Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9210
  • Joined

  • Days Won

    16

Status Updates posted by யாயினி

  1. இன்று உலக இசை தினம்.....

    No automatic alt text available.
  2. இசையால் வசமாக இதயமுண்டோ…!

     
    இசைத்துறையில் வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. 
     
    World-Music-Day.jpg
     


     
    நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.
     
    இசை கேட்டால் புவி அசைந்தாடும்….!
    இசையால் வசமாக இதயமுண்டோ….!
     
    அந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…!
     
    v பியானோ இசைக்கருவியில் மொத்தமாக 88 விசைக்கருவிகள் உண்டுஇதில் 52 வெள்ளைவிசைக்கருவிகளும், 36 கறுப்பு விசைக்கருவிகளும்அடங்கும்.

     
    yamaha-clavinova-clp465gp-polished-ebony-digital-baby-grand-piano-640-p.jpg
    v உலகில் மிகப்பழமையான இசைக்கருவியாககருதப்படுகின்ற கழுகின் எலும்பினால்தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் தென்மேற்குஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்இது 35,000 ஆண்டுகள்பழமைவாய்ந்தது என ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.
    _45967547_bone_flutehf_jensen.jpg
     
    v இசை மீதான பயம் மெலோபோபியா (Melophobia) எனப்படுகின்றது.
    v அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில் உள்ளஇசைக்கருவி யாழ் (Harp) ஆகும்.
    Coin.Euro.1Euro.Ireland.02.jpg4554354d-4dd9-4015-b0e0-81bd22617d2aLarger.jpg
     
    v 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்தஇசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ்அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவபட்டமளிக்க முன்வந்ததுஆனால் படகு பயணபயத்தின் காரணமாக தனக்கானகெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார்.
     
    v   முதன்முதலாக தொலைபேசி இணைப்பினூடாகஇசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம்ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.
     
     
    v உலகில் அதிகளவில் விற்பனையாகும் இசைக்கருவிஹார்மோனிகா ஆகும்
     
    folk.jpg
    vஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்றவார்த்தை மிகப்பிரபலமானதொன்றாகவிளங்குகின்றதுஇவ்வார்த்தை முதன்முதலில் 1937ம்ஆண்டு பயன்படுத்தப்பட்டது
     

     
    1. யாயினி
    2. யாயினி

      யாயினி

      எழுதுங்களேன் - நான்
      எழுதாது செல்லும்
      என் கவிதையை
      எழுதுங்களேன்
      எராளம்... ஏராளம்
      எண்ணங்களை - எழுத
      எழுந்துவர முடியவில்லை
      எல்லையில்
      என் துப்பாக்கி
      எழுந்து நிற்பதால்
      எழுந்துவர என்னால்
      முடியவில்லை
      எனவே
      எழுதாத என் கவிதையை
      எழுதுங்களேன்!

      கப்டன் வானதி

  3. இன்று சர்வதேச அகதிகள் தினம்.உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.

    2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

    அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

    No automatic alt text available.
  4. பூக்கள் அறிவோம் (1-10)

     

    அழகழகானப் பூக்களைப் படமெடுத்துப் பகிர்வதோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பூக்களின் பெயர் மற்றும் பிற தகவல்களோடு பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று உரிமையோடு சில நட்புகள் கேட்டுக்கொண்டதன் பேரில் பூக்களைப் பற்றிய தேடுதலைத் துவக்கினேன். அது ஒரு பெரிய கடல். கரையில் நின்றுகொண்டு என்னிரு கைகளால் அள்ளியது கொஞ்சம்.. சிந்தியது போக சேமித்தது கொஞ்சமே கொஞ்சம். படிக்கும் காலத்தில் அத்தனை ஆர்வம் காட்டாத தாவர இயலில் எப்படி இப்படி உள்நுழைந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கிடக்கிறேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது. கீதமஞ்சரியில் ஏற்கனவே பகிர்ந்த படங்களும் இத்தொகுப்பில் உள்ளன. எனினும் பூக்கள் குறித்த ஆர்வமுள்ளோர்க்கு பயனுள்ளதாகவும் என் வலைப்பூ சேமிப்பாகவும் இருக்கட்டும் என்பதற்காக தகவல்களோடு மீண்டும் பதிகிறேன்.  

