-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமானுக்கு தற்குறியாக இருக்கும் உரிமை உள்ளது. விஜய்க்கு அது இல்லை என்பதையே அவர் கூறவந்தது. 😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அண்ணன் ஆட்சிக்கு வந்தால் முன்னைய ஆட்சியில் வாங்கிய கடன்களை திருப்பிக் செலுத்தமாடாராம். செலுத்த வேண்டிய எல்லா கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமாம். 😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எனக்கு ஓட்டு போடு இல்லையென்றால் சாப்பிட கூப்பிட்டு சோத்தில நஞ்சு வைச்சு கொல். இப்படி என்னை வருசக்கணக்காக கத்தவைக்கதே என்று செபஸ்ரியன் சீமான் மக்களை பார்தது கேட்டுள்ளார். அதற்கும் கைதட்டல் தான்.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அண்ணன் சொன்னது டாஸ்மார்க் சரக்கு அடிபவர்களுக்கு மட்டுமே. அண்ணன் வெளிநாட்டு றெமி மார்ரின், ஜொனி வோக்கர் அடிப்பவராச்சே. ஆகவே வாக்களிக்கலாம்.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
உண்மை என்னவென்று கூட பார்க்காமல் சீமான் உளறி வருவதை அப்படியே ஒப்புவித்துள்ளீர்கள். பொதுவாக, இந்த “நாம் தமிழர்” கட்சிக்காரர்கள் தொலைக்காட்சி விவாதங்களிலோ, அல்லது வேறு விவாதங்களிலோ கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சீமானின் மேடைப்பேச்சை வரிக்கு வரி அப்படியே ஒப்புவிப்பார்களே தவிர, சுயமாக சிந்தித்து கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. அவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் majurity இல்லையோ அல்லது அவ்வாறு சுயமாக சிந்தித்து பதிலளித்தால், அடுத்த கச்சேரிக்கு நீ வராதே என்று சீமான் விரட்டிவிடுவாரோ என்ற பயமோ எனக்கு தெரியாது. ஆனால் , பொது அறிவுள்ள மக்கள் பார்வையில் இன்று தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் எல்லாமே அந்த மண்ணின் மைந்தர்களின் கட்சிகள் தான். இதுவரை தமிழ் நாட்டில் முதலமைசராக இருந்தவர்கள் அனைவரும் அந்த மண்ணின் மைந்தர்களே. கடந்த 50 வருடத்தில் தமிழ் நாட்டில் பல வளர்சசி திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை அவர்கள் முன்னேற்றியிருப்பது வெள்ளிடை மலை. அந்த மண்ணின் மைந்தர்கள்களான மக்களை பார்தது தமிழர் இல்லை என்று கூற நேற்று வந்த சீமானுக்கு என்ன அருகதை உள்ளது? ஏனென்றால், சீமானே மலையாள பூர்வீக கலப்பினம் என்று கூறப்படுகிறது தன்னை தூய தமிழ் ரத்தம் என்று நிருபிக்க முடியாத செபஸ்ரியன் சீமானுக்கு மற்றயவர்களை தமிழர்கள் இல்லை என்று கூற என்ன அருகதை இருக்கிறது? புலம் பெயர்ந்து முதலாவது தலைமுறையாக அடுத்தவர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு அதாவது உங்களைப் போன்றவர்களுக்கு தமிழ் நாட்டு மண்ணில் மண்ணில் பல தலைமுறையாக வாழ்ந்துவரும்மக்களை பார்த்து அந்நியர் என்று கூறவும், அவர்கள் வாழலாம் ஆளக்கூடது என்று இனவாதம் பேசவும் அருகதை எங்கிருந்து வந்தது?
