Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"விடியலுக்கு காத்திருக்கிறேன்"
"விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக்காமல், முன்னையதைவிட கேவலமாக இன்று இருக்கும் இந்த சூழ்நிலையில் தான், நானும் ஒரு தமிழனாக, இலங்கையின் பழம் குடிகளின் ஒருவனாக, தலை நிமிர்ந்து, என் சொந்த மண்ணில் வாழ, விடியலுக்காக காத்திருக்கிறேன்! இந்த சூழலில் தான் 21 செப்டம்பர் 2024 ஜனாதிபதி தேர்தல் நடை பெறவுள்ளது. ஆனால் இன்னும் தமிழ் தலைமைகள் விளைத்ததாக தெரியவில்லை. ஒற்றுமை உடைந்து உடைந்து சுக்கு நூறாக உடைந்து பறக்கிறது? ஏன் ஒன்றைப் பேசி வேறு ஒன்றை செய்வது தம்மை தலைவர்கள் என்று கூறுபவர்களிடம் சாதாரணம் ஆகிவிட்டது?? எங்கே ஒற்றுமை ? எங்கே புரிந்துணர்வு?? எங்கே நீதி??? பத்தாம் வகுப்பில் நான் படித்த, எமிலி டிக்கின்ஸன் [Emily Dickinson] என்ற கவிஞரின் பாடல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. "I many times thought Peace had come When Peace was far away — As Wrecked Men — deem they sight the Land — At Centre of the Sea — And struggle slacker — but to prove As hopelessly as I — How many the fictitious Shores — Before the Harbour be" "தூரத்தில் விடியல் [சமாதானம்] இருக்கும் பொழுது பலதடவை விடியல் வருமென்று எண்ணினேன்! கடலின் மையத்தில், குழம்பிய மனிதனாக நிலத்தை, கரையை பார்ப்பதாக நினைத்தேன்! ஆனால், அவை எல்லாம் பொய் நம்பிக்கை அற்றது, ஏமாற்று வித்தை! உண்மையான விடியலுக்கு, [துறைமுகத்திற்கு] முன், எத்தனை கற்பனைக்கரைகள் இன்னும் காண்பேன்!" ஆமாம், தூரத்தில் விடியல் தெரிவது போல, வானில் 4 ஜூன் 1987 இல் பூமாலை என்ற ஒரு செயல் திட்டத்தின் கீழ், இந்தியா விமானப் படை, யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து, அங்கு உணவுக்காக வாடிக்கொண்டு இருந்த மக்களுக்கு, என்னையும் உட்பட, 25 தொன் [tons] எடையளவு உணவு பொதிகளை போட்டது. அதை தொடர்ந்து, இலங்கை - இந்தியா ஒப்பந்தம் 29 ஜூலை 1987 கைச்சாத்திடப்பட்டது, ஒரு உண்மையான கரையை காட்டுவது போல அன்று எனக்கு இருந்தது. என்றாலும் எமிலி டிக்கின்ஸனின் பாடலை நான் மறக்கவில்லை. அதை இன்றும் இப்பொழுதும் 20 september 2024 யிலும் மறக்கவில்லை! உச்சத்தில் கிட்ட தட்ட 80,000 ஆட்பலம் கொண்ட இந்திய அமைதி காக்கும் படை 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அப்பொழுது நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்துகொண்டு இருந்த காலம். எனவே நானும் என் குடும்பமும், அமைதி பிறந்து விட்டது என்ற நம்பிக்கையில், 270 கிலோ மீட்டர் பயணமாக யாழ் புறப்பட்டோம். இருண்ட குகைக்குள் வெளிச்சம் வந்ததுபோல, ஒரு விடியல் அண்மையில் தெரிவது போன்ற மகிழ்வுடன், நாம் பேருந்தில் சென்றுகொண்டு இருந்தோம். நாம் 221 கிலோ மீட்டர் கடந்து, ஆனையிறவு பாலம் வரும் வரை அமைதியாக இருந்த எம் பயணம், திடீரென ஒரு குழப்பத்தில் முடிந்தது. அங்கு முகாமிட்டு காவலுக்கு நின்ற அமைதி படை, எம் பேருந்தை சூழ்ந்து சோதனை செய்ததுடன், ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகுது என்றும், உடனடியாக கெதியாக யாழ் சென்று, வீடு செல்லும் படியும் எச்சரித்து அனுப்பினர். எமக்கு ஒரே திகைப்பும் பெரும் ஆச்சரியமும். என்ன நடந்தது? எமக்கு ஒன்றுமே புரியவில்லை?. நாம் எதிர்பார்த்தது அமைதியும், சம உரிமையுடன் ஒரு மனிதனாக தலை நிமிர்ந்து தமிழனாக, தமிழ் பண்பாட்டுடன் வாழ்வது மட்டுமே? ஆனால், மீண்டும் ஓட்டமும், பதுங்கு குழியும், தமிழன் என்று தலை குனிந்து ஒழிந்து திரியவல்ல? என்றாலும், இப்ப யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் வந்துவிட்டதால், இனி திரும்பவும் முடியாது. ஆகவே, நடப்பது நடக்கட்டும் என்று சில நம்பிக்கைகளுடன் மிகுதி பயணத்தை தொடர்ந்தோம்! அதும் இன்றும் தொடர்கிறது!! நாம் யாழ் நகரை அண்மிக்கும் முன்பே சண்டை ஆரம்பித்துவிட்டது. எம்முடன் எம் குழந்தைகளும் பயணிப்பதால், நாம் கலங்கி, எமிலி டிக்கின்ஸன் [As Wrecked Men] கூறியது போல சிதைத்த மனிதனாக இருந்தாலும், எம்முடைய முன்னைய அனுபவங்கள் எமக்கு தைரியம் தந்தன. ஒருவாறு அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக, குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டும் சென்றோம். அப்பொழுது யாழ் கோட்டையில் இருந்து ஷெல் அடிக்க தொடங்கிவிட்டார்கள். அதில் சில எமது தலைக்கு மேலாக போவதையும், வெடித்து சிதறும் சத்தமும் ஒரு பீதியை உண்டாக்கினாலும், ஒருவாறு சமாளித்துக்கொண்டு வீடு சேர்ந்தோம். என்றாலும் குழந்தைகளின் அழுகையும் பயமும் எமக்கு மேலும் கவலை அளித்தது. அன்று இரவு ஏறக்குறைய முழுநேரமும் நாம் பதுங்கு குழிக்குள் தான் இருக்கவேண்டி இருந்தது. பயண களைப்போ , நித்திரையோ எம்மிடம் இருந்து தூர விலகிவிட்டது. அது மட்டும் அல்ல, எந்த விடியலை எதிர்பார்த்தமோ, அது இப்ப பின்னோக்கி நகருவதைத் தான் நாம் உணர்ந்தோம். ஆமாம் இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்து கொண்டு இருந்தது! பிரித்தானியாவிடம் இருந்து கிடைக்காதது, இலங்கை அரசிடம் இருந்ததும் கிடைக்காதது, இப்ப இந்தியா அமைதி படையிடம் இருந்தும் கிடைக்காமல் விலகுவது நன்கு தெரிந்தது. இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்ததுதான் எனோ ? "மனிதனே உனக்கேன் அலட்சியம்; விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் என்னும் விதையை; தூவுங்கள் இரக்கம் என்னும் கருணையை; பிறக்கட்டும் மனிதம் மீது கண்ணியம்; பொழியட்டும் அன்பென்னும் பெருமழை; வளரட்டும் மனித நேயம், அங்கே விடியட்டும் விடியல்; பிறக்கட்டும் உதயம்; வடியட்டும் சோகங்கள்; முடியட்டும் குரோதங்கள்; தொடரட்டும் உறவுகள்; தொழுவட்டும் விடியலை எம் கரங்களும்; மரம் செடி கொடிகள் போன்று மணக்கட்டும் மண்ணில் சமதருமம்!" என் மனம், பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டும் தன் பாட்டில் இப்படி முழங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் அது ஒரு ஆறுதலாகவும் இருந்தது உண்மையே! இந்தியா இலங்கை பேச்சு வார்த்தையின் பொழுது, கைக்கு எட்டுவது போல இருந்த விடியல், விடியாமலே, மேலும் கடும் இருட்டாக மாறி, இன்றுவரை எம்மை, எம் இருப்பை குழப்பத்தில் மூழ்கடித்துக்கொண்டு தான் இருக்கிறது. என்றாலும் என் நம்பிக்கை குறையவில்லை! ஏறத்தாழ முப்பத்தி ஐந்து அல்லது முப்பத்தி நாலு ஆண்டுகள் கழித்து, மார்ச்சு மாதம் 31 திகதி, 2022 ஆண்டு சிங்கள இளைஞர்கள் சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு தமது வரலாறு காணாத போராட்டத்தை தொடங்கினர். அவர்கள், இன, மத வேறுபாட்டை தாண்டி, தமிழர்களின் புரையோடி இருக்கும் சில பிரச்சனைகளையும் உள்வாங்கி, கடந்த 74 ஆண்டுகளாக, இனத்துவேசத்தை வளர்த்து, தமது இருப்பையும், அதே நேரத்தில் சரியான பொருளாதார திட்டம் இல்லாமல், நாட்டை குட்டிச் சுவராக்கி, தம் வளத்தை பெருக்கியவர்களை இனம் காட்டி துரத்தும் தமது போராட்டத்தை அரசுக்கு எதிராக செய்து வெற்றியும் கண்டார்கள்! ஆனால் அது வெற்றியா ? சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கவும் !! அதன் உண்மையான நிலை இன்று என்ன ?? மாற்றம் உண்மையில் ஏற்பட்டதா?? மகிழ்வதா அழுவதா எனக்குப் புரியவில்லை ??? அது உண்மையில் நல்ல ஒரு அடையாளமாக, ஆனால் உறங்கிவிட்டது!! ஏனென்றால் இன்றும் கூட குருந்தூர் மலை பிரச்சனை தமிழர்களை வேதனை படுத்திக்கொண்டு இருக்கிறது. இனவாதம் பேசும் சில புத்த பிக்குகள் மற்றும் கும்பல்கள் ராணுவ உதவியுடன் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை நிறுவவும், அதை சாட்டாக வைத்து, காணிகள் பறிக்கவும், குடியேறவும் வரிசையில் நிற்பதும் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றே !! இதை காலிமுக இளைஞர்கள் அல்லது சமதர்மம் பேசுபவர்கள் கட்டாயம் கவனத்தில் எடுக்கவேண்டும்!! எடுப்பார்களா ? ஆனால் நடப்பதோ வேறுவிதம். தமிழ் தலைமைகள் ஒற்றுமை அறுத்து எங்கெங்கோ பாய்கிறார்கள் ? ஒருவரை ஒருவர் திட்டுகிறார்கள் ?? தான் என்ன கூறினோம் என்பதையே அடுத்த கணமே மறந்து பித்தர்களாக , வெறியர்களாக எதோ எதை எதிர்பார்த்து புலம்புகிறார்கள்! கத்துகிறார்கள் !! சந்திரனை பார்த்து குறைக்கும் நாய்கள் கூட தோற்றிடும் !!! என்றாலும் பரிபாடல் 19 கூறியது போல, பசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுடனும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் மீன் பூத்த வானம் போல், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பூத்துக் கிடந்தன என விரைவில் வரலாறு கூறட்டும்! இதைவிட என்னால் எதை எதிர்பார்க்க முடியும்!! "பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள், எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை, உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம், பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்; நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க மணந்தவை, போல, வரை மலை எல்லாம் நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்; விடியல் வியல் வானம் போலப் பொலியும் நெடியாய்! நின் குன்றின்மிசை." [பரிபாடல்19] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பணம்" , "பேதங்கள் ஒழிப்போம்" & "அறியாமை விலகட்டும்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"பணம்" , "பேதங்கள் ஒழிப்போம்" & "அறியாமை விலகட்டும்"
"பணம்" "பணம் விளையாடும் அரசியல் இங்கே படித்தவர் கூட விலை போவார்! படுக்கை அறைக்கும் கதவு திறப்பார் பகட்டு வாழ்வில் எதுவும் நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பேதங்கள் ஒழிப்போம்" "தாழ்வு மனப்பான்மையை தள்ளி வைத்து வாழ்வு சிறக்க திமிரோடு நின்றால் ஆழ் கடலிலும் தரை காண்பாய்!" "மதம், சாதி வேறுபாடு தாண்டி இதயசுத்தியுடன் மனிதம் நாம் வளர்த்து வாதங்கள் விட்டு பேதங்கள் ஒழிப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................ "அறியாமை விலகட்டும்" "அறியாமை விலகட்டும் நிம்மதி பிறக்கட்டும் அறிவு பெருகட்டும் அன்பு வளரட்டும் சிறிய விடயத்திலும் பெரியது இருக்கும் அறிந்து கொண்டால் வாழ்வு சிறக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"
