Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9210
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. 789439252.jpg

    ஒன்றரை மாதப் பயிர்கள்; யானைகளால் நாசம்
     

    விவசாயிகள் கவலை!

    (யோகி)

    கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குச் சொந்தமான வயல் பகுதிகளில் நேற்று (18) இரவு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளன.

    விதைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களே ஆன பயிர்களே இவ்வாறு காட்டு யானைகளால்  அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இது முதல் தடவை இல்லை எனவும் தொடர்ச்சியாக காட்டுயானைகளால் தமது நெல் வயல்கள் அழிவடைவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தமக்கான பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தர வேண்டும் எனவும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ)

       
    459770996.jpg
    1260439185.jpg
    1860291822.jpg
    241474905.jpg
    505839772.jpg
    218291948.jpg
    891112304.jpg
    2120491882.jpg
  2.  

    1434978707.JPG

     
    இலங்கையில் ஏற்படவுள்ள மிகப்பெரிய புவிநடுக்கம்!!
     

    (புதியவன்) 

    நேற்றையதினம் (18) இரவு 11.02 மணியளவில் இலங்கையில் சிறியளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக செய்தித்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகின.

    இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை புவிநடுக்க பதிவுக் கருவியில் (Seismograph) குறைந்தளவான ரிக்டர் அளவுத்திட்டத்தில் அளவிடப்பட்டிருந்தாலும் கூட, இவை அனைத்தும் நாம் ஒரு மிகப்பெரிய புவிநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதற்கான எதிர்வுகூறலே ஆகும்.

    பூமியானது பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் அமையப்பெற்றது. இதில் இலங்கையானது இந்தோ-அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிகழும் பல புவிநடுக்க அதிர்வுகள் இலங்கையின் கீழான சிறிய கவசத்தகடுகளில் விலகல், ஒருங்கல், அமிழ்தல் போன்ற சிறியளவிலான மாற்றங்கள் ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும் சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புவிநடுக்கங்கள் இலங்கையில் ஏற்படும் வாய்ப்புள்ளது.

    உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கை இடர்களில் புவிநடுக்கம் முதன்மையானது. ஆயினும் இது தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் இருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஓரளவு குறைக்கலாம்.இலங்கையில் புவிநடுக்கத்தைப் பதிவு செய்யும் புவிநடுக்கப் பதிவுக் கருவிகள் கண்டி-பள்ளேகலவிலும், அனுராதபுரம்- மிகிந்தலையிலும், மட்டக்களப்பிலும் மற்றும் மாத்தறையிலும் உள்ளன. இவ்வாறாக வவுனியாவில் நேற்று  ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில் உள்ள புவி நடுக்கப் பதிவுக் கருவியில் பதிவாகியுள்ளது.

    வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    நேற்றிரவு 11.02 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

    இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதியினரும் மிகப்பெரியவொரு புவிநடுக்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஏ)

  3. கடசியா ஒன்று மட்டும் விளங்குது..ஜேர்மனியில் நீங்கள் போகும் நிகழ்வுகளுக்கு செக்கியூருட்டி போட போயினம்.🤭🖐️
  4. மைக்கு கிடைச்சால் என்ன வேணும் என்றாலும் சொல்லீட்டு போகலாம் என்று நினைக்க கூடாது..எல்லாரும் அங்க சுத்தி, இங்க சுத்தி கடசியாக எங்க வந்து நிற்பீர்கள் என்பது தெரியும்....
  5. *எழுதியது யார் என்று தெரியவில்லை..*
    00
    ஆனால்...
    உண்மையை புட்டு புட்டு வச்ச மாதிரி இருக்கு!
    ● வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.
    பீடா போட்டால் அது நகரம்.
    ● பச்சை குத்தினால் கிராமம்.
    டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம்.
    ● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.
    மெஹந்தி போட்டா நகரம்.
    ● மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா கிராமம்.
    இரசாயன (Chemical) பொடி தூவி ஹோலின்னா (Holi) நகரம்.
    ● கையில் மஞ்சப் பை வைத்திருந்தால் கிராமம்.
    பாலித்தீன் பை வைத்திருந்தால் நகரம்.
    ● கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்.
    மனைவி அவள் நண்பா்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் நகரம்.
    ● கிழிந்த ஆடையை துவைத்துப் போட்டால் கிராமம்.
    நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்.
    ● உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்.
    உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்.
    ● கோடு போட்ட அண்டர்வேர் (பட்டாப்பட்டி) கிராமம்.
    இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் நகரம்..
    ● நாய் வீட்டைக் காவல் காத்தால் அது கிராமம்.
    நாயை வீட்டில் வைத்து காவல் காத்தால் அது நகரம்.
    *இப்ப இன்னொன்று .*
    ● சாதத்தில் தண்ணீர் ஊற்றி, பழையது சாப்பிட்டா கிராமம்.
    அமேசான்ல ஆர்டர் பண்ணி பழையது சாப்பிட்டா நகரம்.
    *நீங்கள் கிராமமா அல்லது நகரமா ?*
    448319835_884047090429087_26289457086662
     
