நுணாவிலான், இணைப்பிற்கு நன்றி. எல்லோரும் எதோ ஒரு ஊனத்துடன்தான் வாழ்கின்றோம். அவையே சிலநேரம் அவர்களின் பலமாக இருக்கும். என் சிறு பிராயத்தில் கூடி விளையாடிய முன் வீட்டு பையன் கொன்னையாக இருந்தான். சில நேரம் வார்த்தையே வராது, பலரும் பரிதாபப் பட்டார்கள். 15 வருடங்கள் கழித்து 2003 இல் ஊருக்குப் போனேன். இலங்கை வானொலியில் கதா பிரசங்கம் போய் கொண்டிருந்தது, மகா பாரதம். கணீரென்ற அந்த குரலுக்கு சொந்தக்காரன் அந்த பையனாக இருந்த, இப்ப பண்டிதராக இருக்கின்ற என் முன் வீட்டுகார பெடியன் இல்லை இல்லை பெரிய மனிதர். அவரை தேடி பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அவர் வேறு ஊரில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், அவரை தேடி போகு முன்பே அந்த பெரிய மனிதர் என்னை பார்க்க வந்தார். பிரதேச செயலகத்தில் கலாச்சார உத்தியோகத்தர் வேலை, கிடைக்கும் நேரமெல்லாம் சமய உரை, பிரசங்கம் என எப்போதும் சுறு சுறுப்பாக இருந்தார். அன்றிரவு காரைநகர் சிவன் கோவிலில் பிரசங்க தொடர் இருப்பதாக சொன்னார். பிரமித்து போனேன். என்னென்று உமது கொன்னை போனது. அவர் தினமும் அருகிலுள்ள எங்கள் குல தெய்வ கோவிலில் தேவாரம் பாடியதால் தனக்கு குரல் வளம் வந்ததாக சொன்னார். நான் சொன்னேன் உமது முயற்சியுடன், தெய்வ அனுக்கிரகமும் இருந்தது. இப்பவும் யாழில் நடக்கும் எந்த கலாசார நிகழ்வுக்கும் முன்னுக்கு நிற்பார் பண்டிதர்.