எல்லோருக்கும் நன்றிகள்
-
அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை"
அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை" "சிந்தனை" "சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால் வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்! புரிந்த வழியில் நேராக சென்றால் சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்! கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால் இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பாமாலை" "பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன் போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்! பார்த்து என்னை அருகில் அழைத்தாள் அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"யாழ் மீனவனின் துயரம்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"யாழ் மீனவனின் துயரம்"
"யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இந்நாளிலும், குறிஞ்சி வாழ்ப் பழங்குடி மக்களுடன் தங்கள் தொன்மையை இழக்காமல் பண்பாட்டைச் சமரசம் செய்து கொள்ளாமல், கால ஓட்டத்தை எதிர்த்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாயன ஒரு மீனவ சமூகத்தில், ரவி என்ற எளிய மீனவன், இலங்கையின் வடக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்தின் ஒரு பாரம்பரிய மீனவ கிராமத்தில் வாழ்ந்து வந்தான். ரவியின் வாழ்க்கை எப்போதும் அலைகளின் தாளத்திலும் வலைகளின் இழுப்பிலும் சுழன்று கொண்டிருந்தது. என்றாலும் அவனது ஏக்கம் எல்லாம் கொந்தளிக்கும் கடல் அலைகளோ, தூக்கி எறியும் புயல் காற்றுகளோ அல்ல, அதை அவன் எப்படி சமாளிப்பது என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு, அவனின் பரம்பரையின் அனுபவம் அவனுக்கு கற்றுக் கொடுத்து விட்டது. ஆனால் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் புகுந்து, கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுத்தும் இழுவைப்படகு, மீன்பிடியில் அத்துமீறி ஈடுபடுவதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தும் அந்நிய நாட்டு மீனவர்களின் கொடுமை தான் அவனின் முதன்மை ஏக்கம். தன் குடும்பம், தன் சமுதாயம் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான் அவனின் ஒரே கனவு. அதேநேரம் பொதுவாக எல்லா இளம் சமூகத்தினர் போல, காதலிலும் அவன் விழாமல் இருக்கவில்லை. அவனின் காதலியின் பெயர் மீரா, அவள் கூந்தல் ஆற்றின் நீரோட்டத்தால், வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல் இருக்கிறது, நெற்றியோ பிறைநிலா போல் இருக்கிறது, புருவம் வில் போல் வளைந்தும், அழகிய இளமையான குளிர்ந்த கண்ணுடன் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய். அந்த கொஞ்சும் பேச்சுத்தான் அவனின் இதயத்தை நிரப்பியது என்றே கூறலாம்? மீராவுடனான ரவியின் காதல், கடற்கரையின் தாள அலைகளுக்கு மத்தியில், எளிமையாக பகிர்ந்த உணர்வுகள் மற்றும் அவர்களால் திருடப்பட்ட மகிழ்ச்சியின் இழைகளால் பின்னப்பட்ட ஒரு நாடா! அவள் தன் மீனவ தந்தையின் மீன் பிடிப்புகளை, கூடையில் சுமந்து விற்கும் பொழுதுதான் அவன் அவளை முதல் முதல் சந்தித்தான். "நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே" நிலவையும் அதனோடு சேர்ந்த இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலையும், அதன் கரையிலுள்ள சோலையையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுமுடைய அவனின் அதே கிராமத்தில் தான் அவளை சந்தித்தான். சூரியன், தினம் முத்தமிட்ட இதமான தனது தோலுடனும், கடல் மாதாவின் பாடலை எதிரொலிக்கும் சிரிப்புடனும் மீரா ரவியின் மனதில், உணர்வில் ஒரு விறுவிறுப்பைக் என்றும் கொடுத்துக் கொண்டுவந்தார். மணற்பாங்கான கரையில் அவர்களின் காதல் ஒரு மென்மையான நடனம் போல் இருந்தது, அங்கு அலைகளின் ஒலி அவர்களின் காதல் இசையாக செயல்பட்டது. ரவியும் மீராவும் அடிக்கடி தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, கரையோரம் கைகோர்த்து நடந்து, அன்பும் மிகுதியும் நிறைந்த எதிர்கால கனவுகளைப் பகிர்ந்துகொண்டனர். இருவரும் தங்கள் கால்களை அலைகளில் நனைத்தபடி கைகள் உடல்களை அணைத்தபடி, “இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே” ஆக அங்கு கொஞ்ச நேரம் நடந்து இயற்கையின் அழகை ரசித்தனர்; “ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் செய்தாள் ” கம்பனின் காதல் காட்சிப் படைப்பு இவர்களில் அப்படியே மாறாமல் இருந்தது. கோதாவரி ஆற்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு, அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன் ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் ராமனின் நடையுடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ந்தது ரவியிலும் மீராவிலும் வெளிப்படையாகவே தெரிந்தது. அங்கு அச்சம், மடம், நாணம் ,பயிர்ப்பு என்று ஒன்றுமே இருக்கவில்லை, அவை கவிதைக்கு அழகேற்ற பாவிக்கும் வார்த்தைகளே என்பதை அவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள், ஆனால், "காதல் என்பது இயற்கை தரும் போதை", அதிலும் " முதல் காதல் என்பது ஒருத்தர் உணர்த்தும் உணர்ச்சிகளை காதலிப்பது" என்பதின் உண்மையை ரவி அன்று உணரவில்லை. அவன் " முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது", அப்படித்தான் மீராவும் என்று தான் எண்ணினான். வங்காள விரிகுடாவின் பரந்த நிலப்பரப்பில், தன் ஊரின் கடற்கரையில், ஒரு பாறைகளின் மீது அமர்ந்து நாளை தான் கடலுக்கு புறப்படும் திட்டத்தைக் கூறி, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வானத்தை வரைந்து, அடிவானத்திற்கு கீழே சூரியன் மறையும் தருவாயில், மீராவின் முத்தத்துடன் வீடு திரும்பினான். ஒரு மகிழ்வு தரக்கூடிய சுறுசுறுப்பான அடுத்தநாள் காலையில், சூரியன் அடிவானத்தை தங்க நிறத்தில் வரைந்த போது, ரவி தனது காதலி மீராவிடம் விடை பெற்றுக் கொண்டு, இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் தன் திருமணத்துக்கு நிறைய மீன்கள் தினமும் பிடிபட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் "சூர்யா" என்ற தனது படகில் புறப்பட்டான். ஆனால் இந்த நாள் அவனது வாழ்க்கையில் ஒரு வேதனையான அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அவன் மீராவின் அழகில், அவளின் காதலில், அவளின் கொஞ்சும் பேச்சில் எங்கு எங்கேயோ பறந்து கொண்டு இருந்தான். சில வேளைகளில் ரவி தனது படகான "சூர்யா" வில் மீன்பிடிக்க, திறந்த கடலின் நீரில் பயணிக்கும்போது, மீரா சில சமயங்களில் அவனுடன் செல்வாள். படகின் மென்மையான அசைவும் உப்பு நிறைந்த காற்றும் அவர்களிடையே பகிரப்பட்ட சொல்லப்படாத வாக்குறுதிகளுக்கு சாட்சிகளாக இருக்கும். கடல், அதன் பரந்த மற்றும் கணிக்க முடியாத தன்மையுடன், அவர்களின் அன்பின் ஆழத்தை பிரதிபலிக்கும். ஆனால் இம்முறை அவன் தனியாவே தன் கூட்டாளிகளுடன் புறப்பட்டான். தாராளமாக மீன்பிடிபடும் என்ற நம்பிக்கையுடன் அவன் தனது கடற் பயணத்தை மேற்கொண்ட போதும் , அவர்கள் எதிர்பாராத சவாலை எதிர் கொண்டனர். இந்திய மீன்பிடி படகுகள், நவீன தொழில் நுட்பத்துடன், கூடிய எண்ணிக்கையில், விலைமதிப்பற்ற இலங்கைக்கே உரித்தான கடற் பரப்பில் தமது இழுவை வலைகளை வீசியது மட்டும் அல்ல, இலங்கையின் மீன் பிடி வளத்தை சேதப்படுத்தியதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப் படுத்தினர். இவர்களின் அத்துமீறிய செயல்களால் தனது மட்டும் அல்ல, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் நழுவுவதைக் கண்டு ரவி விரக்தியும் கோபமும் அடைந்தான். கிழிந்த வலைகள் வெறும் நூல்களும் கயிறுகளும் அல்ல; அவை ரவியின் அபிலாஷைகளின் உயிர்நாடியாக இருந்தன. ஒவ்வொரு முறையும் கிழிந்த வலைகளை சரிசெய்து மீண்டும் மீன் பிடியில் ஈடுபட்டாலும், அவன் தனது நம்பிக்கை மேலும் அவிழ்ப்பதைக் கண்டான். அவனை கடலுடன் இணைத்த ஒரு காலத்தில் துடிப்பான இந்த நூல் வலைகள் இப்போது அவனது சிதைந்த கனவுகளுக்கு ஒரு உருவகமாக மாறியது. ரவி … நான்கைந்து பேருடன் சாதாரண படகில் இரவில் தான் கடலுக்குள் செல்வன். அவர்கள் எல்லோரும் தாய் அல்லது மனைவி கொடுத்து அனுப்பும் கஞ்சியோ அல்லது பழைய சோறோ கையில் வைத்திருப்பர். இரவு முழுக்க கண் விழித்து, வலை வீசுவார்கள். சில சமயம் நல்ல, தேவைக்கு அதிகமாக மீன்கள் கிடைக்கும். உடனே அடுத்த நாளே திரும்புவர். பல சமயங்களில் மீன்கள் கிடைக்காது. அதனால் படகில் சென்ற இவர்கள், இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று செல்வர் மீன்கள் கிடைக்கும் வரை. கையில் இருக்கும் குடிநீரும் தீர்ந்திருக்கும். அரை வயிறுதான் சாப்பிடுவர். இவர்கள் வர இதனால் தாமதிக்கும் பொழுது பெண்கள் எல்லாம் கடல் அன்னையையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள் கண்களில் கண்ணீரோடு. இது தான் அவர்களின் வாழ்க்கை. இந்த எளிய வாழ்க்கைக்கு தான் இந்த இந்திய மீனவர்கள் கொடுமை செய்கிறார்கள். அது தான் ரவி கோபத்துடன் இருந்தான். நாட்கள் வாரங்களாக மாறியது, ரவி தனது வாழ்க்கையைச் சந்திக்க சிரமப்பட்டான். அவனது வருமானம் குறைந்துவிட்டது, மேலும் அவனது குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சுமை தாங்க முடியாத சுமையாக மாறியது. அவனது வாழ்க்கையின் காதலாக இருந்த மீரா, தொடர்ச்சியான நிதி நெருக்கடியால் அவன் மேல் ஒரு சோர்வு கொண்டாள். அவனின் கனவுகளின் சிதைந்த எச்சங்களில் தனது எதிர்காலத்தைப் பார்க்க முடியாமல், அவள் தயக்கத்துடன் ரவியைப் பிரிந்தாள், அவள் ரவியை காதலித்தாலும், தனது எதிர்காலத்தை நல்ல மகிழ்வான வாழ்வாக அமைக்க வேண்டும் என்பதில், கூடுதலான அக்கறை கொண்டவளாகவும் இருந்தாள். தென்னிந்திய மீனவர்களுடனான அடிக்கடி நிகழும் சம்பவம் ரவியும் மீராவும் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட அமைதியைத் தகர்த்தது. சேதமடைந்த வலைகள் மற்றும் குறைந்து வரும் மீன் பிடிப்புகள், ஒரு காலத்தில் அவர்களின் உறவை வரையறுத்த மகிழ்ச்சியை, சிதைக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் அவர்களின் காதலுக்கு சாட்சியாக இருந்த கடல், மீரா விலகிச் சென்ற இந்த நாட்களில், அது இப்ப புலம்புவது போல் ரவிக்குத் தோன்றியது. கரையில் தனியாக நின்று, மீராவின் நிழற்படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மோதிய அலைகள் அவன் இதயத்தின் வலியை எதிரொலித்தன. ஒரு காலத்தில் துடிப்பான கடல் பரப்பும் அதனுடன் சேர்ந்த நிலப்பரப்பும், இப்போது பாழடைந்ததாக அவன் உணர்ந்தான். அவனுக்கு நங்கூரமாக இருந்த மீரா இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் அவன் தவித்தான். அந்தத் தனிமையான இன்றைய தருணத்தில், காற்றில் உப்பு வாசனையோடும், தலைக்கு மேல் கடற்பறவைகளின் அழுகையோடும், ஒரு காதலியை மட்டுமல்ல, அவனுடன் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொண்ட ஒரு தோழியையும் இழந்து, ஆழ்ந்த தனிமையை ரவி இன்று அனுபவிக்க தொடக்கி விட்டான். ஒரு காலத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்த கடல், இப்போது இழந்த காதல் மற்றும் கனவுகள் சிதைந்த கசப்பான நினைவுகளை அவனுக்கு உணர்த்திக் கொண்டு இருந்தது. ஆனால் மீரா இப்ப யாரோ ஒருவனின் மனைவியாக , அதே கடற்கரையில், தன் கணவனின் மடியில் கொஞ்சி செல்லம் பொழிந்து கொண்டு இருக்கிறாள். அவள் ரவியை மறந்தேவிட்டாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"
