Everything posted by தமிழன்பன்
- சுமந்திரனின் சுயபரிசோதனை
-
உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம் : துறைசார் நிபுணர்களை உருவாக்கக்கூடிய கல்வி முறை எதிர்காலத்தில் உருவாக்கப்படும் - ஜனாதிபதி
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்ளடக்கி, தொழிலுக்கு ஏற்றவகையிலான மாணவர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும், புதிய தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14) பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள 10,126 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களின் பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும். இதன்போது அடையாரீதியாக, பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஏன் கிறிஸ்டீன் நினைவுப் பரிசை வழங்கி வைத்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது: எனது வீட்டிற்கு அருகில் ஐந்து பாடசாலைகள் உள்ளன. நான் கற்ற றோயல் கல்லூரி மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி, மகளிர் கல்லூரி, மகாநாம கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி என்பனவே அவை. அதனால் எனக்கு கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த முடிந்துள்ளது. ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இப்பாடசாலைகளின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினோம். 2022 இல் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. பாடசாலை பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க முடியவில்லை. அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தலைவரும் முன்வரவில்லை. அப்போது, சவாலை ஏற்று, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன். இந்த பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்று வருகின்றது. அதன்படி, பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதற்காக 14 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டது. கல்வி மறுசீரமைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும். உலகிற்கு பொருத்தமான தொழில் படையினை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி முறையை உலகிற்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் உலகிற்கு தேவையான தொழில் படையினை உருவாக்க முடியும். அதனூடாக சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்சைகளின் சுமைகளை குறைத்து ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்வாங்கி தொழில் முறைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். நாம் எவரும் 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதை விரும்பவில்லை. எரிவாயு, எரிபொருள் உணவு வரிசைகள் அற்ற சமூகமே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே அவ்வாறான யுகத்திற்குள் மீண்டும் நாடு செல்லாமலிருக்க வலுவான பொருளாதாரத்தை நாம் உருவாக்குவோம். வலுவான பொருளாதாரம் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக 09 மாகாணங்களின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் இன்று வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கல்வித்துறையின் நான்கு பிரிவுகளை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார். இன்று வழங்கப்படும் பாடசாலை சீருடையில் 80% சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். எஞ்சிய 20% சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் பெற்றுகொடுக்கப்பட்டது. இந்திய கடன் உதவியில் கிடைத்த கடதாசியை கொண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனால் உரிய தினத்தில் பாடப்புத்தங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளது. அரச அச்சீட்டு பணிகளில் இலாபம் ஈட்டவும் முடிந்துள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க அரசாங்கம் 19 பில்லியன்களை செலவிடுகிறது. கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதமாகிவரும் சாதாரண தர பரீட்சைகளை 2025 ஆம் ஆண்டிலிருந்து உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பெரும் பங்களிப்பு வழங்குகிறார். உலகிற்கு பொருத்தமான வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். இந்த அனைத்து வேலைத்திட்டத்துடனும் உலகை வெல்லக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க,கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கல்வி வெளீயீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.தாஜூதீன் உள்ளிட்டவர்களுடன் சென். புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/176354
-
