Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "தோஷமும் விரதமும்" / பகுதி 01 மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்ல விட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதையும் கூறலாம். இதனால் தான் இது அந்த காலத்தில் மதத்துடன் இணைத்து இருக்கலாம்? மதம் என்பது அன்று திக்கு திசை இல்லாமல், ஆடு மாடு போல நாகரிகம் அடையாமல் திரிந்த மனிதர்களை ஒரு வழி படுத்தி, ஒரு ஒழுங்கை நிலை நாட்ட ஏற்படுத்திய ஒன்றாகும். என்றாலும் காலப்போக்கில் அது தன் முதன்மை நோக்கை இழந்து பல மதங்களாக பரிணமித்து, ஒவ்வொரு மதமும் தன் இருப்பை வைத்துக்கொள்ள போட்டிகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டன. ஆகவே இன்று விரதங்களின் விளக்கம் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன எனலாம். மேலும் மனிதனின் பலவீனத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரதத்தை ஒரு ஆயுதமாகவும் மத குருமார்கள் பாவிக்க தொடங்கினார்கள். உதாரணமாக தோஷம் மற்றும் பரிகாரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு தோஷத்துக்கும் அல்லது குற்றத்துக்கும் விரதத்துடன் சேர்ந்த ஒவ்வொரு பரிகாரத்தையும் எடுத்துக் கூறி தம் இருப்பையும் வியாபாரத்தையும் அதன் மூலம் வலுப்படுத்தி கொண்டார்கள் என்று கூறலாம். ஆறுமுகநாவலர் விரதம் என்பது, "மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்" என்கிறர். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில் "ஒருவேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் பாவி" என்று கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. விரதம் இருப்பது மத நம்பிக்கை என கருத்துக்கள் இருந்தாலும், விரதத்திற்கு பின்னால் இருப்பது உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானம் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன் 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள் பொதுவாக. நமது வயிறு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருக்கா, ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனை யொட்டித்தான் எல்லா மதங்களுமே விரத்தை கடைபிடிக்கின்றன எனலாம். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி முறை ஆகும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். அதேபோல, ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி எனவும் மற்றும் பல வகையான விரதங்கள் ஒவ்வொரு மாதமும் காணப்படுகின்றன. விரதத்தை இரண்டு முக்கிய வகையாகவும் பிரிகிறார்கள். ஒன்று எதிர் பார்ப்புடன் கடைபிடிப்பது. மற்றது எதிர் பார்ப்பு இன்றி கடைப்பிடிப்பது. உதாரணமாக தோஷ பரிகாரமாக செய்வது முதல் வகையாகும். குறிப்பிட்ட தோஷத்திற்கான பரிகாரத்துடன் கூடிய விரதங்களை தவிர, வாரத்தின் ஏழு நாட்களுக்கும் கூட விரதம் உண்டு. உதாரணமாக, திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் முழுமையான அன்பையும், செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீக்கவும், புதன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நோய் தீரவும், வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறவும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் செல்வம் பெருகவும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறவும் அல்லது நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்கிறது இந்து மதம். மேலும் ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்றும் கூறுகிறது. இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ? விரதங்கள் எல்லாவற்றிற்கும் விதி முறைகளும் உண்டு. உதாரணமாக, விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும். அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று என்கிறது. மேலும் ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகளும் உண்டு. மாதவிலக்கான பெண்கள், குழந்தை அண்மையில் பெற்ற பெண்கள், அண்மையில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பத்தினர் போன்றோர் விரதம் கடைபிடிக்க முடியாது என்கிறது. அது மட்டும் அல்ல, விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது என்றும் ஒரு ஒழங்கையும் வரையறுக்கிறது. விரதங்களை மேற்கொள்வதால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை அது மேலும் அதிகமாக்கிறது. அதேநேரம் அது ஓழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. உடல் ஆரோக்கியமும் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோ அல்லது எந்த முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி. [தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்
  2. "முத்தமிழே என் தாய் மொழியே!" "முத்தமிழே என் தாய் மொழியே முழுமை மொழியாய் என்றும் திளைத்தவளே முழக்கம் இட்டு உன்னை வாழ்த்துகிறேன்!" "கீழடியை கேள் பெருமை சொல்லும் கீர்த்தி கொண்ட வரலாறு கூறும் கீழோர் மேலோர் வேறுபாடு இல்லை கீறல் பானைகள் எழுத்தைக் காட்டுது!" "சுமேரு இலக்கியம் ‘சங்கம்மா” செப்புது ஈனன்னா துதிப்பாடல் சக்தி போற்றுது சிவகளை அகழாய்வு வரலாற்றை திருத்துது சிந்து வெளியை பின்னுக்கு தள்ளுது!" "சங்கத் தமிழ் செம்மொழி ஆகிற்று சத்தம் இல்லாமல் ஈழத்திலும் வாழுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி
  4. "சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி" ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை, "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது. போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து; பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வெற்றி யொடு மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும் என புறநானுறு 312 பாடற்பகுதிகள் உணர்த்துகின்றன. "ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறம்.312) மகன் எங்கு உள்ளான் என்ற தனக்கு தெரியாதது, ஆயினும் புலி கிடந்து சென்ற கல் குகை போல அவனை ஈன்ற வயிறு இதுவே. போர் ஒன்று நடந்தால் எங்கிருந்தாலும் போர்களத்திற்கு வருவான் என்று கூறும் சங்க தாயை புறநானுறு 86 இல் காண்கிறோம். "......................ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறே இதுவே தோன்றுவன் மாதோ போர்களத் தானே" (புறம்.86) போர்ப் பறை கேட்டுத் தன்னுடைய குலத்தினரும் போர் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவளாய் தனக்கு ஒருவனே யன்றி வேறு மகன் இல்லாத நிலையில் அவன் மிகவும் சிறியவனாதலால் தலைக்கு எண்ணெய் தடவி வாரியும், வெண்மையான ஆடையை உடுக்கச் செய்தும், கையில் வேலைக் கொடுத்துப் போர்க்களம் நோக்கிச் செல்க என ஏவி,தனக்குத் துணையாய் இருக்க வேண்டிய ஒரே மகனையும் போருக்கனுப்பிய தாயின் மறப்பண்பை,பாடினார் ஒக்கூர் மாசாத்தியார் புறநானுறு 279 இல்: "ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென" (புறம்.279) அது மட்டும் அல்ல, மறத்தினும் அறம் திறம்பாதவர் தமிழர் என்னும் உண்மையை, "வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்" (தொல்.1003) எனவும், "ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதூஉம் நும்மரண் சேர்மின்" (புறம்.9) எனவும் வரும் சான்றுகள் உணர்த்துகின்றன. பூதப்பாண்டியன் என்ற அரசன் ‘பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக என புறநானுறு 71 இல் சூள் உரைத்தான். அதே போல,சோழன் நலங்கிள்ளி ‘பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும் என புறநானுறு 73 இல் கூறுகிறான். சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் 'நடுகல்' எனப்பட்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை. உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவது - சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர். உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற 'நடுகல்' வைப்பது தமிழ் மரபு ஆகும். இதை தொல்காப்பியம் இப்படி கூறுகிறது: "காட்சி, கால்கோள் நீர்ப்படை 'நடுகல்' சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்"- தொல்காப்பியம் இனி தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறும் செய்தி ஒன்றை கீழே தருகிறேன்: "பாசாற்றூர் எருமைத் தொறு எயினாட் டார்கொள்ள பாசாற்றூர்ப் பூசல்லிட பூசல் சென்று கோவூர் நாட்டுச் சிற்றிடையாற்று முதுகொன்றை மூக்கின் மீமலை அயங்கயக் கரையில் சென்று முட்டி மலையநூருடைய செம்பர் மகன்னான காரிப்பெருமான் உரையில் அம்பு மாள எவ்வி பத்திரம் உருவி எதிரே சென்று பட்டான்." மாற்றான் படை அவன் நாட்டின் மீது பாய்ந்தது. அதை எதிர்த்து நின்றான் அவ்வீர மகன். தன்னிடமிருந்து சரங்களை மாரியாகப் பொழிகிறான். உரையிலிருந்து அம்புகள் தீர்ந்துவிட்டன. எதிரிப்படை அவ்வளவு பெரியது. மலைத்தானா இல்லை. இடுப்பில் இருந்த குறுவாளை கையிலே உருவிக் கொண்டான். வெள்ளம் போன்ற மாற்றான் படை மீது பாய்ந்தான். அந்நிலையில் இறந்து பட்டான் அவ்வீரன் என கல்வெட்டு கூறும் "காரிப்பெருமான்" என்பது அப்பெரும் வீரனின் பெயர். