Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1297
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by vasee

 1. நமது தறுகளை புரிந்து கொள்வதே முதலாவது, பின் அதற்கான தீர்வுகளை தேடும்போது ஒன்றில் தோல்வி என்றால் அதற்கு நேரெதிரான ஒன்றை தேர்ந்தெடுப்பது அதாவது A தவறெனில் B எனும் நிலைப்பாடு, ஏன் இரண்டு தெரிவுகள் மாத்திரமா உள்ளது? ஆனால் மனிதர்களின் பொதுவான சிந்தனை வெளிபாடு அவர்களது கல்வி மூலம் இவ்வாறான பெட்டிக்குள் சிந்திக்கும் மனப்பான்மையினை வளர்த்துவிட்டது.
 2. நமது தறுகளை புரிந்து கொள்வதே முதலாவது, பின் அதற்கான தீர்வுகளை தேடும்போது ஒன்றில் தோல்வி என்றால் அதற்கு நேரெதிரான ஒன்றை தேர்ந்தெடுப்பது அதாவது A தவறெனில் B எனும் நிலைப்பாடு, ஏன் இரண்டு தெரிவுகள் மாத்திரமா உள்ளது? ஆனால் மனிதர்களின் பொதுவான சிந்தனை வெளிபாடு அவர்களது கல்வி மூலம் இவ்வாறான பெட்டிக்குள் சிந்திக்கும் மனப்பான்மையினை வளர்த்துவிட்டது.
 3. போரில் ஈடுபடும் இருதரப்பும் (உக்கிரேன் அல்ல மேற்கு, உக்கிரேனை உபயோகிக்கிறார்கள்) தவறானவை, இதில் ஒரு தரப்பு சரி என கருதுவது ஆபத்தானது, இதில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்கினாலும் இந்த அழிவினை ஆதரிப்பவர்கள் ஆகிவிடுவோம். உக்கிரேன் நிலை
 4. தங்கம் 3 வர்த்தகமும் Stop loss எட்டி விட்டு மீண்டும் விலை உயர்ந்துள்ளது, மீண்டும் தங்கத்தினை 1752 இல் தற்போதய விலையில் வாங்கியுள்ளேன் Stop loss மீண்டும் 1731. இன்று விலை குறைவடையும்போது மேலும் ஒரு தொகுதி அல்லது 2 தொகுதி வாங்க உள்ளேன்.
 5. இந்த யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது இரஸ்சியாவோ, உக்கிரேனோ தோல்வியடைவதை உலக ஆதிக்க சக்திகள் விரும்பாது, அவர்களுக்கு பணம் கொடுக்கும் முதலாளியான ஆயுதவிபாரிகளும் விரும்பமாட்டார்கள், போர் தொடர்ந்து கொண்டே இருக்கும் மக்கள் இறந்து கொண்டே இருப்பார்கள் ஆனால் யாரும் கவலைப்படமாட்டார்கள், வெளியில் போர்குற்றத்திற்கெதிராக நடவடிக்கை எடுப்பது போல நடிப்பார்கள் ஆனால் எதுவும் செய்யமாட்டார்கள்.
 6. தங்கம் 1735, 1736, 1741 ஆகிய விலைகளில் வாங்கியுள்ளேன், Stop 1731, Take profit 1800
 7. நேரடியாக பிட் கொயினில் முதலிடாதவர்கள் கூட இந்த பிரச்சினையினால் தமது ஓய்வூதிய நிதியினை இந்த நிறுவனத்தில் முதலிட்ட அவர்களது ஓய்வூதிய நிதிமுகாமத்துவ நிதி மனிறுவனத்தின் மூலம் இழந்துள்ளனர். பண சந்தையை போலவே கிரிப்டோவும், சட்ட மயப்படுத்தப்படாமை (OTC) முதலீட்டாளர்கள் அடிப்படை பாதுகாப்பற்றவர்களாகிறார்கள், பணச்சந்தை நாடுகளின் நாணயமாக இருப்பதால் எந்த தில்லு முல்லும் இருக்காது. ஆரம்பத்திலிருந்து கிர்ப்டோ பற்றிய புரிதல் குறைவாக இருந்தமையால் அதனை Risk ஆக பார்த்தனால் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடவில்லை, ஆனால் யாழில் உள்ள பதிவுகளின் பின்னர் வர்த்தகத்திலீடுபட்டேன் ஆனால் வாங்கவில்லை விற்றல் நடவடிக்கையில் மட்டுமே. பொது வாழ்க்கையில் நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயத்திலும் மற்றவர்களை பின் தொடர்கிறோம் (சாதாரண கருத்துகளில் கூட) ஆனால் முதலீட்டில் கண்ணை மூடிக்கொண்டு மற்றவர்களை பின் தொடர்ந்தால் எமக்குதான் நட்டம். யாழில், நல்ல வேளையாக கிரிப்டோ தொடர்பாக மாறுபட்ட கருத்து நிலவியிருந்தமை ஒரு ஆரோக்கியமான தெளிவான சிந்தனை முதலீட்டாளர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் 4000 விலை மிகவும் உறுதியான Support ஆக தெரிகிறது இந்த விலையினை அடைந்தால் பிட் கொயினை சிறிதளவு வாங்கும் உத்தேசம் உள்ளது.
