Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன் இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பிரிந்த சக்திகளாக இல்லாமல் அரசியல் வாதிகளில் கைகளில் அகப்பட்டு ஊழலோடு சிக்ககி பலவீனமடைந் திருக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த சமூகவியல் பார்வையில் நாம் இதை பார்க்கும் போது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியிலால பின்னணியைக் கொண்டதாகவே இது இருக்கும் இனங்களுக்கு இடையிலான அரசியல் ஏற்றத் தாழ்வுகள, சமூக அநீதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவுகள், சட்டம் சமத்துவமாக இல்லாமல் அது தனித்துவமாக இயங்காமல் சட்டத்தின் கைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதும், தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வுகளை சரியான முறையில் நடை முறைப் படுத்தாமல் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தல், போதை பொருட்களின் பயன் பாட்டை ஊக்குவிற்பதன் மூலம் சமூக சீரழிவுகளை ஏறபடுத்தி இளைய சமுதாயத்தை கல்வி அறிவு மூலம் சிந்திக்க விடாமல் சிதைத்து ஒரு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தல், ஆட்சி அதிகார சக்திகள் தமது நலன் கருதி போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடப்புகளை பேணுதல் இப்படி பல காரணிகளை சமூகவியல் ரீதியில் பார்க்க முடியும். இதை முழுமையாக நோக்கும் போது இலங்கையின் போதைப்பொருள் பிரச்சனை என்பது சமூக மற்றும் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்பின் குறைபாடுகள் என்பதை விளக்கிக் கொள்ள முடியும். எனவே இந்த சிக்லானான பெரும் சமூக அழிவை ஏற்படுத்தும் இந்த நச்சு விதைகளை சரியாக விளங்கி இதனை சமூகவியல் தத்துவார்த்த கோட்பாடுகள் வழியாகப் புரிந்து தீர்வு வழிகளை ஏற்படுதினால் மட்டுமே சரியானதோர் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாதையாகும் என்பதை எல்லா அமைப்புகளும் ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகவியலாளர் எமில் டர்க்கெய்ம் (Emile Drrkheim ) பல சமூகவியல் கோட்ப்பாடுகளை நிறுவியவர். கையில் அதிகாரம் என்ற படகை வைத்துக் கொண்டு ஆட்டுகிறார்கள் இதனால் மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் பொருளாதார பிரச்சினை வேலை இன்மை இப்படி பல பிரச்சினைகளால் சமூகம் நிலையாக இல்லாமல் அநீதி நிறைந்த குழப்பமான நிலையாக மாறிவிடும் இதனால் இங்கு சமூக சீர்கேடுகளும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன என சமூகவியலாளர் எமில் டர்க்கைம் (Émile Durkheim) விளக்குகிறார் இந்த நிலையை “அனோமி” (Anomie) என்று அழைத்தார். இதன் பொருள் சமூகம் பின்பற்ற வேண்டிய விதிகள், நெறிமுறைகள் குழப்பமாகவோ இல்லாமலோ இருப்பது. அனோமி கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். அனோமி என்ற இந்தக் கோட்பாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். இலங்கை தேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனமுரண்பாடுகளையும் இனவாதத்தையும் ஊக்குவித்ததே தவிர எவருமே சரியானதோர் அரசியல் பாதையில் செல்லவில்லை இதன் பயனை இன்று தொடக்கம் இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை நேசிக்கிறோம் என்று ஊழல் அரசியல் வாதிகளாலும் பொய்மையோடு கலந்த இன வாதிகளாலும் போலி இடது சாரிகளாலும் இந்த நாட்டின் அனைத்து நீதி நிர்வாகங்களும் இவர்களை