Everything posted by தமிழன்பன்
-
பிச்சை புகினும் வெசாக்கை விடேல்!
குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர் என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. எந்த விடயத்துக்கு இது பொருந்துகின்றதோ இல்லையோ, இலங்கையின் அண்மைக்கால அரசியலுக்கும் அதன் நகர்வுக்கும் இந்த முதுமொழி கச்சிதப் பொருத்தம். விடயம் என்னவென்றால், எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் நிதியுதவியைக் கோரியிருக்கின்றது இலங்கை. ஒரு பண்டிகையை யாசகமெடுத்தேனும் கொண்டாடி விடுவது என்ற நிலைப்பாட்டில் இருப்பதற்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அதேநேரம், வரவிருக்கும் வெசாக் கொண்டாட்டங்களின் பின்னால் உள்ள ஆபத்தான செய்திகளையும் இலங்கையர்கள் ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமுமாகும். இந்த வருடம் தேர்தல் காலமாகையால், அரசாங்கம் வறிய நிலையில் இல்லை என்ற எண்ணப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் தரப்புக்கு இருக்கவே செய்கின்றது. ஆதலால், வரவிருக்கும் வெசாக் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடவே அரசாங்கம் முனையும். அதற்காக பல மில்லியன் ரூபாவை வாரியிறைக்க வேண்டி ஏற்படும். இவ்வாறானதொரு பின்னணியில் தான் இந்த நிதியுதவியை அரசாங்கம் கோரியிருக்கலாம். அதைவிட, மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தற்போது இலகுவாக மக்களை ஒன்றிணைக்கும் விடயங்களாக மாறிவிட்டன. இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவின் பின்னர் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு அங்கு பல மடங்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தியுள்ள 'ராம தேசம்' என்ற மாயையை வைத்தே. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதாக்கட்சி எதிர்கொள்ளவுள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று பாரதிய ஜனதாவை நோக்கி தற்போது முன்வைக்கும் மிகப்பெரும் குற்றச்சாட்டும் இதுதான். இவ்வாறானவொரு பார்வையில் தான் வரவிருக்கும் வெசாக் பண்டி பல கையை அரசாங்கம் எதிர்கொள்ளப் போகின்றதா? என்ற நியாயமான சந்தேகங்களும் எழவே செய்கின்றன. வெசாக் பண்டிகையைப் பெருமெடுப்பில் முன்னெடுத்து, அதன் மூலம் 'இலங்கை ஒரு பௌத்த தேசம்' என்ற எண்ணப்பாட்டை வலிந்து உருவாக்கி அதை வாக்குகளாக மாற்ற ஆளும் பெரமுனவும், அதன் நிழலாக இருக்கும் அரச தலைவர் ரணிலும் முனையலாம். ஆதலால், வெசாக் பண்டிகை தொடர்பான தீர்க்கமான கருத்துகளை - நிலைப்பாட்டை - பின்னணியை எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று வெளிப்படையாக இயம்பவேண்டும். மாறாக, சிங்கள பௌத்த வாக்குகளைகருத்திற்கொண்டு வழக்கம்போன்று கள்ள மௌனம் காக்கப்படுமாயின், அது இந்தப் பித்தலாட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் உடந்தை என்ற எண்ணப்பாட்டையே சர்வதேசத்தை நோக்கி வலிதாகத் தோற்றுவிக்கும். இது பல இடங்களில் இலங்கையை நின்று கொல்லும். பொருளாதாரப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்டுச் சீர்ப்படுத்தத் தேவையான உட்கட்டுமானங்கள் இன்னமும் அமைக்கப்படவில்லை, தன்னிறைவு காணக் கூடிய துறைகளில்கூட முதலிடுவதற்கு நிதிப் பற்றாக் குறையை அரசாங்கம் நீண்டகாலமாகவே எதிர் நோக்கியுள்ளது.கடன்கள் இல்லாத இலங்கை உருவாக்கப்பட வேண்டுமாயின் புதிய தொழில்துறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது, வர்த்தகச் சுழற்சி இன்னமும் சீர்ப்படுத்தப் படவில்லை. இவ்வாறாக எதற்கெடுத்தாலும் 'இல்லை', 'பற்றாக்குறை' என்ற நிலையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வெசாக் கொண்டாட வேண்டும் அதற்கு நிதிதேவை என்று ஐ.நா.விடம் கேட்பதற்குக்கூட ஓர் அசாத்தியத் துணிவு வேண்டும். 'பிச்சை புகினும் வெசாக்கை விடேல்' என்ற நிலைப்பாடு இருக்கும் வரை இந்த நாடு உருப்படப் போவதில்லை. https://newuthayan.com/article/பிச்சை_புகினும்_வெசாக்கை_விடேல்!