 8. இந்த போரினால் ஆதாயம் பெறுவது, ஆயுத வியாபாரிகளும் அவர்களிடம் பணம் பெறும் அரசியல்வாதிகளும்தான், உண்மையில் உக்கிரேனிய, இரஸ்சிய, மற்றும் உலக மக்கள் போரை விரும்பாவிட்டாலும் இந்த போரை நிறுத்தமுடியாது. ரிசி சுனக்
 9. கருத்து தெரிவித்த மீரா, தனி ஆகியோருக்கு நன்றி. தனி நீங்கள் கூறும் செலவீடுகள் அதிகரிப்பால் உற்பத்தியாளருக்கு அதற்கேற்ப வருமானம் கிடைக்காமையினை குறிப்பிடுகிறது, விவசாய உற்பத்திகள் அத்தியாவசிய பொருள்கள் என்ற வரையறைக்குள் வருபவை, விலை மாற்றம் கேள்வியில் மாற்றத்தினை ஏற்படுத்தாது விலை கூடினாலும் குறைந்தாலும் நுகர்வு அளவு ஒரே மாதிரியே காணப்படும். அவ்வாறாயின் உள்நாட்டு உற்பத்தியாளருக்கு போட்டியாக இந்த பொருள்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதா? அந்த பொருள்களின் விலைக்கு உள்ளூர் உற்பத்தியாளரினால் போட்டியிட்டு உற்பத்தி செலவினை குறைக்கமுடியாமையால் நட்டம் ஏற்படுகிறதா?
 10. நன்றி ரதி, கோசான், கப்பித்தான், நொச்சி, நுணா. கோசான் நீங்கள் கூறும் நில உரிமை தொடர்பான கருத்து, முன்பு சிற்மாவோ காலத்தில் என நினைக்கிறேன் நில உச்ச வரம்பு சட்டம் என ஒன்று உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமான நிலங்களை வைத்திருந்தவர்களிடம் (அப்போது தமிழர்களிடம்) நிலத்தினை பறித்து ஏழை சிங்களவர்களுக்கு பகிர்ந்தழிக்கபட்டதாகவும் அதனால் உற்பத்தி பெருமளவில் சரிந்தது, அதற்கு காரணமாக சிங்கள மக்களின் சோம்பல் போக்கு காரணம் கூறப்பட்டது (இது படித்தும் கேள்விப்பட்ட விடயம் அதன் உண்மை தன்மை தெரியாது). அத்துடன் காணிகள் பிரிக்கப்படும்போது அதன் உற்பத்தி திறன் பாதிக்கப்படும், அதற்காக சில நாடுகளில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, உதாரணமாக அவுஸ்ரேலியாவில் விவசாயிகள் தமது நிலத்தினை ட்ரஸ்ட் எனும் அமைப்பினூடாக பராமரிக்கிறார்கள், தந்தை ஒருவரது காணியின் பயனாளர்களாக அவர்களது குழந்தைகள் இருப்பார்கள், இதன் மூலம் சொத்து என்ற அடிப்படையில் நிலம் துண்டாடப்படாது. காணி பங்கீடு எனு வரும்போது மீண்டும் அரசியலுக்குள் விவதாம் வந்துவிடும் ஆனால் அது நடக்கமுடியாத ஒன்று, ஏனென்றால் தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப்பகிர்வு நிகழபோவதில்லை. மறுவளமாக வருமான இடைவெளியினை குறக்கும் வருமான மீழ்பங்கீட்டு கட்டமைப்பு இலங்கையில் பெரிதாக தாக்கத்தினை ஏற்படுத்தும் நிலையில் இல்லை, இலங்கை, இந்தியாவினை விட ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளது, இந்தியாவில் வருமான ஏற்ற தாழ்வு என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி போன்றது. இதனாலேயே இலங்கையின் சமூக அபிவிருத்தி, அபிவிருத்தி அடைந்த நாடுகளைப்போல உள்ளது. இலங்கையில் தினக்கூலியாளருக்கு அடிப்படை ஊதியத்தினையும் நிர்ணயிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை, அதற்காக அவர்களிடம் சங்கம் உண்டா? அது நடைமுறையில் சாத்தியபடுமா?