     

    1. தீக்குச்சிப் பூக்கள்

    matchstick flowers (Aechmea gamosepala)

    %25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%2528Aechmea%2Bgamosepala%2529.JPG
     
     

     

    பிங்க் நிறக்குச்சியின் தலைப்பக்கம் நீலவண்ண மருந்து பூசிய தீக்குச்சி மத்தாப்புகளை ஒரு கம்பியில் கோத்து அடுக்கினாற்போன்ற அழகு. அதனாலேயே இதற்கு தீக்குச்சி பூக்கள் (matchstick flowers) என்று பெயர். நுனியிலிருக்கும் நீலமொட்டுகள் விரியும்போது இன்னும் அழகு.  அர்ஜென்டினாபிரேசில் நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இவை ப்ரோமெலியாட் வகையைச் சேர்ந்தவை. ஒருமுறை ஊன்றிவிட்டால் போதும்.. அதன்பின் அதிக கவனிப்பு தேவைப்படாமல் வளரக்கூடியது. மேலும் இதன் ஓடுதண்டுகள் மூலம் தானே பதியன் போட்டு புதுச்செடிகளை உருவாக்கிக்கொள்ளும். பூக்கள் செடியில் மட்டுமல்லாது பூச்சாடிபூங்கொத்து அலங்காரங்களிலும் வசீகரிக்கின்றன.
     
     

    2. யூகலிப்டஸ் பூக்கள்

    Red-flowering gum (Corymbia ficifolia)

    %25E0%25AE%25AF%25E0%25AF%2582%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B8%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%2528Eucalyptus%2529.JPG
     
     
     
     
    சுமார் 700-க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் வகைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 15 வகை மட்டுமே இந்தோனேஷியாவையும் பப்புவா நியூகினியையும் சேர்ந்தவை. குங்குமச்சிமிழ் போன்ற யூகலிப்டஸ் பூவின் மொட்டுகள் வளர்ந்து பூக்கும் சமயம் மூடி மட்டும் தானாகத் திறந்து கீழே விழுந்துவிடும். பிறகு பூ மலரும். கிரேக்க மொழியில் eu என்றால் நன்றாக என்றும் kalypto என்றால் மூடிய என்றும் பொருளாம். நன்கு மூடி போட்ட மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இதற்கு eucalyptus என்று பெயரானதாம். யூகலிப்டஸ் மரத்திலிருந்து கோந்து வெளிப்படுவதால் இதற்கு கோந்து மரம் (gum tree) என்ற செல்லப்பெயரும் உண்டு. வெள்ளை, பழுப்பு வெள்ளை, மஞ்சள், பிங்க், சிவப்பு வண்ணங்களில் பூக்கள் காணப்படும்.
     
     

    3. கற்றாழைப்பூக்கள் 

    (Aloe vera flowers)

    %25E0%25AE%2595%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%2528aloe%2Bvera%2529.JPG
     
     
    கற்றாழை (Aloe) குடும்பத்தில் சுமார் 400 வகைகள் உள்ளன. அவற்றுள் ஆலோவெரா (Aloe vera) எனப்படும் சோற்றுக்கற்றாழை அதிகளவில் மருத்துவகுணம் கொண்டது. பூச்சிக்கடிதேமல்தோல்வறட்சிஅரிப்புதீக்காயம்பொடுகுத்தொல்லைஅந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் புண்கள் இன்ன பிற சருமப் பிரச்சனைகளுக்கும்நீரிழிவுமலச்சிக்கல்குடற்புண்தண்டுவடப் பிரச்சனைகள் போன்ற உடலின் உட்பிரச்சனைகளுக்கும் மருந்தாகஇன்னும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுகிறது. கற்றாழைகள் பூத்து நம்மில் பலரும் பார்த்ததில்லை. பொதுவாக சோற்றுக்கற்றாழைகள் நான்காம் வருடத்திலிருந்து பூக்க ஆரம்பிக்கும். நல்ல வளமான மண்,காற்றுசூர்ய ஒளி இருந்தால் வருடத்துக்கு இரண்டுமுறை கூட பூக்கும். குழாய் வடிவப் பூக்களில் அலகை நுழைத்து தேனருந்தும் பறவைகள் முகம் முழுக்க மகரந்த மஞ்சள் பூசி வெளிவருவது பார்க்க வெகு அழகு
     
