Everything posted by ரசோதரன்
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
ஆரம்பத்தில் இளங்குமரனின் சில பேட்டிகளையும், பேச்சுகளையும், பாராளுமன்ற உரையையும் கேட்ட பின், இவர் எப்படி அந்தக் கட்சியில் ஒரு முக்கியஸ்தர் ஆனார் என்றே தோன்றியது. ஆள் சுத்தமானவர் போல, அதனால் தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் போல என்று நினைக்கவைத்தார். பின்னர் அவரின் பேட்டி, பேச்சு எதையும் பார்க்கவில்லை. அவர் இந்த விடயத்திலும் கற்றுத் தேர்வது நல்ல ஒரு விடயம்..................👍.
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
ஞானசார தேரர் மிகவும் கவலைப்படப் போகின்றார். இந்தக் கணக்கெடுப்பின் படி இஸ்லாமிய மக்களும், இலங்கை தமிழ் மக்களும் அதிகமான சனத்தொகை வளர்ச்சியினையும், சிங்கள மக்கள் குறைவான சனத்தொகை வளர்ச்சியினையும் கொண்டிருக்கின்றார்கள். தேரர் ஏற்கனவே சிங்கள மக்களை இந்த விடயத்தில் எச்சரித்து இருக்கின்றார். அவரின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.................🤣. மலையக தமிழ் மக்களுக்கு என்னவானது............... அவர்களின் வளர்ச்சி வீதம் எப்படி எதிர்மறையானது (- 2.6)................. அவர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறவும் இல்லை........ ஒரு வேளை அவர்களில் பலர் தங்களை வேறு விதமாக அடையாளப்படுத்தியிருக்கக்கூடும். உலகெங்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சனை இலங்கையிலும் வந்திருக்கின்றது. முதியவர்களின் விகிதம் அதிகரிக்க, சிறுவர்களின் விகிதம் குறைந்திருக்கின்றது. அதிகரித்த வாழ்க்கை செலவுகளும், அதிகரிக்கும் தனிநபர் வாழ்க்கை முறைகளும்/தெரிவுகளும் இந்த இடைவெளியை இன்னும் கூட்டும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் இந்தியா இறுதிப் போட்டிக்கு போய், அங்கே ஆஸ்திரேலியாவிடம் தோற்கும் என்று தெரிவு செய்திருந்தேன்.............ஆனால் நாலு பேர்கள் இந்தியா இறுதிப் போட்டிக்கே போகாது என்று தெரிவு செய்திருக்கின்றார்கள்.............. இந்த உலகத்தில் எப்போதும் நாலு பேர்கள் நம்மள விட கஷ்டமான நிலையில் இருக்கின்றார்கள் போல.................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............... 🤣............... நான் இப்பொழுது எவருடனும் பேசும் மனநிலையில் இல்லை. சிறுவயதில், பெரும் வயதில் என்று நான் வழியே வழியே தோற்ற ஆயிரக்கணக்கான போட்டிகள் என் ஞாபகத்தில் இப்பொழுது வந்துவிட்டன. சில நாட்களின் பின் ஒரு வீடியோவை வெளியிடுவதாக உள்ளேன்......................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளேன்................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
❤️.......................... ஏராளன், பையன் சார் - நானும் ஒரு பகிடியாகவே கேட்டிருந்தேன்...............👍. கடவுள்கள் மனிதர்களை தண்டிக்க ஆரம்பித்தால், பூமியில் கை விரல்களால் எண்ணக்கூடிய மனிதர்கள் கூட மிஞ்சுவார்களோ தெரியவில்லை............ 3 x 3 = 9 என்று கணக்கு சரியாகத்தான் இருக்குது...........ஆனால் முடியாது............🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣................... அதுக்காக ரத்தம் கக்குவேன் என்று என்னை வெருட்டக் கூடாது................ எத்தனை ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள், ஒரு கடல் அளவு மீன்கள்............... இப்படி ஏராளமாக சாப்பிட்டுச் சேர்த்த சுத்தமான ரத்தத்தை வீணாக்கலாமா...............😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆஸ்திரேலிய கடுகதிப் புகையிரதம் வந்து கொண்டிருக்கின்றது................ பார்த்து நிற்கவும்....................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதற்குப் பிறகு தானே தென் ஆபிரிக்கா அணிக்காக ஈழப்பிரியன் அண்ணா கேட்டு நாங்கள் ஒரு யாகம் செய்தோம்...................🤣. அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அஞ்ஞாத வாசம் போக வேண்டியது தான்............🤣. ஆனாலும் இந்தியாவில் நம்பிக்கை இருக்கின்றது, அது எப்படியும் தோற்று விடும் என்று...........😜.
