Everything posted by தமிழன்பன்
-
அரசியல்மயமாகியுள்ள சர்வதேச உழைப்பாளிகள் தினம்
தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடதுசாரி கோட்பாடுகள் என்றும், அக்கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கம்யூனிச நாடுகள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. 'மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் - துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இந்த 'உழைப்பு' இன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது. உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஒரு பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்' என்று உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் குரல் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்துக்கு எதிராக பல கிளர்ச்சிகள் தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கிறங்கி போராடினர். இப்போரட்டத்தின் 3ஆம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதொரு கலவரத்துக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். இதுவே 1989ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டில் தொழிற்சங்க தலைவரான குணசிங்க தலைமையில் இடம்பெற்றது. அதன் பின்னரே 1956ஆம் ஆண்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கருதி அன்றைய தினத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பொது விடுமுறையாக அறிவித்தார். 1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருந்ததுடன் இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவ்வாறு உலக வரலாற்றிலும், இலங்கையின் வரலாற்றிலும் தொழிலாளர்கள் தினம் போற்றுதலுக்குரியதாக அமைந்தாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனைக்குரிய விடயமாகிறது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, அரசியல் நலன் சார்ந்த மே தினத்தில் கூட்டத்தை நோக்கி தேசிய அரசியல் கட்சிகள் அனைத்து போட்டி போட்டுக்கொண்டு தலைநகர் கொழும்பில் இடங்களை ஒதுக்கிக்கொள்ள போராடுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம் கொழும்பு - மருதானை சந்தியில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கோரப்பட்ட இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இம்முறை மே தினத்துக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை கொழும்பு அழைத்து வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் மே தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உள்ள எப்.ஆர். சேனாநாயக்க வீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணி அந்த இடத்தில் மே தின கூட்டத்தை நடத்தியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்தில் எவ்விதமான எதிர்ப்புகளும் அதிகாரிகளிடமிருநது வெளியாக வில்லை. ஆனால் இம்முறையும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை தருமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கும் அனுமதி கோரியுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை கோரியுள்ளமையினால் இருதரப்புக்குமே குறித்த வீதியை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து கொழும்பு மாநகர ஆணையாளர், மாற்று இடங்களை பெயரிட்டு அனுப்புமாறு அறிவித்துள்ளார். இவ்வாறு தமது அரசியல் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போடுகின்றதே தவிர, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அல்ல. மேலும், வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமக்குள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் மே தின மேடைகளை பயன்படுத்துகின்றன. எனவே, முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினம், மீண்டும் சுதந்திரத்துக்கான போராட்டமாக மாற்றமடைவது அவசியமாகும். https://www.virakesari.lk/article/181851
-
கேள்விகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ள ஐந்து ஆண்டுகள்! : வேதனைகளுக்குத் தீர்வின்றி நம்பிக்கை இழந்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள்!