     
     

    4. கங்காரு பாத மலர்கள் 

    kangaroo paw flowers (Anigozanthos flavidus)

    P1750040b.JPG
     
     
    பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ரோமத்துடன் கங்காருவின் விரிந்த பாதவிரல்களைப் போன்று இருப்பதால் கங்காரு பாத மலர்கள் எனப்படுகின்றன. ஆஸ்திரேலியத் தாவரமான இவற்றின் பூக்கள் அமெரிக்காஇஸ்ரேல்ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தாவரவியல் பெயரான Anigozanthos என்பதற்கு ஒழுங்கற்றப் பூக்கள் என்று பொருள். மொத்தம் உள்ள பதினோரு வகையில் இது yellow mist எனப்படும் மஞ்சள் பூ வகை. கொத்துக் கொத்தாய் மலர்ந்து நிற்கும். இவற்றின் தேனையருந்த போட்டிபோட்டு வரும் பறவைகள் மூலமே மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
     
     
     

    5. அசுர லில்லி 

    (Gymea Lily)

     
    5.%2Bgymea%2Blily%2B2.JPG
     
    நெருப்பு லில்லிஅசுர லில்லிபெரிய ஈட்டிச்செடி என்றெல்லாம் குறிப்பிடப்படும் Gymea Lily - இன் தாவரவியல் பெயர் Doryanthes excelsa என்பதாம். Dory-anthes என்றால் கிரேக்கமொழியில் ஈட்டிப்பூ என்றும் excelsa என்றால் லத்தீன் மொழியில் அபூர்வமானது என்றும் பொருளாம். அண்ணாந்து பார்க்கவைக்கும் அபூர்வ செடிதான் இந்த அசுர லில்லி. 1மீ முதல் 2.5 மீ வரை நீளமுள்ள கத்தி போன்ற இலைகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட மீ. முதல் மீ. உயரம் வரை வளரக்கூடிய தண்டின் உச்சியில் கொத்தாய் ரத்தச்சிவப்பில் பூப்பவை என்றால் அபூர்வமில்லையா? 70 செ.மீ. விட்டமுள்ள வட்டப்பூங்கொத்தில் சுமார் 150 பூக்கள் இருக்கலாம். அலங்காரப் பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் மலர்களிலேயே மிகப்பெரியது இந்த அசுர லில்லிதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. பூக்கும் காலம் வருவதற்கு ஐந்து முதல் இருபது வருடங்கள் ஆகும். இதன் பூக்களிலிருந்து நறுமணத்தைலம் தயாரிக்கப்படுகிறது. பறவைகள் இப்பூவின் தேனையும் பூந்தாதையும் விரும்பியுண்கின்றன.
     
     
     

    6. ப்ரோமெலியாட் பூக்கள் 

    (Bromeliad flowers)

    19665358_677150002485926_7692556129687509344_n.jpg
     
     
    ப்ரோமெலியாட் இனத்தில் அறியப்பட்ட வகை சுமார் 2700-க்கு மேல் இருக்கின்றன. நமக்கு நன்கறியப்பட்ட ப்ரோமெலியாட் வகை அன்னாசி. அமெரிக்காஆப்பிரிக்கா போன்றவற்றின் வெப்பமண்டலப் பிரதேசங்களைத் தாயகமாகக் கொண்டவை ப்ரோமெலியாட் தாவரங்கள். வீட்டின் உள்ளே வெளியே எங்குவேண்டுமானாலும் வளரக்கூடிய இவை இவற்றின் அழகுக்காக அனைவராலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. ப்ரோமெலியாட் பூக்களுக்கு பூக்கும் பருவம் என்று எதுவும் கிடையாது. நல்ல வளமான சூழல் இருந்தால் வருடத்தில் எந்த சமயத்திலும் பூக்கும். பூக்களும் மாதக்கணக்கில் வாடாமல் இருக்கும். சில ப்ரோமெலியாட் செடிகள் ஒருமுறை பூத்தபின் மடிந்துவிடும். அரிதான சில ப்ரோமெலியாட் வகை பூக்கும் பருவத்தை எட்டுவதற்கே எண்பது வருடங்கள் காத்திருக்கவேண்டுமாம்.   
     