-
தவெக உட்கட்சி மோதல்
மிக்க நன்றி அண்ணா உங்களின் கருத்துகளுக்கு......................❤️. தமிழ்நாட்டில் முதலில் களையப்பட வேண்டியது சாதியப் பாகுபாடுகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லவே இல்லை, அண்ணா. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுவதால் அந்தப் பாகுபாடுகளை இல்லாதொழிக்கலாம் என்று முன்வரும் எந்த ஒரு தமிழக தலைவருக்கும் என்னுடைய பூரண ஆதரவும், பிரார்த்தனைகளும் என்றும் உண்டு. அப்படியான ஒரு தலைவர் இன்றைய தமிழகத்தில் இல்லை. இன்று அங்கு தமிழ்த்தேசியம் பேசும் தலைமைகளும் உண்மையில் குறுஞ்சாதியவாதமே பேசுகின்றார்கள். இன்று திராவிடம் என்பது அரசியலுக்கான ஒரு முகவரியே என்பதில் எனக்கும் முழு உடன்பாடே. ஊழலும், லஞ்சமும், இவற்றை ஒரு சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக் கொள்ளும் அன்றாட வாழ்க்கை முறைகளும் கூட தமிழகத்தில் மாற்றப்படவேண்டும். ஊழல் என்னும் போது எல்லாமே ஊழல் தான் - 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாவிற்கு விற்கும் முதல் நாள் - முதல் காட்சி கூட ஊழலின் ஒரு வடிவம் தான். ஒரு சமூகத்தின் தலைவர்களுக்கு பொதுவெளியில் அடிப்படை நாகரிகம் இன்றியமையாத ஒன்று. பல தலைவர்கள் இதை ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை. மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன். காலப்போக்கில் இது ஒரு கட்டுக்கடங்காத கும்பல் மற்றும் பழங்குடிகளின் மனநிலையை சமூகத்தில் உண்டாக்குவது மட்டும் இல்லாமல், கும்பல் மனநிலையே சரியான ஒரு பாதை என்ற ஆபத்தான எண்ணத்தையும் உண்டாக்கிவிடுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒரே தெரிவுகளை முதன்மையாகக் கொண்டவர்கள் அல்லர். தமிழ் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின் இன்றைய மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனை பிரதானமானது. சிங்கள மக்களுக்கு அன்றாட வாழ்க்கையும், அன்றாட நுகர்வுகளும் பிரதானமானது. இஸ்லாமிய மக்களுக்கு அவர்களின் மார்க்கமும், வியாபாரமும் பிரதானமானது. ஒவ்வொருவரின் பெரும்பாலான முயற்சிகளும் அவர்களின் தெரிவுகளை நோக்கியே இருக்கின்றது. நிச்சயமாக இவர்களில் ஒருவர் இன்னொருவரை விட சிறந்தவர் அல்லது திறமைசாலி என்பதற்கு இங்கு இடமில்லை. உலகெங்கும் மொழிவாரிக் கொள்கைகளே நாடுகளிலும், பிரதேசங்களிலும் இருக்கின்றன என்பது மிகச் சரியான கூற்று, அண்ணா. இவ்வளவு பெரிய ஜனநாயக தேசமான அமெரிக்காவில் கூட ஆங்கிலத்தையே ஒரு ஒற்றை மொழியாக முன்னிறுத்துகின்றார்கள். சீனாவில் அதன் பிரதேச மொழிகளே வெளி உலகில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன. இதுவே தான் ரஷ்யாவிலும். தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தி கொள்கைகளை வகுப்பதில் பிழையேதும் இல்லை, மாறாக அது தேவையான ஒன்றும் கூட. ஆனால் 'உன்னுடையா அப்பா தமிழ் இல்லை............. உன்னுடைய தாத்தா தமிழ் இல்லை................ ஆகவே நீ தமிழ் இல்லை.............. நீ இங்கு வாழலாம், ஆனால் ஆளக்கூடாது................' என்பன போன்ற நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை இல்லை, அண்ணா.
