Jump to content

Ahasthiyan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2072
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by Ahasthiyan

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
  2. ஆழ்ந்த இரங்கல்கள். கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும்… உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.
  3. இல்லை அண்ணா, இதற்கு முன்பும் 4-5 தடவைகள் காரிலும், விமானம் மூலமாகவும் வந்திருக்கின்றோம். ஜேர்மன் அதிவேக பாதை மிகவும் நல்லது, பிரிட்டன், பெல்ஜியம் போல் விரைவு லேனில் (fast lane) கார்கள் ஆமை மாதிரி ஓடுவது மிக குறைவு. இங்கு காமெராவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து தெரிய வைத்திருப்பார்கள், கேமராவுக்கு கிட்டவும் வார்னிங் எச்சரிக்கை போட்டிருப்பார்கள். ஆனால் உவ்விடம் சாம்பல் நிறத்தில் வைத்திருப்பார்கள். எங்கள் கார்கள் வலது பக்க ஓட்டம், அடிக்கடி மூளைக்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும், சாப்பாட்டு கை பக்கம் நடைபாதை என்று. சமிஞை விளக்குகளில் இடது பக்கம் திரும்பும் போதும் மூளைக்கு சொல்ல வேண்டும், ராசா கவனமாக எடு என்று, கவனம் குறைந்தால் நேரே வாற வாகனம் உழுது விட்டு போய் விடும் அல்லது பிழையான லேனில் போய் சேர வேண்டியும் வரும். இப்படி ஒரு பிரச்சனை வாகன அனுமதி பத்திரம் எடுத்த புதிதில்(1993) சுவிஸ்சில் வாடகை கார் எடுத்து ஓடும் போது எதிரில் வரும் வாகனத்தை பற்றி சிந்திக்காமல் எடுத்து மயிரிழையில் தப்பினேன் (எதிரே வந்த சாரதி திறமையானவன் ஆனபடியால்). ஐரோப்பாவில் ஓடும் போது எங்களை வெளி நாட்டு சாரதி என்று தெரிந்தால், மற்றவர்கள் ஓரளவு அவதானமாக ஓடுவார்கள், வாடகை கார் எடுத்தால் அவர்களுக்கு எங்களை வெளி நாட்டவர் என்று தெரியாது.
  4. EU இல் இருந்து பிரித்தானியா பிரிந்த பிறகு ஜேர்மனிக்கு காரில் பயணம் 16/03/2022 கடவு சீட்டு, கார் காப்புறுதி , மீட்பு (recovery), கை பேசிக்கான அனுமதிகள் எல்லாம் சரி பார்த்து, Euro tunnel கேட்ட பிரான்ஸ் கொரோனா படிவங்களை தரவேற்றம் செய்து விட்டு எங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தோம். இந்த முறை பிரான்ஸ் நாடு நுழைவுக்கான முத்திரையை கடவு சீட்டில் குத்தினார்கள். Calais இல் அதிகாலை 1 மணியளவில் இறக்கி விட்டார்கள். E40 இல் பிரஸ்ஸெல் ஊடாக 4 மணித்தியால ஓட்டத்தின் பின்பு ஜேர்மன் Wuppertal என்ற நகரத்தை அடைந்தோம். 2 வச்சினும் போட்டு இருந்தால் ஜெர்மனிக்குள் திரியலாம், ஹோட்டல் அறை பதிவு செய்யும் போது வச்சின் அத்தாட்சியை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த நாள் இரவு A1 என்ற ரோட்டில் 150km தொலைவில் உள்ள Osnabrück என்ற இடத்திற்கு போனோம், நகரத்திற்குள் 30kmh இல் செல்ல வேண்டும், நான் கொஞ்சம் கூட ஓடின படியால் கமரா அடித்து விட்டது. ஆனால் இன்னும் அபராதம் வரவில்லை. நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போக வேண்டிய பாதையை மூடி விட்டதனால், ஹோட்டல் கண்ணுக்கு தெரிந்தும் அங்கு போவதுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. பெறா மகளின் திருமணம் அம்மன் கோவிலில் நல்ல படியாக நடந்தேறியது, எனது இளைய மகன் மாப்பிள்ளை தோழன், நானும் மனைவியும் மணப்பெண்ணை தத்தம் பண்ணிக் கொடுத்தோம். 20/3/2022 சென்ற பாதை வழியே திரும்ப ரெயின் ஏற வரும் போது பெல்ஜியம் பிரான்ஸ் எல்லையில் ஒரு சோதனை சாவடியில் காரை நிறுத்த சொல்லி கடவு சீட்டுக்களை சோதித்தார்கள், பின்பு சுமுகமாக வீடு வந்து சேர்ந்தோம்.
  5. https://www.facebook.com/rangithj/videos/3842159425801485 காலம் கடந்தேனும் பிறந்த தெளிவு, இவரை மாதிரி இன்னும் பலர் அவரை பற்றி உணருவர்.