    7. ஐரிஸ் மலர்கள் 

    (iris flowers)

    7.%2Biris%2B2.jpg
     
     
    ஐரிஸ் என்றால் கிரேக்க மொழியில் வானவில் தேவதை என்று பொருளாம். வானவில் போல் அழகு மலர்களால் வசீகரிக்கும் இத்தாவரத்துக்கும் ஐரிஸ் என்ற பெயர் பொருத்தம்தானே. இவை லில்லி பூக்களைப் போலவே கிழங்கிலிருந்து வளர்ந்து பூக்கின்றன. இப்பூக்களிலிருந்து நறுமணத்தைலம் மற்றும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கனடா நாட்டின் க்யூபெக் மாநிலக்கொடியில் ஐரிஸ் மலர் இடம்பெற்றுள்ளது. க்ரோஷியா நாட்டின் தேசிய மலரும் இதுவே. 25வது திருமணக் கொண்டாட்டத்தின் அடையாள மலர் என்ற சிறப்பும் உடையது. இவற்றுள் சுமார் 300 வகைகள் காணப்படுகின்றன.
     
     

    8. புட்டித்தூரிகைப் பூக்கள் 

    callistemon flowers

    19693590_677147089152884_4026432458416925106_o.jpg
     

    புட்டிகளைக் கழுவ உதவும் ப்ரஷ்களைப் போலிருப்பதால் இந்த callistemon பூக்களுக்கு பாட்டில்பிரஷ் பூக்கள் (bottlebrush flowers) என்ற பெயர். ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இவை பிறநாடுகளிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 40 வகைகள் உள்ளன. பெரும்பாலானவை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களை உடையவை. பார்ப்பதற்கு ஒரே பூ போல இருந்தாலும் உற்றுக்கவனித்தால் தண்டைச் சுற்றி ஏராளமாக குட்டிக்குட்டிப் பூக்கள் இருப்பதைக் காணலாம். ஒரு மலர்த்தண்டு 30 செ.மீ முதல் 60 செ.மீ வரையிலும்கூட இருக்கும். காகிதப் பூக்களைப் போன்று வாசனையற்று இருந்தாலும் பளீர் வண்ணங்களால் பறவைகளை ஈர்த்துதேனருந்த வரும் பறவைகள் மூலமாக மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன.
     
     

    9. காற்று மலர்கள் 

    wind flowers (anemone flowers)

     
     
    japanese%2Banemone%2B%25282%2529.JPG
     
     
    நெடிய காம்புகளின் உச்சியில் மலர்ந்து காற்றாடும் இந்த அழகு மலர்களுக்கு Anemoi என்னும் கிரேக்கக் காற்றுக்கடவுளின் பெயரால் anemone எனப்பெயரிடப்பட்டுள்ளது. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ஒற்றையடுக்காகவோ.. இரட்டையடுக்காகவோ பல அடுக்குகளாகவோ மலர்ந்து தோட்டங்களுக்கு அழகுசேர்ப்பவை. வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் இதன் நறுமணம் முயல்களையும் மான்களையும் அருகில் நெருங்க விடுவதில்லையாம். மனிதர்களும் கூட இதனிடத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அதிகமாய் உரசி அன்புகாட்டினால் தோலில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படக்கூடும்.
     
     

    10. மந்தாரை (அ) நீலத்திருவத்தி 

    (bauhinia purpurea)

