Everything posted by தமிழன்பன்
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவரை பற்றியும் அவரது போராளிகள் பற்றியும் எதிரியான சிங்கள ராணுவ தளபதியே மிக சிறந்த சான்றிதழை கொடுத்துவிட்டார் . இதட்கு மேலே என்ன வேண்டும். இந்த மாதிரியான ஈனமானவர்களை அடிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
என் இந்த தவிப்பு தோழரே , தொப்பியை அளவு உள்ளோர் போட வேண்டியதுதான். சுமா மாதிரியானவர்களை...... வேண்டாம் ....
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
வந்த அலுவல் முடிந்து இனி சிங்கள பக்கம் ஒருக்கா வாலை ஆட்டுவம் என்பது சுமந்திரனின் குல வழக்கம் . அதனை சமத்தாக செய்கிறார் .
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
இருந்த கொஞ்ச மக்களின் வாக்குகளும் வராது என்று நினைக்கிறாரோ அல்லது இவரை பயன்படுத்திய மஹிந்த கும்பல் ஆடடம் கண்டதாலயோ
-
லூயிகள்- ரணில் - கோத்தாபய
பிரெஞ்சு வரலாற்றில், 15ஆம் லூயியுடையதும் அவன் மகனான 16ஆம் லூயியுடையதும் ஆட்சியை கறுப்புப்பக்கங்கள் என்றுதான் இன்றளவும் அடையாளப்படுத்துகின்றனர். 15ஆம் லூயியுடைய ஆட்சியில் மக்கள் பசியாற்றுவதற்குப் போதுமான உணவுகள் இருக்கவில்லை. 16ஆம் லூயியோ உணவுகளை மக்களின் கண்ணில் காட்டினாலும் வரிகளால் அவர்களை வதைத்தெடுத்தான். மக்கள் இங்கே புல்லைத் தின்கின்றார்கள். அனுதினம் வறுமையாலும் அவல ஆட்சியாலும் வதைபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கும் பிச்சைக்காரருக்கும் மன்னராயிருப்பவரை 'மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி' என எவ்வாறழைப்பது? இது பிரான்ஸின் கொடுங்கோலனான 15ஆம் லூயி தொடர்பில் அக்காலக் கவிஞனொருவன் தெரிவித்த கருத்துகளாக அமைகின்றன. 'இரு கழுதைகளை அவன் ஓட்டிச் சென்றான். ஒரு கழுதை யின் முதுகில் ஓட்ஸ் தானியங்கள். இன்னொரு கழுதையின் முதுகில் உப்பு வரிச் சீட்டுகள்' என்று 16ஆம் லூயியின் கொடுங்கோன்மை பற்றிக் கட்டியம் செய்தார் கத்தோலிக்க மதகுரு ஒருவர். பிரான்ஸ் போன்று இலங்கையும் இரு லூயிக்களின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகியது. இன்று செய்வதறியாது திகைக்கின்றது. அவர்களில் ஒருவர் கோத்தாபய, இன்னொருவர் ரணில். விடுதலைப்புலிகள் ஆயுத அளவில் மௌனிக் கச் செய்யப்பட்டதன் பின்னரான மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் 'கடனாதிக்கம்' இலங்கையில் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நாடு முதலாளி களுக்கும், சீன செங்கொடியின் செல்வாக்குக்கும் ஏற்றதாக மாறிநடைபோட்டது. குருவியின் தலையில் வைத்த பனங்காயாக தகுதிக்கும்-திராணிக்கும் மீறிய கடன்சுமைகள் இலங்கைத் தீவை நெருடிக்கொண்டி ருந்தன. தொடர்ந்துவந்த கோத்தாபயவின் ஆட்சியில் இந்த நெருக்குவாரங்கள் உச்சம் பெற்றன. இலங்கை யர்களுக்கு உணவுப் பொருள்கள்கூட மறுக்கப்பட் டன. தினம்தினம் ஏதாவது ஒரு பொருள் விலையேற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அனுதினம் அதிகரித்துச் சென்றன. கோத்தாபய ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட பின்னர், தற்போது இடம்பெற்றுவரும் ரணிலின் ஆட்சியில் மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், 16ஆம் லூயி காலத்தைப்போல் ‘கழுதைச் சுமைகளாக' வரிகள் வானைப் பிரித்துக்கொண்டு நிற்கின்றன. இத்தனைக்கும் இந்த வரிச்சுமைகளை இறக்கி வைப்பதற்கு காத்திரமான திட்டங்கள் எதையும் ரணில் அரசாங்கம் எடுத்ததாகத் தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியம் என்ற ஒன்றே ரணில் அரசாங்கத்தின் ஒற்றைப்பிடிமானமாக இருக்கின்றது. பொருளாதார மீளெழுச்சிக்கு நாணய நிதியத்தின் தலையீடு அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், வரிவிதிப்புக்கு அப்பாற்பட்ட பொருளாதார ஈட்டுகையை ரணில் தரப்பு இன்னமு உறுதிப்படுத்தவில்லை. நாணய நிதியத்தின் கடன்கள் முற்றாகப் பெறப்பட்ட பின்னர், அந்தக் கடன்களை திரும்பச் செலுத்த வேண்டியதும் அவசியமே. அக் காலத்தில் இலங்கை எதைவைத்து கடன்களை அடைக்கும். வரிகள், கடன்கள் என பழைய பல்லவியே ஆரம்பமாகும். இதனால் வதைப்படப்போவது என்னமோ அப்பாவிப் பொதுமக்கள் தான்...! (31.03.2024-உதயன் பத்திரிகை). https://newuthayan.com/article/லூயிகள்-_ரணில்_-_கோத்தாபய
-
படைப்பாக்கமும் பயங்கரவாதமா
அதிகாரத்தின் குரூரப்பார்வை இப்போது தமிழ்ப்பாடசாலைகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. எங்கெல்லாம் உரிமைக்கும், உணர்வுக்குமான குரல்கள் எழத்தொடங்குகின்றனவோ அங்கெல்லாம் நுழைந்து, அந்தக் குரல்களை நசுக்குவதையே ஆட்சியாளர்கள் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள். இல்லா விட்டால் அந்தக்குரல்களின் பரவுகை பேரெழுச்சியை உண்டாக்கி, தம் இருப்புக்கே உலை வைத்துவிடு மென்பதே ஆட்சியில் உள்ளவர்களின் அச்சமாக இருக் கின்றது. சர்வதேசச் சதியுடன், பெரும் மனிதப்பேர வலத்தை நிகழ்த்தி, குருதிச்சகதிக்கு நடுவே தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் சிங்கள பௌத்த பேரினவாதம் அடங்கிவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் அடிபட்ட புலியாக, தமிழர்கள் திரண்டெழுந்து, பழிக்குப் பழி வாங்கக்கூடும் என்ற சந்தேகத்தோடுதான் இன்றுவரை தமிழ் மக்களை இலங்கை அரசும், படைத்தரப்பும் நோக்குகின்றன. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்போல, சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் கண் களுக்கு தமிழர்களின் சாதாரண நகர்வுகள்கூட, புலிகளை மீளுருவாக்கும் முயற்சியாகவே புலப்படுகின்றன. அத்தோடு போர் பற்றிய நினைவுகளை அழித்து, கேளிக்கை யான பாதைக்குள் இளைய சமுதாயத்தை மடைமாற்று வதனூடாக, தமிழர்களின் உரிமைப்போரை மலடாக்கி விடலாம் என்றும் எண்ணுகின்றனர். அதனாலேயே இறுதிப்போர் முடிந்த கையோடு, புலிகள் தொடர்பான அத்தனை நினைவிடங்களையும் படையினர் அத்திபாரத் தோடு பிடுங்கியெறிந்தனர். மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை, மாவீரர்நாள் என்பவற்றை தங்கள் மன அவசங் களைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கருவியாக தமிழர்கள் நினைவேந்த முற்பட்டபோது அவற்றுக்கு ஆயுதமுனை யில் தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி நினைவேந்தி யவர்கள் கைது செய்யப்பட்டனர், வழக்குப் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். தமிழர்களின் உரிமைக்குரல் ஒலிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்ற இடங்கள் படைப்புலனாய்வாளர்களின் கழுகுப் பார் வைக்குள் 24மணித்தியாலங்களும் கொண்டுவரப்பட்டன. அதேசமயத்தில், தமிழர் தாயகத்தில் எப்போதுமில் லாதவகையில் போதைப் பொருள் பாவனை வியாபிக்கத் தொடங்கியது. விநோதமான பெயர்களில் வாள்வெட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர் வரை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்ற தமிழ் இளையோர், தறிகெட்டு ஓடும் மந்தைக் கூட்டமாக மாற்றப்படத் தொடங்கினர். ஆனால் என்னதான் பேரினவாதிகளும், படைத் தரப்பும் பகீரதப் பிரயத்தனம் செய்து உரிமைக்கான தகிப்பை இல்லாமல் செய்ய முயன்றாலும், தமிழர்களின் மரபணுவில் அது இரண்டறக் கலந்துவிட்டதால், ஏதோ வொரு வகையில் பீறிட்டுக் கிளம்பவே செய்தது. இம்முறை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் டாங்கி, வெடுக்குநாறிமலை ஆக்கிரமிப்பு, துயிலுமில்லம், கார்த்தி கைப்பூ என்று எங்கள் நிலத்தின் நினைவுகளை மாணவர்கள் ஆக்கவடிவில் வெளிக்கொணர்ந்திருந்தனர். போருக்குள் பிறந்த ஒரு சந்ததி, தான் கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றுணர்ந்து கற்றவற்றை ஓர்ஆக்கவடிவில் வெளிப்படுத்தியதில் தவறொன்றுமில்லையே. ஆனால் பாடசாலைகளில் உயிர்கொல்லும் போதைப் பொருள் கள் விற்பதைக் கண்டும்காணாமல் ஊக்குவித்த அரசாங் கத்துக்கு இந்தப் படைப்புகள் கண்ணைக் குத்தியிருக் கின்றன. பாடசாலை முதல் வீடுவரை விசாரணைகள் நீள்கின்றன. 