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அந்த சிங்கள இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சீமானின் இனவெறி மற்றும் கயமைத்தனத்தை ஆதரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கு நீங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள் போலும்.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அது மட்டுமல்ல சீமானின் இனவெறுப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இந்த ஈழத்தமிழ் பெண் உதவி மேயராக வர முடிந்திருக்காது.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
உங்கள் ஆதங்கம் அதுவல்ல. உண்மையில் முன்னைய அரசுகளை விட இப்போதைய ஸராலின் அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாகவே அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் அங்கு சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த யூருப்பர் ஈழத்தமிழ் மக்களை சந்தித்த போதும் அதை தெரிவித்திருந்தனர். பாஜக கொண்டுவர முற்படும் புதிய கலவிகொள்கை அமுலுக்கு வந்தால் அதனால் பாதிக்கப்படுவர்களல் ஈழத்தமிழ் அகதிகளும் அடங்குவர். புதிய கல்விகொள்கையை அமுல் படுத்துவதை திமுக அரசு கடுமையாக எதிர்ககிறது. ஆனால் பிரபாகரனை வைத்தும் இனவெறியை வெறியை வைத்தும் அரசியல் செய்யும் உங்கள் செபஸ்ரியன் சீமான் புதிய கல்விகொள்கையை எதிர்த்து என்ன போராட்டங்களை மேற்கொண்டார். ஈழத்தமிழ் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட உயர் கல்வி இட ஒதுக்கீட்டை, உங்கள் அண்ணன் செபஸ்ரியனால் ஈழத்தாய் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, ஜெயலலிதா பறித்ததார். 1996 ல் கருணாநிதி அதை திரும்ப வழங்கினார். அண்மையில் பெரியாரை எதிர்பதற்காக மபொசியை தமிழ் பெரியார் என உங்கள் அண்ணன் பெருமைப்படுத்தினார். புலிகள் இயகத்தை கொடிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்தவர் மபொசி. பிரபாகரனை எனது தலைவன் என்று கூறி அரசியல் நடத்திக்கொண்டு அவரது புலிகள் இயக்கத்தை கொடிய பயங்கரவாதிகள் என்று அழைத்த மபொசியை பெரியார் என்று அழைப்பது அயோக்கியத்தனம் அல்லவா. வெறும் அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறான மோசமான அயோக்கியத்தனத்தை புரியும் சீமானை ஆதரிக்கும் நீங்கள் மற்றைய சாதாரண அரசியல்வாதிகளை நோக்கி விரல் நீட்டலாமா?
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
தகவலுக்கு நன்றி கோஷான்.
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
தீவிர அரசியலில் இருக்கும் போது இவ்வாறான அறிவூட்டல்களை செய்திருக்கலாம். அப்போது தனது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் தராத வெற்று கோஷ அரசியலை செய்துவிட்டு அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னர் இவ்வாறான அறிவூட்டல்களை செய்வது தகுந்த பலன்களை கொடுக்காது. இருப்பினும் இவ்வாறான மக்கள் நலன் விரும்பும் அறிவூட்டல்களை கல்வியாளர்கள் செய்வது வரவேற்கத்தக்கது.
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
எனது கருத்தில் நான் தெரிவித்திருந்தது யுத்தம் நிறுத்தப்பட்டதால் தொடர்சசியான மக்கள் அழிவு நிறுத்தப்பட்டது எனக்கு மகிழ்சியே என்பதையே. யுத்தத்தை உரிய வேளையில் எமது தரப்பில் இருந்து நிறுத்ததப்பட்டிருந்தால் எமது மக்களின் அரசியல் பலமும் மனோபலமும் காப்பாற்றப்பட்டிருக்கும். அவர்களால் யுத்தத்தை நிறுத்த வைத்தது எமது நிலையை அடி மட்டத்திற்கு தள்ளியது. இந்த விடயத்தில் அன்றைய பிழை இன்று சரி என்று நீங்கள் கூறுவது வெறும் நொண்டி சாட்டு மட்டுமே. அன்றைய பிழையை அன்றே அது பிழை என்று உணர்ந்து அதை எடுத்துரைத்தோர் எச்சரித்தோர் பலர் உண்டு. அவர்களெல்லாம் வன்முறைமூலம் மௌனிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் அன்றே கூறியது சரி என்பது அவர்களை மௌனிக்க வைத்தவர்கள் முட்டு சந்திக்கு மக்களை அழைத்து சென்றுவிட்டு வேறு வழியின்றி மௌனித்தபோது தான் மிக தெரிந்து கொண்டனர். அதை வெளிப்படையாக சொல்ல இன்றும் ஈகோ பலரை அனுமதிப்பதில்லை .
-
சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026
இடி அமீனும் அன்பான சரவாதிகாரி தானே!
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
யுத்தம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்திருத்தால் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் குறைவாகவும் இப்படியான நினைவு சின்னங்கள் அதிகமாகவும் இருந்திருக்கும். நல்ல வேளை யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் தொகை வளர்சசியை அடைகிறது
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
ஆனால், அண்ணருக்கு சகல விதமான வாடிக்கையாளர்களிடம் இருந்து payment எல்லாம் சரியாக பைசல் பண்ணப்பட்டதாக book-keeping report வந்தாலே வெற்றிதான். 🤣 ImgBBIMG 7311 hosted at ImgBBBild IMG 7311 gehostet auf ImgBB
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
கடந்த பதினாறு வருடங்களாக செபஸ்ரியன் சீமான் பிரபாகரனை வியாபார பொருளாகவே பயன்படுத்தி வருகிறார். அவரிடம் கற்றுக்கொண்டதை தான் பயன்படுத்தினால் என்ன என்று அவர் நினைத்திருக்கலாம். செபஸ்ரியனுக்கு மட்டுமே பிரபாகரனை உபயோகிக்கும் copy right உள்ளது என்று நீங்கள் நினைப்பதை போல் காளியம்மாள் நினைக்கவில்லைப் போலும்.