 11. கடந்த வாரம் வாங்கியிருந்த தங்கத்தினை எதிர்பார்ப்பு விலையாக 1800 வெளியேற தீர்மானித்திருந்தேன், ஆனால் விலை சரிந்த போது 1779.24 இற்கு விற்றுவிட்டேன். அப்போது 1 மணிநேர வரைபடத்தில் அலை3 அல்லது அலை 5 என்பதில் ஒரு குழப்பம், தங்கத்தினை 1779 இல் விற்பதை தவிர்த்தேன், அலை 3 இல் விலை தற்காலிகமாக இறங்குவதாக முடிவெடுத்தமையால், மீண்டும் இந்த வாரம் தங்கம் 3 விலைகளில் தங்கத்தினை வாங்க திட்டமிட்டுள்ளேன் 1. 1748 தற்போது தங்கம் இந்தவிலையில் உள்ளது ஆனால் இந்த விலை குறைந்த நிகழ்தகவில் விலை திரும்ப வாய்ப்புள்ளது. 2. 1736 இந்த விலை அதிக நிகழ்தகவில் விலை திரும்ப வாய்ப்புள்ளது. 3.1718 இந்த விலை அதிக நிகழ்தகவில் விலை திரும்ப வாய்ப்புள்ளது. 1800 இல் விற்க தீர்மானித்துள்ளேன். தங்கம் 2 அல்லது 3 மாதமளவில் 1900 வரை செல்லலாம் என கருதுகிறேன் அதன் பின் விலை மீண்டும் தளம்பக்கூடும் என கருதுகிறேன். சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன், விளக்கம் தேவையெனில் விரிவாக பதிகிறேன்.
 12. எனக்கு இப்போதும் புரியாத விடயம் இரஸ்சியாவின் பொருளாதாரம் எவ்வாறு இப்படி ஒரு நீண்ட போரினை உலகிற்கெதிராக மேற்கொள்கிறது என்பதே, அதற்கு முக்கிய காரணம் பொருளாதார தடை எந்த தாக்கத்தினையும் இரஸ்சியாவின் மீது ஏற்படுத்தவில்லை. ஆனால் கீவினை கைப்பற்ற இரஸ்சியா 65 கிலோ மீற்றர் நீளத்திற்கு இராணுவ கவசவாகனத்தினை ஒரு நகர்புற யுத்தத்தில் இரஸ்சியா நிறுத்தியபோதே அதன் இராணுவ மேலாதிக்க மாயை நீங்கிவிட்டது இதனை ஆரம்பத்தில் இந்த போர் ஆரம்பிக்கும் முன்னரே இரஸ்சியா போரில் தோற்றுவிட்டதாக ( என நினைக்கிறேன்) கூறியதாக நினைவில் உள்ளது. இரஸ்சியாவின் இராஜதந்திரம்? அப்படி எதுவும் இரஸ்சியாவிடம் இல்லை. இரண்டாவது அணி உருவாகி உள்ளது என்ற கருத்தில்தான் இப்போதும் உள்ளேன், அதைவிடவும் அமெரிக்காவின் உலகின் ஒற்றை தலைமை (சர்வ அதிகாரம்) முடிவுக்கு வர உள்ளதாகவும் நம்புகிறேன் ( அது என் விருப்பமும் கூட ஏன் என்றால் சம்த்துவம்தான் உண்மையான ஜனநாயகம்). இப்படி ஒரு பலவீனமான இரஸ்சியா எப்படி ஒரு உலகவல்லரசுக்கு இவ்வளவு சவாலாக உள்ளது? அப்படியாயின் அமெரிக்கா கூட ஒரு பலவீனமான வல்லரசா? சீனா உலகின் 2 வது மிக பெரிய பொருளாதாரம் ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சியடைந்து பொருளாதார வளர்ச்சி விகித பண்புடன் ஒத்தது, சீனாவினை வளர்ச்சியடைந்த நாடு என வரையறுப்பதில்லை (வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம் 2 எண்ணில் இருக்கும்).