'குய்யோ முறையோ' என்று சிங்கள -பௌத்த பேரினவாத அமைப்புகள், மாணவர்களின் இந்தப் படைப்பாக்கங்களை பயங்கரவாத முத்திரை குத்தி கடிதங்களை எழுதித் தள்ளுகின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, ஒன்றுமேயில்லாத இதுபோன்ற மாணவர் படைப்புகளை பிரச்சினையாக்க நினைப்பது அபத்தமே. ஆனால் அதைப் பேரினவாதிகளோ, இலங்கை அரசோ, அரச படைகளோ புரிந்து கொள்ளவே போவதில்லை. அப்படிப் புரிந்துகொள்ளாத வரையில் இந்த நாடு உருப்படவும் போவதில்லை. (03.04.2024-உதயன் பத்திரிகை). https://newuthayan.com/article/படைப்பாக்கமும்_பயங்கரவாதமா
-
சஜித் என்னும் வேடதாரி
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறி வருகின்றார். மக்களின் வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் பரப்புரைகளை அவரும் தொடக்கியிருக்கின்றார். இதன் ஒரு கட்டமாக, அரச தலைவர் தேர்தலை இலக்குவைத்து வீசப்பட்ட ஈஸ்டர் விவகாரத்தில் தானும் தன் பங்குங்குக்கு கருத்துத் தெரிவித்திருக்கின்றார். 'புதிய அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாதங்களுக்குள் 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், 7 முதல் 9 தேசிய மற்றும் சர்வதேச அங்கத்தவர்களைக் கொண்ட, ஓர் ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன்மூலம் கடந்தகால மற்றும் தற்போதைய காலகட்டத்தின் முழுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். எந்த வொரு நிறுவனத்திலும் எந்தவொரு நபரிடமும் எவ்வித தடையுமின்றி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். ஆணைக்குழுவை நிறுவிய 6 வாரங்களுக்குள் அதனுடன் இணைந்து பணியாற்ற ஸ்கொட்லண்யார்ட், எவ்.பி.ஐ. வெளிநாட்டுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சேவைகள், தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு தரப் புகளைக் கொண்ட நிரந்தர விசாரணை அலுவலகம் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்குட்பட்டு இலங்கையின் சட்டங்களின் கீழ் குற்றப்பத்திரிகைகளைச் சமர்ப்பிப்பது அல்லது தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டமா அதி பருக்குக் கட்டாயமாக்கப்படும். 1948ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 7 (2) அல்லது பிரிவு 24 திருத்தப்படும். மேற்கண்ட குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது தீர்ப்பு வழங்க நிரந்தர உயர்நீதிமன்றம் நிறுவப்படவேண்டும். இதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை கட்டமைப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரைச் சாராத அரச தரப்பு சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கடந்த 2ஆம் திகதி உரையாற்றியிருந்தார். ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளான நீதியைப் பெற்றுக்கொடுத்தலுக்கு அவர் தனது செயலுரு எப்படி இருக்கப்போகின்றது என்பதைச் சொல்லியிருக்கின்றார். ஆட்சியைப் பிடித்து அதை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இவரது இந்தக் கூற்றை நம்பமுடியும். ஏனெனில் இலங்கையின் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்காக உறுதியளித்த எந்தவொரு விடயத்தையும் செய்ததேயில்லை. ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பது நல்லது. அதற்காக அரச தலைவர் தேர்தலுக்கு முன்னரே தனது வரைப்படத்தை சஜித் வெளிப்படுத்தியமையும் சிறப்பானது. ஆனால், ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இறுதிப்போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்துக் காத்திருக் கின்றார்கள். அவர்கள் தங்களுக்கான நீதி, சர்வதேச விசார ணையூடாகவே நிலைநிறுத்தப்படும் என்று நம்பு கின்றார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை அதிகளவில் சுருட்டிய சஜித் பிரேமதாஸ அந்த மக்களின் நீதிக்கான கோரிக்கை தொடர்பில் வாயே திறக்கவில்லை. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விவகாரம் என்பது தெற்கின் அரசியலுடன் தொடர்புடையதாக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதியை நிலைநாட்டுவதன் ஊடாக தெற்கின் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் வாய் திறந்தால் தெற்கின் வாக்குப்பலத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், சஜித்தும் அமைதிகாக்கின்றார். இப்படியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரும் தமிழ்த் தலைவர்களை, தமிழ்மக்கள் தங்கள் தலைவர் களாகத் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்கப் போகின்றார்களா...? (06.04.2024-உதயன் பத்திரிகை). https://newuthayan.com/article/சஜித்_என்னும்_வேடதாரி
-
ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை - ஜனாதிபதி தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்றுவதற்கு தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 2022 ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: ''பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும். கடந்த இரண்டு வருடங்களாக எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது பாராளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள் என்றே கூற வேண்டும். இந்த வேலைத் திட்டங்களை தொடர பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும். பொதுஜன பெரமுனவில் இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம். இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது. நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். 20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) கலந்துகொண்டார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிராமங்களை ஒன்றிணைத்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் அங்கத்துவத்துடன் ஆலோசனை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார். இதன்படி கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக அறிவிக்கும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசாங்கத்தின் “அஸ்வெசும” வேலைத்திட்டம் மற்றும் “உறுமய” காணி உறுதி வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபற்றுமாறு முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி, தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், அரசாங்க வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னோடிகளாக உள்ளூராட்சி பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை முன்னோக்கி கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180655
-
எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவோம் - மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் நவீன திருடர்கள்
-
யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
இந்தமாதிரியான முதலீடுகள் தமிழ் பகுதியில் வரவேண்டும்.