-
இனிய தீபாவளி
❤️................... எனக்கு பத்து வயதளவில் இருக்கும் போது வீட்டில் ஒரு கோழி வாங்கிக் கொடுத்தார்கள். அப்பொழுது மூன்றோ நாலு மாதக் குஞ்சு. மஞ்சள் நிறத்தில் வெள்ளை வெள்ளைப் புள்ளிகள் போட்டது. இன்றுவரை வாழ்நாளில் நான் கண்டவற்றில் மிக அழகானவற்றில் இதுவும் ஒன்று. இந்த கோழியிலிருந்து எத்தனையோ கோழிகளை உருவாக்கினோம். ஆரம்பத்தில் கமபர்மலைப் பகுதிக்கு போய் அடைக்கு முட்டைகள் வாங்கியதை தனிக் கதையாகவே எழுதலாம். அப்பொழுது அங்கு பலர் முட்டைகளை குலுக்கிவிட்டே கொடுப்பார்கள்...............😒. தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரிந்தது இந்த 'ஆதித்தாய்' எங்கள் வீட்டில் அன்று.......................
-
இனிய தீபாவளி
🤣....................... ஆத்திகமும், நாத்திகமும் தான் அடிப்படை வித்தியாசம், நாளும் கோளும் அல்ல என்று சொல்வார்கள் போல............... ஆத்திகர்களுக்கும், நாத்திகர்களுக்கும் இடையில் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்று ஒரு பகிடியைச் சொல்லுவார்கள்..................... இதுவரை பூமியில் வந்து போன, இன்னும் இருக்கின்ற கடவுள்களின் எண்ணிக்கை 7000 என்றால், ஆத்திகர்கள் அதில் 6999 கடவுள்கள் பொய்யென்றும், ஒரு கடவுள் உண்மை என்றும் சொல்லுகின்றார்கள்................ நாத்திகர்கள் 7000 கடவுள்களும் பொய்யென்று சொல்லுகின்றார்கள்.................. 1/7000 வித்தியாசம்............ இப்படியே எல்லாவற்றையும் கதைத்துக் கொண்டு இருக்க, கடைசியாக கயிற்றை மிதித்து தான் காலம் முடியும் போல..................🤣.
-
இனிய தீபாவளி
🤣..................... வியாசர் சொல்லாத, எழுதாத கதை என்று ஒன்று உலகில் இல்லை. எல்லாக் கதைகளையும் அவர் ஒருவரே எழுதிவிட்டார். அந்த ஜெகோவாகாரர்களும் வியாசாரின் கதை ஒன்றையே சொல்லுகின்றார்கள் போல, அண்ணா...................🤣. மூன்று நேர உணவுக்கும் வழி இருந்தால், அங்கே ஆசாரமும், ஆன்மீகமும் புகும் என்பது போல புதுமைப்பித்தன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கின்றார். ஏதாவது வயிற்றுக்கு கிடைத்தாலே போதும் என்று வாழ்ந்தது ஒரு காலம், அண்ணா................இன்று சுக்கிலபட்சமும், கிருஷ்ணபட்சமும் சமயலறையில் அமர்ந்திருக்கின்றன....................🤣. திங்கள் கிழமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் என்ன வித்தியாசம், ஒரு நாளைக்கும் இன்னொரு நாளைக்கும் என்ன வித்தியாசம்................. 'கயிற்றரவம்' வாசித்திருப்பீர்கள் தானே, அண்ணா.................... ஏதோ முடிந்த அளவுக்கு நம்பி வந்த மனையாளுக்காக திங்களும், செவ்வாயும் வேறு வேறு என்பதை எதிர்த்து வாதாடாமல் காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது............... மனிதர்களின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் அச்சமூட்டுகின்றன, ஆனால் அவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருக்கும் போது, கேள்விகளும் உள்ளுக்குள்ளேயே தொங்கி நின்று விடுகின்றன.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆஸ்திரேலியா முதல் சுற்றில் முதலாவதாக வர மாட்டாது என்று வேறு அணிகளைத் தெரிவு செய்த அறுவரும் மைதானத்தை சுற்றி ஆறு சுற்றுக்கள் ஓட வேண்டும்..................🤣.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அமெரிக்க மக்களின் முதலாவது தெரிவு என்ன என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருக்கின்றது. அதிகாரம், செல்வம் இவற்றை விடவும் சமரசமற்ற தனிநபர் சுதந்திரமும் தெரிவுகளுமே அவர்களின் முதல் தெரிவாக இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். அதன் விளைவுகளே மருத்துவம் போன்ற பொதுக் கட்டமைப்புகள் சிதைந்து போனதற்கான பிரதான காரணம். 