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்." (குறள் -50), என்பது மனித தெய்வங்கள் பற்றிய வள்ளுவரின் மதிப்பீடு. மாவீரர்களும் மனிதர்களே. எனினும் அவர்கள் தமது ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக தமது உடைமை, உயர்வு, உயிர் அனைத்தையும் நல்க முன்வந்தவர்கள். புறநானூறு 221ம் பாடல் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுடைய நடுகல்லைக் குறிப்பிடுகிறது. மன்னனின் உயிர் நண்பரான பொத்தியார் நடுகல்லைப் பரவிய செய்தி இப் பாடலிற் கூறப்படுகிறது. "பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே; ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே; அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே; திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே; மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; அனையன் என்னாது, அத்தக் கோனை, நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று; பைதல் ஒக்கல் தழீஇ, அதனை வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! ‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக், கெடுவில் நல்லிசை சூடி, நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே". அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர் என்கிறார். இதே போல, அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நாட்டி விழாக் கொண்டாடப்பட்டது. அதில் ஒளவையார் கலந்துகொண்டார். அப்போது அவனது பெருமையை நினைத்து ஒளவையார் வருந்திப் பாடிய பாடல் புறநானூற்றில் 232ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. "இல்லா கியரோ, காலை மாலை அல்லா கியர்யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி நார்அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ 5 கோடு உயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே." காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒரு சிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ? என்கிறார் ஒளவையார். இனி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரர்களில் ஒரு பெண் வீரியை மட்டும் இப்போது விரிவாக சங்க பாடல் மூலம் பார்ப்போம். மற்றவர்களை பின் ஒரு நேரம் பார்ப்போம். "அன்னி மிஞிலி [Anni minjili]: பழிக்கு பழி வாங்க போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]": "முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய், இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என, வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் கொண்டல் மா மலை நாறி, அம் தீம் கிளவி வந்தமாறே!!"[அகநானூறு 262] அன்னி மிஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய பெண். இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார். அந்த நஞ்சை நிலத்தில் பல எருதுகளை ஒன்றாய் பூட்டி உழுவு செய்தார். அப்படி உடல் வலிக்க உழவு வேலை செய்யும் போது, ஒரு நாள் அவருடைய மாடு, பக்கத்து பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள பயிரை மேய்ந்து விட்டது. நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன். மன்னனுக்கு வேண்டியவன். கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்னி மிஞிலியின் வாய்மை தவறாத தந்தை, தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்க்காக ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் . ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு தீர்ப்பளித்து விட்டான். இதனால் அவன் பெரும் குற்றம் [“நவை”] செய்து விட்டான் . கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். பார்வை போனது தந்தைக்கு! . அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மிஞிலி துடிச்சாள்; அப்பாவின் கண்ணைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும் சூள் உரைத்தாள்! சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள். இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை உறிய முறையில் உண்ண மறுக்கிறா; ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி.. ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க… ஆனா அழகான ஆடை கூட உடுக்க மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது? சூளை எப்படி நிறைவேற்றுவது? அவளோ எளிய முல்லை நிலப் பெண்; ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால் சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய, பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் திதியனிடம் தன் தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள். அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த சிற்றரசர் திதியன் - அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள் பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்; சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்; கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி… அவளும் தன் வஞ்சினம் முடித்தாள். அப்போ, அவளுக்கு உள்ளுக்குள்ள எவ்வளவோ உவகை பூத்திருக்கும்? அது போல என் மனசு பூக்குது! உடம்பெல்லாம் ஆடுது [மெய்ம் மலிந்து ]!ஏன்னா, பல நாள் தடைகளை மீறி, இன்னிக்கி அவளைப் என்னவள் ஆக்கிக் கொண்டேன். அவன்! அவ்வளவு ஏங்கிக் கிடந்தவன்; மனசே அத்துப் போனவன்; ரொம்ப நாள் காதல் .. கைகூட மாட்டேங்குது. மனக் களத்தில் உள்ள வெம்மை தீர, அவள் உடல் களத்தில் வெம்மை தீர்த்துக் கொண்டான் இன்றே! மிஞிலி தீர்த்துக் கொண்டது போல்… அந்த அருவிச் சாரலிலே, இருவரும் கூடும் இன்பத்திலே, பட்டுத் தெறிச்சிதாம் இன்பத் துளி. அருமையான பதிவு. காதலன் காதலியோடு புணர்கின்றான், இருவரும் இன்பம் அனுபவிக்கின்றார்கள். எப்படி என்பதற்கு ஒரு புறப்பொருள் கொண்ட உவமை, கிளைக்கதையாக போகிறது. “நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்” என்பது போல, பல கருத்துகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. அடிப்படையில் இது ஒரு பழிக்குப் பழி வாங்கும் கிளைக்கதை. இதில் 2 மேற்கோள்களை ஆங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும் – one by William Shakespeare and another by Lord Byron. 