     
    448370839_884047107095752_41208154635198
     
     
     
    All reactio
  6. நான் அறிந்து கொண்டவரையில் அவரது அம்மாவின் பிடிவாதமும் காதலியின் பிடிவாதமுமே அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது..தாயார் இன்னும் வயது இருக்கிறது 3, 4 ஆண்டுகள் பின்னர் பார்க்கலாம் என்றும், காதலி இல்லை தாமதிக்க வேண்டியதில்லை என்ற இரு பக்க அழுத்தங்களுமே அந்த வைத்தியரை தவறான வழிக்கு கொண்டு போய் இருக்கிறது;.பாவம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.🙏
  7. 40 இலட்சம் பெறுமதியான ஆடுகள், மாடுகள் மீட்பு! வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அவை 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன், ஆடுகளும், மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடத்தினர், என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (ஆதவன்)
  8. ஒரு பெண் சுயமாக வாழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ தலைக்கணம் என்று பெயர் வைக்காதீர்கள்..அவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் விருப்பு வெறுப்புக்கள் என்று எவ்வளவோ இருக்கும்.எல்லாவற்றையும் சகித்து கொண்டு தான் வெளி உலடகில் தானும் ஒரு ஜீவன் என்று வாழ முற்படுகிறார்கள்..அது சரி சக கருத்தாளரை ஒழுங்காகத் தானே மதிக்கிறீங்கள் எல்லோரும்.
  9. A/L Fail ஆன பிள்ளையள் இரவிரவா ஒரே அழுகை.... அப்புறம் என்னாச்சி..... கனடா போன பெடியளுக்கு ரெண்டு வருஷத்தால #PR வர வெளிநாட்டு சம்மந்தம் பேசுவம்னு சொல்லித்தான் தூங்க வைச்ச #VIP_1546... All reactions
  10. எனக்கும் இதே கேள்வி எழுந்தது ...ஆனாலும் நான் எழுதி அதை சர்ச்சையாக்கி விடுவதை விட அமைதியாக இருப்பதேே மேல் என்று போய் விடுவது வழமை.அதே மீனவர்கள் பிடித்து தரும் மீனைத் தானே நாம் வயிறாற கறியாக ,பொரியலாக , கூழாக உண்டு தள்ளுகிறோம்.அப்படி இருக்கையில் மீன் விபாரியின் மகன், மகள் என்று ஒருவரது வறுமையை சுட்டிக் காட்டி செய்தி பிரசுரிப்பதை விட இவர்கள் எல்லாம் பேசாமல் இருப்பதே மேல்.. நிறைய கஸ்ரங்களுக்கு மத்தியிலும் படித்து திறமைச் சித்திகளை பெற்று கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...அதே நேரம் குறைந்த சித்திகளை பெற்றவர்களும் மனம் தளராது மறுபடியும் முயற்சித்து முன்னுக்கு வரலாம் வர வேண்டும்.ஆகவே முயற்சியுங்கள்.
  11. june1,2024  · 

    May be an image of flower and text that says 'Welcome WelcomeJune! June!'
     