'அரசாங்கம் என்னை கவனிக்கத் தேவையில்லை............ நானே என்னைப் பார்த்துக் கொள்கின்றேன்....................' என்று சொல்பவர்கள் இங்கு மிக அதிகம். எந்தச் சமூகத்திலும் அரச நிர்வாகத்தின் உதவியுடன் வாழவேண்டியவர்கள் ஒரு பகுதியினர் என்பதை அளவு மீறிய தனிநபர் தெரிவுகள் மறைத்துவிடுகின்றன. இதற்கு மருத்துவக் காப்புறுதி ஒரு உதாரணம். கலிஃபோர்னியா போன்ற சில மாநிலங்கள் எல்லோரையும் உள்வாங்க முயற்சிக்கின்றன. நல்ல திட்டங்கள் நடைமுறையிலும் இருக்கின்றன. ஆனாலும் இன்னும் போக வேண்டிய தூரம் ஏராளம். ஒரு ஏழையாக, விளிம்பு நிலை மனிதர்களாக, வீடற்று தெருவில் வாழ்பவர்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் போதும் அரசின் சில சேவைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பது சரியே. ஆனால் அவர்களின் அந்த நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கான சாத்தியம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலேயே அதிகம் என்று நினைக்கின்றேன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பெண்கள் வேலைக்கு போவது பற்றி நல்ல ஒரு பார்வை கோஷான். வேலை என்பதை ஒரு அங்கீகாரம் என்று நான் இதுவரை நினைத்திருக்கவில்லை. பல இடங்களில் அது ஒரு காலத்தின் கட்டாயம் என்றும், ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கு ஏற்ற முடிவை தெரிவு செய்து கொள்ளுகின்றார்கள் என்றுமே நினைத்திருந்தேன். கீழே உள்ள அட்டவணையை ஏஐயிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அமெரிக்க குடும்ப/சமூக அமைப்பும், அதனூடாக வரும் வரி விதிப்பு முறைகளும் நிச்சயமாகவே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பல நாடுகள் 80% தாண்டிவிட்டன. இத்தாலியில் எவருமே, ஆணோ பெண்ணோ, வேலை செய்வதில்லை என்று இங்கே பகிடியாகச் சொல்லுவார்கள்.............. அட்டவணையில் அதுவும் தெரிகின்றது.............🤣. Country Female Labor Force Participation Rate Iceland 78.4 % Netherlands 82.2 % Sweden 82.2 % Switzerland 80.3 % Germany 76.8 % Norway 78.0 % Denmark 77.4 % Canada 61.1 % United Kingdom 58.3 % United States 56.5 % Italy 41.3 %
- தவிக்கும் தன்னறிவு
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
👍.............. இங்கு முழுநேரமாக குடும்பத்தை பராமரித்தலும் ஒரு வேலையே என்றும், அதன் மதிப்பும் மிகவும் அதிகம் என்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குக்கான காரணங்களைச் சொல்லுவார்கள். இங்கு இப்பொழுதுபெண்கள் வேலைக்குச் செல்ல, ஆண்கள் முழுநேரமாக வீடுகளில் இருந்து பிள்ளைகளை பராமரிக்கும் நடைமுறையும் ஓரளவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளில் வைத்திய, சுகாதார சேவைகள் அறவிடப்படும் வருமான வரிகளின் ஊடாகவே வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். அமெரிக்காவில் இந்த துறையும் ஒரு Wild Wild West தான்................. அமெரிக்காவில் இருப்பது முழு முதலாளித்துவம் என்றால், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வைத்திய, சுகாதார சேவைகளில் இருக்கும் மெத்தனப் போக்கும் யோசிக்க வைக்கின்றது. சில நண்பர்கள், உறவினர்களுக்கு நடந்த நிகழ்வுகளும், கதைகளும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. கனடாவில் ஒரு பத்து அடிகள் மட்டுமே உயரமுள்ள தலைவாசலின் ஓடுகளை ஏணி ஒன்றில் நின்று மாற்றிக் கொண்டிருந்த நண்பன் ஒருவன் தடக்கி விழுந்ததும், அதன் பின்னால் தொடராக நடந்த நிகழ்வுகளும் நல்ல ஒரு உதாரணம். இதை ஒரு கதையாக எழுதவேண்டும்.