கையில் சிக்கி ஒரு நாடே நாசமாக போகும் அளவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இது மாத்திரம் இன்றி பாதுகாப்பு படைகள் கூட இந்த அழிவுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு ஒரு காலம் படிப்போடு இருந்தது இப்போ ஐசோடு இருக்கு அப்போதெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை இருந்தது. ஒரு பெண் இரவு சாமத்தில் கூடவே தனியே போகும் காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தத் தமிழர் தலைமை அரசுகளாலும் நம்மோடு இருந்தவர்களாலுமே அளிக்கப்பட்டது. ஆதலால் அரசு படையில் மட்டுமின்றி நாமும் நம் இனத்தின் அழிவுக்கும் துணை நின்றிருக்கின்றோம். போதையை கொடுத்து ஒரு சமூகம் புடுங்கி எறியப்படுகிறது யாரால் என்பது எல்லாம் தெரியும். இந்தத் தலைமையை அழித்து இன்று இந்தத் தமிழ் மக்களை சமூகச் சீரழிவுக்குள் சிக்க வைத்த பெரும் பெறுப்பு இலங்கை இராணுவப் படைகளுக்கு மாத்திரம் இன்றி எம்மவர் கூட இந்த அழிவுக்கு துணை நின்றிக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், களவு கொள்ளை, கொலை போதைப் பொருள் பாவனை, வன்முறைகள் என்று இன்று பெரும் சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ் சமூகம். அன்று இருந்த தமிழ் தலைமையினால் இந்த வகையிலான சமூகச் சீரழிவுகள் வன்முறைகள் எதுவும் தமிழ் சமூகத்தில் அவர்கள் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தது. எனவே இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு அரச படைகளும் அன்று இருந்த தலைமையை எதிர்த்தவர்களாலும் காட்டிக் கொடுப்பு துரோகம் இப்படி பல வழிகளால் இந்த தமிழர் தலைமை இல்லாமல் போவதற்கு துணை நின்றவர்களாலும் இன்று இந்த சமூக சீரழிவுக்கு பெரும் காரணமாக இருக்கிறார்கள். சர்வதேசம் கூடவே பெரும் யுத்தத்திற்கு துணை நின்றது பெரும் துன்பத்தை இனப் படுகொலையை எதிர் கொண்ட தமிழ் சமூகத்துக்கு யுத்தம் முடிவடைந்த பின்பும் ஒரு நீதியான தீர்வை தமிழர்க்கு பெற்றுத் தர உதவவில்லை. தமிழர் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய ஒரு தீர்வை இன்று வரை எந்த அரசும் வழங்கவில்லை. இந்தியா கூடவே தனது அதிகாரத்தை பயன் படுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத் தரவில்லை. இன்று இறுதியில் ஒரு சமூகச் சீரழிவுடனும் இராணுவ ஆக்கிரமிப்புடனும் எந்த வித தீர்வும் இன்றி இருப்பது பெரும் அவலமே. இலங்கை தேசமானது இன்னும் மாற்றமடைய போக வேண்டிய பாதை இன்னும் தூரமே. சரியான பாதையில் போக சிந்திக்காத வரையிலும் இலங்கை இன்னும் எதிர் காலாத்தில் பெரும் அரசியல் பொருளாதாரப் பிரசினைகளை தான் எதிர் கொள்ள வேண்டி வரலாம் உண்மையான இந்த பெரும் தொற்று நோயான போதைத் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் மாற்றங்களோடு கூடிய அரசியல் சீர்திருத்தத்தாலும், நேர்மையான உண்மையான சமத்துவ ரீதியில் சிந்திக்கக் கூடிய ஆட்சியாளர்களாலும், சமூகவியல் சரியான பார்வையிலும், இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நடை முறைப் படுத்தி மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படுவது அவசியம். இந்தப் போதை காலாச்சாரத்தை ஒழிக்க எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாடசாலைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவரும் இணைந்து இதற் காக உழைக்க வேண்டும் பேச வேண்டும் எழுத வேண்டும் ஒரு சமூக விழிப்புணர்வை இளையர் மத்தியில் உருவாக்க வேண்டும். இந்த நச்சு விதையை ஒழிக்க வேண்டும். அழகான ஒரு வாழ்வை எல்லா இனங்களும் தமது உரிமையோடும் கடமையோடும் வாழும் வழியை ஏற்படுத்த வேண்டும். பா.உதயன் ✍️
