Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சரன்.
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பாஞ்ச் 'அண்ணா' & நிலாமதி 'அக்கா'
  3. பாஞ்.. பாஞ்..! தங்கள் பிறந்தநாள் விழா முடிந்ததும், ஓய்ந்துபோன நம் 'தமிழ் படிப்போம் படிப்போம்' பள்ளியை தொடங்க, உங்களூர் யாழ் வாத்தியாரை அழைத்து வருக..
  4. இன்னும் சில வடிவான 'தீம்'கள் (Animation themes) அசையும் படங்களாக்க யோசித்து வைத்திருந்தேன்.. சென்னையில் பேரனோடு இருப்பதால், அவரோடு விளையாடவே நேரம் போதவில்லை! "தமிழ் படிப்போம், படிப்போம்" பள்ளியின் மனம் கவர்ந்த சக 'லொள்ளு' மாணவரான 'பாஞ்'சிற்கு, வாழ்த்து மடல் சிறப்பாக இருக்க வேண்டுமென எண்ணி, இருந்த சொற்ப நேரத்தில் இக்காணொளியை உருவாக்கி முடித்தேன்.. கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி, டங்குவார் மற்றும் தமிழ்சிறி. நான் சென்னையில் விடுப்பில் இருந்தாலும், 'பாஞ்'சின் தனிப்பட்ட ஊக்க அழைப்பிற்கும் மிக்க நன்றி.
  5. வாழ்த்துக்கள்.. இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் விழா காணும் இனிய யாழ்கள உறவு உயர்திரு.பாஞ் அவர்களுக்கு என்றும் இளமையோடு, பூரண சுகத்தோடும், சகல பாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுதல்களுடன், எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நீடூழி வாழிய பல்லாண்டு..! இளமை எழுத்துக்களோடு அனுபவ பதிவுகளை பதியும் 'பாஞ்' அவர்களை, இன்று புதிதாய் பிறந்துள்ள மன்மத வருடத்தை, துள்ளலோடு ஆரம்பிக்க, இளமையெனும் பூங்காற்றோடு இந்த வாழ்த்துக் காணொளியை அன்புடன் பரிசளிக்கிறேன்.. குறிப்பு: காணொளியை சிறப்புடன் (HDல்) காண, கீழ்க் கண்டவாறு யுடுயூபில் 1080p அல்லது 720p என செட்டிங்கில் மாற்றி கண்டால் சிறப்புடன், டிஜிட்டல் ஒலியுடன் காணலாம்..! நன்றி.
  6. இணைப்பு முகவரிலுள்ள s என்ற எழுத்தை நீக்கிவிட்டு(use http:// not https:// ) மறுபடியும் அதே இணைப்பை கொடுங்கள், படம் தெரியும்..
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இனியன்!
  8. Source: Malai murasu. Officials will inspect facilities for a week In yet another step towards the launch of operations, Chennai Metro Rail will be finally tested by Commissionerate of Metro Rail Safety (CMRS) by the end of this month, according to its officials. The certificate by CMRS is a mandatory requirement to begin the first service of the Chennai Metro Rail on the 10-km stretch from Koyambedu to Alandur. “CMRS officials may come by for a visit on March 20 and inspect the facilities for a week. The certificate of approval to begin operations may come in about two weeks,” an official of Chennai Metro Rail Limited (CMRL) said. It is not clear if the operations will begin in April as the State government has to give a date to inaugurate the service. The Metro Rail, built at a cost of Rs. 14,000 crore, was launched in 2009. According to the original schedule, services were to begin in October 2014 between Koyambedu and Alandur, but the deadline was later extended to March 2014. Meanwhile, in November last year, Metro Rail trains received clearance from the Research Design and Standards Organisation (RDSO), one of the statutory requirements to commence operations. The Hindu
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்.
  10. ம்.. நன்றி மட்டும் தானா? Where is your B'day party?