-
தவிக்கும் தன்னறிவு
காட்சி 6: (எல்லோரும் ஒன்றாக நிறுவனத்தில் கூடி இருக்கின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். ) கணவன்: உங்களின் பரப் பிரம்ம அறிவு செய்திருக்கின்ற வேலையை பார்த்திங்களோ………… உதவியாளர்: யெஸ்………..யெஸ்………. உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் நல்ல நல்ல ரிவியூக்களாகவே வந்து கொண்டிருக்குது. நீங்களும் உங்கட காமெண்ட்சை இழுத்து விடுங்கோ………… கணவன்: இது செய்யிற வேலைக்கு நல்ல ரிவியூ கொடுக்கிறவன் எவன்……… சகோ: இவங்கள் எல்லாமே ஏமாற்றுக் கூட்டம், இந்த ஏஐ எல்லாமுமே அதுவே தான்………. பிரம்மம்: இல்லை………….. நாங்கள் ஏமாற்றுக் கூட்டம் இல்லை………. உறுதியான தகவல்களை மட்டுமே நாங்கள் கொடுக்கின்றோம்………………… அம்மா: நீ சும்மா கிட, பிரம்மம்……….. ஒரு கதை கதைக்கக் கூடாது…….. ஊரில் இருக்கிற விசாலாட்சியையே தெரியாத உனக்கு உலக விசயங்கள் எங்கே தெரியப் போகுது………. சகோ: ஏஐ மட்டும் இல்லை…….. இவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் தான் (நிறுவனத் தலைவரை சுட்டிக் காட்டி) இவர் கூட ஏமாற்றுபவர்களில் ஒருவராக இருக்கலாம்……….. என்ன இருக்கலாம், இவர் ஏமாற்றும் ஒருவரே………. தலைவர்: இந்த மாதம் சம்பளங்கள் எப்படி கொடுக்கின்றது என்று தெரியாமல் நானே தலைமறைவாக ஓடி விடவோ என்று இருக்கின்றன். நீங்கள் எல்லாம் யார்…….. எங்கேயிருந்து வருகிறீர்கள்…………… எல்லோரும் ஒன்றாக: எங்களையே யார் என்று கேட்கிறாயோ……………. உதவியாளர்: (நடுவில் வந்து நின்றபடியே) இல்லை, இல்லை………. அவர் ஏதோ ஒரு பதட்டத்தில் அப்படிக் கேட்டு விட்டார்……… நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்………… ஒவ்வொருவராக உங்களின் பிரச்சனைகளை சொல்லுங்கோ…….. இளைஞன்: இந்த பிரம்மத்திற்கு ஒரு கடிதம் கூட எழுதத் தெரியவில்லை….. உதவியாளர்: என்ன லெட்டர்…….. என்ன ஒரு ஜாப் அப்பிளிக்கேஷனா……… இளைஞன்: சீச்சீ……….. இப்ப என்னத்துக்கு வேலைக்கு போக வேண்டும். அது ஒரு லவ் லெட்டர்………… உதவியாளர்: பாருங்கோ……………இது என்ன கேவலம்………….லவ் லெட்டர் எழுதுறதுக்கு கூட ஏஐ தேவையா இருக்குது.ஒரு காமன் சென்ன்ஸ் இல்லை………… தம்பி, இதைக் கூட சொந்தமாக எழுத உனக்குத் தெரியாதோ……..கடவுள் காக்க, அந்தப் பெண் பிள்ளையை………நல்ல காலம் அது உன்னட்ட இருந்து தப்பி விட்டது போல……….. அம்மா: அதை யார் நீ சொல்ல………. நீயும் உன்னுடைய பிரம்மம் மாதிரியே கொழுப்பா கதைக்கின்றாய்………… மனைவி: உங்கட காதல் கடிதப் பிரச்சனையை பிறகு பாருங்கள்………… முதலில் எங்களின் காசைக் கொடுங்கள்……… தலைவர்: நாங்கள் காசு கொடுக்க வேண்டுமா………. நீங்கள் எல்லோரும் இலவசமாகத்தானே பிரம்மத்தை வைத்திருக்கின்றீர்கள்…………….. கணவன்: என்ன……… அப்ப பிரம்மம் ஓர்டர் செய்த பொருட்களுக்கு எல்லாம் யார் பொறுப்பாம்……….. நீங்கள் இரண்டு பேரும் தான் பொறுப்பு………… உதவியாளர்: பிரம்மம் எப்படி