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
நான் அறிந்தவரை அவர் ஒரு உண்மையான நேர்மையானவர் . பேராதனை பொறியியல் பீடத்தில் நான் படித்த காலத்தில் அவர் உதவி விரிவுரையாளராக இருந்தவர். முதுமாணி படிப்புக்காக ஆயத்த நிலையில் இருந்த தருணம். அவர் வருவது சாலச்சிறந்தது .
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
தமிழ் கூட்டமைப்பை வெற்றிகரமாக உடைத்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் சுமா இப்ப தமிழரசு கட்சியையும் உடைத்து சுக்கு நூறாகிவிட்டார் . வந்த வேலை முடிந்த சந்தோசம் அதுதான் கோவிலுக்கு வேற. இவரைத்தான் சிலபேர் சொன்னார்வர்கள் சிறந்த ராஜதந்திரியாம் . இப்ப புரியும் ஏதில இவர் தந்திரி என்று.
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
கடற்படை தெளிவாக உதவி செய்தது தெரிகின்றது. இப்படியான வால் வெட்டு கலாச்சாரம் 70 இதுக்கு முதல் பரவலாக இருந்தது , தலைவரும் அவரது படைகளின் நெறியான நடத்துதல் காரணமாக இந்த மாதிரியான கும்பல்கள் களை பிடுங்கி எறியப்பட்டார்கள். மறுபடியும் இப்ப .... சினிமா இதனை ஊக்கிவிக்கின்றது.
-
அகலித்துச் செல்லும் விரிசல்கள்!
இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைவது மீண்டும் இந்திய மத்திய அரசால் தாமதிக்கப்பட்டிருக்கின்றது. விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாந்தன், தன் விடுதலையை அனுபவிக்காமல் -தன் உறவுகளைச் சந்திக்காமல் இவ்வுலகை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் - ஏனைய மூவரும் விடுதலை ஏக்கத்துடன் இன்னமும் இந்திய சிறப்புத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கான கடவுச்சீட்டு வழங்கும் செயன்முறைகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் பின்னடிப்பால் இழுபறி நிலையில் இருக்கின்றன. முருகன், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் 1990ஆம் ஆண்டு தமிழகத்துச் சென்று அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்கள். ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸின் மைத்துனர். திருச்சியில் உள்ள சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இந்திய அரசாங்கத்தின் பயண ஆவணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பெரும் சட்டப் போராட்டத்தின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இவர்களை - மீண்டும் சிறப்பு முகாமில் பொலிஸ் கண்காணிப்பில் தங்க வைத்து பெரும் மனித உரிமை மீறலைச்செய்து வருகின்றது அகிம்சையின் மறுபெயர் தாமே எனத் தம்பட்டம் அடிக்கும் காந்திய தேசம். திருச்சி சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் அவருக்கான பயண ஆவணங்களை வழங்குவதை இழுத்தடித்து வந்தன. சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன், சரியான மருத்துவக் கவனிப்பின்றி, வீடு திரும்பும் தனது ஆசை நிறை வேறாமலேயே உயிர் பிரிந்தார். இதை இந்திய, இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட பழி வாங்கல் என்றே நோக்கும் தமிழ் மக்கள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரை உடன் விடுவிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். கடந்த காலங்களில் -பல்வேறு சந்தர்ப்பங்களில் -தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிதறடித்த -தமிழ் மக்களைக் கைவிட்ட இந்தியா இந்த விடயத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. காலங்காலமாகத் தம்மை ஏமாற்றும் இலங்கையிடம் பணிந்து கிடக்கும் இந்தியா என்னும் பிராந்திய வல்லரசு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து - வாழ்வின் பெரும்பங்கை சிறைக்கம்பிகளுக்குள் தொலைத்து விட்டவர்கள் மீது இன்னமும் வன்மம் கொண்டு தண்டிக்க முயல்கின்றது. காந்திய தேசத்தின் இந்தப்போக்கே தமிழ் மக்கள் இந்தியாவை விட்டுத் தூரம் செல்ல வைக்கின்றது. இந்த எண்ணம் -போக்கு தொடருமானால் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான விரிசல் அகலிப்பதைத் தடுக்கமுடியாது. (15.03.2024 - உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/அகலித்துச்_செல்லும்_விரிசல்கள்!