     
     
     
     
    All reactions
  12. நிறைய இடங்களில் ஐடிக்களை திறந்தால் பாஸ்வேர்ட்டை எங்காவது எழுதி வைத்து விட்டு அப்படியே விட்டுவிடுவது ..இப்படியான காரணங்களால் பொது வெளிக்கு ஒன்று சொந்தப் பாவனைக்கு மற்றையது என்று வைத்திருப்பதால்..பெரிதாக எதையும் கணக்கெடுப்பதில்லை.ஊரில் மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்த போது எல்லாம் எந்த வசதி வாய்ப்புக்களோடு வழ்ந்தோம்..ஒன்றும் இல்லைத் தானே..எந்தக் கஸ்ரம் வந்தாலும் சமாளித்துக் கொண்டு போக தெரிந்தால் எதுவும் கடினம் அல்ல...என்னைப் பொறுத்த மட்;டில்..
  13. தம்பி...ஏதாவது ஒரு விடையத்தில் அலட்சியப் படுத்தப்படும் போது விலகி இருக்கவும், விளங்கிக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும்.பல நேரங்களில் நான் உணர்ந்து கொள்ளும் விடையம். வேலை, பழகும் இடம், உறவுகள் ...😏
  14. படைப்பு ; கவிதை ரசிகன்
    குமரேசன்
     