1. “Sweet is revenge – especially to women” (Lord Byron in Don Juan) 2. “If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?” (William Shakespeare in The Merchant of Venice.) மேற்சொல்லப்பட்ட இரு மேற்கோள்களுக்கும் இந்த அகநானூறு பாடல் பொருந்திப் போகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "தேயாதே வெண்ணிலவே" முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும். அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள். அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள். அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள். பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள். அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்! அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" "மாடி வீட்டில் உன்னைக் கண்டேன் தாடி மீசை அழகு பார்த்தேன்! வாடி இருந்தவளை தூக்கி நிமிர்த்தினாய் தேடி என்னிடம் அடைக்கலம் வாடா!" "கடிதம் எழுதி கையில் தந்தாய் ஈட்டி கொண்டு நெஞ்சைத் துளைத்தாய்! கட்டிப் பிடித்து இன்பம் பகிர்ந்தாய் அடிமை அற்ற வாழ்வு கொடடா!" "ஓடி விளையாடிய காலம் மாற கூடிக் குலாவி ஒன்றாய் மகிழ்ந்தாய்! ஆடிப் பாடிக் காதலித்தவனே என்னை மடியில் ஏந்திக் கொள்ளடா மன்னவா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 24 டாக்டர் கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ் [Dr Clyde Winters / Ph.D. Uthman dan Fodio Institute, Chicago, IL 60643] தமது "சிந்து எழுத்தின் மொழி திராவிடம்" ["Dravidian is the language of the Indus writing"], என்ற CURRENT SCIENCE, VOL. 103, NO. 10, 25 நவம்பர் [NOVEMBER] 2012 இல் வெளியிடப்பட்ட கட்டு ரையில், கீழ் கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார். 1] மொகஞ்சதாரோ ஹரப்பா பகுதிகளில் மொத்தம் 3000 கல் வெட்டு முத்திரைகள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன. 2] அங்கு காணப்பட்ட எழுத்துக்கள் அவர்கள் ஒரு கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதையும் திராவிட மொழியை பேசியவர்கள் என்பதையும் எடுத்து காட்டுகிறது. மேலும், சிந்து வெளி எழுத்துக்கள் ஆரிய மொழி எழுத கட்டாயமாக பாவிக்கப்படவில்லை. ஏனென்றால், இவர்கள் கி மு 1600 வரையும் இந்தியா வரவில்லை. 3] மனிதன் நல்லதை செய்ய வேண்டும், இரக்கம் உள்ளவனாக வாழ வேண்டும், இப்படி வாழ்வதால் அவன் தனது சரியான நடத்தையால் இந்த உலகிலும் அதற்கு அப்பாலும் புகழ் அடைவான் என ஹரப்பன் மக்கள் நம்பினர். பொதுவாக, ஹரப்பான் முத்திரைகள் நீதியையும் களங்கம் அற்ற தூய உள்ளத்தையும் ஹரப்பான் நாடுவதை சுட்டிக் காட்டுகின்றன என்கிறார். 4] தென் இந்தியாவில் திராவிடன் சிந்து வெளி எழுத்துகளை தொடர்ந்து பாவித்தார்கள். இதை இவர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி (தாமிழி / Tamili) என அழைத்தார்கள். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிப்புரலு எழுத்து முறைகளிலிருந்து வேறு பட்டது. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள்,மோதிரங்கள் போன்றவற்றில் எழுத பாவித் தார்கள். தென் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், அயலிலுள்ள இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது. 5] தமிழி கல்வெட்டுக்கள் பிராமி எழுத்து முறைகளை விட பழையது ஆகும். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி [hand-held axe] ஒன்று கிடைத்துள்ளது. அதே போல, தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வின் போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் [burial urns] கண்டு பிடிக்கப் பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருக்கிறது. இவைகளில் இருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக நாம் இலகுவாக ஊகிக்கலாம். அது மட்டும் அல்ல, மிக உயர் நிலையில் இருந்த சிந்து வெளி நாகரிக குடிமக்கள் கட்டாயம் ஏதாவது ஒரு மருத்துவ ஒழுக்கம் கடைப்பிடித்து இருக்க வேண்டும். மேலும் இவர்கள் சுகாதார விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதை, அவர்களுடைய அதிநவீன நீர் வடிகால் அமைப்பும் பொது சமுக குளியலும் [sophisticated water drainage system and communal baths] எமக்கு எடுத்து காட்டுகிறது. என்றாலும் இவர்களுடைய மருத்துவ ஒழுக்கம் பற்றி எமக்கு தெரியாது. மறுபுறம், ஆரியர்கள் மிக மத நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுடைய மத சின்னங்களும் நடைமுறைகளும் இந்து மதமாக முறைப்படுத்தப்பட்டது. இதில் சிந்து வெளி மக்களின், நாகரிகத்தின் சில நடை முறைகளையும் இணைத்து உள்ளார்கள். உதாரணமாக சுகாதாரம் பற்றிய விழிப்பு [sense of hygiene] ஆகும். நவீன ஈராக் ஆக இருக்கும் மெசொப்பொத்தேமியாவில் உள்ள டைகரிஸ், யூப்ரடிஸ் [Tigris and Euphrates rivers] என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எப்படி சுமேரு மக்கள் குடியிருப்பை அமைத்தார்களோ, அப்படியே சிந்து வெளி மக்களும் தமது நாகரிகத்தை நவீன பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வட இந்திய பகுதியில் உள்ள சிந்து, ஹக்ரா நதியை [Indus and Hakra rivers] அண்டி அமைத்திருந்தார்கள். இரு முக்கிய நகரங்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகும். சுமேரியனும் ஹரப்பானும் ஒரே மாதிரியான பொருளாதார வளர்ச்சி கண்டதுடன் ஒப்பிடக்கூடிய சமய சமுக அமைப்பையும் கொண்டிருந்தார்கள் என இப்ப நாம் அறியக் கூடியதாக உள்ளது. எப்படியாயினும் திடீர் என அழிந்த சிந்து வெளி இனத்தை விட, மெசொப்பொத்தேமியன் பல நூறு வருடங்கள் வாழ்ந்து இருந்தார்கள். அது மட்டும் அல்ல ஹேமோ சேப்பியன்ஸ் [Homo Sapiens] ஆஃப்ரிக்காவின் கிழக்கு கரையை பல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் விட்டு விலகி இருந்தால், அவர்கள் மெசொப்பொத்தேமியாவை முதல் கடக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்து மூலமான குறிப்புகள் கி மு 3300 வருடம் முதலே இருந்தாலும், மெசொப்பொத்தேமியா நாகரிகம் கி மு 5000 வருடம் முதல் அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த சிறந்த நாகரிகம் கி மு 2000 ஆண்டளவில் வீழ்ச்சி அடைந்தது. அது போலவே சிந்து சம வெளி நாகரிகமும் கி மு 3300 ஆண்ட ளவில் சிறப்புற்று விளங்கி கி மு 1700 ஆண்டளவில் திடீர் என அழிந்து போயிற்று. சில சிந்து வெளி பொருட்கள் பின் மெசொப்பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்டன, அது மட்டும் அல்ல ஹரப்பாவிலும், மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் என்ற நகரத்திலும் புதைக்கப்பட்ட தனிப்பட்டவர்களின் பல் எனாமல் [tooth enamel / பல்லின் மிளரி] பற்றிய முதனிலை [பூர்வாங்கமான] ஆய்வு ஹரப்பான் ஒருவனை மெசொப்பொத்தேமியாவில் காண்பது சாத்தியம் என்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல இணைக்கப்பட்ட மெசொப்பொத்தேமியா 'சு -இலிஷு உருளை' முத்திரை [Shu-ilishu’s cylinder seal] கி மு 2020 இல் வாழ்ந்த 'சு -இலிஷு' என்ற தனிப்பட்ட பண்டைய சிந்து சம வெளி அல்லது மிலேச்ச மொழி [Meluhan language] பெயர்ப்பாளர் ஒருவரை குறிக்கிறது. சிந்து சமவெளியை மிளக்கா என்றும் அங்கு பேசிய மொழியை மிலேச்ச மொழி எனவும் அழைத்தனர் என அறிகிறோம். ‘மிலேச்ச’ என்ற சொல் ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற கருத்தை சுட்டிக் காட்டுகிறது. இங்கு இணைக்கப்பட்ட படத்தில் உள்ள மிலேச்சன், மான் போன்ற ஒன்றை [antelope] கையில் வைத்து இருக்கிறான். மேலும் மெசொப்பொத்தேமியாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆப்பு வடிவிலான ஆவணம் மூலம் அக்காடியன் [Akkad] காலத்தில் அங்கு குறைந்தது ஒரு மிலேச்சன் குடியேற்ற கிராமம் இருந்துள்ளது எமக்கு தெரியவருகிறது. சுமேரியன் நூல் திரும்ப திரும்ப தாம் வர்த்தகம் செய்த மூன்று முக்கிய இடங்களை [மையத்தை] குறிக்கிறது. அவை மகன் [Magan], டில்முன் [Dilmun], மேலுஹ்ஹா [Meluhha] ஆகும். மேலுஹ்ஹாவை ஹரப்பானுடன் அறிஞர்கள் தொடர்பு படுத்துகிறார்கள். அவைகளுக்கிடையே நடை பெற்ற வர்த்தக தொடர்புகள் இதற்கு சான்றாகிறது. அது மட்டும் அல்ல மேலுஹ்ஹா என்பது சிந்து வெளி நாகரிகத்தின் சுமேரிய பெயர் என பல நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிமோ பர்போலா [Asko and Simo Parpola] போன்றவர்கள் மேலுஹ்ஹாவை [Meluhha>Me-lah-ha] திராவிடர்களின் மேல் அகம் [mel akam ] அல்லது மேல நாடு என அடையாளம் கண்டு உள்ளனர். கி மு 2200 வருட முன்னைய நூல், மேலுஹ்ஹா கிழக்கில் இருப்பது போல சுட்டி காட்டி உள்ளது. அது சிந்து வெளியையோ அல்லது இந்தியாவையோ குறித்துச் சொல்லியிருக்கலாம் என கருதுகிறார்கள். ஹரப்பான் கல்வெட்டு ஒரு பழைய தமிழ் என அறிஞர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக டாக்டர் ஆர்.