  2. போரும் சமாதானமும்-பா.உதயன் யுத்த அழிவுகளினால் போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களுமாக நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல் ( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லாம் இன்று தொலைந்த மனிதனாக வெறுப்பும் வேதனையுமாக மனித அவலங்களாக உலகம் இருப்பது பெரும் அவலம். உலக வளங்கள் எல்லாம் பணக்கார வர்க்கத்திடம் இருப்பதும் எத்தனையோ ஏழை நாடுகள் எவ்வித வளர்ச்சியும் இன்றி அந்த நாட்டில் வாழும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழி இன்றி திண்றாடுகின்றனர். உலக சமத்துவமின்மையால் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை. மானிட வரலாறுகள் எல்லாம் சரிகளோடும் பிழைகளோடுமே நகர்த்திருக்கிறது. மதங்களின் பெயரிலும், காலனித்துவ அதிகார சுரண்டலின் பெயரிலும், வல்லரசுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தும் உலகம் எத்தனையோ அழிவுகளை சந்தித்தது. யுத்த வடுக்கள் சுமந்து சென்ற வலிகள் எண்ணில் அடங்காதவை. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலைஸ்தீனம் இப்படி எத்தனையோ நாடுகள் ஆதிக்க வல்லரசுகளின் நலன் சார்ந்த யுத்தங்களினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் எத்தனை. இந்த யுத்தங்களுக்காக செலவிடும் எத்தனையோ பில்லியன் பணத்தை கொண்டு எத்தனையோ வறிய நாடுகளை முன்னேற்ற உதவி இருக்கலாம். பசியோடும் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு பசியையும் போக்கி கல்வியை கொடுத்து உதவி இருக்கலாம். யுத்தம் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இன்று ரஷ்யா உக்ரைன், பாலைஸ்தீனம் இஸ்ரேல் யுத்தங்களினால் உலகம் அமைதியை இழந்திருக்கிறது. மனித அழிவும் துன்பங்களும் தொடர்கிறது இது நிறுத்தப்பட்டு சமாதானகத்துக்கான பாதைகள் திறக்கப் பட வேண்டும். யுத்தங்கள் கொடியவை இவைகள் தவிற்கப்பட வேண்டும். மனிதத் துயர்கள் இல்லாதிருக்க வேண்டும். எதிர்கால குழந்தைகள் பயமின்றி நடந்து செல்லும் அமைதிப் பூங்காவாக உலகமே மாறும் நம்பிக்கையோடு இன்று உலகை சூழ்ந்துள்ள இருள் விலகி இதுகும் கடந்து போகட்டும். இவை எல்லாம் கடந்து போய் யுத்தம் இன்றி சமாதானமாக மனிதனை மனிதன் நேசிக்கும் மானிடமும் அறமும் கொண்ட சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் கொண்டு அன்பு என்ற மொழி பேசட்டும் அழகான பூ பூக்கட்டும். பா.உதயன் ✍️
  3. மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக நின்று ஒரு இளைஞன் “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று வரலாறு ஒன்றை எழுதிச் சென்றிருக்கிறான். வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்கி இருக்க மாட்டோம்.