திருக்க வேண்டும். A vision without a strategy remains an illusion. சரியான திட்டமிடலும் மூலோபாயத் திட்டமும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான பாதையாகும். வன்னியிலும் மலையகத்திலும் மனிதர் படும் துன்பம் கண்டும் ஒருவேளை உணவுக்காய் பல சனம் படும் பாடு கண்டும் பள்ளி சென்று படிக்க கூட வழியில்லாமல் பலர் இருக்க யுத்த வடுக்களும் துன்பமும் துயரமும் இன்னும் எம் இனத்தை விட்டு அகலாத போதும் இத்தனை லட்ஷம் பணத்தை இப்படியா தமிழர் கொட்டுவது. நாங்கள் அறிவு சிந்தனை நாகரீகத்தோடு வாழ்ந்த மக்கள் ஆதலால் நாம் இன்று தொலைந்து போன எம் அமைதி வாழ்வையும் சுதந்திரத்தையும் தான் முதலில் தேட வேண்டும். பொருளாதார அவிவிருத்தி மட்டுமே போதும் அரசில் தீர்வும் தேவை இல்லை என்பது தான் இலங்கை அரசின் நிலைப்பாடு. நிரந்தர ஒரு சமாதான தீர்வு இல்லாத எமக்கான பாதுகாப்பு இல்லாத திட்டமிடப்படாத பொருளாதார அபிவிருத்திகள் இப்படியான குழப்பங்கள் பிரச்சினைகளில் தான் முடியும். எது எப்படி இருப்பினும் 2009 க்கு பின் ஈழத் தமிழர் மத்தியிலே பல மாற்றங்கள் நடந்திருப்பது அவதானிக்க முடிகிறது. ஒன்றாக கூடி ஒரே தலைமையின் கீழ் இணைந்திருந்த மக்கள் இன்று அந்தத் தலைமை எதுவும் இல்லாமல் சிதறிப் போய் இருக்கிறார்கள். கல்வி கலை ஒழுக்கம் என்று அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் அதேபோலவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கலாச்சார சீரழிவுகளும் போதைப் பொருட்களின் உபயோகமும் என இளைஞர்கள் மத்தியிலே கூடி அங்கு வன்முறைகளாக குழு மோதல்களாக இருந்து வருவதைப் பார்க்கிறீர்கள். ஒரு காலம் கல்வியிலே முன்னேறி இருந்த யாழ்ப்பாணம் இன்று இந்த கலாச்சார சீரழிவுகளினால் மெல்ல சிதைந்து வருவது உண்மைதான். மேய்ப்பவன் இல்லா மந்தைகள் போல சரியான தலைமைகள் இல்லாமல் நாம் எங்கு போவதென்று தெரியாமல் நிற்கிறோம். இருந்த போதிலும் இந்த இளையர்களை குறை கூறி என்ன வருவது. இவர்களை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை சரியான வழிகாட்டல் இன்றி இந்த இளைஞர்கள் பிழையான பாதைகளை தெரிவு செய்கின்றனர். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவே நல்லவை கெட்டவை என்ற பக்கங்கள் இருக்கும். குழப்பங்களும் பிரச்சனைகளும் எல்லா உலக சமூகத்திலும் தான் இருக்கின்றன தனியவே தமிழர் சமூகத்தில் மட்டும் இல்லை. நாகரீகமான சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இங்கும் எத்தனையோ குழப்பங்களை கண்டிருக்கிறோம். ஒரு உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறும் பொழுது அங்கு கூடி பல குழப்பங்களை விளைவித்து அடிதடியில் முடிவடைவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அரசியல் பொருளாதார பிரச்சினைகள் என்று இருக்கும் தேசங்களில் இது இன்னும் பிரச்சினையானதாகவே இருக்கும். நாமும் நம் மூதாதையினர் விட்டுச்சென்ற நாகரிகமான பாதையில் சென்று அறமும் தர்மமும் ஒழுக்கமும் தொலையாமல் எங்கள் ஒற்றுமையோடு கூடிய தேசிய உணர்வும் அடையாளமும் தொலையாமல் இருப்போம். பா.உதயன்✍️