-
புலிகளும் கூட்டமைப்பினருமே இலங்கையை நாசமாக்கினர்
கூறுகிறார் மஹிந்த அமரவீர! புலிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நாட்டை நாசமாக்கியது. அதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டை ஆளாவிட்டாலும் நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சியாகும். தற்போது ஜனநாயகப் போர்வையைப் போர்த்துக் கொண்டு வந்திருந்தாலும் படுகொலைகளுடன் தொடர்புடைய ஒரு கட்சியாகும். புலிகளுடன் இணைந்து நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தினார்கள். இது இரகசியம் அல்ல. ரில்லியன் கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி இழுக்கப்பட்டது. அதை மறந்துவிடக் கூடாது. ஜே.வி.பி.யும் அவ்வாறு தான். இப்போது நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைகின்றனர். அதைப் போன்று நாட்டை மீட்கவும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஏ) https://newuthayan.com/article/புலிகளும்_கூட்டமைப்பினருமே_இலங்கையை_நாசமாக்கினர். இந்த சங்கியை என்ன செய்வது , நாசமாக்கிய பிக்கு மார்களை விடுத்து .
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
தரவுகளுக்கு நன்றி நண்பரே , எங்கள் ஊரில் இதனை கோவா என்று அழைப்பார்கள் , அதனால் இந்தியா என நினைத்துவிட்டேன்
-
கொலைச் சம்பவங்களில் படையினருக்கும் தொடர்பு
கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானம்! (ஆதவன்) பாதாள உலகக்குழுக்களால் மேற் கொள்ளப்படும் கொலைகளுடன் சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, படை முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வெளியில் எடுத்துச் செல்வது தொடர்பாகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாளர்களை நியமிக்கும் போது, அவர்கள் தொடர்பாகக் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களின் நடத்தைகள் தொடர்பில் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும், சைபர் கண்காணிப்பு முறை ஊடாகப் படையினரின் சந்தேகத்துக்குரிய செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த கொலைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படும் படையினர், பொருளாதார சிரமங்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணமாகவே பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புபட்டுச் செயற்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. (ஏ) https://newuthayan.com/article/கொலைச்_சம்பவங்களில்_படையினருக்கும்_தொடர்பு
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
ஏன் என்ற விவாதத்தை விட , முட்டைகோஸை தந்தவர்கள் இந்தியர்கள். அதில் என்ன விமர்சனம் ?
-
அமைச்சரவையில் கெஹலிய அவுட்
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தற்போது சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பணிமனை கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தது. கடந்த மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெலவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரைத் தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெலவை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. (ஏ) https://newuthayan.com/article/அமைச்சரவையில்_கெஹலிய_அவுட்
-
யாழில் இலங்கையின் தேசியக் கொடிகளுடன் சுதந்திர தின பேரணி!
வாங்கின காசுக்கு கூவ தானே வேணும் . இந்த நொண்டிகளின் செயல் வெறும் வினோத்திற்கு உட்பட்டது
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
எல்லா மக்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லவேண்டும் . நாட்டு மாட்டு பாலுக்கு பதில் ஜெஸி மாடுகளை புகுத்தியவர்கள் தான் வெள்ளைக்காரர். எங்களது நாட்டு வைத்தியம் முற்றுலும் உண்மை. தமிழரிடம் இல்லாத அறவினை புதுமை என்ற பெயரில் நம்பவேண்டாம்.
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில் கழிவுகள் தேங்கத் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அது வராமல் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், அந்த வகையில் என்று சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பார்ப்போம். பூண்டு தினமும் ஒரு பள்ளு பூண்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாப்பதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் ,சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும். கொத்தமல்லி இலை கொத்தமல்லியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி கிட்னி ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம். திராட்சை திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும். இஞ்சி இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது , நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும். முட்டைகோஸ் இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள பைட்டிக் ஆசிட் மற்றும் போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே மற்றும் விட்டமின் பி6 ,நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும். மீன்கள் மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும். சாலமன் மத்தி கானாங்கெளுத்தி சூரை மீன் போன்றவை மிக ஆரோக்கியமானது இதை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம் வெங்காயம் சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம் மேலும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது மேலும் அதிக ஆக்சிலேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம் ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம். [எ] https://newuthayan.com/article/உங்க_கிட்னியை_புதுசா_வைத்திருக்க_இந்த_பதிவை_படிங்க..!