ஆர்.பி.என். இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின. வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங்கியது. ஆனாலும், தற்கொலைதாரிகள் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எழுப்பியது. எதற்காக இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன் தேவாலயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் சரியான விடை காண முடியாமல் உள்ளது. நடந்தது என்ன? உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஏப்ரல் 2019 அன்று நாடு முழுவதும் ஆறு இடங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் சரியாக காலை 8.45 மணிக்கு ஏக நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர். இதில் மூன்று பிரதான தேவாலயங்களான கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் என்பன அடங்கும். மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு நட்சத்திர விடுதிகளான ஷங்க்ரி லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகியவற்றிலேயே குண்டுகள் வெடித்தன. குறித்த குண்டுவெடிப்பில் குறைந்தது 45 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர். 500 பேரளவில் காயமடைந்தனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள் இதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மட்டக்களப்பு குண்டுவெடிப்பு இடம்பெற்ற குறித்த தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாட வந்த குழந்தைகளால் தேவாலயம் நிரம்பி வழிந்திருந்தது. அந்தப் பச்சிளம் குழந்தைகளும் பலியானமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? தாக்குதல்கள் நடந்த சிறிது நேரத்திலேயே, உள்ளூர் தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தான் காரணம் என்று கூறினர். மேலும், அதன் முக்கிய உறுப்பினரான சஹ்ரான் ஹாஷிம், குண்டு தாக்குதல்களின் தலைவனாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்து. பின்னர் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சஹ்ரான் தன்னைத்தானே குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலித்தன. அந்த சமயம், ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தார். மேலும், இந்திய அரசாங்கம் குறித்த சம்பவம் தொடர்பில், இலங்கைக்கு உளவுத் தகவல்களை வழங்கி இருந்ததாகவும், இருந்தும் இலங்கை அதைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் தான் நாட்டில் பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கின. நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதைக் காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்ற இவர்களை கூலிப்படையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் துணிந்து எவரையும் விரல் நீட்ட எவருக்கும் திராணி இருக்கவில்லை. ஆயினும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் ஒரு சிறிய கோட்டுக்கு அருகே பெரிய கோட்டை போட வேண்டிய தேவை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டவன் தீர்ப்பு! இதேவேளை, மக்களின் குருதியால் தேவாலயத்தின் சிலைகளையும் சுவர்களையும் நனைத்து அவர்களின் உயிரை நொடிப் பொழுதில் குடிக்க காரணமானவர்களை நிச்சயம் ஆண்டவன் தண்டித்தே தீருவான். பாவம் செய்பவர்களுக்கும் சதி செய்பவர்களுக்கும் நிச்சயமாக ஆண்டவன் தீர்ப்பிலிருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வேதனையை கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்பதே இன்றைய ஒரே நம்பிக்கையாகும். இந்த விதமான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் காலை 8. 30 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக உரையாற்றிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் உண்மையை தொடர்ந்து மூடி மறைத்து வருவதாக தெரிவித்தார். அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய சிலரைப் பாதுகாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக் கோரி பல கடிதங்கள் அனுப்பிய போதிலும் அவற்றுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார். தாக்குதல் தொடர்பில் இதுவரை நடந்தது என்ன? போதுமான புலனாய்வு தகவல்கள் கிட்டியும் முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்று மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது உயர் நீதி மற்றம் குற்றம் சாட்டியது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 12க்கும் மேற்பட்ட தடவைகள் விவாதிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை. எதிர்வரும் காலங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடை பெற்றாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். சரத் வீரசேகர கூறுவது என்ன? முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பது அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர குண்டுத்தாக்கல் சூத்திரதாரிகளை ஜே.வி.பி.க்கு தெரியும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் கடந்த ஞாயிறு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், குண்டுத்தாக்குதல் தொடர்பில் தமது ஆட்சியில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றனர். இது வேடிக்கையானது அவர்களின் தேசிய பட்டியல் உறுப்பினராகப் பெயரிடப்பட்டிருந்தவரின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாரியாக செயல்பட்டவர்கள் மற்றும் அவரது மருமகள் தெமட்டகொட வீட்டில் வைத்து குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எந்த தாமதமும் இல்லை. நீதிமன்ற கட்டமைப்பில் தாமதம் உள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே புதிய தகவல் தெரிந்தவர்கள் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனடிப்படையில், விசாரணைகள் அடுத்த நூறாண்டுக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் இவர்கள் கூறுவதைப் பார்த்தால் தாக்குதல் தொடர்பில் குறித்து மக்களுக்கு மாத்திரமே தெரியாதுள்ளது. பாலித ரங்கே என்ன கூறுகிறார்! குறித்த சம்பவம் தொடர்பில் தெரிந்தோ, தெரியாமலோ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்பட்டுள்ளார். இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ஷவை