Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1237
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by vasee

 1. ஈழப்பிரியன் நீங்கள் பவுண்ஸ் வாங்கியுள்ளீர்க்ளா? என்ன விலையில் வாங்கியுள்ளீர்கள்? Stop என்ன விலையில் இட்டுள்ளீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பு விலை என்ன்(Take profit)? நீண்ட கால முதலீட்டு அடிப்படையிலா வாங்கியுள்ளீர்கள்? உங்களது Risk capital for this trade எவ்வளவு விகிதம்? இவை சுய விபரங்கள், பகிர விரும்பாவிட்டால் குறிப்பிட வேண்டாம் புரிந்து கொள்வேன்.
 2. இந்த நிலை வருவதற்கு முக்கிய காரணம் சட்ட ஒழுங்கு பேண்ப்படாமை, ஊழல் என எதை வேணூமென்றாலும் சொல்லாம் ஆனால் முக்கியமான காரணம் உதாவாக்கரை தமிழ் அரசியல்வாதிகள்தான். எமது தமிழ் அரசியல்வாதிகள் தாம் ஒரு அரசியல்வாதி என சொல்வதற்கு வெட் கப்பட வேண்டும், இந்த அரசியல்வாதிகளீன் குடும்பத்தில் இது போல நிகழ வேண்டும் அப்பொதுதான் அவர்கள் உணருவார்கள் இந்த நிலை நீடிக்க வேண்டும் என சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள், போதைவஸ்து பாவனையால் வெறுமனே சமூக, பொருளாதார பாதிப்பு ஏற்படவில்லை தமிழ் மக்களின் அரசிய்லிலும் பாதிப்பு ஏற்படுகிறது, அதனால்தான் தமிழ் அரசியல்வாதிகளும் இதனை விரும்புகிறார்கள். எமது மக்களை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. அங்கு செயற்படும் தொண்டு நிறுவனம் ஏதாவது விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கியுள்ளதா?
 3. பவுண்ஸ், யூரோ, தங்கம் என அனைத்தும் அமெரிக்க நாணயத்திற்கெதிராக வீழ்கின்றன, இவை மிக தெளிவாக விலை இறங்கி செல்கிறது, Down trend வாங்குவது குறைந்த இலாப வாய்ப்பு ஆனால் குறுங்கால அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். ஏற்கனவே யூரோ வர்த்தகத்தில் உள்ளேன், அத்துடன் தங்கம் வாஅங்க உள்ளேன்(Co relation trades) ஆபத்து அதிகம் என்பதால் தவிர்க்கிறேன். பவுண்சை விற்பதற்கு 4 மணித்தியால வரைபடத்தினடிப்ப்டையில் 1.1220 பகுதியில் விற்கலாம் Stop 1.1390 அடுத்த முக்கிய வலயம் 1.1500 Stop 1.1750, அடுத்த முக்கிய வலயம் 1.1640 Stop 1.1750 இது வியாபார ஆலோசனை அல்ல, இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிதான உத்தி ஆகும், இந்த காணொளியில் இவ்வகையான உத்தியினை மட்டும் பயன்படுத்தி 5 மாதகாலப்பகுதியில் கிட்டத்தட்ட முதலினை 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் இரட்டிப்பாக்க முடிந்தது, காணொளியில் எனது வர்த்தக அறிக்கையில் உள்ள வரை படத்தினை இணத்துள்ளேன். இந்த வர்த்தகத்தில் 0.4 % - 1.0% (மொத்த கணக்கில்) மட்டுமே பயன் படுத்தப்பட்டது (Risk capital). 50 விகித வெற்றி வாய்ப்புள்ள உத்தி, R &R 1.85.
 4. EURUSD long வர்த்தகத்தினை இலக்கினை அடைவதற்கு முன்பாகவே மூடிவிட்டேன்,EURUSD தற்போது விற்றுள்ளேன் , முன்பு திட்டமிட்ட பகுதிக்கு முன்பாகவே விற்றுள்ளேன்.
 5. வேலை வாய்ப்பு, மற்றும் வசதிகளுக்காக மக்கள் தமட்கு இடங்களை மாற்றி கொள்வார்கள், ஆனால் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?
 6. தெரியவில்லை, ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார். அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம் தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம். இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.
