Everything posted by செம்பாட்டான்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடைசி வரையும் உங்கள் அனுபவத்தைச் சொல்லேலையே. 😁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலேமே. நாமும் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளோம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இல்லவேயில்லை. ஒருவித அசௌகரியமும் இல்லை. எனது கருத்து, அவவை தனியொருவராக சுட்ட முடியாது என்பதே. அவர்கள் அணியாகவே அப்படித்தான் லிளையாடினார்கள். இந்தியா இவ்வாறு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னமோ. இனிவரும் அவர்களின் பேட்டிகளைப் படித்தால்த்தான் புரியும். அவுஸ்ரேலியரின் அணுகுமுறை தெரியும்தானே. அவர்கள் சுதாகரிப்பதுக்குள்ளேயே இந்தியா நன்றாகக் காலூன்றி விட்டது. அந்த ஒரு பிடி குடுத்ததைத் தவிர, ஜெமைமாவும் உறுதியாகவே விளையாடினா. ஒரு கட்டத்தில் ஒன்று ஒன்றாக ஓடத்தொடங்கினா. பின்னர்தான் அவ சொன்னா. அந்த நேரத்தில் தனக்கு தடுமாற்றம் வந்தது என்றும் சுலோகங்கள் சொல்லத் தொடங்கியது என்றும். இப்போது யோசிச்சுப் பார்த்தால், அது ஒரு நல்ல அணுகுமுறை. கோலியின் அணுகுமுறை.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
குற்றச்சாட்டு என்பதைவிட, புரிதல் இல்லாததுதான் அயர்ச்சி அளிக்கிறது. வேறொன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, தேசிய அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் பெரு வீரர்களே. என்னை விட பல பல மடங்கு உயர்ந்தவர்கள். அந்த மரியாதை எப்போதும் உண்டு. அணித்தலைமை பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல பார்வை. புரிகிறது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உண்மைதான். அவ மிக வேகமாக சதமடித்தா. 75 சொச்ச பந்துகளில்.ன என்று நினைக்கிறேன். அதனாற்தான் ஒரு நேரத்தில், அவுஸ்ரேலியா 350க்குக் கூடுதலாக அடிக்கக் கூடிய நிலையில் இருந்தது. கிரிக்கின்போ தளத்தில் அவவைப் பற்றியும் எழுதியிருந்தார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உலகம் எப்படியோ போகட்டும். உலகம் சொல்வதை ஏன் நாமும் சொல்ல வேண்டும். யாழிலும் அப்பிடி ஒன்றைப் பார்க்கும் போது ஒவ்வாமைதான் வருகிறது. ஓரிரண்டு வீரர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது எப்படி சரியாகும். இது ஒரு அணி விளையாட்டு. தவறுகள் எப்போதும் நடப்பதே. அதை எவ்வாறு அணியாகச் சரி செய்தார்கள் என்றுதானே பாரக்கவேண்டும். நேற்று அவுஸ்ரேலியா அணியாகவே நன்றாகச் செய்யலில்லை. நிறைய சின்னச் சின்னத் தவறுகள். அவர்கள் போன போக்கில் 350க்கு மேல் அடித்திருக்க வேண்டும். இந்தியா அந்த இடத்தில் சிறப்பாகவே அழுத்தத்தைக் கொடுத்து அவர்களைக் கட்டுப்படுத்தினார்கள். ஜெமைமாவே சொல்லியிருக்கிறா. தனது கவனம் சிதறத்தொடங்கியது என்றும், தான் சுலோகங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாகவும். அதோட, சக துடுப்பாட்டக்காரருடன் தொடர்ந்து கதைத்தபடி இருந்ததாக. அப்படித்தானே இது நடக்க வேண்டும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அலிஸாவைப் பற்றிய அபிப்பிராயங்கள் வேடிக்கையாக இருக்கு. இந்தத் தொடரில் ஜந்து போட்டிகள் விளையாடி, 299 ஓட்டங்கள் அடித்திருக்கிறா. இரண்டு தரம் நூறு. அவா ஒரு பிடிய விட்ட உடன், இப்படிக் கதைப்பது, வேடிக்கையாக இருக்கிறது. அதோட அவ ஒரு விக்கட் காப்பாளர். அணித்தலைவி. இவ்வளவுக்குப் பிறகும். விளையாட்டு வினோதங்கள்!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எத்தனை பேர் இந்தியா வெல்லும் என்று கணித்திருக்கிறார்கள். ஓருவர் தென்னாபிரிக்கா என்று நினைக்கிறேன். யார் யார் என்ன தெரிவு என்ற பட்டியலை வெளியிட்டால், சுவாரசியமாக இருக்கும்.🤑
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உலகக் கிண்ணைப் போட்டிகளில், முதன் முறையாக, அவுஸ்ரேலியாவோ, இங்கிலாந்தோ, இறுதிப் போட்டியில் இல்லை. இருவரில் ஒருவர், இதுவரை நடந்த, எல்லா உலகக் கிண்ணை இறுதிப் போட்டிகளிலும், விளையாடியிருக்கிறார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உலகக் கிண்ணைப் போட்டிகளில், 2017 உலகக் கிண்ணத்தில்தான் அவுஸ்ரேலியா இறுதியாக தோற்றது. அரை இறுதியில், இந்தியாவிடம். மீண்டும், நேற்றுத்தான் தோற்றார்கள். தொடர்ந்து 15 உலகக் கிண்ணைப் போட்டிகளில் வென்றிருக்கிறார்கள் (2022 உலகக் கிண்ணம் அடங்கலாக).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்று எங்கு பார்க்கினும் ஜெமைமா மயம். எல்லாரும் எழுதித் தள்ளிக்கொண்டு இருக்கினம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதுவும் சரிதான். புள்ளிகள் இருப்பதால்தான் சிலர் பங்குபற்றினம் என்று நினைக்கிறேன். ஆனால், ஒருத்தரையும் இங்கே காணக்கிடைக்குதில்லையே. தங்கள் தெரிவுகளைப் போட்டதுடன் சரி. எங்கே எல்லோரும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆசைப்படலாம் வசி. ஆனால் ஆசைக்குப் புள்ளிகள் இல்லை. 😄