     
    bauhinia%2Bpurpurea%2B1.JPG
     
    மந்தார மலரே மந்தார மலரே.. நீராட்டு கழிஞ்ஞில்லே
     
    பாடலில் காதலன் காதலியை உருவகப்படுத்தும் மந்தாரை மலர் இதுவாகத்தான் இருக்கவேண்டும் . ஆங்கிலத்தில் ஆர்கிட் மரம்தமிழில் மந்தாரைநீலத்திருவத்திஇந்தியில் தேவகாஞ்சன்ரக்தகாஞ்சன்தெலுங்கில் தேவகாஞ்சனமுமலையாளத்தில் சுவனமந்தாரம்.. இப்படியான அழகழகு பெயரால் குறிப்பிடப்படும் இம்மரத்தின் பூவும் அழகுதான். சீனாவைத் தாயகமாகக் கொண்டதால் இதற்கு ஹாங்காங் ஆர்கிட் மரம் (Hong kong orchid tree) என்றும் இலைகள் ஒட்டகத்தின் குளம்பு போல பிளவுபட்டிருப்பதால் ஒட்டகத்தின் பாதம் (camel’s foot) என்றும் பூக்கள் விரிந்த சிறகுடைய பட்டாம்பூச்சி போல இருப்பதால் பட்டாம்பூச்சி மரம் (butterfly tree) என்றும் குறிப்பிடப்படுகிறது. பாஹினியா குடும்பத்தில் ஒரிஜினல்கலப்பு என்று சுமார் 500 வகைகள் உள்ளன.
     
    Geethamanchari.blogspot
    1. Show previous comments  7 more
    2. யாயினி

      யாயினி

      Either write something worth Reading OR do something worth writing about"

      --Benjamin Franklin

      இன்று அதி ௯டிய கோடை கால ஆரம்பம்.☀️☀️☀️

    3. யாயினி
    4. யாயினி

      யாயினி

      யாழ்ப்பறவை

       
      பாடலுக்கும் ஆடலுக்கும் பெயர்போன ஒரு ஆஸ்திரேலியப் பறவை இந்த யாழ்ப்பறவை. Lyrebird என்று ஆங்கிலத்தில்சொல்லப்படும் இதற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமாஇந்தப் பறவையினத்தில் ஆண் பறவைக்கு மயில் தோகைபோல் பெரிய வால் உண்டுஅதை விரித்தால் பார்ப்பதற்கு பழங்கால lyre என்னும் யாழ் இசைக்கருவியைப் போலஇருக்கும்அதனாலேயே அதற்கு lyrebird என்ற பெயராகிவிட்டதுஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட பதினைந்து மில்லியன்(ஒன்றரை கோடிவருடங்களுக்கு முன்பிருந்தே யாழ்ப்பறவைகள் வாழ்ந்து வருகின்றன என்பதை அங்கு கிடைத்துள்ளஎலும்புக்கூடு படிமங்கள் உறுதி செய்கின்றன.
       
      lyre%2B3.jpg
      யாழ்ப்பறவை தோகை விரித்த நிலையில்
       
       
      lyre%2B%25282%2529.jpg
      பழங்கால யாழ் இசைக்கருவி
       

      ஆஸ்திரேலியாவில் இரண்டு வகையான யாழ்ப்பறவைகள் காணப்படுகின்றனஒன்று ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைமற்றொன்று சூப்பர் யாழ்ப்பறவைஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை சற்று சிவந்த நிறத்திலிருக்கும்சூப்பர் யாழ்ப்பறவைசெம்பழுப்பு நிறத்தில் இருக்கும்ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள் குவீன்ஸ்லாந்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமேவாழ்வதாலும் அவை  மிகுந்த கூச்ச சுபாவம் உடையவை என்பதாலும் அவற்றைப் பற்றிய தகவல்கள் அதிகமாய்க்கிட்டவில்லை.
       
      சூப்பர் யாழ்ப்பறவைகள் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளிலும் டாஸ்மேனியாவிலும்காணப்படுகின்றனசெம்பழுப்பு நிற உடலும் கரிய நிற அலகும் கால்களும் கொண்ட இப்பறவைகளில் ஆண் பறவையின்வால் தோகை போன்று மிக அழகாயிருக்கும்வெள்ளி நிறத்தில் மெல்லிய சல்லடை போன்று பதினாறு நீளமான இறகுகள்கொண்ட தோகையானது ஆண் பறவையின் கம்பீரத்தின் அடையாளம்அப்படியொரு அழகான பெரிய வால் அமைய ஏழுவருடங்கள் பிடிக்குமாம்அதாவது யாழ்ப்பறவைக்குஞ்சு வளர்ந்து முதிர்ச்சி அடைய ஏழு வருடங்களாகிறதுபெண்பறவைகளுக்கு நீளமான தோகை இருந்தாலும் ஆணுக்கேயுரிய பிரத்தியேக வெள்ளிநிற சல்லடை இறகுகள் அதில்கிடையாதுஆபத்தை உணரும் நேரங்களில் இப்பறவைகள் அலாரம் போன்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி ஓடிமறைந்துவிடுகின்றன.
       