நம்பி தாம் ஏமாந்து போனதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள் இறுதி முயற்சியாக கத்தோலிக்க திருச்சபை, குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஏதுவாக, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்மொழிவை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசம் எந்தளவு தூரம் கரிசனை கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. உலகின் பல்வேறு மனித உரிமை மீறல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிக்கப் பட்டவர்கள் என எவருக்கும் தாக்குதலின் போதும் அதனைத் தொடர்ந்தும் பதவிக்கு வந்த அரசுகள் உரிய தண்டனை வழங்க முன்வரவில்லை. மாறாக மௌனம் காத்து வந்ததுடன் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிட்டன என்ற விரக்தி ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் ஆழமான வடுவாக உள்ளது. இருந்தும் இறைவனின் தீர்ப்பு கால தாமதமானாலும் நிச்சயம் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள். https://www.virakesari.lk/article/181975
-
வெளியேற்றங்களும் ஆபத்துகளும்
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக் கடிக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தீர்வுகளை முன்வைப்பது எந்தளவு அவசியமோ, இந்தப் பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க முயல்வதும் மிக முக்கியமானது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிகள் அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சினை என நாட்டின் சாதாரண மக்கள் முதல் பல தட்டு மக்களும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தச் சிக்கல்களால் அவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதோடு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் நாட ஆரம்பித்திருக்கின்றனர். அதிகளவான மக்கள் குறுகிய காலத்தில் நாட்டைவிட்டு வெளியேற முற்படுவது நாட்டின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை நிச்சயம் எதிர்காலத்தில் தோற்றுவிக்கும். நாட்டின் சுகாதாரத்துறை, கல்வித்துறை உட்பட பல பிரதான துறைகளில் இந்தப் பிரச்சினை தற்போது தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. சுகாதார அமைச்சின் அண்மைய தரவின்படி, தமிழ்- சிங்களப் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் மட்டும் விசேட மருத்துவர்கள் ஏழுபேர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அண்மைய மாதங்களில் 350க்கும் அதிகமான மருத்துவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி யுள்ளனர். இதனால் பல அரச மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நாட்டின் ஏனைய துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையால் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றின் தாக்கங்களும் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல பகிரங்கமாகும். நாட்டில் இருந்து கல்வியியலாளர்களும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவது மிகச்சவாலான விடயமாகவே இருக்கும். ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் இவ்வாறான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது செயற்படுமாயின்- எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி களுக்கு அப்பால் நாடு பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதே திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம். நாட்டில் இருந்து தப்பிச்செல்லும் போக்கு குறைக்கப்படாவிட்டால் ஏனையவற்றுக்கு இலங்கை பிறநாடுகளிடம் கையேந்துவதைப்போன்று துறைசார் மூளைசாலிகளுக்கும் இலங்கை பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும். https://newuthayan.com/article/வெளியேற்றங்களும்_ஆபத்துகளும்
-
நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி மே மாதம் முதல்வாரத்தில் ஆரம்பம்
பதிவிற்காக +94773112692 வட்சப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பவும் (இனியபாரதி) நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் திகதி ஆரம்பமாகிறது. பயிற்சி நெறியின் இயக்குனராக கலாநிதி தே.தேவானந்த் அவர்கள் பணியாற்றுவார். அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மாணவர்களின் வேண்டுகோளுக்கமைவாக மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பயிற்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மூன்று மாத காலம் 60 மணித்தியாலங்கள் சனி ஞாயிறு 6.00 - 8.30 வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள முற்றம் அலுவலகத்தில் நடைபெறும். பயிற்சியில் பங்கு கொள்பவர்களுக்கான வயதெல்லை 20 - 45 ஆகும். பாலர்பாடசாலை ஆசிரியர்கள், ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சியில் பங்கு கொள்ளலாம். பயற்சி செயல்முறை சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் நல்லூர் நாடகத் திருவிழாவில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள். பயிற்சி இலவசமாக நடைபெறும். பதிவு செய்வதற்காக ரூபா 2000 கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்வதற்கான வட்சப் இலக்கம்: +94773112692 சுயமாக தயாரிக்கப்பட்ட சுயவிபரக்கோவையை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சி உள்ளடக்கம் நாடகக் கோட்பாடுகள் நடிப்பு பயிற்சி நாடகம் எழுதுதல் நாடக நெறியாள்கை நாடகப்படைப்பாக்கம் சிறுவர் நாடகத் தயாரிப்பு பயிற்சியை செயல் திறன் அரங்க இயக்கம் மற்றும் முற்றம் நிறுவனம் ஒழுங்கு செய்து நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(ஏ) https://newuthayan.com/article/நாடகமும்_அரங்கியலுக்குமான_சான்றிதழ்_கற்கைநெறி_மே_மாதம்_முதல்வாரத்தில்_ஆரம்பம்
-
வட்டுக்கோட்டை படுகொலை; மேலும் ஒரு சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு உந்துருளியில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி மனைவியை வீதியில் இறக்கி விட்டு, கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார். கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ஏ) https://newuthayan.com/article/வட்டுக்கோட்டை_படுகொலை;_மேலும்_ஒரு_சந்தேகநபர்_கைது!