(If the Sinhala rulers had been real Buddhists we would not have taken up arms). அவர்களை போன்று எமக்குமான சம உரிமையை வழங்கி இருந்தால் நாம் இந்த பாதைக்கு வந்திரிருக்க மாட்டோம் என்று கூறி தனி ஒரு மனிதனாக நின்று திருப்பி அடித்தால் தான் எம் மக்களுக்கான உரிமையை அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மூன்று படைகளை கட்டி சம பலமாக நின்று தமிழன் அடையாளத்தை உலகறியச் செய்தவன். ஒரு காலத்தில் உலகம் எம்மை பார்த்ததும் அதேவேளை எம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் எமக்குள் இருந்த இந்த படை வலுச் சமநிலையாகும். போராட்டம் என்பது பூக்களின் மேல் நடப்பது இல்லை. முள்ளும் கல்லுமாக எத்தனையோ தடைகளை தாண்டி நடக்க வேண்டும். இதில் சரிகளோடும் பிழைகளோடும் துரோகங்களோடும் கடந்து போவதென்பதும் உலக பூகோள அரசியலின் மாற்றங்களோடும் அவர் அவர் நலன் சார்ந்த மாற்றங்களுடன் பயணித்து எமது இலக்கை அடைவதென்பதும் இலகுவானதல்ல. எல்லா விடுதலைப் போராட்டங்களும் சரியோடும் பிழைகளோடுமே நகர்ந்திருக்கின்றன. எல்லா கைகளுமே தூய்மையான கைகள் இல்லை பாலைஸ்தீன விடுதலை வீரன் யாசிர் அரபாத்தின் கையிலும் கியூபா விடுதலை வீரன் பிடல் காஸ்ரோ கையிலும் சேகுவேரா கைலும் இருந்ததெல்லாம் துப்பாக்கி தான் இவர்கள் எல்லோருமே சரிகளோடு பிழைகளோடும் தான் தம் இனத்தின் போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் நினைவு கூரப் பட வேண்டும். இன்று இவர்கள் போற்றத் தக்க தலைவர்களாக அந்த மக்களால் நினைவு கூரப் படுகிறார்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர்களாக மதிப்பளிக்கப் படுகிறார்கள் அவர்கள் இன்று இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் இருந்து போராடுகிறார்கள் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். உலகின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பூகோள அரசியல் நலனுக்கு ஏற்பவும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அந்த போராட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கி இருக்கும். பூகோள அரசியல் என்பது ஒரு சதுரங்க பலகை போலவே Geo Politics is like a chessboard, அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இந்த ஆட்டத்தை ஆடுகின்றன. இன்று சர்வதேசத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் அதையொட்டிய போர்களும் இந்த நலன்களொடு தான் நகர்கின்றன. நீதி, தர்மம், அறம், மனிதாபிமானம், எல்லாம் இன்று இருக்கும் உலக ஒழுங்கில் ஒன்றுமே இல்லை. ஆதிக்க வலு மிக்க சக்திகள் அவர் அவர் பூகோள அரசியல் சுயநலன் சார்ந்து அங்கீகரிப்பதோ அழிப்பதோ அவர் கைகளில் தான் இருக்கிறது இதில் தமிழர் போராட்டமும் சிக்குண்டு பயங்கரவாதத்துக் எதிரான யுத்தமென கூறி ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் பெரும் பூகோள அரசியலில் சுய நலன் சார்ந்தவர்களால் எம் கண்ணை குத்தி அளிக்கப்பட்ட வரலாற்றோடு இது மெளனிக்கப் பட்டது. வரலாறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நடந்த வரலாறுகளை யாரும் மறைக்கவோ அல்லது அந்த மக்களிடம் இருந்து அந்த நினைவுகள் பிரிக்கவோ முடியாது. தன் இனத்தின் விடுதலைக்காக நின்ற இடத்திலேயே நின்று போராடியவன் எங்குமே சென்று ஒளித்து இருக்க மாட்டான் இது அவனுக்கான அடையாளம் இல்லை அந்த வகையில் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதிய மேதகு என்ற வீரனின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் அந்த மக்களால் நினைவு கூரப்பட வேண்டும். தன் நலனும் சுயநலன் உடன் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஈழத்து மக்கள் யதார்த்தத்துடன் கூடிய அறிவு பூர்வமான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும் இதில் நம்பிக்கையோடு அவன் காட்டிய பாதையில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்பதே அந்தத் தலைவனுக்கு நாம் நன்றியோடும் நினைவோடும் செய்யும் கடமையாகும். பா.உதயன் ✍️
