பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும்.
ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள்.
கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள்.
fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது.
அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன்.
அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது
90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள் ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.