    மலரை
    நுகர்ந்துப் பார்த்திருக்கிறாய்....
    தேனை
    சுவைத்துப் பார்த்திருக்கிறாய்....
    தென்றலை
    தீண்டிப் பார்த்திருக்கிறாய்.....
    இயற்கையை
    ரசித்துப் பார்த்திருக்கிறாய்...
    இசையைக்
    கேட்டுப் பார்த்திருக்கிறாய்...
    என்றாவது
    பட்டினிகிடந்து பார்த்திருக்கிறாயா ?
    காற்றில்
    தூசுகளும் மாசுக்களும்
    சப்தமும் மணமும் மட்டும்
    அலைந்துக் கொண்டிருக்கவில்லை...
    "அம்மா பசிக்கிறதே!" என்ற
    வார்த்தையும்
    அலைந்து கொண்டுதான் இருக்கிறது......
    ஔவையார் சொன்னது போல்
    "மனிதராய் பிறப்பது அரிதல்ல
    குருடு செவிடாய் பிறக்காமல்
    இருப்பது அரிதல்ல .....
    ஔவையார் சொன்ன
    அரிதுகளிலேயே
    அரிதானது
    'மூன்று வேளை உணவு '
    கிடைப்பதுதான் அரிது.....!
    உடலில் பற்றிய 'செந்தீ'' கூட
    ஒரே ! நாளில் கொன்று விடுகிறது
    இந்த வயிற்றில் பற்றிய
    'பசித்தீ' தான்
    ஒவ்வொரு நாளும் கொள்ளும்...!
    ஒருவனுக்கு அறிவு பசி !
    ஒருவனுக்கு ஆன்மீகப் பசி !
    ஒருவனுக்கு அன்பு பசி !
    ஒருவனுக்குப் பணப்பசி !
    ஒருவனுக்குப் பதவிப்பசி!
    எந்தப் பசி வேண்டுமானாலும்
    இருக்கலாம்
    ஆனால்
    ஒருவனுக்கு
    " வயிற்றுப்பசி "மட்டும்
    இருக்கவே கூடாது.....!
    தனித்திரு
    விழித்திரு
    பசித்திரு என்று
    விவேகானந்தர் சொன்னார்
    ஆனால்....
    பலர்
    "பசித்தே இறக்கின்றனர்...!'
    காற்றில் வரும் பல ஓசையைக்
    கேட்டவர் உண்டு....
    வயிற்றை நனைக்க
    " பால் " இல்லாமல்
    கண்கள் நனைய
    கன்னம் நனைய
    ஏன்?
    'உடல் ' நனையவே!
    கதறியழும்
    பச்சிளம் குழந்தையின்
    குரளைக் கேட்டவர் உண்டா ?
    "பசிக்கிறது
    ஏதாவது கொடுங்கள் " என்று
    கேட்பதற்குக் கூட
    'சக்தி 'இல்லாமல்
    சாலை ஓரத்தில் கிடப்பவர்களின்
    'கண்ணீரின் ஈரம் '
    'காற்றின் ஈரமாக'
    வருவதை
    உணர்ந்தவர் உண்டா ?
    'உணவில்லாமல்' இறந்த
    ஒரு 'குழந்தையின் '
    அல்லது
    ஒரு 'முதுமையின் '
    சடலத்தின் ' வாசணையை '
    சுமக்க முடியாமல்
    சுமந்து வரும்
    காற்றின் சுமையை
    அறிந்தவர் உண்டா ?
    "தனி ஒருவனுக்கு
    உணவில்லை எனில்
    ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார்....
    தனி ஒருவனுக்கு என்ன?
    ஏழு நிமிடத்திற்கு ஒருவர்
    உணவில்லாமல் இறக்கிறார்கள் ஆனால் ....நாங்களோ!
    கைக்கட்டி
    வேடிக்கைப் பார்க்கிறோம்...
    "நாய் சாப்பிடும்
    எச்சில் தொட்டியில்
    மனித வாய் சாப்பிடும் "
    இந்த தேசத்திற்கு
    எதற்கடா தேசியக்கொடி ?
    பசியின் அழுகையும்
    பட்டினியின் கதறலுமே !
    இந்நாட்டின்
    "தேசிய கீதமானப்" பிறகு
    இங்கு
    "ஜன கன மன" எதற்குடா....?
    பசி படடினி தீரும் வரை...
    மக்களாட்சி
    ஜனநாயகம்
    சமதர்மம்
    சுந்திரம் என்பதெல்லாம்
    வெறும் வார்த்தைதானடா....!
    நிலவிற்குச் செயற்கைக்கோள் விட்டோம் என்று
    'மார்பைத் தட்டிக் '
    கொள்கின்றவர்களே !
    இங்கு பசிக்கு
    'வயிற்றைத்
    தட்டிக் : கொண்டிருப்பவர்கள்
    ஏராளம் ! ஏராளம் !
    லட்ச லட்சமாய் செலவழித்து
    சிலை வைப்பதும்
    கோடி கோடியாய் செலவழித்து
    கோயில் கட்டுவதும்
    இவர்களின்
    பசி பட்டினியை தீர்க்குமா ?
    கொடிகட்டி ஆண்டவனே
    ஒரு நாள்
    மாண்டானடா..!
    நீ கொள்ளையடித்து
    ஆள்கிறயே
    நீ என்ன மடையனாடா....?
    உடையில்
    துண்டுப் போட்டுக் கொள்பவன்
    அரசியல்வாதி இல்லையடா...!
    ஏழையின் வயிறு கண்டு
    உணவு போடுபவனே
    அரசியல்வாதியடா....!
    உன் பிள்ளைகளின்
    கழுத்தில் கிலோ கிலோவாக
    நகை போட
    மூன்று வேளையும்
    அறுசுவை உணவு போட
    என்னமோ செய்யடா...!
    ஆனால் இந்த ஏழையின்
    வயிறு பசிக்கும் போது
    உணவு போட ஏதாவது செய்யடா..!
    எரிந்த வீட்டில் தான்
    எதுவுமில்லாமல் போகும்
    திருடிய வீட்டில்
    ஏதாவது
    இல்லாமலா போய்விடும்....
    என்னை
    மன்னித்து விடுங்கள்...
    யாருக்கும்
    உணவு கொடுக்காதீர்கள்....!
    முதுமையாக இருந்தால்
    மட்டும் உணவு கொடுங்கள்
    இளமையானவர்களாக இருந்தால்
    வேலை கொடுங்கள்
    சிறுவர் சிறுமிராக இருந்தால்
    படிப்பு கொடுங்கள்
    நீங்கள் இன்றைய உணவை
    கொடுத்து விடுவீர்கள்
    நாளை உணவை
    அவர்களுக்கு யார் கொடுப்பார்...?
    உங்களிடம்
    கையெடுத்து கும்பிட்டு
    கேட்கிறேன்......
    பசித்தீயால்
    இறந்தவர்களின் உடல்களை
    மீண்டும் சிதைத்தீயால்
    எரிக்காதீர்கள்......!
    அப்படியே எரித்தாலும்
    அவர்கள் உடலில்
    என்ன இருக்கிறது எரிவதற்கு? அதுதான் எல்லாம்
    எறிந்து விட்டதே பசித்தீயில்...!
    பட்டினி கிடக்கும்
    அனைவருக்குமாக
    அழுவதையும்
    எழுதுவதையும் தவிர
    வேற என்ன செய்ய முடியும்
    கவிஞனாய்
    பிறந்து விட்ட என்னால்......!!!
    ஏதாவது
    உதவி கேட்டவருக்கு
    முடிந்ததைச் செய்வோம்
    'பசிக்கிறது' என்று கேட்டவருக்கு
    'முடியாததையும் ' செய்வோம்...
     