-
அப்பா என்பவர் ஓர் அதிசயமான புத்தகம்!
அப்பா ஒரு அதிசயமான புத்தகம் தான். ஏனென்றால், இந்த புத்தகம் நமது கையில் இருக்கும் போது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்துகொள்ள நினைக்கும் போது, அந்த புத்தகம் நம் கையில் இருப்பதில்லை. இது தான் உண்மையும் கூட. நம்முடையும் வாழ்க்கையும் ஒரு புத்தகம் தான். இந்த வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் கடவுளால் எழுதப்படுகிறது. ஆனால், நடுவில் உள்ள அனைத்து பக்களையும் நாம் தான் நிரப்ப வேண்டும். இந்த பக்கங்கள் சந்தோசத்தாலும், உயர்வினாலும், கண்ணீரின்றி, கவலையின்றி நிரப்பப்பட வேண்டும் என்றால், அதற்கு நமக்காக கஷ்டப்பட்டு, கண்ணீர் சிந்தி, நம்மை சரியான வழியில் நடத்த வேண்டும். தந்தையின் அன்போடு இணைந்து வாழ்பவர்களை விட, தந்தையின் அன்பை இழந்து அல்லது பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு தான் தெரியும், தந்தையின் அன்பு எவ்வளவு பொக்கிஷம் போன்றது என்று. எத்தனையோ அறிவுகளுக்கு பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தம் இப்பரஞ்சத்தில் எங்கு தேடினாலும் கண்டெடுக்க இயலாது. அந்த வகையில் நாம் எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் தான். பிறந்த போது நம்மை தோள்களிலும், வளர்ந்த போதும் நம்மை நெஞ்சிலும் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தந்தையர்களும் நமக்கு தெய்வங்கள் தான். [எ] https://newuthayan.com/article/அப்பா_என்பவர்_ஓர்_அதிசயமான_புத்தகம்!
-
அரச எதிர்ப்பு நிலையை ஒடுக்கச் சட்ட ஏற்பாடுகள்
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு! (ஆதவன்) ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கையுடன் உடன் படமறுக்கும் மக்களின் நடவடிக்கைகளை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இதன்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளின் பாதகத்தன்மைகள் தொடர்பில் சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சாலிய பீரிஸ், "புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலணக்கம் பரந்துபட்டதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத் தின் நிலைப்பாடுகள் கொள்கைகளுடன் உடன்பட மறுப்பவர்கள் கைது செய்யப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கீழ் தடுத்து வைக்கப்படும் நிலை ஏற்படலாம்" என்று சுட்டிக்காட்டினார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கீழ், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவசியமான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்றும் சாலிய பீரிஸ் தன் சமர்ப்பணத்தை முன்வைத்தார். https://newuthayan.com/article/அரச_எதிர்ப்பு_நிலையை_ஒடுக்கச்_சட்ட_ஏற்பாடுக
-
காவல்துறையால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்;
யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை(05) தாக்கிய நிலையில் அடி தாங்கமுடியாது காவல் நிலையத்தினை விட்டு ஓடி வந்த மாணவன் உயிரை காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது; வட்டுக்கோட்டை கோட்டை காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞன் தனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ். பல்கலைக்கழககத்திற்கு தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். வழிமறித்த காவல்துறையினர் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன் இந்நிலையில் திடீரென அங்குவந்த மேலதிக சிவில் உடைதரித்த காவல்துறையினர் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர் .இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அறை ஒன்றினுள் ஆறு காவல்துறையினர் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள் இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர். இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்து செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார் . இந்நிலையில் அடிக்கு பயந்து இருந்த என்னை மீண்டும் தாக்குவதாக கூறிய நிலையில் பயத்தில் ஓடி வந்து விட்டேன். தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன். இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன். எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை காவல்துறையினரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார். இதேவேளை மாணவனின் ஆணுறுப்பு, கால் உட்பட பல இடங்களில் அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கபடவுள்ளார். (ச) https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_மாணவன்_மீது_காவல்துறையின்_மிலேச்சத்தனமான_தாக்குதல்;
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
முதலில் இவர்கள் செயலால் தமிழினத்திக்கு நடந்த நீண்டதூர விளைவை பார்க்கவேண்டும் .மற்ற ஆயுத இயக்கங்கள் மக்களை கொன்றார்கள். அது மிகப்பெரிய கொடுமையான செயல்தான். ஆனால் இவர்களை எல்லாம் தலைவர் மன்னித்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தவர் . உண்மையில் அது மிகப்பெரிய நீண்ட தூர ஆக்கபூர்வமான செயல். ஆனால் எல்லாம் புரிந்தும் உருவாக்கப்படட கூட்டமைப்பை உடைத்து துண்டு துண்டாகிய சாம் மற்றும் சுமா மட்டும் என்ன , இது சாதரணமான விடயமா ? எவ்வளவு பெரிய கேவலமான விடயம் . எங்கள் ஆயுத போராட்ட்த்தை இந்தியா அழித்தமாதிரி . இவர்கள் ரணிலுடன் சேர்ந்து அழித்த கயவர்கள் . அதனால் தான் இரண்டு பேரையும் ஒரே தராசில் போட்டு பார்க்கலாம்.