 7. அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது).
 8. EURUSD தற்காலிக வர்த்தகத்தில் Stop இனை வாங்கிய விலைக்கு உயர்த்தியுள்ளேன் எதிர்பாராவிதமாக விலை இறங்கினால் எந்தவித இழப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக.
 9. EURUSD Counter trend trade இனை வாங்குவதற்கு pending order இட்டுள்ளேன் இதன் வெற்றி வாய்பு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வர்த்தகம் முன்பு திட்டமிட்ட வர்த்தகம் அல்ல அதற்கு காத்திருக்கும் நேரத்திற்கான தற்காலிக வர்த்தகம், 1: 3.5 R&R.
 10. மன்னிக்கவும் கணக்கினை முற்றாக இழத்தல் அல்ல மொத்த கணக்கில் 10% இழப்பதற்கான (Draw down) வாய்ப்பு (Probability).
 11. மேலே குறிப்பிட்ட உத்தியினை மட்டும் பயன்படுத்தி 23 ஜூலை 2018 முதல் 30 நவம்பர் 2018 வரை 130 வர்த்தகம் மேற்கொண்டேன், அதற்கு எனது ஓய்வூதிய கணக்கினை பயன்படுத்தியிருந்தேன். ஏறத்தாழ 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் 130 வர்தகத்தினை 4 மணிநேர வரைபடத்தின் உதவியினூடே செய்திருந்தென். https://www.palisade.com/monte-carlo-simulation/#:~:text=Monte Carlo simulation performs risk,factor that has inherent uncertainty. அந்த 130 வர்த்தகத்தின் தரவுகளின் அடிப்படையில் மொன்டி கார்லோ கணிப்பின் உதவியுடன் இந்த முறையில் வர்த்தகம் ஈடுபட்டால் கண்க்கினை முற்றாக இழக்க வாய்ப்புள்ளதா? 2237 வர்த்தகத்தின் பின் எந்த தொகையினை அடையலாம் எனும் கணிப்பும் காணொளியில் உள்ளது. எனது அனுபவத்தில் கூடுதலாக Ranging market condition இல் இந்த வகை உத்தி சிறப்பாக செயல்படுகிறது.
 12. குஜராத்திகள் மிகவும் திறமைசாலிகள் வர்த்தகங்களை செயற்பட வைப்பதில் அவர்கள் ஒரு கூட்டாக இயங்குவார்கள், உதாரணமாக 1.5 மில்லியனில் ஒரு வர்த்தகத்தினை வாங்க இருப்பதாயின் அவர்களிடம் அந்தளவிற்கு பணம் இருக்காது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என கூட்டாகநிதியினை திரட்டுவார்கள் (Pooled fund). வேலைப்பழுவினை சமமாக பிரித்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் அதே நேரம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இதனை செய்வதால், அவர்களால் முதலீட்டிற்கு சரியான சுவாசிப்பதற்கு உரிய கால அளவை அவர்களால் வழங்க முடியும். இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.
 13. Bearish engulfing signal candle சிறியதாக இருந்தால் market order எடுப்பேன்,Bearish engulfing signal candle பெரியதாக இருந்தால் 50% விலை பின்வாங்கலில் pending order எடுப்பேன். புத்தகத்தின் பெயர் Naked forex இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
 14. நன்றி இணையவன், யூரோ அமெரிக்கா ஒரு Down trend பயணிப்பதால் அதனை வாங்குவதனை விட விற்பது அதிக சாதகமாக இருக்கும் அல்லவா (Trend is your Friend)? EURUSD short trading plan அடிப்படையில் 4 மணித்தியால வரைபடத்தில் விற்பதற்கான எனது திட்டத்தினை மேலே உள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளேன், இதனை naked trading என்பார்கள். இதன் விபரம் இந்த புத்தகத்தில் உள்ளது, மன்னிக்கவும் இணைப்பினை இணைத்தது தவறாயின் நீக்கிவிடவும். ஆனால் எனது விற்பனை திட்டம் இந்த புத்தகத்தில் உள்ளது போல இல்லை, ஆனால் அடிப்படை இதுதான்.
 15. லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).