"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?" தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்! அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது . என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை . இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது . இதனால் 313 B.C,யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது . அது, அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார். “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய எழாஅல் கோடியர் தலைவ கொண்டது அறிந அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60) "you play the lute with benefits of songs – like wealth with pride, great fame, strong effort, and the three great kings owning armies with roaring drums giving combined audience in an assembly. O leader of musicians! You know what others think, and do not lose your way in ignorance. It is the benefit of your penance that we met on this path. Listen with respect to what I have to say," you with a great reputation!” {(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] "You are the ruler of Kāviri River with cool waters! He is born of great lineage of an ancient Pāndiyan ..................................................................... If you help each other and if this unity is not ruined, you will win this beneficial world that is surrounded by oceans. So, be good and kind to each other. .................................................................... In the lands of others, where mountains rise high, may the peaks be incised with the signs of the tiger with curved stripes and of the carp from the deep waters!" [Purananuru 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு.இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வழிப்போக்கன்"
"வழிப்போக்கன்" “பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with love for her family, her home, her school. Gradually expanding, this love for the native land will turn into love for your country - for its history, its past and present ” (டிஎஸ் லிகாச்சேவ் / DS Ligachev). உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற இலட்சியம் இல்லாமலே போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் இருட்டிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியைத்தேடி நடக்கிறார்கள்; சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள்; சிலர் பட்டு விரித்த பாதையில் செல்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர். இதை யாரும் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக இன்று 19 செப்டம்பர் 2024. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த பரப்புரை காலத்தில் இவை எல்லாவற்றையும் நீங்கள் நேரடியாக பார்த்திருப்பீர்கள். அனுபவித்து இருப்பீர்கள். அவர்களும் அரசியலில், அரசியல் அரங்கில் ஒரு வழிப்போக்கன் தான்! ஆனால் வேறு வழியில் அல்லது நோக்கில் !! என்றாலும் அவ்வப்போது வறுமையின் கொடும் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும், தோல்விகளையும் எதிர்த்துப் போராடிய வண்ணம் வாழ்க்கையைப் பஞ்சினும் இலேசாக மதித்துப் புன்னகை பூத்தபடியே நாடு நாடாய் பயணம் செய்து உலகின் ஒவ்வொரு மூலை முடக்கையும் ஆராயும் ஒரு “வழிப்போக்கன்.” னின் கதைதான் இது! ஒரு காலத்தில், மலைகள் மற்றும் பசுமையான வயல் வெளிக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், சிவா என்ற ஒரு வழிப்போக்கன் வாழ்ந்து வந்தான். சிவா தனது சிந்தனையில் முயற்சியில், ஒரு நிலையாக நின்று விடாமல், எல்லைகள் தாண்டி அலைந்து திரிபவனாக இருந்தான், எனவே அவனது கிராமத்தின் எல்லைக்கு அப்பால் உலகை ஆராய வேண்டும் என்ற தீவிர ஆசை அவனுக்கு இருந்தது. சிறு வயதிலிருந்தே, சிவா தொலைதூர நிலங்கள், கம்பீரமான உயர்ந்த மலைகள் மற்றும் அலைபாயும் கடல்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டான். அவனது அமைதியற்ற இதயம் எதாவது சாகசத்திற்காக ஏங்கியது, மேலும் அவன் தனது கற்பனையின் துண்டுகளாக இருக்கும் தொலைதூர இடங்களில் கால் வைக்க கனவு கண்டான். "ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர வேகாது கொஞ்சம் வெயிலும்தான் தணிய சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி" ஒரு நல்ல காலை வேளையில், தோளில் கனமான பையுடனும், கையில் ஒரு வரைபடத்துடனும், சிவா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விடை பெற்று, ஏழாறு திக்கும் ஒரு ஈ காகம் கூட அற்ற, மக்கள் பொதுவாக குறைவாகப் பயணித்த பாதையில் செல்லத் தீர்மானித்த அவன், தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினான். பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டு தான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை. பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம். அப்படித்தான் சிவா உறுதியாக தன் பயணத்தை தொடர்ந்தான். ஒரு வழிப்போக்கனாக, சிவா பரந்த நிலப்பரப்புகளை கடந்து, பல்வேறு கலாச்சாரங்களை சந்தித்தான், மேலும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தான். அடர்ந்த காடுகளின் வழியாக நடைபயணம் மேற்கொண்டான், உயரமான சிகரங்களில் ஏறி, சீறி பாயும் ஆறுகளைக் கடந்தான். அவன் கால் பாதிக்கும் ஒவ்வொரு அடியும் அவனை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதற்கும் அவனது சொந்த குணாதிசயத்தின் ஆழத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியது. ஆமாம், சிவாவுக்கு, சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை கூறிச் சென்றது ஞாபகம் வந்தது. அதை இன்று அனுபவரீதியாக கண்டும் கேட்டும் பழகியும் அவன் உணர்ந்தான். "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல ; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆறாது கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு நீர்வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புறநானூறு - பாடல் 192) அவனது பயணத்தில், சிவா இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் சந்தித்தான். அவன் இயற்கையின் அழகினை அடிவானத்தில் சூரிய அஸ்தமனத்தின் பொழுது கண்டான், அந்நியர்கள் பாடி மயக்கும் மெல்லிசைகளைக் கேட்டான், மேலும் பலவிதமான உணவு வகைகளை, மகிழ்விக்கும் சுவைகளை ருசித்தான். அவன் கணக்கில் அடங்கா சவால்களை எதிர்கொண்டான், இயற்கையில் சீற்றங்களான கொடிய புயல்களை எதிர்கொண்டான், பலதடவை தங்குமிடம் இல்லாமல் நீண்ட இரவுகளை சமாளிக்க வேண்டியும் அவனுக்கு இருந்தது , மற்றும் அறிமுகமில்லாத பிரதேசங்களுக்கு செல்லவும், விந்தையான மனிதர்களை சந்திக்கவும் வழிவகுத்தது. இவைகள் எல்லாவற்றையும் விபரமாக குறிப்பு எடுக்க அவன் தவறவில்லை. அவன் மேலும் பயணங்கள் தொடரும் பொழுது, ஒரு வழிப்போக்கனாக இருப்பதன் உண்மையான சாராம்சம் உலகத்தின் பௌதீக ஆய்வில் அல்லது வெளி உலக ஆய்வில் மட்டுமல்ல, சுயத்தை ஆராய்வதிலும் உள்ளது என்பதை சிவா உணரத் தவறவில்லை. அது மட்டும் அல்ல, அவன் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் பகிர்ந்து கொள்ள எதோ ஒரு கதை மற்றும் மற்றவர்களுக்கு கற்பிக்க எதோ ஒரு பாடம் இருப்பதை அவன் உணர்ந்தான். எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல, தாழ்மையான எளிய கிராமவாசிகள் முதல் உயர்ந்த ஞான முனிவர்கள் வரை, ஒவ்வொரு தொடர்பும் அவனது இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை பதித்து, வாழ்க்கையைப் பற்றிய அவனது கண்ணோட்டத்தை ஆழமாகவும் பரந்தளவும் வடிவமைத்தது. ஆண்டுகள் கடக்க கடக்க , சிவாவின் பயணங்கள் அவனை பூமியின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அவனை ஒரு அனுபவமிக்க பயணியாகவும், புத்திசாலியாகவும், அடக்கமாகவும், நினைவுகளின் பொக்கிஷமாகவும் மாற்றியது. அவனது பயணங்களின் சாகசங்களின் இறுதியில், சிவா தனது கிராமத்திற்குத் திரும்பினான், அவனது இதயம் நன்றியுணர்வு மற்றும் புதிய ஞானத்தால், அறிவால் நிரம்பி வழிந்தது. அவன் தனது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் எல்லோருடனும் தனது கதைகளைப் பகிர்ந்து கொண்டான், இது மேலும் பலரை, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், அது வழங்கும் அதிசயங்களைத் கண்டு அறியவும் அவர்களுக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைத்தது ! அவன், இன்று இந்த உலகில் இல்லை, ஆனால் அவனது உருவச்சிலை பலரை அவன் வழியில் உலகத்தை அறிய, ஆராய உருவாக்கிக் கொண்டே இருக்கிறது! "சிவா வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி" என்று அவனின் உருவச் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டு இருந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