  4. ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி பெளத்த மத முன்னுருமை சிந்தனையில் இருந்து மாறுவதோ அல்லது தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றோ இது வரை அனுரா அரசு முயற்சிற்ததாகவும் இல்லை இவை பற்றி எதுகும் தமிழர் தரப்புடன் பேசியதாகவும் இல்லை. அது வேண்டுமா உங்களுக்கு இது வேண்டுமா என்று அனுரா கேட்க்கிறாரே தவிர தமிழருக்கு எதை கொடுக்க வேண்டும் அவர்கள் இதுவரை எதற்காக போராடினார்கள் எத்தனை துயரம் எத்தனை உயிர் தியாகம் செய்தார்கள் எத்தனை தம் உறவுகளை இழந்தார்கள் என்று கூட ஒரு போராடத்தின் பாதையில் இருந்து வந்து ஆட்சி அமைத்தவர்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான். தமிழர்களின் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, தொலைந்து போனவர்களின் நீதி, காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை இப்படி பல முக்கியமான தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுகளை இந்த நாட்டில் பல காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த முக்கிய பிரச்சினை குறித்து தமிழர் தரப்புடன் பேசுவதை தவிர்த்து வருகிறார்கள். ஒரு சில மாற்றங்களை தவிர பழையவைகள் தொடர்கின்றன. மீண்டும் மீண்டும் தமிழ் கட்சிகள் தங்களிடையே மோதிக் கொள்வதையும் அவர்கள் திரட்சி ரீதியாக பலவீனம் அடைவதையும் அனுரா தலைமையிலான அரசு விரும்புகிறது அப்போது தான் தாம் வட கிழக்கை கை பற்றி தமிழர்கள் தம்மோடு தான் நிற்கிறார்கள் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அபிவிருத்தி மட்டுமே அன்றி அரசியல் தீர்வல்ல அதே போல் தமிழர் கோரும் சர்வதேச விசாரணை மற்றும் தொலைத்து போனவர்களுக்கான நீதி இவற்றை கூட நீர்த்து போக செய்யலாம் புலம்பெயர் தமிழர்களையும் இந்த வழியில் கொண்டு வரலாம் என்ற நிகழ்ச்சி நிரலோடு பயணிக்கிறது. தமிழர்களிடையே சில படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவரும் இதை ஆதரிப்பது பெரும் வெட்கமானது. அது அவர்கள் ஜனநாயக உரிமை என்று சொல்லிக்கொண்டாலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலை வேண்டியே இந்த மக்கள் போராடுகிறார்கள் என்பதை சிவப்பு தோழர்கள் உணர்ந்தால் நல்லது. அவர்கள் கூட ஒரு காலம் விடுதலை வேண்டிப் போராடியவர்களே. சமத்துவம் என்ற பார்வையை இவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையே என எண்ணத் தோன்றுகின்றது. அண்மையில் இலங்கையில் அனுரா அரசால் நடாத்தப்படும் பெளத்த மதம் சார்ந்த சமய நிகழ்ச்சிகளும் அதன் பார்வையும் முன்னைய அரசுகள் போன்றே பெளத்த மதத்தை முன்னிலைப் படுத்திய பெரும் பேரினவாத சிந்தனை போன்றே அமைந்திருக்கிறது. எல்லா இனமும் மதமும் சமத்துவம் என்ற சிந்தனை வெறும் பேச்சோடு தான என எண்ணத் தோன்று கின்றது. உரிமைகளை கேட்பவர்களை இனவாதிகள் என்று சொல்லுவதே பெரும் இனவாதம். தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப் படுபவர்களாகும் ஏமாறுபவர்களாகும் இருக்கக் கூடாது எனவே தமிழர் ஒரு திரட்சியாக தம் எல்லா தீர்வையும் வென்று எடுக்கும் வரை பலமாக இருக்க வேண்டும் தமிழர் வாக்கு சரியான எதிர்கால சிந்தனையோடு இருக்க வேண்டும் இதை எல்லா தமிழர் கட்சிகளும் உணர்ந்து செயல் பட வேண்டும் இல்லையேல் உங்கள் எதிர் காலமும் இருப்பும் கேள்விக் குறியதாகிவிடும். எது