 13. நன்றி கோசான். நன்றி கிருபன், நான் பன்னாடை மாதிரி, நல்லவற்றை விட்டு விட்டு குப்பைகளை எடுப்பது, கதைகள் வாசிப்பதை 5 அல்லது 6 வருடங்களாக பெரும்பாலும் நிறுத்திவிட்டேன், யாழ்கள உறவுகள் கதைகள் சில சமயம் வாசிப்பதுண்டு, சிலவேளை ஜெயமோகனின் கதையினை எங்காவது வாசித்திருப்பேன். ஆனால் பொதுவெளியில் இந்த பெயர்களை அதிகம் கேள்விப்பட்டுள்ளேன்.
 14. கீரைக்கடைக்கும் எதிர்கடைவேண்டும், பல்வேறுவிதமான கருத்துகள்தான் ஒரு திரியினை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு காரணமாகவுள்ளது, ஒவ்வொருவரும் தமது கருத்துகளில் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள் . We don't trade the market, we trade our believes என Dr Van Tharp கூறுகிறார். எமது நம்பிக்கைகள்தான் கருத்துகளாக, செயல்களாக வெளி வருகிறது, சில மதத்தவர்களின் நம்பிக்கைகளை பார்க்கும் போது மற்றவர்களுக்கு, இவர்கள் சொந்தமாக சிந்திக்க மாட்டார்களா என தோன்றும், அது அவர்களின் நம்பிக்கை. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் அனைவரது கருத்துகளும் அவரவருக்கு சரியானது, அரிதாக சில சமயம் சிலரது கருத்து சிலரது கருத்துடன் ஒப்பீட்டளவில் ஒத்து போகிறது. சில நேரம் ஒருவரது கருத்து புரியாவிட்டால், மற்றவர் தேவையில்லாமலே கோபப்படுகிறார். யாழ்பானத்திற்கு சென்ற புலம்பெயர் தமிழர் மதுபான சாலையில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்ததனை அவர்களுக்கு பக்கத்திலிருந்த இளஞ்ஞர் தாங்கமுடியாமல் போத்தலால் தலையில் தாக்கியமாதிரி, சில சமயம் அதுவரை எந்த வித கருத்து பகிராமல் இருந்த ஒருவர் திடீரென கருத்து தாக்கல் செய்வார். நானும் ஒரு குற்றவாளிதான். மனிதர்கள் அனைவருக்கும் இந்த சிக்கல் உண்டு, இயந்திரத்திற்குதான் உணர்ச்சியில்லை, மட்டுகளும் மனிதர்களே. இந்த வகை தூண்டல்களை சிறுவயதில் ஏற்பட்ட ஏமாற்றம் என மார்க் டக்ளஸ் கூறுகிறார்.
 15. அவுஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கூட (துடுப்பாட்டம் அல்ல) இதே மாதிரியான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாகவே ஊடகங்களில் அவர்கள் பெயர் அடிபடுவது வழமையான ஒன்று, இவர் இலங்கை அணி வீரர் என்பதற்காக ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக நடக்கவில்லை. தவறிழைக்காவிட்டால் மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யலாம்தானே?
 16. ரதி வறுமைக்கான காரணமாக நீங்கள் கருதும் காரணங்கள் என்ன என்பதை உங்களிடமும், தனியிடமும் அறிய ஆவல். https://www.ig.com/en/trading-strategies/japanese-candlestick-trading-guide-200615 இந்த மெழுவர்த்தி ஆய்வு 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய அரிசி விற்பனையாளர்களால் அரிசியின் விலையினை கணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது, தற்போது பங்கு வர்த்தகம் போன்ற அனைத்துவிதமான நிதி வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது. விவசாய உற்பத்தி பொருள்கள் அத்தியாவசிய பொருள்கள் எனும் கட்டமைபிற்குள் வரும், விலை மாற்றம் பெரும்பாலும் கேள்வியில் தாக்கம் செலுத்தாது அதனால் உற்பத்தியாளர்களின் மிகுதியான உற்பத்தியினை சந்தைபடுத்துவதற்கு புலம்பெயர் தமிழர் முன்வரவேண்டும், உதாரணமாக புலம்பெயர் தமிழர்கள் இந்திய பாகிஸ்தான் அரிசி வகைகளுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் அரிசியினையும் வாங்க முன்வந்தால் நல்லது.