 16. AUDJPY, GOLD தங்க வர்த்தகங்களில் விற்க தீர்மானித்துள்ளேன், அவுஸ்ரேலிய ஜப்பான் வர்த்தகம் எலியட் அலை 5வது அலையில் ending diagonal எனும் அடிப்படையில் விற்க உள்ளேன். தங்க வர்த்தகத்தில் Extended 5th wave (Elliott wave) எனும் அடிப்படியில் விற்க தீர்மானித்துள்ளேன்.
 17. நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது. https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.
 18. இப்ப நிலமை அனைத்து நாடுகளிலும் மோசமாக உள்ளது, மத்திய வங்கி வங்கிகளிற்கான வட்டி விகித நிர்ணயத்தில் வட்டி விகித குறைப்பை நிகழ்த்தும் போது 1 க்கு 1000 தடவை யோசித்து மெதுவாக வட்டியினை குறக்கும் வங்கிகள், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது மட்டும் போட்டி போட்டு வட்டி விகிதத்தினை உயர்த்துவார்கள். பாவம் மக்கள் ஏற்கனவே அளவிற்கதிகமான வீட்டுக்கடனினால் தவிக்கிறார்கள், சில நகரங்களில் ஏற்கனவே மொத்த வருமானத்தில் (Gross) 28% ஆபத்து கட்டத்துக்கு மேல் அதிகரித்து செல்கிறது. அதற்கேற்ப வருமான அதிகரிப்பின்மை, வருமான இடைவெளி அதிகரிப்பு என பொருளாதாரம் ஒரு நெருக்கடியான நிலையில் உள்ளது.
 19. உலகம் ஒரு பொருளாதார சரிவை எதிர்கொள்ள போகிறதோ என கருதுகிறேன். பெரும்பான்மையான மூலப்பொருள்கள் அமெரிக்க நாணயத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், அமெரிக்காவில் உள்ள பணவீக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரு புற்று நோய்போல பரவும். அமெரிக்கா தனது reserve currency எனும் நிலையிலிருந்து இறங்க விரும்பாது, ஏனென்றால் அமெரிக்காவின் மொத்த உற்பத்தியின் அளவை விட அதன் கடன் அளவு அதிகம். உதாரணமாக 1000 ரூபா வருமானம் வருபவர் 1100 செலவு செய்தால் (தொடர்ந்து) என்ன ஆகும்? அமெரிக்க செலவு அதிகமாக இருக்க காரணம் தொடர்ந்தும் தானே உலக சண்டியனாக இருக்க வேண்டும் என்பதற்கான செலவு, அதன் மூலம் ஏற்படும் பொருளாதார ஆதாயம் வருமானம் ஆகும் இவை ஒரு வட்ட பாதையில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வு பெரும்பான்மையான மக்களை வறுமைக்கோட்டினை நோக்கி தள்ளும் அதே நேரம் ஏற்படுகின்ற பணவீக்கம் பொது மக்களின் செலவினை மட்டுப்படுத்த பொருளாதார மந்தம் ஏற்படும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் நிலமை கட்டுக்கடங்காமல் செல்லும் போது பொருளாதார சரிவு ஏற்படும்.
 20. பொதுவாக ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கான பலச்சமநிலையினை இந்தியா பேணுவதாக உளறும் இந்தியர்களுக்கான ஒரு உண்மையின் தரிசனம் இது. இந்தியாவிற்கு அமெரிக்கா உதவுவதால் இந்தியா சீனாவின் பலத்திற்கு நிகராக முடியாது, ஆனால் கொசுத்தொல்லை போல இருக்கும் அவ்வளவுதான், அது இந்தியாவிற்கும் தெரியும் ஆனால் சாமானிய இந்தியர்களுக்கு அது புரிவதில்லை. சீனாவின் பலம் = மலை இந்தியாவின் பலம் = மடு இந்தியாவின் பலம் பாகிஸ்தான் பலத்தினை விட பல மடங்கு அதிகம், அணுகுண்டு இருந்தாலும் பாகிஸ்தானினால் இந்தியாவுடன் பலச்சமநிலை எய்த முடியாது. இந்தியாவின் பலத்திற்கு ஒரு சமநிலை தேவை என அமெரிக்க நினைத்து இந்த உதவியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்திருந்தால் இது ஒரு நல்ல சூழ்நிலை ஒன்று எமக்கு உருவாகி வருவதற்கான அறிகுறி. பல துன்பங்களுக்கு மத்தியிலும் எமது உரிமைக்காக போராடும் மக்களுக்கு இந்த அமெரிக்க முடிவு ஒரு நம்பிக்கையினை தருகிறது. இந்த கருத்து எனது உளறலாகவும் இருக்கலாம்.
