அட்ரா...அட்ரா.... சிங்கம் எங்கைபோய் நிக்குது பார்......
சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது.
சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு.
தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்தான்.
எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
http://tamil.oneindia.com