  18. சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்கள் இப்படியான தமது தர்க்கங்களை முன் வைக்கிறார்கள். ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும் அங்கு ஓர் ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்காவின் நலன் சார்ந்து பொய்கள் பல சொல்லப்பட்டது. இது இவ்வாறு இருக்க இப்படி எத்தனையோ ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ நாடுகளை அமெரிக்கா கவிழ்த்திருக்கிறது. இன்று உலகில் நடக்கும் யுத்ததங்களை பார்க்கும் போது இதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்க சொல்லும் பொய்களை அப்படியே ஏற்றுக் கொண்டு எல்லா உண்மைகளையும் சொல்ல மறுக்கிறார்கள் ஐரோப்பிய தலைவர்கள் இது தான் அவர்கள் ஜனநாயகம். இன்னும் எத்தனை யுத்தங்களை எவ்வளவு காலம் கொண்டு நடத்தப் போகிறார்கள் அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை விடுதலைப் போராட்டங்களை தம் நலன் சார்ந்து அழிக்கப் போகிறார்கள் இன்னும் எத்தனை மனிதப் படுகொலைக்கு உதவப் போகிறார்கள். பொய் சொல்லுவதில் அமெரிக்காவை அடிக்க யாரும் இல்லை. அந்தப் பொய்களை எல்லாம் மூடி மறைப்பதில் ஐரோப்பாவை வெல்ல யாரும் இல்லை. உண்மைகளை உலகுக்கு சொல்ல மறுக்கிறார்கள் பெரிய அண்ணனும் தம்பிமாரும். சிரியாவில் சொன்னது பொய், ஈராக்கில் சொன்னது பொய், ஆப்கானிஸ்தானில் சொன்னது பொய், கியூபாவில் சொன்னது பொய், லிபியாவில் சொன்னது பொய், ஐ. நா. சபையில் அனைத்து தேசங்களுக்கும் சொல்லுவது பொய், ஏன் ஈழத் தமிழர் போரட்டத்திலும் சொன்னது பொய் இப்படி எத்தனை பொய்கள் அமெரிக்க சொன்ன பொய்கள் அதை ஆமோதித்து ஐரோப்பா சொன்ன பொய்கள் எத்தனை. இன்று இஸ்ரேலுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் பொய் சொல்லிக் கொண்டு பெரும் இனஅழிப்புக்கு துணை போய்க் கொண்டு பல்லாயிரக் கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டு இன்று உலகம் கண்ணை மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறது. பல அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமைதியாய் இருக்க இன்று தென்னாபிரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இனப்படுகொலை வழக்கின் மீதான விசாரணையை சர்வதேச நீதிமன்றில் (ICJ) தென்னாபிரிக்கா வாதாடி வருகிறது. அடுத்தவர்களின் துன்பத்தை மனிதாபிமானம் கொண்டு பார்க்க வேண்டும் முதலில் மனிதாபிமானம் பேசும் மானிடர்களாக வாழ வேண்டும். அன்பும் கருணையும் தான் ஆண்டவன் மொழி என்பதை மானிடம் உணர வேண்டும். மத அடிப்படை வாதிகளினதும் காலனித்துவவாதிகளினதும் ஏகாதிபத்திய வாதிகளினதும் அடிப்படை சிந்தனைகளிலோ அல்லது அவர்கள் நலன் சார் வெளியுறவுக் கொள்கைகளிலோ இன்னும் மாற்றம் ஏற்படாத வரை யுத்தங்கழும் மனித அழிவுகளும் அகதிகள் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இன்று உலகம் பெரும் அச்சுறுத்தக்குக்கு உள்ளாகி இருக்கிறது இன்றைய மோதல்கள் நாளை ஒரு பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலாக வெடிக்குமா என உலகம் அச்சத்தில் உறைந்துள்ளது. Leaders believe lying is wrong but do it anyway. பா.உதயன் ✍️
  19. யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் புலம் பெயர் தமிழரை கூப்பிடப் பார்ப்பார் குள்ள நரி போல கள்ளத் தனமாக காரியம் முடிப்பார் அபிவிருத்தி என்றெல்லாம் பேசி அரசியல் தீர்வை மறக்கவும் செய்வார் அறிவோட தமிழ் இனம் இப்போ ஆழமாய் சிந்திக்க வேண்டும் பேரினவாதத்தில் என்றும் இப்போ பெரிதாய் மாற்றங்கள் வராது இந்தியா சொன்ன 13 ம் தீர்வுக்கும் எந்தப் பதிலும் இதுவரை இல்லை இதக் கூட தராத ரணிலார் பின்ன எதக் கூடத் தருவார் வடக்கு கிழக்கு என்று இனி வலம் வருவார் தேர்தல் வருகிறது திரும்பவும் வருவார் தீர்வு வரும் ஆனால் வராது என்றனர் மக்கள். பா.உதயன்✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.