Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

villavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by villavan

  1. முடிந்த முடிவைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறிங்கள் @Kavi arunasalam அண்ணை, விரக்தி அந்தச் செயலின்மையில் வெளிப்படுகிறது.
  2. புறவயமாக இது அ வைக் குறித்தாலும், அகவயமாகநமக்குள்ளே வளரும் பற்பல பார்த்தீனியங்களையும் யோசிக்கிறேன். சிறப்பான பல பரிமாணங்களைத் தரக்கூடிய கவிதை @ரசோதரன் அண்ணை.
  3. இன்னும் இல்லை அண்ணை. சுவாரசியமாகத் தான் இருக்கிறது. பிரபஞ்சம் விரிந்துநகரும் வேகம் மற்றும் சார்பு வேகங்களைக் கணக்கில் எடுத்தால் இது உண்மையாயிருக்கக் கூட வாய்ப்புண்டு. அரைகுறை எடுகோள்களுடனும் அறியாமையுடனும் கூடும் கூட்டங்கள் கருந்துளைகள் தானே, உள்ளுக்குள்ளே பொது அறிவுணர்வும் மனிதாபிமானமும் காணாமற் போய் விடும். ஒரு எல்லை வரைக்கும் அறியும் அறிவு நம் அறியாமையை அளவிடத் தானே...😁 டன்னிங் க்ரூகர் விளைவும் இதை மேலும் விளக்கக் கூடும்.
  4. என்னோடு பல நேபாளி பர்மியர்கள் வேலை செய்தனர், அவர்கள் எல்லோரும் பர்மிய மொழியில் தான் தமக்குள்ளே பேசிக்கொள்வார்கள். அவர்கள் எல்லாருமே மொழி ரீதியாக பர்மியர்களாக மாறி விட்டனர். 80 க்கும் மேற்பட்ட வருடங்கள் ஏறத்தாழ முழு இலங்கையும் சோழ அரசின் கீழ் இருக்கும் போது நிறையப் பேர் தமிழுக்கு மாறி இருப்பார்கள், இல்லையா? காலச்சக்கரத்தில் மாற்றம் மாறி மாறி வரும் போது சமயங்களும் மொழிகளும் மாறி மாறிச் செல்லும் போல. நாங்கள் தான் சிலவற்றைப் பிடித்துத் தொங்குகிறோம், ஆனால் எது நிரந்தரம்? முதற் தலைமுறையில் எதிர்ப்பும் நினைவுகளும் ஒட்டியிருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தலை கால் தெரியாது தடுமாறித் தடம் மாறி விடும். DNA பரிசோதனைகளில் பல உண்மைகள் வெளிவந்தாயிற்று, ஆனால் அரசியல்/குறுகிய வட்டங்கள்/மூடத்தனம் என்பன எப்போதும் நிறையப் பின் தொடர்வோரைக் கொண்டிருக்கும் என்பது தான் நிதர்சனம். கூட்டமாக இருக்கும் மூடர்களின் பலத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஜோர்ஜ் கார்லின் சொன்ன மாதிரி, எப்பவுமே அந்தக் கூட்டமும் அதை வைத்துப் பிழைப்பை நடத்தும் வர்க்கமும் தான் எல்லா இடமும் கோலோச்சுகிறார்கள். வட்டங்களின் விட்டம் மாறலாம், ஆனால் எல்லாம் கருந்துளைகள் தான்.😊
  5. அண்ணை, நான் சொல்லும் கருத்து, கிட்டத்தட்ட ஏஐ யில் அந்து சந்தில்லாமல் ஏதாவது செய்யிற போல கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாமல் இருப்பதால் தான் அடி உதை எல்லாம். நீங்க வேற.... 🤣
  6. உண்மையிலேயே எனக்கு கூடமாட உதவி செய்ய விருப்பம் தான் ஆனால், 1. சமையல் செயற்றிறன் 50% குறைகிறதாம் (100% & 0%). 2.நண்பிகளுடன் ஒலிபெருக்கி உரையாடலில் தடை வருகிறதாம். 3. வாய் சரியில்லை. 4. நீர் செய்தால் ஆர் சாப்பிடுறது? நீங்களே சொல்லுங்கள், நானா குற்றவாளி? 😄.
  7. என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.
  8. மனதோடு மனம் நிகழ்த்தும் உ ரையாடல் தானே நீங்கள் எழுதுவதை நாங்கள் வாசிப்பது. ஒரு குறையும் இல்லை @ரசோதரன் அண்ணை 🙏. மேலும் அதைப்பற்றிக் கலந்துரையாட ஒரு வாய்ப்புத் தானே 😊.