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
அவர்களுக்கு நான் வெள்ளை அடிக்கவில்லை. இரண்டு தரப்பும் செய்ததன் விளைவு கடைசியில் போராடடம் அழிக்கப்பட்டு தேசியமும் கதி கலங்கிவிட்டது . விளைவை மட்டும் .
-
மக்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டங்களும் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை - தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!
பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கலாம் என யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது.. பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அதற்கான் பதிலாக கொண்டு வரப்படுகிற பயங்கரவாத எதிரப்பு சட்டமோ இலங்கைக்கு தேவையில்லை. ஏனேனில் கடந்த காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கடந்த 78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்டதே பயங்கரவாத தடைச் சட்டம். அது சில காலம் மட்டும் தான் எனக் கூறி தற்காலிகமாக கொண்டு வந்திருந்தாலும் 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. ஆகவே பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. இந்தச் சட்டத்தால் தான் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இப்போது அது தேவையற்ற சட்டம் தான். எனினும் பயங்கரவாதம் நாட்டில் இருப்பதாக சொல்லி புதிய புதிய சட்டங்களை அரசிற்கு ஆதரவாக கொண்டு வருகின்றனர். ஏனெனில் அரசாங்கத்தை எதிர்க்கிற போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அடக்கி ஒடுக்குவதற்கு அல்லது தண்டனை வழங்குவதற்காக இந்தச் சட்டங்களை கொண்டு வருகின்றனர். ஆகவே எம்மைப் பொறுத்த வரையில் பல சாதாரண சட்டங்கள் இருக்கின்ற போது அதனைப் பயன்படுத்துவதை விடுத்து இத்தகைய கொடிய சட்டங்கள் தேவையற்றது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எமது மக்களை பயப்படுத்தி கஸ்ரப்படுத்தி தமது எதிரிகளை வேறு விதமாக கையாளும் வகையில் இத்தகய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் அந்தச் சட்டங்கள் என்பது சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என்று தான் கூறுகிறோம். அதே நேரத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதும் பின்னர் விடுவது அல்லது தாமதிப்பது என மாறி மாறி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிலும் அரச தரப்பில் ஐனாதிபதி ஒரு கட்சியாகவும் ஏனையவர்கள் மற்றொரு கட்சியாகவும் இருக்கின்றனர். இதனாலேயே இந்த இழுபறி ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதனைக் கொண்டு தேவையற்றது தான். மேலும் இரு தரப்பு பிரச்சனைகளாலும் தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கும். ஆகையினால் அதிகாரத்துடன் பதவில் இருப்பதற்காகவும் இந்த சட்டத்தை இழுத்து இழுத்து பயன்படுத்தலாமென்றார். https://newuthayan.com/article/மக்களைப்_பாதிக்கும்_எந்தவொரு_சட்டங்களும்_சட்டப்_புத்தகத்திலே_இருக்கத்_தேவையில்லை_-_தமிழ்_மக்கள்_கூட்டணியின்_தலைவரும்_நாடாளுமன்ற_உறுப்பினருமான_சீ.வீ._விக்கினேஸ்வரன்_தெரிவிப்பு!