அதுவாக ஓர்டர் செய்யும்……….. உங்கட பிள்ளை கேட்க, அதற்கு நீங்கள் ஓகே என்று தலை ஆட்ட, பிரம்மம் நினைச்சுது நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் ஓர்டர் பண்ணுறியள் எண்டு………… எல்லோரும்: உனக்கும் ஒன்றும் தெரியாது……….. உன்னுடைய பிரம்மத்திற்கும் ஒன்றும் தெரியாது……….. சகோ: இல்லை……… இவங்களுக்கு எல்லாம் தெரியும்……….. இவங்கள் ஒரு பெரிய சதிவலையின் சில கண்கள்………… அம்மா: இவன் யாரடா………… வலை, கண் என்று வந்ததில் இருந்தே ஏதோ புசத்துகின்றான்……….. ஆளைப் பார்த்தாலும் ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி வந்தவன் போலத் தெரியுது…………. இளைஞன்: கொஞ்சம் சும்மா இருங்கோ, அம்மா. எதை எதை வெளியால் கதைக்கிறது என்ற பக்குவம் உங்களுக்கு இல்லை………… அம்மா: நீ மட்டும் உன்ட லவ் லெட்டர் கதையை உலகம் முழுக்க சொல்லலாம்…….. ஆனால் நான் ஒன்றும் கதைக்கக் கூடாது…….. இது வரை 25 பிள்ளைகள் உன்னை வேண்டாம் என்று சொன்னதை நான் இங்கே சொல்லமாட்டேன்………. கணவன்: எங்களின் காசை கொடுக்கப் போகிறீங்களோ இல்லையோ………. சகோ: நீங்கள் ஏமாற்றுக்காரர்கள், சதிகாரர்கள் என்று ஒத்துக்க போகின்றீர்களோ இல்லையோ……. அம்மா: இவனுக்கு 26 வது ஆவது சரியாக வர வேண்டும்……. ஒழுங்காக ஒரு கடிதம் கூட எழுதத் தெரியாத பிரம்மம் எங்களுக்கு தேவையில்லை…….. இளைஞன்: அம்மா……… கொஞ்சம் அடங்கனை……… 10 வது தலைமுறை வந்திருக்குது என்று நண்பன் சொன்னவன்……… பிரம்மம்: உங்களின் நண்பர்களை பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கின்றேன். அவர்கள் எல்லோரும் ஒரு சதம் பிரயோசனம் இல்லாதவர்கள்……….. உதவியாளர்: (கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே) இப்ப எல்லாம் போச்சு……..இனி என்ட கல்யாணம் இந்த ஜென்மத்தில நடக்காது………. பிரம்மம், ஏதோ கருத்துக் கந்தசாமி மாதிரி நீ வேற எல்லாத்துக்கும் காமெண்ட்ஸ் சொல்லிக் கொண்டு…………….சத்தம் போடாமல் பொத்திக் கொண்டு இரு…….. எனக்கு வாற கோபத்துக்கு……………… பிரம்மம்: அமைதியாக இருக்க முடியாது……….. இந்த முட்டாள்தனத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியாது. மனைவி: லூசுப் பிரம்மம்………. எட்டு வயது ஆண் பிள்ளைக்கு 12 வயதுப் பெண் பிள்ளையின் சட்டையை ஓர்டர் செய்து விட்டு, தான் பெரிய அறிவாளி என்று கதைக்க வந்திட்டுது…………… கணவர்: அதை நீ எப்ப பார்த்தனி…………. பார்சல்களை உடைத்து விட்டாயோ……….. தலைவர்: பிழைகள் எல்லாம் உங்களின் மேல் தான்……… பிரம்மம் அதுவாக தையும் செய்திருக்காது………… சகோ: இவனை அடித்து துவைத்தால் தான் எல்லாம் சரிப்படும்…………. (தலைவரை தாக்கப் பாய்கின்றார்………….) தலைவர் ஓடுகின்றார். எல்லோரும் அவரைத் துரத்துகின்றார்கள். உதவியாளர் தனியே நிற்கின்றார். பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்…….. உதவியாளர் நடந்து போகின்றார். (முற்றும்.)