எப்படி இருப்பினும் தென் இலங்கையில் ஒரு சில மாற்றம் வந்ததன் மூலம் கொலைகள் ஊழல் உடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தால் நீதியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் வரும். ஆதலால் அனுரா அரசு சரியான பாதையில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து சரியான பொருளாதார ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவத்திலேயே தான் இதன் எதிர் காலா வெற்றியும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்தால் நல்லது. அப்போது தான் நிலத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா அபிவிருத்தி வேண்டியும் உழைப்பார்கள் எதிர்காலத்திலும் உண்மையான சமத்துவதுடன் உங்களுடன் தமிழர் பயணிப்பார்கள். பா.உதயன் ✍️
  5. அனுராவின் அலை இன்னும் வருகுதாம் அள்ளிப் போக வாக்கை கண்டீர் என்னென்னமோ தாறம் என்று ஏமாற்றும் வித்தை பாரும் வடக்கையும் கிழக்கையும் இரண்டா பிரிச்சுப் போட்ட வந்து இப்போ என்ன கதை சும்மா பொய்கள் சொல்ல வேண்டாம் அண்ணன் தம்பி என்று சொல்லி இப்ப என்ன சமத்துவக் கதை அப்போ எல்லாம் என்ன செய்தீர் நாங்கள் பட்ட துன்பம் கண்டும் கூட ஆமியோடு சேர்ந்து இருந்து எங்கள் இருப்பை எல்லாம் தொலைத்தனீங்கள் அகதியாக்கி எம்மை அலைந்து திரிய கலைத்தனீர்கள் இனவாதப் பேய்களோட நீங்கள் இருந்ததெல்லாம் உண்மை தானே சோசலிசம் கொம்யூனிசம் என்று கொள்கை எல்லாம் சொல்லிறியள் அங்க அது ஒன்றும் இல்லை என்று அறிந்தவனும் தெரிந்தவனும் அறிவர் உண்மையான சோஷலிசவாதி ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுப்பான் எங்கள் பாதிக் காணியை பிடிச்சுப் போட்டு தமிழர் தேசமெல்லாம் எல்லாம் ஆமிக்காரன் வந்திருக்கான் எம் மண் முழுக்க ஈயைப் போல மொச்சிருக்கான் அரசியல் தமிழ் கைதிகளை அடுத்த நாளே விடுவோம் என்றீர் காணி எல்லாம் விடுவிப்போம் என்றீர் அந்தக் கதையைக் கூட காணவில்லை பயங்கரவாத சட்டத்தை எடுபோம் என்றீர் இப்ப கூட இந்த சட்டம் தமிழருக்காய் தொடருதெல்லோ புதுது புதிதாய் புத்தர் விகாரை கட்டியெல்லோ வைக்கிறீர்கள் ஏதும் நாங்கள் கதைக்கப் போனால் இது இனவாதம் என்கிறீர்கள் தொலைந்த பிள்ளையை தேடி அலைந்து திரியும் தாய்மாருக்கு இனியும் என்ன சொல்லப் போறீர் எங்கு எல்லோரும் பாவம் கழுவப் போறீர் பழசுகளை மறக்க சொல்லி சிலர் வந்து சொல்கிறார்கள் கடந்து நாங்கள் போனாலும் மறந்து நாங்கள் போவோமா அது வேண்டுமா இது வேண்டுமா என்று தமிழரிடம் கேட்கிறியள் இப்போ எதுகுமே தராமல் இருக்கிறியள் வருகிறது அபிவிருத்தி என்று வாயால் மட்டும் சொல்லுறியள் இனப்பிரச்சினை பற்றி எதுகுமே சொல்லவில்லை இது இருக்குதென்று தெரியாததுபோல் நடிக்கிறியள் அபிவிருத்தி என்ற மாய மானை காட்டுறியள் இனிக்க இனிக்க ஏதோ எல்லாம் பேசுறியள் எழுபது வருடமாக எத்தனை துன்பம் தமிழருக்கு இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை தாரும் இருளைக் கடந்து இலங்கையில் சமத்துவமாய் வாழ இது ஒன்றே வழியென்று அறியும் தமிழன் அடையாளம் தொலையாமல் இனி சரியான தலைமை ஒன்றை தமிழர்கள் தெரிய வேண்டும் ஒன்றாக ஒரு சக்தியாக நின்றாக வேண்டும். பா.உதயன் ✍️