என்று தணியும் வெளிநாட்டு மோகம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை -இனவழிப்புக் காரணமாக உயிர்பிழைக்கும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு தமிழர்கள் ஓடித் தப்பினர். காலாட்டத்தில் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது ஒரு கட்டாயக் கடமையாகவே மாறி விட்டது. போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவுடனேயே இளைஞர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் துரதிர்ஷ்டமான சூழலே இங்கு அதிகம் நிலவுகின்றது. 2011 -2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகளவானோர் சட்டவிரோதமான வழியில், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என நம்ப வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் கடலில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர். வெகு சிலரே அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த தீவுகளை சென்றடைந்தனர். அவர்களில் மிகச் சிலருக்கே அவுஸ்திரேலியாவுக்கு நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. பல இலட்சங்களைச் செலவு செய்து ஏமாந்தவர்களே அதிகம். அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோதமாக தனது நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதை பரப்புரைப்படுத்தினாலும் எம்மவர்களின் வெளிநாட்டு ஆசை முன்பாக அவை ஏறவில்லை. 2016-2020 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்குச் சென்ற எம்மவர்கள் பலர் அங்கு உயிரிழந்த சோகங்கள் அரங்கேறியிருந்தன. எல் லைப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல நாள் நடைபயணம், ஆபத்தான வகைகளில் கனரக வாகனங்களில் அடைத்துச் செல்லப்படுதல் என ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு முயன்று உயிர் பிரிந்த சோகங்கள் தான் நடந்தன. இப்போது கனடாவுக்குச் செல்லுதல் என்ற அடிப்படையில் பலரும் தங்கள் புலம்பெயர்தலை ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகச் செல்கின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும், வெளிநாட்டுக் கலாசாரம் எங்கள் மனதில் இன்னமும் ஆழமாக வேரூன்றியிருப்பதுவும் தற்போதைய புலம்பெயர்தலுக்குக் காரணமாக இருக்கின்றது. இதை வைத்து பணம் உழைக்கும் கூட்டமும் இருந்து கொண்டிருக்கின்றது. எத்தனை தடவைகள் ஏமாந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கிலுள்ள காவல் நிலையங்களில், அண்மைக்காலமாகப் பதிவாகும் முறைப்பாடுகளில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சம்பவமாக, வெளிநாட்டுக்குச் செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தைச் செலுத்தி ஏமாறுவதே இருக்கின்றது. இது தொடர்பில் காவல்துறையினர் மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் திரும்பத் திரும்ப ஏமாந்து கொண்டேயிருக்கின்றனர். எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது வெளிநாட்டு மோகத்துக்காக பல இலட்சங்களை இழக்கத் தயாராக இருக்கும் மக்கள் அதை இங்கேயே முதலீடாக்கி வருமானமீட்டத் தயாரில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதில்லை. வெறுமனே அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது மாத்திரம் அவர்களது பொறுப்பு அல்ல. எந்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்றனரோ, அவர்கள் வழி தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவர்களது கடமையே. https://newuthayan.com/article/என்று_தணியும்_வெளிநாட்டு_மோகம்
-
இன்னுமொரு வாய்ப்பந்தல்
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது. பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொடங்கும் போது நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டதுடன், ஆட்சியாளர்கள் கடன்களை வாங்கி வாங்கியே குவித்து இந்த நாட்டு மக்களையும் அதற்குப் பழக்கப்படுத்தி விட்டனர் என்றெல்லாம் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதார மீட்சிக்காக சில திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி ஊடாக அந்தியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடுகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டி உற்பத்தி என்று சில விடயங்களைப் பட்டியலிட்டிருந்தார். இவையெல்லாவற்றையும் முன்னெடுப்பதற்கு இருக்கும் தடங்கல்களை மேலோட்டமாகவே கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார். அதை ஆழ அகலமாக அலசி ஆராய்வதற்கு அவர் விரும்பவில்லை. அதை வேண்டுமென்றே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்திருந்தார். இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில், அப்படியொன்று இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பில் அரச தலைவர் ரணில் மூச்சே விடவில்லை. அதற்குத் தீர்வை எட்டாமல் இந்த நாடு பொருளாதாரத்தில் மீட்சியடைவது என்பது சாத்தியமேயில்லாத விடயம். அரச தலைவர் ரணில் தனது கொள்கை விளக்கவுரையில், மாகாணங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் மேலும் சில அதிகாரங்கள் வழங்குவதன் பொருளாதார ரீதியில் உறுதிப்பாடுடையவை அவற்றை மாற்ற முடியும் என்று கூறுகிறார். ஆனால் இப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வுக்கான யோசனை