1976 இல் இருந்து 83 வரை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் ஒன்றாக படித்தோம். 83 a/l இக்கு பின்பு சில காலங்கள் இருவரும் சந்திக்கவில்லை, பின்பு கூடிய சீக்கிரம் சந்திப்போம் என்று நினைக்கவில்லை. 1986 என்று நினைகின்றேன், ஒரு நாள் எங்கள் கிராமத்து தெருவில், சில பெடியல் நடந்து வந்தார்கள். அதில் மெல்லிய உயரமான உருவமும் சாரம் அணிந்த , உடம்பிக்கு பெரிய சேட்டும், சுருள் முடியுடன் ஒருவர் எனது பெயரை சொல்லி கூப்பிட்டார். அது வசந்தன்தான். அதன் பின்பு எங்கள் ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வந்து போவார்.
சில மாதங்களில் வடமராச்சி லிபேரசன் ஆபரேஷன் தொடங்கி, எங்கள் குடும்பம் தென்மராட்சி இக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்பு வசந்தனை சந்திக்கவில்லை. அவரின் நெல்லியடி தாக்குதல் பெரிய செய்தியாகி, அவர் ஒரு கரும்புலி மாவீரர் என்று அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது.
அந்த மாவீரனுக்கு வீர வணக்கங்கள்.