-
வெடுக்குநாறிமலை பொதுப்பிரச்சினை
'இலங்கையின் முதல் மதம் இந்துமதமே. இந்து மதம் நிலைகொண்ட பின்னரே இலங்கைக்குள் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. இதுவே வரலாற்று உண்மை' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித் துள்ளது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு. 'வரலாற்றுக்கு முற்பட்ட இந்துமதம், எவ்வாறு பௌத்தத்தை ஆக்கிரமிக்க முடியும்?' என்றும் அந்த ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆல யத்தில், சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனங்கள் நாளுக்குநாள் குவிந்துவரும் நிலையில், கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விடுத் துள்ள கண்டனக் குறிப்பு தனித்துவமானது என்ப துடன், 'குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போன்று' அமையவேண்டியதாகவும் இருக்கின்றது. ஒரு கத்தோலிக்க அமைப்பான, கத்தோலிக்க மறைமா வட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் இந்த அறிக்கையானது, மத சகிப்புத்தன்மையென்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இலங்கைத் தீவுக்குக் காலக்கண்ணாடியாகவும் பறைசாற்றி நிற்கின்றது. முல்லைத்தீவு குருந்தூர்மலையாக இருக்கட்டும் அல்லது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையாக இருக்கட்டும் அல்லது கிழக்கிலுள்ள கேந்திரப்பகுதி களாக இருக்கட்டும், அங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாத அடக்குமுறைச் சிந்தனையின் பாற்பட்ட செயற்பாடுகள் வெறுமனே இந்து சம யத்துக்கு மட்டுமானவையல்ல. இந்த அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் மதமாக இந்து மதமும், இந்துக்களும் இருந்தாலும் இதை அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரான அடக்குமுறையாகவே கொள்ளவேண்டும். அது ஏன் என்பதைத்தான் வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் பேசியிருக்கின்றது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு.காணாமலாக்கப்பட் டவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பௌத்த பேரினவாதத்தின் நிலவிழுங்கல் செயற்பாடுகள் என அனைத்தும் எவ்வாறு தமிழர்களின் பொதுப்பிரச்சினையாக உள்ளனவோ அதுபோன்றுதான், இந்து வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீதான ஆக்கிரமிப்பையும் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப வினையாற்றவேண்டும். ஆனால், இந்தப் புரிதல் தமிழர்தாயகத்தில் அநேகமானவர்களிடத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மதத்தலங்கள் மீதான ஆக்கிரமிப்பை பொதுப்பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் மனப் பாங்கு தமிழ் மக்களிடம் அருகியே வருகின்றது. உண்மையில் இந்த நிலை மாற்றப்படவேண்டும். எதிரி பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொள்வதற்கு 'பொதுப்பிரச்சினையாக'சில விடயங்களை தமிழர்கள் அணுகாதிருப்பதுதான் முதன்மைக் காரணம். இங்குள்ள தமிழ்த் தலைமைகளும் தத்தம் கட்சிக் கொடிகளைப் பலப்படுத்துவதில்தான் காலம் கடத்துகின்றனரே அன்றி, அதற்கு அப்பாற்பட்ட 'ஒன்றி ணைப்புச் செயற்பாடுகளையோ', செயற்றிட்டங்களையோ அவர்களும் முன்னெடுப்பதாயில்லை. இந்தச் சபிக்கப்பட்ட போக்குக்கு விரைவாக வைக்கப்படும் முற்றுப்புள்ளியே தமிழர்களின் நிலங்களை, வழிபாட்டுத் தலங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இதேவேளை, கத்தோலிக்கத் தமிழர்களுக்கு எதிராக நடுவீதியில் நின்று கூப்பாடுபோடும் சிலர், சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் கொடூரத்தனங் களுக்கு எதிராகக் கைகட்டி, வாய்மூடி இருக்கும் இடம் தெரியாமல் காட்டும் விசுவாசத்தையும் தமிழர்கள் கவனித்து வைத்திருக்க வேண்டிய காலமிது. (16.03.2024 - உதயன் பத்திரிகை). https://newuthayan.com/article/வெடுக்குநாறிமலை_பொதுப்பிரச்சினை
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
ஒருமாதிரி தமிழர் பகுதியில் வருவதை தடுப்பதில் நல்ல தீவிரம் .
