Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வருணின் தலைமையில் சுழல்பந்து வீச்சாளர்கள் சுழட்டிய சுழட்டில், நியுசிலாந்து ஆட்டங்கண்டது. இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாக முடிந்தது. இக்களத்தின் விருப்பமும் நிறைவேறவில்லை. புள்ளிகளாவது கிடைத்ததே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதிசயம் இல்லை. அவர்கள் சுழலில் மாட்டிக்கொண்டார்கள். 7வது வீரர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது நல்லாருக்கே. தோற்றால், வேணும் என்று தோற்றது என்று சொல்லலாம். வென்றால், இது தேவையில்லாத வெற்றி என்று சொல்லலாம். எப்பிடி என்டாலும் இந்தியா தோற்றால் சரி. அப்பிடித்தானே. 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவிடம் அவ்வளவு பயமா. அது ஒரு பல்லுப் போன பாம்பு. இம்முறை கடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபனும் சழைக்காம ஒரே கேள்வியைத்தானே கேற்கிறார். யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முன்னாடி இரண்டு பேரையும் பிடிக்கமுடியுமா. இல்ல இது முடிந்த முடிவா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவ அரை இறுதியில அடிக்கிறதுதான் நல்லது. இறுதிப்போட்டிக்கு விட்டா, அவங்கள் வேற மாதிரி வருவாங்கள். இறுதிப்போட்டி, இந்தியா எதிர் தென்னாபிரிக்காதான் எனது தெரிவு
-
உண்மை தெரிந்தாகனும்
அது ரஜனி படமாச்சே. அம்பிகாவும் ராதாவும் இணைந்து நடிச்சிருப்பினம். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இவ்வளவு இலகுவான போட்டியாக அமையும் ஏன்று நினைக்கவில்லை. தென்னாபிரிக்கா அந்தக் குழுவில் முதலாவதாக வந்ததில் மகிழ்ச்சி. இன்னும் ஒரே ஒரு போட்டி மீதம் உள்ளது. நாளை வெல்லும் அணி ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் விளையாடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். அந்த மழையை எதிர்பார்க்கவில்லை. கோசானும் நிறைய விருப்பப்பட்டார். இப்போது இருக்கும் நிலைமைகளின் படி, கோசான் மேலே வருவதற்கான சந்தர்ப்பங்கள் அருகிக் கொண்டே வருகின்றன. வாழ வைத்த நாடு வென்றால் அவரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக அமையப் போகின்றது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தலை மேல் கத்திதான் எப்போதுமே. பாவப்பட்ட ஜென்மங்கள். இப்போது இருக்கும் நடைமுறையில் காசு குடுத்து முடிச்சு வைக்கிறதெல்லாம் மிகக் கடினம். ஆனாலும் இந்தக்கேள்வி எப்போதுமே தொக்கிநிற்கும். அந்தநாட்டில் ஒரு கிரிக்கெட் கட்டுமானமே இல்லை. அதுதான் பெரும் பிரச்சினையே. அங்கே நல்லதொரு வீரரை உருவாக்குதல் மிகக் கடினம். நமக்குத் தெரிந்த, அநேகமான பாக்கிஸ்தான் வீரர்கள் எல்லாம் பிறவி வீரர்கள். அவர்கள் உருவாக்கப் படவில்லை. அண்மையில் வந்தவன் பாபர் ஆஸாம். துரதிஷ்டவசமாக, வேறு ஒருவரும் வரவில்லை. தனி ஒருவனாக அவன் எவ்வளவுதான் தாங்கமுடியும். பின் அவங்களின் அரசியல். நாம் நம்நாடுகளில் பாக்கின்ற அதே அல்லது அதுக்கும் மேலான மோசமான அரசியல். எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடியே வண்டிய ஓட்டிறது. அவர்கள் போகவேண்டிய தூரம் வெகு தூரம். அட, வசியும் ஞானும் இம்முறை ஒரே கோட்டில். யாயும் ஞாயும் யாராகியரோ. 🤣😉
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையாவேயா. இப்பிடிக் கதைச்சிருப்பாங்கள் என்று நம்ப முடியவில்லை. மந்திர தந்திரமெல்லாம் அங்கேயுமா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடைசியில் மழை தான் வென்றது. ஏய் மழையே, இது கொஞ்சம் கூட நல்லால்ல. இனி என்றாலும் பார்த்துச் செய்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நம்பி வாங்க. ஆனா நம்பாதீங்க.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாமழும் பின்னாலதான் நிக்கிறம். எங்களையும் கூட்டிக்கொண்டு போறது. தனிய போக நினைக்கப்படாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மழை வந்து போட்டி தடைப்பட்டுள்ளது. மீண்டும் ஆரம்பிக்கும் போல. அனேகமா குறுகிய போட்டியா இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதுவரை மழை இல்லையாம். அப்புறமென்ன ஆப்கானிஸ்த்தானா அவுஸ்திரேலியாவா எப்போதும் தமிழனா கோசானா காத்திருங்கள். முடிவு விரைவில்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எப்போதும் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும். ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது ஆப்கானின் வெற்றியை அதிர்ச்சி என்று கூறமுடியது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ அப்பிடியா. வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொல்வது இதுதானோ. ஒரு பந்தில 24 ஓட்டங்கள் என்றால் ரத்தம் வராம..... உண்மையிலேயே துரதிஷ்டசாலிகள் என்றால் அவர்கள்தான். எத்தனை தடவை. அவ்வளவு இலகுவாக இருக்காது. சென்ற உலகக்கிண்ணத்தில நடந்தது தெரியும்தானே. மெக்ஸ்வல் என்ட ஒருத்தன் தனியாளா செய்த செய்கை அப்பிடி. ஆப்கானிஸ்தான் ஓரளவு அதே அணிதான் இம்முறையும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு Bயில் அவுஸ்திரேலியா நிலைமை தான் கவலைக்கிடம். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்றாக வேண்டும். அந்தப் போட்டி ஒரு கால் இறுதிப் போட்டி போல் அமையப்போகின்றது. அல்லது மழை வந்து தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். தென்னாபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக, படுமோசமாக தோக்காவிடில், அவர்கள் அடுத்த சுற்றுக்கு இலகுவாக சென்றுவிடுவர். அவர்களிடம் கனதியான ஓட்ட விகிதம் உள்ளது. இந்த முறை மழையோ ஓட்ட விகிதமோ அவர்களை தடுக்க முடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜோ ரூட் உங்களுக்காகத்தான் தனி ஒருவனாக இன்று விளையாடினார். தனி ஒருவன்! அது அடைக்கோழியாக்கும். முட்டை போடாது. 🥚
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர்கள் ரண்டு பேரும் பெரும் ஆட்டக்காரர் தானே. என்ன, நாம கடைசியில தூக்குவம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாவம் ரூட். தனித்துப் போனார். ஒருவரும் நின்று நிதானித்து ஆடவில்லை. நியுசிலாந்து வென்றால், யாழ் களம் அல்லோல கல்லோலப்படும்.நல்ல முசுப்பாத்தியாய் இருக்கும். கிருபன் பாடுதான் திண்டாட்டமாய் இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
களத்தின் தெரிவு. இறுதிப்போட்டியில் வெல்லும் அணி மற்றும் எத்தனை பேர் அவ்வணிகளைத் தேர்வு செய்தார்கள் TEAM NUMBER OF YARL PLAYERS IND 10 AUS 8 SA 3 PAK 2 ENG 1