Everything posted by ரசோதரன்
-
தன்னறம்
🤣................. மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.
-
தன்னறம்
👍.............. இப்படியான இரண்டு இக்கட்டான நிலைகளை சமீபத்தில் பார்த்த பின்னரே இப்படி ஒன்றை எழுத வேண்டும் என்று நினைத்தேன், அண்ணா............. சரி பிழைகளையும் தாண்டி மனம் அலைமோதிக் கொண்டேயிருக்கின்றது...........................
-
தன்னறம்
தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
- ElderlyWomen.jpg
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣........... அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣. எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.............. இந்த களத்தடுப்பு விபரங்களை வாசிக்கும் போது, நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடாதது மட்டும் இல்லாமல், கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா என்று கிரிக்கெட்டை ஏளனப்படுத்தியதிற்கு இப்பொழுது கிரிக்கெட் என்னைப் பழிதீர்ப்பது போல இருக்கின்றது..................🤣.
-
கைகூ வடிவில்!
மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி, கோபி. கைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன................❤️.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.............. இயன் ஹீலியை தெரியும்........... அந்த நாளைய அலன் போர்டர் குரூப் தானே............ பெறாமகள் 16 அடிகள் பாய்கின்றாரே................... எங்களின் அப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள் வேலி தான் பாய்ந்தார்கள்........... நாங்களும் அவர்களை விட அதிகமாகவே பாய்ந்தோம்..................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கிரிக்கெட் என்று மட்டும் இல்லாமல், நீங்கள் சிலர் பல உள் வீட்டு விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே....................😜. ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து விலக்கி விடலாம்...............🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒரு 20 ஓவர்கள் என்றாலும் விளையாடினால், நியூசிலாந்து ஒரு அதிரடி காட்டுவார்கள் என்று பார்த்தால் திரும்பவும் மழை தூறுது.................. இடிமழையால் தப்பியது இலங்கை........................🤣. இன்றைக்கு இங்கே லாஸ் ஏஞ்சல்ஸிலும் மழை பெய்கின்றது. நல்ல மழை........... வருசத்தில் ஐந்தோ ஆறோ நாட்கள் தான் இங்கே மழை இப்படிப் பெய்யும்..........
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாபிரிக்கா பற்றி மட்டும் என்றில்லாமல், எல்லா மகளிர் அணிகளையும் சேர்த்தே சொல்ல வந்தேன், அண்ணா.............. எல்லா மகளிர்களுமே பின்னுக்கு வருவதை முன்னுக்கே யோசித்து வைக்கும் 'பின் புத்தி' உள்ளவர்கள் தானே...................🤣. தென் ஆபிரிக்கா அணி நல்லாவே விளையாடுகின்றார்கள்.............. போகிற போக்கில் நாலில் ஒன்றாக வந்து விடுவார்கள் போலத் தெரியுதே................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடிக்கடி நடப்பது போலவே நாலு, ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின் வந்தவர்கள் நின்று விளையாடுகின்றார்கள். நல்ல 'பின் புத்தி' உள்ளவர்கள்...............🤣 பின்னுக்கு வரப் போகும் நிலைமைகளையும் முன்னேயே கணித்து திட்டமிடுபவர்கள் என்ற குற்றமற்ற பொருளில் அந்த நாட்களில் இந்த முதுமொழியைச் சொல்லியிருப்பார்கள் போல.................👍.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............... வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த மகளிர் கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வரிசை தலைகீழாக இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் இருக்கின்றதா............. முதலில் வருபவர்கள் தத்தித் தத்தி அவுட் ஆகின்றார்கள்............ பின்னால் வருபவர்கள் நிதானமாக நின்று அடித்து விளையாடுகின்றார்கள்.......... வங்கதேசம் 69 க்குள் அவுட் ஆகவில்லயே என்ற ஒரு ஆதங்கம் தான் இப்படிக் கண்டபடி யோசிக்க வைக்குது..................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣................. நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.............. தோனி ரியலி கிரேட் தான்.............. கடைசி வருடம் விளையாடாமல் விட்டிருக்கலாம்......... பல ஜாம்பவான்களும் இப்படித் தான்......... கடைசியில் இழு இழு என்று இழுத்துவிடுவார்கள்............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣.............. இந்த தோணி, கப்பல் என்று சொல்லிச் சொல்லியே போன ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் புயலில் மாட்டுப்பட்டது போல சின்னாபின்னமாகியது.................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............. டென்மார்க்கில் இருந்து எறியப்பட்ட கற்கள் இலக்கு தவறி இந்திய வீராங்கனைகளின் தலைகளில் விழுந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.................. இந்தியாவை நம்பியோர் கைவிடப்படுவார்..................🤣.
-
கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?
விஜய் 41 குடும்பங்களையும் பனையூருக்கு வரச் சொல்லவில்லையே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.....................🫣. 'ரசிகர்களா, நடிகர்களா.............. தமிழ்நாட்டில் இதில் எவருக்கு அதிக உளவியல் ஆலோசனைகள் தேவை..........' என்று ஒரு வழக்காடு மன்றமே வைக்கலாம் போல............... முழுச்சட்டையையும் கிழிக்காமல் விடமாட்டார்கள்............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இத்தனை வருடங்கள் தோற்றாகி விட்டது, அப்படியே இந்த வருடமும் இந்தியா தோற்று, அகஸ்தியனை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்..........🤣. இன்றைக்கு Mooney அடித்தார்........... அடுத்த போட்டியில் Sunny என்று ஒருவர் வந்து அடிப்பார்............ இப்படித்தானே போட்டிகள் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன..........ஆனால் ஃபைனலில் எதுவுமே மாறாது............🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣.................. இந்த பெண் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விளையாடுகின்றார்கள். புரியாத புதிராகவே இருக்கின்றார்கள்................................... வீடுகளில் தான் அப்படி இருக்கின்றார்கள் என்றால், போட்டிகளிலும் இப்படியா இருப்பது.................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
15 பேரில் ஒரு 10 பேர்கள் வரை, நான் உட்பட, சும்மாதான் கிறுக்கியிருக்கின்றோம் போல...... ஏதோ இப்போதைக்கு காற்று என் பக்கம் வீசுது..............🤣. அதுவே தான்....... கடந்த ஐபிஎல் அது ஒரு சரித்திரம், பையன் சார்............. அதில் 5, 6, 7 என்று தொடராக முட்டைகள் வாங்கியவர்கள் பலர்................ ஆனால் நந்தனும், புலவரும் அப்படியே ஒன்று, இரண்டாகவே நின்றார்கள்................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............. சர்வர், நிறைய முட்டைகளை வாங்கி அடிக்கி வையப்பா........... இவர்கள் இப்படி மாறி மாறி வென்றால், நிறைய கோப்பி போட வேண்டும் போல...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
துண்டில் ஈழப்பிரியன் அண்ணாவின் பெயரை எழுதிய உடனேயே, அன்றைக்கு 69 அடித்த தென் ஆபிரிக்கா இன்றைக்கு எங்கேயோ போயிட்டுதே.............🤣. கிரிக்கெட்டிலும் எதுவும் நடக்கலாம் போல.................