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
நீர் தமிழருக்குரிய அரசியலை செய்தால் ஏன் உமக்கு எதிராக செயல்பட போறார்கள் சுமா . உங்கட சித்து விளையாட்டினை நிறுத்தி சிங்களத்துக்கு மிண்டு கொடுக்கின்ற சதியினை நிறுத்தும் . அதுவே நல்லது , அல்லது தமிழ் அரசியலில் ஒதுங்கி சிங்கள கட்சியுடன் இணையும் . ரணிலின் சேவகன் தானே . மானம் கெட்ட பிழைப்பு நடத்துவது விபச்சாரிக்கு சமம் .
-
தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 695,120 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,520 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 196,200 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,480 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,850 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,460 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,650 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/182006
-
ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும் இலங்கை
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது. உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன. மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை. குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை. அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும். இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது. https://www.virakesari.lk/article/181712
-
விட்டுக்கொடுப்பற்ற தலைமையே தேவை!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய அந்தக் குரூரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகினர். 'அந்தப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை. நீதிக்கான பயணத்தை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் - இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை ' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக அவரால் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை என்ற ஆதங்கம் அந்த உரையில் எதிரொலித்தது. இப்போதும் கூட அவர் தனது சமூகத்துக்காக மாத்திரம் குறுகிய வெளிக்குள் நின்றுகொண்டு நீதியைக்கோரி போராடுகின்றார் என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கின்றது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதான மிகப்பெரிய கொடூரத்துக்கு நீதி கோருவதற்கு அவர் தயாரில்லை. மதத் தலைவராக அவர், தனது அருட்தந்தையர்கள் எத்தனையோ பேர் இறுதிப் போரில் கொல்லப்பட்டமைக்கோ, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமைக்கோ நீதிகோர இன்னமும் தயாரில்லை. இந்த நாடு சிங்கள - பெளத்தர்களுக்குரியது. பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தம் பேசுபவர் அவர். சிங்கள பௌத்தம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயலும் ஆட்சியாளர்கள் அதற்காக எதையும் செய்வார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் இல்லை. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பௌத்த- சிங்கள பேரினவாத தரப்புகள் ஆட்சியைப்பிடிப்பதற்கே நடத்தியிருந்தன. அப்படிப்பட்டவர்கள் எப்படி நீதியான விசாரணையை முன்னெடுப்பார்கள் என்ற கேள்வியை அவர் இப்போது முன்வைக்கின்றார். சர்வதேச விசாரணையைக் கோரும் தனது நியாயப்பாட்டை வலுப்படுத்துகின்றார். இதையேதான் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லி வருகின்றனர். போரை நடத்திய அரசாங்கமே எப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும்? இது இயற்கை நீதிக்கே முரணானதே. எனவே சர்வதேச விசாரணைதான் தீர்வு என்ற கோஷம் தமிழர் தரப்பில் எழுப்பப்பட்டபோது மௌனியாக இருந்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித். இப்போதும் அந்த விடயத்தில் மௌனியாக இருந்து கொண்டு, தனது மதத்தின் மீது நிகழ்ந்த கொடூரத்துக்கு மட்டும் சர்வதேச விசாரணை கோருகின்றார். என்னதான், பக்கச் சார்பானவராகவே அவர் இருந்த போதும், தாக்குதலுக்கான நீதி கோரும் அவரது பயணத்தில் இன்னமும் உறுதியானவராக