35 வருடங்களுக்கு முன்…*
1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்..
2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம்.
4. பழஞ்சோறும், மீன்குழம்பும் தித்தித்தது .
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.
6. ரயில் பயணத்தில் தென்றல் இலவச ஏசி.
7. தட்டி வான்,சைக்கிள், பேருந்து பிரதான பயணங்கள்
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
9. இளையராஜாவின் " ஆயிரம் மலர்களே", TR இன் நான் ஒரு ராசியில்லா ராசா" எங்கும் ஒலித்தது .
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. பொங்கல் வருசப் பிறப்பிக்கு உறவினர்களிடம் சென்றோம்
13. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. இன்று வரிசையில் நின்று திருடர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
14. பாம்படிக்க பக்கத்து வீட்டுக் காரர்கள் கூடினார்கள் .
15. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.
16.கல்யாண வீடு உறவினர்கள் ஒரு கிழமைக்கு முன்பே கூடி விடுவார்கள்
17. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்....
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...