  6. இனி உலகில் நடக்கும் போர்களில் நிகழும் எந்தவொரு வினோதங்களும் எங்களை ஆச்சரியப் படுத்தாது ஏனென்றால் ஒரு போரில் நிகழக்கூடிய உச்சபட்ச கொடூரங்கள், இழப்புக்கள், அக்கிரமங்கள், அத்துமீறல்கள், அழிவுகள், வினோதங்கள் என அனைத்தையும் எங்கள் இனம் சந்தித்து விட்டது, இனிநாங்கள் புதிதாக பார்து வியந்து போக போர்க்கொடுமை என்று எதுவும் இல்லை.... உக்ரைன் ஜனாதிபதி யுத்தகளத்தில் நிற்கிறார் பெருமையா பகிர்ந்து கொண்டிருக்கிறது உலகு. - தன் தாய்நாட்டின் யுத்த களத்தில் நன்னை மட்டும் அல்லாமல் தன் தலைமுறையையே நிறுத்திய தலைவன் ஒருவன் இருந்தான் அறிவீர்களா நீங்கள் உக்ரைன் சிப்பாய் தன் தாய்நாட்டுக்காய் தன்னை தற்கொலைகுண்டுதாரி ஆக்கிக்கொண்டான், பெருமையாக பகிர்ந்து கொண்டு இருக்குறீர்கள். - தன் இனத்தின் விடுதலைக்காக ஒரு தலைமுறையே தங்களை தற்கொலைகுண்டுதாரிகள் ஆக்கிக்கொண்டு அழிந்து போனது கரும்புலிகள் பற்றி அறிவீர்களா நீங்கள். உக்ரைன் பெண்மணி வீதியில் நின்று ரஷ்ய சிப்பாயுடன் வாய்வாக்குவாதம் செய்தாளாம் சிங்கபெண் என ஊடகங்கள் காட்டின அப்படியானால் எங்கள் பெண்கள் தனிபடை அமைத்து ஆயுதம் ஏந்தி களத்திலேயே போராடினார்களே... உக்ரைன் பெண்கள் சிங்கபெண்கள் என்றால் அவர்கள் யாரு உக்ரைன் இளைஞர்கள் வயதுவந்தவர்கள் அனைவரும் போரிற்கு செல்கிறார்களாம் பெரும்பகட்டாக பாரட்டும் இந்த உலகநாடுகள் தான் - நாங்கள் வீட்டிற்கு ஒருவரை போராட அழைக்க கட்டாய ஆட்சேர்ப்பு என பழித்துத்தீர்த்தது. உக்ரைன் சிப்பாய் தன் மகளை பிரிந்து செல்லும் காட்சிகளை இணையத்தில் பார்த்து விட்டு கண்ணீர் வடிக்கிறீர்கள் ஆனால் போர்முடிந்து பத்துவருடங்கள் களிந்தும் காணாமல் ஆக்கப்பட்ட தன் மகளையும், மகனையும், தந்தையையும் தாயையும் கேட்டு எம் மக்கள் வீதிகளில் அழுதுபுலம்பி திரிவதை அறியவில்லையா எவரும்... உக்ரைனில் இருந்து வரும் சிறிய காயங்களுடன் பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருத்தம் தெரிவிக்குறீர்கள், இன்றும் கூகுளில் ஈழப்போரைத் தேடிப்பாருங்கள். கைகால்கள் பிளந்தும், முகம் சிதைந்தும், உடல்உறுப்புகள் வெளியே நொங்கியபடியும், நிர்வாணமாக இறந்தபடியும், அரைகுறைகளைந்த ஆடைகளுடன் கற்பளிக்கப்பட்டு இறந்தபடியும், நெருப்பில் எரிந்தும் பாதி கருகியும் கருகாமலும், பிணக்குவியல்களையும் பாருங்கள்... அதைவிடவா இவை உங்களை மனவேதனை படுத்துகின்றன, அங்கே ரஷ்யாவால் அழித்தொழிக்கப்பட்ட இராணுவத்தளங்களில் கருகிக்கொண்டிருக்கும் உடல்கள் அன்று எமது உறவுகளை பூவும்பிஞ்சுமாக குண்டுமழை பொழிந்து அழித்த MI 27 ரக போர்விமானங்களின் விமானிகளின் உடல்களாக கூட இருக்கலாம் மறந்து விடவேண்டாம்... - இந்துஷாந் இளங்கோ - FB
  7. இதுதான் எனது கருத்தும், இந்த போருக்கு பிரதான காரணி நேட்டோ. ரஷ்யா ஏற்கனவே பல நேட்டோ நாடுகளால் ஆகாயம், தரை , கடல் வழிகளால் சுற்றி வளைக்க பட்டுள்ளது. உக்ரைனும் இந்த அமைப்பில் சேர்ந்தால், அதுதான் ரஷ்யாவுக்கு கடைசி ஆணி. எல்லையில் ரஷ்ய கனரக வாகனங்கள் பல செல்லும்போது ஒரு குடிமகன் பனி வழித்துக் கொண்டு இருக்கிறார், அவரிடம் ஒருவர் இரு நாட்டு யுத்தத்தை பற்றி கேக்கிறார், அப்ப அவர் சொல்கிறார் " யுத்தமா, எங்கே? அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார், அவர் சொல்வதிலும் பல அர்த்தங்கள் உள்ளன .