 21. பனிப்போர் நிலவிய காலம் போல 2009 இல் இருந்திருந்தால் எமது நியாயமான போராட்டம் நசுக்கப்பட்டிருக்காது, அந்த கால கட்டத்தில் ஒரு பலச்சமநிலை நிலவியது. நீங்கள் கூறுவது போல புலிகள் அற்ற சூழ்நிலையில் எமக்கு இந்தியாவினை தவிர்த்து தீர்வு கிடைக்குமா? என்பது சிந்திக்க்க வைக்கும் கேள்விதான்? திரும்பவும் எமது மக்கள் போராட முடியாத நிலையில், உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் இந்த புதிய உலக ஒழுங்கில், நடுவுநிலை எனும் பம்மாத்து கொள்கையிலிருந்து ஏற்படும் மாற்றமே எமக்கான தீர்வினை கொண்டுவரும். இந்தியாவினை பொறுத்தவரை எமது உரிமை பிரச்சினை அவர்களது துருப்பு சீட்டு, இலங்கையில் தொடர்ச்சியாக பிரச்சினை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கொள்கை. எரிகின்ற இலங்கையில்தான் இந்தியாவினது பாதுகாப்பு தங்கியுள்ளதாக இந்தியா கருதுகிறது. இலங்கை பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதற்கு இலங்கை போதுமான உதாரண மாதிரிகளை இந்தியாவிற்கு வரலாற்றில் காட்டியுள்ளது, இனியும் தாராளமாக காட்டும் அது இந்தியாவிற்கும் தெரியும். ஆனால் இலங்கையின் நிலை மோசமாக உள்ளதால் அடக்கி வாசிக்கின்றது. இலங்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை இல்லாவிட்டால் இலங்கை பொருளாதார மற்றும் ஒரு அரசியல் உறுதித்தன்மை உருவாகி விடும் அதனை தடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சிறுபான்மையினரின் பிரச்சினையை உபயோகித்து கொள்கிறது. இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படுமா? இல்லை இந்தியாவின் துருப்பிடித்த கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படாது. அப்படியானால் எப்படி எமக்கு தீர்வு கிடைக்கும்? நடுவுநிலைமை வகிப்பதாக கூறிக்கொண்டுள்ள இந்தியா; இரஸ்சிய, சீன சார்புநிலை எடுத்தாலோ அல்லது முழுக்க அமெரிக்க சார்பு நிலை எடுத்தால்தான் ஏதாவது மாற்றம் நிகழும் என கருதுகிறேன். கவலைப்பட வேண்டாம் இந்தியா தானாகப்போய் விரைவில் மாட்டிக்கொள்ளும், நீண்ட காலத்திற்கு இரட்டை தோணியில் பயணம் செய்யமுடியாது என கருதுகிறேன்.
 22. இது ஒரு ஆரோக்கியமான சுயாதீனமான உலக ஒழுங்கு ஒன்றிற்கான தருணம் உருவாகி வருகின்றது என்பதற்கு எடுத்துகாட்டு. இதுவரை காலமும் சாதாரண தனிமனித உரிமைகளூக்காக போராடும் சாமானியர்களை ஆதிக்க கரங்கள் கொண்டு அடக்கப்படும் நிலையில், இந்த புதிய உலக ஒழுங்கு அனைத்து விடயங்களையும் சமநிலைபடுத்தும். ஜூலியன் அசாஞ்ச் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். பல நியாயமான போராட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு காலில் போட்டு நசிக்கிய நிலமை இனி மாறும், பல தேசிய இனங்களின் உரிமைகள் பெறப்படுவதற்கு ஏற்ற கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்ற நிலை உருவாவது மிகவும் சந்தோசமான விடயம். இனி எமது பிரச்சினைக்கும் பன்முகம் கொண்ட தீர்வு அணுகுமுறை உருவாக உள்ளது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.