மதிவாணன், இது தமிழ் எழுத்தே என உறுதியாக கூறுகிறார். தெற்கு ஆற்காடு, வேலூர், தமிழ் நாட்டில் குன்று ஒன்றில் கண்டு பிடித்த படம் மூலமான எழுத்துக்கள் [pictographic writing] சிந்து சம வெளி எழுத்து போல உள்ளதும், கருநூல் [கர்நூல்], ஆந்திரப் பிரதேசத்தில் நில அகழ்வில் கண்டு பிடிக்கப்பட்ட செங்கல்லில், சிந்து சம வெளி எழுத்து இருந்தமையும் ஆணைக் கோட்டை, யாழ்ப்பாணத்தில் தோண்டி எடுக்கப்பட்ட முத்திரையில், சிந்து சம வெளி எழுத்தும் பிராமி [brahmic] எழுத்தும் கண்டு பிடிக்கப்பட்டதும், அவை அனைத்தும் இன்றைய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதும், இந்த தமிழ் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. சிந்து சம வெளியில் இருந்து 'எள் எண்ணெய்' [Sesame oil] அதிகமாக சுமேரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கலாம். ஏனென்றால் இந்த எண்ணெய்க்கு சுமேரியன் சொல் இல்லு [illu] ,அக்காடியன்: எள்ளு [ellu]. திராவிட மொழியில் 'எள்' அல்லது 'எள்ளு' ஆகும். அது மட்டும் அல்ல மிக தொகையான ஹரப்பான் முத்திரைகளும் கன வடிவ பார அளவைகளும் [cubical weight measures] மெசொப்பொத்தேமியா நகரங்களில் இருந்தமையும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. [சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த மயிலாடுதுறை கற்கோடரி, தமிழ்ப் பிராமி பொறித்த முதுமக்கள் தாழி, சிந்து சம வெளி எழுத்து போல உள்ள ஆற்காடு,வேலூர்,தமிழ் நாட்டில் குன்று ஒன்றில் கண்டு பிடித்த படம் மூலமான எழுத்துக்கள் போன்றவை இணைக்கப் பட்டு உள்ளன] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 25 தொடரும்
  9. "விலங்கிணை உடைத்தெறி" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்] "வலுவான குரல் வளமான சிந்தனை பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்! கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள் விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!" "சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்! இலங்கையில் பிறந்து துன்பம் அனுபவிப்பவனை கண்கள் திறந்து அரசு அறியட்டும்!" "வாழ, நேசிக்க, சமபங்கு அடைய ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்! புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே நெகிழ்ச்சி கொண்டு கதவுகள் திறக்கட்டும்!" "கனவுகள் விரிய தைரியம் பெருக சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்! சுதந்திரம் வேண்டும் சிறுபான்மை இனங்கள் உரிமை பெற்று விலங்கிணை உடைத்தெறியட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "செண்ணச் சிவிகையுந் தேரும்வையமும் உனதாக்குக!" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கி உன்னை அலங்கரிக்காதே ஆகாயம்வரை பொய்களைப் அடுக்கிப் பேசி ஆரவாரத்துடன் மற்ற இனத்தை ஒடுக்காதே !" "நேசித்து வெறுத்து பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடாதே நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி சமதர்மமும் நீதியும் மறக்காதே!" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து அவசரமாக எதையும் எடுக்காமல் விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் வேண்டும் மற்றவர்கள் வீட்டிலும் மல்லிகை மணக்கும் மறந்துகூட மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதே மனம் திருந்திய இலங்கையை கட்டியெழுப்பு!" "மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன் மந்திரம் தந்திரம் மகிழ்வைத் தரா மழலையின் முகத்தில் உண்மையை அறி!" "செழிப்பு நிறைந்த இலங்கையை வளர்த்து செல்வம் பொழியும் நாடாய் மாற்றி செங்கோல் வழுவாமல் ஆட்சி நடத்தி செண்ணச் சிவிகையுந் தேரும்வையமும் உனதாக்குக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 1] நேரார் - பகைவர் 2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும்
  11. "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி: 04 பலருக்கு, ராமன், நிறைமாத கர்ப்பணியான சீதையை நாடு கடத்தி, காட்டிற்கு தன்னம் தனியாக விட்டது ஒரு மிகவும் குழப்பமான, புரிந்து கொள்ள முடியாத நிகழ்வாக உள்ளது. இது உத்தர காண்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால் வால்மீகியோ அல்லது கம்பரோ இதை எழுதவில்லை. அவர்கள் பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விட்டார்கள். இந்த உத்தர காண்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறு இது ஆகும். தமிழில் உத்தர காண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தர் ஆகும். அதில் "மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க் கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள் நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு" [பாடல் 728], அதாவது “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே” என்று மக்கள் பேசுகின்றனர் என ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறினார். ராமனும் அதை அப்படியே ஆமதித்து, லட்சுமணன் மூலம் அவளை வால்மீகி ஆசிரமம் அருகே, கண்ணைக் கட்டி கூட்டிக்கொண்டு போய் விட்டான். "என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்" [பாடல் 753], அதாவது, அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் சீதையிடம் கூறி, காட்டில் விட்டுச் செல்ல, அதனால், பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் சீதை வீழ்ந்தாள் என்கிறது. ஆனால் வால்மீகி ராமாயணத்தில், கொஞ்சம் மாறுபட விதத்தில், "பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி" [பாடல் 3, ஸர்க்கம் 45 ] அதாவது, தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது. என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது. ஆகவே, ராமன் தன் சகோதரர்களைப் பார்த்து: "அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்" [பாடல் 14, ஸர்க்கம் 45], அதாவது, மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல? என்று கூறினான். இப்படிச் செய்வது சரியா, தவறா! - என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவ தூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் விசேஷமான சில பொருட்கள் மீது ஆசைப்படுவார்கள். அத்தகைய ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது மரபு. சீதைக்கு அப்படி ஏதேனும் விருப்பமுண்டா என்று முன்பு ஒரு நாள் இராமன் சீதையிடம் கேட்டான். ஆம் என்றாள் சீதை. அந்த ஆசை என்னவென்று கேட்டான் இராமன். கங்கைக் கரையோரம் அமைந்துள்ள ஏதாவதொரு முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அங்கு கிடைக்கும் பழங்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு ஓரிரவாவது தங்கித் திரும்ப வேண்டும் என்பதே தன் ஆசை என்றாள் கர்ப்பிணியான சீதை. அது இப்ப அவனுக்கு நினைவு வந்தது, ‘’அன்பே, நாளையே நீ விரும்பும் ஆசிரமம் போக நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றான். இராமன். நேசத்திற்குரிய கணவனின் நேர்மையான பேச்சென்று சீதை இராமனின் வார்த்தையை கருதினாள். ஆனால் இராமன் செய்த தென்ன? சீதையைக் காட்டிற்கு அனுப்பி கைகழுவிட இதுவே தக்க தருணம் என இராமன் நினைத்து, தம் சகோதரர்களை அழைத்து சீதையை வனவாசம் அனுப்பி விடுவதெனும் தன் அறுதியான முடிவினை தெரிவித்தான். ஆனால், சீதைக்கு ஒன்றும் கூறவில்லை. அவள் எதோ தன்னை ஒருநாள் தன் விருப்பத்தை நிறைவேற்ற கணவன் அனுப்புகிறான் என்று மட்டுமே நினைத்தாள். லட்சுமணனும் அப்படியே அவளை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் விட்டு விட்டு,"நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம்? என்றும் நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு உள்ளேன்" [பாடல் 13, 14 ஸர்க்கம் 47] என்றான். லட்சு மணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள். மூர்ச்சை யுற்று தரையில் விழுந்தாள். [பாடல் 1, ஸர்க்கம் 48]- மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி - என்பதே ராமனின் முடி