      lyre%2B1.jpg
       
       
      அழகிய யாழ் போன்ற தோகையை விரித்தாடுவது அல்லாமல் யாழ் பறவைக்கு மற்றொரு சிறப்பு உண்டுஅதாவது எந்தசத்தத்தைக் கேட்டாலும் அதை ஒலிநகல் (mimicry) செய்யும் இயல்பு இவற்றுக்கு உண்டுஇப்பறவைகள் ஒருநாளைக்குநான்கு மணி நேரத்தைப் பாடுவதிலேயே கழிக்கின்றனபெண் பறவைகளும் பாடும் என்றாலும் ஆண் பறவைகளின்பாடலுக்கு அது ஈடாகாதுகுஞ்சுகள் தங்கள் இனத்துக்கான பாடலைக் கற்றுக்கொண்டு நன்றாகப் பாட ஒரு வருடகாலம்ஆகும்இப்பறவைகள் தங்களுக்கென்று தனித்த பாடல்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது மற்றப் பறவைகளின்ஒலிகளையும் பாடல்களையும் அதில் கலந்துவிடுவதால் அதிகாலை நேரத்தில் ஒற்றை யாழ்ப்பறவை எழுப்பும் மாறுபட்டபறவைகளின் ஒலியானது அங்கு ஏராளமான பறவைகள் இருப்பதாய் நம்மை எண்ணத் தோன்றும்
       
      மற்றப் பறவைகளின் ஒலியல்லாது கொவாலாடிங்கோ போன்ற விலங்கொலிகளையும் ஒலிக்க வல்லவைபொதுவாகதாங்கள் கேட்கும் எந்த சத்தத்தையும் ஒலிநகல் செய்ய வல்லவைஅடிலெய்ட் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட ச்சூக்(chook) என்னும் யாழ்ப்பறவை காகம்கிளிலாரிகீட்மேக்பைசிரிக்கும் கூக்கபராமைனாகாக்கட்டூ போன்றபறவைகளின் ஒலிகளோடு கார் எஞ்சின் உறுமல் சத்தம்தீயணைப்பு வண்டியின் அலாரம்குழந்தையின் அழுகைநாய்குரைப்புகேமராவின் க்ளிக் சத்தம் என நாற்பதுக்கும் மேலான ஒலிகளை மிமிக்ரி செய்யும் அசாத்தியத்திறமைபெற்றிருந்தது
       
      இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை தன் அழகிய தோகையை விரித்து விசிறி போலாக்கி தலைக்கு மேலேகொண்டுவந்து முன்னும் பின்னுமாய் விசிறியும் அவ்வப்போது சிலிர்ப்பியும் நடன அசைவுகளை உண்டாக்கி பெண்பறவைகளைக் கவர முனைகிறதுஆடலுடன் பாடலும் சேர்ந்துகொள்ள சொல்லவேண்டுமாநிகழ்ச்சிகளைகட்டிவிடும்நடனம் என்றால் மேடை இல்லாமலாசூப்பர் யாழ்ப்பறவைகள் மண்ணால் 90 செ.மீ விட்டமும் 15 செ.மீஉயரமும் உள்ள மேடையமைத்து அதில் நின்றுதான் நடனமாடுகின்றனஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகளோ குச்சிகளைக்குவித்து மேடை அமைத்து அதில் நின்றபடி ஆடுகின்றனமேடையென்றால் ஒரு மேடை மட்டுமல்லபல பெண்இணைகளைக் கவரவேண்டாமாஅதனால் ஒவ்வொரு ஆண் பறவையும் தன் எல்லைக்குள் பத்துப் பதினைந்துமேடைகளாவது கட்டி வைத்திருக்குமாம்எங்கெங்கு தேவையோ அங்கங்கு ஏறி நின்று ஆடலாமல்லவா?
       
      lyre%2B4.jpg
       
       
      இப்பறவையினத்தில் வாழ்நாள் இணை என்று எதுவும் கிடையாதுஒரு ஆண் பறவை பல பெண் பறவைகளோடு இணையும்கூடு கட்டுவதுகுஞ்சு பொரிப்பதுவளர்ப்பது அனைத்தும் தாயின் பொறுப்புஅப்பா பறவை சொகுசு சுந்தரம்தான்.
       