 17. பொதுவாக தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவுக்கு ட்ரம்ப் ஆட்சி பீடம் ஏறுவது பொருளாதார ரீதியாக உவப்பானது, வர்த்தக வரி குறைப்பு முக்கியமானது. இரஸ்சியா பற்றி அமெரிக்கா அலட்டி கொள்ளத்தேவையே இல்லை, அதற்கு இரஸ்சியா தகுதாயனது இல்லை, ஆனால் அமெரிக்கா கவலைப்பட வேண்டிய நாடு சீனாதான் அவர்கள் எதையும் சத்தமில்லாமல் செய்வார்கள் (மிகவும் மோசமான வியாபாரிகள்). அமெரிக்கா நீண்டகால அளவில் உக்கிரேன் - இரஸ்சியாவுடன் மினக்கெடாது, அதனால் இந்தியா எமக்கு செய்த துரோகம் போல உக்கிரேனியர்களுக்கும் செய்ய வாய்ப்புள்ளது, பைடன் ஒரு தொலை நோக்கற்ற தலைவராக உள்ளார், இவரது ஆட்சி காலத்திலே அமெரிக்காவுக்கெதிராக இரண்டாவது உலக அணி உருவாகியுள்ளது, அமெரிக்க reserve currency போட்டி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க சாம்ராஜித்தின் முடிவின் முகவுரையினை பைடந்தான் எழுதியுள்ளார் என கருதுகிறேன். சீனா முடிந்தலவு இரஸ்சியாவினை உலகிலிருந்து தனிமைப்படுத்த முனைகிறது, அதன் மூலம் இரஸ்சியாவால் ஐரோப்பிய ஒன்றியம் எனும் நிலைக்கு வரலாற்றில் செல்ல முடியாதவாறு, அடுத்தது இந்தியாவையும் அந்த பட்டியலில் சீனா இணைத்துவிட்டால் போதும். அமெரிக்கா இந்தியாவை எந்த நிலையிலும் இழக்காது என நம்புகிறேன், ஆனால் அண்மை காலங்களில் பாகிஸ்தானுக்கு சில இராணுவ உதவிகளை செய்து இந்தியாவின் சீற்றத்திற்குள் அமெரிக்கா வந்துள்ளது. இது பைடனின் காலத்திலேயே நிகழ்ந்துள்ளது. இது அமெரிக்காவுக்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல அதனால் என்னதான் இந்தியா இரஸ்சிய விவகாரத்தில் அமெரிக்காவை ஏறி மித்தாலும் அமெரிக்கா பொறுமையுடன் செயற்படவேண்டும்.
 18. நீங்கள் செல்லும் நாட்டின் சட்டங்களை மீற முடியாது, அதில் அவுஸ்ரேலியர்களுக்கும் விதி விலக்கில்லை. ஏன் இலங்கையர்கள் தவறானவர்களை காப்பாற்ற முயல்கிறார்கள், மீண்டும் இதே தவறுகளை திரும்ப திரும்ப செய்வார்கள். இவ்வாறான தவறுகளுக்கு மக்கள் தமது தெளிவான செய்தியினை கூற வேணும், தெரியாமல் செய்யப்படும் தவறுகளுக்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கலாம், ஆனால் தெரிந்து செய்யும் தவறுகளுக்கு ஆதரிப்பவர்களும் கேவலமானவர்களே. இவருக்கு உதவி செய்யும் இலங்கையர்கள் கேவலமானவர்கள் என்பது தெளிவாகிறது. மிக சிறந்த கருத்து, அத்துடன் நிறுத்தாது நாடு திரும்பியபின் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும், இவருக்கு ஆதரவு வழங்கும் சிங்கள அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களை தரம் தாழ்த்தி செய்த விமர்சனத்திலிருந்து ஒட்டு மொத்த சிங்கள சமூகமும் இப்படிதானோ என நினைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவ்வாறில்லை. சிங்களவர்கள் பலர் அவுஸ்ரேலியர்களை திருமணம் செய்துள்ளனர் (நல்ல படித்த, சமூகத்தில் உயர்நிலையில் உள்ள அவுஸ்ரேலியர்களை), நான் சந்தித்த இரண்டு அவுஸ்ரேலியர் எனது பெயரினை வைத்து இலங்கையரா என கேட்டனர், ஆம், எப்படி தெரியும் என கேட்ட போது அவர்களது கணவர்கள் சிங்களவர்கள் என்பதினை அறிய முடிந்தது. இதையொத்த வழக்கில், கொலைகுற்றச்சாட்டுடன் சிங்களவர்கள் கடந்தகாலத்தில் சம்பந்தபட்டுள்ள மாதிரி நினைவில் உள்ளது. தமிழர்களை பொறுதவரையில் இப்படியானவர்களை காவாலிகள் என கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள், அவர்கள் யாராக இருந்தாலும்.
