Everything posted by villavan
-
வணக்கம்
வணக்கம் ரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். கன பேர் அக்பராலை வெளிக்கிட்டு கடைசியா யாழில் தான் சந்திக்கிறம் போல.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
விசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அருமை அண்ணை. விற்கிற அளவுக்கில்லாட்டிலும் அம்மம்மாவுக்கு வேப்பம்பூ ஆய்ந்து குடுத்திருக்கிறன். உங்கள் எழுத்துக்குள்ளால் போகும் போது வேம்பு, மலைவேம்பு எல்லாம் தலைக்கு மேலே நிற்கிறது போன்ற உணர்வு.
- 6cr8dk6cr8dk6cr8.jpg
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.
-
அழகான புத்தகக்கடை
உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி @Kavi arunasalam அண்ணை.
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
புதுசா இருக்கு. பனங்காட்டுக்கை சிங்கம் எப்ப போனது? 😁 நல்ல அனுபவப் பகிர்வு. நினைச்சுப் பாக்க இப்பவே கிர் எண்டுது.
-
இதயங்களின் மொழி
penetration test மாதிரி முதல் மூன்றைத் திறந்தால் தான் மற்றது தெரிய வரும் போல. எங்கடை batch இலையே 5,6 பேருக்கு மாரடைப்பு வந்திட்டுது. சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.
-
குளிக்கும் வேலை
அநேகமாக கலியாணத்துக்குப் பின்னராத் தான் இருக்கும் என்ன? 🤣
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
இலங்கையின் பிக்காசோ என்று கூறக்கூடிய சிறந்த ஓவியர் அவர். நீங்கள் சொல்வது போல் உலகம் முழுக்க இப்போது கலைகளில் ஈடுபாடும் நாட்டமும் குறைந்து சென்றாலும், எமது பிரதேசங்களில் அதற்கான இரசனை வெகு குறைவு, தென்பகுதியில் அவர்களின் வாழ்க்கையோடு கலை ஒன்றியிருப்பதைப் பார்த்து பொறாமையாயிருக்கிறது. கலாரசனை குறையும் போது தரமின்றிய படைப்புகளையே தூக்கிப்பிடித்து அது மேலும் மேலும் அழிவுச்சுழலுக்குள் கலையைத் தள்ளுவதால், இரசனையும் மேலும் மேலும் முடமாகிக் கொண்டே போவது தான் கொடுமை.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
நன்றிகள் @suvy அண்ணை. எல்லாம் வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் என்று ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் தான்.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
நன்றி @Kavi arunasalam அண்ணை, நான் சொல்ல வந்தது, பொதுவாக மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி. ஒரு ஓவியம், ஆயிரம் சொற்களால் சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லிவிட முடியும் என்பதும், இன்னொரு பரிமாணத்தை வாசகரிடம் ஏற்படுத்த வல்லது என்பதும் உண்மையாயிருந்தாலும், அதைப் படைக்கும் ஓவியர்களுடைய முயற்சியும் மற்றும் ஓவியங்களின் சிறப்பும் எல்லாருக்கும் விளங்குவதில்லை, அல்லது காலம் எடுக்கும். இப்போது ஏஐ வந்தாப்பிறகு, அந்த ஓவியர்களின் சிறப்பு இன்னும் விளங்காமற் போய்விடும் என்ற ஆதங்கத்தைத் தான் சொல்லியிருந்தேன்.
-
Am an atheist - சோம.அழகு
எந்தவொரு கோட்பாட்டுக்குப் பின்னாலும் படுதீவிரமாகப் பின் திரள்வது தான் பொதுவாக உலகம் முழுக்கவுள்ள சிக்கல். அவர்கள் தமக்கென்று எதிரிகளைக் கட்டமைப்பது தாம் செய்வதே சரியென்பதைத் தம் மனதுக்கு சமாதானப் படுத்தத் தான். அப்படி எந்தத் தீவிரக் கொள்கையாளர்களும் தம் எதிரிகளோடு நடுநிலையாளர்களையும் சேர்க்கத் தவறுவதில்லை. அவர்களுக்குத் தான் எல்லாப் பக்கமும் நெருப்பு. இதில் சிரிப்பு என்னவென்றால், பலருக்கும் தாங்கள் ஏதோ ஒன்றில் பக்கச் சார்பாக, அதுவும் தீவிரமாக இருப்பதே தெரிவதில்லை. அது ஆழ்மனதின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம், அதனாலோ என்னவோ. வரலாறு என்பது கொஞ்சம் உண்மை, நிறையப் பொய் சேர்த்து எழுதப்படும் புனைவு என்பதையும் உலகம் முழுக்க உள்ள கதைகள் மனிதரில் உள்ள இயற்கை உணர்வுகளை மையமாக வைத்து எழுந்தவை என்பதையும் மறுக்கவியலாது. மனித மேம்பாட்டை வலியுறுத்துபவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டியது தான்.