  11. சென்னை, சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே நிலத்தடி சுரங்க வழியில் அமிழும் சென்னை மெட்ரோ வழித்தடம். \
  12. அகஸ்தியனுக்கும், நுணாவிலனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  13. Update: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சென்னை மெட்ரோ இரயில் சேவை, வரும் மார்ச் மாதம் துவங்குமா..? என அனைவரின் முகங்களிலும் கேள்விக்குறியாக தொங்குகிறது..! சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் வரையிலான 11 கி.மீ தூரத்திற்கு அனைத்து கட்டட மற்றும் தொழில் நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டு, இறுதி பரிசோதனைகளும் முடிந்து இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் 'மக்களின் முதல்வர்' பதவியில் இல்லாத நிலையில், திறப்பு விழாவிற்கு எந்த வித இசைவும், தேதியும் இன்னமும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. தமிழக அரசு சேவை இயக்க தேதியை முறையாக அறிவித்தவுடன், பத்தே நாட்களில் மத்திய ரயில் பாதுகாப்பு நிறுவனம் முழுவதுமாக பரிசோதித்து சான்றிதழ் வழங்கிவிடும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. அதற்கான அனைத்து எழுத்துப்பூர்வாங்க வேலைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதே வழித்தடத்தில் இன்னொரு பகுதியான "செனாய் நகர்-கோயம்பேடு" சுரங்க வழித்தடத்தின் வேலைகளும் பூர்த்தியாகி வரும் சூலை 2015 மாதத்தில் இரயில் சேவைகளை இயக்க முடியுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பா.ம.க கட்சி தலைவர் ராமதாசும் சனியன்று பேசுகையில், 'தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகவும், அவர்கள் முந்நாள் மதல்வரின் மீள் வருகைக்காக காத்திருக்கக் கூடாதெனவும்' குற்றம் சாட்டியுள்ளார். செய்தி மூலம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
  14. தனுஷ்கோடி புதிய சாலை நிர்மாணம் பற்றி... 1964ம் ஆண்டு புயலால் அழிக்கப்பட்ட முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரைக்குமான 6 கி.மீ சாலையை மீளமைக்கும் பணி தொடங்கியுள்ளது. குவிந்து கிடக்கும் மணல் திட்டுகளை JCB இயந்திரங்கள் மூலம் நீக்கி சமதளப்படுத்தி, சாலையின் இரு புறமும் 1 x 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்டி அதன்மீது "ஜியோ டெக்ஸ்டைல் க்ரிட்" (Geotextile grid) எனப்படும் வடிவமைப்பை (Gabion Box) பாறைகளால் சீராக அடுக்கி, அவற்றை ஒருமித்து பாலி ப்ரோப்பலைன் பாலிமர் (polypropylene polymer) எனப்படும் நைலான் கயிறுகளால் கட்டி, நீள் வாக்கில் சாலை நெடுக அடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் நீர் புகுந்தாலும் நீர் தானாக வடிந்து கடலரிப்பிலிருந்து தார் சாலையை பாதுகாக்க முடியும். இதன் விரிவான வடிவமைப்பு விபரங்களை கீழேயுள்ள படங்களில் பார்த்தால் புரியும். தகவல்கள் உதவி: நெடுஞ்சாலைத் துறை, இராமநாதபுரம் பிரிவு.
  15. ஈஸ்வரன், நீங்கள் முன்னர் கூறியபடி(அதை நீங்கள் நீக்கியிருந்தாலும்), ஹிந்தியர்கள் தமிழக தமிழர்களை மதிக்காவிட்டால் பரவாயில்லை, எங்கள் மனங்களின் மீது கருங்கற்களை மேவி உங்களுக்கு மானசீக பாதை அமைந்து ஈழத்தமிழர்கள் இலக்கில் வெற்றியடைந்தால் மகிழ்ச்சியே! இந்த சில்லுண்டிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். Please go ahead & win the hearts of Hindians..!