 19. உண்மைதான் நான் கூட ஒரு காணொளியினை இணைத்திருந்தேன் (ஆனால் தனிப்பட்ட ரீதியில் அக்கருத்தினை நம்பவில்லை), ஆனால் பெரும்பாலும் கிரிப்டோவின் விலை சரியும் எனும் நிலைப்பாடான கருத்துகளை நீங்கள் ஆரம்ப காலம் முதல் பகிர்ந்திருந்தீர்கள். Bitcoin base support 4800 என்பதில் ஓரளவு நம்பிக்கையுண்டு, பார்ப்போம் விலை தளம்பல் 4800 அளவில் கட்டுபடுகிறதா என.
 20. நல்ல தேடல், அனைத்து யாழ்கள உறவுகளிடமும் இதற்கான வேறுபட்ட பார்வை இருக்கும் என நம்புகிறேன். கோசான் நீங்கள் கூறுவது போல நிகழாமல் இருக்க உற்பத்தியாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினால் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்? தேவையினை விட கூடுதலான உற்பத்தி அதிகரிக்கும் போது தானாக விலை குறையும் அதனால் உற்பத்தியாளர் நட்டமடைவர், 90 இலங்கை அரசின் பொருளாதார தடையினை எதிர்கொள்ள மேற்கொண்ட பதில் நடவடிக்கையின் போது 91 காலப்பகுதியில் இதே நிலை யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டது. அப்போது அதற்கு மாற்றீடாக ஒரு சந்தை படுத்தும் சபை ஒன்று உருவாக்கி அதற்கு உற்பத்தியாளருக்கு அடிப்படை இலாபத்தினை உறுதி செய்யவும் அதிகமான பொருளை களஞ்சியபடுத்த தீர்மானம் ஒன்றை உற்பத்தியாளர்களிடம் முன் வைக்கப்பட்ட போது அதனை உற்பத்தியாளர்கள் நிராகரித்து விட்டார்கள் (இது கற்பிதன் நிங்கள் கூறிய காரணம்). பொதுவாக உற்பத்தியாளர்கள் மிகவும் இறுக்கமான நிதி பின்புலம் கொண்டவர்கள், ஒரு தடவை நட்டம் ஏற்பட்டால் (இயற்கை பேரிடர், அதிகரித்த உற்பத்தியினால் விலை வீழ்ச்சி) அவர்கள் கடனுக்குள் தள்ளப்படும் நிலை உருவாகும், அதன் பின் அவர்கள் மீள எழ முடியாதவாறு கந்து வட்டிகாரர்கள் பார்த்து கொள்வார்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் விவசாயிகள் தமது பொருள்களுக்கு ஏற்படும் நட்டத்தினை Future contract hedge மூலம் தவிர்ப்பார்கள்.
 21. நக்கலாக கூறுகிறீர்கள் என்பது புரிகிறது ஆனால் யாரை என்பதை கண்டு பிடிப்பதற்கு எனக்கு புலமை இல்லை, ஜெய மோகன் என்பவர் யார்? முன்பு எதோ புளித்த மா விவகாரத்தில் அவரை பற்றி முதலில் கேள்விப்பட்டேன், இப்போது அரைத்த மாவையே அரைக்கின்ற (வழக்கில் உள்ள ஒரு கலை சொல்லுக்கு உரிமை கோரும்) விவகாரத்தில் கேள்விப்படுகிறேன்.