இருக்கின்றார். அதில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அவர் தயாரில்லை. யாருடனும் சமரசம் செய்ய அவர் தயாராக இல்லை. இந்த இடத்தில்தான் கர்தினாலிடமிருந்து எமது தமிழ்த் தலைமைகள் பாடம் படிக்க வேண்டும். நல்லாட்சிக் காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து கலப்புப் பொறிமுறைக்கு இணங்கினர். இன்று எதுவுமில்லாத நிலையில் வந்து நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான நீதி தேடிய பயணம் இன்று ஓய்ந்திருக்கின்றது. தமிழ்த் தலைமைகள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள், இந்த விவகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தவர்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பிணை யெடுத்துவிட்டு மல்லாக்காகப் படுத்திருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை திரும்பத் திரும்ப ஆயர் மல்கம் ரஞ்சித் முதலானோர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். புதிது புதிதாக ஆதாரங்களைத்திரட்டி ஒப்படைத்துக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்த் தலைமைகள் என்ன செய்கின்றன? தங்கள் கட்சிப் பிரச்சினைகளையே நீதிமன்றம் வரையில் கொண்டு சென்று விட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது தமிழ் மக்களுக்கான நீதியைக்கோரும் போராட்டத்தை முன்கொண்டு செல்ல கர்தினால் போன்ற விட்டுக்கொடுப்பற்ற ஒருவரே தேவை. https://newuthayan.com/article/விட்டுக்கொடுப்பற்ற_தலைமையே_தேவை!
-
சுதந்திரப் பலஸ்தீனத்துக்காக அமெரிக்காவில் தீவிரப் போர்!
யூத மாணவர்களும் பங்கெடுப்பு அதிரும் அமெரிக்கப் பல்கலைகள். சுதந்திரப் பலஸ்தீனம் உருவாக்கப்படவேண்டும். பலஸ்தீனர்களின் வளங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பல்லாயிரம் யூத மாணவர்களின் பங்கெடுப்புடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டங்கள் உலகின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கத்துக்கு கனதியான அழுத்தத்தை வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அமரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவும், நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லொஸ் வெகாஸ் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் இடைத்தங்கல் முகாம்களை அமைத்து போராட்டக்காரர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைக்கழகங்கள் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு வழங்கும் தீவிரமான ஆதரவை அமெரிக்கா கைவிடவேண்டும். அத்துடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் விலகியிருக்கவேண் டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். (ச) https://newuthayan.com/article/சுதந்திரப்_பலஸ்தீனத்துக்காக_அமெரிக்காவில்_தீவிரப்_போர்!
-
மாலைதீவுத் தேர்தல்; சீனா விசுவாசி மொய்சு வெற்றி!
மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில், சீன ஆதரவாளரான மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைத்திருக்கின்றது. மொய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த இமாலய வெற்றி மாலைதீவுக்குள் மொய்சுவின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய இயக்கவியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை நிகழ்த்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாலைதீவு இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறி சீன நிலைப்பாட்டில், பயணிப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச) https://newuthayan.com/article/மாலைதீவுத்_தேர்தல்;_சீனா_விசுவாசி_மொய்சு_வெற்றி!
-
தமிழரசு நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
அதெப்படி வழக்கை மீள பெறுவார் , இதன் சித்து விளையாட்டை ஆரம்பித்து வைத்ததே எங்கட சித்தன் சுமா , எப்படி விடுவார் , கட்சியை அழிப்பதென்ற அவர் விளையாட்டை உணராத கூட்டத்தை என்ன சொல்வது. கள்ள வேலை பார்த்து எப்படி போன தேர்தலில் வந்தாரோ அதன் தொடர்ச்சி இது. பச்சை மட்டையால சாத்தானும் .
-
யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!