வாயிருந்தது. இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே ராமன் எதிர்பார்த்தான்? மன்னனும் மன்னன் குடும்பமும் நாட்டை வழி நடத்தாத ஒரு சூழலை தான் இங்கு காண்கிறோம்? சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான். அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பதை கவனத்தில் கொள்ளாது, அந்த நிலையிலும் அவளை காட்டுக்கு அனுப்புகிறான். ராமனால் கைவிடப்பட்ட சீதை, வால்மீகியின் ஆசிரமத்தில், முனிவரின் ஆதரவில் வாழ்ந்தாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை [லவ குசா] அவள் பெற்றெடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. இவ்வளத்திற்கும் வால்மீகியின் ஆசிரமம் இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந் தொலைவிலொன்றுமில்லை. இந்த உதாரண கணவன் இராமன், பாசம் மிக்க தந்தை, சீதை என்ன வானாள் - அவள் செத்தாளா - பிழைத்தாளா - என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விநோதமான சூழ்நிலையில் இராமன் சீதையை சந்திக்கிறான். வால்மீகி, சீதை எந்த கலங்கமும் இல்லாதவள், அப்பாவி என கூறி, தன்னுடன் வந்த லவ குசாவை உனது பிள்ளைகள் என அறிமுகப் படுத்தினார். சீதாவை திருப்ப அயோத்திக்கு கூட்டிப் போக விருப்பம் இருந்தாலும், சீதை களங்க மற்றவளாக இருந்தால், இன்னும் ஒரு தீக் குளிப்பு மூலம் அதை நிரூபிக்கட்டும். அதன் பின் அவள் என்னுடன் வரலாம் என்றான். இதே மாதிரியான சோதனையை சீதை முன்பொருமுறை இலங்கையிலே மேற்கொண்டாள். இருப்பினும் வால்மீகி சீதையையாக [வேள்வி] சபைக்கு அழைத்து வருகிறார். இராமன் முன் சீதையை நிறுத்தி வால்மீகி சொன்னார்: ‘’தசரதனின் மகனே, வம்பர்களின் வாய்ப் பேச்சைக் கேட்டு காட்டிலே நீ கைவிட்ட சீதை இங்கே இருக்கிறாள். நீ அனுமதித்தால் அவள் மீண்டும் நிரூபிப்பாள் என்றார். என்றாலும் சீதை அதை ஏற்கவில்லை. அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவள் "முன்மாதிரி கணவன்" என இன்றைய ராம - பத்தினிகளாள் போற்றப்படும் ராமனுடன் வாழ்வதை விட, சாவதே மேல் என தற்கொலை செய்து கொண்டாள். அதாவது காட்டு மிராண்டித் தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான இராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக கூறும் இராஜாஜி வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் எழுதியுள்ளார். மேலும் உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று இராஜாஜி மனமுடைகிறார். ‘உலக சரித்திரத்தை நேரு இந்திரா விற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ‘ ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது திராவிடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கதை ‘ எப்படி அரசாளும் மன்னன் ராமன் ஒரு குடும்ப வன்முறையாளரான கட்டாடியின் பேச்சை கேட்ப்பான்? கொஞ்சமாவது தன் புத்தியை பாவிக்க வேண்டாமா? எப்படி அவனை நம்பி தன் மனைவி சீதையை நாடு கடத்துவான்? எப்படி இவன் இலட்சிய நாயகனாக இருப்பான்? அரண்மனையில் வாழாது கணவனுடன் வனவாசம் புகுந்த சீதையை, எப்படி சந்தேகம் கொள்வான்? சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றுவது எப்படி? காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பிணி சீதா, குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாகப் போற்றி, மணமக்களை அவர்கள் போல வாழ என வாழ்த்துகிறார்கள்? இது எனக்கு புரியவே இல்லை? வால்மீகி ராமாயணத்தில், "செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும் நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன" (கம்பராமாயணம் ஆரணிய காண்டம் பாடல்:117) என்று வர்ணிக்கப்படும் அழகு மங்கை சூர்ப்பனகையினதும் 'ஏசல்இல் அன்பினளாய் இனிது உன்பால் [இலக்குவன்] ஆசையின் வந்த அயோமுகி 'யினதும் (ஆரணிய காண்டம் பாடல்:52) உறுப்புகளை இலக்குவன் அறுத்தது, சீதையின் தீக் குளிப்பு, மற்றும் கர்ப்பவதி சீதையை காட்டில் கைவிட்டது ராமனின் ஆணாதிக்க ஆதிக்கத்தை தெளிவாக காட்டுகிறது. அது மட்டும் அல்ல, ராமன், மற்றவர்கள் பின்பற்றக் கூடிய உதாரண உத்தம புருஷன் அல்ல. சீதை ஒரு ஒற்றை தாயார். அதிகாரப்பூர்வமற்ற முறையில் பிரிந்து வாழ்ந்தாள். ஆசிரமத்தில்,தனது மகன்களை தனியே வளர்த்தவள்? அது மட்டும் அல்ல பெண்களை நம்பக்கூடாது, மனைவிக்கு இரகசியம் சொல்லக்கூடாது என்று பெண்களை நம்பாதவன் இந்த ராமன். (அயோத்திய காண்டம்).மேலும் வாலியை முறையற்று கொன்றது, சீதாவை நடத்திய விதம் எல்லாம் கொடூரமான செயல்கள் ஆகும். இப்படியானவனை எப்படி நாம் கொண்டாடலாம்? ஆனால் மறுபக்கம் ராவணன் மாபெரும் வீரனாக, மிகப் பெரிய படைகளுடன் கூடியவனாக, செல்வம், செல்வாக்கு மிக்கவனாக திகழ்ந்துள்ளான். அது மட்டும் அல்ல, சகல திறமைகளையும் பெற்ற வல்லவனாகவும், மிகுந்த நாகரீகம் மிகுந்தவனாகவும், மாவீரனாகவும் ஜோதிடத்தில் நிபுணனாகவும் அறிவாளிகளில் மேம்பட்ட அறிவாளியாகவும் மருத்துவம் தெரிந்த வித்தகனாகவும் மாபெரும் இசைக் கலைஞனாகவும் இருந்தான். சிறந்த கலாச்சாரத்தை உடையதாக தனது நாட்டை வைத்திருந்ததுடன் இவன் காலத்தில் கட்டிடக்கலை சிறந்தும் விளங்கியது. உதாரணமாக கடலை கடந்து இலங்கைக்கு போக ராமனுக்கு மாதக் கணக்கில் எடுத்தது. அதே வேலையை ராவணன் ஒரே நாளில் முடித்து விட்டான். இப்ப சொல்லுங்கள் ராமனா? ராவணனா? யார் பலசாலி? யார் திறமைசாலி? இப்ப எனது கேள்வி, ஏன் நெடுக்கவும் ராவணனை விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 05 தொடரும்
  12. ஒன்று மட்டும் உண்மை 1971 இலோ அல்லது ரோகண விஜயவீர உயிருடன் இருக்கும் வரை இன துவேசம் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அதன் பின் அது அவர்களுக்கிடையிலும் புகுந்துள்ளது என்பதுக்கு விமல் வீரவன்ச கட்டாயம் ஒரு உதாரணம். மேலும் சுனாமி காலத்தில் கட்சி நடந்த விதம் மற்றும் வடக்கு கிழக்கு பிரித்தது இன்னும் ஒரு உதாரணம்.
  13. "இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க" பெரும்பாலான இலங்கை வாழ் மக்கள் சனிக்கிழமை 21 / 09 / 2024 அன்று தமக்குப்பிடித்த ஒரு தலைவரை ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் ஏற்றியிருக்கின்றனர். கூட்டாச்சி இல்லாமல், தனியாட்சி அதிகாரமிக்க வராய்த் இலங்கை நாட்டுக்குப் பல சிறப்பு அதிகாரங் களுடன் அநுர குமார திசாநாயக்க தலைவரா கியுள்ளார். சிவப்புச் சித்தாந்த சிந்தனையில் ஊறியவர் சிறப்பாய்ப் படிப்பிலே பட்டம் பெற்றவர் இளவயது மற்றும் ஆழுமை ஆற்றல் கொண்டவர். படிப்படியாகப் பதவிகளில் அங்கம் வகித்து சிகரமாய் அதிபர் பதவியில் 23 / 09 / 2024 அன்று ஏறி அமர்ந்துள்ளார். இலங்கையின் ஒரு மூத்த குடிகளான தமிழரின் உள்ளத்தில் இன்று எழும் கேள்வியும் எதிர்பார்ப்பும் ஒன்று இரண்டு அல்ல, அவை எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக இதயத்தை வாட்டும் கவலைகளே? தமிழ் சிறைக்கைதிகளுக்கு விடுதலை விடிவு வருமா? குற்றக் கறை படிந்தவர்கள் சிறையுள்ளே செல்வாரோ? காணாமல் போனோர் கண் முன்னே வருவாரோ? தமிழர் நிலங்களின் அபகரிப்பு முடிவுக்கு வருமோ? லஞ்சம் ஊழல்கள் குறையுமோ? பாதாளக் குழுக்கள் மற்றும் ஆவா குழுக்கள் அடங்குமோ? வாள் வெட்டுகள், துப்பாக்கி சூடு மற்றும் பாலியல் வன்செயல் குறையுமோ? கஞ்சாப் போதைப் பாவனை தடுக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு இளைஞர்கள் ஒழுங்கு படுத்தப்படுமோ ? தமிழர் பாரம்பரிய நிலங்களில் அல்லது முற்றும் முழுதாக தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலங்களில் அத்துமீறும் அல்லது அடாவடித்தனம் புரியும் புத்தர் சிலைகள் நிறுவுதல் நிறைவு காணுமோ? தமிழ் பேசும் மக்களின் இந்த முக்கிய பிரச்சனைகளைத் தவிர , தாமும் ஒரு இலங்கையன், மூத்த குடியோன் என்ற ரீதியில் அவனின் பொதுவான ஏக்கம் தேய்பிறையான இலங்கை தேசத்தின் பொருளாதாரம் வளர்பிறை காணுமோ? ரூபாய் நாணயம் பெறுமதி ஏறுமோ? ராக்கெட் போல் ஏறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இறங்குமோ? உள்ளூர் விவசாயங்கள் உச்சம் தொடுமோ? அச்சமின்றிய வாழ்வு வாய்க்குமோ? பஞ்சம் பசி மாறுமோ? வருங்கால சந்ததிகள் வாழ வளமான நாடாய் மாறுமோ? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பழைய வரலாறு கூறும் செய்தி அவை சிங்கள மக்களோ சிறப்பாய்த் தமக்கு நல்லது என்ன செய்வாரென்ற ஆர்வத்தோடும் தமிழ் மக்களோ தமக்கு ஏதாவது கெடுதல் செய்வாரோ என்ற அச்சத்தோடும், பழைய அல்லது இன்றைய நினைவில் இருக்கின்றார்கள்! அது மாறுமோ? அநுர குமார திசாநாயக்க பதவியை அணுகும் முறையைக் காணப் பல கண்கள் காத்திருக்க அவரோ ஐந்து விரல்களை ஆதவனாய் விரித்துக் காட்டி உங்கள் எல்லோரினதும் வாழ்க்கையை இன, மத பேதமின்றி உதயவனாய் ஒளிமயமானதாக்குவேன் என்கிறார். அநுர குமார திசாநாயக்காவிற்க்கும் பல எதிர்பார்ப்புகளுடன் வாழும் இலங்கை முழு மக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்! சிறப்பான மற்றும் பாரபட்சம் அற்ற நேர்மையான ஆட்சியை, இனங்களை மொழி, சமயம், சாதி அடிப்படையில் பிரிக்காமல், வெறுக்காமல் எல்லோரும் இலங்கையர் என்பதை ஏற்று, சரிசமமாக ஊழல் அற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு! சுருக்கமாக நாம் எதிர்பார்ப்பது அநுர குமார திசாநாயக்கவும் அவரது NPPயும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் அவர்கள் உறுதியளித்தபடி இலங்கையில் எதிர்காலத்தில் உடனடி மாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே! 1. Paye Tax from 36% to 24%. 2. VAT will be exempt for Food items, Health sector services & educational books. 3. One vehicle per minister/MP. 4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians. 5. Cut down on unnecessary government expenditure. 6. No family / Friends will be accommodated on overseas tours. 7. All tours are on assigned targets. 8. Only 25 ministries. 9. Cut down prices on electricity & fuel. 10. Low interest rates 11. Development bank for the start of new small & medium scale industries. 12. A 3 bench special court to hear fraud cases. 13. Presidents budget cut down by 50%. 14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians. 15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero political influences. 16. New laws to prevent MP's from switching the party they were elected to. 17. New Investments (local & overseas Srilankans may ready to invest). 18. No additional benefits for politicians over citizens. 19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 20. Ambassadors will be assigned with tasks to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 22. Restoring the oil refinery. 23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned. 24. New technology for the fisheries industry to enhance the yield (Fishermen to receive directions for fishing areas) 25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs. 26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a minimum cost. 27. Facilitate for Eco based tourism. 28. Plans to capture IT market. 29. Changes in the education policies to facilitate the economy. 30. Secure Food, Heath & Education as fundamentals for the citizens through adequate funding. இதற்கெல்லாம் நிதி எங்கே என்று பொதுவாக மக்கள் கேட்கலாம்? தேவையற்ற செலவுகள் மற்றும் விரயங்களை நிறுத்துவதன் மூலமும் எந்த வேறுபாடும் இன்றி எல்லா வரி செலுத்த தகுதியானவர்களிடம் வரிகளை வசூலிப்பதும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீடும் மற்றும் அவர்களை வேறுபாடு காட்டாமல் ஊக்கிவிப்பது மூலமும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலமும், அவர்களை இங்கு வர ஊக்குவிப்பது மூலமும் மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியை ஊக்கிவிப்பது மூலமும் இவை சாத்தியமாகலாம்? இவை எல்லாவற்றிற்கும் நீதியான சரிசமமான வலுவான ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்! யார் இந்த அநுர குமார திசாநாயக்க? அவர் கடந்து வந்த பாதை என்ன? முழுப் பெயர் – திஸ்ஸநாயக முடியான்செலகே அநுர குமார திசாநாயக்க [Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka]. பிறப்பு – 1968.11.24. பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். அரசியல் வாழ்க்கை! 1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். 2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார். 2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார். 2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார். ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும். 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநர் றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார். 2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது. ஜேவிபி கட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி தேசிய மக்கள் கட்சியை நிறுவி இன்று அக்கட்சியினூடாக இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவானார்.
  14. "இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்] விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar] சமவெளியில் குடியேறினர். அப்பொழுது அவர்கள், ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். எனவே அவர்களின் இந்த செயலை நிறுத்த [அல்ல விட்டால் அவர்கள் எல்லோரும் சொர்க்கம் வந்து விடுவார்கள்?] நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ என்றார். [ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ?, ஏன் ??, இதைத்தான் அரசும் சிறுபான்மை மக்களை ஆள கையாளும் தந்திரம் கூட இன்று, ஆண்டவன் போதித்த பாடம் அல்லவா ???] அப்படியாயின் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ஒன்றாக வேலை செய்ய முடியாது. அவர்கள் கட்டுவதைக் கைவிட்டு சிதறுண்டு போவார்கள் என்றார். ஆகவே அது ″பாபேல்″ [“தாறுமாறு” என்பது அதன் பொருள் / Babel] என்று வழங்கப் பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (Genesis 11:5–8 / தொடக்க நூல் 11:5-8). இதில் இந்த ஆண்டவர் யார் ?? தனது முதலாவது வாக்கினை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும் இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வாக்களித்தபின் கூத்தாடினார் ?? சுமந்திரனோ இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது. அது என்ன ஒப்பீட்டு ரீதி? வெள்ளம் மூக்குக்கு மேலே கொஞ்சம் போனால் என்ன? கூட போனால் என்ன ? இரண்டும் ஒரே விளைவுதானே?? பிறகு ஏன் இந்த கூத்து ??? கஜேந்திரகுமார் தேர்தல் பதவியை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற ஒரு கூத்து ?? முடிவில் இன்று சிதைந்தது போனது தான் மிச்சம் !! இதில் இந்த ஆண்டவர் யார் ?? இதில் இவர்களா ? இல்லை வேறு யாராவதா ?? ஒற்றுமை காணா இந்த தருணத்தில் பொது வேட்ப்பாளர் தேவையானதா ??? அல்லது வேறு நோக்கமா ???? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பொட்டு - (அளவுகுறித்து வரும்போது) சிறிது; துளி பொட்டு - வேலியில் இருக்கும் சிறிய திறப்பு [இலங்கைத் தமிழ் வழக்கு]