  6. காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு வாறேன் மச்சாள் உன் கைக்கு மருதாணி பூச மறக்காமல் அது கூட வேண்டி வாறேன் முத்து வைத்த மூக்குத்தி உனக்காய் மறக்காமல் மச்சாள் வேண்டி வாறேன் பார்த்திருப்பேன் உன்னை படலையில் மச்சான் பார்த்து பத்திரமாக வந்து நீ சேரு ஆசையாய் நீ உண்ண அலுவா அரைக் கிலோ நேசமாய் உனக்காய் வேண்டி நான் வாறேன் அளவாக சக்கரை போட்டு நான் மச்சான் ஆடிக் கூழ் உனக்காய் காச்சி வைப்பேன் ஊரிலே எல்லோரும் சுகமாடி பிள்ளை உனக்காக நான் வச்ச மாமரம் பூக்குதா காச்சுக் குலுங்குது என்னைப் போல் மச்சான் கறுத்தக் கொழும்பான் உனக்காக இருக்கு நேசமாய் நீ வந்து பாசமாய் உண்ண பழுத்துக் கிடக்குது மாங்கனி மச்சான் பார்த்திருப்பேன் உன்னை பகல் இரவாக காத்திருப்பேன் மச்சான் கண்ணும் உறங்காமல் அம்மன் திருவிழா தேருக்கு வா மச்சான் ஆசையாய் இருவரும் சேர்ந்தே போவோம் அட மச்சான் ஆடி ஆடி வரும் அம்மன் அழகை கூடி கூடி நின்று நாம் பாடி ரசிப்போம் பா.உதயன் ✍️
  7. வெறி வெறி கொட்டப்பா வேர்க்குது வாடியப்பா ரயேட்டா இருக்குதப்பா கொம்பிளேன் எகேன் கொட்டப்பா கோ வாக்ரு லண்டன் சூனப்பா இப்படியே கத்தி போட்டு பிளைட் ஏற வேண்டியது தான் குமாரசாமி அண்ணன். நான் குளிருக்கு எழுத நீங்கள் வெக்கைக்கு எழுதுறியள் அப்படி போடுங்கோ நல்லாத் தான் இருக்கு.😂👍
  8. நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்🙏🌺 நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்🙏🌺
  9. உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து வந்து மெட்டோடு பாட்டிசைக்கும் வயல்கள் எங்கும் பச்சையாக புல் முளைக்கும் மழைகள் வந்து துளிகளாக நனைந்திருக்கும் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலமரம் ஆடி நிற்கும் அங்கு வந்து மெல்ல மெல்ல குயில்கள் கூவும் செந்தமிழாய் எங்கும் இசை எட்டுத் திசை ஒலிக்கும் எம் தமிழே எழுந்து வர எத்தனையோ மணி ஒலிக்கும் எங்குமே கவிதை மொழி எம் தமிழில் உயிர்க்கும் வண்ணமான வாழ்வு தனை தமிழ் எங்கும் சொல்லும் ஆற்றம் கரை ஓரம் அன்னை சக்தி வாழும் கோவில் மணி ஏழு கடலும் ஒலிக்கிறது எங்கும் அமைதி கொள்கிறது எங்கிருந்ததோ பெண் ஒருத்தி ஏழு சுரம் இசைக்கின்றாள் இனி ஒரு குறை இல்லை என்றே இருள் விலகப் பாடுகிறாள். பா.உதயன்🌺
  10. ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் சுயநிர்ணயம், அடையாளம், இனம் சார்ந்த எந்தத் தெளிவும் இன்றி அவர் அவர் உயரங்களுக்கு தகுந்த மாதிரி எழுதியும் பேசியும் வருகிறார்கள். நாம் வாழும் நாடு நோர்வேயிலே அவர்கள் தமது முழுமை பெற்ற சுதந்திர தினத்தை கொண்டாடும் போது சிறுவர் முதல் பெரியோர் வரை தமது தேசியக் கொடியை தோழில் காவியபடி நாங்கள் எல்லோரும் நமது தேசத்தியும் மண்ணையும் மொழியையும் நேசிக்கிறோம் என்று ஒரே மக்களாக ஒரே திரட்ச்சியாக வானுயர பாடியபடி போவார்கள். இப்படி ஒன்று பட்ட திரட்சியினால் தான் பிரான்சுப் புரட்சியில் இருந்து ரஷியாவின் சிவப்பு சுதந்திர சதுர்க்கம் வரை விடுதலை பெற்ற வரலாற்றை உலகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. ஒரு இனம் ஒடுக்கு முறைக்கு எதிராக தனது இருப்பு தனது சுதந்திரம் வேண்டிப் போராடுவது எல்லாம் இனவாதம் இல்லை. இனவாதம் என்பது தத்துவார்த்த ரீதியிலான பல கருத்துக்களை கொண்டது அதில் ஒன்று சிறு பான்மை இனத்தின் உரிமை மறுக்கப்படுவதும் சொந்த இனத்தை உயர்வாகக் பார்த்து பிற இனத்தை ஏற்றுக்கொள்ளாமல் தாழ்வாகக் கருதுவது போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தில் வாழும் தேசிய இனங்களை மரத்தை சுற்றிப் படரும் கொடி என்று பெரும்பான்மை சமூகம் கூறுவதும் தான் இனவாதம். தன்னாட்சி கோருவது பிரிவினைவாதம் அல்ல. சட்டப்படி உரிமைகளை கோருவது இனவாதம் அல்ல. உரிமைகளை மறுப்பதே இனவாதமாகும். ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய சிறு பான்மை இனம் சுய நிர்ணயம், தன்னாட்சி, உரிமைகள் மற்றும் சமத்துவம் சட்டப்படி தமது உரிமைகளை கோருவது பிரிவினைவாதம் இனவாதம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. கொல்லப்பட்ட எம் மக்களுக்கும் தொலைந்து போனவர்களுக்கும் நீதி கேட்பது இனவாதமா அதற்கு மாறாக, அந்த உரிமைகளை மறுப்பது முறையாக மதிப்பீடு செய்யப்படாத செயலாகும் மற்றும் சமத்துவத்தை மறுக்கும் ஒரு நிலையை பிரதிபலிக்கிறது. தமது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் உரிமைக் குரலை மறுத்து பிரிவினை வாதம் இனவாதம் என்று கதைப்பது வாதிடுவது தான் இனவாதம். இதை சரியாக விளங்கிக் கொண்டே ஆளும் கட்சியாக இருந்தாலும் எவரும் எந்தக் கருத்தையும் கூற வேண்டும். ஆழமாக எதையும் விளங்கி சரியானவைகளை எழுத வேண்டும் பேச வேண்டும். பிளவு படாத ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழ்வோம் என்பதை விட அந்த மக்களின் உரிமைகளை அங்கீகரித்து விட்டு அனைவரும் சமத்துவமாக வாழ்வோம் என்று அழைப்பது தான் உண்மையான சமத்துவம். தமிழர் தேசங்களில் உரிமைகள் மதிப்பு, நீதி, நிர்வாகம், சட்டம், பாதுகாப்பு முறை என்பன அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மரியாதையுடன் சமத்துவமாகவும் நடைமுறைப் படுத்த வேண்டும். இன்று இலங்கையில் பல மாற்றம் நடந்திருக்கிறது குறிப்பாக தெற்கு அரசியல் வாதிகளே முழுக்கு முழுக்கு இனவாதம் பேசியவர்கள் அந்த முகங்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறார்கள் இது வரவேற்கத் தக்க மாற்றமாகும். சமத்துவமான சமுதாயமாகவும் நாம் எல்லாம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடக இலங்கை இருக்க வேண்டும் என்ற கனவு கண்டால் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினையாகும். இதன் மூலம் நாம் எல்லோரும் ஒன்றாக சமத்துவமான ஊழல் அற்ற ஒரு கனவுத் தேசத்தை கட்டி எழுப்ப முடியும் என்ற யதார்த்தத்தை ஆளும் தரப்பினர் சரியாகப் புரிய வேண்டும். நாமும் இனி வரும் காலத்தில் ஒற்றுமையோடு பயணித்தால் தான் எமக்கான விடுதலையும் அடைய முடியும் என்பதையும் தமிழர் தரப்பும் உணர வேண்டும். பா.உதயன் ✍️
  11. நல்ல சிந்தனைகள் கருத்துக்கள் எல்லோருக்கும் நன்றிகள் .
  12. தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ணி கவலை இல்லை இவர்களோடு கூட நின்று மேடை போட்டு முழங்கியது போலவே அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று நல்லாத் தான் நடிக்கிறார்கள் அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக ஆளுக்கு ஒரு சின்னத்தோட வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல சிலர் சமத்துவமே வந்தது போல் தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் நினைக்கவே கவலையாய் இருக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை ஏதோ ஒரு அலை எல்லோரையும் மயக்கத்தில தள்ளுது தமிழ் யூடியூப் தம்பிமாரே எல்லோரையும் சொல்லவில்லை நல்லோரும் உண்டு லைக்கை மட்டும் பார்க்காமல் கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள் அறிவாய் எதையும் அணுகுங்கள். பா.உதயன்✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.