எதையும் முன்வைக்கவில்லை. கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான காணப்படும் என்று கூறி எதுவுமே நடக்காததால் இம்முறை அது தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் விட்டிருக்க கூடும் ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணாமல் பொருளாதார மேம்பாடு என்பதை எட்டவே முடியாது என்பதை மிக நீண்ட பழுத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க உணர்ந்திருந்தும், அதை வெளிக்காட்டாமல் வெறுமனே பூசி மெழுகுவது பொருந்தப்பாடானதாக இல்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற உளரீதியான விருப்பு இருக்குமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை - தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த அரசாங்கம், அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு இந்த நாடு பாதுகாப்பில்லை 'என்பதை உணருவதையும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம், அதற்கான காரணங்களைத் தீர்ப்பதற்கு மாத்திரம் தயங்குகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் வழங்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கின்றமை தெளிவாகவே தெரிகின்றது. அரச தலைவர் ரணிலும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதைத் தான் அவரது உரை பறைசாற்றியிருக்கின்றது. https://newuthayan.com/article/இன்னுமொரு_வாய்ப்பந்தல்
-
அத்தியாவசிய சேவையாக சுகாதாரசேவை அறிவிப்பு
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரச தலைவரின் உத்தரவின் பேரில் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள், நோயாளர் விடுதிகள். மருந்தகங்கள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாகத் தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்துச் சேவைப்பணிகளும் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டன. இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர அவை தீர்மானித்துள்ளன. இந்த நிலையிலேயே சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட ஒருதுறையின் ஊழியர்கள் எழுந்தமாறாக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தமுடியாது. ஆதலால். போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் பார்க்கப்படுகின்றது. https://newuthayan.com/article/அத்தியாவசிய_சேவையாக_சுகாதாரசேவை_அறிவிப்பு
-
பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை
நான் போற போக்கிலே எதாவது சொல்வன் அதை வேற நீங்கள் அர்த்தம் பார்த்தால் .... கஜேந்திரகுமார் மனச்சாட்சி .
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
உண்மையான நிலவரம் இதுதான் . முதலில் மக்களின் பொருளாதாரம் நிலைத்தால் தான் அங்கு மக்கள் நீடிப்பார்கள் . இப்ப பாருங்கோ கனடா என்று எத்தனை பேர் அதுவும் அரசாங்க தொழில் உள்ளவர்கள் கூட செல்கின்றார்கள் . கடைசியில் இந்த கோமாளிகள் கதைக்கின்ற தேசியத்தில் சிங்களவனும் முஸ்லிமும் தான் மிஞ்ச போறார்கள் . அப்போது தேசியம் என்ற தேவையே இருக்காது . முதலில் மக்களின் நிலையை உயர்த்தக்கூடிய அதிகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைக்க வேண்டும் .
-
சிறந்த இசை அல்பத்திற்கான கிராமி விருதைப் பெற்ற இந்திய இசைக்குழு ‘சக்தி’
2024 ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான கிராமி விருதை இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினர் வென்றிருக்கிறார்கள். இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் இசைக்கலைஞர்களுக்கு ஓஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதிலுமுள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதைப் பெறுவது தான் கனவாக இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸில் பிராம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ‘ஒஸ்கர் நாயகன்’ ஏ ஆ ரஹ்மான் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். இதன் போது 2024 ஆம் ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான விருது, ‘திஸ் மொமண்ட்’ (This Moment) எனும் அல்பத்தை உருவாக்கிய சக்தி குழுவினருக்கு வழங்கப்பட்டது- இந்த இசைக்குழுவில் பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், உஸ்தாத் ஜாஹீர் உசேன் மற்றும் கடம் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான செல்வகணேஷ் விநாயக்ராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிராமி விருதை வென்ற இவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, அதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இவர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இந்திய இசைக்கலைஞர்கள் கிராமி விருதை வென்றிருப்பதால் இசையுலக ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். https://www.virakesari.lk/article/175822
-
இசைஞானியின் ‘நீனைவெல்லாம் நீயடா ’ படத்தில் 70 : 30
நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்திருக்கிறார். இவ்விழாவில் இயக்குநர் ஆதிராஜன் பேசுகையில்,“ எம்முடைய நண்பரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன். எழுபது சதம் உண்மை.. முப்பத சதம் கற்பனை.. கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் பாடசாலைப் பருவத்தினைக் கடந்து தான் வந்திருப்பார்கள். அதன் போது ஏற்பட்டிருக்கும் முதல் காதல் எம்முடைய உயிர் மண்ணுக்குள் செல்லும் வரை மறக்க இயலாது. அத்தகைய முதல் காதலை வைத்து தான் இப்படம் உருவாகியிருக்கிறது. இசைஞானியின் இசையுடன் இணைந்து பார்க்கும் போது மறக்க இயலாத அனுபவமாக இருக்கும்.” என்றார். https://www.virakesari.lk/article/175826
-
ரணில் மூளைச்சலவை செய்ததால் தான் அனுரகுமர இந்தியா சென்றுள்ளார் - அமைச்சர் நிமால்
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார் அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய தலைவர்களை சந்திக்க சென்றுள்ளார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆதிக்கம் குறித்து உரையாற்றிய தேசியமக்கள் சக்தியின் தலைவர்கள் இதன் காரணமாகவே இந்தியா சென்றுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர் இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் இது ரணில் விக்கிரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம் எனவும் அர் தெரிவித்துள்ளார். அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175894
-
1,200 போதைமாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது
விற்பனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படும் 1,200 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் , நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணும் 45 வயதுடைய ஆணுமாவர். சந்தேக நபர்கள் மன்னார் , சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் கடற்படை அதிகாரிகளால் சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/175891
-
யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!
புலிகள் காலத்தில் வன்னியில் நெல் செய்கையை ஊக்குவித்தார்கள் அது போல மக்கள் இப்ப தெளிவாக உள்ளார்கள் . சிங்களவனை நம்பி தமிழன் கோவணமும் கட்ட முடியாது என்பது நன்றாக தெரியும்
-
இந்து சமுத்திர மாநாட்டில் "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது. இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது. "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார். இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் வரைபடம் ஒன்றும் தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார். 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன. 2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது. https://www.virakesari.lk/article/175864
-
'எக்கோ' நிபுணர்கள் இன்மையால் பாதிப்பு
கிளிநொச்சி மருத்துவமனையில் 'எக்கோ' நிபு ணர் இல்லாமையால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவசர நிலைமைகளில் நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மருத்துவமனைக்கு 'எக்கோ' பரிசோதனைக்காகக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. மன்னார் மாவட்ட மருத்துவமனையிலிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்ட 'எக்கோ' நிபுணர், மருத்துவமனைக்கு வருகை தராமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/article/'எக்கோ'_நிபுணர்கள்_இன்மையால்_பாதிப்பு
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
அவர் என்னத்த செய்ய, எதோ ரணில் தான் இவருக்கு முகம் கொடுத்து கதைக்கிறார் . அது தான் ஐயா இப்படி கருசனையுடன் சொல்கிறார் . யார் வந்தாலும் எங்களுக்கு நாமம் தான் .
-
வனவள பணிமனை பிடியிலுள்ள காணியை விடுவிக்க கோறி மன்னார் இசைமாலைத்தாழ்வு மக்கள் போராட்டம்.
வனவளப்பணிமனை பிடியிலுள்ள காணியை விடுவித்துத் தாருங்கள் மன்னார் இசைமாலைத்தாழ்வு மக்கள் போராட்டம் 'நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வனவளப்பணிமனையின் கட்டுப் பாட்டிலுள்ள 46 ஏக்கர் காணியை விடுவித்து காணி அற்றோருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மன்னார் இசைமாலைத் தாழ்வு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நானாட்டானில் கடந்த புதன் கிழமை இந்தப் போராட்டம் இடம்பெற்றது. "இசைமாலைத்தாழ்வு கிராமத்துக்குட்பட்ட 113 குடும்பங்கள் குடியிருப்பதற்கு காணியின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றன. ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றோம். எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கவனத்திற்கொண்டு வனவளப்பணிமனையின் பிடியிலுள்ள காணியை, எம்மைப் போன்ற காணியற்றோருக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.(ப) https://newuthayan.com/article/வனவளத்திணைக்கள_பிடியிலுள்ள_காணியை_விடுவிக்க_கோறி_மன்னார்_இசைமாலைத்தாழ்வு_மக்கள்_போராட்டம்.