-
சட்டத்தின் பெயரால் சர்வாதிகாரம்
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சபாநாயகர் கையெழுத்திட்டதிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதன் சரத்துகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தச் சட்டவரைவு தொடர்பில் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை இப்போதிருக்கும் சூழலில் இப்படியொரு சட்டவரைவு தேவையா என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துர்நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாக ஆளும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். 'குட்டைப்பாவாடைகளுடன் பெண்கள் நடமாட முடியாத சூழல் இருக்கின்றது. அப்படி அவர்கள் நடமாடுவதை படமெடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்கின்றனர். பெண்கள் குளிப்பதைக்கூட படமெடுத்து சமூகவலைத்தளங்களில் தரவேற்றுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த இந்தச்சட்டம் அவசியம்' என்று நாடாளுமன்றத்தில் இந்தச்சட்டவரைவு மீதான விவாதத்தின் போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந் தானந்த அளுத்கமகே கூட உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிடுவதைப்போன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க எமது நாட்டில் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் ஏற்கனவே உள்ளன. அவற்றை தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்றவாறு சர்வதேச தரத்துக்கு மாற்றியமைத்தாலே போதுமானது. இவ்வாறான சிறப்பான சட்டம் ஒன்று அதற்குத் தேவையில்லை. நடைமுறையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் களைவதற்குப் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் இருக்கத்தக்கதாகவே, இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சிறப்புச் சட்டத்தின் விளைவை 3 தசாப்தங்களாக இந்த நாட்டின் மூவின மக்களும் அனுபவித்திருக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு வழங்கிய கட்டுப்பாடற்ற அதிகாரம், அந்தச் சட்டத்தை வைத்து அவர்கள் ஆள்வோரின் நலனுக்காக எவ்வாறெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை அறிய முடியும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் அவ்வாறானதொன்றே. ஆட்சியாளர்களின் தேவைக்கே அது பயன்படுத்தப்படப் போகின்றது. ஆட்சியாளர்களுக்கு விரும்பத்தகாத சகல பதிவுகளும் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கப்படப் போகின்றன. அவ்வாறான பதிவர்கள் குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் - முற்போக்குவாதிகள் ஊடகர்கள் கைதாகப் போகின்றனர். இந்தச் சட்டத்தின் ஊடாக அரச தலைவரால் 5 பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்படும். அந்த ஆணைக்குழுவே, ஒவ்வொற்று சமூகவலைத்தளப் பதிவுகள் தொடர்பிலும் தீர்மானிக்கும் உரித்தைக்கொண்டிருக்கப்போகின்றது. அரச தலைவரால் நியமிக்கப்படும் ஓர் ஆணைக்குழு எப்படி இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற பெயரில் இயங்கிய ஆணைக்குழுக்கள் ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது பரகசியமானது. இப்படியான நிலையில் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணையாளர்கள் சமூகஊடகங்களின் பதிவுகளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணைக்குழு, சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை சவாலுக்கு உட் படுத்தமுடியாது. அதாவது மேன்முறையீடு செய்யமுடி யாது. நீதிமன்றப் பொறிமுறையை நாடமுடியாது. இது மிகமோசமானதொரு நடைமுறையே. இப்படியான சட்டத்தையே நாடாளுமன்றத்தில் தலைகீழாக நின்று ஆளும் தரப்பு நிறைவேற்றியிருக்கின்றது. மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து வீதிக்கு இறங்காத வரையில் ஆட்சியாளர்கள் இதை விட மோசமாக இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். https://newuthayan.com/article/சட்டத்தின்_பெயரால்_சர்வாதிகாரம்
-
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்
உண்மையாக கடைசியில் வரவேண்டியது
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
சம்பந்தன் சுமா செய்த நாச வேலைகளை விட இது பரவாயில்லை . ஒரு வித்தியாசம் ஒன்று ஆயுத கொலை , மற்றது யனநாயக கொலை . விளைவு ஒன்றுதான். இன்று தேசியம் பெரும் குழப்பத்தில் உள்ளது .
-
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்
சுமாவுக்கு பிடிக்காத ஒன்று தமிழ் தேசியம் கண்டியாலோ , 2010 இல் வந்ததே அதை அழிக்க தானே
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
இவ்வளவு காலமும் சுமா செய்தது போதாதா ? இனியென்ன செய்ய இருக்கு . சம்பவத்தை சிறப்பாக சம்பந்தனின் ஆசியுடன் செய்து விட்டார். மொத்தமாக அந்த கட்சி என்ன மற்ற கட்சி தில்லு முல்லுகளை துரத்தி அடிக்கணும் .
