Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76880
  • Joined

  • Days Won

    770

Posts posted by தமிழ் சிறி

  1. 14 minutes ago, nunavilan said:

    விசாவும் மோசடி செய்தா வழங்கப்பட்டது???

    சிங்களம் தான் தப்ப... வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள்  மீதுபழியை போட நினைக்கின்றது. எத்தனை சுத்து மாத்துகளை செய்தவர்களுக்கு... இது  ஜூஜுப்பி Matter. 😂 🤣

  2. police.jpg

     

    02.jpg

    இது, கனடா பொலிஸ்  அதிகாரி துரையப்பாவின் தனிப்பட்ட விஜயம் என்றால்....
    கனடா பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டதும், இலங்கையின் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும் தவறு என்றே கருதுகின்றேன். பொறுப்பு வாய்ந்த கனடா பொலிஸ்  அதிகாரி இதன் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்தது... ஆச்சரியம் அளிக்கின்றது.

    சிங்களவனுக்கு... முட்டுக் கொடுக்கப் போய், தான் முட்டுப் பட்டு நிற்கிறார். 😂

    • Thanks 2
  3. Untitled-109-635x375.jpg

    இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை!

    1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    தற்போது இரு நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தலைமையிலான குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அஹமட் வஹிதியும் தெஹ்ரானில் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதன்படி அவரை சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் ‘வாஹிதி’க்கு கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

    2007 ஆம் ஆண்டு முதல், அர்ஜென்டினாவின் வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் அவரைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது

    மேலும் ஈரானின் முன்னாள் மூத்த உறுப்பினரான வஹிதி 1994 ஆம் ஆண்டு AMIA மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று அர்ஜென்டினா மேலும் குறிப்பிட்டுள்ளது.

    https://athavannews.com/2024/1379601

  4. vijaya-thasa-rajapaksha-1.jpg

    உக்ரேன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவம்? : நாளை நாடாளுமன்றில் அறிக்கை!

    உக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    “வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் ஊடாக இவ்வாறான மோசடி இடம் பெற்றுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி ஒரு சில தரப்பினர் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
    இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான காரணிகளை ஆராய்ந்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை கையளிக்கப்படும்” என நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

    https://athavannews.com/2024/1379622

  5. 437523215_825799522918355_17823897766343

     

     

     

    spacer.png

     

    436319068_822079259957048_38983403009768

     

    438093153_828210602677247_22283529911768

     

     

     

    438119894_829467565884884_75035799587124

     

     

    438675076_828854875946153_18090828601327

     

    437719562_828223032676004_18960411095493

     

    spacer.png

     

    437524039_829466292551678_77224581005704

     

     

    438094432_829464065885234_11334320921402

     

     

    437553735_829118842586423_17595798830304

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தோவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள்.
    சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் ஓற்றுமையாக இருந்த இனம் மீது, விஷ விதையை விதைத்து... சிங்கப்பூர் மாதிரி இருக்க வேண்டிய  நாட்டை குட்டிச்  சுவராக்கியதன் பலனை அந்தக் கட்சி  அனுபவிக்கின்றது.

    • Like 2
  6. 6 hours ago, goshan_che said:

     அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣.

    இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣

    • Haha 1
  7. Ukraine-Army-750x375.webp

    போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்.

    ரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

    இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத் தெரிவிக்கையில் ”போர் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை உக்ரேன் இராணுவமானது சுமார் 5 லட்சம் இராணுவ வீரர்களை இழந்துள்ளன.

    அத்துடன் உக்ரேன் இராணுவத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள், 1,000 ஏவுகணைகள், சுமார் 900 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை ரஷ்யா அழித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    https://athavannews.com/2024/1379493

  8. 02-8-750x375.jpg

    நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்!

    பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

    இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் விமானம் மூலம் ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.

    இதனை செயற்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம், வாடகை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

    மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அனுப்பி வைக்க தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்களையும் பணிக்கமர்த்தியுள்ளது.

    குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த சட்டமூலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது.

    இந்நிலையில்தான் இன்று செவ்வாய்க்கிழமை, இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

    பல்வேறு நாடுகளிலிருந்து சிறிய படகுகள் பிரித்தானியாவுக்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம்.

    இதனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரித்தானியாவுக்கள் வருபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

    2021ஆம் ஆண்டுக்கு முன்னதாக 4 ஆண்டுகளில் மட்டும் 299 பேர் மாத்திரம் பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 45,774 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உரிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ரிஷி சுனக் இந்த விடயத்தில் உறுதியாக இருந்தார்.

    இதனிடையே, பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

    மேலும் இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கும் லண்டன் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது.

    https://athavannews.com/2024/1379480

  9. 3 hours ago, satan said:

    நீங்கள் தெரித்தெடுத்த பெயரை எனக்கு அறிவியுங்கள், எனக்கு பேரப்பிள்ளை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப்பெயரை சூட்டி மகிழ்கிறேன்.

    சாத்தான்…  ஆண் பேரப் பிள்ளை என்றால் தமிழ் சிறி என்றும்,
    பெண் பிள்ளை என்றால்… சிங்கள சிறி என்றும் வையுங்கள். 😂

    (சும்மா பகிடிக்கு… ரென்சன் ஆகாதீங்க.) 🤣

  10. On 20/4/2024 at 21:48, நிலாமதி said:

    வேண்டவே வேண்டாம் தம்பி. எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டேன்  

     

    On 22/4/2024 at 23:39, யாயினி said:

    அரசியல் சுத்த சூனியம் நமக்கு.✍️🖐️

    யாழ் களத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுவதால்… @nilmini ஐ போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றேன். 🙂

    • Like 1
  11.  