கொள்ளையடித்தவன் என்ன சித்து விளையாட்டை செய்தானோ ? குழம்பிட்டாங்கள் போல
-
வலி ஒன்று; நீதி இரண்டா
இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன இராணுவத்துடன் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் கூட்டணிகளை (நேட்டோ போன்று) ஏற்படுத்திக்கொண்டால் அது இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும். இன்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நேட்டோ வழங்கும் இராணுவ உதவிகள்போன்று, நாளை இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன இராணுவத்துக்கு வெளிப்படையான உதவிகள் வழங்கப்பட்டால், 'தான் அழிந்துபோவேன் அல்லது அமிழ்ந்துபோவேன்' என்பதுதான் சுதந்திர பலஸ்தீனத்தை இஸ்ரேல் தன் முழுப்பலத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்க்கக்காரணம். உலகின் உச்சபட்ச இராஜதந்திரமும், கருத்துத் தெரிவிக்க அசட்டுத்துணிவும் தேவையான இந்த விடயத்தில், இஸ்ரேல், அமெரிக்காவின் முகங்களை முறிக்காமல் அவற்றை நேருக்குநேராகச் சந்தித்து சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்திய வெகுசில தலைவர்களில் ரணிலும் ஒருவர். குறைந்தபட்சம் 'ஆயுதங்கள் தாங்கிய இராணுவத்தினர் அற்ற சுதந்திர பலஸ்தீனமாவது உருவாக்கப்படவேண்டும்' என்பது ரணிலின் திருத்தப்பட்ட கொள்கையாகவிருந்தது. அதுதான் இன்று உலகில் பல நாடுகளாலும் பொதுத் தீர்வுத்திட்டமாக' பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகவும் இருக்கின்றது. ஓர் இராஜதந் திரியாக, முதிர்ச்சிமிக்க தலைவராக, அனுபவ ரேகைகளைத் தாங்கியவராக ரணிலை இந்த விடயத்தில் எத்தனை பாராட்டினாலும் அத்தனையும் தகும். ஆனால், இந்த விடயத்தில் ரணில் சொல்ல மறந்த அல்லது உணர மறுத்த கதையொன்றும் உள்ளது. யூத சித்தாந்தங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இன்று பலஸ்தீனர்களை எவ்வளவுக்கெவ்வளவு வதைத் தெறிகின்றனவோ அதைவிட ஒருபடி மேலாகத்தான் பௌத்த சித்தாந்தத்தின் ஆக்கிரமிப்புகளால் ஈழத் தமிழர்கள் அனுபவித்த-அனுபவிக்கின்ற வேதனைகள் உள்ளன. அவை வார்த்தைகளால் அளந்தொழுத இயலாதவை - முடியாதவை. அங்கு பலஸ் தீனர்கள், இங்கு ஈழத்தமிழர்கள், அது மத்திய கிழக்கு, இது தெற்காசியா, அங்கு யூத ஆக்கிரமிப்பு, இங்கு பௌத்த ஆக்கிரமிப்பு. அவ்வளவும்தான் வேறுபாடு. மற்றும்படி வலி ஒன்றுதான், வதை ஒன்றுதான். தன் நாட்டில் உள்ள ஓர் இனக்குழுமம் நீதியைத் தேடி உழன்றுகொண்டிருக்கையில், அதற்கு ஒரு நிரந்தரத்தீர்வை வழங்காமல், எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நீதியைத் தேடத் தொடங்குவதெல்லாம் சுத்த அபத்தம். தமிழர்களுக்கு நீதியை வழங்கி விட்டு, தன்னையும் தன் நாட்டையும் சான்றாகக் காட்டி தன் விவாதப்புள்ளியை ரணில் எண்பித் திருப்பாராயின் மட்டுமே அது அவரது இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகளாக இருந்திருக்கும்...! https://newuthayan.com/article/வலி_ஒன்று;_நீதி_இரண்டா
-
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
கத்திமேல் நடக்கிறதா இலங்கை... ஈரானின் அதிபரும், மிகச்சிறந்த போர்த்தந்திரியும் அமெரிக்க எதிர்ப்பு மனோநிலையில் ஊறித்திளைத்தவருமான இப்ராஹிம் ரைசி இன்னும் சில தினங்களில் இலங்கைக்கு வரவிருக்கின்றார். ஈரானிடமிருந்து இலங்கை பெற்றுக் கொண்ட 'உமாஓயா' அபிவிருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவிருக்கின்றார். அத்துடன், ஈரான் - இலங்கையிடையே கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்தப் பயணத்தின்போது ரைசி கவனம் செலுத்துவார் என்றும் கருதப்படுகின்றது. நாணயங்களால் பிணைக்கப்பட்ட நிகழ்கால உலகில் ஒருநாடு இன்னொரு நாட்டுடன் தன் தொடர்பை வலுப்படுத்துவது தவிர்க்கப்பட முடியாததுதான். ஆனால், கடந்த மூன்று வாரங்களாக