  9. சிறு வயதில் இருந்து எனக்கும் உந்தப் பழக்கம் உண்டு. முதலாவதாக வெளியேறுவதற்கு வசதி என்பதால் (escape). நல்லையா சேர், அடேய் லாஸ்ட் பென்ச் என்று செல்லமாகக் கூப்பிடும் அளவுக்கு அந்த இடத்தைக் கைப்பற்றி இருந்தோம். புத்தரின் மொத்த தத்துவத்தையும் ஒரு வசனத்தில் சொல்லிட்டிங்கள். கதை சிறப்பாக இருந்தது, ஆனால் என்னவோ ஒன்று குறைவது போல், முடிந்தும் முடியாத போல் ஒரு உணர்வு. அதனாற் தான் கொஞ்சம் பொறுத்துப் பார்த்தேன், பின்னுக்கு ஏதும் சேர்ப்பிங்களோ எண்டு. ஒரு தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே.
  10. வாழ்த்துகள் @theeya. நூலில் நீங்கள் கொடுத்த தன்னுரையை இங்கே பகிரலாமே? எங்களுக்கும் ஒரு அறிமுகம் கிடைக்கும்.
  11. சிறப்பான நேர்காணல். இலங்கையிலிருந்து இதே விசயத்தை பல்வேறு தரப்பினரும் பல்வேறு தடைவைகள் சொல்லிப் பார்த்தும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் போய் விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இதை ஒரு ஆதாயமாக வைத்து ஓட்டு வாங்குவதற்காக பிரச்சினையைத் தீர்க்க விடாமல் ஊதி ஊதி வைத்திருப்பதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டு அரசியலில் கச்சதீவும் மீனவர் பிரச்சினையும் முக்கியமான தேர்தல் நேர வாக்குறுதிகள். அதை அவர்கள் விட மாட்டார்கள்.
  12. நான் கூட எழுத்துப் பிழை(!) யோ எண்டுநினைச்சன் 😁. சிரிச்சிட்டுப் போங்கோ, சீரியசா எடுக்காதீங்கோ:
  13. உண்மை @Kavi arunasalam அண்ணை. கடைசியில் காஞ்சனாக்கு நல்ல தூக்கம் மற்றும் வாழ்க்கை கிடைத்தது நல்ல முடிவு. எத்தனையோ பேர் குடும்பங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சமாளித்தபடி தங்கள் வாழ்க்கையையே முழுமையாகத் தொலைத்து விட்டு ஏதோ கடைமைக்கு வாழ்கின்றனர். அப்பிடிப் பார்க்கும் போது காஞ்சனா கெட்டிக்காரி.
  14. கரை சேர்ந்தது என்னவோ மாதவன் போல தான் கிடக்கு. காஞ்சனா கடலுக்கை விழுந்து போன மாதிரித் தான் நிலைமை 😄.
  15. இது இந்தக் கட்டுரைக்குப் பதில் அல்ல; நீங்கள் உரையாடலுக்கு எடுத்துள்ள விடயம் நீண்டநெடும் நீள அகலமும் ஆழமும் உள்ள ஒரு கருப் பொருள். சும்மா ஏதாவது பொத்தாம் பொதுவான கருத்துகளை இங்கு சொல்லலாமேயொழிய முற்று முழுதாக அணுகுவது எப்பிடி என்று தெரியவில்லை. இந்த உரையாடலின் கரு ஒரு விதையாக மனதுள் போய், அது மீண்டும் மீண்டும் மீளாய்வு செய்தாகிப் பெரும் விருட்சமாகும் போது நாம் எல்லோரும் இதை விட்டு வேறெங்கோ காலதேச வர்த்தமானங்களில் சென்றிருப்போம். அடுத்து, கட்டாயம் எல்லோரும் முடிந்தளவு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், ஆகக் குறைந்தது அதில் இருக்கும் சுவாரசியமான விடயங்களையாவது. பசிக்கு, வயிற்றுக்குள் நெருப்பு என்றும் இன்னொரு மொழியில் சொல்லுவார்கள் என்பது எவ்வளவு ஒரு திறப்பு. வடமொழியில் இருந்து எவ்வளவோ சொற்களைப் பாவிக்கிறோம், அவற்றின் மூலத்தைக் காண்பதில்லை. உதாரணத்துக்கு ஜகத் என்பது நகரும் தன்மையைக் குறிப்பிடுவது. பிரபஞ்சத்தை ஜகம் என்கிறோம். அதன் மூல காரணம் அது எப்போதும் நகர்ந்து கொண்டிருப்பதால்.எவ்வளவோ திசைச் சொற்கள் நாம் புழங்குகின்றோம் ஆனால் அவற்றின் அர்த்தம் தெரியாமலே. அரசியல் தமிழ் நாட்டு மொழிப்போராட்டம் முக்கால்வாசி அரசியல் மட்டுமே. அதுவும் இப்போது தி மு க செய்வதெல்லாம் வெறும் கேலிக்கூத்து. தாய் மொழி முதன்மையாய் இருந்து கொண்டு மற்ற மொழிகளை மேலதிகமாகக் கற்பதனால் தமிழ் அழியப்போவதில்லை. இடப்பெயர்வு என்பது பண்பாட்டுத் தற்கொலை, மொழி உள்ளடங்கலாக. இந்தியா போன்ற மிகப்பெரும் நாடுகளில் உள்நாட்டு இடப்பெயர்விலேயே இது நடந்து விடும். சந்தர்ப்பங்களைப பொறுத்து எங்கிருந்தும் எங்கும் மக்கள் இடம் பெயர்ந்து முடிவிடத்தின் பண்பாட்டைத் தழுவிக்கொள்ளலாம். தமிழ் நாட்டிலேயே எவ்வளவோ வேற்று மாநிலத்தவர் தமிழைத் தம் தாய் மொழியாகக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். கருணாநிதி குடும்பம் உள்ளடங்கலாக . இலங்கை நீர்கொழும்பு புத்தளம் மாவட்டங்களில் தமிழர் சிங்களவராய் மாறியிருப்பது கடந்த பல பத்தாண்டுகளில் கண்கூடாய்க் கண்ட மாற்றமாகும். அவர்களுக்குத் தமிழ் மொழி மூலமான கல்வி முற்றாக மறுக்கப்பட்டது. இது மொழித் திணிப்பு, கல்வி மற்றும் உதவித் திட்டங்கள் மூலமாகவும் தான் நடை பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நீங்கள் குறிப்பிட்ட மொழிக்கொள்கை விவாதத்திற்குள் இது வர மாட்டாது என்று நினைக்கிறேன்.