-
4 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருள்கள் அழிப்பு
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருள்கள் அழிப்பு -(ஆதவன்) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட சான்றுப் பொருள்கள் வவுனியா மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுபரப்பட்ட அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7 ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களும், கிருமிநாசினிகளும் இவ்வாறு அழிக்கப்பட்டன. இவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை உடைமையில் வைத்திருந்த நபர்களுக்கு நீதிமன்றம் ஒன்றரை இலட்சம் ரூபா தண்டம் விதித்திருந்தது. இந்தச் சான்றுப்பொருள்கள் நேற்று வவுனியா, பம்பைமடுவில் வவுனியா மேலதிக நீதிவான் ஜெ.சுபாஜினி மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைச் செயலாளர் விமலவேணி நிசங்க, சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. (ஏ) https://newuthayan.com/article/4_கோடி_ரூபா_பெறுமதியான_உணவுப்பொருள்கள்_அழிப்பு அழிப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாமே
-
ரணிலுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் மக்கள் - சுமந்திரன்
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாணாமல் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து செல்வாறானால் இன்னும் அதல பாதாளத்துக்குள் இந்த நாடு விழுவதை யாராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) நடைபெறுகிறது. இதில் உரையாற்றும்போது சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது: அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க எவ்வளவு தான் பேசினாலும், நாட்டின் பொருளாதாரம் சரிப்பட்டு வரப்போவதில்லை. எவ்வளவுதான் தான் செய்து முடித்துவிட்டேன் என்று மக்களுக்குச் சொன்னாலும் உண்மை மக்களுக்குத் தெரியும். அரச தலைவர் தேர்தல் வரும்போது மக்கள் விழிப்பாக இருந்து சரியான முறையிலே தங்களது பதிலை அளிக்க வேண்டும். வெறுமனே இது பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்று சொல்லிக்கொண்டு நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒரு முடிவெடுக்காமல் அவர் தொடர்ந்து செல்வாறானால் இன்னும் அதல பாதாளத்துக்குள் இந்த நாடு விழுவதை யாராலும் தடுக்க முடியாது. - என்றார். (க) https://newuthayan.com/article/''உண்மை_மக்களுக்குத்_தெரியும்'' இவர் கூறுகின்ற கருத்து உண்மையாகினும் இவரின் நம்பகத்தன்மை எவ்வாறு .
-
அமைச்சரவையில் கெஹலிய அவுட்
ஐயா ரணில் வந்து தொங்கிக்கொண்டு இருக்கிறார் , ஆனாலும் மனிசன் பிரித்தாளும் செயலை செவ்வனே செய்து வருகினறார் , மொட்டும் இப்ப மலர மாட்டாமல் முழிக்கின்றது . நாமல் இப்ப கோத்தாவை குற்றம் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது மொட்டுவின் செல்வாக்கு.
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
கடைசில இலங்கை கஞ்சா நிலமையில் வந்து நிட்கின்றது, புத்தரின் மூளைசாலிகளால் .
-
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மருத்துவமனைகளுக்கு மின்சாரத்தை வழங்க ஜப்பானிடமிருந்து 2.8 பில்லியன் ரூபா நிதியுதவி
அப்படியே யாழ் ஆஸ்பத்திரிக்கும் செய்தால் என்ன, இந்த கொளுத்துற வெயிலை பயன்படுத்த வேண்டும்
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
இந்திய வழக்கம் தான் பூண்டு, எங்களது ஊரில் உள்ளி என்று தான் சொல்கின்றோம் .
