Everything posted by செம்பாட்டான்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நானும் அங்கே இருந்தேன் என்று கோசான் மார்தட்டிக்கலாம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இதோ உங்கள் வெற்றியாளர்கள். உலக டெஸ்ட் கிண்ணம் வென்ற தென்னாபிரிக்கா. அவர்களின் முதலாவது பெரிய கோப்பை. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது நடந்து விட்டது. வாழ்த்துகள் பசங்களா.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அட... எய்டன் மாக்றம் ஆட்டமிழந்து வெளியேறினார். முழு மைதானமும் எழுந்து நின்று கரவோசையை எழுப்பியது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
எதிர்பார்த்தது போன்றே புதிய பந்தை எடுத்து வட்டார்கள். புதுப்பந்து 14 ஓட்டங்கள். முதல் பந்தே நான்கானது. இன்னும் பத்து
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இன்னும் 18 ஓட்டங்கள். வெற்றிக் கனி கிட்ட வந்துகொண்டே இருக்கு.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அவுஸ்ரேலியாவும் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் ஏழு பந்துப் பரிமாற்றங்களில் புதிய பந்து எடுக்கலாம். அது போட்டியின் திசையையே மாற்றிவிடும். என்ன நடக்கப் போகிறது. திக் திக் திக்......
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நான்காவது விக்கட் விழுந்தது.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இன்னும் இரண்டாம் முறை ஆட்டம் முடியவில்லை. விடை தென்னாபிரிக்காதான். ஆனால் முடியவேணுமோ இல்லையோ. எல்லாத்தையும் கூட்டி நாளைக்குப் போடுவார்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
மைதானத்தில் இருந்து கோசானின் நேரடி ஒளிபரப்பப் பார்க்கலாமே😁
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அப்ப என்ன நாளைக்கு மத்தியானச் சாப்போட்டோட முடிஞ்சிடுமா. எப்பவும் மறுநாள் ஆரம்பம் சிரமமாகத்தான் இருப்பது. இருவரில் ஒருவர் நின்றாலே முடிச்சு விடலாம். சரித்திரம் எழுதப்படுமா. கோசானின் முன்னிலையில்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாளைக்கு கனக்கப் படங்கள் எதிர்பார்க்கலாம் போல.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நம்மிடம் எல்லோரதும் தெரிவுகள் இல்லையே.நேரம் எடுத்தாலும் பரவாயில்லை, நீங்களே வந்து முடிச்சு வையுங்க.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இது Duke பந்துகள். கொஞ்சம் தேய்ச்சு மினுமினுப்பாக்கினாலே காணும். நல்லாத் திரும்பும். அவுஸ்ரேலியாக்காறர் ஒரு பக்கத்தைத் தொடர்ந்து தேய்த்துக்கொண்டே இருந்தார்கள். அதுதான் நினைத்தேன் Reverseக்குத்தான் முயற்சி செய்யினம் என்று.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஒத்தைக் காலுடன், தெம்பாக ஆடினார் தெம்பா. தலைவனின் ஆட்டம் என்றால் அதுதான். நாளைக்கு தெம்பாக திரும்பிவா. முடிச்சு வை. எய்டன். ஒரு முறையான டெஸ்ட் துடுப்பாட்ட வீரன். அதுவும் அவுஸ்ரேலியா என்டா அவனுக்கு லட்டு சாப்பிடற மாதிரி. இன்றும் அதையே காட்டிவிட்டுச் சென்றான். ஓய்வெடுத்து தெம்பா திரும்பி வா. முடிச்சு வை.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அது புதுப் பந்து அல்ல. பந்து சேதமடைந்தா, அதன் உருவத்தை இழந்தால், மாற்றுவினம். முன்னரே பாவித்த பந்தாகத்தான் இருக்கும். Reverse Swingக்கு உதவாது. அவுசுக்குத்தான் இழப்பு
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
Reverse Swing வரலாம். இன்றே நடக்கலாம்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அலைபாயுதே மாதவனோ நீங்கள்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
எய்டனையா தெரிவு செய்தீர்கள். உங்கள் கவலை உங்களுக்கு
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அதேதான். ஒரு அவசரமும் இல்லை. அரைக்கிணறு தாண்டியாச்சு
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அப்படி என்றால் கோசான் நாளை போய்த்தான் ஆகணுமா. அவரும் கொஞ்சம் பணத்நை சேமித்ததாக வேற சொல்லிக் கொண்டிருந்தார்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தேனீர் இடைவேளை. அருமையான நிலையில் புரத்தியாஸ். இனி பந்து இலகுவாக வரும் என்று நினைக்கிறேன். அவதானமாக, ஒன்று இரண்டாக ஓட்டங்களைக் குவிக்கலாம். தெம்பா அதில் வின்னன்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தென்னாபிரிக்கா மிகவும் நேர்மறையான மனோதிடத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு அவசரமும் இல்லை. நேரம் அவர்களின் பக்கம். நின்று நிதானித்து ஆடவேண்டியதுதான்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
எத்தனை வருட காத்திருப்பு. அவங்களுக்கும் எந்த ஒரு உலகக் கிண்ணத்துக்கும் எட்டாப் பொருத்தம். என்ன வாய்க்கால் தகறாரோ.... எப்பவும் ஏதோ ஒன்று வந்து அவங்களுக்கு மண் அள்ளிப் போடும். பாவப் பட்ட ஜென்மங்கள். எப்போதுமே சிறந்த அணியாகத்தான் இருப்பார்கள். ஆனால் உச்சத்தைத் தொட மாட்டார்கள். இம்முறை, அவ்வாறில்லை என்றுதான் படுகிறது. எல்லாம் ஒரே கோட்டில் வந்திருக்கின்றன.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முதல் நாள் அவுஸ்ரேலியா 20 ஓட்டங்களுக்கு கடைசி 6 விக்கட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள், தென்னாபிரிக்கா 12 ஓட்டங்களுக்கு கடைசி 5 விக்கட்டுகளை இழந்தது. மீண்டும், அவுஸ்ரேலியா 45 ஓட்டங்களுக்கு முதல் 7 விக்கட்டுகளை இழந்தது. மைதானம் மிதி வெடி மாதிரித்தான் இருக்குது போல. தெம்பாவும் தாவிதுவும்தான் தென்னாபிரிக்காவை கரை சேர்க்க வேண்டும். இருவரும் மிக இலகுவாக ஆடினார்கள். அருமையான இணைப்பாட்டம் முதலாவது இன்னிங்சில். அதே மாதிரி மீண்டும் ஆடினார்கள் என்றால், தென்னாபிரிக்கா சரித்திரம் படைக்கும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தரமான கேள்வி. ஜானி ஜானி எஸ் பாப்பா