  16. உண்மை தான் @putthan . சற்றேறக் குறைய எல்லா உலக இராணுவங்களும்(!) மனிதத் தன்மை இல்லாமல் நடக்கப் பயிற்றப் பட்டவை தான்.
  17. இந்தியா ஈழத்தில் நிகழ்த்திய கொடுமையான வல்வெட்டித்துறைப் படுகொலை, அவர்களால் சாவதானமாக நன்கு திட்டமிடப்பட்டு படிப்படியாக நிகழ்த்தப்பட்டது. இராணுவம் என்பதே வினைத்திறனுடன் கொலைநிகழ்த்தும் இயந்திரம் தான். இப்போதும், இந்திய இராணுவம் ஈழத்தில் கையைக் கட்டிக்கொண்டு தான் இருந்தது என வரிந்து கட்டிக்கொண்டு வாதிடவும் பலர் இருப்பது இன்னும் கொடுமை.
  18. இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் மூச்சடைக்குது. @ரசோதரன் அண்ணனுடைய ராணுவ ரகசியத்தின் மூலமாய் உந்தப்பட்ட சிறு படைப்பு .
  19. நன்றி @Kavi arunasalam அண்ணை. பருத்துறை ஆக்களுக்கு நக்கலடிக்க நல்லா வரும் போல 😊.
  20. மிருக உள்ளுணர்ச்சி (Animal Instinct) இல்லாமலாக்கப்பட்ட பாவப்பட்ட மிருகங்கள் போல. இயற்கைக்கு மாறாக உருவமைக்கப்பட்ட உந்தநாய்கள் அவனைக் கடிக்காது என்றுநினைக்கிறேன். உங்களுக்கும் கன காலமாய் நாய் கடிக்காததன் ரகசியம் உது தான் போல 😁.
  21. என் நண்பன் ஒருவன் அடிக்கடி நாயிடம் கடி வேண்டுபவன் சொன்ன விளக்கம் என்னவென்றால், அவனுக்கு நாயைக் கண்டால் கடும் பயம் கிட்டத்தட்ட ஒரு போபியா மாதிரி. அப்பிடி பயப்பட்டால் உடம்பில் அட்ரினலினோ வேறு என்ன சுரப்புகளோ கூடச் சுரக்கும், அதை மணந்து பிடிக்க நாய்க்குத் தெரியும் (they can smell fear ☠️). அதாலை எப்படி நாய் எங்கை அவனைக் கண்டாலும் கடிக்கப் பார்க்குமாம். அட்ரினலின் சுரக்கும் சந்தர்ப்பத்தில் ஒன்று தப்பி ஓட்டம் இல்லை எதிர்ப்பு எதுவும் நடக்கலாம். நாய் இரன்டுக்கும் பொதுவாகக் கடித்து வைக்கிறது போல.😆
  22. எங்கை தேடுதல் செய்யிறது எண்டது தான் ரகசியம் போல. அது நெய் மாதிரி ஒரு எண்ணெய் மணம். இந்திய சாப்பாட்டுக்கடைகளில் கூட வரும். மறக்க முடியுமா... அவங்கடை எந்த வாகனம் போனாலும் அந்த மணம் கொஞ்சநேரத்துக்கு றோட்டிலை இருக்கும். நாய்களுக்கு அந்த மணம் பிடிக்குமோ என்னவோ. இல்லாட்டிநாய்களுக்குப் போடத் தான் சப்பாத்தி கொண்டு வாறவங்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.