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சரியாகச் சொன்னீர்கள். அந்த நாலு பேர்......🔥
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவர்தான் ஜெமைமான்ட கால்ல விழுந்திட்டாரே. முற்றுமுழுதான ஆதரவு என்றும் சொல்லிவிட்டாரே🤣
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜெமைமா பேட்டியில் சொன்னது: இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் — நான் இதை தனியாக செய்யவில்லை. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், என்மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த மாதம் மிகவும் கடினமாக இருந்தது, இது ஒரு கனவுபோல் உணர்கிறேன், இன்னும் நம்ப முடியவில்லை. (என்னை மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாட சொல்லியபோது) நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. குளித்துக் கொண்டிருந்தேன், “சொல்லும்போது சொல்லுங்கள்” என்றேன். மைதானத்திற்குள் செல்வதற்கு ஐந்து நிமிடம் முன்பு, நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று கூறினார்கள். இது எனக்காக அல்ல — இந்தியாவுக்காக இந்தப் போட்டியை வெல்லவேண்டும் என்பதற்காக எல்லாம் அமைந்தது (முன்பு கடினமான போட்டிகளில் தோற்ற அனுபவம் இருந்தது). இன்றைய நாள் எனது 50 அல்லது 100 பற்றி அல்ல, இந்தியா வெல்வது பற்றிதான். இதுவரை நடந்தது எல்லாம் இதற்கான முன்னோட்டம் போல. கடந்த வருடம் நான் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டேன். நன்றாக துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து பல விஷயங்கள் நடந்தன, எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போது தினமும் கண்ணீர் விட்டேன். மனதளவில் நன்றாக இல்லை, கவலை நிறைந்த நாட்கள். ஆனால் எனக்கு தெரியும் — நான் மைதானத்தில் நிற்கவேண்டும், மீதியை கடவுள் கவனிப்பார். ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருந்தேன். இறுதியில், பைபிளிலிருந்து ஒரு வசனம் நினைவு வந்தது — “நிமிர்ந்து நில்; கடவுள் உனக்காகப் போராடுவார்.” நானும் அப்படித்தான் நின்றேன், அவர் எனக்காகப் போராடினார். என்னுள் பல உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன, ஆனாலும் அமைதியாக இருக்க முயன்றேன். இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹாரி அக்கா வந்தபோது, நன்றாக ஒரு கூட்டணியை உருவாக்குவது மட்டுமே நினைத்தோம். தீப்தி ஒவ்வொரு பந்துக்கும் என்னுடன் பேசினார், ஊக்கமளித்தார். நான் முடியாவிட்டாலும், என் கூட்டாளிகள் என்னை ஊக்குவிக்கிறார்கள். எனக்காக எதையும் எடுத்துக்கொள்ள முடியாது — நான் ஒன்றும் தனியாக செய்யவில்லை. (பார்வையாளர்கள் பற்றி) ஒவ்வொரு ரசிகரும் கத்தி, ஆரவாரம் செய்து, நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் — அவர்கள் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் கத்தும்போது அது என்னை மேலும் ஊக்குவித்தது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வாங்க சேர்ந்தே அள்ளலாம்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜெய் ஜெமைமா!!!!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுதான் சரியான பதிலடி. அவுஸை இப்பிடித்தான் வெல்ல முடியும். என்னே ஒரு போட்டி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எதுக்கும் ஜெமைமாவை ஒரு வார்த்தை கேட்டுக்கிடுங்க 😁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முடிச்சு விட்டாங்க. ஜெமைமா. நீ எங்கள் ஜக்கம்மா சொல்லி வைச்சு அடிக்கிறது என்றால் இதுதான்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கிட்ட கிட்ட வந்தாச்சு துரத்தினவையே துரத்தி அடிச்சு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
30 பந்துகளில் 34 ஓட்டங்கள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கோப்பையைத் தூக்கி அவருக்கே குடுங்க. தனி ஒராளா நின்று அந்த அணிக்காக போராகிடுறார். அதுக்காக என்றாலும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவவின் பெறுபேறுகள் காணாது என்றுதான் நிப்பாட்டினவை. எப்ப அடிப்பா என்டு தெரியேலையாம். இப்போது உள்ளூர் ஆட்டங்களில் விளையாடிக் கொண்டு இருக்கிறா. அதால, துடுப்பாட்டத் தன்மை இருப்பதால், நேரடியாகக் களமிறங்குகின்றா.