  16. ராமேசுவரம் நகரின் வட மேற்கு பகுதியில் கெந்தமாதன பர்வதம் பகுதியிலுள்ள ராமர் பாதம் கோயிலில் ஒரு தமிழ் வழிகாட்டி, வரலாற்றை சாதாரணமாக விளக்க தயாரானாலும் கூட வட ஹிந்தியர்கள், அசுரர்-மனிதர் என பொருள்படும்படியே இந்தியில் அடித்துக் கூறியதை காண முடிந்தது. எனக்கு, இந்தி நகி மாலும், அதனால் ஓரளவே அனுமானிக்க முடிந்தது. அதிகாலை 'ஸ்படிக லிங்க தரிசன'த்திற்காக காலை 5 மணிக்கு அக்னி தீர்த்தம் சென்றபொழுது கண்ட "ராம்... ராம்" வடக்கத்திய கூச்சலைக் கேட்டும், பார்த்ததில், நாம் இருப்பது 'தமிழர்நாடு'தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது..!
  17. ராமரு பாலத்தை இந்துத்வா மோடி ஏன் கட்டப் போகிறார்? இராமாயண விபீடனின் வாதப்படி, இலங்கையில் இருப்பவர்கள் அரக்கர்களாம்(?), இந்தியாவில் இருப்பவர்கள் மனிதர்குலமாம், ஆகையால் மீண்டும் அரக்கர்கள் பின்னாளில் தொல்லை கொடுக்ககூடாதென விரும்பி ராமரை வில் கொண்டு பாலத்தை அழிக்கச் சொன்னதாகவும் தனுஷ்கோடியில் நின்று ராமரு பாலத்தை உடைத்தார் எனவும் புராணம் சொல்கிறது. இந்த 'அசுரர்-மனிதர்' சிந்தை வட ஹிந்தியர்களின் மனதில் இன்னமும் பலமாக ஊறிப்போயுள்ளது. (ஒருவேளை இந்த சிந்தைதான் ஈழத்தமிழர்களை, வட ஹிந்தியர்கள் சினேகமாக பார்ப்பதை தவிர்க்கிறதோ என எனக்கு ஐயமுண்டு ) மூன்று வாரங்களுக்கு முன் நான் ராமேஷ்வரம் & தனுஷ்கோடி சென்றபொழுது அங்கே இவர்களின் நம்பிக்கையை வட ஹிந்திய சுற்றுலாவாசிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் தமிழ் வழிகாட்டிகளிடமிருந்து இதை கேள்விப்பட்டேன். ராமர், விபீடனுக்கு மீண்டும் இலங்கை மன்னனாக முடிசூட்டிய இடமான(கோதண்டராமர் கோயில்) முகுந்தராய சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரை சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 12 மீ அகலத்தில் சாலையை மேம்படுத்தி மணல் திட்டுகளை மட்டமாக்கும் இயந்திரங்களும், சர்வே செய்யும் ஊழிய்ர்களையும் காண முடிந்தது.கடல் அரிப்பிலிருந்து புதிதாக மேவும் சாலையை பாதுகாக்க சாலையின் இருபுறமும் பாறைகளால் ஒரு ஆள் உயரத்திற்கு அடுக்கி அப்பாறை தொகுப்பை கலையாமலிருக்க நெருக்கமான வலைகளால் பின்னபட்டிருந்தது. சிதைந்து கிடக்கும் தனுஷ்க்கோடி கிராமத்திலிருந்து 3 - 4 கி.மீ தூரத்தில், மணல்திட்டின் கடைக்கோடியில் மிகப் பெரிய "கண்காணிப்பு கோபுரத்தையும்" தனுஷ்கோடியின் சிதைந்த சர்ச்சிலிருந்து காண முடிந்தது.