      பெண் பறவை தரையை ஒட்டிய ஏதாவது பாறையிடுக்கிலோ தாழ்வான மரக்கிளைகளிடையிலோ குச்சிகளையும்இலைதழைகளையும் கொண்டு இன்ன வடிவம் என்றில்லாமல் ஒரு கூடு அமைக்கிறதுயாழ்ப்பறவை ஒரு ஈட்டுக்கு ஒரே ஒருமுட்டைதான் இடும் என்பது விநோதம்ஐம்பது நாட்கள் தொடர்ந்து ஒற்றையாளாகவே அடைகாத்து குஞ்சு பொரித்துவளர்க்கிறது தாய்ப்பறவைஆறு முதல் பத்து வாரங்கள் குஞ்சு கூட்டில் தாயுடன் வசிக்கும்
       
      மண்ணுக்குள்ளும் உளுத்துப்போன மரக்கட்டைகளிலும் வாழும் புழுக்கள்பூச்சிகள்மண்புழுமரவட்டைசிலந்திகரப்பான் பூச்சிவண்டு போன்றவைதான் இவற்றின் பிரதான உணவுஎப்போதாவது பழங்களின் கொட்டைகளையும்விதைகளையும் உட்கொள்ளும்கோழிகளைப் போல தரையிலிருக்கும் சருகுக் குப்பைகளைக் கால்களால் சீய்த்துத் தள்ளிஉள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்னும்உணவுக்காக தரையிலேயே பொழுதைக் கழித்தாலும் இரவுநேரத்தில்அடைவதென்னவோ உயரமான மரக்கிளைகளில்தான். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 30 ஆண்டுகள்.
       
      ஆஸ்திரேலியாவில் யாழ்ப்பறவைகள் பல வகையிலும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
       
      ·        ஆஸ்திரேலியாவின் பத்து செண்ட் நாணயத்தில்...
       
      lyre%2B5.jpg
       
       
      ·        1932-இல் யாழ்ப்பறவை பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை
       
      lyre%2B6.jpg
       
      ·        ஆஸ்திரேலியாவின் நூறு டாலர் தாளில்...
       
      lyre%2B8.jpg
       
       
      ·        ஆஸ்திரேலிய திரைப்பட ஆணையத்தின் முத்திரையில்...
       
      lyre%2B9.jpg
       
       
       
      ·        தேசிய பூங்கா & வனவாழ்வு மையத்தின் முத்திரையில்...
       
      lyre%2B7.jpg
       
       
      ·        மேலும் பல இசைக்கல்லூரிகளும் நிறுவனங்களும் தோகைவிரித்து நடனமாடும் ஆண் யாழ்ப்பறவையின் உருவத்தைதங்கள் முத்திரைகளில் பதித்து சிறப்பித்துள்ளன
       
      கீத மஞ்சரியிலிருந்து.......
  5. குளப்படி செய்யாமல் அச்சா பிள்ளைகளாக இருக்கவேணும் என்னோடை சேருகிற பிள்ளைகள்...:)

  6. என்ன தாத்தா உங்களை அடிக்கடி காணக் கிடைக்குது இல்லை..?

  7. ம்ம்ம் ...இசை அண்ணா...எனது முகனூலிலில் இருப்பதைத் தான் எனக்குத் தெரியும்.அதைத் தான் போய் இருந்து தேடித் தேடி பாக்கிறது .அதில் ஒரு பூச்சாடி தான் பல்கணியில் இருக்கிற மாதிரி இருக்கு.ம் சரி ஏதோ உங்கள் விருப்பம்.

  8. hi sabesh thamby...how are u ?

  9. இசை அண்ணா...எங்கே உங்கள் சுற்றுலாவின் போது எடுத்த படங்கள் எல்லாம்?அண்ணா அச்சாப் பிள்ளை எல்லா நீங்கள் எப்.பில கொஞ்சம் போட்டு விடுங்கள் யாயினி பாக்கிறதுக்கு.

  10. danku anna change your nick name danku..i mean 3rd name.haaaa.just kidding.ok bye.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.