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி
  9. நல்ல செய்தி, மார்ச் நடுப் பகுதியில் பெறா மகளின் திருமணம் Wuppertal பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நடாத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.
  10. உங்கள் எல்லோரின் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
  11. சுவி,புங்கையூரான்,தமிழ் சிறி,பெருமாள்,ஏராளன் உங்கள் அன்பிற்கு நன்றிகள்
  12. வாழ்த்துக்கள் வாதவூரன். மற்றும் இந்த போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை நடாத்திய கிருபனுக்கு நன்றி. என்னையும் கடைசி நேரத்தில் இழுத்து போட்டு உங்கள் முயற்சி மெச்ச தக்கது. நொண்டி நொண்டி 17ம் இடத்திற்கு வந்து விட்டேன். செந்தில் கவுண்டர் பாணியில் "நான் 5ம் வகுப்பு பாஸ் அண்ணை". பலரின் பின்னூட்டங்களையும் வாசித்தேன், எல்லோருக்கும் நன்றி.
  13. உங்கள் யாகம் வெற்றி அளிக்க எல்லாம் வல்ல சூதாட்ட பெருமகன் உதவி புரிவாராக.
  14. நன்றி எனது பதிலையும் போட்டு விட்டேன். இந்திய அணியில் மூன்றாவது தமிழர் ஒருவரும் இணைய வாய்ப்பு இருக்கின்றது: வெங்கடேஷ் ஐயர். KKR துவக்க நாயகனாக ஒரு கலக்கு கலக்கினவர்.
  15. கிருபன், இந்த முறை பதில் அளிக்க பிந்தி விட்டேன் .இனிமேல் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை?
  16. எத்தனையோ முறை பார்த்து விட்டேன் இந்த வாலியின் கவிதை, சில வலிகளை மறந்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை, அவை தந்து விட்ட பாடங்கள் தான் எத்தனை- ஒரு காலமும் மறக்க முடியாது. இவன்தான் எங்கள் துரோகி , இவன்தான் எங்கள் எதிரி என எங்கள் இதயத்திற்கு அடிக்கடி pacer கொடுக்கும் வாலியின் வரிகள். இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். இணைப்பிற்கு நன்றி கு.சா.
  17. இன்று மேதகு படம் பார்த்தேன். அக்கினி குஞ்சொன்று பிறந்தது, படத்தின் ஆரம்பம் பிரமாதம். வீர தமிழ் மகள் போலீஸ்காரன் தலையில் குடத்தால் அடித்து பின் வந்தவர்களுக்கு வழி காட்டி நிக்கிறாள். புத்த பிக்குகள் வழி மாறி பயணிக்கிறார்கள், இலங்கை புத்த பிக்குமாரில் சாந்தமான பார்வை இல்லை, இதை அழகாக காட்டி இருக்கிறார். பாடல்கள் பிரமாதம், மேள சத்தமும் பறையோசையும் பாடல்களுக்கு மெருகூறுகின்றன. கூத்து கலைஞர்களை நன்றாக வடிவமைத்துள்ளார், மாவீரன் கதை சம காலத்தில் வாழ்ந்த எமக்கு பெரும் பாக்கியமாக உள்ள அதே வேளை கண்ணீரையும் வரவழைக்காமல் இல்லை. மிகச் சிறந்த படைப்பு, பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய படம்
  18. எனக்கும் டேவிட்டை தெரியும், இந்தியன் ஆமி காலங்களில் ஊரில் நிற்கும் போது இவரை சந்தித்து இருக்கின்றேன், மிக பலசாலி, கட்டு மஸ்தான உடல்வாகு, தெளிவாக ஆறுதலாக கதைப்பார். பாரமான ஆயுதங்களை தோளில் சுமந்து தாக்குதல் நடத்த கூடியவர். வீர வணக்கங்கள்
  19. இந்தியன் ஆமி சுற்றி வளைந்திருந்த போதும் அவர்களுக்கு அடி பணியாது நேரடி மோதலில் மூவர் வீரச்சாவு அடைந்தனர். ரமேஷ் மாஸ்டர், ஜீவா, மற்றவரின் பெயர் ஞாபகமில்லை, யாரும் தெரிந்தால் பதிவிடவும். ரமேஷ் மாஸ்டர், ஜீவா வித்துடல்களை சுமந்து சென்று எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எரித்தோம். வேவிலில் பல மூத்த உறுப்பினர்களின் உயிர் காத்தீர்கள். என்றும் அகலா நினைவுடன் வீர வணக்கங்கள் தம்பிராசா சத்தியமூர்த்தி (ஜீவா) வீரச்சாவு 20/05/1988
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.