இவ்வளவு காலமும் வார, வாரம் உங்கள் நேரத்தை எம்முடன் பகிர்ந்து 'ஒரு போராளியின் அம்மா' என்ற தொடர்/ உண்மைக் கதைக்கு உங்கள் எழுத்து மூலம் உயிர் கொடுத்து எமக்கு கூடவே இருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வை அளித்தமைக்கு நன்றிகள்.
'என் உறவுகளே கொஞ்சம் சிந்தியுங்கள்..., சொல்லுங்கள் உறவுகளே..' என்று எம்மிடம் கேட்கப்பட்ட போது எம்மிடம் கலங்கிய கண்களையும், இரங்கல்களையும் தவிர வேறு பதில்கள் தர முடியாமல் இருந்தது. உங்கள் நேரமும், உங்கள் ஆக்கமும், என்னை மட்டுமல்ல இங்கே பல உறவுகளின் உணர்வுகளையும் தொட்டு சென்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்களுக்கு நேரம் அமையும் போது உங்கள் உயிருள்ள எழுத்துக்களை எம்மோடு மேலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். -நன்றி!