நவீன கவிதை / "விடுதலையின் வித்து"
நவீன கவிதை / "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந்தியது ஒருமுறை போராடி தெருவுக்கு கொண்டு சென்றான் விதையை விதைத்தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் இவன் தான் மாண்டு தன் இனத்துக்கு மனிதனுக்கு தினை கொடுத்தான்! விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!" "ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்தீர்கள், பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள் அது தேர்தல் காலம்! ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் அது அரசு அமைத்த காலம்!! அச்சமும் வெறுப்பும் எங்கும் கூத்தாடுகிறது! விதை விதைக்க விடுதலையின் வித்தாக இனி யார் வருவார்?" "நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம் அது கனவாகி விட்டது நாங்கள் முடிக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள் இன்னும் சிலர் எரிகின்றனர் இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!" "நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன் ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது? என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக பசியோடு வருகிறேன் ஆன்மீக அம்சங்களுக்காக திறமையான வாழ்க்கை முறைக்காக விடுதலை உணவுகளுக்காக துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன் இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும் விதையாக விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!" "சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக உடைந்த இணைப்புகளுக்கு பூணாக உங்கள் இதயத் துடிப்பை என்னால் கேட்க முடிகிறது உங்கள் வேதனையும் உங்கள் கண்ணீரும் என்னை மண்ணுக்கு இழுக்கிறது விடுதலையின் வித்தாக!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 02 "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.’" -மகாத்மா காந்தி. ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேரினார்கள். அங்கு முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை வேள்விக்கு இடையூறு செய்தாள். "இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாய வாயாளுமான" என்று கம்பர் அவளை அரக்கியாக்கி பாடுகிறார். அதை தடுக்கும் முகமாக, ராமன் தனது வாலிப பருவத்தில், அறமில்லதாக இருந்தாலும், முனிவரின் கட்டளையை ஏற்று, அவளை கொலை செய்தான். தாடகை ஒரு சிவ பக்தி நிரம்பியவள்! ஒரு பூர்வ குடிப் போராளி!! ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போர். கொன்றது மட்டும் அல்ல அவளை அரக்கியாகவும் மாற்றிவிட்டார்கள். அரக்கியாகச் சித்தரித்தவன் ஆழ்பவனாகவும், கொன்றவன் கடவுளாகவும் ஆகிவிட்டார்கள். அதன் பிறகு எந்த தவறும் செய்யாத வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்றான். "கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி, மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத், தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று (ஓர்), மானின் விழிபெற்று மயில்வந்த தென வந்தாள்" [கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்தாள் சூர்ப்பணகை] என்று கம்பனால் வர்ணிக்கப்பட்ட இராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மார்பகங்களையும், மூக்கையும், ராமனின் முன்னிலையில் இலட்சுமணன் வெட்டி அலங்கோலப் படுத்தினான். ஒருவரை திருமணம் செய்ய அல்லது காதலிக்க விரும்புவது ஒரு குற்றம் ஆகாது. அவளின் அந்த திருமணக்கோரிக்கையை ஏற்க விரும்பாவிட்டால், ராமன் அதை நாகரிகமான முறையில் கையாண்டு இருக்கலாம். ஆனால், அதை விட்டுவிட்டு அவளை தனக்கும் இலட்சுமணனுக்கும் இடையில் முன்னும் பின்னும் போகவைத்து அவளைக் கேலி செய்தான். இறுதியாக அவளை அலங்கோலப் படுத்தினான். இந்த ராமனின், இலட்சுமணனின் அட்டூழியமே ராவணனை கோபமூட்டி, பழிவாங்கும் முகமாக, சீதையை கடத்த வழி சமைத்தது. ஆகவே, ராவணன் சீதையை கவர்ந்தது, அவள் மேல் அவன் வைத்த இச்சை அல்ல. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முடிவு செய்தவுடன், முதலில் அந்த நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவான். இழந்த ஆநிரைகளை மீட்க அந்தப் பகை நாட்டரசன் போருக்கு வருவான். அதாவது எதிரி நாட்டரசனை போருக்கு வர வழைக்க "ஆநிரை கவர்தல்" ஒரு முகாந்திரமாகப் பயன்பட்டது. அது போலத்தான் ராவணன் சீதாவை கவர்ந்த ஒன்றாகும். ராமன் காட்டில் வனவாசத்தில் இருந்ததால், தன் தங்கையை மானபங்கம் செய்த வர்களுடன் போருக்கு [சூளுரைக்க] அறை கூவ ஒரே வழி - சீதையை கவருவதாகவே அப்பொழுது அவனுக்கு இருந்திருக்கலாம் ? ஆயுதம் ஏதும் அற்ற தன் தங்கையின் மூக்கை அறுத்து கேவலபடுத்தியதற்கு பழிவாங்க சீதையை கடத்தியிருக்கலாம்?. அப்படி அவன் தன் தங்கைக்காக பழிவாங்காவிட்டால், அவனது குடி மகன்கள் [பிரஜைகள்] எவருமே அவனை தங்கள் பாது காவளனாக பார்க்கமாட்டார்கள் என்பது ஒரு கருத்தாகும். ஆகவே இந்த கவருதல், தங்கையை அவமான படுத்தியவனை தண்டிக்கவே என இலகுவாக வாதாடலாம். "இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன்." அப்படியே ராவணன் சீதையை தொடாமலே அசோகா வனத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஆனால், இதற்கு எதிர்மாறாக, ராமனும் அவரது சேனையும் இலங்கை போது மக்களையும் , பெண்கள் குழந்தைகளையும் கொன்றும் உயிருடன் எரித்தும் அட்டூலியம் செய்தனர் [வால்மீகி ராமாயணம் / யுத்த காண்டம்]. கம்பர் மிக அழகாக "ஊறுகின்றன கிணறு உதிரம், ஒண்ணகர் ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு நாறுகின்றது, நுகர்ந்திருந்தம் நாம் எலாம்". அதாவது நகரத்தில் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் ஊறவில்லை, உதிரம் தான் ஊறுகிறது. அந்த குரங்கு வைத்த நெருப்பு இன்னும் நகரம் முழுவதும் அடங்கவில்லை, அகிலும் சந்தனமும் மணந்து கொண்டிருந்த நகரத்தில் இப்போது மங்கையர்களின் கூந்தல் கருகிய நாற்றம் மட்டும் தான் பரவியிருக்கிறது. அகில், சந்தனம் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்த நாம் இப்போது இந்த துர்நாற்றத்தைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார். மேலும் ராமன் எப்படி அனுமானிடம் சீதையின் அடையாளங்களை, அழகை கூறி சீதையை கண்டாறிந்து வா! என அனுப்புகிறான் என பாருங்கள். "வாராழி கலசக் கொங்கை, வஞ்சிபோல் மருங்குவாள் தன், தாராழிக்கலைசார் அல்குல் தடங், கடற்கு உவமை தக்கோய்!! பாராழி பிடரில்தங்கும், பாந்தளும், பணி வென்றோங்கும், ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?" ["என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் (பெண்குறி) தடங் கடற் போன்றது."] அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம். அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை, அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் "அல்குல்” அப்படி அல்ல. உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்? கடைசியில் இராமன் சீதையை மீட்டான். அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று அவர்கள் இருவரும் சந்திக்கும் போது பார்வைகள் மோத அங்கு ராமனிடம் இருந்து தீப்பொறி தான் பிறந்தது. "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் சீதையின் தூய்மையை நம்பாமல் அவளை குற்றம்சாட்டுகின்றான். சீதையை மீட்க தான் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறை கூறக் கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான் ராமன். “மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான் தசை, அருந்தினையே, நறவு அமை உண்டியே; இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன, விருந்து உளவோ? உரை” அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள். அவள் உயிருடன் இருந்ததே இப்ப ராமனுக்கு தவறாகப் படுகின்றது. அதே போல, வால்மீகி இராமாயணத்தில் ராமன் அவளை பார்த்து “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.” (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) என்று அடித்து கூறுகிறான் இராமன் சீதையிடம். இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “இனி உன்னைச் சேர்த்துக்கொள்ள முடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்” என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். மேலும், தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் சம்புகன் (Shambuka) என்பவன் இராமனால் கொல்லப்பட்டான். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்" அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான். அப்படி அகலிகைக்கு விமோசனம் கொடுத்த ராமன் தனது அழகிய மனைவியை நம்பவில்லை. குற்றமே செய்யாத சீதைக்கு மன்னிப்பு இல்லை. அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறான். மீண்டும் கருவுற்ற தன் அழகிய மனைவியை காட்டிற்கு அனுப்பிவிட்டு தான் அரண்மனையில் இருக்கிறான் .இப்படிச் செய்வது சரியா, தவறா! - என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே அவனுக்குப் பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. அவள் தனி - தாயாக பிள்ளைகளை பெற்று வளர்க்கிறாள் . இன்றைய எமது சமூகத்தில், பிரிவு, மணமுறிவு, ஒற்றை பெற்றோர் போன்றவற்றை கூடுதலாக காணுகிறோம். ராமாயணம் அப்படியான பிரச்சனைகளுடன் ஈடுபடுகிறது. இராமாயண கதையில் சீதையை அப்படியான பாத்திரங்களில் காண்கிறோம். அயோத்திய கண்டத்தில் ராமன் "பெண்ணை நம்பக்கூடாது" என்றும் "ரகசியங்கள் மனைவிக்கு அந்தரங்கப் பகிர்வு செய்ய கூடாது" என்றும் சொல்கிறான். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் ராமனுடன் இணைந்து வாழ, இரண்டாவது அக்கினிப்பிரவேசம் செய்து அவமானப் படுவதை விட, சாவது மேல் என உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது!. ஆனால் ஏன் ராவணனை மட்டும் பூதாகரமாக சித்தரிக்கவேண்டும்? ராமனைப் பற்றி என்ன? ராவணனும் அவனின் சகோதரர்களும் திராவிடர்கள் அல்லது பழங்குடிகள். திராவிடர்களின் மனம் புண்படும் என்பதை பொருட் படுத்தாமல், அவர்களின் உருவப் பொம்மை தீபாவளி திரு நாளில் எரிக்கப்படுகிறது. வரலாறு வென்றவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து விவரிக்கப் படுகிறது. ஆகவே அது ஒரு பக்க சார்பாக உள்ளது. தோற்றவர்கள் துரதிஷ்டவசமாக, கெட்டவன், வில்லன், போக்கிரி யாக அங்கு வர்ணிக்கப் படுகிறார்கள். வால்முகியால் சித்தரிக்கப்பட்ட ராமன் கதாப்பாத்திரம் கடவுளாக போற்றப்படும் அளவுக்கு ராவணன் கதாப்பாத்திரம் இழிவாக அரக்கன் போன்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், வால்முகியாலும், கம்பராலும் சித்தரிக்கப்பட்ட ராவணன் ராமனை விட நல் ஒழுக்கத்திலும், வீரத்திலும், மக்கள் ஆட்சியிலும், சகோதர பாசத்திலும், இறை பக்தியிலும், பலமடங்கு பெரியவனாகவே தெரிகின்றான். எல்லோரும் எளிதாக பொதுவாக சொல்லி விடுவார்கள், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும். விரிந்து பரந்த கடலில் முத்து வேண்டுபவனும் மணல் வேண்டுபவனும் தேவையானதை அள்ளுகிறான். ஆழத்தில் அதிசயங்களை ஒளித்துக் கொண்டு இவர்களை எள்ளியபடி சிரித்துக் கொண்டிருக்கிறது சமுத்திரம். அமாம் இராவணன் நல்லவனா?. என அறிய அவனைப்பற்றி மற்றவர்கள் பக்தி காலத்திலும் சித்தர்கள் காலத்திலும் கூறியதை ஒருக்கா பார்த்தால் என்ன ? கதை கேட்கும் வயதில் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன் இந்த ராவணன் . ஆனால் சமுத்திரத்தின் அடியில் போய் பார்த்த போது நான் எடுத்ததை உங்களுக்கு தருகிறேன். போகர், சித்தர்களில் ஒருவர். ‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் "இராவணனார்" என பெருமதிப்புடன் குறிப்பிடுகிறார்.“ கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு, தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டை தன்னில், வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ, மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வசதிகள் மெத்தவுண்டே” [போகர் 7000 சப்த காண்டம்]. சிறு வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் பல தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார். "கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்" [கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை ]. “வானினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவனாய இராவணன்" [வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன்]. “சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும் நாமதேய முடையார்” [இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது]. இதே போல திருநாவுக்கரசரும் தமது தேவாரத்தில் இப்படி பாடியுள்ளார்: "தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு" [தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு,]. "தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை" [தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக,]. சுந்தரமூர்த்தி நாயனார், ஒருபடி மேலே போய் இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்த தாகாக் கூறுகிறார்."எறியு மாகடல் இலங்கையர் கோனைத்,துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக், குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்,கோல வாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்" அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசை யைக் கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்]. இப்படி சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? தம் முன்னோனான இராவணன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது என்னத்தை காட்டுகிறது? இன்னும் நல்லவனா கெட்டவனா என்று நாம் ஏன் எமது மண்டையை உடைப்பான்? இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை இந்த நூற்றாண்டு புலவன் எப்படி பெருமை படுத்துகிறான் பாருங்கள் .“தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன், சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா! அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன், குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான், குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம், என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்! இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்" பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் "புட்பக விமானம்" ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. மேலும் ராவணனுக்கு ஜோதிடம் பார்க்கும் அபார திறமையும், வேத மந்திரங்களை கற்று தேறிய ஆற்றலும் அபாரமாக இருந்தது. அத்துடன், இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலும் உலகிலும் ராவணன் கோவில் உள்ளது. உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது. அதே போல, மற்றும் - பிஸ்ரக்ஹ் ,கிரேடர் நொய்டா , உத்தர பிரதேசம், - ராவண கிராமம் , விதுசா மாவட்டம் ,மத்திய பிரதேசம்,- கான்பூர் ,உத்தர பிரதேசம், போன்ற இடங்களிலும் ராவணன் கோவில் உண்டு. இலங்கை, திருக்கோணேஸ்வரம் குன்றில் இராவணன் சிலை ஒன்று உண்டு. அதே போல, தாய்லாந்திலும் இராவணன் சிலை உண்டு. ஆட்சி கலையில் சிறந்து விளங்கியவன் ராவணன். ராமன் அவரை போரில் வதம் செய்த போது ராவணன் இறக்கும் தருவாயில் இருந்தான். அப்போது தன் தம்பி லட்சுமணை ராவணனிடம் அனுப்பிய ராமன், அவனிடம் ஆட்சி கலையை கற்று கொள்ளும்படி சொன்னார். இதைவிட ராவணனின் சிறப்பை பற்றி வேறு என்ன கூறமுடியும்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும்
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 22 கிறித்துவிற்கு முன் 2,500 ஆண்டளவில் சிறப்புற்று விளங்கிய சிந்து வெளி நாகரிகம், கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்து விடுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட சிந்து சமவெளி பண்பாட்டு அமைப்பு நிலை குலைந்தது. அவர்களின் வர்த்தகம், எழுத்து, முத்திரைகள் எல்லாமே அங்கு இருந்து மறைந்து போனது. இவை, இந்த அழிவு மூன்று காரணிகளால் அல்லது அவைகளின் கூட்டால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பலர் நம்புகிறார்கள். 1] ஏறத்தாழ அக்காலப் பகுதியில் அலையலையாக இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகததின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் ஒரு முடிவு. ஹரப்பானிடம் கூரிய முனை கொண்ட கல்லு ஆயுதமே இருந்தது. ஆகவே ஆரியர்களின் போர் கடவுளான இந்திரனுக்கும் அமைதி வாய்ந்த ஹரப்பனுக்கும் இடையில் நிகழ்ந்த போரே முக்கிய காரணம் என்கிறார்கள். 2] இரண்டாவது, இயற்கை அனர்த்தம் என்கிறார்கள். வெள்ளம், வறட்சி, தீவிர புவியியல் மாற்றம், கடலில் இருந்து உப்பு நீர் நகரத்திற்குள் வெள்ளத்துடன் புகுதல் போன்றவையாகும். 3] மூன்றாவது நகரகப் பகுதி தூய்மை கெடல், மக்கள் பெருக்கம், மெசொப்பொத்தேமியாவுடன் நடைபெற்ற வர்த்தகம் சரிதல், புதிய எண்ணம் / கருத்துகளை தோற்றுவிக்காத பழமை பேணும் பண்பாடு, தங்களை பாது காக்க சூழ்ச்சித்திறம் / கூர்மதி பாவிக்காதது போன்றவைகளாலும் இந்த கோரம் [பயமுறுத்தும் கொடூரம்], சரஸ்வதி - சிந்து ஆற்று சமவெளியில் தழைத்தோங்கிய இந்த நாகரிகத்திற்கு நிகழ்ந்து இருக்கலாம் என நாம் எடுத்துக் கொள்ளலாம். சரஸ்வதி நதியையே முக்கிய காரணமாக கூறுபவர்கள், சரஸ்வதி நதியின் மறைவுக்கு ஹரப்பா - மொஹஞ்ஜோதாரோ பகுதியில் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்களால் நீர் திசை மாற்றப்பட்டு, யமுனை நதி இந்த ஆற்றை கவர்ந்து [river capture] இருக்கலாம் அல்லது மணற் புயல் [sandstorms] ஏற்பட்டு இருக்கலாம் என முன் மொழிகிறார்கள். அத்துடன் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும், இந்த சரசுவதி ஆற்றை. மாக்ஸ் முல்லர், மைக்கல் டேனினோ, S.R.N.மூர்த்தி [Friedrich Max Müller, Michael Danino and S.R.N. Murthy] போன்ற பல அறிஞர்கள் காகர்-ஹக்ரா நதி [Ghaggar-Hakra River] என்கிறார்கள். இந்திய உப கண்டத்தில் தோன்றிய முதலாவது நாகரிகமான, சிந்துவெளி நாகரிகம் ஆரியருடையது அல்ல என்பதை நாம் மிக இலகுவாக அறியலாம். உதாரணமாக 1) வழிபாட்டு இடங்கள் [கோயில்] இல்லாமல் இருப்பதும் ஆரியருடைய நெருப்பு பண்பாடு [fire culture] இல்லாமல் இருப்பதும் ஆகும். மொஹெஞ்சதாரோ அல்லது ஹரப்பா பகுதிகளில் அக்கினி மேடை கொண்ட பலிபீடம் [fire altars] ஒன்றையும் தொல் பொருள் அகழ்வாராய்ச்சி, அங்கு அடையாளம் காணவில்லை. நெருப்பை சுற்றி இந்து மதத்தில் நடைபெறும் சடங்குகள் எல்லாம் ஆரியர்களால், அவர்களின் இந்தியா வருகைக்குப் பின் அறிமுகப் படுத்தப்பட்டது என நாம் இதனால் ஊகிக்கலாம். (2) பாகிஸ்தானில் இன்னும் திராவிட மொழி [பராஹவி மொழி / Brahui language], குறிப்பாக பலூச்சிஸ்தான் [Balochistan region] மாகாணத்தில் பெருமளவில் புழங்கி வருவதும். சிந்து சம வெளி வரி வடிவு [script] ஒட்டுநிலை [agglutinative] மொழி போல் இருப்பதும் ஆகும். பராஹவி மொழி, ஆப்கானிஸ்தான் [Afghanistan] உட்பட மொத்தம் 2.2 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள் என 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பராஹவி, ஒரு காலத்தில் வட இந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பரந்து இருந்து, ஆரியக் குடியேற்றம் காரணமாக ஒதுக்கப்பட்டது எனக் கருதப்படும் ஒரு மொழியின் எச்சமாகக் கருதப்படுகிறது. மேலும் மடிந்து போன சிந்துவெளி நாகரிகத்தின் நேர் வழித்தோன்றலாகவும் பராஹவி இருந்து இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. [3] சிந்து வெளி வணிகர் பயன்படுத்திய சுடுமண், மாவுக்கல் முத்திரைகளில் ஆடு, மாடு, யானை, காண்டா மிருகம், பன்றி, ஒட்டகம், மயில் போன்ற உயிரினம் சித்தரிக்கப்பட்டதைக் காணலாம். ஆனால் அதில், நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் வேத துதி பாடல்களில் குறிக்கப்பட்ட குதிரைகளோ குதிரை வண்டிகளோ இல்லை என்பதும், இதன் மூலம் சிந்து சம வெளி மக்கள் குதிரைகள் வைத்திருக்க வில்லை என்பதும் தெளிவாகிறது. எலும்பியல் [osteological] ஆதாரங்களும் அங்கு குதிரைகள் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வில்லை என்பதை உறுதி படுத்துகிறது. [4] பண்டைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் [ஆரியர் அல்லாதவர்கள்] பொதுவாக தாந்திர முறை [Tantra] பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். இது ஆரியர்களின் வேத [Vedic] வழக்கத்தில் இருந்து வேறு பட்டது. மேலும் இந்த தாந்திர முறை ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும். ஆகவே ஆரியர்களின் அக நிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் [external ritual] இருந்து மாறுபட்டது. ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல்பொருட்கள் (கல்வெட்டுகள், மனித மிச்சங்கள்) மற்றொன்று இலக்கியம். சிந்து - சரஸ்வதி நாகரிகத்தின் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்கள் அதிகமாக யோகா அல்லது தந்திர நிலையில் [yogic or Tantric] உள்ளதும் ஆதிமுன்னோர் சார்ந்த தாந்திர முறையில் வளம் / வளப்பத்தை குறிக்கும் [proto-Tantric fertility symbols] இலிங்கம், யோனி அங்கு தடயங்களாக காணப்படுவதும் ஆகும். மேலும் சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்திருக்க சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் மரத்தால் செய்யப் பட்ட ஒரு பெண் சிற்பம். இங்கு இந்த பெண்ணின் யோனி தகன பலிபீடத்தால் / காணிக்கை அல்லது படையல்களால், புகை படிந்து இருப்பது, இதை மேலும் உறுதிபடுத்துகிறது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்ததென வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. தாந்திரம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முனைபவர்கள் பின்பற்றிய வழிமுறை எனவும் கூறலாம். அது மட்டும் அல்ல, வேதம் - பெண்கள் வேதத்தை படிக்கவோ அல்லது மற்றவர்களுக்கு அதை படிப்பிக்கவோ தகுதி குறைந்தவர்கள் என கட்டளை இடுகிறது. ஆனால் மறு புறத்தில், தாந்திர முறை பெண்களை மிக உயர்வாக மரியாதை கொடுக்கிறது . [5] விவசாயத்தைப் பற்றி போதுமான அளவு குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படாதது ஆரியர்கள் ஒரு நாட்டுப்புற இடையர்கள் [pastoralists] என்பதை காட்டுகிறது. இதற்கு மாறாக சிந்து வெளி மக்கள் ஒரு விவசாயம் சார்ந்த குடி மக்கள். இதை தொல் பொருள் ஆய்வு உறுதிப் படுத்துகிறது. ஆகவே இவை எல்லாம், இது ஆரியருடைய நாகரிகம் அல்ல என்பதை தெளிவாக எடுத்து கூறுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 23 தொடரும்
- "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
எல்லோருக்கும் நன்றிகள்
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
"சுதந்திரம் தேடும் இனத்துக்கு சுமந்திரம் சூது கவ்வுது தலை சுத்துது ! தந்திரம் இதுவோ மந்திர வேதமோ சுந்தர தமிழில் மந்தியின் பாச்சலோ?" "மூன்று தேர்தலில் வழி காட்டினானாம் மூக்கு உடைந்து ஒதுக்கப்பட்டது தெரியாதோ? அபிலாசைகளை அடுக்கி ஒழுங்கு படுத்துகிறான் அதனை வலியுறுத்துவதை எதிர்த்து நிற்கிறான்?" "மூன்று வேட்ப்பாளரை ஒப்பிட்டுப் பார்க்கிறான் ஒன்றுக்கும் இணங்காத கட்சிக்குள் தேடுகிறான்? மூக்குக்கு மேலே நீரின்அளவு எதற்கு மூழ்கி மீண்டும்சாக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறானாம் ?" "ஒற்றுமை இல்லா கட்சிகள் இவையோ ஒழுக்கம் புரியா தலைவர்கள் இவர்களோ ? ஓதி குழப்பி மீன் பிடிக்கிறார்கள் ஓரமாய் மக்களை தள்ளும் தந்திரமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி , யாழ்ப்பாணம்]
-
"வரமாக வந்தவளே"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"
"பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]" இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர். பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது! இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர். “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215) கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும். ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள். கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது. இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள். "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.] அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள். காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன். இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர். ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள். நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள். நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள். ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது. அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர். ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள். பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வரமாக வந்தவளே"
"வரமாக வந்தவளே" "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!" "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 01 தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர், இலங்கை அரசன் இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு ஆண்டுகள் வன வாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் பின் இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர். மகாவம்சத்திற்கு முன் இலங்கையை ஆண்ட மன்னர்களில் இவன் ஒருவன் என்றும் இராவணனுக்கு முன் இலங்கையை மனு, தாரக, பாலி [Manu, Tharaka, and Bali] ஆண்டார்கள் என்றும் ஒரு செவி வழி கதை அல்லது புராணம் கூறும். மற்றது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள் ஆகும். நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார். நரகா சுரன் உடன் நடந்த சண்டையில் திருமால் [கிருஷ்ணர்] காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட அவரது மூன்றாவது மனைவி சத்யபாமா? நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடி னார்கள். அதுவே பின் தீபாவளியாக கொண்டாடப் படுவதாக இன்னும் ஒரு செவி வழி அல்லது புராணம் கூறுகிறது. இதில் ஒற்றுமை என்ன வென்றால் ராவணன், நரகாசுரன் இருவரையும் அசுரர்கள் என இந்த புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. சுரர் என்றால் குடிப்பவர் அல்லது கடவுள் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் அல்லது கடவுள் அல்லாதவர், அல்லது கடவுளின் எதிரி என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக 'இருக்கு வேதம்' சொல்கிறது. சோமச் செடியை அவர்கள் தெய்வமாகமே கும்பிட்டார்கள். அசுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட, முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தியா விற்குள் நுழைந்த ஆரியர்கள், அங்கு முன்பே சிந்து வெளி நாகரிகம் அமைத்து வாழ்ந்த பழங்குடியினரான திராவிடர்களை[தமிழர்களை] வென்று அல்லது வறட்சி அவர்களை தெற்கிற்கு துரத்தியது. பின் அவர்களால் எழுதப்படட வேதம், புராணங்கள் எல்லாம் இவர்களை அசுரர்களாக வர்ணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்த வர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றும் அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள் என்றும் அறிகிறோம். ஆகவே தீபாவளி என்ற பெயரில், உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு திராவிட [தமிழ்] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும். அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும். அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்?. காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால், அதற்கு நீங்கள் எவ்வாறு முகம் கொடுப்பீர்கள்? சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி, ஆயுதம் ஏந்திய தீவீரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர். பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற இந்திரா காந்தியின் உத்தரவில் ராணுவம் எடுத்த நடவடிக்கை யின் போது பொற்கோயில் சேதம் அடைந்தது. மற்றும் தீவீரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் உட்பட 492 பேர் இறந்தனர். இதனால் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண். மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண். ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. இது, இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை ஞாபகப்படுத்தவே உதவும். ராமர் ராவணனை கொல்வதை பற்றியும் கிருஷ்ணன் நரகாசுரனை கொல்வதை பற்றியும் புரிதல் வடக்கு தெற்கு இந்தியாவில் மாறுபட்டு காணப்படுகிறது. அது போல இலங்கையும் காணப்படுகிறது. தீபாவளி விழா தீபத்துடனும் புத்தாடையுடனும் வழிபாட்டுடனும் நின்றுவிட வில்லை. ராவணனின் கொடும்பாவி எரிப்பும் நடைபெறுகிறது. இது ஒரு கவலைக்குரிய நிகழ்வாக இருப்பதுடன் குறிப்பாக கேள்வி ஒன்றையும் எழுப்புகிறது. சிலருக்கு உருவ பொம்மை எரித்தல் வெடி கொழுத்துதல் போன்றவைக்கு எதிரான காரணம் ஒரு சுற்றாடல் விடயமாக இருக்கலாம். ஆனால் பலருக்கு இது வந்தேறு குடிகள், பழங்குடி சமூகத்திற்கு எதிராக செய்த அட்டுழியங்களையும் மற்றும் கொலைகளையும் நினைவு படுத்தும் நிகழ்வாக இருக்கும். சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் 3300–1500 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. பொது யுகத்துக்கு முன் 1500 அளவில் கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் படையெடுப்பால் இவர்கள் தெற்கிற்கு துரத்தப்படடார்கள் அல்லது அதே காலகட்டத்தில் வறட்சியால். அதுமட்டும் அல்ல அமைப்பு முறையான சாதி பாகுபாடு போன்றவை அங்கு நிறுவப்பட்டன. இவற்றை ரிக் வேதத்தில் தாராளமாக காணலாம். இவைகளின் விளைவே பழங்குடிகளை இழுவுபடுத்தி, எழுதப்பட இதிகாசம், புராணங்கள் ஆகும். இதன் அடிப்படையிலேயே இந்த தீபாவளி கொண்டாடப்டுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்? திராவிடர்கள் ராவணனை தங்கள் பிரதிநிதியாக கருதுகிறார்கள். "செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்,நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன" என்று ராமர் வர்ணிக்கும் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும், முலையையையும் ராமரின் ஏவல் மூலம், இலட்சுமணன் அரிந்ததிற்கு எதிர் நட வடிக்கையாகவே சீதையை ராவணன் கவர்ந்தான் என நாம் கருதலாம்? மேலும் ராவணன் எந்த சந்தர்ப்பத்திலும் சீதையை கெடுக்க வில்லை. சூர்ப்பனகையையும் சீதையையும் அவர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதை, சம உரிமை உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள். ஏன் ராவணனை மட்டும் பூதாகரமாக சித்தரிக்க வேண்டும்?. தீய, கொடூரமான மனம் படைத்தவர்கள் மட்டும்தான் மரணத்தை விழாவாக கொண்டாடுவார்கள். ஒரு பல் கலாச்சார தேசம் ஒன்றில், இறப்பை இன்றி பிறப்பை வழிபாடும் உரிமையை நாம் எல்லோரும் பாதுகாக்க வேண்டும். நாம் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறன் போன்ற வற்றை கொண்டாட்ட வேண்டும் , அழிவை அல்ல. இந்த தீபாவளியில், நாம் என்னத்தை கொண்டாடுகிறோம்?, நன்மையின் அல்லது தீமையின் வெற்றி என்று நாம் கூறும் போது நாம் என்னத்தை கருதுகிறோம்? அல்லது தங்கள் நாட்டையும் இறைமையையம் பாதுகாக்க, தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் மரணத்தை தான் நாம் கொண்டாடுகிறோமா? என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக புராண இலக்கியங்கள், மேலாதிக்க வர்க்க மக்களால், தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்கவும், அதே நேரம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை இல்லாமல் ஒழிக்கவும் எழுதப் பட்டவை என்பது எமக்கு தெரியும். ராவணன் திராவிடர்களின் தமிழரின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. ராமாயணத்தைப் பற்றி பலவிதமாக படிக்கிறார்கள், கதாபாத்திரங்களின் தன்மையை பல தரப் பட்ட முறையில் புரிந்து கொள்கிறார்கள். அப்படியே ராமரையும் ஆகும். அப்படியே தர்மம் அதர்மம் போன்றவற்றின் கருத்தும் குழுக்களுக்கும் குழுக்களுக்கும் இடையில் வேறுபடுகின்றன. ஆகவே ராமரை வழிபட விரும்புபவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அது போல, ராவணனை வழிபட விரும்பு பவர்களுக்கும் அதே உரிமை உண்டு. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கிருஷ்ணன் கொன்ற தற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக வேறு சிலர் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்கள். ராவணன் போல நரகாசுரனும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாகும். அவன் ஒரு மாவீரன். புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன், இடும்பன், பகவன், ஹிரன்யச்சதா, அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இப்படி இந்து தெய்வங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சூழ்ச்சியாலும் தந்திரங்களாலும் யுத்த தர்மத்திற்கு எதிராக கொன்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் கேட்க்கிறேன், ஏன் மரணம் கொண்டாடப் படவேண்டும்? ராஜிவ் காந்தியின் படு கொலையை சிலர் விழாவாக கொண்டாடினால், நீங்கள் எப்படி முகம் கொடுப்பீர்கள்? பலர் இன்னும் இலங்கையின் பல மரணங்களுக்கு மற்றும் பேரழிவிற்கு இவரே காரணம் என இன்னும் நம்புகிறார்கள். 21 அக்டோபர் 1987, யாழ்பாண மருத்துவமனையில், அதுவும் தீபாவளி அன்று 68 மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிலருக்கு ராஜிவ் காந்தி நல்ல மனிதர், ஆனால் மற்றவர்களுக்கு அவர் ஒரு கொடூர மனிதர். இது அவர் அவர்களின் நிலையையும் புரிதலையும் பொறுத்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்
-
"ராமன் எத்தனை வஞ்சகனடி?"
"ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 21 சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது என முதன் முதலில் வரலாற்று ஆய்வாளரான ஹீராஸ் பாதிரியார் தான் கூறினார் (முன்னாள் தமிழக நிதி அமைச்சர் நெடுஞ்செழியனின் ஆசிரியர் இவர்). ஆனால், அவரால் அதை முழுமையாக நிரூபணம் செய்ய முடியவில்லை. எனினும் இது திராவிட நாகரிகத்துடன் அதிகம் பொருந்துவதாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆரியர்களின் ரிக் வேதத்தில் எதிரி அல்லது ஏவலர் என்ற அர்த்தத்தில் `தசா’ அல்லது `தஸ்யூக்கள்’ [Dasa & Dasyus] எனக் சிலரைக் குறிப்பிட்டு, பல சுலோகம் பாடப் பட்டுள்ளன. உதாரணமாக, "இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தை கையில் ஏந்துகிறோம்." [மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3] "இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் நசுக்கி ஒழிக்கவும்". [மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22] ‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தை யுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக் கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப் பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’ [மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8] மேலும் வச்சிராயுதம் [Indra’s thunderbolt] ஏந்திய வேதகால ஆரியக் கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று இந்த வேதங்கள் பாடுகின்றன. இப்படியாக வேத நூல் பல துதி பாடல்களை கொண்டு இருப்பினும் இவைகளுக்கு தொடர்பான எந்த தொல் பொருள் ஆதாரமும் எமக்கு இது வரை கிடைக்கவில்லை. அதே போல, மறு புறம் சிந்து வெளி நாகரிகம் பல தொல் பொருள் ஆதாரங்களை கொண்டு இருப்பினும் இவைகளைக் எடுத்து கூறும் எந்த இலக்கியமும் இது வரைக் கண்டு பிடிக்கவில்லை. இதனால், இந்த இரண்டையும் சேர்த்து இணைப்பது இலகுவாக இல்லாமல் இருக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற, காலம் சென்ற, தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஐராவதம் மகாதேவன் பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், “Dravidian Proof of the Indus Script via The Rig Veda: A Case Study” [சிந்து எழுத்தின் திராவிடச் சான்று ஆய்வு] என்ற ஆய்வு கட்டுரையை சமர்பித்து சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் "ரிக் வேதம் மூலம் திராவிடச் சான்றுகள்' குறித்த தனது நவம்பர் 2014 சொற்பொழிவில், சிந்துவெளி நாகரிகத்தின் மொழி, திராவிட மொழியின் முற்கால வடிவம் ஆகும் எனவும், சிந்துவெளி நாகரிக மக்கள் தென்னகம் நோக்கி இடம் பெயர்ந்ததால், தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்துள்ளது எனவும் ரிக் வேதத்தில் பல்வேறு திராவிடச் சான்றுகள் உள்ளது எனவும் கூறி, பல சான்றுகள் மூலம் அவைகளை எடுத்து விளக்கினார். அத்துடன் ஆப்கானிஸ்தான் வழியாக வட இந்தியா வந்த இந்தோ - ஆரிய (ஐரோப்பிய) இனத்தவர்களின் குடியேற்றங்கள் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், ‘சிறு எண்ணிக்கைகள் கொண்ட பல குழுக்கள், பல்வேறு நுழைவுகளின் வழியாகச் சிந்துச் சம வெளிகளில் குடியேறினர்’ என்கிறார். பழமையான மரபணு ஆராய்ச்சியின் முடிவானது மக்கள் எங்கிருந்து எங்கு குடிபுகுந்தார்கள் என்ற விவகாரத்தில் புரிதலை வழங்குகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் [David Reich] ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது. முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது [when agriculturists from the Zagros region of Iran]. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. இந்த ஹரப்பான் நாகரிகம் எகிப்து சுமேரிய நாகரிகங்களை விட அளவில் பெரியது. இது ஒரு கல்வி அறிவு பெற்ற, சுமேரியாவுடன் தொடர்பு கொண்ட நாகரிகமாகவும் இருந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 22 தொடரும்
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
நன்றி
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
எல்லோருக்கும் நன்றிகள் தற்காலிகமாக வலைத்தளத்தில் இருந்து ஓய்வு பெற்று, மீண்டும் சில கிழமைகளுக்குப் பின், என் பதிவுகளை அல்லது எனது கருத்துக்களை பதிவிடுவேன்
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