நிகழும் அதியுச்சப் போர் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய அதிபரின் இலங்கைப் பயணம், இலங்கைக்குத் தேவையற்ற இராஜதந்திர நெருக்குவாரங்களை ஏற்படுத்தவல்லது. ஏனெனில் இங்கு இலங்கை, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மட்டுமல் லாமல் 'நேட்டோ' கூட்டணிகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும்கூட நேரடியாகப் பகைக்கத் தலைப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் பெருவிரிசல் ஏற்பட்டுள்ளது. அணுவாயுதங்களுக்குத் தேவையான யுரேனியத்தைச் சட்டவிரோதமாகச் செறிவூட்டுகின்றது என்று தெரிவித்த அமெரிக்கா, ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது திணித்து வைத்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், ஈரானிய இராணுவத் தலைவர்களை இலக்குவைத்துக் கொலை செய்யுமளவுக்கு இந்த விடயத்தில் அமெரிக்கா அதி தீவிரமாக இயங்கி வருகின்றது. ஈரானின் போர்த்தந்திரி என்று அறியப்படும் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமைகூட இதே பின்புலத்தில் தான். அமெரிக்கப் பதற்றங்கள் ஒருபுறம் இருக்கையில், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல்கள் ஓர் உலகப்போர்முனையாக மாறும் அளவுக்குத் தீவிரம் பெற்றிருக்கின்றன. இரண்டு நாடுகளும் நேருக்குநேராக வான் தாக்குதல்களில் பரஸ்பரம் ஈடுபட்டு வருகின்றன. ஆக, ஒரு போர்க்கூட்டணியின் அவசியம் தற்போது வலுவாகவே உணரப்பட்டிருக்கின்றது. இதனால் எந்தநாடுகள் எல்லாம் ஈரானை ஆதரிக்கின்றனவோ அணுகுகின்றனவோ-தூதரக உறவுகளை ஈரானுடன் வலுப்படுத்துகின்றனவோ அவற்றை 'தீட்டு நாடுகளாக' கருதி தன் நட்பு வட்டாரத்துக்குள் இருந்து தொலைதூரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தள்ளியே வைக்கும். உலக அரசியலில் அண்மைய நகர்வுகள் பலவும் அதையே கட்டியம் செய்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் ஈரானிய அதிபர் இலங்கைக்கு வரவிருக்கின்றமை சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய நாளாந்தச் செய்தியல்ல. மிகப்பெரிய ஆபத்தை இந்தப் பயணம் இலங்கைக்கு உண்டுபண்ணக் கூடியது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனாவின் கடல்சார் மற்றும் புவியியல் தலையீடுகள் நாளுக்குநாள் தீவிரமாகிக்கொண்டேவருகின்றன. இந்தி யாவின் பக்கமாகச் சாய்வதா? சீனாவின் பக்கமாகச் சாய்வதா? என்ற தீர்மானத்தில் ‘மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலு மாக' பரிதவிக்கின்றது இலங்கை. இவ்வாறிருக்கையில், ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் இந்தத் தீவில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தால் இலங்கையின் எதிர் காலம் மீண்டெழமுடியாத இருண்ட பக்கங்களால் சூழப் படவே செய்யும். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் என்பது தூதரக - இராஜதந்திர விவகாரம் அல்ல. இது முழுக்கமுழுக்க ஆயுதங்களை மையப்படுத்தியது. சீனா - இந்தியா விவகாரம் போன்று ஈரான் அமெரிக்கா விவகாரத்தை இலங்கை அணுகமுடியாது, அணுகவும்கூடாது. அமெரிக்கா என்னும் பிணம்தின்னிக் கழுகு இலங்கையை நோக்கி தன் கடைக்கண்ணைத் திருப்பினால், இஸ்ரேலிடம் இருந்து கிடைக்கும் குறைவற்ற தொழில் வாய்ப்புகளை இஸ்ரேல் வேறுநாடுகளுக்கு வழங்க ஆரம்பித்தால் அந்தப் பின்னடைவில் இருந்து மீண்டுவரும் திராணியும் பொருளாதாரப் பலமும் இலங்கையிடம் இப்போதைக்குக் கொஞ்சமும் இல்லை என்பது வெளிப்படை! அதற்காக ஈரானை முற்றாகப் பகைத்துவிடவும் முடியாது. இலங்கை தன் இராஜதந்திரப் பலம் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அணுக வேண்டிய விடயம் இது. வழக்கமான விஷப்பரீட்சைகளுக்கு இதில் இடமில்லை...! (20. 04.2024-உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/கத்திமேல்_நடக்கிறதா_இலங்கை...