  18. ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் 2 ம் கட்டமாக தேசிய சாலை அமைக்க நிதி ஒதுக்கி, புயலில் சேதமடைந்த கட்டடங்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 1964 ம் ஆண்டு டிச., 22 ல் நள்ளிரவு ஏற்பட்ட புயலால் தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், கோயில், சர்ச், தபால் நிலையம், தங்கும் விடுதிகள் இடிந்து சின்னாபின்னமாகியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பலியாகினர். அதன்பிறகு மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 50 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இன்று வரை தனுஷ்கோடிக்கு சாலை, ரயில், மின்சாரம், சுகாதாரம் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவிற்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை மூலம் முகுந்தராயர் சத்திரம் வரை செல்ல முடியும். அங்கு அடிக்கடி வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும், தற்காலிக குடிசைகள் அமைத்து வசிக்கும் மீனவர்களும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ., தூரமுள்ள தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்க, முதல்கட்டமாக மத்திய அரசு, ரூ.25 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி கடந்த செப்டம்பரில் பணி துவங்கியது. இச்சாலையில் உள்ள மணல் மேடுகளை சரி செய்து, முள் மரங்களை அகற்றி, நேராக சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. புயலில் உருக்குலைந்த கட்டடங்களை புராதன சின்னங்களாக்கி, பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் இச்சாலை, வளைவுகள் இன்றி நேராக அமையவும், அதே சமயம் புயலால் இடிந்த கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய சாலையை சென்னை ஐ.ஐ.டி. பொறியியல் நிபுணர்கள், மத்திய அரசு நியமித்த தனியார் நிறுவன (எம்.சி. கன்சல்டிங்) பொறியாளர்கள் குழு விரைவில் ஆய்வு செய்து, 'அப்ரூவல் சான்றிதழ்' வழங்கிய பிறகே, தார் சாலை பணி துவங்க உள்ளது. 2ம் கட்ட சாலை: தனுஷ்கோடியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள அரிச்சல் முனைக்கு சாலை அமைக்க, 2ம் கட்டமாக மத்திய அரசு ரூ.28 கோடி ஒதுக்கி, ஜனவரி இறுதியில் டெண்டர் விட்டு பணிகள் துவங்க உள்ளதால், மீண்டும் தனுஷ்கோடி நகரம் புத்துயிர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுக்கு முன்பு பக்தர்கள் பின்பற்றிய ஆன்மிக முறைபடி, தனுஷ்கோடியில் முதலில் புனித நீராடி விட்டு, ராமேஸ்வரம் கோயில் தரிசனம் செய்யும் வழக்கம் மீண்டும் வரவுள்ளது. தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி முடிந்ததும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வசதிக்காக ஓய்வு அறைகள், பொழுது போக்கு அம்சங்கள், குடிநீர், மின்சார வசதி மற்றும் பூஜை செய்து, புனித நீராட பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மாநில அரசு முன்வரவேண்டும். தனுஷ்கோடிக்கு புத்துயிர் ஊட்டும் மத்திய அரசின் வழியை, மாநில அரசும் பின்பற்ற வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமலர், சனவரி 16,2015
  19. நில ஆர்ஜித வழக்குகளால் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட சென்னை கடற்கரை - செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் திட்டம் (Madras Rapid Transit System - MRTS) தற்பொழுது மீள் உயிர் பெற்று திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.. அதுபற்றிய தினமலரில் வந்த செய்தி இது. Update: தினமலர் - இ பேப்பர்
  20. Update: சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110/33/25kV) மனிதர்களின் கண்காணிப்பு இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்துடன் அனைத்து பாதுகாப்பு பொறிமுறைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டால், தீ பரவாமல் உடனே அணைய 'நைட்ரஜன்' மற்றும் 'கார்பன் டை ஆக்சைடு' வாயுக்கள் மூலம் தீயணைக்கும் பொறிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன. உயர் அழுத்த மின்நிலையம் (High Voltage Substation) 'மின் மாற்றி' அறை (Gas Insulated Switch Gear - GIS Room) கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு மின் சாதனங்கள் (Protection Panels in Control Room) தானியக்கத்திற்கான பரிசோதனைகள் (Testing of Automation) 'மின்னழுத்த மாற்றி' (Transformers) Source: CMRL FB
  21. Update: Chennai Metro Rail Project work @ Anna Nagar Ramp சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம்-2ல், கோயம்பேடு - அண்ணாநகர் சுரங்க வாயிலின் இறுதிக் கட்டத்தின் திறப்பு, சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் வெளிப்பாட்டை காண ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. Source:CMRL FB.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.