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
தலைதெறிக்க ஓடிய கோமாளி , அதில புத்தகம் வேற. மானம் கெடடவனே. செய்த பாவம் விடுமா உன்னை
-
யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
அரசுடன் சேர்ந்து இப்படி பிச்சை எடுக்கலாம் என்கிறார் எங்கட ....பிச்சைக்காரன்
-
திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக சபையிடம் கையளித்து சிவராத்திரி நிகழ்வை முன்னெடுக்கவும் ; நீதிமன்று உத்தரவு
இடைக்கால நிர்வாக சபையிடம் நிர்வாகத்தை கையளித்து சிவராத்திரி நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளருக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார். திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கில் நிர்வாகத்திற்கு இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், இடைக்கால நிர்வாகத்தினை நியமிப்பதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது நேற்று (06) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது நிர்வாக சபைக்கு எதிராக வழங்கிய கட்டாணையானது மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்ததுடன், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையும் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178165
-
யாழ் தையிட்டி விகாரை குறித்து மீண்டும் சர்ச்சை!
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக்கொடுக்க இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தையிட்டியில் விகாரை அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான 8.04 ஏக்கர் காணியைச் சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் அதை தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது எனவும் சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது. தையிட்டி விகாரை தொடர்பில் அண்மையில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ, தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள்,சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது. இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோருகின்றனர். விகாரையுள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது. அது முழுமையாக விகாரைக்குரியது. அங்கே நிலம் இழக்கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார். அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களுக்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்டது? தையிட்டியில் 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது. இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ்க் குடும்பங்களுக்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரையுள்ளது. அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்டமீறல். அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும் - என்றார். இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மக்களுக்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்துக்கு உரிமை கிடையாது. இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? - என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார். அவ்வாறானால் அதனை நில அளவைப் பணிமனை அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்தார். மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைப் பணிமனை நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது. இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது.(க) https://newuthayan.com/article/விகாரையால்_பெரும்_சர்ச்சை
-
சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
ரணில் சுமந்திரனை வைத்து ஆடும் நாடகத்தை எங்கள் மக்கள் இந்த தேர்தலில் தூக்கி எறியவேண்டும் .
-
நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
நம்ப சொல்றிங்களா ?