  16. "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 03 வால்மீகி, நாரதரிடம் எல்லா நல்ல குண நலன்களு டனான பிறவி யார் என்று மூன்று கேள்விகளைக் கேட்கிறார். அதற்குப் பதிலாக நாரதர் ராம கதையைச் சுருக்கமாகச் சொல்ல அதனை விரிவாக ராமனை கதாபாத்திரமாக அமைத்து ராமாயணம் வால்மீகி எழுதியதாகச் சொல்லப் படுகிறது. வால்மீகி ராமனின் கதாபாத்திரத்தில் வியத்தக்க ஏதாவது ஒன்றை அல்லது சிலவற்றை கண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு சமசுக்கிருத மொழியில் கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இராமாயண கதை மிகவும் சாதாரணமானது. அதில் ராமனைக் கடவுளாக்கக் கூடிய எந்த அம்சங்களோ இல்லை. ஆனால், ராமன் கடமை தவறா ஒரு மகன், அவ்வளவுதான்! நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தல் கடினமான வேலை. அது ராமனாக இருந்தாலும் சரி ராவணனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பிறந்தனர் வாழ்ந்தனர் இறந்தனர் … அவ்வளவே! காதல் ஒருத்தியைக் கைப்பிடித்து, அவளைக் காக்க படையெடுத்து, எதிரிகளை எதோ ஒரு வழியில், எப்படியாவது வீழ்த்தி, சீதையை சந்தேகப்பட்டு, தீக்குளிக்க வைத்து, அவளை தன்னம் தனியா காட்டுக்கு அனுப்பி, விலகச்செய்து. இத்தனை ஆண்டு போராட்டத்தை வீணடித்து, தனிமரமாக, ராமன் நெஞ்சம் நிமிர ஆட்சி புரிகிறானாம்? வாலியை கொன்ற முறை, அதில் காணும் நியாயக் குறை, சீதையைக் காட்டுக்கு அனுப்பிய அநீதி, இவை போன்ற இன்னும் பல சிக்கல்கள் அங்கு காணப்படுகின்றன. வால்மீகி ரிஷியின் காவியத்தில் ராமனுடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுதவில்லை. சில அதிகாரங்களிலும் இங்குமங்கும் சுலோகங்களிலும் தெய்வ அவதாரத்தைச் சொல்லி வந்தாலும், மொத்தத்தில் ராமன் ஒரு சிறந்த ராஜகுமாரன் வீர புருஷன்; அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம் மட்டே! மகாவிஷ்ணு இராமனாக அவதாரம் எடுத்தார் என நம்புபவர்களும் உண்டு. அவர்களின் கூற்றின் படி, மகாவிஷ்ணு வழக்கம் போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால்களை அமுக்கிக் கொண்டிருக்க, தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவர் வணங்கி, அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். சுராபானம் குடிக்கக்கூடாதாம், மது அருந்தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ! என்று முறையிட்டார்கள். அதற்கு, விஷ்ணு, நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இராவணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன் என்கிறார். அப்படியே மகாவிஷ்ணு ராமனாக அவதரித்தார் என்கின்றனர். ஆனால், ராமன் வழிபட ஏற்புடையவனா? ராமனை கடவுளாக வழிபடுபவர்கள் கொஞ்சம் இந்த உண்மையை அலசி பார்க்கட்டும். ராமன் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவன் அல்ல, வால்மீகி ராமனுக்கு பல மனைவிமார்கள் இருந்தனர். உதாரணமாக, அயோத்திய காண்டம், அத்தியாயம் 8, சுலோகம் 12 இப்படி கூறுகிறது. "हृष्टाः खलु भविष्यन्ति रामस्य परमाः स्त्रियः अप्रहृष्टा भविष्यन्ति स्नुषास्ते भरतक्षये". இதோ அந்த வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில உரையைப் பார்ப்போம்."Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position." ஆகும். இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இந்த சுலோகத்தில் காணப்படும் "இராமனின் மனைவிமார்கள்" என்ற சொல் இதை உறுதி படுத்துகிறது. அப்படியே அவனின் தந்தையும் "अर्ध सप्त शताः ताः तु प्रमदाः ताम्र लोचनाः | कौसल्याम् परिवार्य अथ शनैः जग्मुर् धृत व्रताः ||(2-34-13)"ஆகும். இதில் ராமன் தந்தையின் உண்மையான பிள்ளையாகவே உள்ளான். ஆனால், இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53 வது அத்தியாயம்) ஏன் ராமன் கடவுள் பதவிக்கு தகுதி இல்லாதவன் என்பதை சுட்டிக் காட்டிட நாம் குறைந்தது மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறலாம் - முதலாவது, வாலி வதை, இரண்டாவது சீதைக்கு நடந்த கதி, இறுதியானது சம்புக (Shambuka) வதம் ஆகும். தனது மனைவி சீதையை ராவணனிடம் இருந்து மீட்டுக்கொள்ள, ராமன் சுக்கிரீவன், அனுமான் உதவியை நாடினான். ஆனால்,வாலியை வதை செய்தால் மட்டுமே தாம் உதவிசெய்வதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய வழியை ஆராய்ந்தனர். போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு, வாலியை வலியப் போருக்கழைத்தான். அப்படியே யுத்த தருமத்திற்கு எதிராக, மரத்திற்கு பின் ஒழித்து நின்று, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த வாலி மண்ணில் சாய்ந்தான். அப்பொழுது, ‘ஒளித்து உயிர் உண்ட நீ’ என்று வாலி, ராமனை சாடினான். "இல் அறம் துறந்த நம்பி, எம்மனோர்க்கு ஆகத் தங்கள்,வில் அறம் துறந்த வீரன், தோன்றலால், வேத நூலில்,சொல் அறம் துறந்திலாத, சூரியன் மரபும், தொல்லை நல் அறம் துறந்தது ‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான்." என்கிறான் கம்பன். இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளையும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான் என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர வாலி நகைத்தானாம்.எப்படி ஒரு கடவுள் என கருதப்படும் ராமன் இப்படியான குற்ற செயல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக செய்வான்? வாலி வதம் சுக்கிரீவனுக்காக இராமர் செய்தது போல் இருந்தாலும், இராமர் தன் சுயநலனுக்காகவே வாலியை கொன்றார். இராமர் நினைத்திருந்தால் சுக்கிரீவனையும் வாலி யையும் ஒற்றுமைப்படுத்தியிருக்க முடியும். எல்லா அறமும் தெரிந்த இராமர் சகோதரர்களை ஒற்றுமை ப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ராமனைப் பொதுவாக "மரியாதா புருஷோத்தம்"[Maryada Purushatam] என்று வருணிப்பது வழக்கம். அதாவது, அவர் நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும் மனிதர்களுள் மிகச் சிறந்த மனிதராகவும் இருப்பவரும் என்பது இதன் பொருள். அப்படியானவர் இப்படி செய்யலாமா? மரியாதா என்பது நல்லொழுக்கம் ஆகும். மேலும் வேறு ஒருவருடன் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில், மறைந்து இருந்து கொல்கிறான். இது ஒரு கோழைத்தனம்! திருமால் எடுத்த அவதாரங்களில் இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் மிக முக்கயமானவை. இந்த இரு காப்பியங்களிலும் வீரம் செறிந்த வாலியும் கர்ணனும் வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி. ஆகவே வாலி வதையை பார்க்கும் பொழுது, ராமன் "மரியாதா புருஷோத்தம்"(मर्यादा पुरुषोत्तम) என்று அழைப்பதற்கு எந்த தகுதியும் அற்றவனாகவே தெரிகிறது. இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் சாதாரண மனிதனாகவே தோன்றுகிறான். தனது பேரழகியான மனைவி சீதை, மற்றவர்களால் பேராசைப்படுவதை கண்டு சந்தேகம் நிறைந்த கண்ணோடு பார்க்கிறான். என்றாலும் கண்களில் நீர் வழிகிறது. அகலிகை கௌதம முனிவரின் மனைவி. தேவர்களின் தலைவனான இந்திரன் அவள் மேல் ஆசை கொண்டு, கௌதம முனிவரின் வேடத்தில் வந்து அவளை வன்புணர்ச்சி செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாற சாபமிட்டார். அப்படி கல்லாகிய அகலிகைக்கு ராமன் விடுதலை அளிக்கிறான். ஆனால், தனது மனைவியை அதற்கு எதிர் மாறாக நடத்துகிறான்? மிகவும் பலமாக தட்டி கூறும் ஆதாரம், யுத்த காண்டத்தின் இறுதியில் வருகிறது. அங்கு ராவணனை கொன்று சண்டையை முடிவிற்கு கொண்டு வந்த பின், ராமன் முதலாவதாக செய்தது, அண்ணனை காட்டிக் கொடுத்து ராமனுக்கு ஒத்தாசை கொடுத்த, விபீடணனுக்கு (விபீஷணனுக்கு) இலங்கை அரசனாக முடி சூட்டியது. அதன் பின்பு தான், இராமன் அனுமனை அழைத்து சீதையைக் கண்டு செய்தி சொல்லி வருமாறு அனுப்புகிறான் தவிர கூட்டிவருமாறு கூறவில்லை. அது மட்டும் அல்ல, 10 மாதத்திற்கு மேல் தனிமையில், தன்னை பிரிந்து சிறையில் வாடிய தன் மனைவியை, ஓடோடி அல்லவே இந்த ராமன் கூட்டி வந்திருக்க வேண்டும்? ராமன் சொல்லி அனுப்பிய செய்தி என்ன தெரியுமா? தான் சுகமாக நலமாக இருக்கிறேன்?