     
    இளையராஜா எண்பது வயதில்,  தானே எழுதி இசையமமைத்து பாடிய பாடல். 
     
    வழி நெடுக காட்டுமல்லி
    யாரும் அத பாக்கலியே
    எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
    வருமா? வருமா? வீட்டுக்குள்ள
    காடே மணக்குது வாசத்துல
    என்னோட கலக்குது நேசத்துல
    வழி நெடுக காட்டுமல்லி
    வழி நெடுக காட்டுமல்லி
    கண்பார்க்கும் கவனமில்லை
    பூக்குற நேரம் தெரியாது
    காத்திருப்பேன் நான் சலிக்காது
    பூ மணம் புதுசா தெரியுதம்மா
    என் மனம் கரும்பா இனிக்குதம்மா
    வழி நெடுக காட்டுமல்லி-ஈ
    கனவெனக்கு வந்ததில்லை
    இது நிசமா கனவு இல்ல
    கனவா போனது வாழ்க்க இல்ல
    வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
    மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
    போகுற வருகிற நினைவுகளே
    ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
    ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
    காத்திருப்பேன் நான் திரும்பி வர
    காட்டுமல்லியில அரும்பெடுக்க
    வழி நெடுக காட்டுமல்லி
    கண்பார்க்கும் கவனமில்லை
    காடே மணக்குது வாசத்துல
    என்னோட கலக்குது நேசத்துல
    கிட்ட வரும்
    நேரத்துல
    எட்டி போற தூரத்துல
    நீ இருக்க
    உள்ளுக்குள்ள
    உன்ன விட்டு போவதில்ல
    ஒலகத்தில் எங்கோ மூலையில
    இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
    இறு சிறு உசிரு துடிக்கிறது
    நெசமா யாருக்கும் தெரியாது
    சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
    காட்டுல வீசிடும் காத்தறியும்
    வழி நெடுக காட்டுமல்லி
    கண் பார்த்தும் கவனமில்லை
    எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
    வருமா? வருமா? வீட்டுக்குள்ள
    பூ மணம் புதுசா தெரியுதம்மா
    என் மனம் கரும்பா இனிக்குதம்மா
    வழி நெடுக காட்டுமல்லி
    • Like 1
  12. ஆகாய பந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா...

    பாடலாசிரியர்: கண்ணதாசன்,     
    பாடகர்(கள்): டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா,
    இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்,    
    திரைப்படம்: பொன்னூஞ்சல்.

    ஆகாயப் பந்தலிலே…
    பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
    ஊர்கோலம் போவோமா…
    உள்ளம் அங்கே ஓடுதம்மா…

    ஊர்கோலம் போவோமா…
    உள்ளம் அங்கே ஓடுதம்மா…
    ஆகாயப் பந்தலிலே…
    பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

    பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
    மணச் சங்கு கையேந்தி…
    நாம் அங்கே போவோமா…

    பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
    மணச் சங்கு கையேந்தி…
    நாம் அங்கே போவோமா…

    மீனாளின் குங்குமத்தை…
    மீனாளின் குங்குமத்தை…
    நானாள வேண்டுமம்மா…
    மானோடு நீராட…
    மஞ்சள் கொண்டு செல்வோமா…

    ஆகாயப் பந்தலிலே…
    பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
    ஊர்கோலம் போவோமா…
    உள்ளம் அங்கே ஓடுதம்மா…

    பால் வண்ணம்…
    பழத்தட்டு பூக்கிண்ணம்…
    மணப்பெண்ணின் தாய் தந்த…
    சீராக காண்போமா…

    பால் வண்ணம்…
    பழத்தட்டு பூக்கிண்ணம்…
    மணப்பெண்ணின் தாய் தந்த…
    சீராக காண்போமா…

    ஊராரின் சன்னதியில்…
    ஒன்றாக வேண்டுமம்மா…
    தாயென்றும் சேயென்றும்…
    தந்தையென்றும் ஆவோமா…

    ஆகாயப் பந்தலிலே…
    பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

    கண்ணென்றும்…
    வளை கொண்ட கை என்றும்
    இதழ் கொண்ட அங்கங்கள்…
    நீ வாழும் இல்லங்கள்…

    பொன்மாலை அந்தியிலே…
    என் மாலை தேடி வரும்…
    அம்மா உன் பெண்ணுள்ளம்…
    நாணம் சொல்லி ஆடி வரும்…

    ஆகாயப் பந்தலிலே…
    பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
    ஊர்கோலம் போவோமா…
    உள்ளம் அங்கே ஓடுதம்மா…

    • Like 1
  13. பேரப்பிள்ளை  சுகமாக பிறந்தது மகிழ்ச்சி. 👍
    நீங்களும் குறுகிய நேரத்துக்குள்..  Cardiologist டாக்டரையும் பார்த்து, உங்கள் அலுவல்களையம்  சமாந்திரமாக செய்து முடித்து விமானம் ஏறியமைக்கு பாராட்டுக்கள்.  
    பேராண்டிக்கு பெயர் வைத்து விட்டீர்களா. 

    • Haha 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.