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள்
நல்ல முன்னேற்றம் , சேய்யுடன் சேர்த்து தாயையும் கர்பமாக்காமல் விட்டுட்டார் கண்டியளோ . நலமெடுக்க வேண்டும் .
-
தகவல் அறியும் உரிமை எதிர் இலங்கையில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு
பெப்ரவரி 3 ஆம் திகதி, இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) 7வது ஆண்டை நினைவுகூரும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) “நெருக்கடியை சமநிலைப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமை எதிர் இலங்கையில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு” என்ற நிகழ்வு கடந்த 23 ஜனவரி 2024 அன்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சிவில் மற்றும் RTI ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் தனது ஆரம்பக் கருத்துக்களில், தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தையும் சட்டத்தை நிலையாக செயல்படுத்துவதில் உள்ள சவால்களையும் வலியுறுத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொது அதிகாரசபைக்குள் அதிக தலைமைத்துவம் மற்றும் செயலில் ஊக்குவிப்பதற்கான அவசியத்தை அவர் எடுத்துரைத்ததுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனமான வெகுஜன ஊடக அமைச்சின் அரச அதிகாரத்தினுள் அதிக தலைமைத்துவமும் செயலூக்கமான ஊக்குவிப்பும் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். சட்டத்தரணி திருமதி அஷ்வினி நடேசன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமை பற்றிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார், அங்கு அவர் ஆய்வின் அளவுருக்கள், அதன் முக்கியத்துவம் மற்றும் பகுப்பாய்வு பற்றி விளக்கமளித்தார். தகவல் அறியும் உரிமைக்கான அரசியலமைப்பு விதிகளை அவர் வலியுறுத்தியதுடன், தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்துதல் பாதுகாப்பின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இது எந்தவொரு பொது நடவடிக்கை அல்லது தேவைக்கும் தொடர்பில்லாத தனிப்பட்ட தகவல்களில் குறிப்பாக இரட்டிப்பாகும். பொது நலன்களை மீறாத நிலையில் தனியுரிமை மீதான தேவையற்ற ஆக்கிரமிப்புக்கான வெளிப்பாடு மற்றும் நியாயப்படுத்தல் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTIC) விலக்கு விதியை விளக்கப்பட்ட பல்வேறு வழிகளை முன்வைத்த வழக்குகளை திருமதி அஷ்வினி இதன்போது சுட்டிக்காட்டினார். 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் (PDPA) மற்றும் அதன் கீழ் உள்ள பாதுகாப்புகளைப் பற்றி விவாதிக்கும் போது, சட்டத்தின் கீழ் "தனிப்பட்ட தரவு" என்பதன் வரையறையை எடுத்துக்காட்டி, அதன் விளைவு உட்பிரிவுகளின் உதாரணங்களைப் பற்றி விவாதித்தார். குறிப்பாக தரவு சேமிப்பகத்தின் கால எல்லை மற்றும் தகவல்களை அழிக்கும் உரிமை எப்படி RTI சட்டத்திற்கு முரணானது என்பது குறித்து மோதலின் சாத்தியமான இரண்டு பகுதிகளை அவர் விளக்கினார். தனியுரிமை மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவற்றுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை கையாள்வதில் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகளின் சட்ட வரம்புகளை அவர் தெளிவுபடுத்தினார். RTI மற்றும் PDPA ஆகியவற்றை ஒன்றாக அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை திருமதி அஷ்வினி வலியுறுத்தியிருந்தார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI குழுவின் திருமதி ஆர்த்தி இரவிவர்மன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து வலையமைப்பு அமர்வுடன் நிகழ்வு நிறைவுற்றது. https://www.virakesari.lk/article/175664
-
பயிற்சியை நிறைவு செய்த 1,300 வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படுவர்!
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் தற்போது பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர் என்றும் வருவதாக சுகாதார அமைச்சு செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால கூறியுள்ளார். இதேவேளை, கடந்த வாரம் பயிற்சியை முடித்த 590 பேர், பற்றாக்குறை காணப்படும் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175694