- தொன்மம்.jpg
-
செவ்வந்தியில் செவ்வந்தி
வடிவேலு பேக்கறி வாங்கின கதை வெளியிலை போனது போலை, சில கதைகள் எப்பிடி போகுது யாராலை போகுது எண்டு தெரியாது, ஆனால் முதலுக்கு சேதம் தான் 😁. ஒண்டுமே இல்லாத விசயங்கள் எத்தினையோ பேரைப் பிரிப்பதில் நம் ஊரவர்களுக்கு ஒரு வாலாயம். கை எல்லாம் சரியாகிட்டுதோ அண்ணை?
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
சத்தியமான வார்த்தைகள். ஒரு பக்கம் அரசர்கள் பெற்ற வெற்றிகள் வரலாற்றில் நிலை பெற்றாலும், எல்லா வெற்றிகளும், கோரமான யுத்தத்தின் விளைவுகளே. அதிலும் அப்பாவி மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டு இருப்பர். அய்யா, உங்களைப் போன்றவரின் தமிழ் அறிவோடு ஒப்பிடும் போது என்னைப் போன்றவர்கள் சிறு துமி. கிட்டடியில் அது சம்பந்தமாக எழுதி இருந்தபடியால் சுட்டினேன். மற்றபடி உங்கள் பாராட்டுக்குப் பொருத்தமானவன் அல்ல.
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 நியாயத்தின் சாம்பல் மேற்குறிப்பிட்டநிகழ்வு சங்க காலத்தியது தான். பத்தினியின் பசி தீர ஆயிரம் பொற்கொல்லர்களை நரபலி கொடுத்தமை, சங்க காலத்தின் முதன்மைக்காப்பியாமாம் சிலப்பதிகாரத்தில் பச்சைத் தமிழன் பாண்டியன் செய்வித்ததாகத் தான் உள்ளது. பொதுவாக இறை வழிபாடுகள் நம்பிக்கை சார்ந்தவை, அதனால் எத்தனையோ மூடநம்பிக்கைகள் அதனுள்ளே இயல்பாக ஊடுருவ முடியும். பல காலங்களாகவே சமயக் கோட்பாடுகளை அறியாமலே மேலோட்டமாகவே சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றியே அனேகமானோர் அவற்றைக் கைக்கொண்டு வருவதால், அச் (ச+ச) களைத் தாக்கி அவற்றிலிருக்கும் மூடப் பழக்கவழக்கங்களைத் தாக்கி அதன் மூலம் அவையைப் பிழை என நிறுவும் போக்கும் எதிர்க்கோட்பாடு கொண்டவர்களின் ஆயுதமாகும். இதைத் தேர்ந்து அறிவதே அறிவார்ந்தவர் கடமையாகும்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
😅 உண்மை அண்ணை. முற்றும் துறந்து ஞானியானாத் தான் பிரச்சினை என்று பாத்தால், இல்லை, முயலுக்கு நாலு கால் தான் என்றாலும் பிரச்சினையாகவெல்லோ இருக்கு. உது பாதி ஆன்மிகம் பாதி சுய எள்ளல்.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
இது மிகவும் பொத்தாம் பொதுவாக மாயவலைக்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களைப் பற்றித் தான். நாங்களே சில கருதுகோள்கள், உறவுகள், நம்பிக்கைகளில் வலை பின்னி பின் அதற்குள் அகப்பட்டு விடுகிறோம், உண்மைகள் தெரிய வரும் போதும் அந்த வலைகளை அறுக்க முடிவதில்லை. உண்மைதான், ஏஐ நாங்கள் நினைப்பதை வரைய உதவியாய் இருக்கிறது, சரியான வகையில் கட்டளைகளைக் கொடுத்தால். அதற்கு முதல் நம் கற்பனையில் நமக்கு என்ன வேண்டும் என்பது உதிக்க வேண்டும். பொதுவாகவே நமக்கு ஓவியத்தின் / ஓவியனின் அருமை தெரிவதில்லை, இனிமேல் ஏஐ க்கு பிறகு இன்னும் மோசமாகும் என்று தான் நினைக்கிறேன் 😆.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
- சிலந்தி.jpeg
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
நல்ல ஒரு மனிதர், அத்துடன் சிறப்பான வகையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறார். 🙏 வன்னி ரெக் பற்றிக் குறிப்பிட்டதில் சந்தோசம். இவரைப்போல இன்னும் பலர் எம்மண்ணில் நிலையான பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும், அது தான் அங்கிருக்கும் மக்களைக் கையேந்தும்நிலையிலிருந்து வெளிக்கொணரும்.
-
"கிராமியக் கலைஞன்"
வருந்தத்தக்க நிலைமை. கிட்டடியில் தான் நோயல் நடேசன் எழுதியிருந்தார், கலைவாணி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கே போய்க் குடியேறி விட்டாள் என்று. அங்கேயாவது வாழ்ந்தால் சந்தோசம் தான்.