-
பெலியத்த கொலை தொடர்பில் ரதன தேரர் மௌனம்!
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதாக அக்கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். அத்துரலியே ரதன தேரருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு நீதவான் எதிர்வரும் ஜூன் 4 ம் திகதியன்று அழைப்பாணை விடுத்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சமன் பெரேரா இறந்தார் என்ற உண்மை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதன்படி சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்ப நீதவான் தீர்மானித்தார். சந்தேகநபரான சமன் பெரேராவுக்கு எதிரான இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர். https://newuthayan.com/article/பெலியத்த_கொலை_தொடர்பில்_ரதன_தேரர்_மௌனம்!
-
சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் மைந்தன்.!
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் காமன்வெல்த் சதுரங்க சம்பியன்ஷிப், ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள உலக கேடட் சம்பியன்ஷிப், தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மேற்கு ஆசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். மிக சிறுவயதில் சதுரங்க போட்டி மேடைகளை கலங்கடித்து வரும் அவர் அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப் 2023/24 - இறுதிப் (U08 திறந்த) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் மோதி, சிறந்த முதல் பத்து வீரர்களுக்குள் தெரிவாகி, தேசிய தெரிவின் இறுதிக்கட்ட போட்டியான இலங்கை தேசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் 2024 - சூப்பர் லீக் நிகழ்வுகளுக்கும் தகுதி பெற்றார். இப்போட்டியானது கொழும்பு புதிய விளையாட்டு அமைச்சக பெவிலியன் ரொரிங்டனில் நடைபெற்றது. இது முதல் பத்து வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக மோதும் (ரவுண்ட் ராபின்) சவால் நிறைந்த போட்டியாக இருந்த போதும், இதில் 8/9 புள்ளிகளைப்பெற்று 08 வயது திறந்த பிரிவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் அதி உன்னத வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டார். அது மட்டுமன்றி இலங்கையில் 08 வயதுப்பிரிவில் அதிகூடிய சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை (நிலையான மதிப்பீடு 1116) வைத்திருக்கும் பெருமையையும் நயனகேஷன் தனதாக்கியுள்ளார். இவர் கடந்த ஆண்டில் பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் தேசிய போட்டியில் 07 வயது திறந்த பிரிவில் சாம்பியன் வென்றதன் ஊடாக கிறீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அத்துடன் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற ஆசிய பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்குபற்றி 6 ஆம் இடத்தினை பெற்றுக் கொண்டார். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்று வரும் இந்த 8 வயது இளம் சதுரங்க வீரர் வேணுகானன் நயனகேஷன் தனது 4 வயதிலிருந்து சதுரங்கத்தை விரும்பி கற்றுக் கொள்ள ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து விதமான சதுரங்கப் போட்டிகளிலும் இவரது வயதுப் பிரிவில் 90 வீதமான சாம்பியன் பட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சதுரங்க_மேடைகளை_தன்வசமாக்கும்_யாழின்_மைந்தன்.!
-
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
சாதாரண வீடு மாதிரி 3 மாடி வீட்டினை கட்டியுள்ளார்கள் . சும்மா அத்திவாரம்(Piling இல்லை ) போட்டுள்ளார்கள் . அதே நேரம் தூண்களுக்கு(Column ) இரும்பு கம்பி(Reinforcement ) பாவிக்கவில்லை .
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
அதெல்லாம் ஒரு ஒரு கட்சியா , பெயரில் புலி இருந்தால் சரியா ?
-
அதிக போதைப்பொருள் நுகர்வால் இளைஞன் பலி!
சிறையில் இருந்து வெளிவந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு தென்மராட்சி - சாவகச்சேரி - மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட அன்று நீர்வேலியிலுள்ள உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரருக்கு உறவினர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரை யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதிகளவில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்தமையே மரணத்துக்கு காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவரின் மரணம் குறித்த உடற்கூற்று பரிசோதனைகளை சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் மேற்கொண்டிருந்தார்.(ஐ) https://newuthayan.com/article/அதிக_போதைப்பொருள்_நுகர்வால்_இளைஞன்_பலி!