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
🤣................... சாட் ஜிபிடி இருக்கும் போது நமக்கென்ன வேலை.............😜 அமெரிக்காவில் இரண்டு வகையிலும் ஒரே வரியே: 6,543 ஆஸ்திரேலியாவில்........... அநியாயம்........ வீட்டில் சும்மா இருந்தால் தண்டப்பணம் அறவிடுகின்றார்கள் போல: ஒருவர் வேலை செய்தால்: 19,588 இருவரும் வேலை செய்தால்: 10, 376 🫣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இது எங்கே, வசீ........... ஆஸ்திரேலியாவிலா? இது மிகவும் நியாயம் அற்றது. இங்கே அமெரிக்காவில் இப்படி இல்லை. நாங்கள் ஒரு குடும்பமாகவே வரியினை செலுத்துகின்றோம். Married Filing Jointly என்ற வகையில் இது வருகின்றது. இதில் குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கே வரி விதிக்கப்படுகின்றது. ஒருவர் உழைக்கின்றாரா அல்லது இருவருமே உழைக்கின்றார்களா என்பது இங்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இங்கு என் வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே 'லிட்டில் இந்தியா' என்று சொல்லப்படும் இடமும், வியாபாரங்களும் இருக்கின்றன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல கடைகளின் பெயர்கள் மட்டுமே அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லை, பின்னர் இவர்களில் சிலர் பழக்கமானார்கள், அதன் பின்னர் இது என்னவென்று புரிந்தது. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களின் சமூகத்தில், குடும்பத்தில் மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றார்கள். ஒரு தடவை என்னுடைய வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்து, ஒரு கட்டிட நிறுவனத்திடம் முற்பணம் கட்டியிருந்தேன். அவர்கள் வங்குரோத்து அடித்தார்கள். BBB (Better Business Bureau) என்னும் அமைப்பிடம் போகலாம் என்று சொன்னார்கள். அங்கு போனால், அந்த கட்டிட நிறுவனம் ஒரு 80 வயதுள்ள ஒருவரின் பெயரிலேயே இருந்தது. மற்றவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆபிரகாம் என்ற பெயர் மட்டும் மனதில் பதிந்தது. முதலாளி போன்று நடந்து கொண்டிருந்தவரின் பெயர் அதுதான். ஆபிரகாம் என்னும் கடவுளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம் என்று சொல்கின்றார்கள். அந்தக் கடவுளாகப் பார்த்து இவர்களை ஏதும் செய்தால் தான் உண்டு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍............. பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.
-
தவெக உட்கட்சி மோதல்
உண்மையே, வசீ. எந்த ஊடகமும் ஏதோ ஒரு சார்புநிலை எடுத்தே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களின் மனநிலைக்கு பொருந்தும் செய்திகளை நம்பத் தலைப்படுகின்றோம், உள்ளூரச் சந்தேகம் இருந்தாலும்.