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அடுத்த வாரம் கூடும் – மாவை அறிவிப்பு
அது சரி மாவை ஐயா , சுமா என்னவாம் , அவர் சரியாமோ ?
-
மைத்திரிபால இராஜினாமா?
வினை செய்தவன் வினையை அறுவடை செய்வான் , முதலில் கோத்தா இப்ப இவர் .
-
அவசரத்தனங்களும் குழப்பங்களும்...
ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
-
இனநலனா! ஒற்றுமையா!!!
இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான்
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க. சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள். என்ன பொறுத்தவரை பிறப்பால் யாவரும் மானிடரே , அவரவர் செயல் சிறக்கும் பொது உயர்ந்தவர் இல்லையோ அவர் தாழ்ந்தவர் . அப்பன் திருடன் ஆக இருக்கும் பொது பிள்ளையும் திருடினால் , அவர் அப்பன் போல தான் பிள்ளையும் பிறந்திருக்கார் என்பார்கள் ... ஒன்றை அறியவிழைகிறேன் , ஏன் என்ன அவர் கோத்திரத்தில் இவ்வளவு அன்பாக இருக்கின்ரீர்கள்.பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது. தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான்.
-
உள்ளத்தில் இருப்பதை உரக்கச் சொல்ல ஒரு சந்தர்ப்பம்!!!
அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார்
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
நண்பரே கொஞ்சம் வேலையாக இருந்ததால் இந்த பக்கம் வரவில்லை . இப்பதான் பார்த்தேன் . உங்கள் பிரச்சனை தான் என்ன .குலவழக்கம் என்றால் - இங்கே நான் எந்த குலத்தையும் கூறவில்லை . முதலில் அவர் யாருக்கு நம்புகின்ற மாதிரி இருக்கின்றார் . செய்வது முழுக்க நாச வேலை . இதனையும் பட்டியல் போடணுமா ? அரசியலுக்கு வந்தது ஏன் ? இப்ப என்ன செய்து உள்ளார் , கடைசியில் தமிழரசு கட்சியும் கதை முடிந்தது. ஆமை புகுந்த வீடு நாசம் என்ற பழமொழி மாதிரி. ஊரில் பொதுவாக சொல்வார்கள் நாணயம் இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை , நாசவேலை செய்பவர்களை . இது அவரது பிறவிக்குணம் என்று சொல்வார்கள் . அவரது நடவடிக்கையை வைத்து மட்டும் சொல்வார்கள். காக்கை வன்னியன் என்று ஏன் கூறுவார்கள். காட்டி கொடுத்து துரோகம் செய்தவர்களை. அதுமாதிரிதான் . இப்படியான நாசா வேலை செய்தவரை அப்படி சொன்னேன் . இதில் என்ன பிழை கண்டுபிடித்தீர் ? உண்மையாவே உங்களுக்கு " குலவழக்கம்" பதில் வேண்டுமா ?