 22. இது இந்திய இராணுவம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், அப்போது அமெரிக்கர்களை முதலில் அணுகியது புலிகள்தான் என கேள்விப்பட்டேன், ஆனால் வேறு ஒரு நாடு (சர்வாதிகாரி என அழைக்கப்பட்டவர் தற்போது உயிருடன் இல்லை) தானாக உதவியிருந்ததாக கேள்விபட்டேன், மேற்கொண்டு இது தொடர்பாக கேள்விப்பட்டதன் அடிப்படையில் பேசுவது நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.
 23. நான் நினைக்கிறேன் பெருமாள் கூறியது யாழ்களத்தில் உள்ளவர்கள் தேடப்போவதாக கூறினார் என கருதுகிறேன், நீங்கள் அதுக்கு மேலேயே போய்விட்டீர்கள். எல்லோருமாக சேர்ந்து எங்கேயாவது என்னை கோர்த்து விட முயற்சிக்கிறீர்கள் என்பது புரிகிறது, இருந்தாலும் இவ்வளவு ஆசை கூடாது. ஆனால் அது நடக்காது, எனென்றால் அவர்களுக்கு வேலை வெட்டி இருக்கிறது, என்னை தேட அவர்கள் என்ன வேலை வெட்டி இல்லாதவர்களா? 2012 செப்டெம்பர் மாதம் 18 திகதி என நினைக்கிறேன் மாலை 6 ம்ணியளவில் எனது குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். வானில் சூரியன் அஸ்தமிக்கும் தருணம் ( சாய்வு வெய்யில் என்பார்கள்), உண்மை வடக்கிலிருந்து ஒரு நேர்கோட்டில் தெற்கு நோக்கி ஒரு விண்கலம் சத்தமின்றி அதிவேகமாக பயணித்து கொண்டிருந்தது. அதன் அமைப்பு ஒரு பாதி தேய்பிறை போல இருந்தது, சூரிய ஒளியில் வெள்ளியில் மின்னியது அதனை காணொளியாக பதிவு செய்து கொண்டேன், அதனை உள்ளூர் தொலைகாட்சி ஒன்றிற்கு அதன் இணையத்தளத்தில் காணொளியினை தரவேற்ற முடியாமையினால், VLC player இல் அந்த விண்கலத்தினை பெரிதாக்கி ( பழைய தொலைபேசி என்பதால வெற்று கண்ணால் பார்ப்பதைவிட ஒளிப்பதிவில் அந்த விண்கலம் மிக சிறியதாக காணப்பட்டது) நிழற்படம் எடுது அனுப்பிவைத்தேன். அவர்கள் ஆதாரத்துடன் அனுப்பிய விடயத்தினையே கண்டு கொள்ளவில்லை. இந்த விடயம் நான் கேள்விப்பட்ட, பழைய சம்பவத்துக்கெல்லாம் என்னை ஏன் தேடப்போகிறார்கள்?
 24. உங்கள் கருத்து தவறானதல்ல, ஒரு நாடு தானாக தனது இறமையின இழக்கவிரும்பாது, உக்கிரேனை பொறுத்தவரை இரஸ்சிய ஆக்கிரமிப்பினை எதிர்க்க எந்த நிலைக்கு செல்லாம் என்ற நிலைக்கு போனால் ஒரு காலத்தில் சிங்கப்பூர் என பேசிக்கொண்டிருந்த இலங்கை இப்போது சிம்பாவே என பேசும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது நிலமை. அதே போல் உக்கிரேனுக்கும் ஏற்படும் உக்கிரேன் உதவி வழ்ங்கும் மேற்கு ஏன் உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்னமும் இணைக்கவில்லை, நேட்டோவில் இணைக்கவில்லை? உக்கிரேனை பொறுத்தவரை மேற்கிடம் ஒரு திட்டம் உள்ளது போல உள்ளது, தற்போதுள்ள ஈராக், லிபியா போல. பாவம் உக்கிரேனியர்கள் அவர்களுக்கு இரண்டு பக்கமும் அடிதான், இனி அவர்களது எதிர்காலம் இப்படிதான் இருக்கும் என கருதுகிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.