    கவிதை ரசிகன் குமரேசன்
     
    All reactions:
     
     
  15.  · 
     
     
    May be an image of 2 people and text that says 'HAPPINESS is meeting an an old friend after a long time and feeling like nothing has changed! LM'
     
     
     
     
     
    All reaction
  16. கடந்த காலங்களில் எழுத சொல்லி கேட்டுக் கொண்ட நிலுவைகள் நிறைய இருக்கிறது அக்கா..🖐️😀
  17. ஒரு பேனையும், தானோடும் நீங்களும் அந்தப் பொது வேட்பாளராகலாம் நிலாந்தன்..வேணும் எண்டால் பிளைட் பிடிச்சு வோட் போட புலம் பெயர்ஸ் வாறம்..இது எப்படி ...✍️🖐️
  18. தீக்கோழி முட்டையின் மனைவி: ஒரு தென்னாப்பிரிக்க கதை
    தென்னாப்பிரிக்காவின் மலைகளுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் ஒரு காலத்தில் தாபோ என்ற ஏழை வாழ்ந்து வந்தார். அவர் கனிவான இதயம் கொண்டவர், ஆனால் அவர் வறுமையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளப் போராடினார். அவர் ஒவ்வொரு நாளும் தனது சிறிய தோட்டத்தில் கடுமையாக உழைத்தார், அவர் தனது குடும்பத்தின் பசியைப் போக்கக்கூடிய அளவுக்கு தரமான அறுவடைகளை எதிர்பார்த்தார்.
    ஒரு நாள், தபோ தனது பயிர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய தீக்கோழி முட்டையின் மீது கால் இடறித் தடுமாறினார். ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் அந்த முட்டையை எடுத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் அவர் வியக்கும் வண்ணம், முட்டை உடைந்து உள்ளே ஒரு அழகான இளம் பெண் வெளிப்பட்ட்டாள். அவள் காலைப் பனியைப் போல மென்மையான தோலையும், நட்சத்திரங்களைப் போல மின்னும் கண்களையும் கொண்டிருந்தாள்.
    "என்னை விடுவித்ததற்கு நன்றி" என்றாள் அந்தப் பெண். "நான் நந்தி, தீக்கோழி முட்டையின் மனைவி. நீங்கள் என்னிடம் கருணை காட்டியுள்ளீர்கள், நான் உங்களுக்கு நீங்கள் விருப்பப்படுவதைத் தருகிறேன்."
    தபோவின் உள்ளம் நன்றியினால் பொங்கியது. அவர் தனது குடும்பத்தின் போராட்டங்களைப் பற்றி நினைத்தார் - பசி, வறுமை - மற்றும் அவருக்கு என்ன தேவை என்பதையும் சரியாக அறிந்திருந்தார். "நந்தி", "தயவுசெய்து என்னை எங்கள் ஊரின் தலைவனாக ஆக்குங்கள். என் மக்கள் என்னை மதிக்கட்டும், கௌரவிக்கட்டும்" என்றார்.
    நந்தி சிரித்தாள். "உன் விருப்பம் என் கட்டளை" என்று பதிலளித்தாள். "ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இரக்கத்தையும் கருணையையும் கொண்டிருப்பேன் என எனக்கு உறுதிக்கொடுங்கள் என்றால். அவரும் அப்படியே உறுதியளித்தார். நீங்கள் தலைவனாக இருக்க இரக்கமும் கருணையும் அவசியம் " என சொல்லிவிட்டு நந்தி மறைந்தாள்
    நந்தியின் வார்த்தைகள் உண்மையாக, தபோ தலைமை தபோ ஆனார். அவரது தலைமையின் கீழ் அவரது கிராமம் செழித்தது, அவருடைய நேர்மை மற்றும் இரக்கத்திற்காக மக்கள் அவரைப் போற்றினர். ஆனால் காலப்போக்கில், தபோ திமிர்பிடித்தார். கருணை பற்றி நந்தி கற்பித்த பாடத்தை அவர் மறந்துவிட்டார்.
    ஒரு நாள், நிலத்தில் வறட்சி ஏற்பட்டது. ஆறுகள் வறண்டு, பயிர்கள் கருகின. விரக்தியடைந்த தபோ மீண்டும் நந்தியின் உதவியை நாடினார். "தீக்கோழி முட்டை மனைவி," அவர் கெஞ்சினார், "எங்கள் வறண்ட வயல்களுக்கு மழை கொடுங்கள்."
    நந்தி கண்கள் சோகமாக அவன் முன் தோன்றினாள். "தாபோ," அவள் சொன்னாள், "நீங்கள் கருணையின் சாரத்தை மறந்துவிட்டீர்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளீர்கள்-மற்றவர்களை இரக்கத்துடன் நடத்துவேன் என்று என்னிடம் உறுதியளித்தீர்கள் ஆனால் அதனை மீறிவிட்டீர்கள் . அதனால் இப்போது, நான் உங்களுக்குக் கொடுத்ததைத் திரும்பப் பெற வேண்டும்."
    அந்த வார்த்தைகளோடு, தபோவை விட்டுவிட்டு நந்தி மறைந்தார். கூடவே அவனுடைய செல்வம் மறைந்தது, அவனுடைய மக்கள் அவனை விட்டு விலகினர். "உண்மையான செல்வம் என்பது பட்டங்களிலோ உடைமைகளிலோ அல்ல, பிறரிடம் நாம் காட்டும் கருணையில் உள்ளது என்பதை தாபோ உணர்ந்தார்"
    All reaction
  19. ஆற்றல் மிக்க கதை சொல்லி எஸ்.பொ .. அவர்குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர விரும்புகிறேன்.
     
    போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கவிஞன் பெர்ணான்டோ பெஸோவா. 127 புனைபெயர்களில் எழுதியதாக அறிய முடிகிறது. தமிழில் எனது வாசிப்பிற்கு உட்பட்டவரை, வாசித்தவற்றில் ஞாபகங்களில் உள்ளவரை எஸ்.பொ தான் அதிக புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். முகநூல் வந்தபிறகு பெர்ணான்டோ பெஸோவாவைக் கூட மிஞ்சுமளவு பலர் பேக் ஐடிகளை வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.
     
    தனது பெயரை எஸ்.பொ.என்று சுருக்கி வைத்துக்கொண்ட எஸ்.பொன்ணுத்துரை, ஆரம்பக்காலத்தில் 'நான்' என்ற புனைபெயரைப் பயன்படுத்தினார். நாற்பதுகளில் சுதந்திரனில் ஆறுபுனைபெயர்களில் வாரமொன்றுக்கு இருகதை வீதம் எழுதியுள்ளார். 'சிறீதரன்' என்ற பெயரில் முதலில் கட்டுரைகள் வெளியிட்டார்.
     
    கல்கி ஈழத்துச் சிறுகதைப் போட்டியை 'மரகதம்' என்ற இதழில் நடத்தினார். அவ்விதழில் 'எழுவானோர் ஏகாம்பரம்' என்ற பெயரில் எஸ்.பொ. விமர்சனக் கட்டுரைகளைச் செய்துள்ளார். இலங்கை அரசியலை அலச 'அபிமன்யு' என்ற பெயரை 'அக்கினிக்குஞ்சு'ல் பயன்படுத்தினார்.
     
    ஈழநாட்டில் 'போதிமரநிழலில்' என்ற தலைப்பில் 'வெள்ளாங்காடு வீ. வியாச தேசிகர்' என்ற பெயரிலும், தேசாபிமானியில் 'போகிற போக்கில்' என்ற தலைப்பில் 'பொக்கன் கணபதி' என்ற பெயரிலும், இளம்பிறையில் 'நாமும் நாங்களும்' என்ற தலைப்பில் 'கொண்டோடிச்சுப்பர்' என்ற பெயரிலும், 'பிருகண்ணளை' என்ற பெயரில் நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.
     
    நையாண்டிக் கவிதைகள் எழுதுவதற்கு 'மூப்பன் முருகன்', 'துமிலைத் திமிலன்' என்ற பெயர்களையும், பெயர் தெரியாமல் எழுத முயன்றபோது 'பெயர்விழையான்' என்கிற புனைபெயரையும் கையாண்டுள்ளார். எஸ்.பொன்னுத்துரை என்று எழுதுவதற்கு முன், சா.பொன்னுத்துரை என்றும், பொதுஊசி, துரை, பழமைதாசன், புரட்சிப்பித்தன், ராஜ், மித்ர, நச்சாதார்க்கும் இனியன் என்ற புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளார்.
     
    May be an image of 1 person
     
     
    கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.போ பிறந்த நாளை நினைவு கூர்ந்த ஒருவர் பதிந்தலிருந்து..
     
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.