-
இவர்களா தீர்வைப் பெற்றுத் தருவர்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மீது 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுமத்தப்பட்டது. போரின் தோல்வி, மக்களின் அவலம், ராஜபக்சக்களின் அச்சுறுத்தல் என்று எல்லாப்பக்கமும் நெருக்குவாரமாக இருந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஒழுங்குக்குள் இருந்தது. ஆனால் அவையெல்லாம் சிறிது காலம் தான். எப்போது அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அந்தக் கட்சி எடுத்ததோ அன்றிலிருந்து சரிவு ஆரம்பித்தது. உடைவுகள் தொடங்கின. அதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக முரண்பாடுகள் அடிக்கடி நிகழத் தொடங்கின. கஜேந்திரகுமார் வெளியேற்றம் அந்த முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாக இருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்க்காங்கிரஸ் என 5 கட்சிகளின் கூட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது வெளிப்படை. இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான கொள்கை முடிவுகளை முன்வைக்கத் தொடங்கினர். கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தனோ, ஜனநாயகக் கட்சி என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் அது கூட்டமைப்பின் உடைவுக்கான அத்திபாரம் என்பதை அவர் மூடி மறைத்துக் கொண்டிருந்தார். இப்போதும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் நடப்பது அது தான். அந்தக் கட்சியின் தலைமைக்கு எப்போது இருவர் போட்டியிடப் போகின்றனர் என்பது உறுதியானதோ அப்போதே அந்தக் கட்சிக்குள் பிளவு - உடைவு - ஆரம்பித்து விட்டது. தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட இருவரும், இது ஜனநாயகத்தின் உச்சம் என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளே நீறு பூத்த நெருப்பாக பிளவு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தமையும் அவர்கள் இருவருக்கும் தெரியும். இருவரின் ஆதரவாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியோர் இந்தப் பிளவை கூர்மைப்படுத்திக் கொண்டேயிருந்தனர். தலைவர் தெரிவுக்கான தேர்தல் முடிவடைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களைச் சந்தித்த போது, தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரன், "இருவரும் இணைந்து பணியாற்றுவோம்" எனக்குறிப்பிட்டிருந்தார். ஆனால், உண்மையில் அவர் அதை மனதாரச் சொல்லவில்லை என்பதையே அதன் பின்னர் இடம்பெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது அவரது கருத்து பிரதி பலித்திருந்தது. கட்சியில் உள்ள இரு அணிகளும் ஒன்றாக வேண்டுமாக இருந்தால் எனக்கு பொதுச் செயலர் பதவி வழங்கப்பட்டால் தான் அது சாத்தியமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் ஊடாக கட்சியில் இரு அணிகள் இருக்கின்றன என்பதையும் அது தலைவர் தேர்தல் ஊடாகவே உருவானது என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். https://newuthayan.com/article/இவர்களா_தீர்வைப்_பெற்றுத்_தருவர்
-
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கையின் இருப்பு
தேசிய மக்கள் சக்தியின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்தியா பயணம், இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் தலைவர்களை அழைப்பதில் இந்தியாவின் நோக்கங்கள் பற்றிய ஊகங்களை எழுப்பியது. இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி ஒரு வலுவான மூன்றாம் தரப்பாக தோற்றம் பெற்றுள்ளமை, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிர் சமநிலையாக இருக்கக்கூடிய வகையில் அவர்களுடன் உறவுகளை வளர்க்க இந்தியாவை தூண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி போன்ற ஒரு சோசலிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவை அமைப்பதில் இந்தியாவின் ஆர்வம், இந்தியப் பெருங்கடலில் அதன் மூலோபாய இலக்குகள் மற்றும் பொருளாதார நலன்களுடன் ஒத்துப்போகிறது. தமிழ் சமூகத்தைப் பாதிக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இந்தியா வரலாற்று ரீதியாக கவலை தெரிவித்தாலும், இந்திய உள்நாட்டு அரசியலில் சமீபத்திய மாற்றங்கள், குறிப்பாக பிஜேபியின் ஆதிக்கம், எதிர்கால இருதரப்பு உறவுகளை பாதிக்கலாம். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வரலாற்று ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ்நாட்டு காரணி, இந்தியாவில் தற்போதுள்ள ஒரு கட்சி மேலாதிக்கத்தின் கீழ் குறையக்கூடும், இது இலங்கை-இந்திய உறவின் இயக்கவியலை மாற்றியமைக்கக்கூடும். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இருதரப்பு உறவின் பலன்களை அதிகப் படுத்தும் வகையில் இலங்கை தனது அணுகுமுறையை மாற்றியமைக்க விழிப்புடன் இருக்க வேண்டும். https://newuthayan.com/article/இந்தியாவின்_வெளியுறவுக்_கொள்கையில்_இலங்கையின்_இருப்பு
- சுமந்திரனின் சுயபரிசோதனை