ஆனால், சீதையை பற்றி ஒன்றுமே விசாரிக்க வில்லை? என்றாலும் பின் சீதை ராமனிடம் போன பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா? கண்கள் கண்ணீர் சோர, தன் காலடியில் விழுந்து வணங்கிய சீதையை அடுத்த கணம் அவளைப் பார்த்த பார்வையில், கருணை மறைந்து ராமனிடம் சீற்றமே தென்பட்டது. அந்தச் சீற்றம் கண்களில் மின்ன, இராமன் பேசுகிறான், "சீதா! நீ இராவணனது சிறையில் நெடுநாள் இருந்தாய். அங்கு உணவினை விரும்பி உண்டாய். ஒழுக்கம் பாழ்படவும், நீ மாண்டிலை. அச்சம் தீர்ந்து இவண் மீண்டது ஏன்? இராமன் விரும்புவான் என்று கருதியா?" என கோபத்துடன் கேட்டான். "உன்னை மீட்கவென்று நான் கடலில் அணை கட்டினேன். அரக்கர்களுடன் போராடி னேன். இராவனனைக் கொன்றேன். மனைவி யைக் கவர்ந்தவனோடு போரிட்டு அழிக்கவில்லை எனும் கெட்ட பெயர் எனக்குக் கிட்டிவிடாதவாறு இலங்கை வந்தேன். அங்கு, நீ இருந்த இடத்தில் மாமிசங்களை உண்டாயோ? மதுவினை அருந்தினாயோ? கணவனைப் பிரிந்த கவலை சிறிதுமின்றி இனிதாகக் காலம் கழித்தாயோ?" என்று தொடர்ந்து கூறினான். "நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே. நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!" [கம்ப ராமாயணம் யுத்த காண்டம்.] என்று வெகுண்டு கூறினான்,இரு கண்களிலிருதும் குருதியும் கண்ணீரும் கொட்ட, அவமானத்தால் தலை குனிந்து , நிலத்தினை நோக்கி நிற்கும் சீதை, புண்ணை அம்பினால் குத்திக் கிளறியது போல கடும் துன்பத்தால் பெருமூச்செறி ந்தாள். இப்படி எந்த சாதாரண மனிதன் கூட தன் மனைவியிடம் கூறமாட்டான்? ஆனால் ராமன் கூறுகிறான். வால்மீகி அதை அப்படியே அத்தாட்சி படுத்துகிறான். ஆனால்,கம்பன் கொஞ்சம் சாந்தமாக கூறுகிறான். கம்பன் பல இடங்களில் உண்மையை அப்படியே கூறாமல் கொஞ்சம் மாற்றி மாற்றி கூறிவிட்டான். எனவே ராமனின் ஐயத்தை நீக்க, சீதை தீக்குளித்தாள் [அக்னி பிரவேசம் செய்தாள்]. அதன் பிறகு தான் ராமன் அவளை அயோத்திக்கு கூட்டிப் போனான். அங்கு "அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச, விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி." என்று கம்பன் கூறியது போல ராமன் திருமுடி சூடினான் [பட்டா பிஷேகம் ]. இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். என்றாலும் அரசன் அரசி வாழ்க்கை மிக விரைவாக குழப்பத்தில் முடிந்தது, நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக் கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். எந்த வித முன் ஜோசனையும் இன்றி, இந்த கெடுக்கும் நோக்கம் கொண்ட பொய்த்தகவலில் இருந்து தன்னை விலக்க ,சீதையை கைவிட்டு கானகம் அனுப்பினான். எப்படி, தனது மனைவியை, அதுவும் கர்ப்பவதியை, யாரோ ஒரு துணி வெளுப்பவர் ஒருவர் அவளின் தூய்மையை கேள்வி கேட்டார் என்ப தற்காக, தன்னம் தனியாக காட்டுக்கு அனுப்ப மனம் வந்தது?கணவனுக்கு தெரியாதா அவளின் தூய்மை, கள்ளம் கபடம் அற்ற அவளின் பெண்மை? அவனுக்கு அவளின் வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் தனது பெயரும் தனது புகழும் மட்டுமே. வதந்தியை தடுக்க அல்லது நிறுத்த ஒரு அரசன், ஒரு கணவன் எதை செய்வானோ, அதில் ஒன்றையாவது ராமன் செய்யவில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 04 தொடரும்
  17. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 23 அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞரும் மரபியல் மூலம் மனித இடப்பெயர்ச்சி பற்றி அறியும் திட்டத்தின் இயக்குனருமான டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் [Dr Spencer Wells], தனது மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற புத்தாகத்திலும் "மரபணு பாவித்து மனித புலம் பெயர்வை பற்றிய ஆய்வில் புதைந்து கிடக்கும் ஒரு இனத்தின் குலமரபு அல்லது மூதாதையர்" [“Deep Ancestry Inside The Genographic Project”] என்ற புத்தாகத்திலும் பல விடயங்கள், உதாரணமாக, ஸ்டெப்பி [steppe / புல்வெளி] பகுதியில் இருந்து வந்த ஆரிய படை யெடுப்பாளர்களினது தனித்துவமான அடையாளம், மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1 மரபுகாட்டி M17 (GENETIC MARKER M 17) என விளக்கி உள்ளார். மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, மரபணு அடை யாளம் காட்டி அல்லது குறியீடு M168, கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்ரிக்காவில் தோன்றியது. பின் கிட்ட தட்ட அதே காலப்பகுதியில் அதிகமாக, தெற்கு ஆசியாவில் M130 (M168-M130) என்ற மரபணு அடையாளம் காட்டியை கொண்ட மனிதன் தோன்றினான். அப்ப தான் இவனின் அண்மைய முன்னோர்கள் முதலாவது ஆஃப்ரிக்காவிற்கு வெளியேயான புலம்பெயர்வு ஆரம்பித்து இருந்தார்கள். அவர்கள் ஆஃப்ரிக்காவின் கடற்கரையோரமாக தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் ஆகும். இந்த உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசுவாக, தமிழ் நாடு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என உலக மரபணு ஆய்வாளர்கள் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் [oxford university] கூடி அறிவித்து உள்ளார்கள். இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது. இன்று இந்த கடற்கரையோர அடையாளம் காட்டி, இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9 ,40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த 'இந்து குஷ்' (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத்தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று 'இந்து குஷ்'ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோசோம்மில் [chromosome/மரபணுச் சரம்/மரபணுத் தாங்கி] திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில் கணிசமான அளவு இல்லை - மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத் தட்ட 50 சத வீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இப்படி M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது. ஈலாம் (ஈலம் / Elam) என்பது இன்றைய தென் மேற்கு ஈரானில், சுமேரியாவிற்கு சற்றுக் கிழக்கில் செழித்திருந்த கிட்டத் தட்ட கி மு 2700 ஆண்டை சேர்ந்த ஒரு பண்டைக்கால நாகரிகம் ஆகும். அங்கு பேசப்பட்ட ஈலம் மொழியும் திராவிட, சிந்து வெளி, சுமேரிய மொழிகள் போல் ஒரு ஒட்டுநிலை [agglutinative ] மொழியாகும். ஆகவே ஒரு வித திரா விட மொழியே பண்டைய ஈரானிலும் பேசப்பட்டதாக கருதப்படுகிறது. இதனால் சில அறிஞர்கள் ஈல-திராவிட மொழிக் குடும்பம் [Elamo-Dravidian languages] என்ற ஒரு கருதுகோளை / கருத்தினை முன்மொழிந்தார்கள். இவைகளில் இருந்து நமக்கு தெரிய வருவது, ஆரியர்கள் போலவே திராவிடர்களும் இந்தியாவிற்கு வெளியில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆகும். இவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஈரானிற்கும், பின் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு மேற்கு நோக்கி மெசொப்பொத்தேமியாவிற்கும் மற்றக் குழு, அதிகமாக ஒரு பெரிய சனத்தொகை கொண்ட கூட்டம், கிழக்கு பக்கமாக இந்தியாவிற்கும் போயிருக்க வேண்டும். என்றாலும் இதற்கான காரணங்கள் புரியவில்லை. இந்தியாவின் எல்லா குடி மக்களும், அதாவது ஆஸ்திரலோயிட் மக்கள், திராவிடர், மங்கோலிய இனம், ஆரியர் [காக்கேசிய இனத்தவர் / caucasian] போன்றவர்கள் [Austrics, the Dravidian, the Mongolians and the Aryans] எல்லோரும் உண்மையில் சில நேரங்களில், ஆஃப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் பகுதிகளில் இருந்து வெவ்வேறு காலங்களில் குடியேறியவர்கள் ஆகும். ரஷ்ய நிபுணர் யூரி வெலன்டினோவிச் க்நோரோ சாவ் [Yuriy Valentinovich Knorozov] சிந்து வெளி மொழி திராவிட மொழியாக இருக்கவே கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக யோசனை கூறுகிறார். மொகஞ்சதாரோவில் கண்டு அறியப்பட்ட எழுத்துகள் தமிழ் எழுத்துகளே எனவும், அங்கு நிலவிய நாகரிகம் திராவிட நாகரிகமே என்றும் ஹென்றி ஹீராஸ் [Henry Heras / 1888 - 1955] பாதிரியார் காரணகாரியங்களுடன் விளக்கியுள்ளார். சிந்து சம வெளி முத்திரைகளை வாசித்த டாக்டர் ஆர். மதிவாணன் [Dr. R. Mathivanan], இது தமிழ் எழுத்தே என உறுதி படுத்துகிறார். மேலும் சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி [Dr M Vaavoosi] (இயக்குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்து வெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஏகாதிபத்தியம்[ Ancient Thamizh cultural imperialism on Indus and its beyond / 2008] என்ற நூலில் சிந்து - வெளி முத்திரைகளைப் பற்றிய தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார். சிந்துவெளி மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதை வால்டர் ஃபேர் சர்விஸ் [Dr Walter Ashlin Fairservis / அமெரிக்கா] போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும் என்பதே இவர்களின் ஆய்வின் முடிவாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 24 தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.