"அமைதியின் கதவு திறக்கட்டும்" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. என்றாலும் ரவி நாளடைவில் ஒரு நம்பிக்கையின் ஒளியைப் பற்றிக் கொண்டான். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எப்ப ஒரு குடையின் கீழ் இணைகிறார்களோ அன்று தான் முழு பலத்துடன் தமது அவலங்களை நெருக்கடிகளை போக்கி, சம உரிமைகளை பெற்று அமைதி கதவு திறக்க முடியும் என்று நம்பினான். இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 4 பெப்ரவரி 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அது பெரும்பான்மை சமூகத்திடம் கைமாறியதில் இருந்து, தமிழ் பேசும் மக்களான இலங்கைத் தமிழர், தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள், மலையக தமிழர்கள் எதோ ஒரு வகையில் கெடுபிடிகளுக்கு ஆளாகத் தொடங்கினார்கள். உதாரணமாக சுதந்திரத்துக்கு சற்று முன்பு 1946 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 69.41% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 28.89% [இலங்கைத் தமிழர் 11.02% , இலங்கைச் சோனகர் 5.61%, மலையக தமிழர்கள் 11.73%, & மலையக சோனகர் 0.53%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்பட்டனர். இன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 74.90% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 24.57% [இலங்கைத் தமிழர் 11.15% , இலங்கைச் சோனகர் 9.30%, மலையக தமிழர்கள் 4.12%, & மலையக சோனகர் 0.00%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்படுகின்றனர் என இலங்கை அரச தரவு சுட்டிக்காட்டுகிறது. அதாவது தமிழ் பேசும் மக்கள் குறைந்தது கால்வாசிக்கு இலங்கையில் வாழ்ந்தாலும், அவர்கள் பலவழிகளில் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு அரச இயந்திரத்தால் கெடுபிடிகளுக்கு தொடர்ந்து ஆக்கப்பட்டதே உள்நாட்டு கலவரத்துக்கு தூண்டி அது பெரும் போராக வெடித்தது. ஆனால் வடக்கு, கிழக்கு என்றும் தமிழர், முசுலிம்கள் என்றும் பிரிந்து செயல்படத் தொடங்கியது தான் அவர்களை பலவீனமாக்கி, தமிழ் பேசும் மக்களின் அமைதியின் கதவு திறப்பதை தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக ரவி உணர்ந்தான். இந்த பலவீனம் அரச இயந்திரத்தாலும் ஊக்கிவிக்கப் படுகிறது என்பதை பலர் அறிவதில்லை, அந்த வலையில் சிக்கி, தாமே தம் ஒற்றுமையை குலைகிறார்கள் என்பது தான் ரவிக்கு ஒரு கோபத்தையும் ஏற்படுத்தியது. 2009 இல் பெரும் தமிழர்களின் அழிவுக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை அவன் நேரடியாகக் கண்டவன். ஒரு நாள், ரவி கடலில் வலையை வீசியபோது, அவனது கிராமத்தில் உள்ள பெரியவர்களிடமிருந்து கிசுகிசுப்பு கேட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உண்மையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சொல்லி 9 ஜனவரி 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 'அமைதியின் கதவு திறக்கட்டும், சர்வாதிகார ஆட்சி ஒழியட்டும்' என்ற பெரும் முழக்கத்துடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதைப் பற்றி அவர்கள் பேசினர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நல்லிணக்கம் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கெடுபிடி இல்லா பாதுகாப்பான உரிமையுடன் கூடிய வாழ்வு அமைக்க முயலுவேன் என்ற அவரின் பேச்சில் ரவிக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. ஒவ்வொரு ஆட்சியாளரும் தொடக்கத்தில் பேசிய வார்த்தைகள் தான் இவை என்பது அவனின் அனுபவம். அவை பின்னாளில் தூக்கி எறியப்படுவதை வரலாற்றில் வாசித்தவன் அவன். என்றாலும் அவனுக்கு அது ஒரு ஒரு பலவீனமான நம்பிக்கையை கொண்டு வந்தது. ஆனால் அதுவும் செயலிழந்து போய், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது நாம் கண்டதே! இந்தக் மனக் கொந்தளிப்பின் நடுவே, ரவி ஒரு நல்ல சூரியன் பிரகாசிக்கும் காலை, தனது எளிய குடிசையின் தாழ்வாரத்தில் அமர்ந்து, ஒரு கோப்பை வாசனையான சிலோன் தேநீரைப் பருகும்போது, கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் குழு அவனைச் சுற்றி திரண்டது. "ரவி மாமா , எங்கள் அழகிய நிலத்தில் அமைதி நிலவுமா? இலங்கைக்கு அமைதிக்கான கதவு திறக்குமா?" என்று கேட்டனர். ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொழி. அதனை மறுக்கும் விதமாகவும் இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு வித்திட்ட சம்பவங்களில் ஆரம்பகால நிகழாகவும் இன மேலாதிக்கத்தை மேற் கொண்ட சம்பவங்களில் ஒன்றாகவும் நடந்த தனிச் சிங்கள சட்டம் ஜூன் ஐந்து 1956இல் நிறைவேற்றப்பட்டது ரவி தன் அம்மாவிடம் இருந்து கேள்விப்பட்டுள்ளான். “திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.“ என்று லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லெஸ்லி குணவர்த்தன, 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததையும், ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையும், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் என்று சிவத்த கொடி பிடித்தவர்களின் கையும் சிவத்த இரத்தக் கரை பிடித்ததை முணுமுணுத்துக்கொண்டு ரவி குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்கள் நம்பிக்கையால் நிறைந்து இருக்கவில்லை என்றாலும் அமைதிக்கான பாதை எளிதானது அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். இன்று மே 18, 2024, முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது நினைவு கூறல். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உலகளாவிய தலைவர் மற்றும் மிக மூத்த வெளிநாட்டு பிரமுகர் Agnes Callamard, கலந்துகொள்கிறார் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அவை ஒரு சம்பிரதாயம் மட்டுமே, என்றாலும் இது ஒரு தொடக்கம், எனவே அது என்றோ ஒரு நாள் சாத்தியம் என்று நம்பினான். கனிவான புன்னகையுடன் அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான். நீண்ட காலத்திற்கு முன்பு, என்று ரவி தொடங்கி "ஒரு காலத்தில் காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தன, பறவைகள் ஒன்றாகப் பாடுகின்றன, விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டன. ஆனால் ஒரு நாள், ஒரு பெரிய புயல் காட்டில் வந்து, விலங்குகள் மற்றும் பறவைகளை சிதறடித்தன. அவர்கள் ஒருவரையொருவர் பயந்தார்கள், அமைதி அங்கு இழந்தது போல் தோன்றியது." குழந்தைகள் ரவிவின் கதையால் கவரப்பட்டு கவனமாகக் கேட்டனர். அவன் தொடர்ந்தான். காடுகளில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி புரிதலின் கதவைத் திறப்பதுதான் என்று அவன் குழந்தைகளிடம் கூறினான். குழந்தைகளுக்கு அது சரியாக புரியவில்லை. குழப்பத்துடன் காணப்பட்டனர். எனவே ரவி "புரிந்துகொள்ளும் கதவு மரத்தாலோ கல்லாலோ ஆனது அல்ல. நாம் ஒருவரையொருவர் உண்மையாகக் கேட்கும் போது, ஒருவருக் கொருவர் வலியையும் நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது நம் இதயத்தின் கதவு திறக்கிறது." என்று விளக்கினான். "காடுகளைப் போலவே, நமது அழகிய இலங்கையும் புரிதலின் கதவைத் திறந்தால் அமைதியைக் காணலாம், நாம் ஒருவருக்கொருவர் கேட்க வேண்டும், நம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றாக வேலை செய்ய வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப, அதற்கு நேரம் ஆகலாம், ஆனால் நல்லிணக்கப் பாதையைப் பின்பற்றும் பொறுமையும் ஞானமும் இருந்தால், நமது மண்ணுக்கு அமைதியின் கதவு திறக்கும்." என்று குழந்தைகளை அணைத்தபடி சொல்லி முடித்தான். ரவி பல தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை பாதித்த உள்நாட்டுப் போரின் வலியையும் துயரத்தையும் அனுபவித்த குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர் தங்கள் வீட்டை இழந்து அகதிகள் முகாமில் புதிதாக தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ரவி அவர்களின் கஷ்டங்கள் மற்றும் அமைதிக்கான ஏக்கம் பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். எனவே தான் தமிழ் பேசும் எல்லோரும் ஒற்றுமையாகி, எல்லோர் இதயத்திலும் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அது தான் தமிழரின் ஈழ நாட்டில் அமைதியைக் கொண்டுவர உதவும் என்று அவன் நம்பினான். இடைப்பட்ட ஒரு காலத்தில் எதிரியாகக் கருதப்பட்ட வடக்கு வாழ் மீனவர்கள் தனது கிராமத்தின் சந்தைகளில் வியாபாரம் செய்யத் தொடங்குவதை அவன் கவனித்தான். அவர்கள் தங்கள் போராட்டங்கள், இழப்புகள் மற்றும் நம்பிக்கையின் கதைகளைப் அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலம், வன்முறை மற்றும் வெறுப்பு இல்லாத எதிர்காலம் பற்றிய தங்கள் கனவுகளைப் பற்றி பேசினர். கிழக்கில் உள்ளவர்களைப் போலவே வடக்கிலிருந்து வந்தவர்களும் அமைதி மற்றும் செழிப்புக்காக ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்து ரவி, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையின் அவசியத்தை நன்கு புரிந்து கொண்டான். வருடங்கள் செல்லச் செல்ல, அமைதிக்கான வாக்குறுதி வேரூன்றத் தொடங்குவது போல தெரிந்தது. கடந்த கால காயங்களை குணப்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாக அறிவித்தது. ரவியின் கிராமமும் மற்றவர்களைப் போலவே ஒரு மாற்றத்தைக் காணும் என்று அவன் கனவு கண்டான். சாலைகள் சீரமைக்கப்பட்டன, பள்ளிகள் புனரமைக்கப்பட்டன, இயல்பு நிலை திரும்புவது போல இருந்தது. ஆனால் அதற்கிடையில் அரசாங்கமும் அன்று மாறியது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் தீவிரமான தமிழர் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் தொடங்கியது. உதாரணமாக நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உள்ளிட்ட புதிய முறைகளும் பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க தொடங்கின. வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்து மீண்டும் , “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று ரவிக்கு புரிந்தது. தமிழ் பேசும் மக்கள் பிரிந்து இருந்து, அரசை நம்புவதில் பயன் இல்லை. அரசு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழர் தாயகத்துக்கு எதிரான வேலை திட்டங்களை இலகுவாக செய்ய அந்த பிளவுகளை பயன் படுத்தும் என்பதை ரவி உணர்ந்தான் , எனவே மக்களாகிய நாம், மீண்டும், ஆனால் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை ஒற்றுமையாக தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தான். கடந்த கால பிளவுகளைத் தாண்டி ஒற்றுமை மற்றும் அன்பின் அடையாளமாக ரவி வடக்கிலிருந்து, தமிழ் பேசும் ஒரு சோனக பெண்ணை மணந்தான். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்ந்து அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை தழுவி, சமாதான மரபு வரும் தலைமுறைக்கும் நிலைத்திருக்க வழிவகுக்க வேண்டும், அங்கு 'அமைதியின் கதவு திறக்கட்டும். என்ற அவனின் பிரார்த்தனை வெற்றி பெறுமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அவனின் தமிழ் இஸ்லாம் மனைவியும் அவனின் பிரார்த்தனையில், அமைதிக்காக தன் இதயக் கதவை திறந்து, பங்குபற்றத் தவறவில்லை! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]