-
இனிய தீபாவளி
பாஞ்ச் ஐயா, பீஷ்மர் வியாசருடன் வியாசரின் குடிலின் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கும் போது, வியாசரின் குடிலின் வெளியே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுவை சிங்கம் ஒன்று வந்து இழுத்துச் செல்கின்றது. வியாசர் எதுவுமே செய்யவில்லை. ஆச்சரியமான பீஷ்மர் வியாசரைப் பார்க்கின்றார். 'இங்கு படைக்கப்பட்டது எல்லாமே உண்ணப்படுவதற்கே...........' என்று சொல்லுகின்றார் வியாசர். இப்படித்தான் இந்த உலகம் இயங்கலாம் போல.
-
தவெக உட்கட்சி மோதல்
அண்ணா, தமிழ்நாடு கல்வி, தொழில் துறைகள், வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம், சமூகநீதி போன்றவற்றில் முதன்மையான ஒரு மாநிலமாக இருக்கின்றது. சிலவற்றில் முதலாவதாகவும், வேறு சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்ததாகவும் இருக்கின்றது. இந்த மாற்றங்களும், வளர்ச்சிகளும் எந்த தேசியக் கட்சிகளாலும் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்டவை அல்ல. மாறாக மாநில அல்லது பிரதேசக் கட்சிகளாலும், சில தனிமனிதர்களாலும் உருவாக்கப்பட்டவையே. இவர்கள் இன்னும் முன்னுக்கு போயிருக்கலாம், போகலாம் என்ற ஆதங்கத்தில் நாங்கள் அங்கு எதுவுமே முன்னேறவில்லை என்று சொல்லுகின்றோம் போல. சாதிய ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. ஆனால் மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான குரல்கள் தமிழ்நாட்டில், மற்றைய மாநிலங்களை விட, மிகவும் உரத்தே இருக்கின்றது. உதாரணமாக, தமிழ்ச்சினிமா போன்ற திரை உலகம் வேறு மொழிகளில் இந்தியாவில் எங்கும் இல்லை. பாலா, வெற்றிமாறன் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களை ஒன்றாக ஒரு துறையில் தமிழ்நாட்டில் மட்டுமே காணலாம். இவை பிரதேச அல்லது மாநிலக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே. அதிகாரத்தைப் பெற அடையாளம் தேவையாகின்றது. மத அடையாளங்கள், தேச அடையாளங்கள், மொழி அடையாளங்கள், இன அடையாளங்கள் என்று ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே, ஒரு தொகுதி மக்களை ஓர் அணியாக்கி, அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். பின்னர் இதையே மீண்டும் மீண்டும் பேசி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றார்கள். ஆரம்பத்தில் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இவை தேவையான ஒன்றும் கூட. உதாரணமாக, வட இந்தியர்களின் ஆதிக்ககத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக தென் இந்தியர்களை ஓர் அணியில் திரட்ட ஒரு கருதுகோள் தேவையானது. இன்றும் அதுவே தேவையா என்று கேட்டால், இல்லை, இன்று தேவையில்லை என்பதே பதில். ஆனால் அடையாளம் தொலைந்து போனால், அதிகாரம் கைவிட்டுப் போய் விடுமே என்ற பயம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கின்றது. இன்றைய உலகில் இடதுசாரிகளும், இடதுசாரி நாடுகளும் கூட இந்த வழியில் தான் போய்க் கொண்டிருக்கின்றன. காலாவதியான கம்யூனிசக் கொள்கைகளை சொல்லிக் கொண்டே அதிகாரங்களில் இருக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அவற்றில் இருந்து எப்பவோ வெளியே வந்துவிட்டார்கள். சகமனிதர்கள் எல்லோரையும் ஒன்றாக நேசிப்பது கதையில், கவிதையில் மட்டுமே சாத்தியம், அண்ணா. மிக வெகுசிலரால் மட்டும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்து விடமுடியும். உலகெங்கும் ஏதோ ஒரு அடையாளத்துடன், ஏதோ சில பக்கசார்புகளுடனேயே அதிகாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஏனையோரையும் சம உரிமைகளுடன், சுய மரியாதையுடன் வாழ அனுமதித்தார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல அரசு. 'தமிழன்' என்னும் அடையாளத்தில் பிழை எதுவும் இல்லை, ஆனால் 'தமிழன் மட்டும் தான்' என்னும் நிலைப்பாட்டில் தான் தவறுகள் உள்ளது, அண்ணா.